12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/01/2020
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
பொது வெளியீடு என்றால் என்ன?
2.
மதிப்பூதியம் என்றால் என்ன?
3.
கடன் வசூலிப்பு காலம் என்றால் என்ன?
4.
கூட்டாளி சேர்ப்பு என்றால் என்ன? அவர் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகிறார்?
5.
கூட்டாண்மை பொருள் தருக.
6.
பின்வரும் தகவல்களிலிருந்து கடன் விற்பனையை காணவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| 2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் | 1,00,000 |
| கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் | 2,30,000 |
| அளித்த தள்ளுபடி | 5,000 |
| உள் திருப்பம் | 25,000 |
| 2019, மார்ச் 31 அன்று கடனாளிகள் | 1,20,000 |
7.
8.
பாபு நிறுமத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு (வரியியல்) பின்வருமாறு:
| விவரம் | தொகை ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்குமுதல் | 70,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 25,000 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகாலக் கடன்கள் | 30,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 20,000 |
| (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள் | 15,000 |
| (இ) குறுகியகால ஒதுக்குகள் | 42,000 |
| மொத்தம் | 2,02,000 |
அவ்வாண்டில் வட்டி மற்றும் வரிக்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ரூ.25,000. அவ்வாண்டின் முதலீடு மீதான வருவாய் கணக்கிடவும்.
9.
பின்வரும் தகவல்களிலிருந்து மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் காணவும்.
(அ) சராசரி இலாபம் = ரூ.60,000
(ஆ) சாதாரண இலாப விகிதம் = 10%
(இ) பயன்படுத்தப்பட்ட முதல் = ரூ.4,50,000
10.
மேரி, மீனா மற்றும் மரியம் எனும் கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் இலாபநட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1-1-2019 அன்று மேரி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளில், அந்நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு சொத்துகள் பக்கத்தில் ரூ. 75,000 பகிர்ந்து தரா நட்டம் எனக் காட்டியது. பகிர்ந்து தரா நட்டத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
11.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் குறைபாடுகள் யாவை?
12.
நற்பெயரின் நன்மைகளை எழுதுக
13.
நற்பெயர் சரிக்கட்டுதல் பற்றி சிறு குறிப்பு வரைக
14.
இலாப நோக்கமற்ற அமைப்புகளின் இயல்புகள் யாவை?
15.
அனு மற்றும் அருள் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 4:1 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் மனோ என்பவரை 2/5 இலாப விகிதத்தில் நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்கின்றனர். சேர்க்கையின் போது நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு ரூ.25,000 என்று மதிப்பிடப்படுகிறது. மனோ தன்னுடைய பங்கிற்கான நற்பெயர் மதிப்பிற்கான தொகையைக் கொண்டுவர முடியவில்லை. மாறுபடும் முதல் முறையினை அடிப்படையாக கொண்டு நற்பெயர் சரிக்கட்டுவதற்கு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
16.
பின்வரும் விவரங்களைக் கொண்டு குறிஞ்சி வரையறு நிறுவனத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. ஆயிரங்களில் | ||
|---|---|---|---|
| 2015-16 | 2016-17 | 2017-18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 120 | 132 | 156 |
| இதர வருமானம் | 50 | 38 | 65 |
| செலவுகள் | 100 | 135 | 123 |
17.
2018, ஏப்ரல் 1 அன்று சுபா தன்னுடைய தொழிலை ரூ. 1,20,000 முதலுடன் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. 2019, மார்ச் 31 அன்று அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| வங்கி மேல்வரைப்பற்று | 50,000 | சரக்கிருப்பு | 1,60,000 |
| கடனாளிகள் | 1,80,000 | கடனீந்தோர் | 90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 70,000 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 2,40,000 |
| கணினி | 30,000 | கைரொக்கம் | 60,000 |
| இயந்திரம் | 3,00,000 |
அவ்வாண்டில் அவர் தன்னுடைய சொந்த பயனுக்காக ரூ. 30,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ.40,000. அவருடைய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.
18.
19.
அனு நிறுமத்தால் ரூ.10 முகமதிப்பில் வெளியிடப்பட்ட நேர்மைப் பங்குகளில், தியாகு என்பவர் வைத்திருந்த ரூ.200 நேர்மைப் பங்குகளுக்கு இறுதி அழைப்புத் தொகையான ரூ.3 செலுத்தாத காரணத்தால் அவை ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அப்பங்குகள் ரூ.6 வீதம் லக்ஷ்மனுக்கு மறுவெளியீடு செய்யப்பட்டன. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்
20.
பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31, 2016 மற்றும் மார்ச் 31, 2017 க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.
| விவரம் | 2015-16 ரூ. |
2016-17 ரூ. |
|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,00,000 | 6,00,000 |
| இதர வருமானங்கள் | 50,000 | 1,50,000 |
| செலவுகள் | 5,00,000 | 3,00,000 |
| வருமான வரி % | 40 | 40 |
21.
சார்லஸ், முத்து மற்றும் சேகர் என்ற கூட்டாளிகள் முறையே 3 : 4 : 2 என்ற விகிதத்தில் இலாபங்களைப் பகிர்ந்து கொண்டனர். 2018 டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | அறைகலன் | 20,000 | ||
| சார்லஸ் | 30,000 | சரக்கிருப்பு | 40,000 | |
| முத்து | 40,000 | கடனாளிகள் | 30,000 | |
| தொழிலாளர் ஈட்டு நிதி | 20,000 | 90,000 | வங்கி ரொக்கம் | 42,000 |
| பற்பல கடனீந்தோர் | 27,000 | இலாபநட்ட க/கு (நட்டம்) | 18,000 | |
| 33,000 | ||||
| 1,50,000 | 1,50,000 |
1.1.2019 அன்று பின்வரும் ஏற்பாடுகளின் படி சார்லஸ் கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
(i) சரக்கிருப்பின் மதிப்பு 10% அதிகரிக்கப்பட வேண்டும்
(ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
(iii) வாராக்கடன் மீது ரூ.1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
(iv) கொடுபடா பழுதுபார்ப்புச் செலவு ரூ.10,000 இன்னமும் பதிவாகவில்லை.
(v) சார்லஸிற்கு உரியத்தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது
மறுமதிப்பீட்டுக் கணக்கு, விலகலுக்குப் பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்.
22.
தமிழ் கல்வியில் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| தொடக்க ரொக்க இருப்பு (1.4.2018) | 15,000 | சந்தா பெற்றது | 40,000 |
| வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) | 9,000 | பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் | 7,500 |
| அச்சு மற்றும் எழுதுபொருள் | 2,500 | போக்குவரத்துச் செலவுகள் | 2,750 |
| வட்டி செலுத்தியது | 5,250 | புத்தகங்கள் வாங்கியது | 10,000 |
| முதலீடுகள் விற்றது | 4,000 | காப்பீட்டு முனைமம் செலுத்தியது | 4,000 |
| சிற்றுண்டி வாங்கியது | 2,500 | பல்வகை வரவுகள் | 650 |
| கொடுபட வேண்டிய சம்பளம் | 6,000 | அரசிடமிருந்து பெற்ற மானியம் | 6,000 |
| அறக்கொடை நிதி பெற்றது | 6,000 | சிற்றுண்டி விற்றது | 1,500 |
| ஒளியூட்டுக் கட்டணம் | 3,300 | கட்டடம் மீதான தேய்மானம் | 3,000 |
| வங்கி ரொக்கம் (31.3.2019) | 2,000 |
23.
பின்வரும் விவரங்களைக் கொண்டு நடப்பு விகிதம் மற்றும் நீர்மை விகிதத்தைக் கணக்கிடுக.
| ரூ. | ரூ. | ||
| ரொக்கம் | 5,000 | கடனாளிகள் | 29,000 |
| பெறுதற்குரிய மாற்று சீட்டுகள் | 5,000 | குறுகிய கால முதலீடுகள் | 15,000 |
| சரக்கிருப்பு | 52,000 | முன்கூட்டிச் செலுத்திய செலவினங்கள் | 2,000 |
| கடனீந்தோர் | 36,000 | முன்கூட்டிச் செலுத்திய செலவினங்கள் | 2,000 |
| செலுத்த வேண்டிய செலவினங்கள் | 8,000 | செலுத்தற்குரிய மாற்று சீட்டுகள் | 10,000 |
24.
அன்பு என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி, கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12% கணக்கிடப்படுகிறது. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:
| நாள் | ரூ. |
|---|---|
| மார்ச் 1 | 8,000 |
| ஜூன் 1 | 6,000 |
| செப்டம்பர் 1 | 4,000 |
| டிசம்பர் 1 | 3,000 |
பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்
25.
அமல் மற்றும் விமல் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 7:5 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 அன்றைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 80,000 | ||
| அமல் | 70,000 | அறைகலன் | 20,000 | |
| விமல் | 50,000 | 1,20,000 | சரக்கிருப்பு | 25,000 |
| பற்பல கடனீந்தோர் | 30,000 | கடனாளிகள் | 30,000 | |
| இலாப நட்ட க/கு | 24,000 | வங்கி | 19,000 | |
| 1,74,000 | 1,74,000 |
1.4.2019 இல் நிர்மல் புதிய கூட்டாளியாக சேருகிறார். அவர் ரூ.30,000 முதலுடன் எதிர்கால இலாபப்பங்கில் 1/3 விகிதத்தில், பின்வரும் சரிக்கட்டலுடன் கூட்டாளியாகிறார்.
அ) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.5,000 குறைக்கப்பட வேண்டும்.
(ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.3,000 உருவாக்கப்பட வேண்டும்.
(இ) கட்டடம் ரூ.20,000 மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்.
மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்கு பின்பான கூட்டாளி முதல் கணக்கு தயார் செய்யவும்.
26.
வன்பொருள் வியாபாரம் செய்துவரும் அருண் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:
| விவரம் | 31.12.2017 ரூ. |
31.12.2018 ரூ. |
|---|---|---|
| நிலம் மற்றும் கட்டடம் | 2,40,000 | 2,40,000 |
| சரக்கிருப்பு | 1,20,000 | 1,70,000 |
| கடனாளிகள் | 40,000 | 51,500 |
| கடனீந்தோர் | 50,000 | 45,000 |
| வங்கி ரொக்கம் | 30,000 | 53,000 |
31.12.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் பிற தகவல்கள் பின்வருமாறு:
| விவரம் | ரூ |
| கூலி | 65,000 |
| வெளித் தூக்குக்கூலி | 7,500 |
| பற்பல செலவுகள் | 28,000 |
| கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் | 6,00,000 |
| எடுப்புகள் | 10,000 |
அவ்வாண்டுக்குரிய மொத்த விற்பனை ரூ. 7,70,000. அவ்வாண்டின் கொள்முதல் திருப்பம் ரூ. 30,000 மற்றும் விற்பனைத் திருப்பம் ரூ. 25,000. நிலம் மற்றும் கட்டடங்கள் மீது 5% தேய்மானம் நீக்கவும். ரூ. 1,500 –க்கு ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
27.
28.
கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து மதுரை அன்னை தெரசா மகளிர் மன்றத்தின் 2018, டிசம்பர், 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| ரொக்க இருப்பு (1.1.2018) | 2,000 | தீக்காப்பீட்டு முனைமம் செலுத்தியது | 1,500 |
| வங்கி இருப்பு (1.1.2018) | 3,000 | சந்தா பெற்றது | 8,500 |
| பழைய செய்தித்தாள்கள் விற்றது | 500 | அறைகலன் வாங்கியது | 6,000 |
| எழுதுபொருள்கள் வாங்கியது | 6,000 | செய்தித்தாள்கள் வாங்கியது | 700 |
| தணிக்கைக் கட்டணம் செலுத்தியது | 2,000 | அறைகலன் மீதான தேய்மானம் | 900 |
| நுழைவுக்கட்டணம் பெற்றது | 3,000 | ரொக்க இருப்பு (31.12.2018) | 2,500 |
| பல்வகைச் செலவுகள் | 6,000 | போக்குவரத்துச் செலவுகள் | 1,000 |
| உதவித்தொகை அளித்தது | 2,000 | அறைகலன் விற்றது | 4,000 |
| முதலீடுகள் மீதான வட்டி | 2,000 |
29.
பின்வரும் நடவடிக்கைகளை Tally-ல் பதிவு செய்யவும்.
(1) ரூ. 4,00,000 முதலுடன் தேவி தொழில் தொடங்கினர்.
(2) இந்தியன் வங்கியில் கணக்கு துவங்கப்பட்டு ரூ. 60,000 செலுத்தியது.
(3) ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது ரூ. 15,000
(4) சுமதியிடம் இருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ. 50,000
(5) ரொக்க விற்பனை மேற்கொண்டது ரூ. 10,000
(6) இராஜாவிடம் சரக்கு கொள்முதல் செய்து காசோலை மூலம் செலுத்தியது ரூ. 5000.
(7) அருணுக்கு கடனாக விற்ற சரக்கு ரூ. 70,000.
(8) அலுவலக செலவிற்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது ரூ. 25,000
(9) சுமதிக்கு காசோலை மூலம் பகுதி தொகை செலுத்தியது ரூ. 30,000
(10) அருண் பகுதி தொகையாக செலுத்திய ரொக்கம் ரூ. 10,000
(11) பணியாளர்களுக்கு மின்னணு பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 36,000
(12) கொள்முதல் மீதான தூக்குக் கூலி ரொக்கமாக செலுத்தியது ரூ. 6,000
(13) முத்து நிறுவனத்திடமிருந்து கடனுக்கு கணினி வாங்கியது ரூ. 44,000
30.
டெல்ஃபி நிறுமத்திடமிருந்து பெறப்பட்ட பின்வரும் தகவல்களிலிருந்து
(i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
(ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம்
(iii) கணக்குகள் மூலம் செலுத்தப்பட வேண்டியவைகளின் சுழற்சி மற்றும்
(iv) நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | 2018, மார்ச் 31 ரூ. |
2019, மார்ச் 31 ரூ. |
|---|---|---|
| சரக்கிருப்பு | 1,40,000 | 1,00,000 |
| கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 80,000 | 60,000 |
| கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 40,000 | 50,000 |
| நிலைச் சொத்துகள் | 5,50,000 | 5,00,000 |
கூடுதல் தகவல்கள்:
(i) அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.10,50,000
(ii) அவ்வாண்டின் கொள்முதல் ரூ.4,50,000
(iii) விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.6,00,000.
விற்பனை மற்றும் கொள்முதலை கடன் நடவடிக்கைகளாகக் கருதவும்.
31.
பின்வரும் தகவல்களிலிருந்து, உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
(அ) சாதாரண இலாப விகிதம் 10%
(ஆ) கடந்த 4 ஆண்டுகளின் இலாபங்கள் ரூ.30,000, ரூ.40,000, ரூ.50,000 மற்றும் ரூ.45,000.
(இ) மேற்குறிப்பிட்ட இலாபம் ரூ.30,000 ல் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.3,000 சேர்ந்துள்ளது.
(ஈ) சராசரி பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.3,00,000.
32.
ஆனந்த் மற்றும் நாராயணன் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாப நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2018, ஜனவரி 1 அன்று அவர்களுடைய முதல் முறையே ரூ.50,000 மற்றும் ரூ.30,000. கூட்டாண்மை ஒப்பாவணம் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது:
(அ) முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும்.
(ஆ) ஆனந்த் மற்றும் நாராயணனுக்கு விதித்த எடுப்புகள் மீதான வட்டி முறையே ரூ.1,000 மற்றும் ரூ.800.
(இ) முதல் மீது வட்டி மற்றும் எடுப்புகள் மீதான வட்டி கழிப்பதற்கு முன் உள்ள நிறுவனத்தின் நிகர இலாபம் ரூ.35,000.
கூட்டாளிகளுடைய முதல், மாறுபடும் முதல் எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும் மற்றும் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இலாபநட்டப் பகிர்வு கணக்கையும் தயார் செய்யவும்.
33.
சம்பத் நிறுமம் 25,000 பங்குகளை, பங்கு ஒன்று ரூ.10 என பொதுமக்களுக்கு வெளியிட்டது. விண்ணப்பத்தின் போது ரூ.3, ஒதுக்கீட்டின் போது ரூ.4, முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.3 செலுத்தப்பட வேண்டும். பொதுமக்களால் 24,000 பங்குகள் ஒப்பப்பட்டன. இயக்குனர்கள் அனைத்து பங்குகளையும் ஒதுக்கீடு செய்தனர். அதற்காக தொகை முழுவதும் முறையாகப் பெறப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
34.
சார்லஸ், முத்து மற்றும் சேகர் என்ற கூட்டாளிகள் முறையே 3:4:2 என்ற விகிதத்தில் இலாபங்களைப் பகிர்ந்து கொண்டனர். 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | அறைகலன் | 20,000 | ||
| சார்லஸ் | 30,000 | சரக்கிருப்பு | 40,000 | |
| முத்து | 40,000 | கடனாளிகள் | 30,000 | |
| சேகர் | 20,000 | 90,000 | வங்கி ரொக்கம் | 42,000 |
| தொழிலாளர் ஈட்டு நிதி | 27,000 | இலாபநட்ட க/கு | 18,000 | |
| பற்பல கடனீந்தோர் க/கு | 33,000 | |||
| 1,50,000 | 1,50,000 |
1.1.2019 அன்று பின்வரும் ஏற்பாடுகளின்படி சார்லஸ் கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
(i) சரக்கிருப்பின் மதிப்பு 10% அதிகரிக்கப்பட வேண்டும்
(ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
(iii) வாராக்கடன் மீது ரூ. 1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
(iv) கொடுபடா பழுதுபார்ப்புச் செலவு ரூ.10,000 இன்னமும் பதியப்படவில்லை
(v) சார்லஸிற்கு உரியத்தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது
மறுமதிப்பீட்டுக் கணக்கு, விலகலுக்குப் பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்
35.
______ என்பது தன்னார்வமாக செயல்படும் நபர்களின் சங்கம்.
தனியாள் வணிகம்
கூட்டாண்மை
கூட்டுறவுச் சங்கம்
நிறுமம்
36.
________ என்பது இயக்கம் என்பதைக் குறிக்கும்.
போக்கு
நிதி
விகிதம்
ஓட்டம்
37.
கூட்டாளி விலகலின்பொழுது, சொத்துக்களையும், பொறுப்புகளையும், மறுமதிப்பீடு செய்ததால் நேர்ந்த இலாபம் அனைத்துக் கூட்டாளிகளின் முதல் கணக்குகளில் _______ பக்கம் மாற்றப்படும்
பற்று
வரவு
இரண்டு
இரண்டுமில்லை
38.
ஒரு தொழிலுக்கு நன்மையை தரக்கூடிய அத்தொழிலின் புகழ் அல்லது நன்மதிப்பு ________ ஆகும்
நற்பெயர்
காப்புரிமை
பொதுநிதி
இலாபநட்டம்
39.
பழைய செய்தித்தாள்களை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை, ஒரு
முதலினச் செலவுகள்
வருவாயினச் செலுத்தல்கள்
முதலின வரவுகள்
வருவாயின வரவு
40.
புதிய இலாபப் பகிர்வு விகித நிர்ணயம், புதிய கூட்டாளி பழைய கூட்டாளிகளிடம் பெறக்கூடிய ________ சார்ந்தது.
பொறுப்பினை
இலாபப் பங்கினை
சொத்தினை
இவற்றில் எதுவுமில்லை
41.
2010 ஜனவரி 1-ல் கடனீந்தோர் ரூ.1,21,000. 2010 டிசம்பர் 31-ல் கடனீந்தோர் தொகை ரூ.1,30,000. அவ்வாண்டில் கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் ரூ.2,09,000 எனில் அவ்வாண்டில் கடன் கொள்முதல் ________ ஆகும்.
ரூ.2,00,000
ரூ.2,09,000
ரூ.2,18,000
ரூ.2,07,000
42.
இந்தியாவில், கூட்டாண்மை நிறுவனங்களை இந்திய கூட்டாண்மைச் சட்டம், ________ நெறிப்படுத்துகிறது
1902
1914
1956
1932
43.
விற்பனை மூலம் பெற்ற வருவாய் என்பது ______ ஆகும்.
நிகர கொள்முதல்
நிகர விற்பனை
நிகர இலாபம்
மொத்த இலாபம்
44.
_______ மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் நிதியியல் கணக்கியல் மென்பொருள்களில் ஒன்றாகும்.
Tally
Windows excel 6.0
Word document
Microsoft
45.
நிதி என்னும் சொல் குறிப்பிடுவது_____.
நடப்புப் பொறுப்புகள்
நடைமுறை முதல்
நிலைச் சொத்துகள்
நீண்டகாலச் சொத்துகள்
46.
கூட்டாளி ஒருவர் ஜூன் 30 அன்று கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாவது_____.
நடப்பு கணக்காண்டின் இறுதி வரைக்கும்
முந்தைய கணக்காண்டின் இறுதி வரைக்கும்
கூட்டாளி விலகும் நாள் வரைக்கும்
கூட்டாளியின் கணக்கைத் தீர்வு செய்யும் வரைக்கும்
47.
கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது
முதல் விகிதம்
தியாக விகிதம்
ஆதாய விகிதம்
இவற்றுள் எதுவுமில்லை
48.
கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக் கடனீந்தோர் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் தொடக்க இருப்பு
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் இறுதி இருப்பு
அவ்வாண்டில் ஏற்கப்பட்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு ரொக்கம் செலுத்தியது
49.
ஒரு நிறுமத்தின் நீர்மைத்தன்மையை சோதிக்க கீழ்க்கண்ட எந்த விகிதங்கள் பயன்படுகிறது?
(i) விரைவு விகிதம்
(ii) நிகர இலாப விகிதம்
(iii) புற அக பொறுப்புகள் விகிதம்
(iv) நடப்பு விகிதம்
(i) மற்றும் (ii)
(i) மற்றும் (iv)
(ii) மற்றும் (iii)
(ii) மற்றும் (iv)
50.
51.
நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது_____.
ஒரு சொத்து
ஒரு பொறுப்பு
ஒரு செலவு
தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று
52.
பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?
நற்பெயர் ஒரு புலனாகாச் சொத்து
நற்பெயர் ஒரு நடப்புச் சொத்து
நற்பெயர் ஒரு கற்பனைச் சொத்து
நற்பெயரினை வாங்க முடியாது
53.
பின்வருவனவற்றில் எது சரியற்ற இணை?
எடுப்புகள் மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
முதல் மீது வட்டி – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்
கடன் மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
இலாபப் பகிர்வு – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்
54.
முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு _____.
பத்திர முனைமக் கணக்கு
அழைப்பு முன்பணக் கணக்கு
பங்குமுதல் கணக்கு
பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு
1.
ஒரு பொதுநிறுமம் தகவலறிக்கை மூலம் பொது மக்களுக்கு வெளியிடும் நேர்மைப் பங்கு வெளியீட்டினை பொது வெளியீடு என்று அழைப்பர். இது தொடக்க பொது முனைவு மற்றும் கூடுதல் முனைவுகளையும் உள்ளடக்கியது.
2.
ஒரு நிறுவனத்தில் வழக்கமான ஊழியராக இல்லாத ஒருவருக்கு வழங்கப்படும் ஊதியமே மதிப்பூதியம் எனப்படும். இது ஒரு வருவாயினச் செலவாகும்.
3.
(i) கடன் வசூலிப்புக் காலம் என்பது கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகளின் வசூலிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் சராசரி காலம் ஆகும்.
(ii) கடன் வசூலிக்கும் காலம் குறைவாக இருக்கும்போது கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளிலிருந்து பணம் வசூலிக்கும் மேலாண்மை செயல்திறன் அதிகமான இருக்கிறது என்று பொருள்.
கடன் வசூலிப்புக் காலம் கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது
.
4.
ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் ஒரு நபரை புதிய கூட்டாளியாக சேர்க்கலாம். இதுவே கூட்டாளி சேர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான கூடுதல் முதல் பெறுவதற்காகவும் அல்லது புதிய கூட்டாளி சேர்க்கப்படலாம்
5.
கூட்டாண்மை நிறுவனம் என்பது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நபர்களோ, அவர்களுக்கிடையே ஏற்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு தொழிலை ஏற்று நடத்தும் தொழில் வடிவமைப்பு ஆகும். கூட்டாண்மைத் தொழிலை ஏற்று நடத்த ஒப்புக் கொள்ளும் நபர்களை தனித்தனியாக கூட்டாளிகள் எனவும், ஒட்டுமொத்தமாக நிறுவனம் என்றும் அழைக்கிறோம்.
6.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
| இருப்பு கீ/கொ | 1,00,000 | ரொக்கக் க/கு (பெற்றது) | 2,30,000 |
| விற்பனை க/கு (கடன்) | 2,80,000 | அளித்த தள்ளுபடி க/கு | 5,000 |
| உள்திருப்பம் க/கு | 25,000 | ||
| இருப்பு கீ/இ | 1,20,000 | ||
| 3,80,000 | 3,80,000 |
7.
8.
முதலீடு மீதான வருவாய் = x 100
= \(\frac {25,000}{1,25,000}\) x 100 = 20%
பயன்படுத்தப்பட்ட முதல் = பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி + நீண்டகாலக் கடன்கள்
= 70,000 + 25,000 +30,000 = ரூ.1,25,000
9.

=\(\frac { 60,000 }{ 10 } \) x 100
= ரூ.6,00,000
நற்பெயர் = வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு – பயன்படுத்தப்பட்ட முதல்
= 6,00,000 – 4,50,000
= ரூ.1,50,000
10.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. |
வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 2019 ஜன 1 | மேரி முதல் க/கு ப | 25,000 | ||
| மீனா முதல் க/கு ப | 25,000 | |||
| மரியம் முதல் க/கு ப | 25,000 | |||
| இலாப நட்ட க/கு | 75,000 | |||
| (பகிர்ந்து தரா நட்டம் அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்பட்டது.) |
11.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் குறைபாடுகள்:
1) பணம்சாரா தகவல்கள் புறக்கணிப்பு விலை நிலை மாற்றங்கள் புறக்கணிப்பு போன்ற நிதிநிலை அறிக்கைகளில் காணப்படும் எல்லா குறைபாடுகளும் நிதிநிலை அறிக்கை பகுப்பாய்விலும் காணப்படுகின்றன.
2) நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு என்பது வழிதானே தவிர இதுவே முடிவில்லை. அதாவது இது மேலாண்மை மற்றும் பிற பங்குதாரர்களுக்கான ஒரு கருவியே ஆகும்.
3) நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு செய்வதற்கு நிபுணத்துவ அறிவு தேவையானதாகும்.
4) பகுப்பாய்வு செய்யப்பட்ட தகவல்களை பற்றி வெவ்வேறு வல்லுனர்களால் வெவ்வேறு கருத்துகள் தரப்படுவதால் உய்த்துணர்தல் என்பது தனிப்பட்ட முடிவுகளை உள்ளடக்கியதாகும்.
12.
நற்பெயரின் நன்மைகளைப் பின்வருமாறு விளக்கலாம்:
(i) நற்பெயர் ஒரு புலனாகாச் சொத்து இதற்கென்று தனியாக உருவம் ஏதுமில்லாததால், இது ஒரு புலனாகாச் சொத்து. இதை பார்க்கவோ, தொட்டுணரவோ முடியாது.
(ii) இது தொழில் நிறுவனத்தின் இலாபத் தன்மையைப் பொறுத்து திட்டவட்டமான மதிப்பைக் கொண்டுள்ளது.
(iii) இது தொழில் நிறுவனத்திடமிருந்து பிரிக்க இயலாது.
(iv) இது அதிக இலாபம் ஈட்டுவதற்கு மற்றும் அதிக வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு உதவுகிறது.
(v) தொழில் நிறுவனத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வாங்கும்போது அல்லது விற்கும் போது மட்டுமே நற்பெயரை வாங்கவோ அல்லது விற்கவோ முடியும்
13.
(i) நிறுவனம் பெற்றுள்ள நல்ல பெயர், நிறுவனத்தின் தற்போதைய அல்லது எதிர்காலத்தில் ஈட்டப் போகும் இலாபத்தில் பாதிப்பை உண்டாக்கும்.
(ii) கூட்டாளி விலகும்போது, விலகும் கூட்டாளியின் இலாபத்திலிருந்து ஒரு பகுதியை தொடரும் கூட்டாளிகள் ஆதாயமாகப் பெறுகின்றனர்.
(iii) எனவே, விலகும் கூட்டாளியின் நற்பெயர் மதிப்பிடப்பட்டு அவருடைய பங்கு ஆதாயம் பெறும் கூட்டாளிகளின் முதல் கணக்கில் சரி செய்யப்பட வேண்டும். அதற்கான குறிப்பேட்டுப் பதிவு பின்வருமாறு.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|---|---|---|---|---|
| தொடரும் கூட்டாளிகளின் முதல் / நடப்பு க/கு | XXX | |||
| (ஆதாய விகிதத்தில்) | ||||
| விலகும் கூட்டாளி முதல் / நடப்பு க/கு | XXX |
14.
1) இலாப நோக்கம் இல்லாமல் செயல்படும் அமைப்புகளே இலாப நோக்கற்ற அமைப்புகள் எனப்படும்.
2) அவற்றின் முக்கிய நோக்கம் ஒரு குறிப்பிட்ட குழுவிற்கோ அல்லது பெரும்பாலான பொதுமக்களுக்கோ சேவை செய்வதாகும்.
3) பொதுவாக அவை வணிகம் மற்றும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.
4) இவைகளின் முக்கிய வருமான ஆதாரம் உறுப்பினர் சந்தா, நன்கொடைகள், மானியம் மற்றும் உயில்கொடை போன்றவைகளை உள்ளடக்கியதாகும்.
15.
பழைய கூட்டாளிகளின் தியாகம் குறிப்பிடப்படவில்லை பழைய கூட்டாளிகளின் விகிதமான 4 : 1 தியாக விகிதமாக கருத வேண்டும். எனவே தியாக விகிதம் 4 : 1
மனோவின் நற்பெயர் = 25,000 x \(\frac { 2 }{ 5 } \) = ரூ.10,000
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| மனோவின் முதல் க/கு | ப | 10,000 | |||
| அனு முதல் க/கு (4/5) | 8,000 | ||||
| அருள் முதல் க/கு (1/5) (மனோவின் நற்பெயர் பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கில் பழைய இலாப விகிதத்தில் சரிக்கப்பட்டது) |
2,000 |
16.
| விவரம் | ஆயிரங்களில் | போக்கு சதவீதங்கள் | ||||
|---|---|---|---|---|---|---|
| 2015-16 | 2016-17 | 2017-18 | 2015-16 | 2016-17 | 2017-18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 120 | 132 | 156 | 100 | 110 | 130 |
| கூட்டுக: இதர வருமானம் | 50 | 38 | 65 | 100 | 76 | 130 |
| மொத்தம் | 170 | 170 | 221 | 100 | 100 | 130 |
| கழிக்க: செலவுகள் | 100 | 135 | 123 | 100 | 135 | 123 |
| இலாபம் | 70 | 35 | 98 | 100 | 50 | 140 |
குறிப்பு: விற்பனை மூலம் பெற்ற வருவாயின் போக்கு சதவீதங்கள் கணக்கிடுதல்
2016-17: \(\frac {132}{120}\) x 100 = 110%
2017-18: \(\frac {156}{120}\) x 100 = 130%
17.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| வங்கி மேல்வரைப்பற்று | 50,000 | கடனாளிகள் | 1,80,000 |
| கடனீந்தோர் | 90,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 70,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 2,40,000 | கணினி | 30,000 |
| முதல் (இருப்புக்கட்டும் தொகை) | 4,20,000 | இயந்திரம் | 3,00,000 |
| சரக்கிருப்பு | 1,60,000 | ||
| கைரொக்கம் | 60,000 | ||
| 8,00,000 | 8,00,000 |
| விவரம் | ரூ. |
| 2019, மார்ச் 31 அன்று இறுதிமுதல் | 4,20,000 |
| கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் | 30,000 |
| 4,50,000 | |
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | 40,000 |
| சரிகட்டப்பட்ட இறுதிமுதல் | 4,10,000 |
| கழிக்க:2018, ஏப்ரல் 1 அன்று தொடக்க முதல் | 1,20,000 |
| 31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் இலாபம் | 2,90,000 |
18.
19.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| நேர்மைப் பங்கு முதல் க/கு (200 × 10) | ப | 2,000 | |||
| நேர்மைப் பங்கு இறுதி அழைப்பு க/கு (200 × 3) | 600 | ||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (200 × 7) | 1,400 | ||||
| (200 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) | |||||
| வங்கி க/கு (200 × 6) | ப | 1,200 | |||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (200 × 4) | ப | 800 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு (200 × 10) | 2,000 | ||||
| (ஒறுப்பிழப்பு செய்த பங்குகள் மறுவெளியீடு செய்யப்பட்டன) | |||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (1,400-800) | ப | 600 | |||
| முதலினக் காப்பு க/கு | 600 | ||||
| (பங்கு ஒறுப்பிழப்பு கணக்கு முதலினக் காப்பு கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
20.
| விவரம் | 2016-17 ரூ. |
2016-17 விற்பனை மூலம் பெற்ற வருவாயில் சதவீதம் |
2016-17 தொகை |
2016 விற்பனை மூலம் பெற்ற வருவாயில் சதவீதம் |
|---|---|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,00,000 | 100 | 6,00,000 | 100 |
| கூட்டுக: இதர வருமானங்கள் | 50,000 | 12.50 | 1,50,000 | 25 |
| மொத்த வருவாய் | 4,50,000 | 112.50 | 7,50,000 | 125 |
| கழிக்க: செலவுகள் | 5,00,000 | 125 | 3,00,000 | 50 |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம்/நட்டம் | -50,000 | -12.50 | 10,50,000 | 125 |
| கழிக்க: வருமான வரி (40%) | - | - | 4,20,000 | 70 |
| வரிக்கு பின்னர் உள்ள இலாபம் | -50,000 | -12.50 | 6,30,000 | 55 |
21.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| அறைகலன் | 1,000 | சரக்கிருப்பு க/கு | 4,000 | |
| வாராக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | மறுமதிப்பீட்டு நட்டம்: | ||
| கொடுபட வேண்டிய பழுதுபார்ப்புச் செலவு | 11,000 | சார்லஸ் முதல் க/கு (3/9) | 3,000 | |
| முத்து முதல் க/கு (4/9) | 4,000 | |||
| சேகர் முதல் க/கு (2/9) | 2,000 | 9,000 | ||
| 13,000 | 13,000 |
| விவரம் | சார்லஸ் ரூ. |
முத்து ரூ. |
சேகர் ரூ. |
விவரம் | சார்லஸ் ரூ. |
முத்து ரூ. |
சேகர் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இலாபநட்ட க/கு | 6,000 | 8,000 | 4,000 | இருப்பு கீ/கொ | 30,000 | 40,000 | 20,000 |
| மறுமதிப்பீட்டு க/கு | 3,000 | 4,000 | 2,000 | தொழிலாளர் ஈட்டு நிதி | 9,000 | 12,000 | 6,000 |
| (நட்டம்) | |||||||
| வங்கி க/கு | 30,000 | - | - | ||||
| இருப்பு கீ/இ | 40,000 | 20,000 | |||||
| 39,000 | 52,000 | 26,000 | 39,000 | 52,000 | 26,000 | ||
| இருப்பு கீ/கொ | - | 40,000 | 20,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | அறைகலன் | 20,000 | |||
| முத்து | 40,000 | 60,000 | கழிக்க: தேய்மானம் | 1,000 | 19,000 |
| சேகர் | 20,000 | 60,000 | சரக்கிருப்பு | 40,000 | |
| பற்பல கடனீந்தோர் | 33,000 | கூட்டுக: மதிப்பேற்றம் | 4,000 | 44,000 | |
| கொடுபட வேண்டிய | கடனாளிகள் | 30,000 | |||
| பழுதுபார்ப்புச் செலவு | 11,000 | ||||
| கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு | 1,000 | 29,000 | |||
| வங்கி ரொக்கம் | 42,000 | ||||
| கழிக்க: சார்லஸிற்கு செலுத்தியது | 30,000 | 12,000 | |||
| 1,04,000 | 1,04,000 |
22.
| பெறுதல்கள் | ரூ. | செலுத்தல்கள் | ரூ. |
| இருப்பு கீ/கொ | இருப்பு கீ/கொ | ||
| ரொக்க இருப்பு | 15,000 | வங்கி மேல்வரைப்பற்று | 9,000 |
| முதலீடுகள் விற்றது | 4,000 | அச்சு மற்றும் எழுதுபொருள் | 2,500 |
| அறக்கட்டளை நிதி வரவுகள் | 6,000 | வட்டி செலுத்தியது | 5,250 |
| சந்தா பெற்றது | 40,000 | சிற்றுண்டி வாங்கியது | 2,500 |
| இதர வரவுகள் | 650 | ஒளியூட்டுக் கட்டணம் | 3,300 |
| அரசு மானியம் பெற்றது | 6,000 | பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் | 7,500 |
| சிற்றுண்டி விற்றது | 1,500 | போக்குவரத்துச் செலவுகள் | 2,750 |
| புத்தகங்கள் வாங்கியது | 10,000 | ||
| காப்பீட்டு முனைமம் செலுத்தியது | 4,000 | ||
| இருப்பு கீ/இ | |||
| வங்கி ரொக்கம் | 2,000 | ||
| கைரொக்கம் | 24,350 | ||
| 73,150 | 73,150 |
குறிப்பு கொடுக்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் தேய்மானம் ரொக்கம் சாரா நடவடிக்கைகளாக இருப்பதால் இவை இரண்டும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் இடம் பெறாது.
23.

நடப்புச் சொத்துகள் = சரக்கிருப்பு + கடனாளிகள் + ரொக்கம் + பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுகள் குறுகிய கால முதலீடுகள் + முன் செலுத்திய செலவுகள்
= ரூ.52,000+29,000+5,000+5,000+15,000+2,000=ரூ1,08,000
நடப்புப் பொறுப்புகள் = கடனீந்தோர் + செலுத்தற்குரிய மாற்று சீட்டுகள் + செலுத்த வேண்டிய செலவினங்கள்
= ரூ.36,000+10,000+8,000=ரூ.54,000
நடப்பு விகிதம் = \(\cfrac { 1,0,,000 }{ 54,000 } =2:1\)
(ii)

நீர்மைச் சொத்துகள் = நடப்புச் சொத்துகள் -(சரக்கிருப்பு +முன்கூட்டிச் செலுத்திய செலவினங்கள்)
= ரூ.1,08,000-54,000=ரூ54,000
நீர்மை விகிதம் = \(\cfrac { 54,000 }{ 54,000 } =1:1\)
24.
| எடுப்பு நாள் | எடுப்புத் தொகை ரூ. |
வட்டிக்குரிய காலம் டிசம்பர் 31 வரை (மாதங்களில்) | பெருக்குத் தொகை (ரூ) |
|---|---|---|---|
| மார்ச் 1 | 8,000 | 10 | 80,000 |
| ஜூன் 1 | 6,000 | 7 | 42,000 |
| செப்டம்பர் 1 | 4,000 | 4 | 16,000 |
| டிசம்பர் 1 | 3,000 | 1 | 3,000 |
| மொத்த பெருக்குத் தொகை | 1,14,000 | ||
எடுப்புகள் மீதான வட்டி = மொத்த பெருக்குத் தொகை x ஆண்டு வட்டி வீதம் x \(\frac { 1 }{ 12 } \)
= \(1,14,000\times \frac { 12 }{ 100 } \times \frac { 1 }{ 12 } \)
25.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 5,000 | கட்டடம் க/கு | 20,000 | |
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 3,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| அமல் முதல் க/கு (12,000 x 7/12) |
7,000 | |||
| விமல் முதல் க/கு (12,000 x 5/12) |
5,000 | 12,000 | ||
| 20,000 | 20,000 |
| விவரம் | அமல் ரூ. |
விமல் ரூ. |
நிர்மல் ரூ. |
விவரம் | அமல் ரூ. |
விமல் ரூ. |
நிர்மல் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/இ | 91,000 | 65,000 | 30,000 | இருப்பு கீ/கொ | 70,000 | 50,000 | - |
| வங்கி க/கு | - | - | 30,000 | ||||
| மறுமதிப்பீட்டுக் க/கு | 7,000 | 5,000 | - | ||||
| இலாபநட்டக் க/கு | 14,000 | 10,000 | - | ||||
| 91,000 | 65,000 | 30,000 | 91,000 | 65,000 | 30,000 | ||
| இருப்பு கீ/கொ | 91,000 | 65,000 | 30,000 |
26.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| கடனீந்தோர் | 50,000 | நிலம் மற்றும் கட்டடம் | 2,40,000 |
| தொடக்க முதல் | 3,80,000 | சரக்கிருப்பு | 1,20,000 |
| (இருப்புக்கட்டும் தொகை) | கடனாளிகள் | 40,0000 | |
| வங்கி ரொக்கம் | 30,000 | ||
| 4,30,000 | 4,30,000 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்கக் க/கு (செலுத்தியது) | 6,00,000 | இருப்பு கீ/கொ | 50,000 |
| கொள்முதல் திருப்பம் க/கு | 30,000 | கொள்முதல் க/கு (கடன்) | 6,25,000 |
| இருப்பு கீ/இ | 45,000 | (இருப்புக்கட்டும் தொகை) | |
| 6,75,000 | 6,75,000 |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 1,20,000 | விற்பனை | 7,70,000 | ||
| கொள்முதல் | கழிக்க | 25,000 | 7,45,000 | ||
| கடன் | 6,25,000 | இறுதிச்சரக்கிருப்பு | 1,70,000 | ||
| கழிக்க:திருப்பம் | 30,000 | 5,95,000 | |||
| கூலி | 65,000 | ||||
| மொத்த இலாபம் கீ/இ | 1,35,000 | ||||
| 9,15,000 | 9,15,000 | ||||
| வெளித் தூக்குக்கூலி | 7,500 | மொத்த இலாபம் கீ/கொ | 1,35,000 | ||
| பற்பல செலவுகள் | 28,000 | ||||
| நிலம் மற்றும் கட்டடம் மீதான தேய்மானம் 5% | 12,000 | ||||
| ஐயக்கடன் ஒதுக்கு | 1,500 | ||||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 86,000 | ||||
| 1,35,000 | 1,35,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் | 3,80,000 | நிலம் மற்றும் கட்டடம் | 2,40,000 | ||
| கூட்டுக: நிகர இலாபம் | 86,000 | கழிக்க:தேய்மானம் | 12,000 | 2,28,000 | |
| 4,66,000 | இறுதிச் சரக்கிருப்பு | 1,70,000 | |||
| கழிக்க:எடுப்புகள் | 10,000 | 4,56,000 | கடனாளிகள் | 51,500 | |
| கடனீந்தோர் | 45,000 | கழிக்க: ஐயக்கடன் ஒதுக்கு | 1,500 | 50,000 | |
| வங்கி ரொக்கம் | 53,000 | ||||
| 5,01,000 | 5,01,000 |
27.
28.
| பெறுதல்கள் | ரூ. | ரூ. | செலுத்தல்கள் | ரூ. |
|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | எழுதுபொருள்கள் வாங்கியது | 6,000 | ||
| ரொக்க இருப்பு | 2,000 | தணிக்கைக் கட்டணம் செலுத்தியது | 2,000 | |
| வங்கி இருப்பு | 3,000 | 5,000 | பல்வகைச் செலவுகள் | 6,000 |
| பழைய செய்தித்தாள்கள் விற்றது | 500 | உதவித்தொகை அளித்தது | 2,000 | |
| நுழைவுக்கட்டணம் பெற்றது | 3,000 | தீக்காப்பீட்டு முனைமம் செலுத்தியது | 1,500 | |
| முதலீடுகள் மீதான வட்டி | 2,000 | அறைகலன் வாங்கியது | 6,000 | |
| சந்தா பெற்றது | 8,500 | செய்தித்தாள்கள் வாங்கியது | 700 | |
| அறைகலன் விற்றது | 4,000 | போக்குவரத்துச் செலவுகள் | 1,000 | |
| இருப்பு கீ/இ | இருப்பு கீ/இ | |||
| வங்கி மேல்வரைப்பற்று | 4,700 | ரொக்க இருப்பு | 2,500 | |
| 27,700 | 27,700 |
[குறிப்பு: அறைகலன் மீதான தேய்மானம் ரொக்கம் சாரா நடவடிக்கையாக இருப்பதால் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் வருவதில்லை.]
29.
| S.NO. | Particulars | Debit Rs |
Credit Rs |
Voucher type | Group | ||
|---|---|---|---|---|---|---|---|
| (1) | CashA/c | Dr. | 4,00,000 | Receipt | Cash-in-Hand | ||
| To Devi's Capital A/c | 4,00,000 | Voucher | Capital Account | ||||
| (2) | Indian Bank A/c | Dr. | 60,000 | Contra | Bank Accounts | ||
| To CashA/c | 60,000 | Voucher | Cash-in-Hand | ||||
| (3) | Furniture A/c | Dr. | 15,000 | Payment | Fixed Assets | ||
| To CashA/c | 15,000 | Voucher | Cash-in-Hand | ||||
| (4) | Purchases A/c | Dr. | 50,000 | Purchase | Purchase Accounts | ||
| To Sumathy A/c | 50,000 | Voucher | Sundry Creditors | ||||
| (5) | Cash A/c | Dr. | 10,000 | Sales | Cash-in-Hand | ||
| To SalesA/c | 10,000 | Voucher | Sales Accounts | ||||
| (6) | Purchases A/c | Dr. | 5,000 | Purchase | Purchase Accounts | ||
| To CashA/c | 5,000 | Voucher | Cash-in-Hand | ||||
| (7) | Arun A/c | Dr. | 70,000 | Sales | Sundry Debtors | ||
| To SalesAlc | 70,000 | Voucher | Sales Accounts | ||||
| (8) | Cash A/c | Dr. | 25,000 | Contra | Cash-in-Hand | ||
| To BankAlc | 25,000 | Voucher | Bank Accounts | ||||
| (9) | Sumathy A/c | Dr. | 30,000 | Payment | Sundry Creditors | ||
| To BankA/c | 30,000 | Voucher | Bank Accounts | ||||
| (10) | Cash A/c | Dr. | 10,000 | Receipt | Cash-in-Hand | ||
| To Arun A/c | 10,000 | Voucher | Sundry Debtors | ||||
| (11) | Salaries A/c | Dr. | 36,000 | Payment | Indirect Expenses | ||
| To BankA/c | 36,000 | Voucher | Bank Accounts | ||||
| (12) | Carriage A/c | Dr. | 6,000 | Payment | Indirect Expenses | ||
| To Cash A/c | 6,000 | Voucher | Cash-in-Hand | ||||
| (13) | Computer A/c | Dr. | 44,000 | Journal | Indirect Expenses | ||
| To Muthu Ltd Alc | 44,000 | Voucher | Sundry Creditors |
30.
(i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம் = \(\frac {6,00,000}{1,20,000}\) = 5 மடங்கு
= \(\frac {1,40,000+1,00,000}{2}=\frac {2,40,000}{2}\) = ரூ.1,20,000
=\(\frac {10,50,000}{70,000}\) = 15 மடங்கு
= \(\frac {80,000+60,000}{2}=\frac {1,40,000}{2}\) = ரூ.70,000
= \(\frac {4,50,000}{45,000}\) = 10 மடங்கு
= \(\frac {40,000+50,000}{2}\) = \(\frac {90,000}{2}\) = ரூ.45,000
=\(\frac {10,50,000}{5,25,000}\) = 2 மடங்கு
(v)
=\(\frac {5,50,000+5,00,000}{2}\) = \(\frac {10,50,000}{2}\) = ரூ.5,25,000
31.
= \(\frac { 30,000+40,000+50,000+45,000 }{ 4 } \)
= \(\frac { 1,62,000 }{ 4 } \) = ரூ.40,500
சாதாரண இலாபம் = பயன்படுத்தப்பட்ட முதல் x சாதாரண இலாப விகிதம்
= 3,00,000 x 10%
= ரூ.30,000
உயர் இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம்
= 40,500 - 30,000
= 10,500
= \(\frac { 10,500 }{ 10 } \times 100\)
நற்பெயர் = ரூ.1,05,000
32.
| நாள் | விவரம் | பே.ப எண் |
பற்று ரூ |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 டிசம்பர் 31 |
முதல் மீதான வட்டி க/கு | ப | 4,800 | ||
| ஆனந்த் முதல் க/கு | 3,000 | ||||
| நாராயணன் முதல் க/கு (முதல் மீதான வட்டி 6% அனுமதிக்கப்பட்டது) |
1,800 | ||||
| " | இலாபநட்டப் பகிர்வு க/கு | ப | 4,800 | ||
| முதல் மீதான வட்டி க/கு (முதல் மீதான வட்டி கணக்கு முடிக்கப்பட்டது) |
4,800 | ||||
| " | ஆனந்த் முதல் க/கு | ப | 1,000 | ||
| நாராயணன் முதல் க/கு | ப | 800 | |||
| எடுப்புகள் மீதான வட்டி க/கு (எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடப்பட்டது) |
1,800 | ||||
| " | எடுப்புகள் மீதான வட்டி க/கு | ப | 1,800 | ||
| இலாபநட்டப் பகிர்வு க/கு (எடுப்புகள் மீதான வட்டி கணக்கு முடிக்கப்பட்டது) |
1,800 | ||||
| " | இலாபநட்டப் பகிர்வு க/கு | ப | 32,000 | ||
| ஆனந்த் முதல் க/கு | 20,000 | ||||
| நாராயணன் முதல் க/கு (இலாபம் முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
12,000 |
| விவரம் | ரூ. | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|---|
| முதல் மீதான வட்டி கணக்கு: | இலாபநட்ட க/கு | 35,000 | ||
| ஆனந்த் | 3,000 | எடுப்புகள் மீதான வட்டி க/கு | ||
| நாராயணன் | 1,800 | ஆனந்த் | 1,000 | |
| கூட்டாளிகளின் முதல் கணக்கு: (இலாபம்) |
நாராயணன் | 8,00 | ||
| ஆனந்த் (32,000 x 5/8) | 20,000 | |||
| நாராயணன் (32,000 x 3/8) | 12,000 | 32,000 | ||
| 36,800 | 36,800 |
33.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு | ப | 72,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 72,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | ப | 72,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 72,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பங்கு முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | ப | 96,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 96,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 96,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 96,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | ப | 72,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 72,000 | ||||
| (அழைப்புத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 72,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | 72,000 | ||||
| (அழைப்புத் தொகை பெற்றது) |
34.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| அறைகலன் க/கு | 1,000 | சரக்கிருப்பு க/கு | 4,000 | |
| வாராக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | மறுமதிப்பீட்டு நட்டம்: | ||
| கொடுபடா வேண்டிய பழுதுபரப்புச் செலவு | 11,000 | சார்லஸ் முதல் க/கு (3/9) | 3,000 | |
| முத்து முதல் க/கு (4/9) | 4,000 | |||
| சேகர் முதல் க/கு (2/9) | 2,000 | 9,000 | ||
| 13,000 | 13,000 |
| விவரம் | சார்லஸ் ரூ. |
முத்து ரூ. |
சேகர் ரூ. |
விவரம் | சார்லஸ் ரூ. |
முத்து ரூ. |
சேகர் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இலாபநட்ட க/கு | 6,000 | 8,000 | 4,000 | இருப்பு கீ/கொ | 30,000 | 40,000 | 20,000 |
| மறுமதிப்பீட்டுக் க/கு நட்டம் | 3,000 | 4,000 | 2,000 | தொழிலாளர் ஈட்டு நிதி | 9,000 | 12,000 | 6,000 |
| வங்கி க/கு | 30,000 | - | - | ||||
| இருப்பு கீ/இ | 40,000 | 20,000 | |||||
| 39,000 | 52,000 | 26,000 | 39,000 | 52,000 | 26,000 | ||
| - | 40,000 | 20,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | அறைகலன் | 20,000 | |||
| முத்து | 40,000 | கழிக்க : தேய்மானம் | 1,000 | 19,000 | |
| சேகர் | 20,000 | 60,000 | சரக்கிருப்பு | 40,000 | |
| பற்பல கடனீந்தோர் | 33,000 | கூட்டுக: மதிப்பேற்றம் | 4,000 | 44,000 | |
| கொடுபட வேண்டிய பழுதுபார்ப்புச் செலவு | 11,000 | கடனாளிகள் | 30,000 | ||
| கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு | 1,000 | 29,000 | |||
| வங்கி ரொக்கம் | 42,000 | ||||
| கழிக்க: சார்லஸிற்கு செலுத்தியது | 30,000 | 12,000 | |||
| 1,04,000 | 1,04,000 |
35.
(d)
நிறுமம்
36.
(d)
ஓட்டம்
37.
(b)
வரவு
38.
(a)
நற்பெயர்
39.
(d)
வருவாயின வரவு
40.
(b)
இலாபப் பங்கினை
41.
(c)
ரூ.2,18,000
42.
(d)
1932
43.
(b)
நிகர விற்பனை
44.
(a)
Tally
45.
(b)
நடைமுறை முதல்
46.
(c)
கூட்டாளி விலகும் நாள் வரைக்கும்
47.
(b)
தியாக விகிதம்
48.
(c)
அவ்வாண்டில் ஏற்கப்பட்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு
49.
(b)
(i) மற்றும் (iv)
50.
(b)
51.
(a)
ஒரு சொத்து
52.
(a)
நற்பெயர் ஒரு புலனாகாச் சொத்து
53.
(c)
கடன் மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
54.
(a)
பத்திர முனைமக் கணக்கு
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards