12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/10/2020
12 ஆம் வகுப்பு இயற்பியல் மாதிரி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Tamil Medium Sample 5 Mark Book Back Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
அதிக தொலைவில் உள்ள ஒரு மூலத்திலிருந்து வெளியாகும் 600 nm அலைநீளம் கொண்ட ஒளிக்கற்றை, 1 mm அகலம் உடைய ஒற்றைப் பிளவின் மீது விழுகிறது. இதனால் உருவாகும் விளிம்பு விளைவின் வடிவமைப்பு 2 m தொலைவிலுள்ள திரையில் பார்க்கப்படுகிறது. மையப் பொலிவு வரிக்கு இருமருங்கிலும் காணப்படும் முதல் கருமைவரிகளுக்கு இடையேயான தொலைவு எவ்வளவு?
2.
ஒரு சிறிய தொலைநோக்கி ஒன்றின் பொருளருகு லென்ஸ் மற்றும் கண்ணருகு லென்ஸ்களின் குவியத்தூரங்கள் முறையே 125 cm மற்றும் 2 cm ஆகும். இந்தத் தொலை நோக்கியின் உருப்பெருக்கத்தைக் கணக்கிடுக. மேலும், பொருளருகு லென்சுக்கும் கண்ணருகு லென்சுக்கும் உள்ள தொலைவு யாது? 1' தொலைவில் பிரிந்து காணப்படும் இரண்டு விண்மீன்களை, இத்தொலைநோக்கி வழியாகக் காணும்போது அவ்விண்மீன்களுக்கு இடையே உள்ள தொலைவு?
3.
(அ) ஹைட்ரஜன் அணு ஒன்று அலைநீளம் 97.5 nm கொண்ட கதிர்வீச்சால் கிளர்வுற செய்யப்படுகிறது. அக்கிளர்வு நிலையின் முதன்மை குவாண்டம் எண்ணைக் கணக்கிடுக.
(ஆ) வெளிவிடு நிறமாலையில் வரிகளின் மொத்த எண்ணிக்கை \(\frac { n(n-1) }{ 2 } \) என்று காட்டுக. மேலும் கேள்வி (அ)-வில் கொடுக்கப்பட்டுள்ள கிளர்வு நிலையிலிருந்து கிடைக்கும். வெளிவிடு நிறமாலையில் சாத்தியமாகும் வரிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
4.
படத்தில் காட்டப்பட்டுள்ள பொது உமிழ்ப்பான் டிரான்சிஸ்டர் மின்சுற்றில் மின்னோட்டம் பெருக்கம் 120 எனில் DC பளுகோட்டை வரைந்து அதில் Q புள்ளியைக் குறிக்க (VBE யின் மதிப்பு புறக்கணிக்கப்படுகிறது)

5.
220 V மின் மூலத்துடன் இணைக்கப்பட்ட ஒரு இறக்க மின்மாற்றியானது 11V, 88W விளக்கை செயல்படவைக்கிறது. (i) மின்னழுத்த வேறுபாடு மாற்றவிகிதம் மற்றும் (ii) முதன்மைச் சுருளில் மின்னோட்டம் ஆகியவற்றைக் கணக்கிடுக.
6.
6 cm2 பரப்பும் 3500 சுற்றுகளும் கொண்ட ஒரு செவ்வக கம்பிச்சுருள் 0.4 T சீரான காந்தப்புலத்தில் வைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில், கம்பிச்சுருளின் தளம் புலத்திற்கு குத்தாக உள்ளது. பிறகு 180° கோணம் சுழற்றப்படுகிறது. கம்பிச்சுருளின் மின்தடை 35 Ω எனில், கம்பிச்சுருள் வழியே பாயும் மின்னூட்டத்தின் மதிப்பைக் காண்க.
7.
\(\frac { { 10 }^{ -4 } }{ \pi } F\) மின்தேக்குத்திறன் கொண்ட மின்தேக்கி, \(\frac { 2 }{ \pi } H\) மின்தூண்டல் எண் கொண்ட மின்தூண்டி மற்றும் 100 Ω மின்தடை கொண்ட மின்தடையாக்கி ஆகியவை இணைக்கப்பட்டு, ஒருதொடர் RLC சுற்று உருவாக்கப்பட்டுள்ளது. 220 V, 50 Hz உள்ள ஒரு மாறுதிசை மின்னோட்டம் சுற்றுக்கு அளிக்கப்பட்டால்
(i) சுற்றின் மின்எதிர்ப்பு
(ii) சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் பெரும மதிப்பு
(iii) சுற்றின் திறன் காரணி மற்றும்
(iv) ஒத்ததிர்வில் சுற்றின் திறன் காரணி ஆகியவற்றைக் கணக்கிடுக.
8.
x அச்சுத்திசையில் பரவும் மின்காந்த அலை ஒன்றைக் கருதுக. y அச்சுத்திசையில் செயல்படும் காந்தப்புலத்தின் அலைவுகளின் அதிர்வெண் 1010 Hz மற்றும் அதன் வீச்சு 10–5 T எனில், மின்காந்த அலையின் அலைநீளத்தைக் கணக்கிடு. மேலும் இந்நிகழ்வில் தோன்றும் மின்புலத்தின் சமன்பாட்டினையும் எழுதுக.
9.

(i) படம் (அ) வில் மூடிய பரப்புகள் A1 மற்றும் A2 ஐக் கடக்கும் மின்பாயத்தினைக் கணக்கிடுக.
(ii) படம் (ஆ) வில் கன சதுரத்தைக் கடக்கும் மின்பாயத்தைக் கணக்கிடுக
10.
r1 = 8 cm மற்றும் r2 = 2 cm ஆரங்கள் கொண்ட இரு மின்கடத்து கோளங்கள் 8 cm நீளத்தைக் காட்டிலும் மிக அதிகமான நீளமுள்ள மெல்லிய கடத்து கம்பியினால் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு கோளத்தில் Q = +100 nC அளவுள்ள மின்னூட்டம் வைக்கப்படுகிறது. ஒரு விநாடியின் பின்ன நேரத்திலேயே இம்மின்னூட்டம் பரவி அதனால் இரு கோளங்களும் நிலைமின் சமநிலையை எட்டுகின்றன

(a) ஒவ்வொரு கோளத்திலும் அமையும் மின்துகள்களின் மின்னூட்டத்தையும் அதன் மின்னூட்டப் பரப்படர்த்தியையும் கணக்கிடுக.
(b) ஒவ்வொரு கோளத்தின் பரப்பிலும் காணப்படும் மின்னழுத்தத்தை கணக்கிடுக
11.
ஒற்றை அயனியாக்கம் செய்யப்பட்ட இரண்டு யுரேனியம் ஐசோடோப்புகள் \(_{ 92 }^{ 235 }{ U }\) மற்றும் \(_{ 92 }^{ 238 }{ U }\) (ஒரே அணு எண்ணும், வேறுபட்ட நிறை எண்ணும் கொண்டிருப்பவை ஐசோடோப்புகளாகும்) 0.500 T வலிமை கொண்ட காந்தபுலத்தினுள் 1.00 x 105 ms-1 திசைவேகத்துடன் காந்தபுலத்திற்குச் செங்குத்தாக செலுத்தப்படுகின்றன. அரைவட்டப் பாதையை இவ்விரண்டு ஐசோடோப்புகளும் நிறைவு செய்த உடன் அவற்றிற்கு இடையே உள்ள தொலைவைக் காண்க. மேலும் இவ்விரண்டு ஐசோடோப்புகளும் அரைவட்டப் பாதையை நிறைவு செய்ய எடுத்துக்கொண்ட நேரத்தையும் கணக்கிடுக. (கொடுக்கப்பட்டவை: ஐசோடோப்புகளின் நிறைகள் m235 = 3.90 × 10-25 kg மற்றும் m238 = 3.95 × 10-25 kg)
12.
V என்ற மின்னழுத்த வேறுபாடு கொண்ட மின்கலம் 30 W மற்றும் 60 W திறனுள்ள மின் பல்புகளுடன் படத்தில் காட்டியவாறு இணைக்கப்பட்டுள்ளது.
(a) எந்த மின் பல்பு அதிக பொலிவுடன் (Brightness) ஒளிரும்?
(b) எந்த மின் பல்பு அதிக மின்தடையை கொண்டிருக்கும்?
(c) இரு மின் பல்புகளும் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டால் எது அதிக பொலிவுடன் ஒளிரும் ?

13.
150 W திறன் கொண்ட விளக்கு ஒன்று உமிழும் ஒளியின் சராசரி அலைநீளம் 5500 Å ஆகும். விளக்கின் பயனுறுதிறன் 12% எனில், ஒரு விநாடியில் விளக்கினால் உமிழப்படும் ஃபோட்டான்களின் எண்ணிக்கையை கணக்கிடுக.
14.
பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தி \(_{ 2 }^{ 4 }{ He }\) அணுக்கருவின் பிணைப்பு ஆற்றலைக் கணக்கிடுக: ஹீலியம் அணுவின் அணு நிறை M4(He) = 4.00260 u மற்றும் ஹைட்ரஜன் அணுவின் நிறை mH = 1.00785 u
15.
500 nm அலை நீளமுடைய ஒளி 5 mm அகலமுடைய துளையின் வழியேச் செல்லும்போது விளிம்பு விளைவு அடைகிறது. இந்நிகழ்வில் கதிர் ஒளியியலைப் பயன்படுத்தும் தொலைவினைக் காண்க
16.
Io ஒளிச்செறிவு கொண்ட இரண்டு ஒளி மூலங்கள் உள்ளன. இவ்விரண்டு ஒளி அலைகளுக்கிடையேயான கட்டவேறுபாடு \(\pi \)/3 ஆக உள்ள புள்ளியில், தொகுபயன் ஒளிச்செறிவைக் காண்க.
17.
பின்வரும் படத்தில் கடத்திகள் சிக்கலான வலைப்பின்னல் வடிவத்தில் அமைக்கப்பட்டு EACE மற்றும் ABCA ஆகிய மூடிய சுற்றுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு கிர்க்காஃப் மின்னழுத்த வேறுபாட்டு விதியை பயன்படுத்துக.

18.
எலக்ட்ரானின் அலை இயல்பினை விவரிக்கும் டேவிசன் – ஜெர்மர் சோதனையை சுருக்கமாக விவரி.
19.
ரோபோக்களின் முக்கிய பாகங்களின் செயல்பாடுகளை விவரி.
20.
ஒரு சதுர வடிவில் உள்ள உலோகச் சுற்று abcd ஆனது வளையக்கூடியது. அதன் தளம் புலத்திற்கு குத்தாக உள்ளவாறு ஒரு காந்தப்புலத்தில் வைக்கப்பட்டுள்ளது. காந்தப்புலமானது தாளின் தளத்திற்கு குத்தாக உள்நோக்கி உள்ளது. படத்தில் காட்டியுள்ளவாறு சதுரச் சுற்று ஒரு ஒழுங்கற்ற வடிவத்திற்கு நசுக்கப்பட்டால் தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசையைக் காண்க.
21.
இடியுடன் கூடிய மழையின் போது, மேகங்களுக்குள் இருக்கும் நீர் மூலக்கூறுகளின் இயக்கம் ஏற்படுத்தும் உராய்வினால் மேகங்களின் அடிப்பகுதி எதிர்மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை பெறுகின்றது. இப்போது மேகத்தின் அடிப்பகுதியும் தரையும் ஓர் இணைத்தட்டு மின்தேக்கியைப் போலச் செயல்படுகின்றன. மேகத்திற்கும் தரைக்கும் இடையேயான மின்புலமானது காற்றின் மின்காப்பு வலிமையை விட (அதாவது 3 × 106 Vm-1), அதிகமாக இருந்தால் மின்னல் உருவாகும்.

(a) தரையிலிருந்து மேகத்தின் அடிப்பகுதி 1000 m உயரத்தில் இருப்பின், மேகத்திற்கும் தரைக்கும் இடையேயான மின்னழுத்த வேறுபாட்டைக் கண்டுபிடிக்கவும்.
(b) பொதுவில், ஒரு மின்னல் வெட்டு ஏற்படும்போது ஏறத்தாழ 25C மின்னூட்ட அளவுள்ள எலக்ட்ரான்கள் மேகத்திலிருந்து தரைக்குப் பெயர்கின்றன. இதில் தரைக்குப் பெயர்க்கப்படும் நிலை மின்னழுத்த ஆற்றல் எவ்வளவு?
22.
ஓரலகு நீளத்திற்கு n சுற்றுகளைக் கொண்ட வரிச்சுருளின் அச்சில் எந்த ஒரு புள்ளியிலும் உள்ள காந்தப்புலம் \(B=\frac12\)μ0nI(cos θ1 - cos θ2) என நிறுவுக.
23.
காந்தத்திருப்புத்திறன் \(\vec { { p }_{ m } } \) கொண்ட சட்ட காந்தமொன்று நான்கு துண்டுகளாக வெட்டப்படுகிறது. அதாவது முதலில் காந்தத்தின் அச்சைப்பொறுத்து இரண்டு துண்டுகளாகவும் பின்பு ஒவ்வொரு துண்டும், மேலும் இரண்டு துண்டுகளாகவும் வெட்டப்படுகின்றன. ஒவ்வொரு துண்டின் காந்தத்திருப்புத்திறனையும் காண்க.
24.
மோட்டார் வண்டி அல்லது மகிழுந்து உள்ளிட்ட வாகனங்களின் எந்திரத்தினுள் காற்று – எரிபொருள் கலவையைப் பற்ற வைக்கப் பயன்படும் அமைப்பு பொறிச் செருகி (spark plug). அதில் 0.6 mm இடைவெளியில் பிரித்து வைக்கப்பட்ட இரு மின்முனைகள் இருக்கின்றன.

தீப்பொறியை ஏற்படுத்த 3 × 106 Vm-1 வலிமை கொண்ட மின்புலம் தேவைப்படுகிறது. எனில்
(அ) தேவைப்படும் மின்னழுத்த வேறுபாடு எவ்வளவு?
(ஆ) இடைவெளியை அதிகரித்தால், மின்னழுத்த வேறுபாடு அதிகரிக்குமா, குறையுமா அல்லது மாறாமல் இருக்குமா?
(இ) இடைவெளி 1 mm எனில் மின்னழுத்த வேறுபாட்டைக் காண்.
25.
5 V மின்னியக்கு விசை கொண்ட இரு மின்கலங்கள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டு 8 Ω மின்தடை மற்றும் 4 Ω, 6 Ω மற்றும் 12 Ω ஆகிய மின்தடைகளின் பக்க இணைப்பு ஆகியவற்றின் குறுக்காக இணைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட அமைப்பிற்கு மின்சுற்று ஒன்று வரைந்து
அ) மின் கலத்திலிருந்து பெறப்படும் மின்னோட்டம்
(ஆ) ஒவ்வொரு மின்தடை வழியேச் செல்லும் மின்னோட்டம் ஆகியவற்றை கணக்கிடுக.
26.
மின்னணுவியலை விருப்பமாக கொண்ட மாணவி ஒரு வானொலிப்பெட்டியை உருவாக்குகிறார். அந்த மின்சுற்றுக்கு ஒரு 150 Ω மின்தடை தேவைப்படுகிறது. ஆனால் அவரிடம் 220 Ω, 79 Ω மற்றும் 92 Ω மின்தடைகள் மட்டுமே உள்ளன எனில் அவர் இம்மின்தடைகளை எவ்வாறு இணைத்து தேவையான மதிப்புடைய மின்தடையை பெறுவார்?
27.
மின்னல் என்பது இயற்கையில் உருவாகும் மின்னோட்டத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த வகை மின்னலில் 5 x 107 V மின்னழுத்த வேறுபாட்டில் 0.2 s நேர இடைவெளியில் 109 J ஆற்றல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இந்த தகவலை பயன்படுத்தி கீழ்கண்ட அளவுகளைக் கணக்கிடுக.

(a) மேகத்திற்கும் புவிக்கும் இடையே பரிமாற்றம் செய்யப்பட்ட மின்துகள்களின் மொத்த மின்னூட்டத்தின் அளவு
(b) மின்னல் வெட்டில் ஏற்பட்ட மின்னோட்டம்
(c) 0.2 s நேர இடைவெளியில் அளிக்கப்பட்ட மின்திறன்
28.
படம் (அ) (ஆ) மற்றும் (இ) ல் காட்டப்பட்டுள்ள மின்துகள்களின் தனித்த பொருள் விசைப்படங்களை வரைக.

1.
\(n\lambda =dsin\theta \)
முதல் இருள் வரிக்கு
n = 1 சிறுமத்திற்கு
\(dsin\theta =\lambda \), இங்கு CO = Nc (தோராயமாக)
படத்திலிருந்து, \(sin\theta =\cfrac { x/2 }{ D } =x/2D\)
\(sin\theta =\lambda /d\)
\(\lambda /d=x/2D\ \therefore x=\cfrac { 2D\lambda }{ d } =\cfrac { 2\times 2\times 600\times { 10 }^{ -9 } }{ { 10 }^{ -3 } } \)
\(x=2.4\times { 10 }^{ -3 }m=2.4mm\)
மையப் பொலிவின் இரு மருங்கும் அமைந்துள்ள முதல் இருள் வரிகளுக்கு இடையேயானத் தொலைவு = 2.4 mm.
2.
f0 = 125 cm; fe = 2 cm; m = ?; L = ?; θi = ?
தொலைநோக்கியின் உருப்பெருக்கம் அல்லது உருப்பெருக்கம் திறன், m = \(\frac { { f }_{ 0 } }{ { f }_{ e } } \)
மதிப்புகளைப் பிரதியிடும்போது, m = \(\frac { 125 }{ 2 } \) = 62.5
தொலைநோக்கியின் தோராய நீளம், L = f0 + fe
மதிப்புகளைப் பிரதியிடும்போது,
L = 125 + 2 = 127 cm = 1.27 m
கோண உருப்பெருக்கத்தின் சமன்பாடு, m = \(\frac { { \theta }_{ i } }{ { \theta }_{ 0 } } \)
மாற்றியமைக்கும்போது θi = m x θ0
மதிப்புகளைப் பிரதியிடும்போது,
θi = 62.5 x 1' = 62.5' = \(\frac { 62.5 }{ 60 } \) = 1.040.
3.
கொடுக்கப்பட்டுள்ளது
படும் கதிர்வீச்சின் அலைநீளம் - 97.5 nm = 97.5 x 10-9 m
ஹைட்ரஜன் அணுவின் அடிநிலை ஆற்றல் = -13.6 eV
(i) முதன்மை குவாண்டம் எண் n = ?
(ii) சாத்தியமாகும் வரிகளின் எண்ணிக்கை மற்றும் வெளிவிடு நிறமாலையில் வரிகளின் மொத்த எண்ணிக்கை = ?
அ) (i) ஹைட்ரஜன் உட்கவர்ந்த ஆற்றல்
\(\begin{equation} \mathrm{E}=\frac{\mathrm{hc}}{\lambda}=\frac{6.6 \times 10^{-34} \times 3 \times 10^{8}}{97.5 \times 10^{-9}} \mathrm{~J} \end{equation}\)
\(\begin{matrix} { E }=\frac { { hc } }{ \lambda } =\frac { 6.6\times 10^{ -34 }\times 3\times 10^{ 8 } }{ 97.5\times 10^{ -9 }\times 1.6\times 10^{ -19 } } { eV } \end{matrix}\)
E = 12.74eV
ஹைட்ரஜன் அடிநிலை ஆற்றல் -13.6eV
En = -13.6 + 12.74 = -0.8562 eV
\({ E }_{ n }=-\cfrac { 13.6 }{ { n }^{ 2 } } -0.8562=-\cfrac { 13.6 }{ { n }^{ 2 } } \)
n2 = 15.88
n \(\cong\) 4
(ii) சாத்தியமாகும் நிலை மாற்றங்கள் மற்றும் வெளிவிடு நிறமாலையில் வரிகளின் மொத்த எண்ணிக்கை = \(\frac{n(n-1)}{2}=\frac{4(4-1)}{2}=\frac{4(3)}{2}=6\)
4.
β = 120
அடிவாய் மின்னோட்டம்
\({ I }_{ B }=\frac { 25V }{ 1M\Omega } =\frac { 25 }{ { 1\times 10 }^{ 6 } } =25\mu A\)
\(\beta =\frac { I_{ C } }{ I_{ B } } \) (அல்லது)
\({ I }_{ C }=\beta I_{ B }\)
\({ I }_{ C }=120\times 25\mu A\)
= 3000 μA = 3 mA
\({ V }_{ CE }={ V }_{ CC }-I_{ C }{ R }_{ C }\)
\({ V }_{ CE }=25-3mA\times 5k\) = 10V
\({ V }_{ CE }=10V\)
.png)
5.
மின்மாற்ற விகிதம் , \(\frac { { V }_{ s } }{ { V }_{ p } } =\frac { { N }_{ s } }{ N_p } \)
இங்கு Vs = 11 V, Vr = 220 V, P = 88 W
(i) = \(\frac { { V }_{ s } }{ { V }_{ p } } =\frac { { 11 } }{ 220 } \)
\(K =\frac { { 1 } }{ 20 } \)
(ii) முதன்மை மின்னோட்டம், \(I_p =\frac { { P } }{ V_p } \)
\(=\frac { { 88 } }{220 } =\frac{4}{10}=0.4 A\)
∴ Ip = 0.4 A
6.
சுருளின் பரப்பு , \(A=6 \times 10^{-4} \mathrm{~m}^2, \)
சுற்றுகளின் எண்ணிக்கை , N = 3500 சுற்று
காந்தப்புலம் , B = 0.4 T
கோணம் , \(\theta=\pi-\frac{\pi}{2}=\frac{\pi}{2} \mathrm{rad}=90^{\circ}\)
தூண்டப்பட்ட மின்னியக்கு விசை , e=N A B sin θ
\(e=3500 \times 6 \times 10^{-4} \times 0.4 \times \sin 90^{\circ}\)
\(=3500 \times 2.4 \times 10^{-4} \times 1 \)
\(=840 \times 10^{-3} \mathrm{V} \)
மின்தடை = 35Ω
மின்னோட்டம் \(I=\frac{e}{R}=\frac{1440 \times 10^{-1}}{35} \)
\(I=24 \times 10^{-3} A\)
மின்னூட்டம் , Q = It
\(=24 \times 10^{-3} \times 2 \)
\(=48 \times 10^{-3} \mathrm{C} \)
மின்னூட்டம் \(Q=48 \times 10^{-3} \mathrm{C}\)
7.
\(L=\frac { 2 }{ \pi } H;C=\frac { { 10 }^{ -4 } }{ \pi } \)F; R = 100Ω
VRMS = 220 V; f = 50 Hz
\({ X }_{ L }=2\pi fL=2\pi \times 50\times 2/\pi =200\)Ω
\({ X }_{ c }=\frac { 1 }{ 2\pi fC } =\frac { 1 }{ 2\pi \times 50\times \frac { { 10 }^{ -4 } }{ \pi } } \) = 100 Ω
(i) மின்எதிர்ப்பு, \(Z=\sqrt { { R }^{ 2 }+{ ({ X }_{ L }-{ X }_{ C }) }^{ 2 } } \)
= \(\sqrt { { 100 }^{ 2 }+(200-{ 100) }^{ 2 } } \) = 141.4 Ω
(ii) மின்னோட்டத்தின் பெரும மதிப்பு,
\({ I }_{ m }=\frac { { V }_{ m } }{ Z } =\frac { \sqrt { 2 } { V }_{ RMS } }{ Z } \)
\(=\frac { \sqrt { 2 } \times 220 }{ 141.4 } \) = 2.2 A
(iii) சுற்றின் திறன் காரணி,
cos Ф = \(\frac{R}{Z}\) = \(\frac{100}{141.4}\) = 0.707
(iv) ஒத்ததிர்வில் திறன் காரணி
cos Ф = \(\frac{R}{Z}\) = \(\frac{R}{R}\) =1
8.
காந்தப்புலத்தின் வீச்சு B = 10-5 T
அதிர்வெண், f = 1010 HZ
(i) அலையின் அலைநீளம்,
\({\lambda}=\frac{c}{f} =\frac{3 \times 10^8}{ 10^{10}} \)
= 3 x 108 - 10
அலைநீளம் = 3 x 10-2 m
(ii) மின்புலம் E(x,t)\(\hat i\)
அலைநீளம் \(\omega =2 \pi f \)
\(\omega=2 \times 3.14 \times 10^{10}=6.28 \times 10^{10} rads^{-1}\)
\(k=\frac{2 \pi}{\lambda} =\frac{2 \times 3.14}{3 \times 10^{-2}} \)
\(=\frac{6.28}{3 \times 10^{-2}}=\frac{628}{3}=2.09 \times 10^{2} \)
k = 2.09 x 102
மின்புலத்தின் சமன்பாடு
\(\vec{E}(x, t)=E_o \sin \left(\frac{2 \pi}{\lambda} x-2 \pi f t\right) \hat{i} N C^{-1} \)
\(\vec{E}(x , t)=3 \times 10^{3} \sin \left(2.09 \times 10^{2} \mathrm{x}-6.28 \times 10^{10} \mathrm{t}\right) \hat(-{k}) N C^{-1} \)
9.
(i) படம் (அ) வில் பரப்பு A1, Q மதிப்புடைய மின்துகளைச் சூழ்ந்துள்ளது. இம் மூடிய பரப்பின் வழியே செல்லும் மின்பாயம் \({ \Phi }_{ E }=\frac { Q }{ { \varepsilon }_{ 0 } } \) ஆனால் பரப்பு A2 வைக் கடக்கும் மின்பாயம் சுழியாகும்.
(ii) படம் (ஆ) வில் கனசதுரத்தினுள் இருக்கும் மின்துகள்களின் நிகர மின்னூட்டம் 3q. எனவே அதைக் கடக்கும் மொத்த மின்பாயம் \({ \Phi }_{ E }=\frac { 3q }{ { \varepsilon }_{ 0 } } \) , -10q மதிப்புடைய மின்துகளானது கன சதுரத்திற்கு வெளியே உள்ளதால் மொத்த மின் பாய மதிப்பில் அதன் பங்களிப்பு ஏதுமில்லை.
10.
(a) கோளம் A இன் பரப்பில் காணப்படும் நிலைமின்னழுத்தம்
\({ V }_{A }=\cfrac { 1 }{ 4\pi { \varepsilon }_{ 0 } } \cfrac { { q }_{ 1 } }{ { r }_{ 1 } } \)
கோளம் B இன் பரப்பில் காணப்படும் நிலைமின்னழுத்தம் \({ V }_{ B }=\cfrac { 1 }{ 4\pi { \varepsilon }_{ 0 } } \cfrac { { q }_{ 2 } }{ { r }_{ 2 } } \)
VA = VB ஆதலால்
\(\cfrac { { q }_{ 1 } }{ { r }_{ 1 } } =\cfrac { { q }_{ 2 } }{ { r }_{ 2 } } \Rightarrow { q }_{ 1 }=\left( \cfrac { { r }_{ 1 } }{ { r }_{ 2 } } \right) { q }_{ 2 }\)
மொத்த மின்னூட்ட மாறா விதியின்படி,Q = q1 + q2, q1 = Q - q2 என மேலுள்ள சமன்பாட்டில் பிரதியிட
\(Q-{ q }_{ 2 }=\left( \cfrac { { r }_{ 1 } }{ { r }_{ 2 } } \right) { q }_{ 2 }\)
எனவே, \({ q }_{ 2 }=Q\left( \cfrac { { r }_{ 1 } }{ { r }_{ 1 }+{ r }_{ 2 } } \right) \)
மேலும், \({ q }_{ 2 }=100\times { 10 }^{ -9 }\times \left( \cfrac { 2 }{ 10 } \right) \) = 20nC
மற்றும் q1 = Q – q2 = 80 nC
கோளம் A ன் மின்னூட்டப் பரப்படர்த்தி \({ \sigma }_{ 1 }=\cfrac { { q }_{ 1 } }{ { 4\pi r }_{ 1 }^{ 2 } } \)
கோளம் B ன் மின்னூட்டப் பரப்படர்த்தி \({ \sigma }_{ 2 }=\cfrac { { q }_{ 1 } }{ { 4\pi r }_{ 2 }^{ 2 } } \)
எனவே,
\({ \sigma }_{ 1 }=\cfrac { 80\times { 10 }^{ -9 } }{ 4\pi \times 64\times { 10 }^{ -4 } } =0.99\times { 10 }^{ -6 }{ Cm }^{ -2 }\)
மற்றும்
\({ \sigma }_{ 2 }=\cfrac { 20\times { 10 }^{ -9 } }{ 4\pi \times 4\times { 10 }^{ -4 } } =3.9\times { 10 }^{ -6 }{ Cm }^{ -2 }\)
பெரிய கோளத்தைவிட சிறிய கோளத்தின் மின்னூட்டப் பரப்படர்த்தி அதிகமாக உள்ளதைக் கவனிக்கவும் \(\left( { { \sigma }_{ 2 } }\approx { 4\sigma }_{ 1 } \right) \) இதிலிருந்து \(\cfrac { { \sigma }_{ 1 } }{ { \sigma }_{ 2 } } =\cfrac { { r }_{ 2 } }{ { r }_{ 1 } } \) என்பது உறுதியாகிறது.
இரு கோளங்களின் மின்னழுத்தமும் சமம். ஆகவே, ஏதேனும் ஒரு கோளத்தின் மின்னழுத்தத்தைக் கணக்கிடலாம்.
\({ V }_{ A }=\cfrac { 1 }{ 4\pi { \varepsilon }_{ 0 } } \cfrac { { q }_{ 1 } }{ { q }_{ 2 } } =\cfrac { 9\times { 10 }^{ 9 }\times 80\times { 10 }^{ -9 } }{ 8\times { 10 }^{ -2 } } \) = 9 kV
11.
இவ்விரண்டு ஐசோடோப்புகள் ஒற்றை அயனியாக்கம் செய்யப்பட்டவை. எனவே அவை இரண்டும் ஒரே மின்னூட்டத்தைப் பெற்றிருக்கும் அதாவது எலக்ட்ரானின் மின்னூட்டத்திற்குச் சமமான மின்னூட்டத்தைப் பெற்றிருக்கும். எலக்ட்ரானின் மின்னூட்டம் q = - 1.6 × 10-19 C \(_{ 92 }^{ 235 }{ U }\) மற்றும் \(_{ 92 }^{ 238 }{ U }\) அவற்றின் நிறைகள் முறையே 3.90 × 10-25 kg மற்றும் 3.95 × 10-25 kg ஆகும். கொடுக்கப்படும் காந்தப்புலம் B = 0.500 T. ஐசோடோப்புகளின் திசைவேகம் 1.00 × 105 m s-1, எனில்
அ) \(_{ 92 }^{ 235 }{ U }\) இன், பாதையின் ஆரம் r235 என்க
\({ r }_{ 235 }=\frac { { m }_{ 235 }v }{ \left| q \right| B } =\frac { 3.90\times { 10 }^{ -25 }{ \times 1.00\times 10 }^{ 5 } }{ 1.6\times { 10 }^{ -19 }\times 0.500 } \)
= 48.8 x 10-2m
r235 = 48.8 cm
\(_{ 92 }^{ 235 }{ U }\) ஐசோடோப்பு மேற்கொண்ட அரைவட்டப் பாதையின் விட்டம் d235 = 2r235 = 97.6 cm
ஆ) \(_{ 92 }^{ 238 }{ U }\) இன் பாதையின் ஆரம் r238 என்க.
\({ r }_{ 238 }=\frac { { m }_{ 238 }v }{ \left| q \right| B } =\frac { 3.90\times { 10 }^{ -25 }{ \times 1.00\times 10 }^{ 5 } }{ 1.6\times { 10 }^{ -19 }\times 0.500 } \)
= 49.4 x 10-2 m
r238 = 49.4 cm
\({ U }_{ 92 }^{ 238 }\) ஐசோடோப்பு மேற்கொண்ட அரைவட்டப் பாதையின் விட்டம் d238 = 2r238 = 98.8 cm
எனவே, இவ்விரண்டு ஐசோடோப்புகளுக்கு இடையே உள்ள தொலைவு Δd = d238 - d235 = 1.2 cm
(ஆ) ஒவ்வொரு ஐசோடோப்பும் அரைவட்டப் பாதையை நிறைவு செய்ய எடுத்துக்கொண்ட நேரங்கள் முறையே
= \(\frac { 97.6\times { 10 }^{ -2 } }{ 1.00\times { 10 }^{ 5 } } \) = 9.7 x 10-6 s = 9.76 μs
= \(\frac { 98.8\times { 10 }^{ -2 } }{ 1.00\times { 10 }^{ 5 } } \) = 9.88 x 10-6 s = 9.88 μs
12.
(a) மின்கலத்தினால் அளிக்கப்படும் திறன் P = VI ஆகும். மின்பல்புகள் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளதால், இவற்றின் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு சமமாகும். மின்னழுத்த வேறுபாடு மாறிலியாக இருப்பதால் திறனானது மின்னோட்டத்திற்கு நேர்த்தகவில் அமையும் (P ∝ I). எனவே 60 W மின்பல்பு 30 W மின்பல்பை விட இரு மடங்கு மின்னோட்டத்தை பெறுவதால் அது அதிக பொலிவாக இருக்கும்.
(b) P = \(\frac { { V }^{ 2 } }{ R } \) எனும் சமன்பாட்டில், மின்னழுத்த வேறுபாடு மாறிலி என்பதால், திறன் மின்தடைக்கு எதிர்தகவில் \(\left( R\propto \frac { 1 }{ P } \right) \)அமைகிறது. எனவே 30 W மின்பல்பு 60 W மின்பல்பை விட இருமடங்கு மின்தடையை பெற்றிருக்கும்.
(c) இரு மின்பல்புகளும் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டால், அவற்றின் வழியே செல்லும் மின்னோட்டம் சமமாகும். இந்நிலை இரு மின்தடையாக்கிகள் தொடரிணைப்பில் உள்ளதற்கு ஒப்பாகும். அதிக மின்தடையுள்ள மின்பல்பின் குறுக்கே அதிக மின்னழுத்த வேறுபாடு இருக்கும். எனவே 30W மின்பல்பு அதிக பொலிவுடன் காணப்படும். எனவே மின்பல்பின் குறிப்பிட்டுள்ள அதிகத் திறன் அளவு மட்டும் அதிக பொலிவுத்தன்மைக்கு காரணமாகாது. ஒரு மின்பல்பின் பொலிவுத்தன்மை, மின்பல்புகள் தொடரிணைப்பில் உள்ளனவா அல்லது பக்க இணைப்பில் உள்ளனவா என்பதை பொறுத்தது.
13.
\(\lambda =5500\times { 10 }^{ -10 }m;P=150W\ \) பயனுறுதிறன் = 12%
\(e=\cfrac { he }{ \lambda } =\cfrac { he }{ \lambda } \cfrac { 6.626\times { 10 }^{ -34 }\times 3\times { 10 }^{ 8 } }{ 5500\times { 10 }^{ -10 } } =3.614\times { 10 }^{ -19 }\)
\(n=\cfrac { E }{ e } =\cfrac { 150 }{ 3.614\times { 10 }^{ 19 } } =4.15\times { 10 }^{ 20 }\times \cfrac { 12 }{ 100 } \)
\(n=4.98\times { 10 }^{ 19 }\)
14.
பிணைப்பு ஆற்றல் BE = [ZmH + Nmn - MA]c2
ஹீலியம் அணுவிற்கு Z = 2, N = A–Z = 4–2 = 2
நிறை குறைபாடு
Δm = [(2 x 1.00785u) + (2 x 1.008665 u) -4.00260 u] Δm = 0.03043 u
B.E = 0.03043u × c2
B.E = 0.03043 × 931 MeV = 28.33 MeV
[∵ 1 uc2 = 931 MeV]
\(_{ 2 }^{ 4 }{ He }\) அணுக்கருவின் பிணைப்பு ஆற்றல் 28.33 MeV.
15.
a = 5 mm = 5 x 10-3 m;
λ = 500nm = 500 x 10-9m; z = ?
ப்ரனெல் தொலைவு, z = \(\frac { { a }^{ 2 } }{ 2\lambda } \) மதிப்புகளைப் பிரதியிடும்போது,
z = \(\frac { { \left( 5\times { 10 }^{ -3 } \right) }^{ 2 } }{ 2\times 500\times { 10 }^{ -9 } } =\frac { 25\times { 10 }^{ -6 } }{ 1\times { 10 }^{ -6 } } \\ \) = 25 m
z = 25 m
16.
ஒளிமூலங்களின் ஒளிச்செறிவு Io
தொகுபயன் ஒளிச்செறிவு, I = 4 I0cos2(ϕ/2)
கட்டவேறுபாடு, ø = \(\pi \) /3 யாக உள்ள புள்ளியில் தொகுபயன் ஒளிச்செறிவு I = 4 I0 cos2 = 3I0
17.
EACE என்ற மூடிய சுற்றுக்கு கிர்க்காஃப் மின்னழுத்த வேறுபாட்டு விதியை பயன்படுத்தினால்
I1R1 + I2R2 + I3R3 = ε
அதேபோல் ABCA எனும் மூடிய சுற்றுக்கு
I4R4 + I5R5 - I2R2 = 0
18.
படிகமாக உள்ள திண்மங்களின் எலக்ட்ரான் கற்றைகள் விளிம்பு விளைவு அடைவதை சோதனை விளக்குகிறது.
அமைப்பு
1. குறைந்த மின்னழுத்த அடுக்கு மூலம் சூடேற்றப்படும் மின்னிழையிலிருந்து வெப்ப அயனி உமிழ்வு மூலம் எலக்ட்ரான்கள் உமிழப்படுகின்றன.
2. உயர் மின்னழுத்த அடுக்கு மூலம் கொடுக்கப்படும் மின்னழுத்த வேறுபாட்டினால், முடுக்கப்படுகின்றன.
3. இரு மெல்லிய அலுமினியத் தகடுகள் வழியே செல்லும் போது இணைக் கற்றையாக மாறி நிக்கல் படிகத்தின் மீது விழுகிறது.
19.
பெரும்பாலான ரோபோக்கள் மூன்று முக்கிய பாகங்களால் ஆனது :
கட்டுப்பாட்டாளர்:
இது மூளை என்றும் அழைக்கப்படுகிறது. இது கணினி நிரலினால் இயங்குகிறது. இது இயங்கும் பாகங்களுக்கு கட்டளைகளை வழங்குகிறது.
இயந்திரவியல் பாகங்கள்:
மோட்டார்கள், பிஸ்டன்கள், பிடிப்பான்கள், சக்கரங்கள் மற்றும் கியர்கள் ஆகியவை ரோபோவை இயங்க, படிக்க, திரும்ப மற்றும் தூக்கச் செய்கின்றன.
உணர்விகள்:
ரோபோட்டின் சுற்றுப்புறத்தைப் பற்றி, சுற்றுப்புறத்திலுள்ள பொருள்களின் அளவுகள் மற்றும் வடிவங்களையும், பொருள்களிடையே உள்ள தொலைவு மற்றும் திசைகளையும் ரோபோட்டிடம் கூற இது உதவுகிறது.
முக்கியக் கூறுகள் செயல்படும் விதம்:

20.
தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசை
a → b
b → c
c → d மற்றும் d → a
21.
(a) மின்புலம் E = \(\frac{Potential \ difference}{Distance}=\frac{V}{d}\)
மின்புலம் E = 3 x 106 Vm-1
இடைவெளி d = 1000 m
∴ மின்னழுத்த வேறுபாடு V = E x d =3 x 106 x 103 = 3 x 109 V
(b) நிலை மின்னழுத்த ஆற்றல் U = qV
U = 25 x 3 x 109 = 75 x 109 J
∴ தரைக்குப் பெயர்க்கப்படும் நிலை மின்னழுத்த ஆற்றல் = 75 x 109 J
22.
1. வரிச்சுருள் என்பது ஒரு நீளமான உருளையான சுருள் அநேக எண்ணிக்கை கொண்டது.
2. n ➝ ஓரலகு நீளத்திற்கான சுற்றுகளின் எண்ணிக்கை
3. R ➝ வரிச்சுருளின் ஆரம்
4. O புள்ளியிலிருந்து x தொலைவில் உள்ள dl என்னும் சிறு கூறு உள்ளது, மற்றும் P புள்ளியிலிருந்து r தொலைவில் உள்ளது.
\(r=\sqrt { { R }^{ 2 }+{ ({ x }_{ 0 }-x) }^{ 2 } } \)
5. மின்னோட்டம் பாயும் வட்டவடிவக் கம்பிச்சுருளின் அச்சு வழியே ஏற்படும் காந்தப்புலம்.
\(dB=\frac { { \mu }_{ o }{ IR }^{ 2 } }{ 2{ r }^{ 2 } } \times N\)
N=ndx
\(dB=\frac { { \mu }_{ o }n{ IR }^{ 2 }dx }{ 2{ r }^{ 3 } } \)
\(sin\theta =\frac { R }{ r } \)
\(r=Rcosec\theta \)
\(tan\theta =\frac { R }{ { x }_{ 0 }-x } \)
\({ x }_{ 0 }-x=R\quad cot\quad \theta \)
\(\frac { dx }{ d\theta } =Rcos\quad { ec }^{ 2 }\theta \)
\(dx=Rcos\quad { ec }^{ 2 }\theta d\theta \)
\(dB=\frac { { \mu }_{ 0 }nI{ R }^{ 2 }Rcos\quad { ec }^{ 2 }\theta d\theta }{ 2{ R }^{ 3 }cos\quad { ec }^{ 3 }\theta } \)
\(dB=\frac { { \mu }_{ 0 }nI }{ 2 } \int _{ { \theta }_{ 1 } }^{ { \theta }_{ 2 } }{ sin\theta d\theta } \)
\(=\frac { { \mu }_{ 0 }nI }{ 2 } { [-cos\theta ] }_{ { \theta }_{ 1 } }^{ { \theta }_{ 2 } }\)
\(B=\frac { { \mu }_{ 0 }nI }{ 2 } [{ cos\theta }_{ 1 }-{ cos\theta }_{ 2 }]\)
23.
சட்டக் காந்தத்தின் திருப்புத்திறன் = \({ \vec { { p } } }_{ m }\)
.jpg)
காந்தத்தின் அச்சைப் பொறுத்து இரண்டு துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட பின்பு, முனை வலிமை
\(q_{m}^{{\prime}}=\frac{q_{m}}{4}\)
காந்தத்தின் நீளம் = 2l.
ஒவ்வொரு துண்டின் காந்தத் திருப்புத்திறன்
\(\vec { { p }_{ m } } \)புதிய \(=q'_{m} \times2 l \)
\(=\frac{q_{m}}{2} \times 2 l \)
\(=\frac{1}{2}\left(q_{m} \times 2 l\right) \)
\(\vec { { p }_{ m } } \)புதிய \( =\frac{1}{2} (\vec{p_{m})} \) \((\because{p}_{m} =(q_{\mathrm{m}} \times 2 l) )\)
மேலும் நான்கு துண்டுகளாக வெட்டப்பட்ட பின்பு
சட்ட காந்தம் ஒன்றை 'l' நீளத்தில் வெட்டும் போது,
\(\vec{p_m}_{\text {new }} =q'_{m} \times2 l \)
\(=\frac{q_{m}}{4} \times 2 l \)
\(=\frac{1}{4}\left(q_{m} \times 2 l\right) \)
\(\because \overrightarrow{\mathbf{p}}_{\mathrm{m}_{\text {new }}} =\frac{1}{4} (\vec{p_{m})} \) \((\because{p}_{m} =(q_{\mathrm{m}} \times 2 l) )\)
24.
a) இடைவெளி d = 0.6 x 10-3 m
மின்புலம் E = 3 x 106 Vm-1
E=V/d
மின்னழுத்த வேறுபாடு V = E x d
= 3 x 106 x 0.6 x 10-3
= 1800 v
b) இடைவெளியை (d) அதிகரித்தால் மின்னழுத்த வேறுபாடு அதிகரிக்கும் V = E x d
c) E = 3 x 106 Vm-1 மற்றும் இடைவெளி d = 1 x 10-3 m எனில்
மின்னழுத்த வேறுபாடு V = E x d
V = 3 x 106 x 10-3
V = 3 x 103 = 3000 V
25.
AB க்கு இடையே மின்தடை
\(\begin{aligned} &\frac{1}{R_p}=\frac{1}{12}+\frac{1}{6}+\frac{1}{4}=\frac{1+2+3}{12}=\frac{6}{12} \\ \end{aligned}\)
\(\begin{aligned} &R_{\mathrm{p}}=2 \Omega \end{aligned}\)
மின்சுற்றின் மொத்த மின்தடை = 2 + 8 = 10 \(\Omega\)
சுற்றில்மின்னோட்டம் = \(\frac{10}{10}=1 A\)
AB க்கு இடையே மின்னழுத்த வேறுபாடு V = 1 x 2 = 2V
எனவே,
4\(\Omega\) மின்தடையில் மின்னோட்டம் \(I=\frac{2}{4}=0.5 \mathrm{~A}\)
6\(\Omega\) மின்தடையில் மின்னோட்டம் \(\mathrm{I}=\frac{2}{6}=0.33 \mathrm{~A}\)
12\(\Omega\) மின்தடையில் மின்னோட்டம் \(\mathrm{I}=\frac{2}{12}=0 \cdot 17 \mathrm{~A}\)
8\(\Omega\) மின்தடையில் மின்னோட்டம் I = 1A
26.
தேவையான மின்தடை = \(150\Omega \)
உள்ள மின்தடை \(R_{ 1 }=220\Omega \quad { R }_{ 2 }=79\Omega \ and \ { R }_{ 3 }=92\Omega \)
\(\frac{1}{R_{p}} =\frac{1}{R_{1}}+\frac{1}{R_{2}} \)
\(\therefore \frac{1}{R_{p}} =\frac{1}{220}+\frac{1}{79} \)
\(\frac{1}{R_p}=\frac{79+220}{17380}=\frac{299}{17380} \)
\(\therefore R_{p} =\frac{17380}{299}=58.12709 \simeq 58 \Omega \)
RS = Rr+ R3
= 58 + 92 \(=150\Omega \)
எனவே 79Ω மற்றும் 220Ω பக்க இணைப்பில் வைத்து 92Ω தொடரிணைப்பில் இணைக்க வேண்டும்.
27.
E = 109 J, V = 5 x 107 V, t = 0.2 s
A) மேகத்திற்கும் புவிக்கும் இடையே பரிமாற்றம் செய்யப்பட்ட மின்துகள்களின் மொத்த மின்னூட்டத்தின் அளவு
W = VQ
\(Q=\frac { W }{ V } =\frac { E }{ V } \)
\(Q=\frac { { 10 }^{ 9 } }{ 5\times { 10 }^{ 7 } } =\frac { 100 }{ 5 } \)
மின்னூட்டம் Q = 20 C
B) மின்னல் வெட்டில் ஏற்பட்ட மின்னோட்டம்
\(I=\frac { Q }{ t } =\frac { 20 }{ 0.2 } =\frac { 200 }{ 2 } =100\)
மின்னோட்டம் I = 100 A
C) 0.2 s நேர இடைவெளியில் அளிக்கப்பட்ட மின்திறன்
P = VI = 5 x 107 x 100 = 5 x 109
மின்திறன் P = 5GW
28.

12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards