12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/10/2020
12 ஆம் வகுப்பு இயற்பியல் முக்கிய 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Tamil Medium Important 5 Mark Creative Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
AC மின்னோட்டத்தின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை?
2.
மின்னேற்றம் அடையும் இணைத்தட்டு மின்தேக்கியானது தட்டு ஒன்றின் மாறும் மின்னூட்டம் அவற்றின் மின்புலப்பாய மாற்றத்தின் ε0 மதிப்பிற்கு சமம் என்பதை நிரூபி. சமன்பாட்டில் \({ \varepsilon }_{ 0 }\frac { d{ \phi }_{ E } }{ dt } \) என்பதன் பெயர் யாது?
3.
பாரடே விதியிலிருந்து ஆற்றல் மாறா நிலைக்கான கோவையைப் பெறுக.
4.
மின்னூட்டங்களின் வரலாற்று மின்புலத்தை விவரி.
5.
மின் திறன் மற்றும் மின்னழுத்த ஆற்றல் வரையறு. மின்தடை R-ன் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு V செலுத்தப்படுகிறது. செலவழிக்கப்படும் மின்திறனுக்கான தொடர்பை கண்டுபிடிக்க.
6.
மென் மற்றும் வன் ஃபெர்ரோ காந்தப் பொருள்களின் பண்புகளை ஒப்பிடுக.
7.
காந்தப்புலக் கோடுகளின் பண்புகள் யாவை?
8.
ஒரு நீண்ட வரிச்சுருள் 15 சுற்றுகள் / செ.மீ2 பரப்புள்ள சுற்று (loop) உள்ளது. வரிச்சுருளில் 0.1 வினாடியில் மின்னோட்டம் 2.0 A லிருந்து 4.0 A க்கு மாறினால், மின்னோட்டம் மாறும் போது தூண்டப்பட்ட மின்னியக்கு விசை எவ்வளவு?
9.
1500 W மின்திறன் உடைய மின் சூடேற்றியை ஒவ்வொரு நாளும் 45 நிமிடங்களுக்குப் பயன்படுத்தி நீர் கொதிக்க வைக்கப்படுகிறது. 1 யூனிட் மின்கட்டணம் Rs. 3.25 எனில் ஒரு மாதத்திற்கு (30 days) செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?
1.
நன்மைகள் :
1. AC மின்னோட்டத்திற்கு உற்பத்தி செலவு குறைவு
2. மாறுதிசை (AC) மின்னோட்டமானது உயர் மின்னழுத்த வேறுபாட்டில் அனுப்பினால் இழப்பு குறையும்.
3. AC ஐ எளிதாக DC யாக மாற்ற முடியும்
குறைபாடுகள் :
1. மின்கலன் மின்னேற்றம் செய்தல், மின்முலாம் பூசுதல் மற்றும் இழுவை போன்றவைகளால் AC மின்னோட்டத்தை பயன்படுத்த முடியாது.
2. உயர் மின்னழுத்த வேறுபாட்டில் மாறுதிசை மின்னோட்டத்துடன் வேலை செய்வது ஆபத்தானது.
2.
A என்பது தட்டின் பரப்பு
q என்பது மின்னூட்டம்
பின்பு மின்புலம் \(E=\frac { \sigma }{ { \varepsilon }_{ 0 } } =\frac { q }{ { \varepsilon }_{ 0 }A } \) (அல்லது) \(EA=\frac { q }{ { \varepsilon }_{ 0 } } \)
ஆனால் \(EA={ \phi }_{ E }\) மின்புலப்பாயம்
\(\therefore { \phi }_{ E }=\frac { q }{ { \varepsilon }_{ 0 } } \) (அல்லது) \(q={ \varepsilon }_{ 0 }{ \phi }_{ E }\)
\(\frac { dq }{ dt } =\frac { d }{ dt } ({ \varepsilon }_{ 0 }{ \phi }_{ E })={ \varepsilon }_{ 0 }\frac { { d\phi }_{ E } }{ dt } \)
மின்னூட்ட மாறும் வீதம் \({ \varepsilon }_{ 0 }\) மடங்கு மின்புலப்பாய மாற்றத்திற்கு சமம்
\({ \varepsilon }_{ 0 }\)\(\frac { { d\phi }_{ E } }{ dt } \) என்பது இடப்பெயர்ச்சி மின்னோட்டம்
3.
(i) \(P=\overset { \rightarrow }{ F } .\overset { \rightarrow }{ V } \) = F V cos θ -----(1)
θ = 0o
(ii) சுற்றின் மூன்று பகுதிகளின் மீது மூன்று விலக்கு விசைகள் \(\overset { \rightarrow }{ { F }_{ 1 } } ,\overset { \rightarrow }{ { F }_{ 2 } } \) மற்றும் \(\overset { \rightarrow }{ { F }_{ 3 } } \) செயல்படுகின்றன.
விலக்கு விசையின் பொதுவான வாய்ப்பாடு
\(\overset { \rightarrow }{ { F }_{ d } } =\overset { \rightarrow }{ li } \times \overset { \rightarrow }{ B } \)
(iii) \(\overset { \rightarrow }{ { F }_{ 1 } } \) மற்றும் \(\overset { \rightarrow }{ { F }_{ 3 } } \) சமமாகவும், எதிராகவும் உள்ளதால் நீங்கி விடும்.
\(\therefore \overset { \rightarrow }{ { F }_{ 1 } } =\overset { \rightarrow }{ li } \times \overset { \rightarrow }{ B } \)
F = ilB sin θ ----(2)
(iv) θ = 90o எனில் \(\overset { \rightarrow }{ { F }_{ 1 } } \) = ilB sin 900 = ilB
\(\therefore \overset { \rightarrow }{ { F }= } -\overset { \rightarrow }{ { F }_{ 1 } } \)
F = F1 = ilB
iன் மதிப்பை பிரதியிட
\(F=\left( \frac { Blv }{ R } \right) lB\)
\(f=\frac { { B }^{ 2 }{ l }^{ 2 }v }{ R } \)
(v) சுற்றை காந்தப்புலத்திற்கு இழுக்க செய்யப்பட்ட வேலை
\(P=FV=\left( \frac { { B }^{ 2 }{ l }^{ 2 }v }{ R } \right) V=\frac { { B }^{ 2 }{ l }^{ 2 }{ V }^{ 2 } }{ R } \)
(vi) சுற்றில் வெப்ப ஆற்றல் வெளிப்படும் வீதம்
P = i2 R
\({ \left( \frac { Blv }{ R } \right) }^{ 2 }R\)
\(P=\frac { { B }^{ 2 }{ l }^{ 2 }{ V }^{ 2 } }{ R } \)
(vii) சுற்றை நகர்த்த செய்யப்பட்ட இயந்திர வேலை சுற்றில் வெப்ப ஆற்றலாய் வெளிப்படுகிறது.
4.
(i) அரக்கு (amber) விலங்கு உரோமம் அல்லது கம்பளி கொண்டு தேய்த்தால் அது சிறு இலைகளையும் தூசியையும் கவர்வதை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பண்டைய கிரேக்கர்கள் கண்டுள்ளனர். இத்தகைய பண்பைப் பெற்றுள்ள அரக்கு மின்னூட்டம் பெற்றுள்ளது
(ii) தகுந்த பொருளைக் கொண்டு தேய்க்கப்படும் கண்ணாடித் தண்டும் கூட மின்னூட்டம் பெறும் தன்மை கொண்டுள்ளது.
(iii) மின்னூட்டம் பெற்ற ஒரு இரப்பர் தண்டைக் கருதுவோம்
(iv) இப்போது மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டு ஒன்றை இரப்பர் தண்டின் அருகில் கொண்டு செல்லும் போது, அவை ஒன்றையொன்று கவருகின்றன
(v) அதே சமயம், மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினை மின்னூட்டம் பெற்ற இன்னொரு கண்ணாடித் தண்டின் அருகில் கொண்டு சென்றால் அவை ஒன்றையொன்று விலக்குவதை காணலாம்
(vi) இரப்பர் தண்டு பெற்ற மின்னூட்டம் கண்ணாடித் தண்டு பெற்ற மின்னூட்டத்திலிருந்து வேறுபடுகிறது
(vii) மின்னூட்டம் பெற்ற இரப்பர் தண்டு மின்னூட்டம் பெற்ற இன்னொரு இரப்பர் தண்டினை விலக்குகிறது. இதிலிருந்து ஓரின மின்னூட்டங்கள் ஒன்றையொன்று விலகுகின்றன எனலாம்
(viii) பிரபஞ்சத்தில் இரு வகை மின்னூட்டங்களே உள்ளன. ஒரு வகையை நேர் மின்னூட்டம் (+) எனவும், இன்னொரு வகையை எதிர் மின்னூட்டம் (-) எனவும் பெஞ்சமின் பிராங்க்ளின் என்பவர் 18ம் நூற்றாண்டில் வகைப்படுத்தினார்
(ix) ஒரு பொருளிலுள்ள நிகர (net) மின்னூட்டம் சுழியெனில், அப்பொருள் மின் நடுநிலையில் உள்ளது எனலாம்.
(x) ஜே. ஜே. தாம்சன், ஏ. ருதர்போர்டு அறிவியல் அறிஞர்களின் முன்னோடி ஆய்வுகளின் மூலம் அணுவானது மின் நடுநிலை கொண்ட நியூட்ரான்கள் ஆகியவற்றால் ஆனது என்றும் நாம் அறிகிறோம்
(xi) உராய்வின் மூலம் மின்னேற்றம் (charging) செய்யும் முறை உராய்வு மின்னேற்றம் எனப்படும்
5.
1. மின்னழுத்த ஆற்றல் அளிக்கப்படும் வீதம் மின்திறன் P எனப்படும்.
2. மின் துகள்கள் (q) ஆனது இரு புள்ளிகளுக்கிடையே நகரும்போது அதன் மின்னழுத்த வேறுபாடு V ஆகும். இம்மின்துகள்களானது dW = VdQ அளவு மின்னழுத்த ஆற்றலை பெறுகிறது.
3. மின்னழுத்த வேறுபாடு V கொண்ட மின்கலமானது மின்தடையாக்கியுடன் இணைக்கப்பட்ட மின்சுற்று ஒன்றை கருதுவோம்.
4. dQ மின்னூட்டம் உள்ள நேர் மின்துகள்களானது புள்ளி a-விலிருந்து b-க்கு மின்கலம் வழியாகவும்,புள்ளி c-யிலிருந்து d-க்கு மின்தடையாக்கி வழியாகவும் நகர்ந்து மீண்டும் புள்ளி a-வை அடைவதாக கொள்வோம்.
5. a-விலிருந்து b-க்கு மின்துகள்கள் நகரும்போது, இம்மின்துகள்களானது dU = V.dQ அளவு மின்னழுத்த ஆற்றலை பெறுகிறது. இதனால் மின்கலத்தின் வேதி மின்னழுத்த ஆற்றல் இதே அளவு குறைகிறது.
6. dQ அளவு மின்னூட்டம் உள்ள மின்துகள்கள் மின்தடையாக்கி வழியாக பாய்ந்து a-வை அடையும்போது மின்தடையாக்கியில் உள்ள அணுக்களின் மீது மோதி dU அளவுள்ள மின்னழுத்த ஆற்றலை இழக்கிறது.
7. மின்கலமானது, மின்சுற்றில் இணைக்கப்பட்டிருக்கும் வரை இந்நிகழ்வானது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும்.
மின்கலத்தின் மூலம் ஆற்றல் அளிக்கப்படுத்தல்
1. மின்துகள்கள் மின்தடையாக்கியில் எவ்வளவு வேகத்தில் மின்னழுத்த ஆற்றலை இழுக்கிறது என்பதை நாம் கணக்கிடலாம்.
\(P=\frac { dw }{ dt } \)
நமக்கு தெரிந்தது dW = V dQ
\(P=\frac { d }{ dt } (vdQ)=V\left( \frac { dQ }{ dt } \right) \)
\(P=VI\left( \therefore I=\frac { dQ }{ dt } \right) \)
SI அலகு = வாட்
2. மின்திறனின் மிகப்பெரிய அலகுள்ள
கிலோ வாட் = 1KW = 103W
மெகா வாட் = 1/MW = 106W
3. மின்னோட்டம் I மற்றும் மின்தடை R இவற்றை பயன்படுத்தி திறனுக்கான சமன்பாட்டை பின்வருமாறு எழுதலாம்.
P = I2R (∴ V = IR)
4. மின்னழுத்த வேறுபாடு V மற்றும் மின்தடை R இவற்றை பயன்படுத்தி திறனுக்கான சமன்பாட்டை பின்வருமாறு எழுதலாம்.
\(P=\frac { { V }^{ 2 } }{ R } \left( \therefore I=\frac { V }{ R } \right) \)
6.
| எண் | பண்புகள் | மென் ஃபெர்ரோ காந்தப்பொருட்கள் | வன் ஃபெர்ரோ காந்தப்பொருட்கள் |
| 1. | புற காந்தப்புலத்தை நீக்கும் போது | காந்தத்தன்மை மறைந்து விடும் | காந்தத்தன்மை மறையாது |
| 2. | தயக்கக்கண்ணினியின் பரப்பு | சிறியது | பெரியது |
| 3. | காந்த தேக்குத்திறன் | குறைவு | அதிகம் |
| 4. | காந்த நீக்குத்திறன் | குறைவு | அதிகம் |
| 5. | காந்த ஏற்புத்திறன் மற்றும் காந்த உட்புகுத்திறன் | அதிகம் | குறைவு |
| 6. | தயக்க இழப்பு | குறைவு | அதிகம் |
| 7. | பயன்கள் | வரிச்சுருள் உள்ளகம், மின்மாற்றி உள்ளகம் மற்றும் மின்காந்தங்கள் செய்ய பயன்படுகிறது. | நிலையான காந்தங்கள் செய்ய பயன்படுகிறது. |
| 8. | எடுத்துக்காட்டுகள் | தேனிரும்பு, மியூமெட்டல் ஸ்டெல்லாய் மற்றும் சில பொருட்கள் | எஃகு, ஆல்நிக்கோ, காந்தக்கல் மற்றும் சில பொருட்கள். |
7.
1. தொடர்ச்சியான மூடப்பட்ட வளைகோடுகள்
2. காந்தபுலத்தின் திசை காந்தத்திற்கு வெளியே வடமுனை தென்முனை நோக்கிப் பாயும். காந்தத்திற்கு வெளியே - தென்முனை வடமுனை நோக்கி இருக்கும்.
3. மூடப்பட்ட வளைக்கோட்டின் எந்த ஒரு புள்ளியிலும் உள்ள காந்தப்புலத்தின் திசையை, அப்புள்ளியில் உள்ள காந்தப்புலக்கோட்டிற்கு வரையப்படும் தொடுகோட்டின் திசையில் அறியலாம்.
4. காந்தப்புலக் கோடுகள் எப்போதும் ஒன்றை ஒன்று வெட்டாது.
5. வலிமையான காந்தப்புலத்திற்கு கோடுகள் மிக நெருக்கமாக இருக்கும்.
6. வலிமை குறைந்த காந்தப்புலத்திற்கு கோடுகள் இடைவெளிவிட்டு காணப்படும்.
8.
N = 15 சுற்றுகள்/செ.மீ = 1500 சுற்று /மீ
∴ n = 1500
சிறு சுற்றின் (loop) பரப்பு A = 2.0 cm2
= 2 x 10-4m2
di = 4 - 2 = 2A
dt = 0.1s
தூண்டப்பட்ட மின்னியக்கு விசை \(\\ \\ \varepsilon =\frac { d\phi }{ dt } \)
\(\varepsilon =\frac { d }{ dt } (BA)\)
\(=A{ \mu }_{ o }n\frac { di }{ dt } \)
\(=2\times { 10 }^{ -4 }\times { 4\pi }\times { 10 }^{ -7 }\times 1500\times \frac { 2 }{ 0.1 }\ \)
= 7.54 x 10-6v
ε = -7.54 x 10-6v
9.
P = 1500 W, t = 45 நிமிடங்கள் = 3/4 மணிநேரம்
ஒரு யூனிட்டுக்கான கட்டணம் = Rs. 3.25
ஒரு மாதத்திற்கான செலவு = ?
செலவிடப்பட்ட ஆற்றல்
= திறன் x காலம் (மணியில்)
\(=1500\times \frac { 3 }{ 4 } =1125wh\)
\(=1.125\times { 10 }^{ 3 }wh\)
= 1.125 kWh
ஒரு மாதத்தில் செலவிடப்படும் ஆற்றல் = 1.125 x 30
= 33.75 kWh
= 33.75 யூனிட்கள்
1 kWh = 1 யூனிட்
ஒரு மாதத்திற்கான செலவு = செலவிடப்பட்ட மொத்த யூனிட்டுகள் x ஒரு யூனிட்டுக்கான கட்டணம்
= 33.75 x 3.25
= Rs. 109.70
செலுத்த வேண்டிய தொகை = Rs. 110
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards