12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/01/2020
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
பல்வகை உணவுத் தாவரங்கள் எவை?
2.
சில இரு சமபிளவுறுதல்,சாய்வுமட்ட இருசமபிளவு முறை என அழைக்கப்படுகின்றது. காரணம் என்ன?
3.
இயற்கை கருத்தடை முறைகள் யாவை?
4.
சூழ்நிலையியல் படிநிலைகள் என்றால் என்ன? பல்வேறு சூழ்நிலையியல் படிநிலைகளை எழுதுக.
5.
ராவோல்ஃபியா வோமிட்டேரியா எனும் மருத்துவ தாவரத்தில் உள்ள செயல்படு வேதிப்பொருளின் பெயர் என்ன? இது எந்த வகை பல்வகைத்தன்மையை சார்ந்துள்ளது?
6.
rDNA தொழில்நுட்ப வருகைக்கு முன் இன்சுலின் எவ்வாறு பெறப்பட்டது? எத்தகைய பிரச்சனைகள் எதிர்கொள்ளப்பட்டன?
7.
முழுமை பெறா ஓங்குத்தன்மை மற்றும் இணை ஓங்குத்தன்மையை வேறுபடுத்துக
8.
மனித மரபணுத் தொகுதியில் கண்டறியப்பட்ட ஒற்றை நியூக்ளியோடைடு பல்லுருவ அமைப்பின் மூலம் (SNPs) உயிரியல் மற்றும் மருத்துவத் துறையில் புரட்சிகர மாறுபாடுகளைக் கொண்டுவரும் இரண்டு வழிகளைக் கூறுக.
9.
தகுந்த எடுத்துக்காட்டுடன் இரண்டு தரைஒட்டிய தண்டின் மாற்றுருக்களைப் பட்டியலிடுக.
10.
இந்தியாவில் உயிரியல் பல்வகைத் தன்மையின் பரிணாமத்தை விவரி.
11.
இரு ஒடுங்கு தன்மையுள்ள ஆட்டோசோம் மரபணுக்கள் a மற்றும் b உடைய வேறுபட்ட காரணி நிலை -ஒரு இரு இணை ஒடுங்கு பெற்றோரோடு கலப்பு செய்யப்படுகிறது அவற்றிற்கான புறத்தோற்ற விகிதத்தை பின் வரும் சூழலில் கண்டறி.
12.
நீர் மாசுபாட்டினால் உயிரினங்களில் ஏற்படும் விளைவுகள் யாவை?
13.
இழப்பு மீட்டல் மற்றும் அதன் வகைகள் பற்றி விவரி.
14.
நறுமணப் பொருட்களின் அரசன், அரசி யாவை ? அவற்றை விளக்கி, அவற்றின் பயன்களையும் விளக்குக.
15.
பயிர் பெருக்கத்தில் புதிய பண்புக்கூறுகளை உருவாக்கும் புதிய பயிர்பெருக்க தொழில்நுட்ப முறைகளைப் பட்டியலிடுக.
16.
கீழ்கண்ட விவரங்களைக் கொண்டு ஒரு பிரமிட் வரைந்து சுருக்கமாக விளக்குக.
உயிரினங்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது-பருந்து - 50, தாவரங்கள் -1000, முயல் மற்றும் எலி - 250 + 250, பாம்பு மற்றும் ஓணான் 100 + 50.
17.
களைக்கொல்லியைத் தாங்கிக்கூடிய பயிர்களின் நன்மைகள் யாவை?
18.
தனியொரு மரபணுவானது பலபண்புகளைக் கட்டுப்படுத்தி உயிரினத்தின் புறத்தோற்ற பண்புகளை எவ்வாறு மாற்றி அமைக்கிறது? எடுத்துக்காட்டுடன் விளக்குக
19.
மூடுவிதைத் தாவரத்தில் நடைபெறும் கருவுறுதல் நிகழ்விலுள்ள படிநிலைகளின் சுருக்கமான தொகுப்பைத் தருக.
20.
சூழல்மண்டலத்தின் ஆற்றல் ஓட்டம் எப்பொழுதும்
ஒரே திசையில் பாய்கிறது
மேலிருந்து கீழாக
சங்கிலி அமைப்பில்
எல்லா திசைகளிலும்
21.
டிரான்ஸ்போசான்களின் பயன் அறியப்பட்ட தாவரம்
அராபிடாப்ஸிஸ் தாலியானா மற்றும் எஸ்செரிசியா கோலை
எஸ்செரிசியா கோலை மற்றும் ஈஸ்ட் செல்கள்
சால்மோனெல்லா டைபி மற்றும் பைசம் சாட்டைவம்
இவை ஏதுமில்லை
22.
குர்கமின் எதிலிருந்து பெறப்படும்?
மஞ்சள்
மிளகாய்
ஏலக்காய்
புளி
23.
டி.என்.ஏ தடுப்பூசிகளை மரபியல் நோய்த்தடுப்பு முறையாகப் பயன்படுத்தும் ஒரு புதிய அணுகுமுனை எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?
1980
1990
2012
1997
24.
இந்த விதைகள் தான் உலகில் மிகவும் நீடித்த வாழ்நாளைக் கொண்டுள்ளது.
தாமரை
ஹைட்ரில்லா
நிம்பேயா
மார்சீலியா
25.
உயிர்வழித் தோற்றக் கோட்பாட்டினை உருவாக்கியவர் யார்? (அ) 'உயிர்வழித் தோற்றக் கோட்பாடு' என்ற சொல்லை உருவாக்கியவர் :
தாமஸ் ஹக்ஸ்லி
ஹென்றி பாஸ்டியன்
ஒப்பாரின்
ஹால்டேன்
26.
கூற்று : இனப்பெருக்க உறுப்புகளில் யானைக்கால் நோய்.
காரணம்: இது கிளாமிடியா ட்ரோகோமேடிஸ் கிருமியால் வரும்.
கூற்று, காரணம் இரண்டும் சரி
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
கூற்று, காரணம் இரண்டும் தவறு
27.
கைபேசிகளின் மூலம் உருவாகும் மின்னணுக் கழிவுகளில் எந்த உலோகம் அதிகமாகக் காணப்படுகிறது?
தாமிரம்
வெள்ளி
பலேடியம்
தங்கம்
28.
உயிரினங்களின் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம் ____.
WWF
IUCN
ZSI
UNEP
29.
அயல் மகரந்தச் சேர்க்கை செய்யும் பயிரில் மீண்டும் மீண்டும் தன் மகரந்தச்சேர்க்கை செய்து பெறப்படும் வழித்தோன்றல் ______.
தூயவழி
சந்ததிவழி
உட்கலப்புவழி
கலப்பினவீரிய வழி
30.
எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது ____.
ஒற்றை இழை ஆர்.என்.ஏ
இரட்டை இழை ஆர்.என்.ஏ
ஒற்றை இழை டி.என்.ஏ
இரட்டை இழை டி.என்.ஏ
31.
மரத்தீவனத்திற்காக வளர்க்கப்படுகின்ற தாவரம் எது?
செஸ்பேனியா மற்றும் அக்கேசியா
சொலானம் மற்றும் குரோட்டலேரியா
கிளைட்டோரியா மற்றும் பிகோனியா
தேக்கு மற்றும் சந்தனம்
32.
ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர் பாக்டீரியோஃபேஜில் செய்த ஆய்வு எதனைக் காட்டுகிறது?
புரதம் பாக்டீரிய செல்லுக்குள் நுழைகிறது.
டி.என்.ஏ ஒரு மரபுப்பொருள்
டிஎன்.ஏவில் கதிரியக்கத் தன்மையுடைய கந்தகம் உள்ளது.
வைரஸ்கள் உருமாற்றம் அடையும்
33.
கூற்று: காமா கதிர்கள் பொதுவாகக் கோதுமை வகைகளில் சடுதிமாற்றத்தைத் தூண்டப் பயன்படுகிறது.
காரணம்: ஏனெனில் அணுவிலிருந்து வரும் எலக்ட்ரான்களை அயனியாக்க இயலாத குறைவான ஆற்றலை எடுத்துச்செல்கிறது.
கூற்று மற்றும் காரணம் சரி.
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி.
கூற்று மற்றும் காரணம் தவறு
34.
35.
மான்ட்ரியல் ஒப்பந்தம் ஏன் ஏற்படுத்தப்பட்டது?
36.
ஈரப்பதம் என்றால் என்ன? அதன் வகைகளை பற்றி எழுதுக.
37.
வெலாமன் என்றால் என்ன?
38.
PTC - இல் பயன்படும் சில வளர்வூடகங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
39.
இனப்பெருக்க மண்டலத்தின் 4 முக்கிய செயல்பாடுகள் எவை?
40.
புதிய சிற்றினத் தோற்றத்தை விளக்கும் டி.விரீஸின் திடீர் மாற்றக் கோட்பாடு, எவ்வாறு லாமார்க் மற்றும் டார்வினியக் கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகிறது?
41.
இயற்கை வேளாண்மையின் முக்கியப் பண்புகளை எழுதுக.
42.
கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக.
| நோய்கள் | நோய்க்காரணி | அறிகுறிகள் |
| அஸ்காரியாசிஸ் | அஸ்காரிஸ் | |
| டிரைகோஃபைட்டான் | உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட, செதில் புண்கள் காணப்படுதல். |
|
| டைபாய்டு | அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல். | |
| நிமோனியா |
43.
1.
அரிசி, கோதுமை, சோளம்
2.
1. ஒரு உயிரியிலிருந்து நான்கு அல்லது பல சேய் உயிரிகள் தோன்றுகின்றன.
2. (எ.கா) செராஷியம்.
3.
4.
(i) சூழலோடு உயிரினங்கள் செயல்படுவதால் ஏற்படும் உயிரினத் தொகுதிகள் சூழ்நிலையியல் படிகள்.
5.
இமயமலையின் பல்வேறு பகுதிகளில் வளரும் ராவோல்ஃபியா வோமிட்டேரியா எனும் மூலிகைத் தாவரத்திலுள்ள ரிசர்பைன் எனும் செயல்படு வேதிப்பொருள் உள்ளது.
இது மரபியல் பல்வகைத்தன்மையை சார்ந்தது.
6.
(i) முற்காலத்தில் பன்றிகள் மற்றும் பசுக்களின் கணையங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பெறப்பட்டது.
(ii) விலங்கு இன்சுலினுக்கு மனித இன்சுலினுக்கும் சிறிய அளவில் வேறுபாடுகள் இருந்தால், சில நோயாளிகளில் இது ஒவ்வாமையை ஏற்படுத்தியது.
7.
8.
1. அறிவியலாளர்கள் மனிதனில் பல வேறுபட்ட ஒற்றை காரமூல டி.என்.ஏக்கள் காணப்படக்கூடிய 1.4 மில்லியன் இடங்களைக் கண்டறிந்துள்ளனர்.
2. இது ஒற்றை நியூக்ளியோடைடு பல்லுருவ அமைப்பு எனப்படும்.
3. இது மருத்துவம் மற்றும் உயிரியலில் புரட்சிகரமான மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளது.
4. நோய்களின் அடிப்படை காரணங்களை கண்டறிந்து அவற்றுக்கு மூலக்கூறு மருத்துவ அடிப்படையில் சிகிச்சையளிப்பதே முக்கியமாகும்.
5. இது கதிர்அரிவால் அனீமியா, B தலசேமியா, C சிஸ்டிக் பைப்ரோசிஸ் போன்ற நோய்களுக்கு ஜீன் சிகிச்சை மூலம் குணப்படுத்த இயலும்.
6. ஒரு சில மருந்துகள் குறித்த செயல்பாடு, நோய்வாய்ப்படும் தன்மை மற்றும் சூழல் காரணிகளை நச்சுகள் போன்றவை குறித்து அறிய முடிகிறது.
9.
1. மட்டநிலத்தண்டு (மியூசா பாரடிசியாக்கா)
2. தரையடிக்கிழங்கு (கொலகேஸியா)
3. கிழங்கு (சொலானம் டியூபராசம் )
4. குமிழ்த்தண்டு (அல்லியம் சீப்பா)
5. ஓடு தண்டு (சென்டெல்லா ஏசியாட்டிகா)
6. வேர் விடும் ஓடுதண்டு (மென்தா)
7. நீர் ஓடு தண்டு (ஐக்கார்னியா)
8. தரை கீழ் தண்டு (கிரைசான்திமம்)
9. சிறு குமிழ் மொட்டு (அகேவ்)
10.
1. தனித்தன்மை வாய்ந்த உயிரிய புவியமைப்பு கொண்ட இருப்பிடங்கள், பரந்த மாறுபாடுடைய காலநிலை கூறுகள், எண்ணிலடங்கா சுற்றுச் சூழல் பல்வகைத் தன்மை மற்றும் புவியியல் தன்மையை பெற்றிருப்பதால் இந்தியா செழிப்பு மிக்க நாடாக விளங்குகிறது.
2. நிலப்பரப்பின் அடிப்படையில் இந்தியா உலகின் 7வது பெரிய நாடாகும்.
3. இந்தியாவில் பல்வேறு வகையான சூழ்நிலை மண்டலங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள், பீடபூமிகள், கடற்கரைகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், பனிப்பாறைகள், புல்வெளிகள் மற்றும் ஆற்றுப் படுக்கைகள் போன்ற பல்வேறுபட்ட சுற்றுச்சூழல் மண்டலங்களை இந்தியா கொண்டுள்ளது.
4. 17 உயிரிய மிகைப் பல்வகைத் தன்மை கொண்ட உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
5. மேலும் இந்தியாவில் 10 வெவ்வேறு உயிர் புவி மண்டலங்கள் உள்ளது. அவை இமயமலைக்கு அப்பாலுள்ள மண்டலம், இமயமலை, இந்திய பாலைவனம், குறைவறட்சி மண்டலம், மேற்கு தொடர்ச்சி மலை, டெக்கான் தீபகற்பம், கங்கை சமவெளி, வடகிழக்கு இந்தியா கடற்கரையோர மண்டலம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்.
6. மேலும் இந்தியாவில் 89 தேசிய பூங்காக்கள் 492 வனவிலங்கு சரணாலயங்கள், 14 உயிர்கோள காப்பிடங்கள் உள்ளன.
7. 50 புலி காப்பகங்களை உள்ளடக்கியுள்ளது.
11.
அ) a மற்றும் b வெவ்வேறு ஆட்டோசோம்களில் காணப்படுகிறது.
ஆ) a மற்றும் b ஒரே ஆட்டோசோமில் பிணைந்து காணப்பட்டாலும் அவை குறுக்கேற்றம் நிகழ ஏதுவாக உள்ளது.
இ) a மற்றும் b ஒரே ஆட்டோசோமில் நெருங்கி பிணைந்து காணப்படுவதால் - அவற்றிற்கிடையே குறுக்கேற்றம் நடைபெறும் வாய்ப்பு இல்லை.
இதைப் புரிந்து கொள்ள பிணைப்பு, குறுக்கேற்றம் மற்றும் சார்பின்றி ஒதுங்குதல் காணப்படுகிறது.
a) F2 ஜீனாக்கம் மற்றும் புறத்தோற்ற விகிதம்
AaBb : Aabb : aaBb : aabb
1 : 1 : 1 : 1
b) குறுக்கேற்றம் நடத்தாலும் அதே முடிவுகளே கிடைக்கின்றன.
F2 ஜீனாக்கம் மற்றும் புறத்தோற்ற விகிதம்
AaBb : Aabb : aaBb : aabb
1 : 1 : 1 : 1
c) a மற்றும் b பிணைப்பு -குறுக்கேற்றம் இன்றி நடைபெறும் போது - வேறுபட்ட காரணி நிலை பெற்றோர் AB/ab -(அ) Ab/aB (டிரான்ஸ்)
மறுசேர்க்கை கேமிட்கள் உருவாகவில்லை - குறுக்கேற்றம் நடைபெறவில்லை
அது Ab &aB (50% ஒவ்வொன்றும்)
சோதனைக் கலப்பு
12.
1. நீரின் மேற்பரப்பில் உயிரினங்களில் ஒளி மற்றும் ஆக்சிஜன் நீரினுள் செல்வது தடுக்கப்படுகிறது.
2. இது உயிரிய ஆக்சிஜன் தேவையை அதிகரித்து இறப்பினை ஏற்படுத்துகின்றது.
3. மீன்களின் செவுள்களை அடைத்து கொள்கிறது நீர்வாழ் பறவைகளின் இறக்கைகளிலும் தடையினை ஏற்படுத்துகின்றன.
4. கெட்டுப்போன நீர் மற்றும் உணவினை எடுத்துக் கொள்வதால் கல்லீரல் அழற்சி டைபாய்டு போன்ற நோய்களால் மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
5. குடிநீரின் அதிகப்படியான புளோரைடு புளோரோசிஸ் என்னும் நோயினை ஏற்படுத்துகிறது. மிகை உணவூட்டச் செறிவு நீர் நிலைகளில் தரத்தினை பாதித்து பாசிபெருக்கத்தை ஏற்படுத்துகின்றது.
13.
1. இழப்பு மீட்டல் பற்றிய ஆய்வை ஹைட்ராவில் முதன் முதலில் மேற்கொண்டவர் ஆபிரகாம் டிரம்பிளி (1740)
2. இழப்பு மீட்டல் இரண்டு வகைப்படும். அவை முழு உருவ மீட்பு மற்றும் உறுப்பு மீட்டலாகும்.
3. முழு உருவ மீட்பில் உயிரியின் சிறுபகுதி முழு உயிரியை உருவாக்கும்.(எ.கா) ஹைட்ரா
4. உறுப்பு மீட்பு இரு வகைப்படும். அவை சீராக்கல் மற்றும் மீண்டும் உருவாக்குதல்.
5. உடலில் ேதமுற்ற சில செல்கள் மட்டும் சரிசெய்யப்படுவது சீராக்கல் என்பதாகும்.
6. வெட்டுண்ட பகுதியை முழுமையாக உருவாக்குவது மீண்டும் உருவாக்குதல் என்பதாகும்.

14.
நறுமணப் பொருட்களின் அரசி - ஏலக்காய்:
தாவரவியல் பெயர் : எலிட்டரியா கார்டோமோமம்
தோற்றம், விளையுமிடம்:
தென்னிந்தியா, ஸ்ரீலங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை, வடகிழக்கு இந்தியா.
பயன்கள்:
(i) நறுமணம், வெதுவெதுப்பான பண்பு, காரச்சுவை கொண்டவை.
(ii) மிட்டாய்த் தொழிற்சாலை, நறுமணத் தயாரிப்பு, புத்துணர்வான நறுமணப் பொருள்
(iii) குழம்புப் பொடி, ஊறுகாய், கேக் தயாரிப்பு
(iv) மருத்துவத்தில் தூண்டி, அபான வாயு நீக்கி, வாயு நறுமண மூட்டி.
நறுமணப் பொருட்களின் அரசன் - (இந்தியாவின் கருத்தங்கம்):
கருமிளகு (பைப்பர் நைக்ரம்)
தோற்றம், விளையுமிடம்:
மேற்கு தொடர்ச்சி மலையைச் சார்ந்தது. காரத்தன்மைக்கு அல்கலாய்டு பைப்பரின் காரணம்.
பயன்கள்:
(i) சாஸ், சூப், குழம்புப்பொடி, ஊறுகாய் தயாரிக்க. மணமூட்ட பயன்படும்.
(ii) மருத்துவத்தில் உமிழ்நீர், வயிற்றுச் சுரப்பு, செரிப்பு மருந்து, மருந்துகளின் உயிர்ப்பு உறிஞ்சலை அதிகரிக்கும்.
15.
புதிய பயிர்பெருக்க தொழில் நுட்ப முறைகள் தேர்வு செய்தல், அறிமுகப்படுத்துதல், கலப்புறுத்தம், பன்மயம், சடுதிமாற்றம், திசு உற்பத்தி மற்றும் உயிரியல் தொழில்நுட்ப முறைகள்.
1. மரபணு தொகையத்தை வெட்டுதல் மற்றும் மாற்றியமைத்தலை CRISPR / Cas போன்ற முறைகள் செய்கின்றன.
2. மரபணு தொகைய திருத்தம் – ஆலிகோ நியூக்ளியோடைடு இயக்கத் திடீர் மாற்றக் காரணி (ODM) என்ற நுட்பத்தின் மூலம் சில இணை காரங்களில் மாற்றங்களைச் செய்தல்.
3. ஒரே சிற்றினம் அல்லது நெருங்கிய தொடர்புடைய சிற்றினத்திற்குள் மரபணுக்கள் மாற்றப்படுவது. (cisgenesis)
4. DNA வை மாற்றம் செய்யாமல் அதற்குள் இருக்கும் மரபணுவின் செயல்பாடுகளை ஒருங்கமைக்கும் முறை (epigenetic methods)
16.

1. ஒரு சூழல் மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் காணப்படும் கரிமப்பொருட்களின் (உயிரித்திரள்) அளவை குறிக்கும் திட்ட வரைபடம் உயிரித்திரள் பிரமிட் என்று அழைக்கப்படுகிறது.
2. புல்வெளி மற்றும் வனச்சூழல் மண்டலத்தில் உயிரித்திரளின் அளவு அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் உற்பத்தியாளர்களில் தொடங்கி இறுதி உண்ணிகள் (மூன்றாம் நிலை நுகர்வோர்) வரை படிப்படியாகக் குறைகிறது.
3. எனவே இந்த இரண்டு சூழல்மண்டலங்களிலும் உயிரித்திரள் பிரமிட் நேரான பிரமிட்டாக உள்ளது.
17.
| பண்பு | விளைவு | |
| 1 | களைகள் குறைக்கப்படுகிறது; | விளைச்சல் அதிகரிக்கிறது. |
| 2 | களைக்கொல்லி தெளிப்பு (அ) பயன்பாடு குறைகிறது. | செலவு குறைகிறது. சூழலுக்குகந்தது. |
| 3 | தாவரங்கள் களைகளின் போட்டி இன்றி வளர்கிறது. | ஆரோக்கியமான வளர்ச்சியடைய தாவரங்கள் |
| 4 | நச்சுப்பொருட்களின் பயன்பாடு குறைகிறது. | பாதிப்பு மண்ணில் குறைவாகவோ, செயல்திறன் குறைவாகவோ உள்ளது. மண்ணின் தன்மையையும் நுண்ணுயிரிகளையும் இதன் மூலம் பாதுகாக்கலாம். |
18.
(i) தனியொரு மரபணுவானது, பல பண்புகளை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தி உயிரினத்தின் புறத்தோற்றப் பண்புகளைத் தீர்மானிக்கிறது. இது பல்பண்புக் கூறுகள் கொண்ட மரபணு அல்லது Pleiotropy என அழைக்கப்படுகிறது.
(ii) பட்டாணியில் ஊதாமலர்கள், பழுப்பு விதைகள், மற்றும் இலை அச்சுக்களில் அடர் புள்ளிகள் கொண்ட பண்புகளுடைய தாவரத்தை வெள்ளை மலர்கள், வெளிறிய நிறமுடைய விதைகள், புள்ளிகளற்ற இலை அச்சு ஆகியவற்றைக் கொண்ட பல பட்டாணித் தாவரங்களோடு கலப்புறச் செய்தபோது மூன்று பண்புகள் ஒன்றை மரபணுவால் பாரம்பரியமாவதைக் கண்டறிந்தார்.
(iii) எ.கா: கதிர் அரிவாள் இரத்த சோகை பினைல் கீட்டோனூரியா நோய்.
19.
மகரந்தத்துகள் சூலகமுடி மீது படிந்து மகரந்தக்குழாய் சூலினுள் நுழையும் வரையுள்ள நிகழ்வுகள் மகரந்தத்துகள் சூலக அலகு இடைவினை (Pollen Pistil Interaction) எனப்படும்.
அ. சூலக முடியில் மகரந்தக் குழல் உருவாதல்
1. சூலக முடியுடன் இணக்கமான மகரந்தத்துகள், முளைத்து மகரந்தக்குழாயை உருவாக்கும்.
2. இதற்கு ஈர சூலக முடியில், சூலக முடி பாய்மமும், வறண்ட சூலக முடியின் மெல்லிய உறையும் காரணமாக உள்ளன.
3. இவை சூலக முடிக்கும், மகரந்தத்துகள்களுக்கு இடையே உள்ள புரத வினைகளைக் கொண்டு இதை முடிவு செய்யும்.
4. சூலக முடியில் மகரந்தத்துகள் நீரேற்றமடையும், மகரந்தச்சுவரப் புரதங்கள் வெளியேறும்.
5. மகரந்தக்குழாயின் சைட்டோபிளாசப் பொருட்கள் நுனி நோக்கி நகர்கின்றன.
6. மகரந்தக்குழாயின் இதர பகுதி நுண் குமிழ்ப்பையால் ஆக்ரமிக்கப்படும்.
7. நுண்குமிழ்ப்பை, குழாய் நுனியிலிருந்து, கேலோஸ் அடைப்பால் பிரிக்கப்படும்.
8. மகரந்தக்குழாயின் நுனிப்பகுதி அரைவட்ட வடிவில், ஒளி ஊடுருவும் பகுதியாக உள்ளது. இது கேப் பிளாக் எனப்படும். இது மறைந்தவுடன் மகரந்தக்குழாயின் வளர்ச்சி நின்று விடும்.
ஆ. சூலக தண்டில் மகரந்தக்குழல்
மகரந்தத் துகளின் வளர்ச்சி, சூலகத்தண்டின் வகையைப் பொறுத்து
i) உள்ளீடற்ற சூலகத்தண்டு
சூலகத்தண்டின் உள்ளீடற்ற கால்வாயில் சுரப்பு செல்கள் உள்ளன. இவை மியூசிலேஜ் பொருட்களைச் சுரக்கின்றன. இவை வளரும் மகரந்தக்குழாய்க்கு உணவு மற்றும் சூலகத்தண்டுக்கும், மகரந்தக் குழாய்க்கு உணவாக பயன்படுகின்றன சூலகத்தண்டுக்கும், மகரந்தக்குழாய்க்கும் இடையே ஒவ்வாமை வினைகளைக் கட்டுப்படுத்தும்.
ii) திட அல்லது மூடிய திட சூலகத் தண்டுகளில், ஊடு கடத்தும் திசு (Transmitting Tissue) செல்களின் இடைவெளி வழியே வளர்கிறது.
இ. மகரந்தக் குழாய் சூலினுள் நுழைதல் 3 வழிகளில் நுழைகிறது
i) சூல் துளை வழியாக
ii) சலாசா வழியாக
iii) சூலுறை வழியாக
ஈ. மகரந்தக்குழாய் கருப்பையினுள் நுழைதல்
சூலுறை வழியாக நுழைய அமைப்பு வழி நடத்தி (obturator) வழிக்காட்டுகிறது. சினர்ஜிட் வழியாக மகரந்தக்குழாயில் நுழைந்து, அதன் உள்ளடக்கப் பொருட்கள் வெளியேற்றப்படும்.
உ. இரட்டைக் கருவுறுதல், மூவினைதல்
2 ஆண் கேமிட்டுகள் கருவுறுதலில் ஈடுபடுவதால் இரட்டைக் கருவுறுதல் எனப்படும். ஒரு ஆண் கேமீட் முட்டை உட்கருவுடன் இணைந்து கருமுட்டையை உருவாக்கும். மற்றொரு ஆண் கேமீட், இரண்டாம் நிலை உட்கருவுடன் இணைந்து முதல் நிலை கருவூண் உட்கருவாகும். இது மூவினைதல் ஆகும்.
20.
(a)
ஒரே திசையில் பாய்கிறது
21.
(a)
அராபிடாப்ஸிஸ் தாலியானா மற்றும் எஸ்செரிசியா கோலை
22.
(a)
மஞ்சள்
23.
(b)
1990
24.
(a)
தாமரை
25.
(b)
ஹென்றி பாஸ்டியன்
26.
(a)
கூற்று, காரணம் இரண்டும் சரி
27.
(a)
தாமிரம்
28.
(b)
IUCN
29.
(a)
தூயவழி
30.
(a)
ஒற்றை இழை ஆர்.என்.ஏ
31.
(a)
செஸ்பேனியா மற்றும் அக்கேசியா
32.
(b)
டி.என்.ஏ ஒரு மரபுப்பொருள்
33.
(b)
கூற்று சரி. காரணம் தவறு.
34.
(c)
35.
1. 1970 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் மனிதன் வாயிலாக வெளியிடப்படும் குளோரோஃப்ளூரோ கார்பன் (CFC) ஓசோன் மூலக்கூறுகளை அதிக அளவில் சிதைத்து அதன் அளவை குறைத்து விடுவது கண்டறியப்பட்டது.
2. எனவே சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட வியன்னா கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான ஒழுங்கு நடைமுறைகள் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.
3. பிற்காலத்தில் இந்த செயல்முறைகள் அனைத்து சர்வதேச அளவிலான மான்ட்ரியல் ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது.
36.
வளிமண்டலத்தில் உள்ள கண்ணுக்குப் புலப்படாத நீராவியினால் ஏற்படும் ஈரம், ஈரப்பதம் எனப்படும்.
வகைகள்:
(i) முழுமையான ஈரப்பதம் மற்றும்
(ii) ஒப்புமை ஈரப்பதம்
முழுமையான ஈரப்பதம் மற்றும்:
குறிப்பிட்ட கொள்ளளவு பொருண்மை, அளவுள்ள காற்றில் உள்ள ஒட்டு மொத்த நீராவியின் பொருண்மை முழுமையான ஈரப்பதம் எனப்படும். இதில் வெப்பநிலை கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
ஒப்புமை ஈரப்பதம் :
காற்றின் உள்ள நீராவியின் அளவு ஒப்புமை ஈரப்பதம் எனப்படும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் காற்றில் உள்ள ஈரப்பதம் தெவிட்டு நிலையை அடைய தேவைப்படும் நீராவியின் அளவை விழுக்காட்டில் குறிப்பதே ஒப்புமை ஈரப்பதம் அதன் விழுக்காட்டில் குறிக்கப்படுகிறது.
37.
உயர்நிலை தொற்றுத் தாவரங்கள் (ஆர்கிட்கள்) வளிமண்டலத்திலிருந்து ஊட்டச்சத்துக்கள், நீர் ஆகியவற்றை உறிஞ்சும் வேர்களில் காணப்படும் வெலாமன் எனும் சிறப்பு வகை திசுக்கள் மூலம் பெறுகின்றன.
38.
(i) M.S ஊட்ட ஊடகம் - (முராஷிகி மற்றும் ஸ்கூஜ் (1962))
பொதுவாக பயன்படுத்தப்படும் ஊடகம் இதில் தகுந்த வைட்டமின்கள் மற்றும் ஹார்மோன்களுடன் தகுந்த கார்பன் மூலங்களையும் கொண்டுள்ளன.
(ii) B - 5 ஊடகம் (கேம்போர்க் குழுவினர் (1968))
(iii) ஒயிட் ஊடகம் (ஒயிட் 1943)
(iv) நிட்ச் ஊடகம் (நிட்ச் மற்றும் நிட்ச் (1969))
39.
1.விந்து, அண்ட செல் உருவாக்கம்
2. இச்செல்களைக் கடத்துதல், தக்க வைத்தல்
3. கருவிற்கு ஊட்டமளித்துப் பேணல்
4. ஹார்மோன்களை உற்பத்தி செய்தல்
40.
டி.விரீஸின் திடீர் மாற்றக் கோட்பாடு:
1. திடீர் மாற்றம் என்பது உயிரினங்களில் ஏற்படும் உடனடியான சீரற்ற மற்றும் மரபுக்கடத்தலில் பங்கேற்காத மாற்றங்கள் ஆகும்.
எ.கா: அந்திமந்தாரை (ஈனோதீரா லாமார்க்கியானா) தாவரத்தில் ஆய்வு மேற்கொண்டு அதில் திடீர் மாற்றம் காரணமாக ஏற்பட்ட மாறுபாடுகளை கண்டறிந்தார்.
2. பெரிய மற்றும் உடனடியாக ஏற்படும் மாறுபாடுகள் மட்டுமே புதிய சிற்றினம் தோன்றுவதற்குக் காரணம்.
3. ஆனால் லாமார்க் மற்றும் டார்வின் ஆகியோர் உயிரினங்களில் ஏற்படும் படிப்படியான மாறுபாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து புதிய சிற்றினம் உருவாகக் காரணமாகிறது என்று விளக்கினார்.
திடீர் மாற்றக் கோட்பாட்டின் காரணமாக சிறப்புப் பண்புகள்:
1. திடீர் மாற்றம் அல்லது தொடர்ச்சியற்ற வேறுபாடுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும்.
2. இயற்கையாக இனப்பெருக்கம் செய்யும் இனக்கூட்டத்தில் அவ்வப்போது திடீர் மாற்றங்கள் ஏற்படும்.
3. திடீர் மாற்றம் முழுமையான நிகழ்வு இடைப்பட்ட உயிரினங்கள் காணப்படாது.
4. திடீர் மாற்றம் இயற்கை தேர்வுக்கு உட்பட்டது ஆகும்.
41.
இயற்கை வேளாண்மையின் முக்கியப் பண்புகள்:
1. கரிமப் பொருட்களை பயன்படுத்தி மண்ணின் தரம் பாதுகாத்தல் மற்றும் உயிரிய செயல்பாடுகளை ஊக்குவித்தல்.
2. மண்வாழ் உயிரிகளை பயன்படுத்தி பயிர்களுக்கு ஊட்டச் சத்துகளை மறைமுகமாக அளித்தல்
3. பயறு வகை தாவரங்களை பயன்படுத்தி மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்துதல்
4. பயிர் சுழற்சி, உயிரியப் பல்வகைத்த தன்மை, இயற்கையான கொன்றுண்ணிகள், இயற்கை உரங்கள் மற்றும் பொருத்தமான வேதிய, வெப்ப மற்றும் உயிரிய தலையீடுகள் போன்ற முறைகளால் களை மற்றும் தீங்குயிர்கள் கட்டுப்படுத்துதல்.
42.
| நோய்கள் | நோய்க்காரணி | அறிகுறிகள் |
| அஸ்காரியாசிஸ் | அஸ்காரிஸ் | |
| டிரைகோஃபைட்டான் | உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட, செதில் புண்கள் காணப்படுதல். |
|
| டைபாய்டு | சால்மோனெல்லா | அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல். |
| நிமோனியா | ஸ்ட்ரெப்டோகாக்கஸ் | காய்ச்சல், இருமல் வலியுடன் கூடிய சுவாசம் மற்றும் பழுப்பு நிற சளி. |
43.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards