12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/01/2020
விலங்கியல் - மனித இனப்பெருக்கம்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
சரியான இணையைக் கண்டறி:
பிராக்ஸ்டர் ஹிக்ஸ் சுருக்கங்கள் - பொய்யான பிரசவ வலி
பெர்குஸன் அனிச்சைச் செயல் - குழந்தை பிறப்பிற்குப் பின்
நிர்பந்த அனிச்சைச் செயல் - புரோஜெஸ்டிரான்
நியூரோ ஹியுமோரல் அனிச்சைச் செயல் - கருப்பைச் சுருக்கம்
2.
பெரிய வெஸ்டிபுலார் சுரப்பிகள் என்பது________ சுரப்பிகளின் மறுபெயர்.
பர்த்தோலின்
ஸ்கீன்ஸ்
ஏரியோலோ
பால்
3.
விந்து செல்லாக்கம் முழுவதுமாக நடக்க ________ நாட்களாகிறது.
30
12
46
64
4.
குழந்தையின் _______ மாதகாலம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது
5
12
6
3
5.
சுரப்பு நிலை என்பது _______ நிலையைக் குறிக்கும்.
லூட்டியல்
அண்ட செல் விடுபடுதல்
மாதவிடாய்
நுண்பை
6.
கூற்று : சில சமயம், வயிறு வலி மகப்பேறு, அறுவை வலி மகப்பேறு நடைபெறும்.
காரணம் : கருப்பையில் குழந்தையின் நிலை, தாய்சேய் இணைப்புத் திசுவின் தன்மை போன்றவற்றால் இயல்பான குழந்தை பிறப்பு நடைபெறாது.
கூற்றும், காரணமும் சரி.
இரண்டும் தவறு
கூற்று சரி, காரணம் தவறு.
கூற்று தவறு, காரணம் சரி
7.
ஆண்கள் தங்கள் வாழ்நாளில் உற்பத்தி செய்யும் விந்தணுக்களின் எண்ணிக்கை
ஒரு மில்லியன்
500 மில்லியன்
300 மில்லியன்
400 மில்லியன்
8.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில், மனிதனில் நிகழும் முக்கிய இனப்பெருக்க நிகழ்வுகளில் சரியான வரிசையை தேர்ந்தெடுக்கவும்.
விந்து உள்ளேற்றம், கருபதிதல், கருவுறுதல், மகப்பேறு, தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம்
கருபதிதல், கருவுறுதல், விந்து உள்ளேற்றம், தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம், மகப்பேறு
கருபதிதல், விந்து உள்ளேற்றம், கருவுறுதல், மகப்பேறு, தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம்
விந்து உள்ளேற்றம், கருவுறுதல், கருபதிதல், தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம், மகப்பேறு
9.
கூற்று மற்றும் காரண வினாக்கள்:
கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று கூற்று (கூ) ஆகும். மற்றொன்று காரணம் (கா). சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.
A - அண்டம் விடுபடுதல் என்பது கிராஃபியன் நுண்பையிலிருந்து அண்டம் வெளியேறும் நிகழ்ச்சியாகும்.
R - இது மாதவிடாய் சுழற்சியின் நுண்பை (ஃபாலிகுலார்) நிலையில் நடைபெறுகிறது.
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் ஆகும்.
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் இல்லை.
‘கூ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறானவை.
10.
ஆண்ட்ரோஜன் இணைவுப்புரதத்தை உற்பத்தி செய்பவை _____.
லீடிக் செல்கள்
ஹைபோதலாமஸ்
செர்டோலி செல்கள்
பிட்யூட்டரி சுரப்பி
11.
பாலூட்டியின் முட்டை ______.
மீசோலெசிதல் ஓடற்றது
மைக்ரோலெசிதல், ஓடற்றது
ஏலெசிதல், ஓடற்றது
ஏலெசிதல், ஓடுடையது
12.
மனித செல்களில் மிகச்சிறியவை, மிகப்பெரியவை எவை?
13.
கருக்கோளம் (Blastocyst) என்றால் என்ன?
14.
கரு பதிதல் என்றால் என்ன?
15.
தாய்சேய் இணைப்புத்திசு ஒரு நாளமில்லாச் சுரப்பித் திசு – நியாயப்படுத்து
16.
விரிவாக்கம் தருக.
அ) FSH
ஆ) LH
இ) hCG
ஈ) hPL
17.
கோரியானிக் வில்லை பற்றிக் கூறுக.(Chorionic villi )
18.
மகப்பேறு கருப்பைச் சுருக்கங்களில், ஆக்சிடோசினின் பங்கு என்ன?
19.
இனச்செல் உருவாக்கம் – வரையறு?
20.
விந்து செல் உருவாக்கத்தில் ஹார்மோன்களின் பங்கு எது?
21.
கரு சூலப் படலங்களை விளக்குக.
22.
கீழேயுள்ள படத்தில் பெண்ணின் அண்டகத்தில் ஏற்படும் தொடர் நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன.

அ) அண்டசெல் விடுபடும் படத்தை அடையாளம் கண்டு, அண்டசெல் உருவாக்கத்தில் அது எந்த நிலையைக் குறிக்கிறது என்பதையும் கண்டறிக.
ஆ) மேற்கண்ட நிகழ்வுகளுக்குக் காரணமான அண்டக மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.
இ) அதே நேரத்தில், எதிர் பார்க்கப்படும் கருப்பை மாற்றங்களை விளக்குக.
ஈ) C மற்றும் H நிலைகளுக்கிடையேயுள்ள வேறுபாட்டை எழுதுக.
1.
(a)
பிராக்ஸ்டர் ஹிக்ஸ் சுருக்கங்கள் - பொய்யான பிரசவ வலி
2.
(a)
பர்த்தோலின்
3.
(d)
64
4.
(c)
6
5.
(a)
லூட்டியல்
6.
(a)
கூற்றும், காரணமும் சரி.
7.
(b)
500 மில்லியன்
8.
(a)
விந்து உள்ளேற்றம், கருபதிதல், கருவுறுதல், மகப்பேறு, தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம்
9.
(c)
‘கூ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.
10.
(c)
செர்டோலி செல்கள்
11.
(c)
ஏலெசிதல், ஓடற்றது
12.
1. விந்து - மிகச்சிறிய மனித செல்
2. அண்டம் - மிகப்பெரிய மனித செல்
13.
கருப்பையின் உட்சுவரில், கரு பதியும் நிலையில் இது உருவாகிறது. இந்நிலையில் கரு 100 செல்களைக் கொண்ட உள்ளீடற்ற பந்து போன்ற அமைப்பாகிறது. இதற்கு கருக்கோளம் என்று பெயர். இதன் உட்பகுதியில் திரவம் நிரம்பியுள்ளது.
14.
கரு, கருப்பையின் உட்சுவரில் பதிவதை 'கரு பதிதல்' என்கிறோம். இதன் முடிவில் கர்ப்பம் தொடங்குகின்றது.
15.
கர்ப்ப காலத்தில், தாய்சேய் இணைப்புத்திசு, தற்காலிக நாளமில்லாச் சுரப்பியாக செயல்பட்டு கீழ்கண்ட ஹார்மோன்களைச் சுரக்கிறது.
(i) hCG - மனித கோரியானிக் கொனடோடிராபின்
(ii) hcL - மனித கோரியானிக் சோமட்டோமாமோட்ரோபின்
(iii) hPL - மனித பிளாசன்டல் லாக்டோஜன்
(iv) ஈஸ்ட்ரோஜன்
(v) புரோஜெஸ்டிரான்
(vi) ரிலாக்ஸின் ஹார்மோன் இடுப்பு எலும்பிணைப்பு நார்களைத் தளர்வடையச் செய்து, குழந்தை பிறத்தலை எளிதாக்குகிறது.
hCG , hPL ,ரிலாக்ஸின் போன்றவற்றை கர்ப்ப காலத்தில் மட்டுமே உற்பத்தியாகின்றன.
16.
அ) FSH - நுண்பை செல் தூண்டும் ஹார்மோன்
ஆ) LH - லூட்டிமுனைசிங் ஹார்மோன்
இ) hCG - மனித கோரியானிக் கொனடோடிராபின்
ஈ) hPL - மனித பிளாசன்டல் லாக்டோஜன்
17.
1. கருக்கோள டிரோபிளாஸ்ட் செல்கள், கோரியானிக் வில்லை என்ற விரல் போன்ற நீட்சிகளை உருவாக்கும்.
2. இந்நீட்சிகள் கருவின் இரத்தத்தை எடுத்துச் செல்லும்.
3. இவற்றைச் சுற்றிலும் தாயின் இரத்தம் நிரம்பிய குழிகள் உள்ளன.
4. கோரியானிக் வில்லைகளும், கருப்பைத் திசுக்களும் இணைந்து தட்டுவடிவ தாய்சேய் இணைப்புத் திசுவை உருவாக்கும்.
18.
நியூரோஹைபோபைசிஸ் உற்பத்தி செய்யும் ஆக்ஸிடோசின் ஹார்மோன், கருப்பையில் ஆற்றல் மிகுந்த சுருக்கங்களை உருவாக்கி, பிறப்பு வழியின் வழியாகக் குழந்தை வெளியேறும் நிகழ்வை நிறைவு செய்கிறது.
19.
பாலினப்பெருக்க உயிரிகளில் முதல்நிலை பாலுறுப்புகளிலிருந்து விந்துக்களும் அண்ட செல்களும் உருவாகும் நிகழ்ச்சி இனச்செல் உருவாக்கம் எனப்படும். இச்செயல்பாட்டில் குன்றல் பகுப்பு முக்கியப்பங்கு வகிக்கிறது.
20.
1. ஹைபோதலாமஸின், கொனடோடிராபின் வெளிவிடு ஹார்மோன் விந்து செல்லாக்கத்தை தொடங்கும்.
2. GnRH முன் பிட்யூட்டரி மீது செயல்படும்.
3. முன் பிட்யூட்டரி 2 கொனடோடிராபின்களை வெளியிடும்.
(a) FSH (நுண்பை செல் தூண்டும் ஹார்மோன்)
(b) LH (லூட்டினைசிங் ஹார்மோன்)
4. FSH விந்தக வளர்ச்சியைத் தூண்டும்.
5. செர்டோலி செல்கள் ஆண்ட்ரோஜன் இணைவுப் புரதத்தை உற்பத்தி செய்யும்.
6. FSH ஸ்பெர்மியோஜெனிசிஸ் நடைபெற உதவும்.
7. LH இடையீட்டு செல்கள் மீது செயல்படும். அவை டெஸ்டோஸ்டீரோனை உற்பத்தி செய்யும். இவ்வாறாக விந்து செல் உருவாக்கம் தூண்டப்படும்.
21.
அ) அம்னியான்:
1. இரட்டை அடுக்கலான ஒளி ஊடுருவும் சவ்வு.
2. ஆம்னியாடிக் திரவத்தால் நிரப்பப்பட்டுள்ளது.
3. வளர் கருவிற்கு மிதவைச் சூழலைத் தருகிறது. காயங்களினின்று பாதுகாக்கிறது.
4. கருவின் வெப்பநிலையைச் சீராகப் பராமரிக்கிறது.
ஆ)கோரியான்
1. இது வெளிப்படலம்
2. தாய்சேய் இணைப்புத் திசுவை உருவாக்கிறது.
3. மற்ற படலங்களையும் கருவையும் பாதுகாக்கும்.
இ) கருவுணவுப்பை
1. வளரும் கருவின் உணவுப் பாதையை உருவாக்கும்.
2. இரத்த செல், இரத்தக்குழல் ஆகியவற்றின் மூல ஆதாரமாக உள்ளது.
ஈ) ஆலண்டாய்ஸ் :
1. கருவை தாய்சேய் இணைப்புத் திசுவுடன் இணைக்கிறது.
2. சிறுநீர்ப்பையின் ஒரு பகுதியாக மாறுகிறது.
கரு சூழ்படலங்களின் பணிகள்
1. கரு உலர்ந்து போகாமல் பாதுகாத்தல்
2. இயக்க அதிர்வு தாங்குதல்
3. ஊட்டச்சத்து
4. வாயுப் பரிமாற்றம்
22.
அ) அண்ட செல் விடுபடுநிலை - புரோஜெஸ்டிரான்,ஈஸ்ட்ரோஜன்
ஆ) அண்டக ஹார்மோன்கள் - FSH நுண்பை செல்களை தூண்டும் ஹார்மோன்கள்
பிட்யூட்டரி ஹார்மோன்கள் - LH -லூட்டினைசிங் ஹார்மோன்
இ) i) எண்டோ மெட்ரியம் புதுப்பிக்கப்படுதல்
ii) கருமுட்டை பதிவதற்கு ஏற்ற சூழலை கருவுறுதல் உண்டாக்கும்.
iii) கருப்பையின் உட்சுவர் ஊட்டச்சத்து நிறைந்த திரவத்தை உற்பத்தி செய்கிறது.இது 'சுரப்பு நிலையில்' நடக்கிறது.
ஈ) C -இரண்டாம் நிலை நுண்பை செல்கள்
H - கார்பஸ் லூட்டியம்
| இரண்டாம் நிலை நுண்பை செல்கள் | கார்பஸ் லூட்டியம் | |
|---|---|---|
| 1. | நுண்பை நிலையில் காணப்படும். | இவை லூட்டியல் நிலையில் உருவாகும். |
| 2. | இவற்றைச் சுற்றி கிரானுலேசா செல்களும் தீகா அடுக்கும் காணப்படும். | இந்த இடைக்கால நாளமில்லாச் சுரப்பி, புரோஜெஸ்டிரானைச் சுரக்கின்றது. |
| 3. | இவை மூன்றாம் நிலை நுண்பை செல்களாகி பின்னர் முதிர்ந்த கிராபியன் ஃபாலிகிளாகின்றன. | கருவுறுதல் நிகழாவிடில், இது கார்பஸ் அல்பிகன்ஸ் என்ற வடுத்திசுவடு உருவாக்கும். |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards