12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
விரைவு விகிதம் என்றால் என்ன?
2.
கணக்கியல் விகிதங்கள் என்றால் என்ன?
3.
கணக்கியல் தகவல் அமைப்பு என்றால் என்ன?
4.
ஏதேனும் ஐந்து கணக்கியல் அறிக்கைகள் கூறுக.
5.
6.
தானியங்கும் கணக்கியல் முறை என்றால் என்ன?
7.
பின்வரும் தகவல்களிலிருந்து மொத்த இலாபம் கணக்கிடவும்:
விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.1,00,000, விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.80,000 மற்றும் கொள்முதல் ரூ.62,500.
8.
கீழ்வரும் தகவல்களிலிருந்து முதல் உந்து திறன் விகிதத்தைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்குமுதல் | |
| நேர்மைப் பங்குமுதல் | 2,00,000 |
| 6% முன்னுரிமைப் பங்குமுதல் | 1,00,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | |
| பொதுக் காப்பு | 1,25,000 |
| மிகுதி | 75,000 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகாலக் கடன்கள் (8% கடனீட்டுப் பத்திரங்கள்) | 2,00,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| கணக்குகள் மூலம் செலுத்த வேண்யவை | 1,50,000 |
| வரி ஒதுக்கு | 50,000 |
| மொத்தம் | 9,00,000 |
9.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆனந்த் கட்டுமான நிறுமத்தின் தகவல்களிலிருந்து, விரைவு விகிதத்தைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ |
|---|---|
| மொத்த நடப்புப் பொறுப்புகள் | 1,00,000 |
| மொத்த நடப்புச் சொத்துகள் | 2,50,000 |
| சரக்கிருப்பு | 50,000 |
| முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் | 15,000 |
10.
பின்வரும் தகவல்களிலிருந்து நடப்பு விகிதத்தைக் கண்டறியவும்.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ |
|---|---|---|---|
| குறுகிய கால முதலீடுகள் | 80,000 | வணிகக் கடனீந்தோர் | 1,60,000 |
| சரக்கிருப்பு | 1,60,000 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 1,00,000 |
| கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 4,00,000 | கொடுபட வேண்டிய செலவுகள் | 1,40,000 |
| ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் | 1,20,000 | முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் | 40,000 |
11.
விகித பகுப்பாய்வின் குறைபாடுகளைத் தரவும்
12.
இயக்க இலாபம் எவ்வாறு கண்டறியப்படுகிறது?
13.
சரக்கிருப்பு மாற்று காலம் என்றால் என்ன? இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
14.
விகித பகுப்பாய்வின் நோக்கங்களை விளக்கவும்.
15.
16.
Tally.ERP 9-ல் முன்பே வரையறுக்கப்பட்ட பேரேடுகள் யாவை?
17.
முகேஷ் நிறுமத்தின் பின்வரும் இலாபம் நட்ட அறிக்கையிலிருந்து
(I) மொத்த இலாப விகிதம்
(ii) நிகர இலாப விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | தொகை ரூ. |
|---|---|
| I. விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 5,00,000 |
| II. இதர வருமானம் | |
| முதலீடு மூலம் வருவாய் | 40,000 |
| III. மொத்த வருவாய் (I + II) | 5,40,000 |
| IV. செலவுகள் | |
| கொள்முதல் செய்த சரக்குகள் | 1,80,000 |
| சரக்கிருப்பு மாற்றம் | 20,000 |
| பணியாளர் நலன்களுக்கான செலவுகள் | 30,000 |
| இதர செலவுகள் | 1,10,000 |
| வரி ஒதுக்கு | 50,000 |
| மொத்த செலவுகள் | 3,90,000 |
| V. அவ்வாண்டிற்கான இலாபம் | 1,50,000 |
18.
மரியா நிறுமத்தின் 2018 மார்ச் 31 ஆம் நாளைய இலாப நட்ட அறிக்கை பின்வருமாறு. இயக்க அடக்க விலை விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | குறிப்பு எண் | தொகை ரூ. |
|---|---|---|
| I. விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 8,00,000 | |
| II. இதர வருமானம் | 20,000 | |
| III. மொத்த வருவாய் (I +II) | 8,20,000 | |
| IV. செலவுகள்: | ||
| கொள்முதல் செய்த சரக்குகள் | 4,50,000 | |
| சரக்கிருப்பு மாற்றம் | (-)40,000 | |
| பணியாளர் நலன்களுக்கான செலவுகள் | 1 | 22,000 |
| இதர செலவுகள் | 2 | 68,000 |
| மொத்த செலவுகள் | 5,00,000 | |
| V. வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III-IV) | 3,20,000 |
| விவரம் | தொகை ரூ. |
|---|---|
| 1. பணியாளர் நலன்களுக்கான செலவுகள் | |
| கூலி (நேரடி) | 10,000 |
| சம்பளம் | 12,000 |
| மொத்தம் | 22,000 |
| 2. இதர செலவுகள் | |
| நிர்வாகச் செலவுகள் | 20,000 |
| விற்பனை மற்றும் பகிர்வுச் செலவுகள் | 28,000 |
| நிலைச்சொத்து விற்றதில் ஏற்பட்ட நட்டம் | 20,000 |
| மொத்தம் | 68,000 |
19.
சானியா நிறுமத்தின் கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து சரக்கிருப்பு சுழற்சி விகிதம் மற்றும் சரக்கிருப்பு மாற்று காலத்தை (மாதங்களில்) கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 1,90,000 |
| அவ்வாண்டில் தொடக்கச் சரக்கிருப்பு | 40,000 |
| அவ்வாண்டில் இறுதிச் சரக்கிருப்பு | 20,000 |
| அவ்வாண்டில் மேற்கொண்ட கொள்முதல் | 90,000 |
| உள்தூக்குக்கூலி | 10,000 |
20.
மகேஷ் நிறுமத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| விவரம் | ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| நேர்மைப் பங்குமுதல் | 2,00,000 |
| 2. நீண்டகால பொறுப்புகள் | |
| நீண்டகாலக் கடன்கள் | 50,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) குறுகிய காலக் கடன்கள் | 17,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 25,000 |
| (இ) இதர நடப்புப் பொறுப்புகள் | |
| கொடுபட வேண்டிய செலவுகள் | 3,000 |
| (ஈ) குறுகியகால ஒதுக்குகள் | 5,000 |
| மொத்தம் | 3,00,000 |
| சொத்துகள் | |
| 1. நீண்டகால சொத்துகள் | |
| (அ) நிலைச் சொத்துகள் | |
| புலனாகும் சொத்துகள் | 1,50,000 |
| 2. நடப்புச் சொத்துகள் | |
| (அ) சரக்கிருப்பு | 45,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகள் | 70,000 |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் | 30,000 |
| (ஈ) இதர நடப்புச் சொத்துகள் | |
| முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் | 5,000 |
| மொத்தம் | 3,00,000 |
(i) நடப்பு விகிதம்
(ii) நீர்மை விகிதம் கணக்கிடவும்.
21.
ரொவினா நிறுமத்தின் பின்வரும் வியாபார நடவடிக்கைகளிலிருந்து
(i) மொத்த இலாப விகிதம்
(ii) நிகர இலாப விகிதம்
(iii) இயக்க அடக்கவிலை விகிதம்
(iv) இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| I. விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் | 4,00,000 |
| II. இதர வருமானம்: | |
| முதலீடுகளிலிருந்து பெற்ற வருமானம் | 4,000 |
| III. மொத்த வருவாய் (I+II) | 4,04,000 |
| IV. செலவுகள்: | |
| கொள்முதல் செய்த சரக்குகள் | 2,10,000 |
| சரக்கிருப்பு மாற்றம் | 30,000 |
| நிதிசார் செலவுகள் | 24,000 |
| இதர செலவுகள் (நிர்வாக மற்றும் விற்பனை) | 60,000 |
| மொத்த செலவுகள் | 3,24,000 |
| V. வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III - IV) | 80,000 |
22.
பின்வரும் நிலைகளில் இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.
நிலை 1: விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.8,00,000, இயக்க இலாபம் ரூ.2,00,000.
நிலை 2: விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.20,00,000, இயக்க அடக்கவிலை ரூ.14,00,000.
நிலை 3: விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.10,00,000, மொத்த இலாபம் விற்பனையிலிருந்து பெற்ற வருவாயில் 25%, இயக்கச் செலவுகள் ரூ.1,00,000
23.
அருணா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து
(i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
(ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம்
(iii) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகளின் சுழற்சி விகிதம் மற்றும்
(iv) நிலைச்சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | 2018, மார்ச் 31 ரூ. |
2019, மார்ச் 31 ரூ. |
|---|---|---|
| சரக்கிருப்பு | 3,60,000 | 4,40,000 |
| கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 7,40,000 | 6,60,000 |
| கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 1,90,000 | 2,30,000 |
| நிலைச் சொத்துகள் | 6,00,000 | 8,00,000 |
கூடுதல் தகவல்கள்:
(i) அவ்வாண்டில் விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.35,00,000
(ii) அவ்வாண்டில் கொள்முதல் ரூ.21,00,000
(iii) விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.16,00,000.
விற்பனை மற்றும் கொள்முதலை கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் எனக் கொள்ளவும்.
24.
ஜேம்ஸ் நிறுமத்தின் பின்வரும் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பிலிருந்து கீழ்க்காணும் விகிதங்களைக் கணக்கிடவும்.
(i) புற அக பொறுப்புகள் விகிதம்
(ii) உரிமையாளர் விகிதம்
(iii) முதல் உந்துதிறன் விகிதம்
| விவரம் | தொகை ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்கு முதல் | |
| நேர்மைப் பங்குமுதல் | 2,50,000 |
| 6% முன்னுரிமைப் பங்கு முதல் | 2,00,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 1,50,000 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகாலக் கடன்கள் (8% கடனீட்டுப் பத்திரங்கள் ) | 3,00,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகியகாலக் கடன்கள் | 2,00,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 1,00,000 |
| மொத்தம் | 12,00,000 |
| II. சொத்துகள் | |
| 1. நீண்டகாலச் சொத்துகள் | |
| நிலைச் சொத்துகள் | 8,00,000 |
| 2. நடப்புச் சொத்துகள் | |
| (அ) சரக்கிருப்பு | 1,20,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 2,65,000 |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் | 10,000 |
| (ஈ) இதர நடப்புச் சொத்துகள் | |
| முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் | 5,000 |
| மொத்தம் | 12,00,000 |
25.
கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடுகளில் ஏதேனும் ஐந்தினை விளக்கவும்.
26.
கணக்கியல் சான்றாவணம் குறித்து சிறு குறிப்பு எழுதவும்.
27.
நவீன் நிறுமத்தின் பின்வரும் வணிக நடவடிக்கைகளிலிருந்து
(i) மொத்த இலாப விகிதம்
(ii) நிகர இலாப விகிதம்
(iii) இயக்க அடக்கவிலை விகிதம்
(iv) இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| I. விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 20,000 |
| II. இதர வருமானம் | |
| முதலீடு மூலம் வருவாய் | 200 |
| III. மொத்த வருவாய் (I+II) | 20,200 |
| IV. செலவுகள்: | |
| கொள்முதல் செய்த சரக்குகள் | 17,000 |
| சரக்கிருப்பு மாற்றம் | (–)1,000 |
| நிதிசார் செலவுகள் | 300 |
| இதர செலவுகள் (நிர்வாகம் மற்றும் விற்பனை) | 2,400 |
| மொத்த செலவுகள் | 18,700 |
| V. அவ்வாண்டிற்கான வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III - IV) | 1,500 |
28.
கீழ்க்கண்ட நிலைகளில் இயக்க இலாப விகிதம் காணவும்.
நிலை 1: விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.10,00,000, இயக்க இலாபம் ரூ.1,50,000.
நிலை 2: விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.15,00,000, இயக்க அடக்கம் ரூ.12,00,000.
நிலை 3: விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.20,00,000, மொத்த இலாபம் விற்பனை மூலம் பெற்ற வருவாயில் 30%, இயக்கச் செலவுகள் ரூ.4,00,000
29.
டெல்ஃபி நிறுமத்திடமிருந்து பெறப்பட்ட பின்வரும் தகவல்களிலிருந்து
(i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
(ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம்
(iii) கணக்குகள் மூலம் செலுத்தப்பட வேண்டியவைகளின் சுழற்சி மற்றும்
(iv) நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | 2018, மார்ச் 31 ரூ. |
2019, மார்ச் 31 ரூ. |
|---|---|---|
| சரக்கிருப்பு | 1,40,000 | 1,00,000 |
| கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 80,000 | 60,000 |
| கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 40,000 | 50,000 |
| நிலைச் சொத்துகள் | 5,50,000 | 5,00,000 |
கூடுதல் தகவல்கள்:
(i) அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.10,50,000
(ii) அவ்வாண்டின் கொள்முதல் ரூ.4,50,000
(iii) விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.6,00,000.
விற்பனை மற்றும் கொள்முதலை கடன் நடவடிக்கைகளாகக் கருதவும்.
30.
அருணன் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து
(i) புற அக பொறுப்புகள் விகிதம்
(ii) உரிமையாளர் விகிதம் மற்றும்
(iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்
| விவரம் | ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| அ) பங்கு முதல் | |
| நேர்மைப் பங்குமுதல் | 1,50,000 |
| 8% முன்னுரிமைப் பங்குமுதல் | 2,00,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 1,50,000 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகாலக் கடன்கள் (9% கடனீட்டுப் பத்திரங்கள்) | 4,00,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள் | 25,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 75,000 |
| மொத்தம் | 10,00,000 |
| II. சொத்துகள் | |
| 1. நீண்டகாலச் சொத்துகள் | |
| நிலைச் சொத்துகள் | 7,50,000 |
| 2. நடப்புச் சொத்துகள் | |
| (அ) சரக்கிருப்பு | 1,20,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 1,00,000 |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் | 27,500 |
| (ஈ) இதர நடப்புச் சொத்துகள் செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது | 2,500 |
| மொத்தம் | 10,00,000 |
31.
விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை ரூ.3,00,000; அவ்வாண்டின் தொடக்கச் சரக்கிருப்பு ரூ.60,000; அவ்வாண்டின் இறுதிச் சரக்கிருப்பு ரூ.40,000 எனில் சரக்கிருப்பு சுழற்சி விகிதம்______.
2 மடங்கு
3 மடங்கு
6 மடங்கு
8 மடங்கு
32.
நடப்புப் பொறுப்பு ரூ.40,000; நடப்புச் சொத்து ரூ.1,00,000; சரக்கிருப்பு ரூ.20,000 எனில் விரைவு விகிதம்______.
1:1
2.5:1
2:1
1:2
33.
பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாதது எது?
நீர்மை விகிதம் – விகிதாச்சாரம்
மொத்த இலாப விகிதம் – சதவீதம்
நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் – சதவீதம்
புற அக பொறுப்புகள் விகிதம் – விகிதாச்சாரம்
34.
பங்குதாரர் நிதிக்கும் மொத்த சொத்துகளுக்கும் உள்ள விகிதாச்சாரம் ______.
உரிமையாளர் விகிதம்
முதல் உந்துதிறன் விகிதம்
புற அக பொறுப்பு விகிதம்
நடப்பு விகிதம்
35.
ஒரு நிறுமத்தின் நீர்மைத்தன்மையை சோதிக்க கீழ்க்கண்ட எந்த விகிதங்கள் பயன்படுகிறது?
(i) விரைவு விகிதம்
(ii) நிகர இலாப விகிதம்
(iii) புற அக பொறுப்புகள் விகிதம்
(iv) நடப்பு விகிதம்
(i) மற்றும் (ii)
(i) மற்றும் (iv)
(ii) மற்றும் (iii)
(ii) மற்றும் (iv)
36.
37.
புற அகப் பொறுப்புகள் அளவிடுவது ______.
குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்
நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்
இலாபம் ஈட்டும் திறன்
செயல்திறன்
38.
சரக்கிருப்பு மற்றும் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் நீங்கலாக உள்ள நடப்புச் சொத்துகள் அழைக்கப்படுவது______.
காப்புகள்
புலனாகும் சொத்துகள்
நிதி
விரைவு சொத்துகள்
39.
நடப்பு விகிதம் காட்டுவது ______.
குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்
மேலாண்மை திறன்
இலாபம் ஈட்டும் திறன்
நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்
40.
ஒரு இனம் மற்றொரு இனத்தோடு பெற்றிருக்கும் தொடர்பினை கணிதவியல் முறையில் கூறுவது______.
முடிவு
விகிதம்
மாதிரி
தீர்மானம்
41.
Tally-யின் நுழை வாயிலிலிருந்து இருப்பாய்வை பார்வையிட எந்த விருப்பத்தேர்வு பயன்படும்?
Gateway of Tally -> Reports -> Trial Balance
Gateway of Tally -> Trial Balance
Gateway of Tally -> Reports -> Display -> Trial Balance
இவைகளில் ஏதுமில்லை
42.
அறைகலன் கடனுக்கு வாங்கியதை Tally-இல் எந்த வகை சான்றாவணத்தில் பதியப்படும்?
பெறுதல்கள் சான்றாவணம்
உரிய குறிப்பேடு சான்றாவணம்
கொள்முதல் சான்றாவணம்
பெறுதல்கள் சான்றாவணம்
43.
அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ. 25,000 வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது. எந்த வகை சான்றாவணத்தில் இந்த நடவடிக்கை பதியப்படும்?
எதிர்பதிவு சான்றாவணம்
பெறுதல்கள் சான்றாவணம்
செலுத்தல்கள் சான்றாவணம்
விற்பனை சான்றாவணம்
44.
சம்பளக் கணக்கு பின்வரும் எந்த தலைப்பின் கீழ் வரும்?
நேரடி வருமானங்கள்
நேரடி செலவினங்கள்
மறைமுக வருமானங்கள்
மறைமுக செலவினங்கள்
45.
Tally-யில் எது முன்கூட்டியே வரையறுக்கப்படாத குழு?
அனாமத்து க/கு
கொடுபட வேண்டிய செலவு க/கு
விற்பனை க/கு
முதலீடுகள் க/கு
46.
47.
Tally-யில் முன்பே வரையறுக்கப்பட்ட பேரேடு(கள்) ?
(i) ரொக்கம்
(ii) இலாப நட்டக் க/கு
(iii) முதல் க/கு
(i) மட்டும்
(ii) மட்டும்
(i) மற்றும் (ii) இவை இரண்டும்
(ii) மற்றும் (iii) இவை இரண்டும்
48.
குழுக்கள், பேரேடுகள் மற்றும் சான்றாவண வகைகளை Tall-யின் எந்த துணைப்பட்டியல் காண்பிக்கும்?
சரக்கிருப்பு சான்றாவணங்கள்
கணக்கியல் சான்றாவணங்கள்
நிறுவன தகவல்
கணக்கு தகவல்
49.
F11 எனும் பயன்பாடு ______.
நிறுவனப் பண்புகூறுகள்
கணக்கியல் சான்றாவணங்கள்
நிறுவன கட்டமைப்பு
இவைகளில் எதுவும் இல்லை
50.
பயனரின் தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் கணக்கியல் அறிக்கையானது______.
வழக்கமான கணக்கியல் அறிக்கை
குறிப்பிட்ட நோக்க அறிக்கை
இருப்பாய்வு
இருப்புநிலைக் குறிப்பு
1.
(i) விரைவு விகிதம் நீர்மைச் சொத்துக்களுக்கும், நடப்புப் பொறுப்புகளுக்குமுள்ள விகிதாச்சாரமாகும்.
(ii) இது ஒரு வணிக நிறுவனம் தன்னுடைய நடப்புப் பொறுப்புகளை எப்போது செலுத்த வேண்டுமோ அப்போது அதை நீர்மைச் சொத்துகளிலிருந்து எதிர்கொள்ளும் நிலையில் உள்ளதா என்பதை குறிக்கிறது.

2.
(i) விகிதம் என்பது இரண்டு தொடர்புடைய அல்லது ஒன்றை ஒன்று சார்ந்த இனங்களுக்கு இடையே உள்ள தொடர்பைக் கணிதவியல் அடிப்படையில் வெளிப்படுத்துவதாகும்.
(ii) இது, இரு இனங்களுக்கு இடையே உள்ள தொடர்பினை எண்ணியல் அல்லது எண்ணிக்கையில் குறிக்கும் இது ஒரு இனத்தை அது தொடர்பான மற்றொரு இனத்தால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
(iii) விகிதங்கள் கணக்கியல் தகவல்களின் அடிப்படையில் கணக்கிடப்படும்போது அவை கணக்கியல் விகிதங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
3.
(i) கணக்கியல் தகவல் அமைப்பு என்பது மேலாண்மையின் அனைத்து நிலைகளிலும் முடிவெடுப்பதற்கு தேவையான தகவலை அளிக்கும் ஒரு முறையாகும்.
(ii) கணக்கியல் தகவல் அமைப்பு, நிதியியல் தரவுகளை சேகரித்து அதை செயலாக்கப் பெறச் செய்து பல்வேறு பயனர்களுக்கு தகவலாக அளிக்கிறது.
4.
(i) நாளோடு/குறிப்பேடு
(ii) பேரேடு
(iii) இருப்பாய்வு
(iv) இலாப அறிக்கை
(v) இருப்பு நிலைக்குறிப்பு
5.
6.
(i) தானியங்கும் கணக்கியல் என்பது கணக்கியல் மென்பொருள் உதவியுடன் கணக்கேடுகளை உடனடியாக பராமரிக்கும் அணுகுமுறையாகும்.
(ii) கையால் எழுதும் கணக்கியல் முறையில் வெவ்வேறு கணக்கேடுகளில் பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.
7.
மொத்த இலாப விகிதம் = x 100 = \(\frac {20,000}{1,00,000}\) × 100 = 20%
மொத்த இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் – விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை
= 1,00,000 – 80,000 = ரூ.20,000
8.
முதல் உந்துதிறன் விகிதம் =
= \(\frac {3,00,000}{4,00,000}\) = 0.75:1
நிலையான வட்டி மற்றும் நிலையான பங்காதாயம் ஈட்டுகின்ற நிதிகள் = 6% முன்னுரிமைப் பங்குமுதல் + 8% கடனீட்டுப் பத்திரங்கள்
= 1,00,000 + 2,00,000 = ரூ.3,00,000
நேர்மைப் பங்குதாரர் நிதி = = நேர்மைப் பங்குமுதல் + பொதுக் காப்பு + மிகுதி
= 2,00,000 + 1,25,000 + 75,000 = ரூ.4,00,000
9.
விரைவு விகிதம் = = \(\frac {1,85,000}{1,00,000}\) = 1.85:1
நீர்மைச் சொத்துகள் = நடப்புச் சொத்துகள் – சரக்கிருப்பு – முன்கூட்டிச் செலுத்திய செலவுகள்
= 2,50,000 – 50,000 – 15,000
= ரூ.1,85,000
10.
நடப்பு விகிதம் = = \(\frac {8,00,000}{4,00,000}\) = 2:1
நடப்புச் சொத்துகள் = குறுகிய கால முதலீடுகள் + சரக்கிருப்பு + கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் + ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் + முன்கூட்டிச் செலுத்திய செலவுகள்
= 80,000 + 1,60,000 + 4,00,000 + 1,20,000 + 40,000 = ரூ. 8,00,000
நடப்புப் பொறுப்புகள் = வணிக கடனீந்தோர் + செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு + கொடுபட வேண்டிய செலவுகள்
= 1,60,000 + 1,00,000 + 1,40,000 = ரூ.4,00,000
11.
(i) விகிதப் பகுப்பாய்வின் குறைபாடுகள் பின்வருமாறு :
(i) விகிதங்கள் வழிமுறைகளை மட்டும் தருகின்றன.
விகிதங்களே முடிவல்ல. ஆனால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தினை அடைவதற்கான வழிமுறைகளை மட்டும் அவை தருகின்றன, நிர்வாகத்தினர் அல்லது வல்லுநர்கள் விகிதங்கள் உதவியுடன் ஒரே தன்மையுடைய இனங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
(ii) நிதித்தகவல்களின் துல்லியத்தன்மை :
விகிதங்களின் துல்லியத்தன்மை நிதிநிலை அறிக்கையிலிருந்து எடுக்கப்படும் துல்லியத்தன்மையைப் பொறுத்து அமைகிறது. நிதிநிலை அறிக்கைகள் துல்லியமற்றதாக அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் விகிதங்களும் துல்லியமற்றதாகி விடுகின்றன.
(iii) நிதிநிலை அறிக்கைகள் தயாரிப்பதில் நிலைத்தன்மை :
நிறுவனங்கள் ஒருமித்த கணக்கியல் நடைமுறைகளை நிலையாகப் பின்பற்றும் போது நிறுவனங்கள் ஒருமித்த கணக்கியல் நடைமுறைகளை நிலையாகப் பின்பற்றும் போது பகுப்பாய்வின் உதவியுடன் நிறுவனத்திற்குள் ஒப்பீடு செய்வது அர்த்தமுடையதாகிறது.
(iv) விலை நிலையில் ஏற்படும் மாற்றம் :
நிதிநிலை அறிக்கைகளில் தரப்பட்டுள்ள புராதன தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதால் விலை நிலையில் ஏற்படும் மாற்றம் தற்போது பிரதிபலிப்பதில்லை.
12.
இயக்க இலாப விகிதம், இயக்க இலாபத்திற்கும்,விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கும் உள்ள விற்பனை தருகிறது, இயக்க இலாப விகிதம் வணிக நிறுவனத்தின் செயல்திறனைக் காட்டுகிறது. இது
கீழ்கண்டவாறு கணக்கிடப்படுகிறது

இதற்கு மாற்றாக, இயக்க இலாப விகிதம் கீழ்கண்டவாறு கணக்கிடப்படலாம்.
இயக்க இலாப விகிதம் = 100 - இயக்க அடக்க விலை விகிதம்
இயக்க இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் - இயக்க அடக்க விலை
அதிக இயக்க இலாப விகிதம் அதிக இலாபத்தைக் காட்டுகிறது. அதிக இயக்க இலாப விகிதம், வணிகத்தில் இயக்க சாரா செலவுகளைச் செலுத்துவதற்கான தொகை அதிகமாக உள்ளதைக் காட்டுகிறது.
13.
சரக்கிருப்பு மாற்று காலம் என்பது சரக்கிருப்பை விற்பனை செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்படும் காலம் ஆகும். குறுகிய சரக்கிருப்பு மாற்று காலம், சரக்கிருப்பு மேலாண்மையில் அதிக செயல்திறனை குறிப்பிடுகிறது.
சரக்கிருப்பு மாற்று காலம் (நாட்களில்)

14.
விகிதப் பகுப்பாய்வின் நோக்கங்கள் பின்வருமாறு :
(i) கணக்கியல் தொகைகளை சுருக்கமாகக் கூற
(ii) நிதிநிலை அறிக்கைகள் பகுப்பாய்வு செய்வதற்கு வழிவகை செய்ய
(iii) தொழில் நிறுவனத்தின் இயக்க செயல் திறனை பகுப்பாய்வு செய்ய
(iv) திட்டமிடுதல் மற்றும் முன்கணித்தலுக்கு உதவ
(v) நிறுவனத்திற்குள்ளேயும் மற்றும் நிறுவனங்களுக்கிடையேயும் செயல்பாடுகளை ஒப்பிட்டு பார்க்க.
15.
16.
(i) Tally-ல் நடவடிக்கைகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கைகளை தொடர்புடைய பேரேட்டு கணக்குடன் அடையாளம் காண வேண்டும்.
(ii) முன்பே வரையறுக்கப்பட்ட ரொக்கம் மற்றும் இலாப நட்டக் க/கு ஆகிய இரண்டு பேரேடுகளை Tally கொண்டுள்ளது.மற்ற பேரேடுகளை அவற்றின் தேவைக்கேற்ப பயனர் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
(iii) பேரேடு உருவாக்குவதற்கு:
Gateway of Tally > Masters > Accounts Info > Ledgers > Single Ledger > Create.
17.
(i) மொத்த இலாப விகிதம் = x 100 = \(\frac {3,00,000}{5,00,000}\) x 100 = 60%
மொத்த இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் – விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை
= 5,00,000 – 2,00,000 = ரூ.3,00,000
விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை = கொள்முதல் செய்த சரக்குகள் + சரக்கிருப்பு மாற்றம்
= 1,80,000 + 20,000 = ரூ.2,00,000
(ii) நிகர இலாப விகிதம் = x 100 = \(\frac {1,50,000}{5,00,000}\) x 100 = 30%
18.
இயக்க அடக்க விலை விகிதம் = x 100
= \(\frac {4,20,000+60,000}{8,00,000}\times \frac {4,80,000}{8,00,000}\)x 100 = 60%
விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை = சரக்கிருப்பின் கொள்முதல் + சரக்கிருப்பு மாற்றம் + நேரடிச் செலவுகள் (கூலி)
= 4,50,000 + (40,000) + 10,000 = ரூ.4,20,000
இயக்கச் செலவுகள் = நிர்வாகச் செலவுகள் + விற்பனை மற்றும் பகிர்வுச் செலவுகள் + பணியாளர்கள் நலன்களுக்கானச் செலவுகள் (சம்பளம்)
= 20,000 + 28,000 + 12,000 = ரூ.60,000
இயக்க அடக்க விலை = விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை + இயக்கச் செலவுகள்
= 4,20,000 + 60,000 = ரூ.4,80,000
நிலைச்சொத்துகள் விற்பனை மீதான நட்டம் ஒரு இயக்கம் சாரா செலவு. எனவே, இது தவிர்க்கப்பட வேண்டும்.
19.
சரக்கிருப்பு சுழற்சி விகிதம் = = \(\frac {1,20,000}{30,000}\) = 4 மடங்கு
விற்பனை மூலம் பெற்ற வருவாயின் அடக்கவிலை
தொடக்கச் சரக்கிருப்பு + நிகரக் கொள்முதல் + நேரடிச் செலவுகள் (உள்தூக்குக் கூலி) – இறுதிச் சரக்கிருப்பு
= 40,000 + 90,000 + 10,000 – 20,000
= ரூ.1,20,000
சராசரி சரக்கிருப்பு = = \(\frac {4,000+20,000}{2}\) = ரூ.30,000
மாற்று காலம்
சரக்கிருப்பு மாற்று காலம் (மாதங்களில்) = =\(\frac {12}{4}\)= 3 மாதங்கள்
20.
(i) நடப்பு விகிதம் = = \(\frac{1,50,000}{50,000}\) = 3.1
நடப்புச் சொத்துகள் = சரக்கிருப்பு + கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் + ரொக்க ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் + முன்கூட்டிச் செலுத்தியச் செலவுகள்
= 45,000 + 70,000 + 30,000 + 5,000 = ரூ.1,50,000
நடப்புப் பொறுப்புகள் = குறுகியகாலக் கடன்கள் + கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் + கொடுபட வேண்டிய செலவுகள் + குறுகிய கால ஒதுக்குகள்
= 17,000 + 25,000 + 3,000 + 5,000 = ரூ.50,000
(ii) விரைவு விகிதம் = =\(\frac {1,00,000}{50,000}\) = 2:1
நீர்மைச் சொத்துகள் = மொத்த நடப்புச் சொத்துகள் – சரக்கிருப்பு – முன்கூட்டிச் செலுத்திய செலவுகள்
= 1,50,000 – 45,000 – 5,000 = ரூ.1,00,000
21.
(i)

விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவில்லை
= கொள்முதல் செய்த சரக்குகள் + சரக்கிருப்பு மாற்றம் + நேரடிச் செலவுகள்
= 2,10,000+30,000+0=ரூ.2,40,000
மொத்த இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் - விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவில்லை
= 4,00,000-2,40,000=ரூ 1,60,000
மொத்த இலாப விகிதம் = \(\cfrac { 1,60,000 }{ 4,00,000 } \times 100\)
= 40%
(ii)

= \(\cfrac { 80,000 }{ 4,00,000 } \times 100\)
= 20%
(iii)

= \(\cfrac { 80,000 }{ 4,00,000 } \times 100\)
= 20%
(iii)

இயக்க அடக்க விலை = விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவில்லை + இயக்கச் செலவுகள்
இயக்கச் செலவுகள் = இதர செலவுகள் = ரூ.60,000
இயக்க அடக்க விலை = 24,000+60,000=ரூ.3,00,000
இயக்க அடக்கவில்லை விகிதம் = 2,40,000+66,000=ரூ.30,000
இயக்க அடக்க விலை விகிதம் = \(\cfrac { 3,00,000 }{ 4,00,000 } \times 100\)
= 75%
(iv)

இயக்க அடக்க விலை = விற்பனை மூலம் பெற்ற வருவாய் - இயக்க அடக்க விலை
= 4,00,000-3,00,00=ரூ.,100,000
\(\therefore \) இயக்க இலாப விகிதம் = \(\cfrac { 1,00,000 }{ 4,00,000 } \times 100\)
= 25%
22.
நிலை 1 :

= \(\cfrac { 2,00,000 }{ 8,00,000 } \times 100=25\%\)
நிலை 2:

இயக்க இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் - இயக்க அடக்கவிலை
= 20,00,000-14,00,000=ரூ.6,00,000
\(\therefore \) இயக்க இலாப விகிதம் = \(\cfrac { 6,00,000 }{ 20,00,000 } \times 100=30\%\)
நிலை 3:

மொத்த இலாபம் = 10,00,000 x 25%=ரூ.2,50,000
இயக்க இலாபம் = மொத்த இலாபம் - இயக்கச் செலவுகள்
\(\therefore \) இயக்க இலாப விகிதம் = \(\cfrac { 1,50,000 }{ 10,00,000 } \times 100=15\%\)
23.

விற்பனை மூலம் பெற்ற வருவாயின் அடக்க விலை = ரூ.16,00,000

= \(\cfrac { 3,60,000+4,40,000 }{ 2 } =\cfrac { 80,000 }{ 2 } \)
= ரூ 4,00,000
சரக்கிருப்பு சுழற்சி விகிதம் = \(\cfrac { 16,00,000 }{ 4,00,000 } =4\) மடங்கு
(ii)

கடன் விற்பனை மூலம் பெற்ற வேண்டியவைகளின் சராசரி = 35,00,000

= \(\cfrac { 7,40,000+6,60,000 }{ 2 } =\cfrac { 14,00,000 }{ 2 } \)
= ரூ.7,00,000
கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம் = \(\cfrac { 35.00.000 }{ 7.00.000 } =5\) மடங்கு

நிகர கடன் கொள்முதல் = ரூ.21,00,000

= \(\cfrac { 1,90,000+2,30,000 }{ 2 } =\cfrac { 4,20,000 }{ 2 } \) = 21,00,000
கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகளின் சராசரி \(=\cfrac { 21,00,000 }{ 2,10,000 } \) = 10 மடங்கு
(iv)

விற்பனை மூலம் பெற்ற வருவாய் = ரூ.35,00,000

= \(\cfrac { 6,00,000+8,00,000 }{ 2 } =\cfrac { 14,00,000 }{ 2 } \) = ரூ.7,00,000
\(\therefore \) நிலை சொத்துகள் சுழற்சி விகிதம் = \(\cfrac { 35,00,000 }{ 7,00,000 } =5\) மடங்கு
24.
(i) புற அக பொறுப்புகள் விகிதம்

நீண்டகாலக் கடன் = 8% கடனீட்டுப் பத்திரங்கள்
பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்கு முதல் + முன்னுரிமைப் பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி
= 2,50,000+2,00,000+1,50,000
= ரூ.6,00,000
\(\therefore \) புற அக பொறுப்புகள் விகிதம் = \(\cfrac { 3,00,000 }{ 6,00,000 } =0.5:1\)
(ii)

உரிமையாளர் நிதி = ரூ.6,00,000
மொத்த சொத்துகள் = ரூ.12,00,000
\(\therefore \) உரிமையாளர் விகிதம் = \(\cfrac { 6,00,000 }{ 12,00,000 } =0.5:1\)
(iii)

நிலையான வட்டி மற்றும் நிலையான பங்காதாயம் ஈட்டுகின்ற நிதிகள் = 6% முன்னுரிமைப் பங்கு முதல் + 8% கடனீட்டுப் பத்திரங்கள்
நேர்மைப் பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + பொதுக்காப்பு +மிகுதி
= 2,50,000+1,50,000
= ரூ.4,00,000
\(\therefore \) முதல் உந்துதிறன் விகிதம் = \(\cfrac { 5,00,000 }{ 4,00,000 } =1.25:1\)
25.
(i) கணக்கேடுகளைப் பராமரித்தல் :
1. கணினிமயக் கணக்கியல் முறையில் கணக்கேடுகளை எளிதாகவும் திறம்பட நீண்ட காலங்களுக்கு பராமரிக்கலாம்.
2. இதற்கு அதிகப்படியான இடவசதி தேவையில்லை.
3. தரவு மற்றும் தகவல்களை விரைவாகவும் துல்லியமாகவும் எடுக்க இது வழிவகை செய்கிறது.
(ii) சரக்கிருப்பு மேலாண்மை :
1. கணினிமயக் கணக்கியல் முறை திறம்பட சரக்கிருப்பு மேலாண்மைக்கு வழிவகை செய்கிறது.
2. வேகமாக நகரும், மெதுவாக நகரும் மற்றும் வழக்கொழிந்த சரக்கிருப்பை கண்டறியலாம்.
(iii) அறிக்கை உருவாக்குதல் :
கணினிமயக் கணக்கியல் முறை பல்வேறு வழக்கமான மற்றும் குறிப்பிட்ட நோக்க அறிக்கைகள் உருவாக்குவதற்கு உதவி புரிகிறது.
(iv) தரவு அனுப்புதல் /பெறுதல் :
கணக்கியல் தரவு மற்றும் தகவல்களை நிறுவனத்தின் உள்ளேயோ அல்லது நிறுவனத்திற்கு வெளியேயோ உள்ள வேறு ஒரு பயனரிடம் இருந்து அனுப்பலாம் அல்லது பெறலாம்.
(v) 'வரிவிதிப்பு':
கணினிமயக் கணக்கியல் முறை பல்வேறு வரிகளை கணக்கீடு செய்யவும் அதை பிடித்தம் செய்து அரசாங்க கணக்கில் செலுத்துவதற்கும் உதவி புரிகிறது.
26.
(i) நடவடிக்கைகளின் விவரங்களை கொண்டுள்ள ஒரு ஆவணமே சான்றாவணம் ஆகும்.
(ii) நடவடிக்கைகள் சான்றாவணப் பதிவுகள் மூலமே பதியப்பட வேண்டும்.
(iii) முன்பே வரையறுக்கப்பட்ட கொள்முதல், விற்பனை, செலுத்தல், பெறுதல் மற்றும் எதிர்ப்பதிவு போன்ற சான்றாவணங்களை Tally கொண்டுள்ளது.
சான்றாவண வகைகளைப் பார்வையிட :
Gateway of Tally > Masters > Accounts Info > Voucher Types > Display .
பயனரின் தேவைக்கேற்ப கூடுதல் சான்றாவண வகைகளை உருவாக்கலாம்.
27.
(i) மொத்த இலாப விகிதம் = x 100 = \(\frac {4,000}{20,000}\) x 100 = 20%
விற்பனை மூலம் பெற்ற = கொள்முதல் செய்த சரக்குகள் + சரக்கிருப்பு மாற்றம் + நேரடிச் செலவுகள் வருவாய்க்கான அடக்கவிலை
= 17,000 – 1,000 + 0 = ரூ.16,000
மொத்த இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் – விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை
= 20,000 – 16,000 = ரூ.4,000
(ii) நிகர இலாப விகிதம் = x 100 = \(\frac {1,500}{20,000}\) x 100 = 7.5%
வரி இல்லை எனக் கொள்ளவும்.
(iii) இயக்க அடக்கவிலை விகிதம் = x 100 = \(\frac {18,400}{20,000}\) x 100 = 92%
இயக்க அடக்கவிலை = விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை + இயக்கச் செலவுகள்
இயக்கச் செலவுகள் = இதர செலவுகள் = ரூ.2,400
இயக்க அடக்கவிலை = 16,000 + 2,400 = ரூ.18,400
(iv) இயக்க இலாப விகிதம் = x 100 = \(\frac {1,600}{20,000}\) x 100 = 8%
இயக்க இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் – இயக்க அடக்கவிலை
= 20,000 – 18,400 = ரூ.1,600
28.
நிலை 1: இயக்க இலாப விகிதம் = x 100
= \(\frac {1,50,000}{10,00,000}\) x 100 = 15%
நிலை 2: இயக்க இலாப விகிதம் = x 100
= \(\frac {3,00,000}{15,00,000}\) x 100 = 20%
இயக்க இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் – இயக்க அடக்கம்
= 15,00,000 – 12,00,000 = ரூ.3,00,000
நிலை 3: இயக்க இலாப விகிதம் = x 100
= \(\frac {2,00,000}{20,00,000}\) x 100 = 10%
மொத்த இலாபம் = 20,00,000 30/100 = ரூ.6,00,000
இயக்க இலாபம் = மொத்த இலாபம் – இயக்கச் செலவுகள்
இயக்க இலாபம் = 6,00,000 – 4,00,000 = ரூ.2,00,000
29.
(i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம் = \(\frac {6,00,000}{1,20,000}\) = 5 மடங்கு
= \(\frac {1,40,000+1,00,000}{2}=\frac {2,40,000}{2}\) = ரூ.1,20,000
=\(\frac {10,50,000}{70,000}\) = 15 மடங்கு
= \(\frac {80,000+60,000}{2}=\frac {1,40,000}{2}\) = ரூ.70,000
= \(\frac {4,50,000}{45,000}\) = 10 மடங்கு
= \(\frac {40,000+50,000}{2}\) = \(\frac {90,000}{2}\) = ரூ.45,000
=\(\frac {10,50,000}{5,25,000}\) = 2 மடங்கு
(v)
=\(\frac {5,50,000+5,00,000}{2}\) = \(\frac {10,50,000}{2}\) = ரூ.5,25,000
30.
(i) புற அக பொறுப்புகள் விகிதம் = =\(\frac {4,00,000}{5,00,000}\) = 0.8:1
நீண்டகாலக் கடன் = 9% கடனீட்டுப் பத்திரங்கள் = ரூ.4,00,000
பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + முன்னுரிமைப் பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி
= 1,50,000 + 2,00,000 + 1,50,000 = ரூ.5,00,000
(ii) உரிமையாளர் விகிதம் = =\(\frac {5,00,000}{10,00,000}\) = 0.5:1
(iii) முதல் உந்துதிறன் விகிதம் = =\(\frac {6,00,000}{3,00,000}\) = 2.1
நிலையான வட்டி மற்றும் நிலையான பங்காதாயம் ஈட்டுகின்ற நிதிகள்
= 8% முன்னுரிமைப் பங்கு முதல் + 9% கடனீட்டுப் ப த்திரங்கள்
= 2,00,000 + 4,00,000 = ரூ. 6,00,000
நேர்மைப் பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + பொதுக் காப்பு + மிகுதி
= 1,50,000 + 1,50,000 = ரூ. 3,00,000
31.
(c)
6 மடங்கு
32.
(c)
2:1
33.
(c)
நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் – சதவீதம்
34.
(a)
உரிமையாளர் விகிதம்
35.
(b)
(i) மற்றும் (iv)
36.
(a)
37.
(b)
நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்
38.
(d)
விரைவு சொத்துகள்
39.
(a)
குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்
40.
(b)
விகிதம்
41.
(c)
Gateway of Tally -> Reports -> Display -> Trial Balance
42.
(b)
உரிய குறிப்பேடு சான்றாவணம்
43.
(a)
எதிர்பதிவு சான்றாவணம்
44.
(d)
மறைமுக செலவினங்கள்
45.
(b)
கொடுபட வேண்டிய செலவு க/கு
46.
(b)
47.
(c)
(i) மற்றும் (ii) இவை இரண்டும்
48.
(d)
கணக்கு தகவல்
49.
(a)
நிறுவனப் பண்புகூறுகள்
50.
(b)
குறிப்பிட்ட நோக்க அறிக்கை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards