12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/01/2020
முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள்
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
2019, மார்ச் 31 அன்று தாமஸ் என்பவரின் ஏடுகளிலிருந்து பெறப்பட்ட இருப்புகள் பின்வருமாறு:
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| பற்பல கடனீந்தோர் | 6,00,000 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 1,20,000 |
| அறைகலன் | 80,000 | கைரொக்கம் | 20,000 |
| நிலம் மற்றும் கட்டடம் | 3,00,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 60,000 |
| பற்பல கடனாளிகள் | 3,20,000 | சரக்கிருப்பு | 2,20,000 |
2019, மார்ச் 31 ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரிக்கவும் மற்றும் அந்நாளைய முதல் கண்டறியவும்.
2.
பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் காணவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| 31.3.2018 அன்று இறுதி முதல் | 80,000 |
| அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | 30,000 |
| அவ்வாண்டில் எடுப்புகள் | 15,000 |
| 01.4.2017 அன்று தொடக்க முதல் | ? |
| 31.3.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் நட்டம் | 25,000 |
3.
பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| 31.3.2019 அன்று இறுதி முதல் | 1,90,000 |
| அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | 50,000 |
| அவ்வாண்டின் எடுப்புகள் | 30,000 |
| 1.4.2018 அன்று தொடக்க முதல் | ? |
| 31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் | 40,000 |
4.
பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலை கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| தொடக்க கடனீந்தோர் | 1,70,000 |
| கொள்முதல் திருப்பம் | 20,000 |
| கடனீந்தோருக்குச் செலுத்தியது | 4,50,000 |
| இறுதிக் கடனீந்தோர் | 1,90,000 |
5.
பின்வரும் விவரங்களிலிருந்து கடன் விற்பனையைக் கண்டறியவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| 2018, ஜனவரி 1 அன்று கடனாளிகள் | 40,000 |
| கடனாளிகளிடம் பெற்ற ரொக்கம் | 1,00,000 |
| அளித்த தள்ளுபடி | 5,000 |
| விற்பனைத் திருப்பம் | 2,000 |
| 2018, டிசம்பர் 31 அன்று கடனாளிகள் | 60,000 |
6.
கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு இறுதி பற்பல கடனாளிகளையும், இறுதி பற்பல கடனீந்தோரையும் கணக்கிடுக.
| ரூ. | |
|---|---|
| 1.4.2002 அன்று பற்பல கடனாளிகள் | 30,000 |
| 1.4.2002 அன்று பற்பல கடனீந்தோர் | 41,000 |
| கடன் கொள்முதல் | 1,50,000 |
| கடன் விற்பனை | 1,70,000 |
| பெற்ற தள்ளுபடி | 5,000 |
| அளித்த தள்ளுபடி | 6,000 |
| கொள்முதல் திருப்பம் | 7,500 |
| விற்பனைத் திருப்பம் | 6,500 |
| பற்பல கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் | 1,50,000 |
| பற்பல கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் | 1,40,000 |
7.
இரட்டைப்பதிவு முறை மற்றும் முழுமை பெறா பதிவேடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
8.
செல்வம் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
| விவரம் | 1-1-2018 ரூ. |
31.12.2018 ரூ. |
|---|---|---|
| இயந்திரம் | 60,000 | 60,000 |
| வங்கி ரொக்கம் | 25,000 | 33,000 |
| பற்பல கடனாளிகள் | 70,000 | 1,00,000 |
| சரக்கிருப்பு | 45,000 | 22,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 20,000 | 38,000 |
| வங்கிக் கடன் | 45,000 | 45,000 |
| பற்பல கடனீந்தோர் | 25,000 | 21,000 |
கூடுதல் தகவல்கள்:
| ரூ. | ரூ. | ||
|---|---|---|---|
| ரொக்க விற்பனை | 20,000 | கடன் விற்பனை | 1,80,000 |
| ரொக்கக் கொள்முதல் | 8,000 | கடன் கொள்முதல் | 52,000 |
| கூலி | 6,000 | சம்பளம் | 23,500 |
| விளம்பரம் | 7,000 | வங்கிக் கடன்மீது வட்டி | 4,500 |
| எடுப்புகள் | 60,000 | கூடுதல் முதல் | 21,000 |
சரிக்கட்டுதல்கள்:
இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.
9.
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கடனாளிகள் கணக்கு, மொத்தக் கடனீந்தோர் கணக்கு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு மற்றும் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரித்து கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் கண்டறியவும்.
| விவரம் | தொடக்க இருப்பு ரூ. | இறுதி இருப்பு ரூ. |
|---|---|---|
| கடனாளிகள் | 60,000 | 55,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 5,000 | 1,000 |
| கடனீந்தோர் | 25,000 | 28,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 2,000 | 3,000 |
| பிற தகவல்கள் | ரூ. | |
| கடனாளிகளிடமிருந்து ரொக்கம் பெற்றது | 1,30,000 | |
| வாடிக்கையாளருக்கு அளித்த தள்ளுபடி | 5,500 | |
| கடனீந்தோருக்குச் செலுத்திய ரொக்கம் | 70,000 | |
| சரக்களித்தோர் வழங்கிய தள்ளுபடி | 3,500 | |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்குரிய ரொக்கம் செலுத்தியது | 7,000 | |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்கான ரொக்கம் பெற்றது | 14,000 | |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 1,200 | |
| வாராக்கடன் | 3,500 | |
10.
2010 ஜனவரி 1-ல் கடனீந்தோர் ரூ.1,21,000. 2010 டிசம்பர் 31-ல் கடனீந்தோர் தொகை ரூ.1,30,000. அவ்வாண்டில் கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் ரூ.2,09,000 எனில் அவ்வாண்டில் கடன் கொள்முதல் ________ ஆகும்.
ரூ.2,00,000
ரூ.2,09,000
ரூ.2,18,000
ரூ.2,07,000
11.
கணக்கேடுகள் முழுமையாக இரட்டைப்பதிவு முறையில் தயாரிக்கப்படாதபோது அவ்வேடுகள் ______ என்றழைக்கப்படுகின்றன.
முழுமை பெறா பதிவேடுகள்
முழுமை பெற்ற பதிவேடுகள்
ஒற்றைபதிவு முறை
நிலையறிக்கை
12.
செலவுகளுக்குச் செலுத்தியது எந்த கணக்கில் மட்டும் பதியப்படுகிறது?
ரொக்கக் கணக்கில்
ஆள்சார் கணக்கில்
செலவுகள் கணக்கில்
உரிமையாளர் கணக்கில்
13.
கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது______.
மொத்தக் கடனாளிகள் கணக்கு
மொத்தக் கடனீந்தோர் கணக்கு
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு
14.
அ) சரிகட்டப்பட்ட இறுதி முதல் - இறுதி முதல் +எடுப்புகள்-கூடுதல் முதல்
ஆ) சரிகட்டப்பட்ட இறுதி முதல் - இறுதி முதல் -எடுப்புகள் + கூடுதல் முதல்
இ) சரிகட்டப்பட்ட இறுதி முதல் - இறுதி முதல் -எடுப்புகள் - கூடுதல் முதல்
ஈ) சரிகட்டப்பட்ட இறுதி முதல் - இறுதி முதல் +எடுப்புகள் + கூடுதல் முதல்
15.
கூற்று (A): நிலை அறிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட நாளுக்கான சொத்துகள் மற்றும் பொறுப்புகள் இருப்பைக் காட்டும் ஒரு அறிக்கை ஆகும்.
காரணம் (R): இருப்புநிலைக் குறிப்பு வியாபாரத்தின் நிதிநிலையைக் கண்டறிய தயாரிக்கப்படுகிறது.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
இ) (A) சரி ஆனால் (R) தவறு
ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
16.
1) நிலை அறிக்கை தொடக்க முதலை கண்டறிய உதவுகிறது.
2) மொத்தக் கடனீந்தோர் க/கு கடன் கொள்முதலை கண்டறிய உதவுகிறது.
3) மொத்தக் கடனாளிகள் க/கு கடன் விற்பனையை கண்டறிய உதவுகிறது.
அ) 1 மற்றும் 3 சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) 1 மட்டும் சரி
ஈ) 1, 2 மற்றும் 3 சரி
1.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| பற்பல கடனீந்தோர் | 6,00,000 | அறைகலன் | 80,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 1,20,000 | நிலம் மற்றும் கட்டடம் | 3,00,000 |
| முதல் (இருப்புக்கட்டும் தொகை) | 2,80,000 | பற்பல கடனாளிகள் | 3,20,000 |
| கைரொக்கம் | 20,000 | ||
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 60,000 | ||
| சரக்கிருப்பு | 2,20,000 | ||
| 10.00.000 | 10.00.000 |
2.
| விவரம் | ரூ. |
|---|---|
| இறுதி முதல் (31-3-2018) | 80,000 |
| கூட்டுக: அவ்வாண்டில் எடுப்புகள் | 15,000 |
| 95,000 | |
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் | 30,000 |
| சரிகட்டப்பட்ட இறுதி முதல் | 65,000 |
| கழிக்க: 1.4.2017 அன்று தொடக்க முதல் (இருப்புக்கட்டும் தொகை) | 90,000 |
| 31.3.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் நட்டம் | 25,000 |
3.
| விவரம் | ரூ. |
|---|---|
| இறுதி முதல் (31.3.2019) | 1,90,000 |
| கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் | 30,000 |
| 2,20,000 50,000 |
|
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | |
| சரிக்கட்டப்பட்ட இறுதி முதல் | 1,70,000 2,10,000 |
| கழிக்க: தொடக்க முதல் (1.4.2018) (இருப்புக் கட்டும் தொகை) | |
| 31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் | (-) 40,000 |
4.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்கக் க/கு (அளித்தது) | 4,50,000 | இருப்பு கீ/கொ | 1,70,000 |
| கொள்முதல் திருப்பம் க/கு | 20,000 | கொள்முதல் க/கு (கடன்) | 4,90,000 |
| இருப்பு கீ/இ | 1,90,000 | (இருப்புக்கட்டும் தொகை) | |
| 6,60,000 | 6,60,000 |
5.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 40,000 | ரொக்கக் க/கு (பெற்றது) | 1,00,000 |
| விற்பனை க/கு (கடன்) | 1,27,000 | அளித்த தள்ளுபடி க/கு | 5,000 |
| முதல் (இருப்புக் கட்டும் தொகை) | விற்பனைத் திருப்பக் க/கு | 2,000 | |
| இருப்பு கீ/இ | 60,000 | ||
| 1,67,000 | 1,67,000 |
6.
| விவரம் | தொகை ரூ. |
விவரம் | தொகை ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 30,000 | ரொக்கம் பெற்றது | 1,50,000 |
| (தொடக்க இருப்பு) | அளித்த தள்ளுபடி | 6,000 | |
| கடன் விற்பனை | 1,70,000 | விற்பனைத் திருப்பம் | 6,500 |
| இருப்பு கீ/இ (இறுதி இருப்பு/இருப்புக் கட்டும் தொகை) | 37,500 |
| விவரம் | தொகை ரூ. |
விவரம் | தொகை ரூ. |
|---|---|---|---|
| ரொக்கம் கொடுத்தது | 1,40,000 | இருப்பு கீ/இ | 41,000 |
| பெற்ற தள்ளுபடி | 5,000 | (தொடக்க இருப்பு) | |
| கொள்முதல் திருப்பம் | 7,500 | கடன் கொள்முதல் | 1,50,000 |
| இருப்பு கீ/இ (இறுதி இருப்பு/இருப்புக் கட்டும் தொகை) | 38,500 | ||
| 1,91,000 | 1,91,000 |
7.
| வ.எண் | வேறுபாட்டின் அடிப்படை | இரட்டைப்பதிவு முறை | முழுமைபெறா பதிவேடுகள் |
| 1 | நடவடிக்கைகளைப் பதிவு செய்தல் | அனைத்து நடவடிக்கைகளின் பற்று மற்றும் வரவு ஆகிய இரு தன்மைகளும் பதிவு செய்யப்படுகின்றன. | அனைத்து நடவடிக்கைகளின் பற்று மற்றும் வரவுத் தன்மைகள் முழுமையாகப் பதிவு செய்யப்படுவதில்லை. |
| 2 | சரியான இலாபம் அல்லது நட்டம் கணக்கிடுதல் | சரியான இலாபம் அல்லது நட்டம் கண்டறிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு தயாரிக்கப்படுகிறது. | முழுமையானத் தகவல்கள் பெற முடியாததால் வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு துல்லியமாக தயாரிக்க முடியாது. எனவே, கண்டறிந்த இலாபம் அல்லது நட்டம் துல்லியமாக இருக்காது. |
| 3 | பொருந்தும் தன்மை | இது அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாகும். | இது சிறிய அளவிலான தனி ஆள் வணிகம் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு பொருத்தலாம். |
| 4 | நம்பகத்தன்மை | இது, அறிவியல்பூர்வமான கணக்கியல் முறை மற்றும் சில கணக்கியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் நம்பகத் தன்மையுடையதாகும். | இது அறிவியல் தன்மையற்றதால் நம்பகத்தன்மை உடையதல்ல. |
| 5 | ஏற்புத்தன்மை | கணக்கியல் பதிவேடுகள் வரி அதிகாரிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து பயனாளர்களுக்கும் ஏற்புடையதாகும். | கணக்கியல் பதிவேடுகள் அனைத்துப் பயனாளர்களுக்கும் ஏற்புடையதல்ல. |
8.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| வங்கிக்கடன் | 45,000 | இயந்திரம் | 60,000 |
| பற்பல கடனீந்தோர் | 25,000 | வங்கி ரொக்கம் | 25,000 |
| தொடக்க முதல் | 1,50,000 | பற்பல கடனாளிகள் | 70,000 |
| (இருப்புக்கட்டும் தொகை) | சரக்கிருப்பு | 45,000 | |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 20,000 | ||
| 2,20,000 | 2,20,000 |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 45,000 | விற்பனை | |||
| கொள்முதல் | ரொக்கம் | 20,000 | |||
| ரொக்கம் | 8,000 | கடன் | 1,80,000 | 2,00,000 | |
| கடன் | 52,000 | 60,000 | இறுதிச் சரக்கிருப்பு | 22,000 | |
| கூலி | 6,000 | ||||
| மொத்த இலாபம் கீ/இ | 1,11,000 | ||||
| 2,22,000 | 2,22,000 | ||||
| விளம்பரம் | 7,000 | மொத்த இலாபம் கீ/கொ | 1,11,000 | ||
| சம்பளம் | 23,500 | ||||
| இயந்திரம் மீது தேய்மானம் 10% | 6,000 | ||||
| ஐயக்கடன் ஒதுக்கு 1% | 1,000 | ||||
| வங்கிக்கடன் மீது வட்டி | 4,500 | ||||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 69,000 | ||||
| 2,46,000 | 2,46,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் | 1,50,000 | நிலம் மற்றும் கட்டடம் | 60,000 | ||
| கூட்டுக: நிகர இலாபம் | 69,000 | கழிக்க:தேய்மானம் 10% | 6,000 | 54,000 | |
| 2,19,000 | வங்கி ரொக்கம் | 33,000 | |||
| கூட்டுக: கூடுதல் முதல் | 21,000 | பற்பல கடனாளிகள் | 1,00,000 | ||
| 2,40,000 | |||||
| கழிக்க:எடுப்புகள் | 60,000 | 1,80,000 | கழிக்க: ஐயக்கடன் ஒதுக்கு 1% | 1,000 | 99,000 |
| வங்கி கடன் | 45,000 | இறுதிச் சரக்கிருப்பு | 22,000 | ||
| பற்பல கடனாளிகள் | 21,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 38,000 | ||
| 5,01,000 | 2,46,000 |
9.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 5,000 | ரொக்கக் க/கு | 14,000 |
| கடனாளிகள் க/கு (மாற்றுச்சீட்டு பெற்றது - இருப்புக் கட்டும் தொகை) | 11,200 | கடனாளிகள் க/கு (பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது) | 1,200 |
| இருப்பு கீ/இ | 1,000 | ||
| 16,200 | 16,200 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 60,000 | ரொக்கக் க/கு (பெற்றது) | 1,30,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு (மறுக்கப்பட்டது) | 1,200 | அளித்த தள்ளுபடி க/கு | 5,500 |
| விற்பனை க/கு (கடன்) (இருப்புக் கட்டும் தொகை) | 1,44,000 | வாராக்கடன் க/கு | 3,500 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு (மாற்றுச்சீட்டு பெற்றது) | 11,200 | ||
| இருப்பு கீ/இ | 55,000 | ||
| 2,05,200 | 2,05,200 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்கக் க/கு (மாற்றுச்சீட்டுக்குச் செலுத்தியது) | 7,000 | இருப்பு கீ/கொ | 2,000 |
| இருப்பு கீ/இ | 3,000 | பற்பல கடனீந்தோர் க/கு (மாற்றுச்சீட்டு ஏற்கப்பட்டது) (இருப்புக் கட்டும் தொகை) | 8,000 |
| 10,000 | 10,000 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்கக் க/கு (செலுத்தியது) | 70,000 | இருப்பு கீ/கொ | 25,000 |
| பெற்ற தள்ளுபடி க/கு | 3,500 | கொள்முதல் க/கு (கடன்) (இருப்புக் கட்டும் தொகை) | 84,500 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு க/கு (மாற்றுச்சீட்டு ஏற்கப்பட்டது) | 8,000 | ||
| இருப்பு கீ/இ | 28,000 | ||
| 1,09,500 | 1,09,500 |
10.
(c)
ரூ.2,18,000
11.
(a)
முழுமை பெறா பதிவேடுகள்
12.
(a)
ரொக்கக் கணக்கில்
13.
(a)
மொத்தக் கடனாளிகள் கணக்கு
14.
அ) சரிகட்டப்பட்ட இறுதி முதல் - இறுதி முதல் +எடுப்புகள்-கூடுதல் முதல்
15.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
16.
ஈ) 1, 2 மற்றும் 3 சரி
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards