12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
நிலை அறிக்கை என்றால் என்ன?
2.
இரட்டைப்பதிவு முறை பின்பற்றாத போது சிறிய அளவிலான தனிவணிகர் பொதுவாக பராமரித்து வரும் கணக்குகளைத் தருக.
3.
முழுமை பெறா பதிவேடுகள் என்றால் என்ன?
4.
பின்வரும் விவரங்கள் சீர்காழி பாடகர்கள் சங்கத்தின் வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
| ரூ | |
|---|---|
| 1.4.2018 அன்று எழுதுபொருள்கள் இருப்பு | 2,600 |
| அவ்வாண்டில் வாங்கிய எழுதுபொருள்கள் | 6,500 |
| 31.3.2018 அன்று எழுதுபொருள்கள் இருப்பு | 2,200 |
5.
உயில்கொடை என்றால் என்ன?
6.
இலாப நோக்கற்ற அமைப்பின் பொருள் தரவும்.
7.
கூட்டாண்மை ஒப்பாவணம் என்றால் என்ன?
8.
வேலன் என்ற கூட்டாளி 2018, ஏப்ரல் 1 அன்று ரூ.20,000 எடுத்துக்கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என கணக்கிடப்பட வேண்டும். மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு 2018, டிசம்பர் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிட்டு அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளையும் தரவும்.
9.
பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டிய அச்சு மற்றும் எழுதுபொருள் செலவைக் கணக்கிட்டு அவை 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் என்பதையும் குறிப்பிடவும்.
எழுதுபொருள்களுக்காக கொடுத்த தொகை (2017-2018) = ரூ1,500
எழுதுபொருள்கள் இருப்பு (ஏப்ரல் 1, 2017) = ரூ 300
எழுதுபொருள்கள் இருப்பு (மார்ச் 31, 2018) = ரூ 200
10.
பின்வரும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கணக்கிடவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| ஆண்டு தொடக்கத்தில் முதல் (1 ஏப்ரல், 2016) | 2,00,000 |
| ஆண்டு இறுதியில் முதல் (31 மார்ச், 2017) | 3,50,000 |
| அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் | 70,000 |
| அவ்வாண்டின் எடுப்புகள் | 40,000 |
11.
நிலை அறிக்கை மற்றும் இருப்புநிலைக் குறிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தரவும்.
12.
இரட்டைப்பதிவு முறை மற்றும் முழுமை பெறா பதிவேடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
13.
ஆனந்த் தன் கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரித்து வருவதில்லை. 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.
| விவரம் | 31.3.2018 ரூ. |
31.3.2019 ரூ. |
|---|---|---|
| வங்கி ரொக்கம் | 5,000 (ப.) | 60,000 (வ.) |
| கைரொக்கம் | 3,000 | 4,500 |
| சரக்கிருப்பு | 35,000 | 45,000 |
| பற்பல கடனாளிகள் | 1,00,000 | 90,000 |
| பொறி மற்றும் இயந்திரம் | 80,000 | 80,000 |
| நிலம் மற்றும் கட்டடங்கள் | 1,40,000 | 1,40,000 |
| பற்பல கடனீந்தோர் | 1,70,000 | 1,30,000 |
ஆனந்த் தனது சொந்த பயனுக்காக ரூ. 60,000 எடுத்துக் கொண்டார். அவர் தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக ரூ. 17,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்கவும். பொறி மற்றும் இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும்.
14.
கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து கோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|---|
| வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) | 6,000 | மதிப்பூதியம் செலுத்தியது | 2,800 | |
| கைரொக்கம் | 1,000 | நீர் மற்றும் மின்சாரக் கட்டணம் | 700 | |
| மைதான பராமரிப்பிற்காக | விளையாட்டுப் போட்டிச் செலவுகள் | 2,600 | ||
| கூலி செலுத்தியது | 2,000 | விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது | 1,900 | |
| சந்தா பெற்றது: முந்தைய ஆண்டு | 500 | விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள் | 5,200 | |
| நடப்பு ஆண்டு | 9,600 | உயில்கொடைப் பெற்றது | 2,000 | |
| எதிர்வரும் ஆண்டு | 400 | 10,500 | ரொக்க இருப்பு (31.3.2019) | 300 |
| கூலி கொடுபட வேண்டியது | 2,200 | அரங்கம் அமைப்பதற்காக பெற்ற நன்கொடை | 2,000 | |
| கடன்மீதான வட்டி செலுத்தியது | 2,000 | |||
15.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிற்கும், வருவாய் மற்றும் செலவினக் கணக்கிற்கும் உள்ள வேறுபாடுகளைத் தரவும்.
16.
பாண்டியன் தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
| விவரம் | 1-1-2018 ரூ. |
31-12-2018 ரூ. |
|---|---|---|
| அறைகலன் | 30,000 | 30,000 |
| கைரொக்கம் | 10,000 | 17,000 |
| கடனாளிகள் | 40,000 | 60,000 |
| சரக்கிருப்பு | 28,000 | 11,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 12,000 | 35,100 |
| வங்கிக் கடன் | 25,000 | 25,000 |
| கடனீந்தோர் | 15,000 | 16,000 |
கூடுதல் தகவல்கள்:
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்க விற்பனை | 11,200 | கடன் விற்பனை | 88,800 |
| ரொக்கக் கொள்முதல் | 4,250 | கடன் கொள்முதல் | 35,750 |
| கொள்முதல் மீதான தூக்குக்கூலி | 3,000 | விற்பனை மீதான தூக்குக்கூலி | 700 |
| கழிவு பெற்றது | 600 | வங்கிக் கடன் மீது வட்டி | 2,500 |
| எடுப்புகள் | 8,000 | கூடுதல் முதல் | 14,000 |
| சம்பளம் | 8,900 | அலுவலக வாடகை | 2,400 |
சரிக்கட்டுதல்கள்:
அறைகலன் மீது 5% தேய்மானம் போக்கெழுதவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.
17.
ஆகாஷ், பாலா, சந்துரு மற்றும் டேனியல் ஆகியோர் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள். கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாதபோது பின்வருவனவற்றை எவ்வாறு மேற்கொள்வீர்கள்?
(i) ஆகாஷ் என்பவர் அதிக முதல் வழங்கியுள்ளார். அவர் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 10% கோருகிறார்.
(ii) பாலா ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 எடுத்துக் கொள்கிறார். ஏனைய கூட்டாளிகள் பாலாவிடம் ஆண்டுக்கு 8% எடுப்புகள் மீது வட்டி நிறுவனத்திற்கு அளிக்குமாறு கேட்கிறார்கள். ஆனால், பாலா அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
(iii) ஆகாஷ், இலாபத்தினை முதல் விகிதத்தில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிறார். ஆனால் பிற கூட்டாளிகள் அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
(iv) டேனியல் தனது முழு நேரத்தையும் தொழிலில் செலவிடுவதால் அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 ஊதியம் வேண்டுமென்று கோருகிறார்.
(v) சந்துருவால் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன் ரூ.50,000. அவர் கடன் மீது வட்டி ஆண்டுக்கு 12% வேண்டுமென்று கோருகிறார்.
18.
கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாதபோது, இந்திய கூட்டாண்மைச் சட்டம் 1932-ன் படி கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து சிறு குறிப்பு தரவும்.
19.
நிலைமுதல் முறைக்கும் மாறுபடும் முதல் முறைக்கும் இடையேயான வேறுபாடுகளைத் தரவும்.
20.
கோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றத்தின் 2016, மார்ச் 31-ல் முடிவடையும் ஆண்டிற்கான பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து, 2016, மார்ச் 31-ல் முடிவடையும் ஆண்டிற்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
| பெறுதல்கள் | ரூ | செலுத்தல்கள் | ரூ |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | பராமரிப்புச் செலவுகள் | 5,000 | |
| வங்கி ரொக்கம் | 8,000 | அறைகலன் | 15,000 |
| சந்தா | 11,000 | தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் | 1,400 |
| பழைய மட்டைகள் மற்றும் பந்துகள் | செயலாளர் மதிப்பூதியம் | 4,500 | |
| விற்றது | 100 | மட்டை கள் மற்றும் பந்துகள் | 7,400 |
| தொடர் விளையாட்டுப் போட்டிக்கான சந்தா | 2,000 | இருப்பு கீ/இ | |
| உயில்கொடை | 20,000 | வங்கி ரொக்கம் | 7,800 |
| 41,100 | 41,100 |
கூடுதல் தகவல்கள்:
2015, ஏப்ரல் 1 அன்று மன்றத்தில் பந்துகள் மற்றும் மட்டைகள் இருப்பு ரூ3,000; முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.500. தொடர் விளையாட்டுப் போட்டியின் உபரித்தொகைத் நிரந்தர அரங்கத்திற்கான ஒதுக்காக உருவாக்கப்பட வேண்டும். 31.3.2016 அன்று பெறவேண்டிய சந்தாரூ 2,000. 31.3.2016-ல் மட்டைகள் மற்றும் பந்துகள் இருப்பு ரூ1,000.
21.
கரூர் சமூக மன்றத்தின் 2018 மார்ச் 31 ஆம் நாளைய முதல் நிதியினைக் கணக்கிடவும்.
| விவரம் (31.03.2018) | ரூ |
|---|---|
| அறைகலன் | 50,000 |
| கட்டடம் | 40,000 |
| 2017-18 ஆம் ஆண்டிற்கான சந்தா பெற வேண்டியது | 10,000 |
| 2018-19 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது | 5,000 |
| கடன் வாங்கியது | 10,000 |
| முதலீடுகள் | 20,000 |
| கைரொக்கம் | 4,000 |
| வங்கி ரொக்கம் | 6,000 |
22.
பிரகதீஷ் மற்றும் நரேஷ் ஆகிய கூட்டாளிகள் தங்கள் முதல் கணக்குகளை நிலைமுதல் முறையில் பராமரித்து வருகின்றனர். கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு கூட்டாளிகளின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.
| விவரம் | பிரகதீஷ் ரூ. | நரேஷ் ரூ. |
|---|---|---|
| 2018, ஏப்ரல் 1 அன்று முதல் | 4,00,000 | 6,00,000 |
| 2018, ஏப்ரல் 1 அன்று நடப்புக் கணக்கு | 20,000(வ) | 15,000(ப) |
| அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் | 50,000 | - |
| அவ்வாண்டின் எடுப்புகள் | 45,000 | 60,000 |
| எடுப்புகள் மீது வட்டி | 2,000 | 3,000 |
| அவ்வாண்டின் இலாபப் பங்கு | 80,000 | 1,20,000 |
| முதல் மீது வட்டி | 20,000 | 30,000 |
| கழிவு | 17,000 | - |
| ஊதியம் | - | 38,000 |
23.
A, B, C மற்றும் D ஆகியோர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். நிறுவனத்தில் கூட்டாண்மை ஒப்பாவணம் ஏதுமில்லை. பின்வருவனவற்றை எவ்வாறு மேற்கொள்வீர்கள்?
(i) A அதிக முதல் வழங்கியுள்ளார். அவர் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 12% கோருகிறார்.
(ii) B ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 எடுத்துக் கொள்கிறார். ஏனைய கூட்டாளிகள் B-யிடம் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 10% எடுப்புகள் மீது வட்டி அளிக்குமாறு கேட்கிறார்கள். ஆனால், B அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
(iii) C யிடமிருந்து நிறுவனத்திற்கு பெறப்பட்ட கடன் ரூ.10,000. அவர் கடன் மீது வட்டி ஆண்டுக்கு 9% வேண்டுமென்று கோருகிறார். A மற்றும் B அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
(iv) D தனது முழு நேரத்தையும் தொழிலில் செலவிடுவதால் அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 ஊதியம் வேண்டுமென்று கோருகிறார். B மற்றும் C அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
(v) A, இலாபத்தினை முதல் விகிதத்தில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிறார். ஆனால் B, C மற்றும் D அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
24.
அகமது முறையான கணக்கேடுகளைப் பராமரிப்பதில்லை. 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.
| விவரம் | 1.4.2017 | 31.3.2018 |
|---|---|---|
| ரூ. | ரூ. | |
| வங்கி இருப்பு | 14,000 (வ) | 18,000 (ப) |
| கைரொக்கம் | 800 | 1,500 |
| சரக்கிருப்பு | 12,000 | 16,000 |
| கடனாளிகள் | 34,000 | 30,000 |
| பொறித்தொகுதி | 80,000 | 80,000 |
| அறைகலன் | 40,000 | 40,000 |
| கடனீந்தோர் | 60,000 | 72,000 |
அகமது தனது சொந்தப் பயனுக்காக ரூ. 40,000 எடுத்துக்கொண்டார். தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக அவர் ரூ. 16,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்க வேண்டும். பொறித்தொகுதி மீது 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.
25.
குறிப்பு வரைக
1) சந்தா
2) நன்கொடைகள்
26.
பின்வரும் விவரங்கள் மார்த்தாண்டம் பெண்கள் பண்பாட்டு மன்றத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்
| ரூ | |
| 1.4.2018 அன்று விளையாட்டுப் பொருள்கள் இருப்பு | 16,000 |
| அவ்வாண்டில் வாங்கிய விளையாட்டுப்பொருள்கள் | 84,000 |
| 31.3.2019 அன்று விளையாட்டுப் பொருள்கள் | 10,000 |
27.
இலாப நோக்கற்ற அமைப்பின் இறுதி கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன?
(அ) விளையாட்டுப் பொருள்கள் விற்பனை
(ஆ) ஆயுள் உறுப்பினர் கட்டணம்
(இ) தொடர் விளையாட்டுப் போட்டி நிதி
28.
இலாப நோக்கற்ற அமைப்பின் இறுதிக் கணக்குகளில் ஆண்டுச் சந்தா எவ்வாறு கையாளப்படுகிறது?
29.
கவிதா என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. அவர் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 எடுத்துக் கொள்கிறார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 4% கணக்கிடப்பட வேண்டும். எடுப்புகள் மீது வட்டி சராசரி கால முறையைப் பயன்படுத்தி கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் கணக்கிடவும். அவர்
(i) ஒவ்வொரு மாதத் தொடக்கத்தில் எடுத்திருந்தால்
(ii) ஒவ்வொரு மாத இடையில் எடுத்திருந்தால்
(iii) ஒவ்வொரு மாத இறுதியில் எடுத்திருந்தால்
30.
கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கங்கள் ஏதேனும் ஆறினைத் தரவும்.
31.
கூட்டாண்மையின் சிறப்பியல்புகளைத் தரவும்.
32.
முரளி மற்றும் சேது இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். முரளி, எந்தவொரு கழிவுக்கு முன் உள்ள நிகர இலாபத்தில் 10% கழிவாகப் பெற வேண்டும். சேது, அனைத்து கழிவுக்குப் பின் உள்ள நிகர இலாபத்தில் 10% கழிவாகப் பெற வேண்டும். 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய கழிவு கணக்கிடுவதற்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ரூ.1,10,000. முரளி மற்றும் சேதுவிற்கு தரவேண்டிய கழிவினைக் கண்டுபிடிக்கவும்.
33.
அருள் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12% கணக்கிடப்பட வேண்டும். டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் 2018 ஆம் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:
| நாள் | ரூ. |
|---|---|
| மார்ச் 1 | 3,000 |
| ஜுன் 1 | 3,000 |
| செப்டம்பர் 1 | 3,000 |
| டிசம்பர் 1 | 3,000 |
எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்
34.
திருச்சி கல்வியியல் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| தொடக்க இருப்பு (1.1.2018) | 20,000 | பாதுகாப்பு பெட்டக வாடகை பெற்றது | 12,000 |
| முதலீடுகள் செய்தது | 80,000 | அறைகலன் விற்றது | 5,000 |
| மதிப்பூதியம் செலுத்தியது | 3,000 | பொதுச்செலவுகள் | 7,000 |
| நன்கொடை பெற்றது | 80,000 | அஞ்சல் செலவுகள் | 1,000 |
| தணிக்கைக் கட்டணம் செலுத்தியது | 2,000 | சந்தா பெற்றது | 10,000 |
35.
36.
தொடக்க முதல் ரூ. 10,000, அவ்வாண்டின் எடுப்புகள் ரூ. 6,000, அவ்வாண்டின் இலாபம் ரூ. 2,000 மற்றும் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 3,000 எனில் இறுதி முதல் காணவும்.
ரூ. 9,000
ரூ. 11,000
ரூ. 21,000
ரூ. 3,000
37.
உரிமையாளரின் சொத்துகள் ரூ. 85,000 மற்றும் பொறுப்புகள் ரூ. 21,000 எனில் அவருடைய முதல்தொகை_____.
ரூ. 85,000
ரூ. 1,06,000
ரூ. 21,000
ரூ. 64,000
38.
முழுமை பெறா பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல?
இது நடவடிக்கைகளை பதிவு செய்யும் அறிவியல் தன்மையற்ற முறை
ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளுக்கு மட்டும் ஏடுகள் பராமரிக்கப்படுகிறது.
இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்
வரி அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை
39.
கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது______.
மொத்தக் கடனாளிகள் கணக்கு
மொத்தக் கடனீந்தோர் கணக்கு
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு
40.
பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள் ______.
நட்டம்
ரொக்கம்
முதல்
இலாபம்
41.
தொடக்க நிலை அறிக்கை வழக்கமாக தயாரிக்கப்படுவது______.
தொடக்க முதல் கண்டறிய
இறுதி முதல் கண்டறிய
அவ்வாண்டின் இலாபம் கண்டறிய
அவ்வாண்டின் நட்டம் கண்டறிய
42.
முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது______.
நிறுமம்
அரசு
சிறிய அளவிலான தனிஆள் வணிகம்
பன்னாட்டு நிறுவனங்கள்
43.
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை_____.
வருவாயின வரவு
முதலின வரவு
வருவாயினச் செலவு
முதலினச் செலவு
44.
பின்வருவனவற்றில் எது வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பதியப்படுவதில்லை?
பழைய செய்தித்தாள்கள் விற்றது
சொத்து விற்பனை மீதான நட்டம்
செயலாளருக்கு வழங்கிய மதிப்பூதியம்
அறைகலன் விற்ற தொகை
45.
வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது ______.
இலாபம் அல்லது நட்டம்
ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு
உபரி அல்லது பற்றாக்குறை
நிதிநிலை
46.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் இருப்பு காட்டுவது______.
அந்த ஆண்டில் ஏற்பட்ட நட்டம்
அந்த ஆண்டின் செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம்
அந்த ஆண்டின் மொத்த ரொக்கச் செலுத்தல்கள்
அந்நாளைய ரொக்க மற்றும் வங்கி இருப்பு
47.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள்______.
வருவாயினத் தன்மை மட்டும் உடையது
முதலினத் தன்மை மட்டும் உடையது
வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது
மேற்கண்ட எதுவுமில்லை
48.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ஒரு______.
பெயரளவு கணக்கு
சொத்து கணக்கு
ஆள்சார் கணக்கு
பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
49.
எடுப்பு மீது வட்டி, முதல் மீது வட்டி மற்றும் ஊதியம் கழித்தபின் உள்ள இலாபம் ரூ.10,500. கீதா என்ற கூட்டாளி கழிவுக்குப்பின் உள்ள நிகர இலாபத்தில் 5% கழிவு பெற உரியவராயின் கழிவுத்தொகையை கண்டறியவும்.
ரூ.50
ரூ.150
ரூ.550
ரூ.500
50.
கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது கூட்டாளிகள் பெறத் தகுதியுடையது______.
சம்பளம்
கழிவு
கடன் மீது வட்டி
முதல் மீது வட்டி
51.
கூட்டாண்மை நிறுவனத்தில், நிலைமுதல் முறை பின்பற்றப்படும்போது, பின்வருவனவற்றுள் எது முதல் கணக்கில் காட்டப்படும்?
கூடுதல் முதல் கொண்டுவந்தது
முதல் மீது வட்டி
எடுப்புகள் மீது வட்டி
இலாபப் பகிர்வு
52.
53.
கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல் மீது வட்டி______.
வழங்கப்படுவதில்லை
வங்கி வீதத்தில் வழங்கப்படும்
ஆண்டுக்கு 5 % வழங்கப்படும்
ஆண்டுக்கு 6% வழங்கப்படும்
54.
கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத நிலையில் நிறுவனத்தின் இலாபம் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுவது______.
சமமான விகிதத்தில்
முதல் விகிதத்தில்
இரண்டும் (அ) மற்றும் (ஆ)
மேற்கூறிய எதுவுமில்லை
1.
1) நிலை அறிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட நாளுக்கான சொத்துகள் மற்றும் பொறுப்புகள் இருப்பைக்காட்டும் ஒரு அறிக்கை ஆகும்.
2) சொத்துக்களின் இருப்புகள் வலது பக்கமும் மற்றும் பொறுப்புகளின் இருப்புகள் இடது பக்கத்திலும் காண்பிக்கப்பெறும்.
3) மொத்தச் சொத்துகள் மற்றும் மொத்தப் பொறுப்புகளின் வேறுபாட்டுத் தொகை முதலாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
2.
ரொக்கக் கணக்கு, ஆள்சார் கணக்குகளான வாடிக்கையாளர் மற்றும் கடனீந்தோர் கணக்கு மட்டுமே முழுமையாகவும், பிற கணக்குகள் தேவைக்கேற்பவும் பராமரிக்கப்படுகின்றன.
3.
1) கணக்கேடுகள், இரட்டைப் பதிவு முறையின் படி பராமரிக்கப்படாத போது அந்த பதிவேடுகள் முழுமைபெறா கணக்கியல் பதிவேடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
2) பொதுவாக, ரொக்கக் கணக்கு மற்றும் ஆள்சார் கணக்குகளான வாடிக்கையாளர் மற்றும் கடனீந்தோர் கணக்கு மட்டுமே முழுமையாகவும், பிற கணக்குகள் தேவைக்கேற்பவும் பராமரிக்கப்படுகின்றன.
4.
| செலவுகள் | ரூ. | ரூ. | வருமானம் | ரூ. |
|---|---|---|---|---|
| எழுது பொருள்கள் பயன்படுத்துகிறது: | ||||
| தொடக்க இருப்பு | 2,600 | |||
| கூட்டுக: கொள்முதல் | 6,500 | |||
| 9,100 | ||||
| கழிக்க: இறுதி இருப்பு | 2,200 | 6,900 |
5.
ஒரு இலாப நோக்கற்ற அமைப்புக்கு உயில் மூலமாக அளிக்கப்படும் பரிசு உயில்கொடை ஆகும். இது ஒரு முதலின வரவாகும்.
6.
1) சில அமைப்புகள் இலாபம் ஈட்டும் நோக்கத்திற்காக அல்லாமல் பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்திற்காகவும் தொடங்கப்படுகின்றன. அவை கலை, பண்பாடு, கல்வி மற்றும் விளையாட்டு போன்றவற்றை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்படுகின்றன. இந்த அமைப்புகள் இலாப நோக்கற்ற அமைப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
2) அறக்கொடை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பண்பாட்டு மன்றங்கள், விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்றங்கள், மருத்துவமனைகள், நூலகங்கள் மற்றும் இலக்கிய அமைப்புகள் போன்றவை இலாப நோக்கற்ற அமைப்புகளுக்கு உதாரணங்கள் ஆகும்.
7.
கூட்டாண்மை ஒப்பாவணம் என்பது கூட்டாளிகளுக்கிடையேயான உடன்படிக்கையின் விதிகளை உள்ளடக்கிய எழுத்து வடிவிலான ஒரு ஆவணம் ஆகும்
8.
எடுப்புகள் மீதான வட்டி = எடுப்புத் தொகை × வட்டி வீதம் × வட்டிக்குரிய காலம்
=ரூ.20,000 x \(\frac { 10 }{ 100 } \times \frac { 9 }{ 12 } \) =ரூ.1,500
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2018 | வேலன் வேலன் முதல் க/கு |
ப | 1,500 | ||
| டிசம்பர் 31 | எடுப்புகள் மீது வட்டி க/கு | 1,500 | |||
| (எடுப்புகள் மீது வட்டி விதித்தது) | |||||
| " | எடுப்புகள் மீது வட்டி க/கு | ப | 1,500 | ||
| இலாப நட்டப் பகிர்வு க/கு | 1,500 | ||||
| (எடுப்புகள் மீது வட்டி கணக்கை முடித்தது) |
9.
| செலவுகள் | ரூ | ரூ | வருமானம் | ரூ | ரூ - |
|---|---|---|---|---|---|
| எழுதுபொருள்கள் பயன்படுத்தியது | |||||
| தொடக்க இருப்பு | 300 | ||||
| கூட்டுக: கொள்முதல் | 1,500 | ||||
| 1,800 | |||||
| கழிக்க: இறுதி இருப்பு | 200 | 1,600 |
| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|
| எழுதுபொருள்கள் இருப்பு | 200 |
10.
| விவரம் | ரூ. |
|---|---|
| இறுதி முதல் (31.3.2017) | 3,50,000 40,000 |
| கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் | |
| 3,90,000 70,000 |
|
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் | |
| சரிக்கட்டப்பட்ட இறுதி முதல் | 3,20,000 2,00,000 |
| கழிக்க: தொடக்க முதல் (1.4.2016) | |
| அவ்வாண்டின் இலாபம் | 1,20,000 |
11.
| வ.எண் | வேறுபாட்டிற்கான அடிப்படை | நிலை அறிக்கை | இருப்புநிலைக் குறிப்பு |
| 1 | நோக்கம் | நிலை அறிக்கை பொதுவாக வியாபாரத்தின் முதலை கண்டறிய தயாரிக்கப்படுகிறது. | இருப்புநிலைக் குறிப்பு வியாபாரத்தின் நிதிநிலையைக் கண்டறிய தயாரிக்கப்படுகிறது. |
| 2 | கணக்கியல் முறை | இரட்டைப்பதிவு முறையை பின்பற்றவது கட்டாயமானதாக இல்லாத போது நிலை அறிக்கை தயாரிக்கப்படுகிறது. | கணக்குகள் இரட்டைப்பதிவு முறையில் பராமரிக்கப்படும் போது இருப்புநிலைக்குறிப்பு தயாரிக்கப்படுகிது. |
| 3 | தயாரிப்பின் அடிப்படை | இது முழுமையாக பேரேட்டுக் கணக்குகளை அடிப்டையாகக் கொண்டதல்ல. பேரேட்டுக் கணக்குகளின் இருப்புகள் முடிந்த இடங்களில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. | இது முழுமையாக பேரேட்டுக் கணக்குகளின் அடிப்படையிலேயே தயாரிக்கப்படுகிறது. |
| 4 | நம்பகத்தன்மை | இது முழுமை பெறா பதிவேடுகளை அடிப்டையாகக் கொண்டுள்ளதால் நம்பகத்தன்மை உடையது அல்ல. | இது இரட்டைப்பதிவு முறையில் தயாரிக்கப்படுவதால் நம்பகத்தன்மை உடையது. |
| 5 | விடுபட்ட விவரங்கள் | ஏடுகள் முழுமையாக பராமரிக்கப்படாததால் விடுபட்ட விவரங்களைக் கண்டறிவது கடினம். | அனைத்து நடவடிக்கைகளின் இரண்டு தன்மைகளும் பதியப்படுவதால் விடுபட்ட விவரங்களை எளிதில் கண்டறிய முடியும். |
12.
| வ.எண் | வேறுபாட்டின் அடிப்படை | இரட்டைப்பதிவு முறை | முழுமைபெறா பதிவேடுகள் |
| 1 | நடவடிக்கைகளைப் பதிவு செய்தல் | அனைத்து நடவடிக்கைகளின் பற்று மற்றும் வரவு ஆகிய இரு தன்மைகளும் பதிவு செய்யப்படுகின்றன. | அனைத்து நடவடிக்கைகளின் பற்று மற்றும் வரவுத் தன்மைகள் முழுமையாகப் பதிவு செய்யப்படுவதில்லை. |
| 2 | சரியான இலாபம் அல்லது நட்டம் கணக்கிடுதல் | சரியான இலாபம் அல்லது நட்டம் கண்டறிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு தயாரிக்கப்படுகிறது. | முழுமையானத் தகவல்கள் பெற முடியாததால் வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு துல்லியமாக தயாரிக்க முடியாது. எனவே, கண்டறிந்த இலாபம் அல்லது நட்டம் துல்லியமாக இருக்காது. |
| 3 | பொருந்தும் தன்மை | இது அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாகும். | இது சிறிய அளவிலான தனி ஆள் வணிகம் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு பொருத்தலாம். |
| 4 | நம்பகத்தன்மை | இது, அறிவியல்பூர்வமான கணக்கியல் முறை மற்றும் சில கணக்கியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் நம்பகத் தன்மையுடையதாகும். | இது அறிவியல் தன்மையற்றதால் நம்பகத்தன்மை உடையதல்ல. |
| 5 | ஏற்புத்தன்மை | கணக்கியல் பதிவேடுகள் வரி அதிகாரிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து பயனாளர்களுக்கும் ஏற்புடையதாகும். | கணக்கியல் பதிவேடுகள் அனைத்துப் பயனாளர்களுக்கும் ஏற்புடையதல்ல. |
13.
தொடக்க முதல் கணக்கிடுதல்:
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
| பற்பல கடனீந்தோர் | 1,70,000 | வங்கி ரொக்கம் | 5,000 |
| முதல் (இருப்புக்கட்டும் தொகை) | 1,93,000 | கைரொக்கம் | 3,000 |
| சரக்கிருப்பு | 35,000 | ||
| பற்பல கடனாளிகள் | 1,00,000 | ||
| பொறி மற்றும் இயந்திரம் | 80,000 | ||
| நிலம் மற்றும் கட்டடங்கள் | 1,40,000 | ||
| 3,63,000 | 3,63,000 |
இறுதிமுதல் கணக்கிடுதல்:
| பொறுப்புகள் | ரூ. | சொத்துக்கள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| வங்கி மேல்வரைப்பற்று | 60,000 | கைரொக்கம் | 4,500 | |
| பற்பல கடனீந்தோர் | 1,30,000 | சரக்கிருப்பு | 45,000 | |
| பற்பல கடனாளிகள் | 90,000 | |||
| முதல் (இருப்புக்கட்டும் தொகை ) | 1,57,000 | கழிக்க : கடனாளிகள் மீது 5%ஒதுக்கு | 4,500 | 85,500 |
| பொறி மற்றும் இயந்திரம் | 80,000 | |||
| கழிக்க: தேய்மானம் 10% | 8,000 | 72,000 | ||
| நிலம் மற்றும் கட்டடங்கள் | 1,40,000 | |||
| 3,47,000 | 3,47,000 |
| விவரம் | ரூ. |
| 31.3.2019 அன்று இறுதிமுதல் | 1,57,000 |
| கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் | 60,000 |
| 2,17,000 | |
| கழிக்க:அவ்வாண்டில் கொண்டுவரப்பட்ட கூடுதல் முதல் | 17,000 |
| சரிக்கப்பட்ட இறுதிமுதல் | 2,00,000 |
| கழிக்க:31.3.2018 அன்று தொடக்கமுதல் | 1,93,000 |
| 31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் இலாபம் | 7,000 |
14.
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | செலுத்தல்கள் | ரூ. |
|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | இருப்பு கீ/கொ | |||
| கைரொக்கம் | 1,000 | வங்கி மேல்வரைப்பற்று | 6,000 | |
| சந்தா பெற்றது: | கூலி செலுத்தியது | 2,000 | ||
| முந்தைய ஆண்டு | 500 | கடன் மீது வட்டி செலுத்தியது | 2,000 | |
| நடப்பு ஆண்டு | 9,600 | மதிப்பூதியம் செலுத்தியது | 2,800 | |
| எதிர்வரும் ஆண்டு | 400 | 10,500 | நீர் மற்றும் மின்சாரக் கட்டணம் | 700 |
| விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள் | 5,200 | விளையாட்டுப் போட்டிச் செலவுகள் | 2,600 | |
| உயில் கொடைப் பெற்றது | 2,000 | விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது | 1,900 | |
| அரங்கம் அமைப்பதற்காக பெற்ற நன்கொடை | 2,000 | இருப்பு கீ/இ | ||
| ரொக்க இருப்பு | 300 | |||
| வங்கி இருப்பு | 2,400 | |||
| 20,700 | 20,700 |
15.
| வ.எண் | அடிப்படை | பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு | வருவாய் மற்றும் செலவினக் கணக்கு |
|---|---|---|---|
| 1 | நோக்கம் | இது ரொக்கப் பெறுதல்கள் மற்றும் ரொக்கச் செலுத்தல்களை அறிவதற்கு தயாரிக்கப்படுகிறது. | இது நடப்பு ஆண்டின் செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம் (உபரி) அல்லது வருமானத்தைக் காட்டிலும் மிகுதியான செலவுகள் (பற்றாக்குறை)குறித்து அறிந்துகொள்ள தயாரிக்கப்படுகிறது. |
| 2 | கணக்கின் தன்மை | இது ஒரு சொத்துக் கணக்காகும். இது ரொக்கக் கணக்கின் தொகுப்பாகும். அனைத்து ரொக்கப் பெறுதல்கள் பற்றுப் பக்கத்திலும், ரொக்கச் செலுத்தல்கள் வரவுப் பக்கத்திலும் பதியப்படுகின்றன. | இது ஒரு பெயரளவுக் கணக்காகும். இது இலாப நட்டக் கணக்கைப் போன்றது. செலவுகள் பற்றுப்பக்கத்திலும் மற்றும் வருமானங்கள் வரவுப் பக்கத்திலும் பதியப்படுகின்றன. |
| 3 | கணக்கியலின் அடிப்படை | இது ரொக்க அடிப்படையிலான கணக்கியலை அடிப்படையாகக் கொண்டது. ரொக்கம் சார்பற்ற விவரங்கள் பதியப்படுவதில்லை. | இது நிகழ்வு அடிப்படையிலான கணக்கியலை அடிப்படையாகக் கொண்டது. ரொக்கம் சாரா விவரங்களான கொடுபட வேண்டிய செலவுகள், தேய்மானம் போன்றவைகளும் இங்கு பதியப்படும். |
| 4 | தொடக்க இறுதி இருப்பு | இது ரொக்கம் வங்கிக் கணக்கின் தொடக்க இருப்புடன் தொடங்கி, ரொக்கம் மற்றும் வங்கிக் கணக்கின் இறுதி இருப்புடன் முடிவடைகிறது. | இங்கு தொடக்க இருப்பு என்பது கிடையாது. இது உபரி அல்லது பற்றாக்குறையுடன் முடிவடைகிறது. |
| 5 | நடவடிக்கையின் தன்மைகள் | இது வருவாயினம் அல்லது முதலினம் என்ற வேறுபாடில்லாமல் அனைத்துப் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்களைக் கொண்டிருக்கும். | இது வருவாயின நடவடிக்கைகளை மட்டுமே, அதாவது வருவாயினச் செலவுகள் மற்றும் வருவாயின வரவுகளை மட்டுமே கொண்டிருக்கும். |
16.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| கடனீந்தோர் | 15,000 | கைரொக்கம் | 10,000 |
| வங்கிக்கடன் | 25,000 | சரக்கிருப்பு | 28,000 |
| தொடக்க முதல் (இருப்புக் கட்டும் தொகை) | 80,000 | கடனாளிகள் | 40,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 12,000 | ||
| அறைகலன் | 30,000 | ||
| 1,20,000 | 1,20,000 |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 28,000 | விற்பனை | |||
| கொள்முதல் | ரொக்கம் | 11,200 | |||
| ரொக்கம் | 4,250 | கடன் | 88,800 | 1,00,000 | |
| கடன் | 35,750 | 40,000 | இறுதிச் சரக்கிருப்பு | 11,000 | |
| கொள்முதல் மீதான தூக்குக்கூலி | 3,000 | ||||
| மொத்த இலாபம் கீ/இ | 40,000 | ||||
| 1,11,000 | 1,11,000 | ||||
| சம்பளம் | 8,900 | மொத்த இலாபம் கீ/கொ | 40,000 | ||
| விற்பனை மீதான தூக்குக்கூலி | 700 | கழிவு பெற்றது | 600 | ||
| அலுவலக வாடகை | 2,400 | ||||
| வங்கிக்கடன் மீது வட்டி | 2,500 | ||||
| அறைகலன் மீதான தேய்மானம் | 1,500 | ||||
| ஐயக்கடன் ஒதுக்கு | 600 | ||||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 24,000 | ||||
| 40,600 | 40,600 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் | 80,000 | கைரொக்கம் | 17,000 | ||
| கூட்டுக: நிகர இலாபம் | 24,000 | சரக்கிருப்பு | 11,000 | ||
| 1,04,000 | கடனாளிகள் | 60,000 | |||
| கூட்டுக: கூடுதல் முதல் | 14,000 | கழிக்க: ஐயக்கடன் ஒதுக்கு | 600 | 59,400 | |
| 1,18,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 35,100 | |||
| கழிக்க: எடுப்புகள் | 8,000 | 1,10,000 | அறைகலன் | 30,000 | |
| வங்கிக்கடன் | 25,000 | கழிக்க: தேய்மானம் | 1,500 | 28,500 | |
| கடனீந்தோர் | 16,000 | ||||
| 1,51,000 | 1,51,000 |
17.
நிறுவனத்தில் கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாததால், இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932 - ன் நிபந்தனைகள் பொருந்தும்.
(i) எந்த ஒரு கூட்டாளிக்கும் முதல் மீது வட்டி செலுத்த வேண்டியதில்லை.எனவே, ஆகாஷ் முதல் மீது வட்டி பெற உரிமை உடையவரல்ல.
(ii) கூட்டாளியின் எடுப்புகளுக்கு வட்டி விதிக்கக் கூடாது. ஆகையால், பாலா எடுப்புகள் மீது வட்டி செலுத்த வேண்டியதில்லை.
(iii) கூட்டாண்மை ஒப்பாவணம் பிரிவு 13(ஆ)ன் படி இலாபங்கள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
(iv) கூட்டாண்மை ஒப்பாவணம் பிரிவு 13(அ)ன் படி எந்தக் கூட்டாளிக்கும் ஊதியம் வழங்க வேண்டியதில்லை. ஆகையால், டேனியல் ஊதியம் பெற தகுதி உடையவரல்ல.
(v) கூட்டாண்மை ஒப்பாவணம் பிரிவு 13(ஈ)ன் படி கடன் மீது வட்டி ஆண்டுக்கு 6% செலுத்தப்பட வேண்டும். ஆகையால், சத்துருவால் தான் வழங்கிய ரூ.50,000 கடனுக்கு ஆண்டுக்கு 6% வட்டி பெறலாம்
18.
கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத போது அல்லது கூட்டாண்மை ஒப்பாவணத்தில் வெளிப்படையான அறிக்கை எதுவும் இல்லாத நிலையில், சட்டத்தின் பின்வரும் நிபந்தனைகள் பின்பற்றப்படுகின்றன.
(i) கூட்டாளிகளின் ஊதியம் [பிரிவு 13(அ)]:
எந்த கூட்டாளிக்கும் ஊதியம் அல்லது உழைப்பு ஊதியம் அனுமதிக்கப்பட வேண்டியதில்லை
(ii) இலாபப் பகிர்வு விகிதம் [பிரிவு 13(ஆ)]:
இலாபங்கள் அல்லது நட்டங்களை கூட்டாளிகள் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்
(iii) முதல் மீது வட்டி [பிரிவு 13(இ)]:
கூட்டாளிகளின் முதல் மீது வட்டி அனுமதிக்கப்படுவதில்லை. கூட்டாளி ஒருவர் கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி தான் அளித்த முதல் தொகைக்கு முதல் மீது வட்டி பெற உரிமை உடையவராயின், அந்த முதல் மீது வட்டி இலாபத்திலிருந்து மட்டுமே வழங்கப்பட வேண்டும்
(iv) கூட்டாளிக்குகளிடமிருந்து நிறுவனத்திற்காக பெறப்பட்ட கடன்மீதான வட்டி [பிரிவு 13(ஈ)]:
கடன்மீதான வட்டி ஆண்டுகளுக்கு 6% வழங்கப்பட வேண்டும்
(v) எடுப்புகள் மீது வட்டி:
கூட்டாளிகளின் எடுப்புகள் மீது வட்டி விதிக்கக்கூடாது.
19.
| வ.எண்: | வேறுபாட்டின் அடிப்படை | நிலைமுதல் முறை | மாறுபடும் முதல் முறை |
|---|---|---|---|
| 1. | கணக்குகளின் எண்ணிக்கை | ஒவ்வொரு கூட்டாளிக்கும் இரண்டு கணக்குகள் அதாவது, முதல் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு பராமரிக்கப்படுகின்றன | ஒவ்வொரு கூட்டாளிக்கு ஒரே ஒரு கணக்கு அதாவது, முதல் கணக்கு பராமரிக்கப்படுகிறது |
| 2. | முதல் தொகையில் மாற்றம் | கூடுதல் முதல் கொண்டு வரும்போது அல்லது முதல் தொகையை நிரந்தரமாக திரும்ப எடுக்கும் போது, தவிர மற்ற நேரங்களில் முதல் தொகை வழக்கமாக மாறாமல் நிலையாக இருக்கும் | முதல் தொகை பருவந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும் |
| 3. | இறுதி இருப்பு | முதல் கணக்கு எப்பொழுதும் வரவிருப்பையே காட்டும். ஆனால், நடப்புக் கணக்கு பற்றிருப்பையோ அல்லது வரவிருப்பையோ காட்டும் | முதல் கணக்கு பொதுவாக வரவிருப்பையே காட்டும். இது பற்றிருப்பையும் கூட காட்டலாம் |
| 4. | சரிக்கட்டுதல்கள் | முதல் மீது வட்டி, எடுப்புகள் மீது வட்டி, ஊதியம் மற்றும் கழிவு, இலாபம் அல்லது நட்டப் பங்கு தொடர்பான அனைத்துச் சரிக்கட்டுதல்களும் நடப்புக் கணக்கில் செய்யப்படும். | முதல் மீது வட்டி, எடுப்புகள் மீது வட்டி, ஊதியம் மற்றும் கழிவு, இலாபம் அல்லது நட்டப்பங்கு தொடர்பான அனைத்துச் சரிக்கட்டுதல்களும் முதல் கணக்கில் செய்யப்படும் |
20.
மாணவர் குறிப்பு
தொடக்க முதல் நிதியினைக் கண்டறியதொடக்க இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்ய வேண்டும்.
| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|
| முதல்நிதி | 10,500 | பந்து மற்றும் மட்டைகள் இருப்பு | 3,000 |
| (இருப்புக் கட்டும் தொகை) | வங்கி ரொக்கம் | 8,000 | |
| முன்கூட்டிப் பெற்ற சந்தா | 500 | ||
| 11,000 | 11,000 |
| செலவுகள் | ரூ | ரூ | வருமானம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| பராமரிப்புச் செலவுகள் | 5,000 | சந்தா | 11,000 | ||
| செயலாளர் மதிப்பூதியம் | 4,500 | கூட்டுக: 2015 -16 ஆம் ஆண்டிற்குரிய | |||
| மட்டை கள் மற்றும் பந்துகள் | 7,400 | சந்தா 2014-15 ல் முன்கூட்டிப் பெற்றது | 500 | ||
| கூட்டுக: தொடக்க இருப்பு | 3,000 | 11,500 | |||
| 10,400 | கூட்டுக: நிலுவையில் உள்ள சந்தா (2015-16) | 2,000 | 13,500 | ||
| கழிக்க: இறுதி இருப்பு | 1,000 | 9,400 | பழைய மட்டைகள், பந்துகள் விற்றது | 100 | |
| வருமானத்தைக் காட்டிலும் மிகுதியானச் செலவுகள் (பற்றாக்குறை) | 5,300 | ||||
| 18,900 | 18,900 |
| பொ றுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|---|
| முதல்நிதி | 10,500 | அறைகலன் | 15,000 | |
| கழிக்க: வருமானத்தைக் காட்டிலும் | பந்துகள் மற்றும் மட்டைகள் இருப்பு | 1,000 | ||
| மிகுதியானச் செலவுகள் (பற்றாக்குறை) | 5,300 | 5,200 | பெறவேண்டிய சந்தா | 2,000 |
| விளையாட்டு அரங்க நிதிக்கான ஒதுக்கு | வங்கி ரொக்கம் | 7,800 | ||
| தொடர் விளையாட்டுப் போட்டிக்கான சந்தா | 2,000 | |||
| கழிக்க:தொ டர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் |
1,400 | 600 | ||
| உயில்கொடை | 20,000 | |||
| 25,800 | 25,800 |
21.
| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|
| முதல் நிதி | 1,15,000 | கட்டடம் | 40,000 |
| (இருப்புக் கட்டும் தொகை | அறைகலன் | 50,000 | |
| கடன் வாங்கியது | 10,000 | முதலீடுகள் | 20,000 |
| சந்தா முன்கூட்டிப் பெற்றது | 5,000 | சந்தா பெறவேண்டியது | 10,000 |
| வங்கி ரொக்கம் | 6,000 | ||
| கைரொக்கம் | 4,000 |
22.
| நாள் | விவரம் | பிரகதீஷ் ரூ. | நரேஷ் ரூ. | நாள் | விவரம் | பிரகதீஷ் ரூ. | நரேஷ் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/இ | 4,50,000 | 6,00,000 | இருப்பு கீ/கொ | 4,00,000 | 6,00,000 | ||
| வங்கி க/கு | 50,000 | - | |||||
| (கூடுதல் முதல்) | |||||||
| 4,50,000 | 6,00,000 | 4,50,000 | 6,00,000 | ||||
| இருப்பு கீ/கொ | 4,50,000 | 6,00,000 |
| நாள் | விவரம் | பிரகதீஷ் ரூ. | நரேஷ் ரூ. | நாள் | விவரம் | பிரகதீஷ் ரூ. | நரேஷ் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | - | 15,000 | இருப்பு கீ/கொ | 20,000 | - | ||
| எடுப்புகள் க/கு | 45,000 | 60,000 | இலாபநட்டப் பகிர்வு க/கு |
80,000 | 1,20,000 | ||
| எடுப்புகள் மீது வட்டி க/கு |
2,000 | 3,000 | (இலாபப் பங்கு) | ||||
| இருப்பு கீ/இ | 90,000 | 1,10,000 | முதல் மீது வட்டி க/கு | 20,000 | 30,000 | ||
| கழிவு க/கு | 17,000 | - | |||||
| ஊதியம் க/கு | - | 38,000 | |||||
| 1,37,000 | 1,88,000 | 1,37,000 | 1,88,000 | ||||
| இருப்பு கீ/கொ | 90,000 | 1,10,000 |
23.
நிறுவனத்தில் கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாததால், இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932-ன் நிபந்தனைகள் பொருந்தும்.
(i) எந்த ஒரு கூட்டாளிக்கும் முதல் மீது வட்டி செலுத்த வேண்டியதில்லை. எனவே, A முதல் மீது வட்டி பெற உரிமை உடையவரல்ல.
(ii) கூட்டாளியின் எடுப்புகளுக்கு வட்டி விதிக்கக் கூடாது. ஆகையால், B எடுப்புகள் மீது வட்டி செலுத்த வேண்டியதில்லை.
(iii) கடன் மீது வட்டி ஆண்டுக்கு 6% செலுத்தப்பட வேண்டும். ஆகையால், C, தான் வழங்கிய ரூ.10,000 கடனுக்கு ஆண்டுக்கு 6% வட்டி பெறலாம்.
(iv) எந்தக் கூட்டாளிக்கும் ஊதியம் வழங்க வேண்டியதில்லை. ஆகையால், D ஊதியம் பெற தகுதி உடையவரல்ல.
(v) இலாபங்கள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
24.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| வங்கி மேல்வரைப்பற்று | 14,000 | கைரொக்கம் | 800 |
| கடனீந்தோர் | 60,000 | சரக்கிருப்பு | 12,000 |
| முதல் (இருப்புக் கட்டும் தொகை) | 92,800 | கடனாளிகள் | 34,000 |
| பொறித்தொகுதி | 80,000 | ||
| அறைகலன் | 40,000 | ||
| 1,66,800 | 1,66,800 |
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| கடனீந்தோர் | 72,000 | வங்கி இருப்பு | 18,000 | |
| முதல் (இருப்புக் கட்டும் தொகை) | 1,04,000 | கைரொக்கம் | 1,500 | |
| சரக்கிருப்பு | 16,000 | |||
| கடனாளிகள் | 30,000 | |||
| கழிக்க: கடனாளிகள் மீதான ஒதுக்கு 5% | 1,500 | 28,500 | ||
| பொறித்தொகுதி | 80,000 8,000 |
|||
| கழிக்க: தேய்மானம் | 72,000 | |||
| அறைகலன் | 40,000 | |||
| 1,76,000 | 1,76,000 |
| விவரம் | ரூ. |
|---|---|
| 31.3.2018 அன்று இறுதிமுதல் | 1,04,000 |
| கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் | 40,000 |
| 1,44,000 16,000 |
|
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டுவரப்பட்ட கூடுதல் முதல் | |
| சரிக்கட்டப்பட்ட இறுதிமுதல் | 1,28,000 92,800 |
| கழிக்க: 31.3.2017 அன்று தொடக்க முதல் | |
| 31.3.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் இலாபம் | 35,200 |
25.
1) சந்தா
இலாப நோக்கற்ற அமைப்புகள் பொதுவாக சந்தா தொகையை உறுப்பினர்களிடமிருந்து பருவந்தோறும் வசூலிக்கின்றன.
2) இவை மாதம் தோறும், காலாண்டு தோறும், அரையாண்டு தோறும் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை வசூலிக்கப்படலாம்.
3) உதாரணமாக டென்னிஸ் சந்தா, பில்லியார்ட்ஸ் விளையாடும் குறிப்பிட்ட உறுப்பினர்களிடமிருந்து மட்டுமே வசூலிக்கப்படுகின்றன.
1) நன்கொடைகள்
1) இலாப நோக்கற்ற அமைப்புகளால் பெறப்படும் பரிசுத்தொகை நன்கொடை எனப்படும்.
2) இது பொது நன்கொடையாக அல்லது குறிப்பிட்ட நன்கொடையாக இருக்கலாம்.
பொது நன்கொடை: எந்தவொரு குறிப்பிட்ட நிபந்தனையும் இல்லாமல் பெறப்படும் நன்கொடை, பொது நன்கொடையாகும். இது ஒரு வருவாயின வரவாகும்.
26.
| செலவுகள் | ரூ. | ரூ. | வருமானம் | ரூ. |
|---|---|---|---|---|
| பயன்படுத்தப்பட்ட விளையாட்டுப் பொருள்கள்: | ||||
| தொடக்க இருப்பு | 16,000 | |||
| கூட்டுக: நடப்பாண்டு வாங்கியது | 84,000 | |||
| 1,00,000 | ||||
| கழிக்க: இறுதி இருப்பு | 10,000 | 90,000 |
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| விளையாட்டுப் பொருள்கள் இருப்பு | 10,000 |
27.
(அ) விளையாட்டுப் பொருள்கள் விற்பனை :
1) நடப்பாண்டில் பயன்படுத்தப்பட்ட விளையாட்டுச் சாதனங்கள் வருவாய் மற்றும் செலவினக் கணக்கின் பற்றுப் பக்கத்தில் காட்டப்பட வேண்டும்.
2) பயன்படுத்தப்பட்டவை = தொடக்க இருப்பு+நடப்பு ஆண்டில் வாங்கியது - இறுதி இருப்பு
3) இறுதி சரக்கிருப்பு அவ்வாண்டின் இறுதியில் இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கத்தில் தோன்றும்.
4) பழைய விளையாட்டுச் சாதனங்கள் ஏதேனும் விற்பனைச் செய்யப்பட்டிருந்தால் அவை வருவாய் மற்றும் செலவினக் கணக்கின் வரவுப்பக்கத்தில் காட்டப்பட வேண்டும் அல்லது வருவாய் மற்றும் செலவினக் கணக்கின் பற்றுப்பக்கத்தில் குறிப்பிட்ட பயன்படுத்தப்பட்ட பொருள்களில் கழித்துக் காட்டப்பட வேண்டும்.
(ஆ) ஆயுள் உறுப்பினர் கட்டணம் :
உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும் ஆயுள் உறுப்பினர் கட்டணம் ஒரு முதலின வரவாகும்.
(இ) தொடர் விளையாட்டுப் போட்டி நிதி :
தொடர் விளையாட்டுப் போட்டி நிதி இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம் தனியாக காண்பிக்கப்பட்ட வேண்டும். நிதிக்கான வருமானம் ஏதாவது இருந்தால் அவை நிதிக் கணக்குடன் கூட்டப்பட வேண்டும் மற்றும் நிதிக் கணக்கிலிருந்து கழிக்கப்பட வேண்டும்.
28.
இலாப நோக்கற்ற அமைப்புகளின் இறுதி கணக்குகளில் சந்தாவிற்கான செயல்முறைகள்:
அ) வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் செயல்முறைகள்:
நடப்பு ஆண்டு, முந்தைய ஆண்டு, அடுத்த ஆண்டிற்கான சந்தா பெற்றது தனித்தனியாக கொடுக்கப்பட்டிருந்தால், நடப்பு ஆண்டிற்குரிய சந்தா கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களை செய்த பின்பு வருவாய் மற்றும் செலவினக் கணக்கின் வரவுப் பக்கத்தில் காண்பிக்கப்பெறும்.
1) நடப்பாண்டில் பெற வேண்டிய சந்தா கூட்டப்படவேண்டும்.
2) முந்தைய ஆண்டில் முன்கூட்டிப்பெற்ற நடப்பாண்டிற்குரிய சந்தா கூட்டப்பட வேண்டும்.
நடப்பாண்டில் பெற்ற மொத்த சந்தா கொடுக்கப்பட்டிருந்தால், நடப்பாண்டில் பெற்ற மொத்த சந்தா பின்வரும் சரிக்கட்டுதல்களை செய்த பின்னர் வருவாய் மற்றும் செலவினக் கணக்கின் வரவுப் பக்கத்தில் காட்டப்பெறும்.
1) முந்தைய ஆண்டுக்குரிய பெற வேண்டிய சந்தா நடப்பு ஆண்டில் பெறப்பட்டிருந்தால் கழிக்கப்பட வேண்டும். நடப்பாண்டிற்குரிய பெறவேண்டிய சந்தா கூட்டப்பட வேண்டும்.
2) முந்தைய ஆண்டில் முன்கூட்டிப்பெற்ற சந்தாவில் நடப்பாண்டிற்கு உரியது கூட்டப்பட வேண்டும். நடப்பாண்டில் முன்கூட்டிப் பெற்ற சந்தாவில் எதிர்வரும் ஆண்டிற்குரியது கழிக்கப்பட வேண்டும்.
ஆ) இருப்புநிலைக் குறிப்பில் செயல்முறைகள்:
1) நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா மற்றும் இன்னும் பெறவேண்டிய முந்தைய ஆண்டிற்குரிய சந்தா போன்றவை அவ்வாண்டின் இறுதியில் இருப்புநிலைக் குறிப்பில் சொத்துகள் பக்கத்தில் காண்பிக்கப்படும்.
2) நடப்பு ஆண்டில் முன்கூட்டிப் பெற்ற சந்தா அவ்வாண்டின் இருப்புநிலைக் குறிப்பில் பொறுப்புகள் பக்கத்தில் காண்பிக்கப்படும்.
29.
மொத்த எடுப்புத் தொகை = ரூ.2,500 x 12 = ரூ.30,000
(i) எடுப்புகள் ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் எடுத்திருந்தால்:
சராசரி காலம் = 6.5
= ரூ.30,000 x \(\frac { 4 }{ 100 } \times \frac { 6.5 }{ 12 } \)
= ரூ.650
(ii) எடுப்புகள் ஒவ்வொரு மாத இடையிலும் எடுத்திருந்தால்:
சராசரி காலம் = 6
= ரூ.30,000 x \(\frac { 4 }{ 100 } \times \frac { 6 }{ 12 } \)
= ரூ.600
(iii) எடுப்புகள் ஒவ்வொரு மாத இறுதியிலும் எடுத்திருந்தால்
சராசரி காலம் = 5.5
= ரூ.30,000 x \(\frac { 4 }{ 100 } \times \frac { 5.5 }{ 12 } \)
= ரூ.550
30.
(i) நிறுவனத்தின் பெயர், தன்மை மற்றும் தொழில் செய்யும் இடம்
(ii) தொழில் தொடங்கிய நாள் மற்றும் தொழிலின் கால அளவு
(iii) அனைத்துக் கூட்டாளிகளின் பெயர் மற்றும் முகவரி
(iv) ஒவ்வொரு கூட்டாளியும் அளித்த முதல்
(v) இலாபப் பகிர்வு விகிதம்
(vi) முதல் மீது அனுமதிக்கப்படும் வட்டி வீதம்
31.
கூட்டாண்மையின் சிறப்பியல்புகள் பின்வருமாறு:
(i) கூட்டாண்மை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களால் உருவாக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும். அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 என வரையறை செய்யப்பட்டுள்ளது.
(ii) தொழில் நிறுவனத்தின் இலாபம் அல்லது நட்டத்தைப் பகிர்ந்துகொள்ள கூட்டாளிகளுக்கிடையே உடன்பாடு இருக்க வேண்டும். உடன்பாடு எழுத்து வடிவிலோ அல்லது பேச்சு வடிவிலோ அல்லது உட்கிடையாகவோ இருக்கலாம்
(iii) கூட்டாண்மை உடன்பாடு ஒரு தொழில் நிறுவனத்தை நடத்தி அதிலிருந்து கிடைக்கும் இலாபத்தைப் பகிர்வதாக இருக்க வேண்டும்.
(iv) கூட்டாண்மை நிறுவனத்தை கூட்டாளிகள் அனைவருமோ அல்லது அனைவரின் சார்பில் அவர்களில் ஒருவரோ நடத்தலாம்.
32.
கழிவு கணக்கிடுதல்
முரளி:

= 1,10,000 × 10/100 = ரூ 11,000
சேது:
முரளியின் கழிவிற்கு பின் உள்ள நிகர இலாபம் = 1,10,000 –11,000 = ரூ.99,000

=99,000 x \(\frac { 10 }{ (100+10) } \) =ரூ.9,000
33.

34.
| பெறுதல்கள் | ரூ | செலுத்தல்கள் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | முதலீடுகள் செய்தது | 80,000 | |
| கைரொக்கம் | 20,000 | மதிப்பூதியம் செலுத்தியது | 3,000 |
| நன்கொடைப் பெற்றது | 80,000 | தணிக்கைக் கட்டணம் | 2,000 |
| பாதுகாப்பு பெட்டக வாடகைப் பெற்றது | 12,000 | பொதுச் செலவுகள் | 7,000 |
| அறைகலன் விற்றது | 5,000 | ||
| சந்தா | 10,000 | அஞ்சல் செலவுகள் | 1,000 |
| இருப்பு கீ/இ | |||
| கைரொக்கம் | 34,000 | ||
| 1,27,000 | 1,27,000 |
35.
(d)
36.
(a)
ரூ. 9,000
37.
(d)
ரூ. 64,000
38.
(c)
இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்
39.
(a)
மொத்தக் கடனாளிகள் கணக்கு
40.
(d)
இலாபம்
41.
(a)
தொடக்க முதல் கண்டறிய
42.
(c)
சிறிய அளவிலான தனிஆள் வணிகம்
43.
(b)
முதலின வரவு
44.
(d)
அறைகலன் விற்ற தொகை
45.
(c)
உபரி அல்லது பற்றாக்குறை
46.
(d)
அந்நாளைய ரொக்க மற்றும் வங்கி இருப்பு
47.
(c)
வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது
48.
(b)
சொத்து கணக்கு
49.
(d)
ரூ.500
50.
(c)
கடன் மீது வட்டி
51.
(a)
கூடுதல் முதல் கொண்டுவந்தது
52.
(d)
53.
(a)
வழங்கப்படுவதில்லை
54.
(a)
சமமான விகிதத்தில்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards