12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 22/10/2025
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
கிடைமட்ட பகுப்பாய்வு என்றால் என்ன?
2.
ராஜா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.
| விவரம் | 2016-17 |
|---|---|
| ரூ. | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,50,000 |
| இதர வருமானம் | 67,500 |
| செலவுகள் | 1,35,000 |
3.
அருள் நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு வருமான அறிக்கையைத் தயாரிக்கவும்.
| விவரம் | 2015-16 ரூ. |
2016-17 ரூ. |
|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 50,000 | 60,000 |
| இதர வருமானம் | 10,000 | 30,000 |
| செலவுகள் | 40,000 | 50,000 |
4.
போக்குப் பகுப்பாய்வு எப்போது இதர பகுப்பாய்வு கருவிகளை விட ஏற்புடையதாகும்?
5.
6.
குமார் நிறுமத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய போது அளவு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.
| விவரம் | 2017-18 |
|---|---|
| ரூ. | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 5,00,000 |
| இதர வருமானம் | 20,000 |
| செலவுகள் | 3,00,000 |
7.
பின்வரும் விவரங்களிலிருந்து தருண் & கோ நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கை தயார் செய்யவும்.
| விவரம் | 2016-17 | 2017-18 |
|---|---|---|
| ரூ. | ரூ. | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 2,00,000 | 2,50,000 |
| இதர வருமானங்கள் | 50,000 | 40,000 |
| செலவுகள் | 1,50,000 | 1,20,000 |
8.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் குறைபாடுகள் யாவை?
9.
நிறுமங்களின் நிதிநிலை அறிக்கைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் யாவை?
10.
நிதி அறிக்கைகளின் இயல்புகள் யாவை?
11.
12.
பொது அளவு வருமான அறிக்கை தயாரிக்கும் வழிமுறைகளை விளக்கவும்.
13.
நிதிநிலை அறிக்கையின் குறைபாடுகள் ஏதேனும் மூன்றினை விளக்கவும்.
14.
நிதிநிலை அறிக்கைகள் கடந்தகால விவரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இது எப்படி ஒரு குறைபாடாகும் என விளக்கவும்.
15.
பின்வரும் விவரங்களைக் கொண்டு, முல்லை வரையறு நிறுமத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ.இலட்சங்களில் | ||
|---|---|---|---|
| 2015-16 | 2016-17 | 2017-18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 100 | 120 | 160 |
| இதர வருமானம் | 20 | 24 | 20 |
| செலவுகள் | 20 | 14 | 40 |
| வருமானவரி | 30% | 30% | 30% |
16.
பின்வரும் விவரங்களிலிருந்து மணி மற்றும் கனி நிறுமங்களின் 2019 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.
| விவரம் | மணி நிறுமம் | கனி நிறுமம் |
|---|---|---|
| ரூ. | ரூ. | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 2,00,000 | 2,50,000 |
| இதர வருமானம் | 30,000 | 25,000 |
| செலவுகள் | 1,10,000 | 1,25,000 |
17.
பின்வரும் விவரங்களிலிருந்து மேரி வரையறு நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.
| விவரம் | 2015-16 | 2016-17 |
|---|---|---|
| ரூ. | ரூ. | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,00,000 | 5,00,000 |
| இயக்கச் செலவுகள் | 2,00,000 | 1,80,000 |
| வருமான வரி (வரிக்கு முன் இலாபத்தில் %) | 20 | 50 |
18.
பின்வரும் விவரங்களிலிருந்து அப்துல் வரையறு நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.
| விவரம் | 2015-16 ரூ. |
2016-17 ரூ. |
|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 3,00,000 | 3,60,000 |
| இதர வருமானம் | 1,00,000 | 60,000 |
| செலவுகள் | 2,00,000 | 1,80,000 |
| வருமான வரி | 30% | 30% |
19.
பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31, 2016 மற்றும் மார்ச் 31, 2017 க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.
| விவரம் | 2015-16 ரூ. |
2016-17 ரூ. |
|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,00,000 | 6,00,000 |
| இதர வருமானங்கள் | 50,000 | 1,50,000 |
| செலவுகள் | 5,00,000 | 3,00,000 |
| வருமான வரி % | 40 | 40 |
20.
முத்து நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கவு
| விவரம் | 2017, மார்ச் 31 | 2018, மார்ச் 31 |
|---|---|---|
| ரூ. | ரூ. | |
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||
| பங்குதாரர் நிதி | 4,00,000 | 4,40,000 |
| நீண்ட காலப் பொறுப்புகள் | 1,50,000 | 1,65,000 |
| நடப்புப் பொறுப்புகள் | 75,000 | 82,500 |
| மொத்தம் | 6,25,000 | 6,87,500 |
| II. சொத்துகள் | ||
| நீண்டகாலச் சொத்துகள் | 5,00,000 | 6,00,000 |
| நடப்புச் சொத்துகள் | 1,25,000 | 87,500 |
| மொத்தம் | 6,25,000 | 6,87,500 |
21.
பின்வரும் விவரங்களைக் கொண்டு பாலை வரையறு நிறுமத்தின் போக்குப் பகுப்பாய்வினைக் கணக்கிடவும்
| விவரம் | ரூ. இலட்சங்களில் | ||
|---|---|---|---|
| வருடம் 1 | வருடம் 2 | வருடம் 3 | |
| I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள் | |||
| பங்குதாரர் நிதி | 250 | 275 | 300 |
| நீண்ட காலப் பொறுப்புகள் | 100 | 125 | 100 |
| நடப்புப் பொறுப்புகள் | 50 | 40 | 80 |
| மொத்தம் | 400 | 440 | 480 |
| II. சொத்துகள் | |||
| நிலைச் சொத்துகள் | 300 | 360 | 390 |
| நடப்புச் சொத்துகள் | 100 | 80 | 90 |
| மொத்தம் | 400 | 440 | 480 |
22.
சேலம் வரையறு நிறுமத்தின் 2017, மார்ச் 31 மற்றும் 2018, மார்ச் 31- க்கான பொது அளவு நிதிநிலை அறிக்கை தயார் செய்யவும்.
| விவரம் | 31 மார்ச் 2017 | 31 மார்ச் 2018 |
|---|---|---|
| ரூ. | ரூ. | |
| I.பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||
| 1. பங்குதாரர் நிதி | ||
| அ) பங்கு முதல் | 5,00,000 | 6,00,000 |
| ஆ) காப்பும் மிகுதியும் | 4,00,000 | 3,60,000 |
| 2. நீண்ட காலப் பொறுப்புகள் | ||
| நீண்ட காலக் கடன்கள் | 8,00,000 | 2,40,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | ||
| கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 3,00,000 | - |
| மொத்தம் | 20,00,000 | 12,00,000 |
| II. சொத்துகள் | ||
| 1. நீண்ட காலச் சொத்துகள் | ||
| அ) நிலைச் சொத்துகள் | 10,00,000 | 6,00,000 |
| ஆ) நீண்டகால முதலீடுகள் | 5,00,000 | 2,40,000 |
| 2. நடப்புச் சொத்துகள் | ||
| சரக்கிருப்பு | 3,00,000 | 1,20,000 |
| ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் | 2,00,000 | 2,40,000 |
| மொத்தம் | 20,00,000 | 12,00,000 |
23.
24.
சந்திரா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக்குறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக்குறிப்பினைத் தயார் செய்யவும்.
| விவரம் | 2016, மார்ச் 31 | 2017, மார்ச் 31 |
|---|---|---|
| ரூ. | ரூ. | |
| I.பங்குமூலதனம் மற்றும்பொறுப்புகள் | ||
| பங்குதாரர் நிதி | 1,00,000 | 2,60,000 |
| நீண்ட காலப் பொறுப்புகள் | 50,000 | 60,000 |
| நடப்புப் பொறுப்புகள் | 25,000 | 30,000 |
| மொத்தம் | 1,75,000 | 3,50,000 |
| II. சொத்துகள் | ||
| நிலைச் சொத்துகள் | 1,00,000 | 2,00,000 |
| நடப்புச் சொத்துகள் | 75,000 | 1,50,000 |
| மொத்தம் | 1,75,000 | 3,50,000 |
25.
_______ என்பது கணக்கிடப்பட்ட தொகைகளைச் சோதனை செய்தல் மற்றும் அவற்றிற்கிடையேயான தொடர்பினை ஏற்படுத்துதல் ஆகும்.
தொகுப்பாய்வு
பகுப்பாய்வு
இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
26.
_______ என்பது ஒரு குறிப்பிட்ட நாளன்றைய நிதிநிலையை வெளிப்படுத்தும் சொத்துகள் மற்றும் பொறுப்புகளைக் கொண்ட ஓர் அறிக்கையாகும்.
வியாபாரக் கணக்கு
இலாப நட்டக் கணக்கு
இருப்புநிலைக் குறிப்பு
இருப்பாய்வு
27.
பொது அளவு அறிக்கைகள் எத்தனை பத்திகளுடன் தயாரிக்கப்படுகின்றன.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
28.
ஒப்புநோக்கு அறிக்கை எத்தனை பத்திகளைக் கொண்டது?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
29.
பொதுவான அடிப்படையிலான பல்வேறு விவரங்களின் தொடர்பினைக் காட்டுவது எது?
ரொக்க ஓட்டப் பகுப்பாய்வு
பொது அளவு அறிக்கைகள்
போக்குப் பகுப்பாய்வு
நிதி ஓட்டப் பகுப்பாய்வு
30.
தொழிலின் கடன்களை திருப்பிச் செலுத்தும் திறனைப் பற்றிய தகவல்களை நிதிநிலை அறிக்கைகள் வாயிலாக யார் பெற்றுக் கொள்ள முடிகிறது.
கடனாளிகள்
கடனீந்தோர்
வங்கியர்
மேலாளர்
31.
எந்த அறிக்கையானது உற்பத்தி கணக்கு, வியாபாரக் கணக்கு, இலாப நட்டக் கணக்கு போன்றவற்றை உள்ளடக்கியதாகும்?
முதல் அறிக்கை
இலாப நட்ட அறிக்கை
செலவின அறிக்கை
வருமான அறிக்கை
32.
ஒரு பொது அளவு இருப்புநிலைக் குறிப்பில், நீண்டகாலச் சொத்துகளின் சதவீதம் 75 எனில், நடப்புச் சொத்துகளின் சதவீதம் எவ்வளவு?
175
125
25
100
33.
பின்வரும் வாக்கியங்களில் எது சரியானதல்ல?
நிதிநிலை அறிக்கையின் குறைபாடுகள் அனைத்தும் நிதிநிலை அறிக்கைகள் பகுப்பாய்விற்கும் பொருந்தும்.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு ஒரு வழிமுறை, இது ஒரு முடிவல்ல.
நிதி நிலை அறிக்கை பகுப்பாய்விற்கு நிபுணத்துவம் தேவையில்லை
ஆய்வு செய்யப்பட்ட தகவல்களை உய்த்துணர்வது தனிப்பட்ட கருத்துகளை உள்ளடக்கியதாகும்.
34.
பின்வருவனவற்றில் எது நிதிநிலைப் பகுப்பாய்வின் ஒரு கருவி அல்ல?
போக்குப் பகுப்பாய்வு
பொது அளவு அறிக்கை
ஒப்பீட்டு அறிக்கை
நிர்ணயிக்கப்பட்ட அடக்கவிலையியல்
1.
1) பல ஆண்டுகளுக்கான தொகைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு எடுத்துக் கொண்டால், அப்பகுப்பாய்வு கிடைமட்ட பகுப்பாய்வு என்றழைக்கப்படும்.
2) பொதுவாக, ஒரு ஆண்டானது அடிப்படை ஆண்டாக எடுத்துக் கொள்ளப்பட்டு பிற ஆண்டுகளுடனான தொகை அடிப்படை ஆண்டுடன் ஒப்பீடு செய்யப்படுகிறது.
3) ஒப்பீடு அறிக்கைகள், மற்றும் போக்கு சதவீதங்கள் போன்றவை கிடைமட்ட பகுப்பாய்விற்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
2.
| விவரம் | தொகை ரூ. |
சதவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,50,000 | 100 |
| கூட்டுக: இதர வருமானம் | 67,500 | 15 |
| மொத்த வருவாய் | 5,17,500 | 115 |
| கழிக்க: செலவுகள் | 1,35,000 | 30 |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம் | 3,82,500 | 85 |
குறிப்பு:
பிற வருமானத்திற்கான சதவீதம் கணக்கிடுதல் \(=\frac {67,500}{4,50,000}\times {100}=15\%\)
மொத்த வருவாய்க்கான சதவீதம் கணக்கிடுதல் \(=\frac {5,17,500}{4,50,000}\times {100}=115\%\)
செலவுகளுக்கான சதவீதம் கணக்கிடுதல் \(=\frac {1,35,000}{4,50,000}\times {100}=30\%\)
வரிக்கு முன்னர் உள்ள இலாபத்தில் சதவீதம் கணக்கிடுதல் \(=\frac {3,82,500}{4,50,000}\times {100}=85\%\)
3.
| விவரம் | 2015-16 ரூ. |
2015-16 ரூ. |
தொகையின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
சதவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
|---|---|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 50,000 | 60,000 | +10,000 | +20 |
| கூட்டுக: இதர வருமானம் | 10,000 | 30,000 | +20,000 | +200 |
| மொத்த வருமானங்கள் | 60,000 | 90,000 | +30,000 | +50 |
| கழிக்க: செலவுகள் | 40,000 | 50,000 | +10,000 | |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம் | 20,000 | 40,000 | +20,000 | 100 |
குறிப்பு:
4.
1) போக்குப் பகுப்பாய்வு என்பது ஒரு காலக்கட்டத்திற்கு மேல் உள்ள தொகைகளின் இயக்கத்தை ஆய்வு செய்வதாகும்.
2) போக்கு என்பது வளர்ந்து வரும் போக்காகவோ அல்லது குறைந்து செல்லும் அல்லது முறையற்ற போக்காகவோ இருக்கலாம்.
3) இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உள்ள தகவல்களை பகுப்பாய்வு செய்ய ஒப்பீட்டு அளவு அறிக்கை முறையை பயன்படுத்துவது கடினமானதாகும். எனவே, போக்குப் பகுப்பாய்வு பயன்படுத்தப்படலாம்.
5.
6.
| விவரம் | தொகை | விற்பனை மூலம் பெற்ற வருவாயில் சதவீதம் |
|---|---|---|
| ரூ. | ||
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 5,00,000 | 100 |
| கூட்டுக: இதர வருமானம் | 20,000 | 4 |
| மொத்த வருவாய் | 5,20,000 | 104 |
| கழிக்க: செலவுகள் | 3,00,000 | 60 |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம் | 2,20,000 | 44 |
குறிப்பு: பிற வருமானத்திற்கான சதவீதம் கணக்கிடுதல்
= \(\frac {20,000}{5,00,000}\) x 100 = 4%
7.
| விவரம் | 2016-17 | 2017-18 | தொகையின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
தவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
|---|---|---|---|---|
| ரூ. | ரூ. | ரூ. | ||
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 2,00,000 | 2,50,000 | +50,000 | +25 |
| கூட்டுக: இதர வருமானங்கள் | 50,000 | 40,000 | –10,000 | –20 |
| மொத்த வருமானங்கள் | 2,50,000 | 2,90,000 | +40,000 | +16 |
| கழிக்க: செலவுகள் | 1,50,000 | 1,20,000 | –30,000 | –20 |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம் | 1,00,000 | 1,70,000 | +70,000 | +70 |
விற்பனை மூலம் பெற்ற வருவாயின் கூடுதல் மற்றும் குறைதல் சதவீதக் கணக்கீடு
x 100 = 25%
8.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் குறைபாடுகள்:
1) பணம்சாரா தகவல்கள் புறக்கணிப்பு விலை நிலை மாற்றங்கள் புறக்கணிப்பு போன்ற நிதிநிலை அறிக்கைகளில் காணப்படும் எல்லா குறைபாடுகளும் நிதிநிலை அறிக்கை பகுப்பாய்விலும் காணப்படுகின்றன.
2) நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு என்பது வழிதானே தவிர இதுவே முடிவில்லை. அதாவது இது மேலாண்மை மற்றும் பிற பங்குதாரர்களுக்கான ஒரு கருவியே ஆகும்.
3) நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு செய்வதற்கு நிபுணத்துவ அறிவு தேவையானதாகும்.
4) பகுப்பாய்வு செய்யப்பட்ட தகவல்களை பற்றி வெவ்வேறு வல்லுனர்களால் வெவ்வேறு கருத்துகள் தரப்படுவதால் உய்த்துணர்தல் என்பது தனிப்பட்ட முடிவுகளை உள்ளடக்கியதாகும்.
9.
நிறுமங்களின் நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்படும்போது இந்திய நிறுமச்சட்டம் 2013-ன் படி பின்வரும் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
1) பிரிவு 2(40)ன் படி நிதிநிலை அறிக்கைகள் என்பது இருப்புநிலைக்குறிப்பு, இலாபநட்டக் கணக்கு /வருவாய் செலவினக் கணக்கு, ரொக்க ஓட்ட அறிக்கை, பங்கு மூலதனத்தின் மாற்றம் குறித்த அறிக்கை மற்றும் மேற்கண்டவைகளின் விளக்கக் குறிப்பு ஏதேனும் இருந்தால் அவற்றையும் குறிக்கும்.
2) இந்திய நிறுமச்சட்டம் 2013 பிரிவு 129 (1)-ன் படி நிதிநிலை அறிக்கைகள், நிறும நடவடிக்கைகளின் உண்மையான, நியாயமான நிலையை எடுத்துக்காட்டுவதற்காகவும், பிரிவு 133 ல் கொடுக்கப்பட்டுள்ள தரநிலைகளின் படியும் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
3) மேலும், பிரிவு 129 (1)-ன் படி நிதிநிலை அறிக்கைகள் இந்திய நிறுமச்சட்டம் 2013 பட்டியல் III -ல் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தின் படியே தயாரிக்கப்பட வேண்டும் எனவும் கூறுகிறது.
10.
நிதி நிலை அறிக்கைகளின் இயல்புகள் பின்வருமாறு:
1) நிதிநிலை அறிக்கைகள், ஒரு கணக்காண்டின் இறுதியில் கணக்கேடுகளில் பதிவு செய்யப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன.
2) இவ்வறிக்கைகள், ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் தயாரிக்கப்படுகின்றன.
3) ஒரே தன்மையுடைய தகவல்களை அதாவது நிலைச்சொத்துகள் மற்றும் நடப்புச் சொத்துகள் போன்று குழுமப்படுத்துதல் மூலமாக அர்த்தமுள்ள தகவல்களைத் தருகிறது.
4) புராதன அடக்கவிலை அடிப்படையில் நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன.
5) நிதிநிலை அறிக்கையானது சில நிகழ்வுகளில் தனிப்பட்ட முடிவுகளை உள்ளடக்கியதாகும். எடுத்துக்காட்டாக தேய்மானம் நீக்கும் முறை மற்றும் காப்பு சதவீதம் முடிவு செய்தல்.
11.
12.
பொது அளவு அறிக்கைகள் மூன்று பத்திகளுடன் தயாரிக்கப்படுகின்றன. பொது அளவு அறிக்கைகள் தயாரிக்க பின்வரும் படிநிலைகள் பின்பற்றப்படுகின்றன.
1) பத்தி 1: வருமான அறிக்கை அல்லது இருப்புநிலைக் குறிப்பில் உள்ள இனங்களின் விவரங்கள் இப்பத்தியில் எழுதப்படுகின்றன.
2) பத்தி 2: தொகையினைப் பதிவு செய்யவும்.
3) பத்தி 3: பொதுவான அடிப்படையாக 100 என்பதை எடுத்துக் கொள்ளவும். எடுத்துக்காட்டாக விற்பனை மூலம் பெற்ற வருவாய் என்பது வருமான அறிக்கைக்கு அடிப்படையாகவும், இருப்புநிலைக் குறிப்பின் மொத்தத் தொகை, இருப்புநிலைக் குறிப்பிற்கு அடிப்படையாகவும் எடுத்துக்கொள்ளப்படலாம். பத்தி 2-ல் உள்ள விவரங்களுக்கு பொதுவான அடிப்படையை கொண்டு சதவீதம் கணக்கீடு செய்து 3-ஆம் பத்தியில் பதிவு செய்யவும்.
13.
1) விலை நிலை மாற்றங்களை பொருட்படுத்துவதில்லை:
விலை நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் நிதிநிலை அறிக்கைகள் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. எனவே, அவை நடப்பு நிலைமையை வெளிப்படுத்தாமல் போகலாம்.
2) நிலைத்தன்மை குறைவு:
பல்வேறு நிறுவனங்கள், பல்வேறு கணக்கியல் முறைகளை பின்பற்றுகின்றன. எனவே இரண்டு தொழிலமைப்புகளை ஒப்பீடு செய்வது கடினமாகும்.
3) தனிப்பட்ட முடிவுகளினால் பாதிக்கப்படுகிறது:
நிதிநிலை அறிக்கைகள் தயாரிப்பு என்பது தனிநபரின் முடிவுக்குட்பட்டது. எனவே, இவை ஒருதலைப்பட்சமானதாக இருக்கலாம்.
14.
1) கடந்த கால விவரங்களின் பதிவேடு:
நிதிநிலை அறிக்கைகள் கடந்த கால விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன.எனவே அவை நடப்பு நிலைமையை வெளிப்படுத்தாமல் போகலாம்.
2) இடைக்கால அறிக்கைகளை மட்டுமே தருகிறது:
நிதிநிலை அறிக்கைகள் ஒவ்வொரு கணக்காண்டின் இறுதியில் தயாரிக்கப்படுகின்றன ஆனால், வணிகத்தின் உண்மையான நிலவரத்தை, நிறுவனத்தின் கலைப்பின் போது மட்டுமே அறிய இயலும். எனவே, நிதிநிலை அறிக்கைகள் நிறுவனத்தின் துல்லியமான நிலையினை வெளிக்காட்டாது.
15.
| விவரம் | ரூ.இலட்சங்களில் | போக்கு சதவீதங்கள் | ||||
|---|---|---|---|---|---|---|
| 2015-16 | 2016-17 | 2017-18 | 2015-16 | 2016-17 | 2017-18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 100 | 120 | 160 | 100 | 120 | 160 |
| கூட்டுக: இதர வருமானம் | 20 | 24 | 20 | 100 | 120 | 100 |
| மொத்த வருமானங்கள் | 120 | 144 | 180 | 100 | 120 | 150 |
| கழிக்க: செலவுகள் | 20 | 14 | 40 | 100 | 70 | 200 |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம் | 100 | 130 | 140 | 100 | 130 | 140 |
| கழிக்க: வருமானவரி 30% | 30 | 39 | 42 | 100 | 130 | 140 |
| வரிக்கு பின்னர் உள்ள இலாபம் | 70 | 91 | 98 | 100 | 130 | 140 |
16.
| விவரம் | மணி நிறுமம் | கனி நிறுமம் | ||
|---|---|---|---|---|
| தொகை | விற்பனை மூலம் பெற்ற வருவாயில் சதவீதம் |
தொகை | விற்பனை மூலம் பெற்ற வருவாயில் சதவீதம் |
|
| ரூ. | ரூ. | |||
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 2,00,000 | 100 | 2,50,000 | 100 |
| கூட்டுக: இதர வருமானம் | 30,000 | 15 | 25,000 | 10 |
| மொத்த வருவாய் | 2,30,000 | 115 | 2,75,000 | 110 |
| கழிக்க: செலவுகள் | 1,10,000 | 55 | 1,25,000 | 50 |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம் | 1,20,000 | 60 | 1,50,000 | 60 |
17.
| விவரம் | 2015-16 | 2016-17 | தொகையின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
சதவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
|---|---|---|---|---|
| ரூ. | ரூ. | ரூ. | ||
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,00,000 | 5,00,000 | +1,00,000 | +25 |
| கூட்டுக: இதர வருமானங்கள் | 2,00,000 | 1,80,000 | –20,000 | –10 |
| வரிக்கு முன் இலாபம் | 2,00,000 | 3,20,000 | +1,20,000 | +60 |
| கழிக்க: வருமானவரி | 40,000 | 1,60,000 | +1,20,000 | +300 |
| வரிக்கு பின்னர் உள்ள இலாபம் | 1,60,000 | 1,60,000 | - | - |
குறிப்பு: வருமானவரி கணக்கீடு
2015-2016 2,00,000 x 20% = 40,000
2016-2017 3,20,000 x 50% = 1,60,000
18.
| விவரம் | 2015-16 | 2016-17 | தொகையின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
சதவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
|---|---|---|---|---|
| ரூ. | ரூ. | ரூ. | ||
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 3,00,000 | 3,60,000 | +60,000 | +20 |
| கூட்டுக: இதர வருமானங்கள் | 1,00,000 | 60,000 | –40,000 | –40 |
| மொத்த வருமானங்கள் | 4,00,000 | 4,20,000 | +20,000 | +5 |
| கழிக்க: செலவுகள் | 2,00,000 | 1,80,000 | –20,000 | –10 |
| வரிக்கு முன் இலாபம் | 2,00,000 | 2,40,000 | +40,000 | +20 |
| கழிக்க: வருமானவரி 30% | 60,000 | 72,000 | +12,000 | +20 |
| வரிக்கு பின்னர் உள்ள இலாபம் | 1,40,000 | 1,68,000 | +28,000 | +20 |
19.
| விவரம் | 2016-17 ரூ. |
2016-17 விற்பனை மூலம் பெற்ற வருவாயில் சதவீதம் |
2016-17 தொகை |
2016 விற்பனை மூலம் பெற்ற வருவாயில் சதவீதம் |
|---|---|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,00,000 | 100 | 6,00,000 | 100 |
| கூட்டுக: இதர வருமானங்கள் | 50,000 | 12.50 | 1,50,000 | 25 |
| மொத்த வருவாய் | 4,50,000 | 112.50 | 7,50,000 | 125 |
| கழிக்க: செலவுகள் | 5,00,000 | 125 | 3,00,000 | 50 |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம்/நட்டம் | -50,000 | -12.50 | 10,50,000 | 125 |
| கழிக்க: வருமான வரி (40%) | - | - | 4,20,000 | 70 |
| வரிக்கு பின்னர் உள்ள இலாபம் | -50,000 | -12.50 | 6,30,000 | 55 |
20.
| விவரம் | 2016-17 ரூ. |
2017-18 ரூ. |
தொகையின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
சதவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
|
|---|---|---|---|---|---|
| I | பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||||
| பங்குதாரர் நிதி | 4,00,000 | 4,00,000 | +40,000 | +10 | |
| நீண்டகாலப் பொறுப்புகள் | 1,50,000 | 1,65,000 | +15,000 | +10 | |
| நடப்புப் பொறுப்புகள் | 75,000 | 82,500 | +7,500 | +10 | |
| மொத்தம் | 6,25,000 | 6,87,500 | +62,500 | +10 | |
| II | சொத்துகள் | ||||
| நீண்டகாலச் சொத்துகள் | 5,00,000 | 6,00,000 | +1,00,000 | +20 | |
| நடப்புச் சொத்துகள் | 1,25,000 | 87,500 | +1,00,000 | +20 | |
| மொத்தம் | 6,25,000 | 6,87,500 | +62,500 | +10 |
21.
| விவரம் | ரூ.இலட்சங்களில் | போக்கு சதவீதங்கள் | ||||
|---|---|---|---|---|---|---|
| வருடம் 1 | வருடம் 2 | வருடம் 3 | வருடம் 1 | வருடம் 2 | வருடம் 3 | |
| I.பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||||||
| பங்குதாரர் நிதி | 250 | 275 | 300 | 100 | 110 | 120 |
| நீண்ட காலப் பொறுப்புகள் | 100 | 125 | 100 | 100 | 125 | 100 |
| நடப்புப் பொறுப்புகள் | 50 | 40 | 80 | 100 | 80 | 160 |
| மொத்தம் | 400 | 440 | 480 | 100 | 110 | 120 |
| II. சொத்துகள் | ||||||
| நிலைச் சொத்துகள் | 300 | 360 | 390 | 100 | 120 | 130 |
| நடப்புச் சொத்துகள் | 100 | 80 | 90 | 100 | 80 | 90 |
| மொத்தம் | 400 | 440 | 480 | 100 | 110 | 120 |
22.
| விவரம் | 2017, மார்ச் 31 தொகை |
2017, மார்ச் 31 மொத்த சொத்துகளில் சதவீதம் |
2018, மார்ச் தொகை |
2018, மார்ச் 31 |
|---|---|---|---|---|
| ரூ. | ரூ. | |||
| I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||||
| 1. பங்குதாரர் நிதி | ||||
| அ) பங்கு முதல் | 5,00,000 | 25 | 6,00,000 | 50 |
| ஆ) காப்பும் மிகுதியும் | 4,00,000 | 20 | 3,60,000 | 30 |
| 2. நீண்ட காலப் பொறுப்புகள் | ||||
| நீண்ட காலக் கடன்கள் | 8,00,000 | 40 | 2,40,000 | 20 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | ||||
| கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 3,00,000 | 15 | - | - |
| மொத்தம் | 20,00,000 | 100 | 12,00,000 | 100 |
| II. சொத்துகள் | ||||
| 1. நீண்ட காலச் சொத்துகள் | ||||
| அ) நிலைச் சொத்துகள் | 10,00,000 | 50 | 6,00,000 | 50 |
| ஆ) நீண்டகால முதலீடுகள் | 5,00,000 | 25 | 2,40,000 | 20 |
| 2. நடப்புச் சொத்துகள் | ||||
| சரக்கிருப்பு | 3,00,000 | 15 | 1,20,000 | 10 |
| ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் | 2,00,000 | 10 | 2,40,000 | 20 |
| மொத்தம் | 20,00,000 | 100 | 12,00,000 | 100 |
23.
24.
| விவரம் | 2015-16 | 2016-17 | தொகையின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
சதவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
|---|---|---|---|---|
| ரூ. | ரூ. | ரூ. | ||
| I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||||
| பங்குதாரர் நிதி | 1,00,000 | 2,60,000 | +1,60,000 | +160 |
| நீண்ட காலப் பொறுப்புகள் | 50,000 | 60,000 | +10,000 | +20 |
| நடப்புப் பொறுப்புகள் | 25,000 | 30,000 | +5,000 | +20 |
| மொத்தம் | 1,75,000 | 3,50,000 | +1,75,000 | +100 |
| II. சொத்துகள் | ||||
| நிலைச் சொத்துகள் | 1,00,000 | 2,00,000 | +1,00,000 | +100 |
| நடப்புச் சொத்துகள் | 75,000 | 1,50,000 | +75,000 | +100 |
| மொத்தம் | 1,75,000 | 3,50,000 | +1,75,000 | +100 |
25.
(b)
பகுப்பாய்வு
26.
(c)
இருப்புநிலைக் குறிப்பு
27.
(b)
மூன்று
28.
(d)
ஐந்து
29.
(b)
பொது அளவு அறிக்கைகள்
30.
(b)
கடனீந்தோர்
31.
(d)
வருமான அறிக்கை
32.
(c)
25
33.
(c)
நிதி நிலை அறிக்கை பகுப்பாய்விற்கு நிபுணத்துவம் தேவையில்லை
34.
(d)
நிர்ணயிக்கப்பட்ட அடக்கவிலையியல்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards