12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள்
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
எடுப்புகள் மீதான வட்டியை கணக்கிடும் முறைகளை எழுதுக.
2.
முதல் மீதான வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
3.
குறிப்பு வரைக:
(i) கூட்டாளிகளின் முதல் கணக்கு
(ii) கூட்டாளிகளின் நடப்பு கணக்கு
4.
கூட்டாளிகளின் முதல் கணக்குகளைத் தயாரிக்கும் முறைகளை எழுதுக.
5.
சந்தோஷ் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடப்பட வேண்டும். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:
| நாள் | ரூ. |
|---|---|
| பிப்ரவரி 1 | 2,000 |
| மே 1 | 10,000 |
| ஜுலை 1 | 4,000 |
| அக்டோபர் 1 | 6,000 |
பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.
6.
சந்தோஷ் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடப்பட வேண்டும். டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் 2018 ஆம் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:
| நாள் | ரூ. |
|---|---|
| பிப்ரவரி 1 | 2,000 |
| மே 1 | 10,000 |
| ஜுலை 1 | 4,000 |
| அக்டோபர் 1 | 6,000 |
எடுப்புகள் மீதான வட்டித் தொகையைக் கணக்கிடவும்.
7.
வட்டிக்குரிய காலம் என்றால் என்ன?
8.
முதல் மீதான வட்டி என்றால் என்ன?
9.
கூட்டாண்மை பொருள் தருக.
10.
2018 ஆம் ஆண்டில் மேத்யூ என்ற கூட்டாளி எடுத்த எடுப்புகள் ரூ.20,000. எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என கணக்கிடப்பட்டது. 2018, டிசம்பர் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.
11.
_______ கணக்கு இலாபநட்டக் கணக்கின் நீட்டிப்பாகும்.
இலாபநட்டப் பகிர்வு
வியாபாரக்
முதல்
எடுப்பு
12.
தனியாள் வணிகத்தில் இலாபநட்டக் கணக்கில் உள்ள இலாபம் அல்லது நட்டம், தனியாள் வணிகரின் ______ கணக்கிற்கு நேரடியாக மாற்றப்படுகிறது.
சொத்து
முதல்
எடுப்பு
கடனாளிகள்
13.
________ என்பது கூட்டாளிகளுக்கிடையேயான உடன்படிக்கையின் விதிகளை உள்ளடக்கிய எழுதுவடிவிலான ஒரு ஆவணம் ஆகும்.
கூட்டாண்மை ஒப்பாவணம்
கூட்டாண்மை உடன்பாடு
இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
14.
ஒரு நிறுவனத்தில் A, B ஆகிய கூட்டாளிகளின் முதல் கணக்குகள் மற்றும் நடப்புக் கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. B கொண்டுவரும் கூடுதல் முதல் பதியப்படுவது.
B யின் நடப்புக் கணக்கு
B யின் முதல் கணக்கு
B யின் நடப்புக் கணக்கு அல்லது முதல் கணக்கு
A யின் முதல் கணக்கு
15.
கூட்டாண்மை உடன்பாடு இல்லாதபோது கூட்டாளிகளுக்கு
ஊதியம் அளிக்கப்படும்
ஊதியம் அளிக்கப்படமாட்டாது
நிறுவனத்திற்காக உழைத்தவர்களுக்கு சம்பளம் அளிக்கப்படும்
இலாபம் அளிக்கப்படமாட்டாது
16.
முரளி மற்றும் சேது இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள், முரளி, கழிவுக்கு முன் உள்ள நிகர இலாபத்தில் 10% கழிவாகப் பெற வேண்டும். சேது, கழிவுக்குப் பின் உள்ள நிகர இலாபத்தில் 10% கழிவாகப் பெற வேண்டும். 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய கழிவு கணக்கிடுவதற்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ரூ.2,20,000 முரளி மற்றும் சேதுவிற்கு கழிவினைக் கண்டுபிடிக்கவும்
17.
நிலா மற்றும் மாதுரி இருவரும் கூட்டாளிகள், நிலா ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும் ரூ.60,000 எடுத்துக்கொண்டார். கணக்கிடப்பட வேண்டிய எடுப்புகள் மீதான வட்டி ஆண்டுக்கு 4%, 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி, சராசரி முறையைப் பயன்படுத்திக் கணக்கிடவும்
18.
அன்பு என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி, கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12% கணக்கிடப்படுகிறது. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:
| நாள் | ரூ. |
|---|---|
| மார்ச் 1 | 8,000 |
| ஜூன் 1 | 6,000 |
| செப்டம்பர் 1 | 4,000 |
| டிசம்பர் 1 | 3,000 |
பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்
19.
பின்வரும் தகவல்களிலிருந்து சாந்தினி மற்றும் சுமதி என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகளை அவர்களின் முதல், நிலை முதலாக இருக்கும் போது தயாரிக்கவும்.
| விவரம் | சாந்தினி ரூ. |
சுமதி ரூ |
|---|---|---|
| 2018, ஜனவரி 1 அன்று முதல் | 2,00,000 | 1,80,000 |
| 2018, ஜனவரி 1 அன்று நடப்புக் கணக்கு (வ) | 15,000 | 13,000 |
| 2018, ஜூன் 1 கூடுதல் முதல் கொண்டு வந்தது | 20,000 | 18,000 |
| 2018 ஆம் ஆண்டில் எடுப்புகள் | 40,000 | 18,000 |
| எடுப்புகள் மீது வட்டி | 1,500 | 1,300 |
| 2018 - ல் இலாபப் பங்கு | 20,000 | 18,000 |
| முதல் மீது வட்டி | 9,300 | 7,400 |
| ஊதியம் | 9,000 | |
| கழிவு | 2,200 |
1.
எடுப்புகள் மீதான வட்டி நேரடி முறை அல்லது பெருக்குத் தொகை முறை இவைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் கணக்கிடப்படுகிறது
(i) நேரடி முறை:
இம்முறையில் எடுப்பு மீதான வட்டி, எடுப்புகள் எடுத்த நாளிலிருந்து கணக்காண்டின் இறுதி நாள் வரையிலான காலத்திற்குரிய எடுப்புகள் மீது கணக்கிடப்படுகிறது. எடுப்புகள் மீதான வட்டி கணக்கிட பின்வரும் சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது
எடுப்புகள் மீதான வட்டி = எடுப்புத் தொகை x வட்டி விகிதம் x வட்டிக்குரிய காலம்
(ii) பெருக்குத் தொகை முறை:
பெருக்குத் தொகை முறையில், மொத்தப் பெருக்குத் தொகையின் மீது வட்டி கணக்கிடப்படுகிறது. அதாவது, எடுப்புத் தொகை மற்றும் எடுப்புத் தொகை மாத அடிப்படையில் கணக்கிடப்படுவதாக இருந்தால், மொத்தப் பெருக்குத் தொகைக்கு, குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் ஒரு மாதத்திற்குரிய வட்டி கணக்கிடப்படுகிறது
(iii) சராசரி கால முறை:
கூட்டாளிகள் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட கால இடைவெளியில் எடுத்ததால், எடுப்புகள் மீது வட்டி, சராசரி கால அடிப்படையில் கணக்கிடப்படும். குறிப்பிட்ட கால இடைவெளி என்பது மாதந்தோறும், காலாண்டு தோறும், அரையாண்டு தோறும், 2 மாதங்களுக்கு ஒரு முறை தொகை எடுப்பதைக் குறிக்கிறது.
2.
(i) முதல் மீது வட்டி நடப்பாண்டுக்குரிய தொடக்க முதல் கணக்கிடப்படுகிறது.
(ii) அவ்வாண்டில் கூட்டாளிகள் கூடுதல் முதல் ஏதாவது கொண்டு வந்திருந்தாலோ, அல்லது முதல் தொகையை நிரந்தரமாக திரும்ப எடுத்திருந்தாலோ, அது முதல் தொகையில் மாற்றத்தை உண்டாக்கும்
(iii) எனவே, நடப்பாண்டுக்குரிய வட்டியானது முதல் தொகையில் ஏற்பட்ட மாற்றங்களின் விகிதாச்சாரத்திற்கேற்ப கணக்கிடுதல் வேண்டும்.
(iv) முதல் மீது வட்டி = முதல் தொகை x ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் x வட்டிக்குரிய காலம்
3.
(i) கூட்டாளிகளின் முதல் கணக்கு:
(1) நிறுவனத்திற்கு கூட்டாளியால் கொண்டுவரப்பட்ட தொடக்க முதல் மற்றும் அவரால் எதிர்வரும் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட ஏதேனும் கூடுதல் முதல போன்றவை முதல் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன.
(2) ஒரு கூட்டாளியால் நிரந்தரமாக நிறுவனத்திலிருந்து முதல் தொகை திரும்ப எடுக்கப்பட்டிருந்தால் அது முதல் கணக்கில் பற்று வைக்கப்படுகிறது.
(ii) கூட்டாளிகளின் நடப்பு கணக்கு
(1) கூட்டாளிகளால் கொண்டுவரப்பட்ட தொடக்க முதல், கூடுதல் முதல் மற்றும் அவர்களால் நிரந்தரமாக திரும்ப எடுக்கப்பட்ட முதல் தவிர, கூட்டாளிகளுக்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள அனைத்து பிற நடவடிக்கைகளைப் பதிவு செய்வதற்காக கூட்டாளிகளின் நடப்புக் கணக்கு தயாரிக்கப்படுகிறது
(2) முதல் மீது வட்டி, கூட்டாளிகளின் ஊதியம் அல்லது கழிவு மற்றும் கூட்டாளிக்குரிய இலாபப் பங்கு போன்றவை இக்கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன.
(3) எடுப்புகள், எடுப்புகள் மீது வட்டி மற்றும் கூட்டாளியின் நட்டப் பங்கு போன்றவை இக்கணக்கில் பற்று வைக்கப்படுகின்றன
4.
கூட்டாளிகள், கூட்டாண்மை நிறுவனத்தில் முதலீடு செய்யும் தொகை கூட்டாளிகளின் முதல் எனப்படுகிறது. ஒரு நிறுவனத்திலுள்ள கூட்டாளிகளின் முதல் கணக்குகளைப் பின்வரும் ஏதேனும் இரு முறைகளில் பராமரிக்கலாம்.
(i) நிலைமுதல் முறை மற்றும்
(ii) மாறுபடும் முதல் முறை
(i) நிலைமுதல்:
நிலைமுதல் முறையில், கூட்டாளிகளின் முதல் மாறாமல் இருக்கும் மற்றும் பொதுவாக அதே தொகையாக, நிலையானதாக இருக்கும். ஒவ்வொரு கூட்டாளிக்கும் இரண்டு கணக்குகள் பராமரிக்கப்பட வேண்டும். அதாவது (அ) முதல் கணக்கு மற்றும் (ஆ) நடப்புக் கணக்கு, தொடக்க முதல் கொண்டு வந்தது, கூடுதல் முதல் கொண்டு வந்தது போன்றவை தொடர்பான நடவடிக்கைகள் முதல் கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன. மற்ற அனைத்து நடவடிக்கைகளும் நடப்புக் கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன.
(ii) மாறுபடும் முதல் முறை:
இம்முறையில், ஒவ்வொரு கூட்டாளிக்கும் முதல் கணக்கு மட்டும் பராமரிக்கப்படுகிறது கூட்டாளி மற்றும் நிறுவனத்திற்கு இடையேயுள்ள அனைத்து நடவடிக்கைகளும் முதல் கணக்கில் பதியப்படுகின்றன. கூட்டாளியால் கொண்டு வரப்பட்ட தொடக்க முதல் மற்றும் கூடுதல் முதல், முதல் மீது வட்டி, கூட்டாளியின் ஊதியம், கழிவு மற்றும் கூட்டாளியின் இலாபப் பங்கு போன்றவை இக்கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன. முதல் திரும்ப எடுத்தது, எடுப்புகள் மீது வட்டி மற்றும் கூட்டாளிக்குரிய நட்டப்பங்கு போன்றவை இக்கணக்கில் பற்று வைக்கப்படுகின்றன
5.
| எடுப்பு நாள் | எடுப்புத் தொகை ரூ. |
வட்டிக்குரிய காலம் டிசம்பர் 31 வரை (மாதங்களில்) | பெருக்குத் தொகை |
|---|---|---|---|
| பிப்ரவரி 1 | 2,000 | 11 | 22,000 |
| மே 1 | 10,000 | 8 | 80,000 |
| ஜூலை 1 | 4,000 | 6 | 24,000 |
| அக்டோபர் 1 | 6,000 | 3 | 18,000 |
| மொத்த பெருக்குத் தொகை | 1,44,000 | ||
எடுப்புகள் மீதான வட்டி = மொத்த பெருக்குத் தொகை x ஆண்டு வட்டி வீதம் x \(\frac {1}{12}\)
= ரூ.1,44,000 x \(\frac { 6 }{ 100 } \times \frac { 1 }{ 12 } \) = ரூ.720
6.
எடுப்புகள் மீதான வட்டி = எடுப்புத் தொகை x வட்டி வீதம் x வட்டிக்குரிய காலம்
7.
வட்டிக்குரிய காலம் என்பது எடுப்புகள் எடுத்த நாள் முதல் கணக்காண்டின் இறுதி நாள் வரையிலான காலமாகும். வெவ்வேறு தொகைகள் வெவ்வேறு கால இடைவெளிகளில் எடுக்கும் போது இம்முறை பொருந்துகிறது.
8.
(i) முதல் மீது வட்டி என்பது கூட்டாளிகளின் முதல் மீது அனுமதிக்கப்படும் வட்டி ஆகும்.
(ii) பொதுவாக, கூட்டாளிகளின் முதல் அவர்களின் இலாபப் பகிர்வு விகிதத்திற்கு சமனற்றவையாக இருந்தால் முதல் மீது வட்டி அனுமதிக்க கூட்டாளிகள் ஒப்புக் கொள்ளலாம்.
(iii) முதல் மீதான வட்டி வீதம் பொதுவாக கூட்டாளிகள் ஒப்புக் கொண்ட விகிதம் ஆகும்
9.
கூட்டாண்மை நிறுவனம் என்பது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நபர்களோ, அவர்களுக்கிடையே ஏற்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு தொழிலை ஏற்று நடத்தும் தொழில் வடிவமைப்பு ஆகும். கூட்டாண்மைத் தொழிலை ஏற்று நடத்த ஒப்புக் கொள்ளும் நபர்களை தனித்தனியாக கூட்டாளிகள் எனவும், ஒட்டுமொத்தமாக நிறுவனம் என்றும் அழைக்கிறோம்.
10.
எடுப்புகள் மீதான வட்டி = எடுப்புத் தொகை x வட்டி வீதம் x வட்டிக்குரிய காலம்
= ரூ.20,000 x \(\frac { 10 }{ 100 } \times \frac { 6 }{ 12 } \) = ரூ.1,000
குறிப்பு: எடுப்புக்குரிய நாள் கொடுக்கப்படாத போது எடுப்புகள் மீதான, வட்டி, சராசரி காலமாகிய 6 மாதங்களுக்கு கணக்கிட்டல் வேண்டும்.
11.
(a)
இலாபநட்டப் பகிர்வு
12.
(b)
முதல்
13.
(a)
கூட்டாண்மை ஒப்பாவணம்
14.
(b)
B யின் முதல் கணக்கு
15.
(b)
ஊதியம் அளிக்கப்படமாட்டாது
16.
கழிவு கணக்கிடுதல்:
முரளி:
=
= 2,20,000 x \(\frac { 10 }{ 100 } \) = ரூ.22,000
சேது:
முரளியின் கழிவிற்கு பின் நிகர இலாபம் = 2,20,000 - 22,000 = ரூ. 1,98,000
சேதுவின் கழிவு =
= 1,98,000 x \(\frac { 10 }{ (100+10) } \) = ரூ.18,000
17.
நிலாவின் எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடுதல் (சராசரி கால முறையை பயன்படுத்தி
மொத்த எடுப்புத் தொகை = 5,000 x 2 = ரூ.10,000
எடுப்புகள் ஒவ்வொரு அரையாண்டு இறுதியிலும் எடுத்திருந்தால், சராசரி காலம் = 9
= ரூ.10,000 \(\times \frac { 4 }{ 100 } \times \frac { 9 }{ 12 } \) = ரூ.300
18.
| எடுப்பு நாள் | எடுப்புத் தொகை ரூ. |
வட்டிக்குரிய காலம் டிசம்பர் 31 வரை (மாதங்களில்) | பெருக்குத் தொகை (ரூ) |
|---|---|---|---|
| மார்ச் 1 | 8,000 | 10 | 80,000 |
| ஜூன் 1 | 6,000 | 7 | 42,000 |
| செப்டம்பர் 1 | 4,000 | 4 | 16,000 |
| டிசம்பர் 1 | 3,000 | 1 | 3,000 |
| மொத்த பெருக்குத் தொகை | 1,14,000 | ||
எடுப்புகள் மீதான வட்டி = மொத்த பெருக்குத் தொகை x ஆண்டு வட்டி வீதம் x \(\frac { 1 }{ 12 } \)
= \(1,14,000\times \frac { 12 }{ 100 } \times \frac { 1 }{ 12 } \)
19.
| நாள் | விவரம் | சாந்தினி ரூ. |
சுமதி ரூ. |
நாள் | விவரம் | சாந்தினி ரூ. |
சுமதி ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 | 2018 | ||||||
| டிசம்பர் 31 | இருப்பு கீ/கொ | 2,20,000 | 1,98,000 | ஜனவரி, 1 | இருப்பு கீ/கொ | 2,00,000 | 1,80,000 |
| ஜூன் 1 | வங்கி (கூடுதல் முதல்) |
20,000 | 18,000 | ||||
| 2,20,000 | 1,98,000 | 2,20,000 | 1,98,000 | ||||
| 2019 ஜனவரி 1 |
இருப்பு கீ/கொ | 2,20,000 | 1,98,000 |
| நாள் | விவரம் | சாந்தினி ரூ. |
சுமதி ரூ. |
நாள் | விவரம் | சாந்தினி ரூ. |
சுமதி ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| எடுப்புகள் | 40,000 | 18,000 | இருப்பு கீ/கொ | 15,000 | 13,000 | ||
| எடுப்புகள் மீது | இலாப நட்டப் | ||||||
| வட்டி | 1,500 | 1,300 | பகிர்வு கணக்கு | 20,000 | 18,000 | ||
| இருப்பு கீ/கொ | 11,800 | 21,300 | (இலாபப் பங்கு) | ||||
| முதல் மீது வட்டி | 9,300 | 7,400 | |||||
| சம்பளம் | 9,000 | - | |||||
| ` | 53,300 | 40,600 | 53,300 | 40,600 | |||
| இருப்பு கீ/கொ | 11,800 | 21,300 |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards