12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/01/2020
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
ஈத்தீன் \(\overset { HOCl }{ \rightarrow } \) A \(\overset {x }{ \rightarrow } \) ஈத்தன் -1, 2 - டைஆல் என்ற தொடர்ச்சியான வினையில் A மற்றும் X என்பன முறையே ___________
குளோரோ ஈத்தேன் மற்றும் NaOH
எத்தனால் மற்றும் H2SO4
2 குளோரோஎத்தன் 1 - ஆல் மற்றும் NaHCO3
எத்தனால் மற்றும் H2O
2.
டெட்டால் என்பது எதன் கலவை ?
குளோரோசைலினால் மற்றும் பைதயோனால்
குளோரோசைலினால் மற்றும் α-டெர்பினால்
பீனால் மற்றும் அயோடின்
டெர்பினால் மற்றும் பைதயோனால்
3.
பின்வருவனவற்றை பொருத்துக:
| A) V2O5 | i) உயர் அடர்த்தி பாலிஎத்திலீன் |
| B) சீக்லர் - நட்டா | ii) PAN |
| C) பெராக்சைடு | iii) NH3 |
| D) தூளாக்கப்பட்ட Fe | iv) H2SO4 |
| A | B | C | D |
| (iv) | (i) | (ii) | (iii) |
| A | B | C | D |
| (i) | (ii) | (iv) | (iii) |
| A | B | C | D |
| (ii) | (iii) | (iv) | (i) |
| A | B | C | D |
| (iii) | (iv) | (ii) | (i) |
4.
நீர்த்த கரைசல்களில் அமினோ அமிலங்கள் பெரும்பாலும் ________ அமைப்பில் உள்ளன .
NH2-CH(R)-COOH
NH2-CH(R)-COO-
H3N+-CH(R)-COOH
H3N+-CH(R)-COO-
5.
இரும்பின்மீது ஜிங்க் உலோகத்தை பூசி முலாம்பூசப்பட்ட இரும்பு தயாரிக்கப்படுகிறது, இதன் மறுதலை சாத்தியமற்றது, ஏனெனில் ___________
இரும்பை விட ஜிங்க் லேசானது
இரும்பை விட ஜிங்க் குறைந்த உருகுநிலையை பெற்றுள்ளது.
இரும்பை விட ஜிங்க் குறைந்த எதிர்குறி மின்முனை மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது
இரும்பை விட ஜிங்க் அதிக எதிர்குறி மின்முனை மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது
6.
கூற்று : KOH மற்றும் புரோமினுடன் அசிட்டமைடு வினைப்பட்டு அசிட்டிக் அமிலத்தை கொடுக்கிறது.
காரணம் : அசிட்டமைடு நீராற்பகுத்தலில் புரோமின் வினையூக்கியாக செயல்படுகிறது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம், கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
7.
அறைவெப்ப நிலையில் MY மற்றும் NY3, ஆகிய கரையாத உப்புகள் \(6.2\times10^{-13}\) என்ற சமமான, Ksp மதிப்புகளை கொண்டுள்ளன. MY மற்றும் NY3 ஆகியவற்றைப் பொறுத்தவரையில் எந்த கூற்று உண்மையானது?
MY மற்றும் NY3 ஆகிய உப்புகள் தூய நீரை விட 0.5M KY கரைசலில் அதிகம் கரைகின்றன
MY மற்றும் NY3 தொங்கலில் KY எனும் உப்பை சேர்ப்பதினால் அவற்றின் கரைதிறன்களில் எவ்வித விளைவும் உண்டாவதில்லை
நீரில் MY மற்றும் NY3 இரண்டின் மோலார் கரைதிறன் மதிப்புகளும் சமம்
நீரில் MY யின் மோலார் கரைதிறன், NY3 யின் மோலார் கரை திறனை விட குறைவு
8.
பின்வரும் ஒரு வினைக்காரணியுடன் அசிட்டோன் கருகவர் சேர்ப்பு வினையில் ஈடுபட்டு அதன் பின்னர் நீர்நீக்கமடைகிறது. அந்த வினைக்காரணி
கிரிக்னார்டு வினைக்காரணி
Sn / HCl
அமிலக்கரைசலிலுள்ள ஹைட்ரசீன்
ஹைட்ரோசயனிக் அமிலம்
9.
இலேசான இடைநிலைத் தனிமம் _______.
Fe
Sc
Os
மேற்கண்ட ஏதுமில்லை
10.
உலோக கார்பனைல்களில், உலோகங்களின் ஆக்சிஜனேற்ற நிலை ________.
0
+1
+2
+3
11.
வினைபடு பொருளின் புறப்பரப்பளவு அதிகரிக்கும் போது மூலக்கூறுகளுக்கிடையே நடைபெறும் மோதல்களின் எண்ணிக்கை _____________
அதிகரிக்கிறது
குறைகிறது
மாற்றமில்லை
பூஜ்யமாகிறது
12.
ஃபுளுரைட் வடிவமைப்பைப் பெற்றுள்ள கால்சியம் ஃபுளுரைடில் காணப்படும் Ca2+ மற்றும் F– அயனிகளின் அணைவு எண்கள் முறையே ____________
4 மற்றும் 2
6 மற்றும் 6
8 மற்றும் 4
4 மற்றும் 8
13.
[Pt(Py)(NH3)(Br)(Cl)] என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான வடிவ மாற்றியங்கள் எத்தனை?
3
4
0
15
14.
பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை?
நெஸ்லர் காரணி
IVம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு
IIIம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு
டாலன்ஸ் வினைப்பொருள்
15.
ZnO விலிருந்து துத்தநாகம் (Zinc) பெறப்படும் முறை _______.
கார்பன் ஒடுக்கம்
வெள்ளியைக் கொண்டு ஒடுக்குதல் (Ag)
மின்வேதி செயல்முறை
அமிலக் கழுவுதல்
16.
ஹெக்ஸ் -4- ஈனால் தயாரிக்க?
17.
ஒத்த தொகுதிகளைக் கொண்டுள்ள ஈரிணைய ஆல்கஹால்களைத் தயாரிக்க ஒரு தகுந்த வினை பொருளைத் தருக.
18.
ஆஸ்பிரின் மூலக்கூறின் அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.
19.
நேர்மின்முனை மற்றும் எதிர்மின்முனைகளை வரையறு.
20.
பின்வருவனவற்றை வரிசைபடுத்துக.
i. நீரில் கரைதிறனின் ஏறுவரிசை, C6H5NH2, (C2H5)2 NH, C2H5NH2
ii. கார வலிமையின் ஏறுவரிசை
a) அனிலீன், p- டொலுடின் மற்றும் p – நைட்ரோ அனிலீன்
b) C6H5NH2, C6H5NHCH3, மற்றும், p-Cl-C6H4-NH2
iii. வாயுநிலைமைகளில் காரவலிமையின் இறங்கு வரிசை
C2H5NH2, (C2H5)NH, (C2H5)3N மற்றும் NH3
iv. கொதிநிலையின் ஏறுவரிசை C6H5OH, (CH3)2NH, C2H5NH2
v. pKb மதிப்புகளின் இறங்கு வரிசை C2H5NH2, C6H5NHCH3,(C2H5)2NH மற்றும் CH3 NH2
vi. கார வலிமையின் ஏறுவரிசை C6H5NH2, C6H5N(CH3)2, (C2H5)2 NH மற்றும் CH3 NH2
vii. கார வலிமையின் இறங்கு வரிசை 
21.
pH வரையறு.
22.
மூலக்கூறு படிகங்கள் என்றால் என்ன?
23.
அதிகளவு குளோரினுடன் அம்மோனியாவின் வினை யாது?
24.
அணைவு எண் வரையறு.
25.
லாந்தனாய்டுகள் மற்றும் ஆக்டினாய்டுகள் தனிம வரிசை அட்டவணையில் பெற்றுள்ள இடத்தினை நிறுவுக.
26.
பாஸ்பைனின் வேதிப் பண்புகளை விளக்கும் இரு சமன்பாடுகளைத் தருக.
27.
சிலிக்கோன்களின் பயன்களைத் தருக.
28.
இரும்பை அதன் தாதுவான Fe2O3 யிலிருந்து பிரித்தெடுப்பதில் சுட்ட சுண்ணாம்புவின் பயன்பாடு யாது?
29.
பின்வரும் வினையில் வினைபொருள் X மற்றும் Y யைக் கண்டறிக.

30.
எத்தனால் மற்றும் 2 – மெத்தில் பென்டன் -2- ஆல் ஆகியனவற்றிலிருந்து 2 – ஈத்தாக்ஸி – 2 – மெத்தில் பென்டேனைத் தயாரிக்கும் வில்லியம்சன் தொகுப்பு முறைக்கான வேதிச் சமன்பாட்டினைத் தருக.
31.
இரப்பரின் வல்கையாக்கல் பற்றி குறிப்பு வரைக .
32.
α-சுருள் உருவாதல் பற்றி குறிப்பு வரைக
33.
பொட்டாசியம் டை குரோமேட்டின் பயன்களை எழுதுக
34.
புகைப்படத் தொழிலில் அணைவுச் சேர்மத்தின் பயன் யாது?
35.
பின்வரும் வினைகளுக்கான வேக விதியினைத் தருக.
அ. ஒரு வினை x ஐப் பொருத்து \(\frac{3}{2}\) வினை வகையையும், y ஐப் பொருத்து பூஜ்ய வகையையும் பெற்றுள்ளது.
ஆ. ஒரு வினை NO வைப் பொறுத்து இரண்டாம் வகை Br2 வைப் பொறுத்து முதல் வகை.
36.
சதுர நெருங்கிப் பொதிந்த இரு பரிமாண அடுக்கில் ஒரு மூலக்கூறின் அணைவு எண் என்ன?
37.
படிகப்புல பிளப்பு ஆற்றல் என்றால் என்ன? விளக்குக.
38.
ஜியோலைட்டுகள் பற்றி குறிப்பு வரைக.
39.
பின்வரும் வினையில் Cl- ஐ CN– கொண்டு பதிலீடு செய்தல்.

40.
நொதிகள் என்றால் என்ன? நொதிவினைவேக மாற்றத்தின் வினை வழிமுறை பற்றி குறிப்பு வரைக.
41.
பிராக் சமன்பாட்டினை பயன்படுத்தி எவ்வாறு ஒரு படிகத்தின் அலகுக்கூட்டின் விளிப்பு நீளத்தைக் கணக்கிடலாம்?
42.
i) இடைநிலைத் தனிமங்கள் காந்தத் தன்மையுடையவை. ஏன்?
ii) காந்த திருப்புத்திறனுக்கும், தனித்த எலக்ட்ரானின் எண்ணிக்கைக்கு இடையே உள்ள தொடர்பு யாது?
43.
1.
2 குளோரோ ஈத்தேன் 1 - ஆல் மற்றும் NaHCO3

2.
(b)
குளோரோசைலினால் மற்றும் α-டெர்பினால்
3.
(a)
| A | B | C | D |
| (iv) | (i) | (ii) | (iii) |
4.
(d)
H3N+-CH(R)-COO-
5.
இரும்பை விட ஜிங்க் அதிக எதிர்குறி மின்முனை மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது
EoZn+|Zn = -0.76V மற்றும்
EoFe2+|Fe = -0.44V ஜிங்கின்
எதிர்மின்முனை மின்முனை மின்னழுத்தமானது இரும்பினை விட அதிகம். எனவே இரும்பினால் பூசப்படுதல் இயலாது.
6.
(d)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
7.
நீரில் MY யின் மேலார் கரைதிறன் NY3 யின் மேலார் கரைதிறனைவிட குறைவு.
KY உப்பு சேர்ப்பதால் CY[Y-] பொது அயனியை கொண்டது பொது அயனிவிளைவின் காரணமாக MY மற்றும்NY3 ஆகியவைகளின் கரைதிறனைக் குறைகிறது.
எனவே வாய்ப்பு (அ) மற்றும் (ஆ) தவறு
MY உப்பிற்கு, MY \(⇌\) M+ + Y-
Ksp = (s) (s)
6.2 \(\times\) 10-13 = s2
\(\therefore s=\sqrt{6.2 \times 10^{-13}} \simeq 10^{-7}\)
NY3, உப்பினில்
NY \(⇌\) N3+ + 3Y-
Ksp = (s) (3s)3
Ksp = 27S4
\(S=\left(\frac{6.2 \times 10^{-13}}{27}\right)^{1 / 4}\)
S \(≃\) 10-4
நீரில் MYயின் மோலார் கரைதிறனானது N Y3 யைவிட குறைவு
8.
(c)
அமிலக்கரைசலிலுள்ள ஹைட்ரசீன்
9.
(b)
Sc
10.
(a)
0
11.
(a)
அதிகரிக்கிறது
12.
CaF₂ ஆனது கனசதுர நெருங்கி பொதிந்த அமைப்பு உடையது Ca²+அயனிகள் முகப்புமைய அமைப்புடையன ஒவ்வொரு Ca2+ அயனியும் 8F- அயனிகளால் சூழப்பட்டுள்ளன ஒவ்வொரு F அயனியும் 4Ca2+ அயனிகளால் சூழப்பட்டுள்ளன. எனவே Ca2+ ன் அணைவு எண் 8 மற்றும் Fன் அணைவு எண் 4 ஆகும்.
13.
மூன்று மாற்றியங்கள். ஏதேனும் ஒரு ஈனியை குறிப்பாகக் கொண்டால் (உதாரணமாக Py) மற்ற மூன்று ஈனிகள் (NH3, Br- nyAne CI-) ஆகியன (Py) ஐப்பொருத்து அமைவதன் அடிப்படையில் மூன்று வடிவ மாற்றியங்கள் உருவாகின்றன.
14.
(a)
நெஸ்லர் காரணி
15.
(a)
கார்பன் ஒடுக்கம்
16.

17.

18.
ஆஸ்பிரின் (C9H8O4) எனப்படுவது O-அசிட்டைல் சாலிசிலிக் அமிலமாகும்.
19.
நேர் மின்முனை: ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும் மின்முனை நேர்மின்முனை எனப்படும்.
எதிர் மின்முனை: ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும் மின்முனை எதிர் மின்முனை எனப்படும்.
20.
(i) C6H5NH2, (C2H5)2 NH,C2H5NH2
C6H5NH2 < (C2H5)2 NH < C2H5NH2
ii. கார வலிமையின் ஏறுவரிசை
a) அனிலீன், p- டொலுடின் மற்றும் p – நைட்ரோ அனிலீன்
அ) அனிலீன், p - டொலுடின் மற்றும் p - நைட்ரோ அனிலின்
p - டொலுடின் >அனிலின் > p - நைட்ரோ அனிலீன்
(e⊝) வெளியிடும் தொகுதி) ( e -ஈர்க்கும் தொகுதி)
b) C6H5NH2, C6H5NHCH3, மற்றும், p-Cl-C6H4-NH2
C6H5NH2 , C6H5NHCH3, p-Cl-C6H4-NH2
C6H5NH2 > C6H5NHCH3 > p-Cl-C6H4-NH2
iii. வாயுநிலைமைகளில் காரவலிமையின் இறங்கு வரிசை
C2H5NH2, (C2H5)NH, (C2H5)3N மற்றும் NH3
NH3 > (C2H5)NH2 > (C2H5)3NH > (C2H5)3N
1° அமீன் 2° அமீன் 3° அமீன்
iv. கொதிநிலையின் ஏறுவரிசை C6H5OH, (CH3)2NH, C2H5NH2
(CH3)2NH > C2H5NH2 > C2
2° அமீன் 1° அமீன்
21.
pH = - log10[H3O +]
ஒரு கரைசலின் pH என்பது அக்கரைசலில் உள்ள ஹைட்ரோனியம் அயனிகளின் மோலார் செறிவின், 10ஐ அடிப்படையாக கொண்ட எதிர்குறி மடக்கை மதிப்புகள் என வரையறுக்கப்படுகிறது.
22.
1. படிகங்களில் காணப்படும் உட்கூறுகள் நடுநிலை மூலக்கூறுகள் எனில் அவை மூலக்கூறு படிகங்கள் எனப்படும்.
2. இம்மூலக்கூறுகள் வலிமை குறைந்த வாண்டர்வால்ஸ் கவர்ச்சி விசையால் ஒன்றொடொன்று பிணைத்து வைக்கப்பட்டுள்ளன.
3. பொதுவாக இப்படிகங்கள் மென்மையானவை.
4. இவை மின் கடத்தும் தன்மையைப் பெற்றிருப்பதில்லை.
23.
அதிகளவு குளோரினுடன் அம்மோனியா வினைபுரிந்து வெடிக்கும் தன்மையுடைய நைட்ரஜன் ட்ரைக் குளோரைடைத் தருகிறது.
2NH3 + 6Cl2 ⟶ 2NCl3 + 6HCl
24.
ஒரு அணுவில், மைய உலோக அணு / அயனியுடன் இணைக்கப்பட்டுள்ள ஈனிகளுடைய வழங்கி அணுக்களின் எண்ணிக்கை அந்த உலோக அணுவின் அணைவு எண் எனப்படும்.
25.
1. நவீன தனிம வரிசை அட்டவணையில் தொகுதி 3 வரிசை 6 யில் லாந்தனைடுகள் இடம் பெற்றிருக்க வேண்டும். எனினும் ஆறாவது தொடரில் லாந்தனத்திற்கு பிறகு எலக்ட்ரான்கள் 4f உட்கூட்டில் சேர்கின்றன. மேலும், லாந்தனத்தைத் தொடர்ந்து வரும் 14 தனிமங்களும் ஒத்த வேதிப் பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே இத்தனிமங்கள் அனைத்தும் ஒருங்கே ஒரே தொகுதியாக தனிம வரிசை அட்டவணையில் கீழ்புறம் தனியே இடம் பெற்றுள்ளன.
2. இதைப் போலவே ஆக்டினியத்தை தொடர்ந்து வரும் 14 தனிமங்களும் அவைகளில் இயற் மற்றும் வேதிப் பண்புகளில் ஒத்துக் காணப்படுகின்றன. இதனால் தனிமவரிசை அட்டவணையில் கீழே தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
26.
வெப்பநிலைப்புத்தன்மை: 4PH3 \(\underrightarrow { 317k} \) P4 + 6H2
எரித்தல் வினை:
4PH3 + 8O2 \(\underrightarrow { \Delta } \) P4O10 + 6H2O
P4O10 + 6H2O \(\underrightarrow { \Delta } \)4HPO3 + 4H2O
மெட்டா பாஸ்பாரிக் அமிலம்
27.
1. சிலிகோன்கள் குறைந்த வெப்பநிலை உயர்வுப் பொருளாகவும் வெற்றிட பம்புகள், உயர் வெப்பநிலை எண்ணெய்த் தொட்டியில் பயன்படுகின்றன.
2. இவை நீர் வெறுக்கும் ஆடைகள் தயாரித்தலில் பயன்படுகின்றன.
3. இவை, மின் மோட்டார்கள் மற்றும் வீட்டு உபயோக பொருள்களில் மின்காப்பு பொருளாக பயன்படுகின்றன.
4. சிலிகோன்கள் சேகரிக்கப்பட்ட பெயிண்ட் மற்றும் எனாமல் அதிக வெப்பநிலை, சூரிய ஒளி, ஈரப்பதம் மற்றும் வேதிப் பொருள்கள் தாக்குதல் ஆகியவற்றை தாக்குபிடிக்கின்றன.
28.
மேற்கண்டுள்ள பிரித்தெடுத்தலில், ஒரு காரத்தன்மை உடைய இளக்கியான சுண்ணாம்புக்கல் (CaCO3) பயன்படுத்தப்படுகிறது. இத்தாதுவில் காணப்படும் சிலிக்கா கனிமக் கழிவானது அமிலத்தன்மையை பெற்றிருப்பதால், சுண்ணாம்புக்கல் அதனுடன் இணைந்து கால்சியம் சிலிக்கேட் எனும் கனிமக் கசடினைத் தருகிறது.
CaO(S)+ SiO2(S) ⟶ CaSiO3(S)
இளக்கி கனிமக்கழிவு கனிமக் கசடு
29.

30.
2-எத்தாக்ஸி -2 மெத்தில் பென்டேன்

31.
சார்லஸ் குட் இயர் என்பவர் இயற்கை இரப்பர் மற்றும் சல்பர் சேர்ந்த கலவையை சூடான அடுப்பின் மீது தற்செயலாக விட்டார். அந்த இரப்பரானது வலிமையானதாகவும், நீளும் தன்மை கொண்டதாகவும் மாறியதைக் கண்டு அவர் ஆச்சரியமடைந்தார். குட் இயர் இந்த செயல்முறையை “இரப்பர் உருவூட்டல்" அல்லது வல்கையாக்கல் என்றழைத்தார். இயற்கை இரப்பரை, 5 - 3.% சல்பருடன் சேர்த்து -100 150°C வெப்பநிலையில் வெப்பப்படுத்தும்போது சிஸ் -1.4 பாலிஐசோபிரீன் சங்கிலிகள் டைசல்பைடு பிணைப்புகளால்(-S-S) குறுக்க பிணைக்கப்படுகின்றன.
வல்கனைசேஷனுக்கு பயன்படுத்தப்படும் சல்பரின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலமாக இரப்பரின் இயற் பண்புகளை மாற்றியமைக்க முடியும். 1 முதல் 3 % வரை சல்பரைக் கொண்டுள்ள இரப்பரானது மிருதுவானதாகவும், நீளும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.3 முதல் 10% வரை சல்பரைப் பயன்படுத்தும்போது இரப்பரானது கடினமானதாக ஆனால், நெகிழும் தன்மை கொண்டதாக மாறுகிறது.
32.
α-சுருள் துணை அமைப்பில், அமினோ அமிலங்கள் வலப்பக்க செங்குத்து சுருள் அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் இவை ஒரு அமினோ அமிலத்திலுள்ள (n-வது பகுதிக்கூறு) கார்பனைல் தொகுதி ஆக்சிஜனுக்கும் ஐந்தாவது அமினோ அமில (n+1 வது பகுதிக்கூறு) அமினோ ஹைட்ரஜனுக்கும் இடையே உருவாகும் ஹைட்ரஜன் பிணைப்புகளால் நிலைப்படுத்தப்படுகின்றன.
33.
(i) வலிமையான ஆக்சிஜனேற்றியாக பயன்படுகிறது
(ii) சாயமிடுதல் மற்றும் அச்சுத் தொழிலில் பயன்படுகிறது
(iii) தோல் பதனிடுதலில் பயன்படுகிறது.
(iv) பருமனறி பகுப்பாய்வில் இரும்பின் சேர்மங்கள் மற்றும் அயோடைடுகளை அளந்தறியப் பயன்படுகிறது
34.
(i) புகைப்படத் தொழிலில், புகைப்படச் சுருள் மேம்படுத்தப்படும் போது சோடியம் தயோ சல்பேட் கரைசலால் கழுவப்படுகிறது.
(ii) எதிர் பிம்பம் நிலைநிறுத்தப்படுகிறது.
(iii) சிதைவடையாத AgBr ஆனது சோடியம் டைதயோசல்பேட்டா அர்ஜென்டேட் (I) என்ற கரையக்கூடிய அணைவுச் சேர்மத்தினை உருவாக்குகிறது.
(iv) புகைப்படச்சுருளை நீரைக் கொண்டு கழுவுவதன் மூலம் இதனை பிரிக்கலாம்.
AgBr + 2 Na2S2O3 ⟶ Na3 [Ag(S2O3)2] + 2 NaBr
35.
அ) வினை வேகம் \(=K{ \left[ X \right] }^{ 3/2 }{ [Y] }^{ o }\)
ஃ வினைவேகம் \(=K{ \left[ X \right] }^{ 3/2 }\)
ஆ) வினை வேகம் \(=K{ [NO] }^{ 2 }{ [{ Br }_{ 2 }] }^{ 1 }\)
36.
(i) ஒரு திசையில் நேர்க்கோட்டில் அடுக்கியதைப் போல் இரு பரிமாணத்தில் அதே வரிசை மீண்டும், மீண்டும் தோன்றும் வகையில் அடுக்கினால் ஒரு பரிமாண அமைப்பினைப் போன்று வெவ்வேறு வரிசைகளில் அடுக்கப்பட்ட அனைத்துக் கோளங்களும் செங்குத்து மற்றும் கிடைமட்ட வாக்கில் ஒரே திசையில் அமைந்திருக்குமாறு பல வரிசைகளை உருவாக்குகின்றன.
(ii) முதலாவது வரிசையினை A எனக் குறிப்பிட்டால், மேற்கண்டவாறு பொதிந்து வைக்கப்பட்ட அமைப்பு AAA வகை என அழைக்கப்படுகிறது.
(iii) ஏனெனில், அனைத்து வரிசைகளும் முதல் வரிசையினை ஒத்து அமைகின்றன.
(iv) இவ்வகை அமைப்பில், ஒவ்வொரு கோளமும் தனக்கு அருகாமையில் சூழ்ந்துள்ள நான்கு கோளங்களைத் தொட்டு கொண்டிருக்கும்.
(v) எனவே கோளத்தின் அணைவு எண் 4 ஆகும்.
37.
1. ஆய அச்சுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மடல்களைப் பெற்றிருக்கும் (dxy, dyz மற்றும் dzx) ஆர்பிட்டால்களைக் காட்டிலும் dx²-y2மற்றும் dz² ஆர்பிட்டால்கள் அச்சுகளின் வழியே அமைந்திருப்பதால் அதிக விலக்கு விசைக்கு உட்படுகின்றன.
2. மேலும் அவைகளின் ஆற்றலும் அதிகரிக்கின்றன. இவ்வாறாக சம ஆற்றலுடைய d- ஆர்பிட்டால்கள் இந்நிலையில் இருவகைகளாக பிரிக்கின்றன. இச்செயல்முறை படிகபுலப்பிளப்பு எனப்படும். இவ்விருவகை ஆர்பிட்டால்களுக்கிடையே உள்ள ஆற்றல் வேறுபாடு படிகப்புலபிளப்பு ஆற்றல் எனப்படும்.
38.
(i) ஜியோலைட்டுகள் என்பவை அலுமினியம், சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை ஒழுங்கான முப்பரிமாண கட்டுமான அமைப்பில் கொண்டுள்ள முப்பரிமாண படிகத் திண்மங்களாகும்.
(ii) இவை நீரேறிய சோடியம் அலுமினோ சிலிகேட்டுகளாகும்.
(iii) பொதுவான வாய்ப்பாடு Na2O.(AI2O3).x(SiO2).y(H2O) (x = 2 முதல் 10; y = 2 முதல் 6 வரை)
(iv) ஜியோலைட்டுகள் நுண்துளை அமைப்பைக் கொண்டுள்ளன. இத்துளைகளில் ஒன்றை நேர்மின் சுமை கொண்ட சோடியம் அயனிகளும், நீர் மூலக்கூறுகளும் தளர்வாக இருத்தி வைக்கப்பட்டுள்ளன. பங்கிடப்பட்ட ஆக்சிஜன் அணுக்களின் மூலம் Si மற்றும் Al அணுக்கள் நான்முகி அமைப்பில் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
(v) ஜியோலைட்டுகள், களிமண் கனிமத்தை ஒத்துள்ளன. ஆனால் அவற்றின் படிகச் அமைப்பில் வேறுபடுகின்றன.
(vi) ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட தடங்கள் மற்றும் கூடுகளைக் கொண்ட, தேன்கூட்டு அமைப்பை ஒத்த முப்பரிமாண படிக அமைப்பை ஜியோலைட்டுகள் பெற்றுள்ளன. ஜியோலைட்டு கட்டமைப்பு நகராமல் இறுக்கமாக உள்ள போதும், நுண் துளைகளின் வழியாக நீர் மூலக்கூறுகள் உள்ளேயும், வெளியேயும் மிக எளிதாக நகர்கின்றன.
(vii) ஏறத்தாழ ஒரே சீராக அமைந்திருக்கும் நுண்துளைகளின் உருவளவு இக்கட்டமைப்பின் மற்றொரு ஜியோலைட்டுகள் நீரின் நிரந்தரக் கடினத் தன்மையை நீக்க பயன்படுகிறது.
39.
R-Cl = 1- குளோரா ஆக்டேன்
R-CN =1- சயனோஆக்டேன்
கரிமநிலைமையிலுள்ள 1- குளோரா ஆக்டேன் உடன் நீர்த்த நிலைமையிலுள்ள சோடியம் சயனைடு கலக்கப்பட்ட இருநிலைமை கலவையை பல நாட்களுக்கு நேரடியாக வெப்பப்படுத்தினாலும் 1-சயனோ ஆக்டேன் கிடைப்பதில்லை ஆனால், சிறிதளவு டெட்ரா ஆல்கைல் அம்மோனியம் குளோரைடு போன்ற நான்கிணைய உப்பை சேர்க்கும்போது, அதிவேகமாக, 100% விளைச்சலுடன் ஓரிரு மணித்துளிகளில் 1-சயனோ ஆக்டேன் உருவாகிறது. இந்த வினையில் நீர்வெறுக்கும் மற்றும் நீர்விரும்பும் முனைகளைக் கொண்டுள்ள டெட்ரா ஆல்கைல் அம்மோனியம் நேரயனியானது,அதன் நீர்விரும்பும் முனையை பயன்படுத்தி நீர்த்த நிலைமையிலிருக்கும் CN- அயனிகளை கரிமநிலைமைக்கு நகர்த்தி 1- குளோரா ஆக்டேனுடன் வினை புரிய தூண்டுகிறது.

எனவே, நிலைமைமாற்ற வினைவேகமாற்றியானது, ஒரு வினைபடுபொருளை ஒரு நிலைமையிலிருந்து, மற்றொரு நிலைமைக்கு கடத்துவதன் மூலமாக, வினையின் வேகத்தை அதிகரிக்கின்றன.
40.
நொதிகள் என்பவை முப்பரிமாண அமைப்பு கொண்ட சிக்கலான புரத மூலக்கூறுகளாகும். இவை உயிரினங்களில் நிகழும் வேதி வினைகளுக்கு வினையூக்கிகளாக செயல்படுகின்றன .
அநேக நேரங்களில் நொதிகள் கூழ்மநிலையில் காணப்படுகின்றன.
மேலும், அவற்றின் வினையூக்க செயல்பாடுகளில் தேர்ந்து செயலாற்றக்கூடியவைகளாக உள்ளன.
ஒரு குறிப்பிட்ட உயிருள்ள செல்லில் உருவாகும் ஒவ்வொரு நொதியும், நிகழும் ஒரு குறிப்பிட்ட வினைக்கு வினைவேக மாற்றியாக செயல்பட முடியும்.
நொதிவினைவேக மாற்றத்திற்கான சில பொதுவான எடுத்துக்காட்டுகள்:
கிளைசைல் L - குளுட்டமைல் L - தைரோசின் எனும் பெப்டைடானது, பெப்சின் எனும் நொதியால் நீராற்பகுப்படைகிறது.
டையஸ்டேஸ் எனும் நொதி ஸ்டார்ச்சை மால்டோசாக நீராற்பகுக்கிறது.
\(2\left(\mathrm{C}_6 \mathrm{H}_{10} \mathrm{O}_5\right) \mathrm{n}+\mathrm{nH}_2 \mathrm{O} \rightarrow \mathrm{nC}_{12} \mathrm{H}_{22} \mathrm{O}_{11}\)
ஈஸ்ட்களில் உள்ள சைமேஸ் எனும் நொதியானது குளுக்கோசை எத்தனாலாக மாற்றமடையச் செய்கிறது.
\(\mathrm{C}_6 \mathrm{H}_{12} \mathrm{O}_6 \rightarrow 2 \mathrm{C}_2 \mathrm{H}_5 \mathrm{OH}+2 \mathrm{CO}_2\)
மைக்கோ டெர்மா அசிட்டி எனும் நொதி ஆல்கஹாலை அசிட்டிக் அமிலமாக ஆக்சிஜனேற்றமடையச் செய்கிறது.
\(\mathrm{C}_2 \mathrm{H}_5 \mathrm{OH}+\mathrm{O}_2 \rightarrow \mathrm{CH}_3 \mathrm{COOH}+\mathrm{H}_2 \mathrm{O}\)
சோயா பீன்களில் உள்ள யூரியேஸ் எனும் நொதி யூரியாவை நீராற்பகுக்கிறது.
\(\mathrm{NH}_2-\mathrm{CO}-\mathrm{NH}_2+\mathrm{H}_2 \mathrm{O} \rightarrow 2 \mathrm{NH}_3+\mathrm{CO}_2\)
நொதிவினைவேக மாற்ற வினையின் வினைவழிமுறை.
\(\mathrm{E}+\mathrm{S} \rightleftharpoons \mathrm{ES} \rightarrow \mathrm{P}+\mathrm{E}\)
இங்கு E என்பது நொதி, S என்பது வினைபடுபொருள், ES என்பது கிளர்வு அணைவு, P என்பது விளைபொருள் என குறிப்பிடுகின்றன.

41.
1. படிக வடிவமைப்பினைத் தீர்மானிப்பதற்கு X -கதிர் விளிம்பு விளைவு ஆய்வு ஒரு சிறந்த முறையாகும்.
2. X கதிர் விளிம்பு ஆய்வு முறைகளின் அடிப்படையில் பின்வரும் சமன்பாட்டைப் பயன்படுத்தி அணுக்கள் அடங்கிய இரு அடுத்தடுத்த அணிக்கோவைத் தளங்களுக்கு இடைப்பட்ட தொலைவை (d) கணக்கிடலாம்.
2d sin θ = nλ
மேற்கண்ட சமன்பாடு பிராக் சமன்பாடு எனப்படும்
λ = விளிம்பு விளைவிற்கு பயன்படுத்தப்பட்ட X-கதிரின் அலைநீளம்
θ = விளிம்பு விளைவுக் கோணம்
n = எதிரொளிப்பின்படி
d = தளங்களுக்கு இடைப்பட்ட தொலைவு
θ, λ மற்றும் n மதிப்பு தெரிந்தால் d மதிப்பினை கண்டறிய இயலும்.
\(d=\frac { n\lambda }{ 2sin\theta } \) இம்மதிப்பானது அலகுக்கூட்டின் விளிம்பு நீளத்தைத் தருகிறது.
42.
i) இடைநிலைத் தனிமங்கள் தனித்த எலக்ட்ரானை பெற்றிருப்பதால், பாரா காந்தத் தன்மையுடையவை
ii) \({ \mu }_{ s }=\sqrt { n(n+2) } BM\)
n = தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
\({ \mu }_{ s }\) = காந்த திருப்புத் திறன்
43.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards