12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 17/09/2019
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை? அணிசேரா இயக்கத்தில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளை இணைத்ததில் பிரதமர் நேரு அவர்களின் பங்கினை விளக்குக.
2.
இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தியடிகளின் பங்கினை மதிப்பிடுக.
3.
ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் சூழலையும் அதன் விளைவுகளையும் விவரி.
4.
இராஜாஜி திட்டம் பற்றி ஒரு பத்தி எழுதுக.
5.
6.
இந்து தேசியம், இஸ்லாமிய தேசியம் மற்றும் இந்திய தேசியம் ஆகியவை இந்தியப் பிரிவினைக்கு சமபங்காற்றியது எவ்வாறு?
7.
8.
1919-1939ஆம் ஆண்டுகளுக்கிடையில் காலனி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட தொழில்வளர்ச்சியினைப் பற்றி எழுதுக.
9.
இந்திய தேசிய இயக்கத்தில் லால்-பால்-பால் ஆகிய மூவரின் பங்களிப்பினை மதிப்பிடுக.
10.
இந்தியாவில் தேசிய விழிப்புணர்வுக்குப் பிரிட்டிஷாரின் அடக்குமுறை மற்றும் இனவெறிக் கொள்கைகள், எந்த அளவிற்குக் காரணமாக இருந்தன?
1.
(i) சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படைக்கு கோட்பாடுகள் இந்தியா விடுதலை அடைவதற்கு குறைந்தது முப்பது ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டன.
(ii) காலனியம் எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்ப்பது என்பதே இந்தக் கோட்பாட்டின் அடிநாதமாகும்.
(iii) ஜவஹர்லால் நேருவே இந்திய வெளியுறவுக் கொள்கையை முதன்மையான சிற்பி அவர்.
இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் பின்வருமாறு:
1. காலனிய எதிர்ப்பு (அ) ஏகாதிபத்திய எதிர்ப்பு
2. இன ஒதுக்கலை எதிர்த்தல், இனவெறியை எதிர்த்தல்
3. வல்லரசு நாடுகளுடன் அணி சேராமை,
4. ஆப்பிரிக்க - ஆசிய ஒற்றுமை
5. பிற நாடுகளை ஆக்கிரமிக்காமல் இருத்தல்,
6. பிற நாடுகளின் உள்நாட்டு நிகழ்வுகளில் தலையிடாமல் இருத்தல்.
7. ஒரு நாடு மற்றொரு நாட்டின் இறையாண்மை மற்றும் நில எல்லையை மதித்தல்.
8. உலக அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல்
9. நாடுகளுக்கிடையேயான அமைதியை நிலைநிறுத்துவதில் வெற்றிடம் ஏற்படா வண்ணம் இரு நாடுகளும் சமநீதியைப் பாதுகாத்தல் ஆகும்.
10. மார்ச் 1947 இல் டெல்லியில் நேரு ஏற்பாடு செய்த ஆசிய உறவுக்கான மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன.
11. ஆசிய நாடுகளின் விடுதலை மற்றும் உலகில் ஆசியாவின் நிலைமை உறுதி செய்தல் என்பதே மாநாட்டின் மையக் கருத்தாகும்.
12. 1955 இல் இந்தோனேசியா நாட்டின் பாண்டுங் நகரில் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது.
13. சில ஆண்டுகளுக்குப் பின் பெல்கிரேட் நகரில் இந்த நாடுகள் கூடி அணிசேரா இயக்கத்தைத் தோற்றுவிப்பதற்கான அடித்தளத்தை பாண்டுங் மாநாடு ஏற்படுத்திக் கொடுத்தது.
2.
1. 1917- இல் சம்பரானில் இருந்த விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று இந்திய மக்களை ஒன்றிணைக்கும் முதல் முயற்சியை காந்தியடிகள் மேற்கொண்டார்.
2. கேதா போராட்டம் : 1918 நில வருவாய் வசூலை ரத்து செய்யுமாறு காலனி ஆட்சி நிர்வாகத்திடம் அவர்கள் கோரினர்.
3. ரௌலட் சட்டத்திற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை ஆகஸ்ட் 31. 1920 ல் தொடங்கினர்.
4. சௌரி சௌரா சம்பவம் (1922) காரணமாக ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி திரும்பப் பெற்றார்.
5. 1930 ஆம் ஆண்டு தொடங்கிய சட்டமறுப்பு இயக்கம்.
6. 1930 தண்டி பயணம் தொடங்குதல் உப்பு மீது வரியைக் குறைக்க செய்தல்.
7. 1931 காந்தி இர்வின் உடன்படிக்கை மேற்கொள்ளுதல்.
8. 1942, வெள்ளையனே வெளியேறு இயக்கம். போன்ற பல போராட்டங்கள் மூலம் காந்தி இந்திய விடுதலைக்கு முக்கிய பங்கு ஆற்றியுள்ளார்.
3.
1. கிலாபத் மாநாட்டில் காந்தியடிகள் வற்புறுத்தலின் பேரில் 1920 ஆகஸ்ட் 31 முதல் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
2. அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நீதிமன்றங்களை புறக்கணிக்கும் திட்டத்தை அலகாபாத்தில் கூடிய அனைத்து கட்சி கூட்டம் முடிவு செய்தது.
3. 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் சிறப்பு அமர்வில் காலனி ஆதிக்க அரசுடன் ஒத்துழையாமையைக் கடைப்பிடித்தது.
4. காந்தியடிகள் யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. கிலாபத் மற்றும் பஞ்சாப் குறைகள் சரிசெய்யப்பட்டு தன்னாட்சி அரசு நிறுவப்படும் வரை இந்த ஒத்துழையாமையைக் கடைபிடிக்க உறுதி ஏற்கப்பட்டது.
6. 1920 ஆம் ஆண்டு நாக்பூரில் நிகழ்ந்த காங்கிரஸ் அமர்வில் முந்தைய தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
7. காங்கிரஸ் கமிட்டிகளை அங்கீகரித்து அமைப்பதற்கு வகை செய்யும் மற்றொரு முக்கிய தீர்மானம் நாக்பூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
8. இதனால் பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்தனர்.
4.
இராஜாஜி 14 ஏப்ரல் 1944 இல் ஒரு முன்மொழிவுத் தீர்மானத்தை வழங்கினார், அதன் அம்சங்களாவன:
(i) போருக்குப் பின்பு ஒரு ஆணையத்தின் மூலம் இஸ்லாமியர்க்கு முழுப் பெரும்பான்மையில் வாழும் தொடர் மாவட்டங்களைப் பிரித்தெடுத்து அங்கே வயதுத்தகுதி அடைந்தோரைக் கொண்டு வாக்கெடுப்பு நடத்தி பாகிஸ்தான் உருவாக்கம் பற்றி முடிவை எடுத்தல் வேண்டும்
(ii) ஒரு வேலை ஓட்டெடுப்பின் முடிவில் பிரிவினை உறுதிசெய்யப்பட்டால், அதிமுக்கியப் பணிகளான பாதுகாப்பு, தொலைத்தொடர்பு போன்றவற்றை பொதுவில் செயல்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்துதல் வேண்டும்.
(iii) எல்லையில் அமையப்பெற்ற மாவட்டங்களுக்கு இரு இறையாண்மை கொண்ட நாடுகளில் ஏதோ ஒன்றில் சேர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
(iv) இத்திட்டங்கள் யாவும் முழுமையான அதிகார மாற்றம் ஏற்பட்டபின் செயல்முறைக்கு கொண்டுவரப்படுதல் வேண்டும்.
(v) சிறையிலிருந்து காந்தியடிகள் ஜூலை,1944 இல் விடுவிக்கப்பட்ட பின் இராஜாஜி திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஜின்னாவோடு பேச்சுவார்த்தை நடத்த முயன்றார் ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
5.
6.
(i) M. S கோல்வாகர் மற்றும் V. D. சவார்கர் ஆகியோர் இந்து ராஷ்ட்ரா எனும் கோட்பாட்டை மேலும் விரிவாக்கம் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
(ii) இந்துஸ்தானிலுள்ள இந்துக்கள் அல்லாத மக்கள் இந்து பண்பாட்டையும், மொழியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் வெளிப்படையாகவே கூறினார்.
(iii) இந்து தேசத்திற்குக் கீழ்ப்படிந்தவர்களாக, உரிமை கோராதவர்களாகவும் இருத்தல் வேண்டும் ஏற்று அவர்கள் கூறினர்.
(iv) "இந்துக்கள் ஆகிய நாங்கள் நாங்களாகவே ஒரு தேசமாக உள்ளோம்" என V. D. சாவர்கர் உறுதிப்பட கூறினர். இதை காந்தியும் விரும்பினார்.
(v) இந்த சூழலில் 1940 மார்ச் 23 இல் லாகூரில் முஸ்லிம் லீக், முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டுமென்று கோரிக்கையைத் தீர்மானமாக நிறைவேற்றியது.
(vi) இது அகில இந்திய முஸ்லிம் லீக்கின் அமர்வின் ஒருங்கிணைந்த கருத்துக்கும்.
(vii) பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை விட்டுச் செல்லும் முன் நாட்டை இந்திய யூனியன் மற்றும் பாகிஸ்தான் யூனியன் என பிரிவினை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் லீக் தீர்மானித்தது.
(viii) இந்திய தேசியக் காங்கிரஸின் தேசியவாதத்தை உருவாக்கப்படுத்திய காந்தி ஆரிய சமாஜம் அலிகார் இயக்கம் முன்வைத்த குறுகிய தேசியவாதத்தை மறுத்தார்.
(ix) பல்வேறு மதங்களுக்கு அப்பாற்பட்ட அவற்றைக் கடந்த ஓர் அரசியல் அடையாளத்தை தோற்றுவிக்க விரும்பினார்.
7.
8.
(i) 1929 - 30 களில் இந்தியாவில் -44% வெளியில் இருந்து நுகர்வு செய்யப்பட்ட பருத்திப் பொருட்கள் ஆகும்.
(ii) 1933 - 34 இல் பெருமந்த நிலைக்கு பின்னர் 20.5% ஆக குறைந்துவிட்டது.
(iii) இரண்டு தொழில்கள் சர்க்கரை உற்பத்தியும் சிமெண்ட் உற்பத்தியும் போர்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் கப்பல் தொழில் வளர்ச்சியைக் கண்டது.
(iv) "சிந்தியா நீராவிக் கப்பல் கம்பெனி லிமிடெட்" (1919) ஏனையவற்றிற்கு முன்னோடியாக இருந்தது.
(v) 1939-இல் அவர்கள் பிரிட்டிஷாரின் பம்பாய் நீராவிக் கப்பல் நிறுவனத்தையும் வாங்கிவிட்டனர்.
(vi) மேலும் வளர்ச்சியடைந்த தொழில் நிறுவனங்கள் காகிதம், வேதிப்பொருட்கள், சிமெண்ட், உரங்கள், தோல் பதனிடுதல் முதலியன ஆகும்.
(vii) 1923 - 24 -இல் ஒரு சிறிய தடுமாற்றத்திற்குப் பிறகு நெசவுத் தொழில் சிறப்பாக செயல்படத் தொடங்கியது.
9.
(i) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் புத்தாண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசுக்குள்ளே மிதவாத அரசியலுக்கு எதிராக வெளிப்படையான வெறுப்பு நிலவியது.
(ii) இவ்வேறுப்பு முடிவில் ஒரு புதிய போக்காகத் தோற்றம் பெற்று அது தீவிர தேசியவாதப் போக்கெனக் குறிப்பிடப்பட்டது.
(iii) இத்தீவிர தேசியவாதிகள் அல்லது முற்போக்காளர்கள் அல்லது போர்க்குணமிக்கவர்கள் ஆவார்கள்.
(iv) தீவிர தேசியவாதத் தலைவர்களாகிய லால்-பால்-பால் ஆகியோர் மிதவாதிகளின் கவனமான அணுகுமுறை, ஆங்கிலேயரிடம் மன்றாடுதல் மனு சமர்ப்பித்தல் போன்ற மிதவாதிகளின் "இறைஞ்சுதல் கொள்கைகளை" கடுமையாக விமர்சித்தனர்.
(v) மகாராஷ்டிராவில் பாலகங்காதர திலகர் வங்காளத்தில் பிபின் சந்திரபால், பஞ்சாபில் லாலா லஜபதிராய் ஆகியோரின் தலைமையில் இப்போர்க்குணம் வளர்ச்சி பெற்றது.
(vi) இதற்கு காரணங்கள், காங்கிரசுக்குள் உருவான உட்குழுக்கள், மிதவாதிகளின் அரசியல் நடவடிக்கைகளால் ஏற்பட்ட மனச்சோர்வு மற்றும் வங்காளத்தை பிரிப்பதற்காகக் கர்சன் மீது ஏற்பட்ட சினம் ஆகும்.
(vii) இவர்களால் சுதேசி இயக்கம் வளர்ச்சி பெற்றது. பல உத்திகள் முன்னெடுக்கப்பட்டன.
(viii) அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பது, அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிலையங்களைப் புறக்கணிப்பது ஆகியன சுதேசி இயக்கத்தின் ஆக்கபூர்வமானத் திட்டங்களாக இருந்தன.
(ix) வங்கப் பிரிவினையைத் தடுப்பதில் ஏற்பட்ட தோல்வி பிபின் சந்திரபால் கொடுத்த அழுத்தம் காரணமாக மிதவாத தேசியவாதிகள் ஆங்கிலப் பொருட்களைப் புறக்கணிப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.
(x) மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பாலகங்காதர திலகர் "சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என்று முழங்கினார்.
(xi) பிபின் சந்திரபாலின் கருத்துப்படி சுயராஜ்ஜியம் என்பது அந்நியர் ஆட்சியிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைதல் என்பதாகும்.
(xii) வ.உ.சி.யின் சுதேசி இயக்க கப்பல் நிறுவனத்தின் வெற்றி குறித்து லோகமான்ய திலகர் தன்னுடைய கேசரி, மராட்டா பத்திரிகைகளில் எழுதினார்.
(xiii) பாலகங்காதர திலகர், பிபின் சந்திரபால், லாலா லஜபதிராய் (லால்-பால் -பால், Lal-bal-pal ) எனக் குறிப்பிடப்படும் முப்பெரும் தலைவர்களின் இயக்க நடவடிக்கைகளின் விளைவாக மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப் ஆகிய மூன்றும் சுதேசி இயக்கக் காலப்பகுதியில் தீவிர தேசியவாதத்தின் மையப்புள்ளிகளாகத் திகழ்ந்தன.
10.
1. ஆங்கிலேயர்கள் இனப்பாகுபாட்டுக் கொள்கையை பின்பற்றினார்கள்.
2. அரசு உயர் பதவிகளில் இந்தியர்களைப் பணியமர்த்தாமல் திட்டமிட்டு விலக்கி வைக்கப்பட்டதை மக்கள் இந்திய எதிர்ப்புக் கொள்கையின் நடவடிக்கையாகக் கருதினர்.
3. இந்தியாவின் கற்றறிந்த நடுத்தர வர்க்கம் வைத்த வேண்டுகோளை ஆங்கில அரசு ஏற்றுக் கொள்ள மறுத்தது.
4. அரசுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் முயற்சிகளை மேற்கொள்வோரை தண்டனைக்குள்ளாக்கும் இந்திய தண்டனைச் சட்டம் - 1870 பிரிவு 124A அடக்குமுறைச் சட்டத்தை இயற்றியது.
5. பத்திரிகைகள் அரசியலை விமர்சனம் செய்யத் தொடங்கின.
6. சம்வத் கௌமுகி 1821 பாரசீக மொழியில் எழுதப்பட்டது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards