12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 22/10/2025
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
தியாக விகிதம் என்றால் என்ன?
2.
அரவிந்த் மற்றும் பாலாஜி இருவரும் 3:2 விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வரும் கூட்டாளிகள். அவர்கள் அனிருத் என்பவரை புதிய கூட்டாளியாகச் சேர்க்க அனுமதித்தனர். புதிய இலாபப்பகிர்வு விகிதமாக 1:1:1 என்பதை மூவரும் ஒப்புக் கொள்கின்றனர். அனிருத் செலுத்த வேண்டிய நற்பெயர் மதிப்பு ரூ.20,000 என்று மதிப்பிடப்படுகிறது. அதில், அவர் ரூ.12,000 ரொக்கம் செலுத்துகிறார். மாறுபடும் முதல் முறையில் கணக்குகள் உள்ளதெனக் கொண்டு நற்பெயருக்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
3.
அசோக் மற்றும் மும்தாஜ் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 5:1 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் தருண் என்பவரை 2/9 இலாப விகிதத்தில் நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்கின்றனர். சேர்க்கையின் போது நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு ரூ.27,000 என்று மதிப்பிடப்படுகிறது. தருணால் தன்னுடைய பங்கிற்கான நற்பெயர் மதிப்பிற்கான தொகையைக் கொண்டுவர முடியவில்லை. நிறுவனம் மாறுபடும் முதல் முறையில் கணக்கினைப் பராமரிக்கிறதெனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
4.
அருண், பாபு மற்றும் சார்லஸ் மூவரும் கூட்டாளிகள். அவர்கள் இலாபம் மற்றும் நட்டங்களை சமமாக பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் துரை என்பவரை 1/4 விகிதத்தில் எதிர்கால இலாபத்தினை பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டு கூட்டாண்மையில் சேர்க்கின்றனர். நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு ரூ.36,000 என்று மதிப்பிடப்படுகிறது. நற்பெயருக்காக துரை தமது பங்கின் அளவு தொகை கொண்டு வருகிறார். பழைய கூட்டாளிகள் நற்பெயருக்கான பாதித் தொகையினை எடுத்துக் கொண்டனர். மாறுபடும் முதல் முறையில் ஏடுகள் பராமரிக்கப்படுகின்றன எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளை தரவும்.
5.
அமுதா மற்றும் புவனா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 5:3 என்ற விகிதத்தில் இலாப-நட்டம் பகிர்ந்து வந்தனர். சித்ரா 3/8 பங்கு விகிதத்தில் புதிய கூட்டாளியாக சேர்கிறார். அப்போது ரூ.8,000 தமது நற்பெயர் பங்களிப்பாக கொண்டு வருகிறார். அவர்கள் மாறுபடும் முதல் முறையில் கணக்கினை பராமரிக்கின்றனர். நற்பெயருக்கென தொகை முழுவதையும் அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். நற்பெயரைச் சரிகட்டத் தேவையான குறிப்பேட்டுப்பதிவுகளை உருவாக்கவும்.
6.
அன்பு மற்றும் இராஜு என்ற இரு கூட்டாளிகள் 3:2 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அக்ஷய் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். அன்பு, இராஜு மற்றும் அக்ஷய் அவர்களின் புதிய இலாபப் பங்கு 5:3:2. தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.
7.
இரத்ன குமார் மற்றும் ஆரோக்கியதாஸ் எனும் கூட்டாளிகள் முறையே 3.2 என இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 31 மார்ச் 2017 ஆம் நாளைய அவர்களது இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 30,000 | ||
| இரத்ன குமார் | 30,000 | பொறித்தொகுதி | 60,000 | |
| ஆரோக்கியதாஸ் | 50,000 | 80,000 | அறைகலன் | 20,000 |
| இலாப நட்டப் பகிர்வு க/கு | 20,000 | கடனாளிகள் | 10,000 | |
| பொதுக்காப்பு | 5,000 | சரக்கிருப்பு | 15,000 | |
| தொழிலாளர் ஈட்டு நிதி | 15,000 | வங்கி ரொக்கம் | 15,000 | |
| பற்பல கடனீந்தோர் | 30,000 | |||
| 1,50,000 | 1,50,000 |
2017, ஏப்ரல் 1 அன்று, டேவிட் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். கூட்டாளி சேர்ப்பின் போது பகிர்ந்து தரா இலாபம் மற்றும் காப்பினை பகிர்ந்தளிக்க குறிப்பேட்டுப் பதிவு தரவும்.
8.
மாலா மற்றும் விமலா எனும் கூட்டாளிகள் முறையே 3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 31.03.2017 அன்று வர்ஷினி என்பவரை கூட்டாளியாக சேர்த்தனர். அவர் சேர்ந்த நாளில் நிறுவன ஏடுகளில் காப்பு நிதி ரூ.50,000 எனக் காட்டியது. காப்புநிதியை பகிர்ந்தளிக்க குறிப்பேட்டுப் பதிவு தரவும்.
9.
சாம் மற்றும் ஜோஸ் என்னும் கூட்டாளிகள் 3:2 என்னும் விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று ஜோயல் என்பவரை கூட்டாளியாக சேர்த்துக்கொண்டனர். ஜோயல் கூட்டாண்மையில் சேர்ந்த அன்று நிறுவன ஏடுகளில் நற்பெயர் ரூ.30,000 ஆக இருந்தது. மாறுபடும் முதல் முறையில் கணக்குகள் பராமரிக்கப்படுவதாகக் கருதி கூட்டாளிகளின் பின்வரும் முடிவுகளின்படி குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
(அ) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகை முழுவதையும் போக்கெழுதுவது
(ஆ) ஏட்டில் உள்ள நற்பெயரில் ரூ.20,000-ஐ போக்கெழுதுவது
10.
வருண் மற்றும் பாரத் இருவரும் கூட்டாளிகள். அவர்களின் இலாப நட்டம் விகிதம் 5:4 ஆகும். அவர்கள் தாமு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதமாக 1:1:1 என்பதை மூவரும் ஒப்புக் கொள்கின்றனர். தாமு செலுத்த வேண்டிய நற்பெயர் மதிப்பு ரூ.15,000 என மதிப்பிடப்பட்டது. அதில், அவர் ரூ.10,000 ரொக்கம் செலுத்துகிறார். மாறுபடும் முதல் முறையில் கணக்குகள் உள்ளதெனக் கொண்டு நற்பெயருக்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
11.
அனு மற்றும் அருள் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 4:1 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் மனோ என்பவரை 2/5 இலாப விகிதத்தில் நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்கின்றனர். சேர்க்கையின் போது நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு ரூ.25,000 என்று மதிப்பிடப்படுகிறது. மனோ தன்னுடைய பங்கிற்கான நற்பெயர் மதிப்பிற்கான தொகையைக் கொண்டுவர முடியவில்லை. மாறுபடும் முதல் முறையினை அடிப்படையாக கொண்டு நற்பெயர் சரிக்கட்டுவதற்கு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
12.
மாலதி மற்றும் ஷோபனா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 5:4 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் ஜெயஸ்ரீ என்பவரை 1/3 இலாபப் பங்கிற்கு கூட்டாண்மையில் சேர்க்கின்றனர். ஜெயஸ்ரீ தன்னுடைய பங்காக ரூ.6,000 நற்பெயருக்கென செலுத்துகிறார். அவர்களின் புதிய இலாபப்பகிர்வு விகிதம் 3:2:1. நிலைமுதல் முறையில் கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன எனக்கொண்டு, நற்பெயர் சரிக்கட்டுதலுக்கான தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
13.
சொத்துகள் மற்றும் பொறுப்புகள் மறுமதிப்பீடு செய்வதற்கான குறிப்பேட்டுப் பதிவுகள் யாவை?
14.
வாசு மற்றும் தேவி இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் நிலா என்பவரை 1/4 இலாப பங்கிற்கு கூட்டாண்மையில் சேர்க்கின்றனர். நிலா தன்னுடைய பங்காக ரூ.3,000 நற்பெயருக்கென செலுத்துகிறார். அவர்களின் புதிய இலாபப்பகிர்வு விகிதம் 3:3:2. நிலைமுதல் முறையில் கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன எனக்கொண்டு, தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளை உருவாக்கவும்
15.
ஸ்ரீராம் மற்றும் ராஜ் எனும் கூட்டாளிகள் முறையே 2:1 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 1.4.2017 நெல்சன் என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்தனர். கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
(i) சரக்கிருப்பு மதிப்பை ரூ.5,000 உயர்த்த வேண்டும்
(ii) ஏடுகளில் பதிவு பெறாமலுள்ள முதலீடுகள் ரூ.7,000 தற்போது பதிவு செய்தல் வேண்டும்.
(iii) அலுவலக சாதனங்கள் மதிப்பை ரூ.10,000 குறைக்க வேண்டும்
(iv) கொடுபடாமலுள்ள கூலி ரூ.9,500 க்கு வகை செய்யவேண்டும்.
குறிப்பேடு பதிவுகள் தந்து மறுமதிப்பீடு கணக்கு தயாரிக்கவும்.
16.
இராஜேஷ் மற்றும் இரமேஷ் எனும் கூட்டாளிகள் 3:2 என இலாபநட்டம் பகிர்ந்து வந்தனர். இராமன் என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். அவர்களது புதிய இலாப விகிதம் 5:3:2. பின்வரும் மறுமதிப்பீடுகள் செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.
(அ) கட்டடத்தின் மதிப்பு ரூ.15,000 உயர்த்தப்பட்டது
(ஆ) இயந்திரத்தின் மதிப்பு ரூ.4,000 குறைக்கப்பட்டது
(இ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.1,000 உருவாக்கப்பட்டது.
17.
சுந்தர் மற்றும் சுரேஷ் என்னும் கூட்டாளிகள் 3:2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். 2017, ஜனவரி 1-ல் அவர்களின் இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 40,000 | ||
| சுந்தர் | 30,000 | அறைகலன் | 13,000 | |
| சுரேஷ் | 20,000 | 50,000 | சரக்கிருப்பு | 25,000 |
| கடனீந்தோர் | 50,000 | கடனாளிகள் | 15,000 | |
| பொதுக்காப்பு | 10,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 14,000 | |
| தொழிலாளர் ஈட்டுநிதி | 15,000 | வங்கி | 18,000 | |
| 1,25,000 | 1,25,000 |
அவர்கள் சுகுமார் என்பவரை ¼ இலாபப் பங்கிற்கு பின்வரும் விவரங்கள் அடிப்படையில் கூட்டாளியாகச் சேர்த்தனர்.
(i) சுகுமார் ரூ.30,000 முதலாக கொண்டுவருகிறார். நற்பெயரில் அவருடைய பங்கு ரூ.5,000 என மதிப்பிடப்படுகிறது. அவர் நற்பெயருக்கென ரொக்கம் கொண்டுவரவில்லை.
(ii) சரக்கிருப்பு ரூ.20,000 என மதிப்பிடப்பட்டது.
(iii) அறைகலன் மீது ரூ.2,000 தேய்மானம் நீக்கப்பட்டது.
(iv) கட்டடம் மீது 20% தேய்மானம் நீக்கப்பட்டது.
தேவையான பேரேட்டு கணக்குகளை தயார்செய்து கூட்டாளி சேர்ப்பிற்கு பின்வரும் இருப்பு நிலைக்குறிப்பையும் தயார் செய்யவும்.
18.
சாய் மற்றும் சங்கர் இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அந்நிறுவனத்தின் 2017 டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு இருந்தது.
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 34,000 | |||
| சாய் | 48,000 | அறைகலன் | 6,000 | ||
| சங்கர் | 40,000 | 88,000 | முதலீடுகள் | 20,000 | |
| கடனீந்தோர் | 37,000 | கடனாளிகள் | 40,000 | ||
| கொடுபடவேண்டிய கூலி | 8,000 | கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு | 3,000 | 37,000 | |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 12,000 | ||||
| சரக்கிருப்பு | 16,000 | ||||
| வங்கி | 8,000 | ||||
| 1,33,000 | 1,33,000 |
2017, டிசம்பர் 31 இல் சண்முகம் என்பவர் 1/4 இலாபப்பகிர்வு விகிதத்தில் கூட்டாண்மையில் சேருகிறார். அவர் பின்வரும் சரிகட்டுதலுக்குட்பட்டு ரூ.12,000 முதலாக கொண்டு வருகிறார்.
(அ) அறைகலன் ரூ.5,000 மற்றும் கட்டடம் ரூ.50,000 ஆகவும் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
(ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.5,500 ஆக உயர்த்த வேண்டும்.
(இ) பதிவுறாத ரூ.6,000 மதிப்புள்ள முதலீடு கணக்கில் கொண்டுவரப்பட வேண்டும்.
(ஈ) பதிவுறாத ரூ.2,500 மதிப்புள்ள பொறுப்பு பதிவு செய்யப்பட வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகளைத் தந்து, மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்கு பின் உள்ள முதல் கணக்கினையும் பதிவு செய்யவும்.
19.
சீனு மற்றும் சிவா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். சுப்பு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்க்கும்போது அவர்கள் பின்வரும் முடிவுகள் எடுத்தனர்.
(i) கட்டடம் மதிப்பினை ரூ.40,000 ஆக உயர்த்த வேண்டும்.
(ii) கணக்கேடுகளில் இதுவரை பதியப்படாத ரூ.10,000 மதிப்புள்ள முதலீடுகளை கணக்கில் கொண்டுவர வேண்டும்.
(iii) இயந்திரம் மதிப்பு ரூ.14,000 மற்றும் அறைகலன் மதிப்பு ரூ.12,000 குறைக்க வேண்டும்.
(iv) பற்பல கடனீந்தோரில் ரூ.16,000 போக்கெழுத வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் மற்றும் மறு மதிப்பீட்டுக் கணக்கினைத் தயார் செய்யவும்.
20.
ஹரி, மாதவன் மற்றும் கேசவன் ஆகிய கூட்டாளிகள் இலாப நட்டங்களை 5:3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2017, ஏப்ரல் 1 அன்று வான்மதி புதிய கூட்டாளியாகச் சேர்த்தபின் அவர்களின் இலாப விகிதம் 4:3:2:1 என முடிவு செய்யப்பட்டது. பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட வேண்டும்:
(அ) வளாகத்தின் மதிப்பு ரூ.60,000 அதிகரிக்கப்பட்டது
(ஆ) சரக்கிருப்பு மீது ரூ.5,000, அறைகலன் மீது ரூ.2,000, இயந்திரம் மீது ரூ.2,500 தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.
(இ) கொடுபட வேண்டிய பொறுப்பு ரூ.500 உருவாக்கப்பட வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து, மறுமதிப்பீட்டுக் கணக்கினை தயார் செய்யவும்.
21.
ஆனந்த் மற்றும் பாலு என்ற கூட்டாளிகள் முறையே 7 : 3 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 31 மார்ச், 2018 ஆம் நாளைய அவர்களது இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | நிலம் | 60,000 | ||
| ஆனந்த் | 50,000 | சரக்கிருப்பு | 40,000 | |
| பாலு | 30,000 | 80,000 | கடனாளிகள் | 20,000 |
| பற்பல கடனீந்தோர் | 20,000 | கைரொக்கம் | 10,000 | |
| இலாப நட்ட க/கு | 30,000 | |||
| 1,30,000 | 1,30,000 |
2018 ஏப்ரல் 1 ஆம் நாளன்று அவர்கள் சந்துரு என்பவரை கீழ்க்காணும் சரிக்கட்டுதல்களுக்கு ஒப்புக்கொண்டு 1/4 பங்குக்கு கூட்டான்மையில் சேர்த்துக் கொண்டனர்
(அ) சரக்கிருப்பு மதிப்பை ரூ.3,000 குறைப்பது
(ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.2,000 உருவாக்குவது
(இ) நிலத்தின் மதிப்பை ரூ.10,000 மதிப்பேற்றம் செய்வது
மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் முதல் கணக்கினை கூட்டாளி சேர்ப்பிற்குப் பின் தயாரிக்கவும்.
22.
ரகு மற்றும் சாம் எனும் கூட்டாளிகள் முறையே 3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2017 மார்ச் 31 அன்று அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | இயந்திரம் | 30,000 | |||
| ரகு | 40,000 | அறைகலன் | 10,000 | ||
| சாம் | 30,000 | 70,000 | சரக்கிருப்பு | 10,000 | |
| பற்பல கடனீந்தோர் | 30,000 | கடனாளிகள் | 21,000 | ||
| கழிக்க: வாரா | |||||
| ஐயக்கடன் ஒதுக்கு | 1,000 | 20,000 | |||
| வங்கி | 30,000 | ||||
| 1,00,000 | 1,00,000 |
1.4.2017 அன்று பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு பிரகாஷ் என்பவரை கூட்டான்மையில் சேர்த்தனர்.
(அ) பிரகாஷ் ரூ.10,000 முதல் கொண்டு வருவது
(ஆ) இயந்திரம் ரூ.24,000 என மதிப்பிடப்பட்டது
(இ) அறைகலனின் மதிப்பில் ரூ.3,000 குறைப்பது
(ஈ) வாரா ஐயக்கடன் ஒதுக்கை ரூ.3,000 என அதிகரிப்பது
(உ) ஏடுகளில் பதிவு பெறாமலுள்ள கணக்குகளின் மூலம் பெறவேண்டியவைகள் மதிப்பு ரூ.1,000 பதிவு செய்தல்.
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டு கணக்கு மற்றும் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.
1.
தியாக விகிதம் என்பது பழைய கூட்டாளிகளின் தங்கள் இலாபத்தில் ஒரு விகிதத்தை புதிய கூட்டாளிக்கு ஆதரவாக தியாகம் செய்வது அல்லது விட்டுக் கொடுப்பது ஆகும். இந்த தியாக விகிதம் கணக்கிடுவதன் நோக்கம் புதிய கூட்டாளி கொண்டு வரும் நற்பெயரைப் பகிர்ந்து கொள்வதாகும்.
தியாகப் பங்கு = பழைய பங்கு - புதிய பங்கு
தியாக விகிதம் = பழைய கூட்டாளிகள் தியாகம் செய்த பங்கின் விகிதம்
2.
தியாக விகிதம் கணக்கீடு
தியாகவிகிதம் = பழைய பங்கு – புதிய பங்கு
அரவிந்த் =\(\frac { 3 }{ 5 } -\frac { 1 }{ 3 } =\frac { 9-5 }{ 15 } =\frac { 4 }{ 15 } \)
பாலாஜி =\(\frac { 2 }{ 5 } -\frac { 1 }{ 3 } =\frac { 6-5 }{ 15 } =\frac { 1 }{ 15 } \)
எனவே, தியாக விகிதம் = 4:1
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| ரொக்கக் க/கு | ப | 12,000 | |||
| அனிருத் முதல் க/கு | ப | 8,000 | |||
| அரவிந்த் முதல் க/கு (4/15) | 16,000 | ||||
| பாலாஜி முதல் க/கு (1/15) | 4,000 | ||||
| (அனிருத்தின் நற்பெயர் பங்கு பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கில் வரவு வைக்கப்பப்பட்டது) |
3.
பழைய கூட்டாளிகளின் தியாகம் குறிப்பிடப்படவில்லை. பழைய கூட்டாளிகளின் இலாப விகிதமான 5:1 தியாக விகிதமாக கருத வேண்டும். எனவே, தியாகவிகிதம் 5:1.
தருணின் நற்பெயர் =27,000 x \(\frac { 2 }{ 9 } \) =ரூ.6,000
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| தருணின் முதல் க/கு | ப | 6,000 | |||
| அசோக் முதல் க/கு (5/6) | 5,000 | ||||
| மும்தாஜ் முதல் க/கு (1/6) | 1,000 | ||||
| (தருணின் நற்பெயர் பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கில் பழைய இலாப விகிதத்தில் சரிக்கட்டப்பட்டது) |
4.
துரையின் நற்பெயர் பங்கு = 36,000 × 1/4 = ரூ.9,000
பழைய கூட்டாளிகளின் தியாக விகிதம் கொடுக்கப்படவில்லை. பழைய இலாபப் பகிர்வு விகிதமான 1:1:1 தியாக விகிதமாக கொள்ளப்படுகிறது. எனவே, தியாக விகிதம் 1:1:1.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு | ப | 9,000 | |||
| அருண் முதல் க/கு | 3,000 | ||||
| பாபு முதல் க/கு | 3,000 | ||||
| சார்லஸ் முதல் க/கு | 3,000 | ||||
| (நற்பெயருக்காக பெறப்பட்ட தொகை பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு தியாக விகிதப்படி அளிக்கப்பட்டது) | |||||
| அருண் முதல் க/கு | ப | 1,500 | |||
| பாபு முதல் க/கு | ப | 1,500 | |||
| சார்லஸ் முதல் க/கு | ப | 1,500 | |||
| வங்கி க/கு | 4,500 | ||||
| (பழைய கூட்டாளிகள் நற்பெயருக்கான தொகையை எடுத்துக் கொண்டது) |
5.
பழைய கூட்டாளிகளின் தியாகம் கொடுக்கப்படவில்லை. அவர்களின் பழைய இலாபப் பகிர்வு விகிதமான 5:3 தியாக விகிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, தியாக விகிதம் 5:3 ஆகும்.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2019 | வங்கி க/கு | ப | 8,000 | ||
| ஜனவரி 1 | அமுதாவின் முதல் க/கு (5/8) | 5,000 | |||
| புவனாவின் முதல் க/கு (3/8) | 3,000 | ||||
| (நற்பெயருக்காக பெற்ற தொகை அமுதா மற்றும் புவனாவின் தியாக விகிதப்படி பகிரப்பட்டது) | |||||
| " | அமுதாவின் முதல் க/கு | ப | 5,000 | ||
| புவனாவின் முதல் க/கு | ப | 3,000 | |||
| வங்கி க/கு | 8,000 | ||||
| (கூட்டாளிகளால் தொகை எடுக்கப்பட்டது) |
6.
அன்பு, இராஜு அவர்களின் பழைய பங்கு =3:2 அதாவது, \(\frac { 3 }{ 5 } :\frac { 2 }{ 5 } \)
அன்பு, இராஜு மற்றும் அக்ஷய்-ன் புதிய இலாபப் பங்கு =5:3:2 அதாவது, \(\frac { 5 }{ 10 } :\frac { 3 }{ 10 } :\frac { 2 }{ 10 } \)
தியாகப் பங்கு = பழைய பங்கு - புதிய பங்கு
அன்பு =\(\frac { 3 }{ 5 } -\frac { 5 }{ 10 } =\frac { 6-5 }{ 10 } =\frac { 1 }{ 10 } \)
இராஜு=\(\frac { 2 }{ 5 } -\frac { 3 }{ 10 } =\frac { 4-3 }{ 10 } =\frac { 1 }{ 10 } \)
அன்பு, இராஜுவின் தியாகப் பங்கு \(\frac { 1 }{ 10 } :\frac { 1 }{ 10 } \) அதாவது, 1:1
7.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2017 | இலாப நட்டப் பகிர்வு க/கு | ப | 20,000 | ||
| ஏப்ரல் 1 | பொதுக்காப்பு க/கு | ப | 5,000 | ||
| தொழிலாளர் ஈட்டு நிதி க/கு | ப | 15,000 | |||
| இரத்ன குமார் முதல் க/கு (40,000 x 3/5) | 24,000 | ||||
| ஆரோக்கியதாஸ் முதல் க/கு (40,000 x 2/5) | 16,000 | ||||
| (பகிர்ந்து தரா இலாபம் மற்றும் காப்பு பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குக்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்பட்டது) |
8.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2017 | பொதுக்காப்பு க/கு | ப | 50,000 | ||
| மார்ச் 31 | மாலா முதல் க/கு (50,000 x 3/5) | 30,000 | |||
| விமலா முதல் க/கு (50,000 x 2/5) | 20,000 | ||||
| (பொதுக்காப்பு பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குக்கு பழைய இலாபவிகிதத்தில் மாற்றப்பட்டது.) |
9.
(அ) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகை முழுவதையும் போக்கெழுதுவது:
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 | |||||
| ஏப்ரல் 1 | சாம் முதல் க/கு (3/5) | ப | 18,000 | ||
| ஜோஸின் முதல் க/கு (2/5) | ப | 12,000 | |||
| நற்பெயர் க/கு (ஏட்டில் உள்ள நற்பெயரை போக்கெழுதியது) |
30,000 |
(ஆ) ஏட்டில் உள்ள நற்பெயரில் ரூ.20,000-ஐ போக்கெழுதுவது:
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 | |||||
| ஏப்ரல் 1 | சாம் முதல் க/கு (20,000 x 3/5) | ப | 12,000 | ||
| ரோஸின் முதல் க/கு (20,000 x (2/5) | ப | 8,000 | |||
| நற்பெயர் க/கு (ஏட்டில் உள்ள நற்பெயரை போக்கெழுதியது) |
20,000 |
10.
தியாக விகிதம் கணக்கிடுதல்:
தியாக விகிதம் = பழைய பங்கு - புதிய பங்கு
வருண் = \(\frac { 5 }{ 9 } -\frac { 1 }{ 3 } =\frac { 5-3 }{ 9 } =\frac { 2 }{ 9 } \)
பாரத் = \(\frac { 4 }{ 9 } -\frac { 1 }{ 3 } =\frac { 4-3 }{ 9 } =\frac { 1 }{ 9 } \)
எனவே, தியாக விகிதம் = \(\frac { 2 }{ 9 } :\frac { 1 }{ 9 } \) அல்லது 2 : 1
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| ரொக்கம் க/கு | ப | 10,000 | |||
| தாமு முதல் க/கு | ப | 5,000 | |||
| வருண் முதல் க/கு (2/3) | 10,000 | ||||
| பாரத் முதல் க/கு (1/3) (தாமுவின் நற்பெயர் பங்கு பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கில் வரவு வைக்கப்பட்டது) |
5,000 |
11.
பழைய கூட்டாளிகளின் தியாகம் குறிப்பிடப்படவில்லை பழைய கூட்டாளிகளின் விகிதமான 4 : 1 தியாக விகிதமாக கருத வேண்டும். எனவே தியாக விகிதம் 4 : 1
மனோவின் நற்பெயர் = 25,000 x \(\frac { 2 }{ 5 } \) = ரூ.10,000
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| மனோவின் முதல் க/கு | ப | 10,000 | |||
| அனு முதல் க/கு (4/5) | 8,000 | ||||
| அருள் முதல் க/கு (1/5) (மனோவின் நற்பெயர் பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கில் பழைய இலாப விகிதத்தில் சரிக்கப்பட்டது) |
2,000 |
12.
தியாக விகிதம் கணக்கிடுதல்:
தியாக விகிதம் = பழைய பங்கு - புதிய பங்கு
மாலதி = \(\frac { 5 }{ 9 } -\frac { 3 }{ 6 } =\frac { 30-27 }{ 54 } \) = \(\frac { 3 }{ 54 } =\frac { 1 }{ 18 } \)
ஷோபனா = \(\frac { 4 }{ 9 } -\frac { 2 }{ 6 } =\frac { 24-18 }{ 54 } \) = \(\frac { 6 }{ 54 } =\frac { 2 }{ 18 } \)
எனவே, தியாக விகிதம் = \(\frac { 1 }{ 18 } :\frac { 2 }{ 18 } \) (அல்லது) 1 : 2
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு | ப | 6,000 | |||
| மாலதி நடப்பு க/கு (1/3) | 2,000 | ||||
| ஷோபனா நடப்பு க/கு (2/3) (நற்பெயருக்கென கொண்டு வரப்பட்ட ரொக்கம் பழைய கூட்டாளிகளின் தியாக விகிதப்படி வரவு செய்யப்பட்டது) |
4,000 |
13.
சொத்துகளையும், பொறுப்புகளையும் மறுமதிப்பீடு செய்யும் போது பின்வரும் குறிப்பேட்டு பதிவுகள் செய்யப்படுகின்றன.
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 1.சொத்துக்களின் மதிப்பு அதிகரிக்கும் போது குறிப்பிட்ட சொத்து க/கு | ப | XXX | |||
| மறுமதிப்பீட்டு க/கு | XXX | ||||
| 2.சொத்துக்களின் மதிப்பு குறையும் போது மறுமதிப்பீட்டு சொத்து க/கு |
ப | XXX | |||
| குறிப்பிட்ட சொத்து க/கு | XXX | ||||
| 3. பொறுப்புகளின் மதிப்பு குறையும் போது மறுமதிப்பீட்டு க/கு |
ப | XXX | |||
| குறிப்பிட்ட பொறுப்பு க/கு | XXX | ||||
| 4. பொறுப்புகளின் மதிப்பு குறையும் போது குறிப்பிட்ட பதிவு க/கு |
ப | XXX | |||
| மறுமதிப்பீட்டு க/கு | XXX | ||||
| 5. ஏட்டில் பதிவு செய்யாத பொறுப்புகளை பதிவு செய்யும் போது குறிப்பிட்ட சொத்து க/கு | ப | XXX | |||
| மறுமதிப்பீட்டு க/கு | XXX | ||||
| 6. ஏட்டில் பதிவு செய்யாத பொறுப்புகளை பதிவு செய்யும் போது மறுமதிப்பீடு க/கு | ப | XXX | |||
| குறிப்பிட்ட பொறுப்பு க/கு | XXX | ||||
| 7. மறுமதிப்பீட்டு கணக்கின் இருப்பினை மாற்ற (அ) மறுமதிப்பீட்டு இலாபமாக இருந்தால் மறுமதிப்பீடு க/கு |
ப | XXX | |||
| பழைய கூட்டாளிகளின் முதல் க/கு (பழைய விகிதத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக) |
XXX | ||||
| (ஆ) மறுமதிப்பீட்டு நட்டமாக இருந்தால் பழைய கூட்டாளிகளின் முதல் க/கு (பழைய விகிதத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக) |
ப | XXX | |||
| மறுமதிப்பீட்டு க/கு | XXX |
14.
தியாக விகிதம் கணக்கிடுதல்:
தியாக விகிதம் = பழைய பங்கு – புதிய பங்கு
வாசு =\(\frac { 3 }{ 5 } -\frac { 3 }{ 8 } =\frac { 24-15 }{ 40 } =\frac { 9 }{ 40 } \)
தேவி=\(\frac { 2 }{ 5 } -\frac { 3 }{ 8 } =\frac { 16-15 }{ 40 } =\frac { 1 }{ 40 } \)
எனவே, தியாக விகிதம் = 9:1
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு | ப | 3,000 | |||
| வாசுவின் நடப்பு க/கு (9/10) | 2,700 | ||||
| தேவியின் நடப்பு க/கு (1/10) | 300 | ||||
| (நற்பெயருக்கென கொண்டுவரப்பட்ட ரொக்கம் பழைய கூட்டாளிகளின் தியாக விகிதப்பதப்படி வரவு செய்யப்பட்டது) |
15.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2017 | சரக்கிருப்பு க/கு | ப | 5,000 | ||
| ஏப்ரல் 1 | முதலீடுகள் க/கு | ப | 7,000 | ||
| மறுமதிப்பீட்டு க/கு | 12,000 | ||||
| (சரக்கிருப்பின் மதிப்பு அதிகரிப்பு மற்றும் பதிவு பெறாமலுள்ள முதலீடுகள் பதிவு செய்யப்பட்டது) | |||||
| " | மறுமதிப்பீட்டு க/கு | ப | 19,500 | ||
| அலுவலக சாதனங்கள் க/கு | 10,000 | ||||
| கொடுபட வேண்டிய கூலி க/கு | 9,500 | ||||
| (அலுவலக சாதனங்களின் மதிப்பு குறைப்பது மற்றும் கொடுபடா கூலி பதிவு செய்யப்பட்டது) | |||||
| " | ஸ்ரீராம் முதல் க/கு | ப | 5,000 | ||
| ராஜ் முதல் க/கு | ப | 2,500 | |||
| மறுமதிப்பீட்டு க/கு | 7,500 | ||||
| (மறுமதிப்பீட்டு நட்டம் முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| அலுவலக சாதனங்கள் க/கு | 10,000 | சரக்கிருப்பு க/கு | 5,000 | |
| கொடுபட வேண்டிய கூலி க/கு | 9,500 | முதலீடுகள் க/கு | 7,000 | |
| மறுமதிப்பீட்டு நட்டம்: | ||||
| ஸ்ரீராம் முதல் க/கு (2/3) | 5,000 | |||
| ராஜ் முதல் க/கு (1/3) | 2,500 | 7,500 | ||
| 19,500 | 19,500 |
16.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| கட்டடம் க/கு | ப | 15,000 | |||
| மறுமதிப்பீட்டு க/கு | 15,000 | ||||
| (கட்டடத்தின் மதிப்பு உயர்த்துவது பதிவு செய்யப்பட்டது) | |||||
| மறுமதிப்பீட்டு க/கு | ப | 5,000 | |||
| இயந்திரம் க/கு | 4,000 | ||||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | ||||
| (இயந்திரத்தின் மதிப்பு குறைப்பது மற்றும் ஒதுக்கு பதிவு செய்யப்பட்டது) | |||||
| மறுமதிப்பீட்டு | ப | 10,000 | |||
| இராஜேஷ் முதல் க/கு | 6,000 | ||||
| இரமேஷ் முதல் க/கு | 4,000 | ||||
| (மறுமதிப்பீட்டு இலாபம் பகிர்ந்தளித்தது) |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| இயந்திரம் க/கு | 4,000 | 15,000 | ||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| இராஜேஷ் முதல் க/கு (3/5) | 6,000 | |||
| இரமேஷ் முதல் க/கு (2/5) | 4,000 | 10,000 | ||
| 15,000 | 15,000 |
17.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 5,000 | மறுமதிப்பீட்டு நட்டம்: | ||
| அறைகலன் க/கு | 2,000 | சுந்தர் முதல் க/கு (3/5) | 9,000 | |
| கட்டடம் க/கு | 8,000 | சுரேஷ் முதல் க/கு (2/5) | 6,000 | 15,000 |
| 15,000 | 15,000 |
| விவரம் | சுந்தர் ரூ. |
சுரேஷ் ரூ. |
சுகுமார் ரூ. |
விவரம் | சுந்தர் ரூ. |
சுரேஷ் ரூ. |
சுகுமார் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| மறுமதிப்பீடு க/கு | 9,000 | 6,000 | - | இருப்பு கீ/கொ | 30,000 | 20,000 | - |
| சுந்தர் முதல் க/கு | - | - | 5,000 | பொதுக்காப்பு க/கு | 6,000 | 4,000 | - |
| (நற்பெயர் பங்கு) | வங்கி க/கு | - | - | 30,000 | |||
| இருப்பு கீ/இ | 41,000 | 24,000 | 25,000 | தொழிலாளர் ஈட்டு நிதி க/கு | 9,000 | 6,000 | - |
| சுகுமார் முதல் க/கு | 5,000 | - | - | ||||
| (நற்பெயர் பங்கு) | |||||||
| 50,000 | 30,000 | 30,000 | 50,000 | 30,000 | 30,000 | ||
| இருப்பு கீ/கொ | 41,000 | 24,000 | 25,000 |
1.1.2017 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துக்கள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 40,000 | |||
| சுந்தர் | 39,000 | கழிக்க: தேய்மானம் 20% | 8,000 | 32,000 | |
| சுரேஷ் | 26,000 | அறைகலன் | 13,000 | ||
| சுகுமார் | 25,000 | 90,000 | கழிக்க: தேய்மானம் | 2,000 | 11,000 |
| கடனீந்தோர் | 50,000 | சரக்கிருப்பு | 25,000 | ||
| கழிக்க: தேய்மானம் | 5,000 | 20,000 | |||
| கடனாளிகள் | 15,000 | ||||
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 18,000 | 14,000 | |||
| வங்கி (18,000 + 30,000) | 30,000 | 48,000 | |||
| 1,40,000 | 1,40,000 |
18.
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2017 | |||||
| டிசம்பர் 31 | வங்கி க/கு | ப | 12,000 | ||
| சண்முகம் முதல் க/கு (சண்முகம் முதல் கொண்டு வந்தது) |
12,000 | ||||
| 2017 | கட்டடம் க/கு | ப | 16,000 | ||
| டிசம்பர் 31 | கணக்குகளின் மூலம் பெற வேண்டியவைகள் க/கு | ப | 6,000 | ||
| மறுமதிப்பீட்டுக் க/கு (கட்டடம் மதிப்பு உயர்வு மற்றும் பதிவு பெறாத கணக்குகளின் மூலம் பெற வேண்டியவைகள் பதிவு செய்யப்பட்டது) |
22,000 | ||||
| 2017 | |||||
| டிசம்பர் 31 | மறுமதிப்பீட்டுக் க/கு | ப | 6,000 | ||
| அறைகலன் க/கு | 1,000 | ||||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 2,500 | ||||
| பதிவுறாத முதலீடுகள் க/கு (அறைகலன் மீதான தேய்மானம் மற்றும் வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கியது) |
2,500 | ||||
| " | மறுமதிப்பீட்டுக் க/கு | ப | 16,000 | ||
| சாய் முதல் க/கு | 10,000 | ||||
| சங்கர் முதல் க/கு (மறுமதிப்பீட்டு இலாபம் முதல்கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
6,000 |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ |
|---|---|---|---|---|
| அறைகலன் க/கு (5,000- 6,000) |
1,000 | கட்டடம் க/கு | 16,000 | |
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு (3,000- 5,500) |
2,500 | (34,000- 50,000) | ||
| பதிவுபெறாத முதலீடுகள் க/கு | 2,500 | வேண்டியவைகள் க/கு | 6,000 | |
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| சாய் முதல் க/கு (16,000 x 5/8) |
10,000 | |||
| சங்கர் முதல் க/கு | 6,000 | |||
| 16,000 | ||||
| 22,000 | 22,000 |
| விவரம் | சாய் ரூ. |
சங்கர் ரூ. |
சண்முகம் ரூ. |
விவரம் | சாய் ரூ. |
சங்கர் ரூ. |
சண்முகம் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/இ | 58,000 | 46,000 | 12,000 | இருப்பு கீ/கொ | 48,000 | 40,000 | - |
| வங்கி க/கு | - | - | 12,000 | ||||
| மறுமதிப்பீட்டுக் க/கு | 10,000 | 6,000 | - | ||||
| 58,000 | 46,000 | 12,000 | 58,000 | 46,000 | 12,000 | ||
| இருப்பு கீ/கொ | 58,000 | 46,000 | 12,000 |
19.
| நாள் | விவரம் |
|
பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு |
|---|---|---|---|---|---|
| கட்டடம் க/கு | ப | 40,000 | |||
| முதலீடுகள் க/கு | ப | 10,000 | |||
| பற்பல கடனீந்தோர் க/கு | ப | 16,000 | |||
| மறுமதிப்பீட்டுக் க/கு (சரக்கிருப்பின் மதிப்பு அதிகரிப்பு, பதிவு பெறாமலுள்ள முதலீடுகள் பதிவு செய்யப்பட்டது மற்றும் பற்பல கடனீந்தோர் போக்கெழுதியது) |
66,000 | ||||
| மறுமதிப்பீட்டு க/கு | ப | 26,000 | |||
| இயந்திரம் க/கு | 14,000 | ||||
| அறைகலன் க/கு (இயந்திரம் மற்றும் அறைகலனின் மதிப்பு குறைப்பது) |
12,000 | ||||
| மறுமதிப்பீடு க/கு | ப | 40,000 | |||
| சீனு முதல் க/கு (5/8) | 25,000 | ||||
| சிவா முதல் க/கு (3/8) (மறுமதிப்பீட்டு இலாபம் முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
15,000 |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| இயந்திரம் க/கு | 14,000 | கட்டடம் க/கு | 40,000 | |
| அறைகலன் | 12,000 | முதலீடுகள் க/கு | 10,000 | |
| மறுமதிப்பீட்டு இலாபம்: | பற்பல கடனீந்தோர் க/கு | 16,000 | ||
| சீனு முதல் க/கு (40,000 x 5/8) |
25,000 | |||
| சிவா முதல் க/கு (40,000 x 3/8) |
15,000 | |||
| 40,000 | ||||
| 66,000 | 66,000 |
20.
| நாள் | விவரம் |
|
பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு |
|---|---|---|---|---|---|
| 2017 | வளாகம் க/கு | ப | 60,000 | ||
| ஏப்ரல் 1 | மறுமதிப்பீடு க/கு (கட்டடத்தில் மதிப்பு உயர்த்துவது பதிவு செய்யப்பட்டது) |
60,000 | |||
| மறுமதிப்பீடு க/கு | ப | 10,000 | |||
| சரக்கிருப்பு க/கு | 5,000 | ||||
|
அறைகலன் க/கு |
2,000 | ||||
| இயந்திரம் க/கு | 2.500 | ||||
| கொடுக்கப்படவேண்டிய பொறுப்பு க/கு (இயந்திரம், அறைகலன், சரக்கிருப்பு மதிப்பு குறைப்பது மற்றும் பொறுப்பு பதிவு செய்யப்பட்டது) |
500 | ||||
| மறுமதிப்பீடு க/கு | ப | 50,000 | |||
| ஹரி முதல் க/கு | 25,000 | ||||
| மாதவன் முதல் க/கு | 15,000 | ||||
| கேசவன் முதல் க/கு (மறுமதிப்பீடு இலாபம் பகிர்ந்தளித்தது) |
10,000 |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 5,000 | வளாகம் க/கு | 60,000 | |
| அறைகலன் க/கு | 2,000 | |||
| இயந்திரம் க/கு | 2,500 | |||
| கொடுக்கப்பட வேண்டிய பொறுப்பு க/கு | 500 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| ஹரி முதல் க/கு (50,000 x 5/10) |
25,000 | |||
| மாதவன் முதல் க/கு (50,000 x 3/10) |
15,000 | |||
| கேசவன் முதல் க/கு | 10,000 | |||
| (50,000 x 2/10) | 50,000 | |||
| 60,000 | 60,000 |
21.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 3,000 | நிலம் க/கு | 10,000 | |
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 2,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| ஆனந்த் முதல் க/கு (7/10) | 3,500 | |||
| பாலு முதல் க/கு (3/10) | 1,500 | 5,000 | ||
| 10,000 | 10,000 |
| விவரம் | ஆனந்த் ரூ. | பாலு ரூ. | சந்துரு ரூ. | விவரம் | ஆனந்த் ரூ. | பாலு ரூ | சந்துரு ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/இ | 74,500 | 40,500 | 20,000 | இருப்பு கீ/கொ | 50,000 | 30,000 | |
| வங்கி க/கு | - | - | 20,000 | ||||
| மறுமதிப்பீட்டு க/கு | 3,500 | 1,500 | - | ||||
| இலாப நட்ட க/கு | 21,000 | 9,000 | - | ||||
| 74,500 | 40,500 | 20,000 | 74,500 | 40,500 | 20,000 | ||
| இருப்பு கீ/கொ | 74,500 | 40,500 | 20,000 |
22.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2017 | வங்கி க/கு | ப | 10,000 | ||
| ஏப்ரல் 1 | பிரகாஷ் முதல் க/கு | 10,000 | |||
| (பிரகாஷ் முதல் கொண்டு வந்தது) | |||||
| " | மறுமதிப்பீட்டு க/கு | ப | 11,000 | ||
| இயந்திரம் க/கு | 6,000 | ||||
| அறைகலன் க/கு | 3,000 | ||||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 2,000 | ||||
| (இயந்திரம் மற்றும் அறைகலன் மீதான தேய்மானம் மற்றும் வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கியது | |||||
| " | கணக்குகளின் மூலம் பெறவேண்டியவைகள் க/கு | 1,000 | |||
| மறுமதிப்பீட்டு க/கு | 1,000 | ||||
| (பதிவு பெறாத கணக்குகளின் மூலம் பெற வேண்டியவைகள் பதிவு செய்யப்பட்டது ) | |||||
| " | ரகு முதல் க/கு | 6,000 | |||
| சாம் முதல் க/கு | ப | 4,000 | |||
| மறுமதிப்பீட்டு க/கு | 10,000 | ||||
| (மறுமதிப்பீட்டு நட்டம் முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| இயந்திரம் க/கு | 6,000 | கணக்குகள் மூலம் பெற | 1,000 | |
| அறைகலன் க/கு | 3,000 | வேண்டியவைகள் க/கு | ||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 2,000 | மறுமதிப்பீட்டு நட்டம்: | ||
| ரகு முதல் க/கு (3/5) | 6,000 | |||
| சாம் முதல் க/கு (2/5) | 4,000 | 10,000 | ||
| 11,000 | 11,000 |
| நாள் | விவரம் | ரகு ரூ. | சாம் ரூ. | பிரகாஷ் ரூ. | நாள் | விவரம் | ரகு ரூ. | சாம் ரூ. | பிரகாஷ் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| மறுமதிப்பீட்டு க/கு | 6,000 | 4,000 | - | இருப்பு கீ/கொ | 40,000 | 30,000 | - | ||
| இருப்பு கீ/இ | 34,000 | 26,000 | 10,000 | வங்கி க/கு | - | - | 10,000 | ||
| 40,000 | 30,000 | 10,000 | 40,000 | 30,000 | 10,000 | ||||
| இருப்பு கீ/கொ | 34,000 | 26,000 | 10,000 |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards