12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/01/2020
கூட்டாளி சேர்ப்பு
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
இராஜா மற்றும் இரவி என்ற இரு கூட்டாளிகள் 3:2 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் இராம் என்பவரை ¼ இலாபப் பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். இராம், 1/20 பங்கினை இராஜாவிடமும், 4/20 பங்கினை இரவியிடமும் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
2.
ஓவியா மற்றும் காவியா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாப நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் அகல்யா என்பவரை கூட்டாளியாகச் சேர்த்து கொண்டனர். 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 40,000 | ||
| ஓவியா | 50,000 | பொறித்தொகுதி | 50,000 | |
| காவியா | 40,000 | 90,000 | அறைகலன் | 30,000 |
| இலாப நட்டப் பகிர்வு க/கு | 40,000 | கடனாளிகள் | 20,000 | |
| பொதுக்காப்பு | 8,000 | சரக்கிருப்பு | 10,000 | |
| தொழிலாளர் ஈட்டு நிதி | 12,000 | ரொக்கம் | 20,000 | |
| பற்பல கடனீந்தோர் | 20,000 | |||
| 1,70,000 | 1,70,000 |
சேர்ப்பின்போது பகிர்ந்து தரா இலாபம் மற்றும் காப்பு ஆகியவற்றை மாற்றுவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்
3.
இரத்ன குமார் மற்றும் ஆரோக்கியதாஸ் எனும் கூட்டாளிகள் முறையே 3.2 என இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 31 மார்ச் 2017 ஆம் நாளைய அவர்களது இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 30,000 | ||
| இரத்ன குமார் | 30,000 | பொறித்தொகுதி | 60,000 | |
| ஆரோக்கியதாஸ் | 50,000 | 80,000 | அறைகலன் | 20,000 |
| இலாப நட்டப் பகிர்வு க/கு | 20,000 | கடனாளிகள் | 10,000 | |
| பொதுக்காப்பு | 5,000 | சரக்கிருப்பு | 15,000 | |
| தொழிலாளர் ஈட்டு நிதி | 15,000 | வங்கி ரொக்கம் | 15,000 | |
| பற்பல கடனீந்தோர் | 30,000 | |||
| 1,50,000 | 1,50,000 |
2017, ஏப்ரல் 1 அன்று, டேவிட் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். கூட்டாளி சேர்ப்பின் போது பகிர்ந்து தரா இலாபம் மற்றும் காப்பினை பகிர்ந்தளிக்க குறிப்பேட்டுப் பதிவு தரவும்.
4.
கவிதா மற்றும் இராதா எனும் கூட்டாளிகள் முறையே 4:3 எனும் விகிதத்தில் இலாபநட்டம் பகிர்ந்து வந்தனர். 1.1.2019 அன்று அவர்கள் தீபா என்பவரை கூட்டாளியாக சேர்த்தனர். அந்நாளில் அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பில் இலாப நட்டக் கணக்கு பற்று இருப்பாக ரூ.70,000 பகிர்ந்து தரா நட்டமாக சொத்துகள் பக்கத்தில் காட்டியது. கூட்டாளி சேர்ப்பின் போது பகிர்ந்து தரா நட்டத்தை மாற்றுவதற்கு குறிப்பேட்டுப் பதிவு தரவும்.
5.
அமலா, விமலா என்ற ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகளின் முறையே 5 : 3 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வருகின்றனர். 1.4.2004 அன்று ஏடுகளில் காப்பு நிதி 48,000 ஆகக் காட்டுகிறது. அதே நாளில் கோமளா என்பவரைச் சேர்க்க முடிவெடுத்தனர் குறிப்பேட்டுப் பதிவு தருக
6.
அன்பு மற்றும் சங்கர் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3:2 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கணிப்பொறி | 40,000 | ||
| அன்பு | 4,00,000 | வாகனம் | 1,60,000 | |
| சங்கர் | 3,00,000 | 7,00,000 | சரக்கிருப்பு | 4,00,000 |
| இலாப நட்ட க/கு | 1,20,000 | கடனாளிகள் | 3,60,000 | |
| கடனீந்தோர் | 1,20,000 | வங்கி ரொக்கம் | 40,000 | |
| தொழிலாளர் ஈட்டு நிதி | 60,000 | |||
| 10,00,000 | 1,40,000 |
பின்வரும் விவரங்கள் அடிப்படையில் இராஜேஷ் என்பவர் 1/5 பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார்.
(i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.75,000 என மதிப்பிடப்பட்டது. இராஜேஷ் நற்பெயரில் தன்னுடைய பங்கினை ரொக்கமாகக் கொண்டு வந்தார்.
(ii) இராஜேஷ் ரூ.1,50,000 முதலாகக் கொண்டு வந்தார்.
(iii) வாகனம் ரூ.2,00,000, சரக்கிருப்பு ரூ.3,80,000, கடனாளிகள் ரூ.3,50,000 என மதிப்பிடப்பட்டது.
(iv) எதிர்பார்க்கப்படும் தொழிலாளர் ஈட்டு நிதி மீதான கோரிக்கை ரூ.10,000.
(v) பதிவுறா முதலீடு ரூ.5,000 கணக்கில் கொண்டுவரப்பட்டது.
மறுமதிப்பீடு கணக்கு, முதல் கணக்கு மற்றும் இராஜேஷின் சேர்ப்பிற்கு பின்வரும் இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
7.
ரகு மற்றும் சாம் எனும் கூட்டாளிகள் முறையே 3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2017 மார்ச் 31 அன்று அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | இயந்திரம் | 30,000 | |||
| ரகு | 40,000 | அறைகலன் | 10,000 | ||
| சாம் | 30,000 | 70,000 | சரக்கிருப்பு | 10,000 | |
| பற்பல கடனீந்தோர் | 30,000 | கடனாளிகள் | 21,000 | ||
| கழிக்க: வாரா | |||||
| ஐயக்கடன் ஒதுக்கு | 1,000 | 20,000 | |||
| வங்கி | 30,000 | ||||
| 1,00,000 | 1,00,000 |
1.4.2017 அன்று பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு பிரகாஷ் என்பவரை கூட்டான்மையில் சேர்த்தனர்.
(அ) பிரகாஷ் ரூ.10,000 முதல் கொண்டு வருவது
(ஆ) இயந்திரம் ரூ.24,000 என மதிப்பிடப்பட்டது
(இ) அறைகலனின் மதிப்பில் ரூ.3,000 குறைப்பது
(ஈ) வாரா ஐயக்கடன் ஒதுக்கை ரூ.3,000 என அதிகரிப்பது
(உ) ஏடுகளில் பதிவு பெறாமலுள்ள கணக்குகளின் மூலம் பெறவேண்டியவைகள் மதிப்பு ரூ.1,000 பதிவு செய்தல்.
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டு கணக்கு மற்றும் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.
8.
நற்பெயர் என்பது பழைய கூட்டாளிகளின் ________ கால முயற்சிகளின் பலன் ஆகும்
கடந்த
நிகழ்
வருங்கால
இவற்றில் எதுவுமில்லை
9.
கூட்டாளி சேர்க்கையின் பொழுது சொத்துக்களையும், பொறுப்புகளையும் மறுமதிப்பீடு செய்து அவற்றை _______ பதிய வேண்டியது நியாயமான செயல் முறையாகும்.
அடக்க விலையில்
அடக்கத்திலிருந்து தேய்மானம் கழித்த தொகையில்
உண்மை மதிப்பில் (நடப்பு மதிப்பில்)
இவற்றில் எதுவுமில்லை
10.
________ என்பது நிறுவனத்தின் வருங்கால இலாபத்தை புதிய கூட்டாளி உட்பட அனைத்துக் கூட்டாளிகளும் பகிர்ந்துகொள்ள ஒப்புக் கொண்ட விகிதம் ஆகும்.
புதிய இலாபப் பகிர்வு விகிதம்
பழைய இலாபப் பகிர்வு விகிதம்
தியாக விகிதம்
முதல் விகிதம்
11.
சொத்துகள் மற்றும் பொறுப்புகள் நடப்பு மதிப்பினை தீர்மானிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மறுமதிப்பீடு
முதலீட்டு மாறுபடும் நிதி
பதிவுறா பொறுப்பு
நற்பெயர்
12.
மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது_____.
ஆதாயம்
நட்டம்
செலவு
இவற்றுள் எதுவுமில்லை
13.
சாம் மற்றும் ஜோஸ் என்னும் கூட்டாளிகள் 3:2 என்னும் விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று ஜோயல் என்பவரை கூட்டாளியாக சேர்த்துக்கொண்டனர். ஜோயல் கூட்டாண்மையில் சேர்ந்த அன்று நிறுவன ஏடுகளில் நற்பெயர் ரூ.30,000 ஆக இருந்தது. மாறுபடும் முதல் முறையில் கணக்குகள் பராமரிக்கப்படுவதாகக் கருதி கூட்டாளிகளின் பின்வரும் முடிவுகளின்படி குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
(அ) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகை முழுவதையும் போக்கெழுதுவது
(ஆ) ஏட்டில் உள்ள நற்பெயரில் ரூ.20,000-ஐ போக்கெழுதுவது
14.
கூற்று (A): சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை மறுபதிப்பீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் இலாப, நட்டத்தை பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குகளுக்கு மாற்றம் செய்வதாகும்.
காரணம் (R): மறுமதிப்பீடு என்பது கூட்டாண்மை நிறுவனம் மாற்றியமைக்கப்படும் பொழுது அதன் சொத்துக்களையும் பொறுப்புகளையும் மதிப்பீடு செய்வதாகும்.
(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(இ) (A) சரி ஆனால் (R) தவறு
(ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
1.
தியாக விகிதம் மற்றும் புதிய இலாபப்பகிர்வு விகிதம் கணக்கிடுதல்:
தியாகப் பங்கு = \(\frac { 1 }{ 20 } ,\frac { 4 }{ 20 } \)
இராஜா மற்றும் இரவி அவர்களின் தியாக விகிதம் 1 : 4
பழைய இலாபப் பகிர்வு விகிதம் = 3 : 2 அல்லது \(\frac { 3 }{ 5 } :\frac { 2 }{ 5 } \)
பழைய கூட்டாளிகளின் புதிய பங்கு = பழைய பங்கு - தியாகப் பங்கு
இராஜா = \(\frac { 3 }{ 5 } -\frac { 1 }{ 20 } =\frac { 12-1 }{ 20 } =\frac { 11 }{ 20 } \)
இரவி = \(\frac { 2 }{ 5 } -\frac { 4 }{ 20 } =\frac { 8-4 }{ 20 } =\frac { 4 }{ 20 } \)
புதிய கூட்டாளியின் பங்கு
இராம் = \(\frac { 1 }{ 4 } \)
இராமின் பங்கிற்குரிய பகுதியை சுமன் செய்யும் பொருட்டு 5 ஆல் பெருக்கி மற்றும் வகுக்க வேண்டும்
= \(\frac { 1 }{ 4 } \times \frac { 5 }{ 5 } = \frac { 5 }{ 20 }\)
இராஜா,இரவி மற்றும் இராம் அவர்களின் புதிய இலாபப் பகிர்வு விகிதம்
= \(\frac { 11 }{ 20 } :\frac { 4 }{ 20 } :\frac { 5 }{ 20 } \)
= 11 : 4 : 5
2.
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2019 | இலாப நட்டப் பகிர்வு க/கு | ப | 40,000 | ||
| ஏப்ரல் 1 | பொதுக்காப்பு க/கு | ப | 8,000 | ||
| தொழிலாளர்கள் ஈட்டுநிதி க/கு | ப | 12,000 | |||
| ஓவியா முதல் க/கு (60,000 x 5/8) | 37,500 | ||||
| காவியா முதல் க/கு (60,000 x 3/8) | 22,500 | ||||
| (பகிர்ந்து தரா இலாபம் மற்றும் காப்பு பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குக்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்பட்டது) |
3.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2017 | இலாப நட்டப் பகிர்வு க/கு | ப | 20,000 | ||
| ஏப்ரல் 1 | பொதுக்காப்பு க/கு | ப | 5,000 | ||
| தொழிலாளர் ஈட்டு நிதி க/கு | ப | 15,000 | |||
| இரத்ன குமார் முதல் க/கு (40,000 x 3/5) | 24,000 | ||||
| ஆரோக்கியதாஸ் முதல் க/கு (40,000 x 2/5) | 16,000 | ||||
| (பகிர்ந்து தரா இலாபம் மற்றும் காப்பு பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குக்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்பட்டது) |
4.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2019 | கவிதா முதல் க/கு (4/7) | ப | 40,000 | ||
| ஜனவரி 1 | இராதா முதல் க/கு (3/7) | ப | 30,000 | ||
| இலாப நட்ட க/கு | 70,000 | ||||
| (பகிர்ந்து தரா நட்டம் பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குக்கு பழைய இலாபவிகிதத்தில் மாற்றப்பட்டது) |
5.
| நாள் | விவரம் | பே.ப. எ. |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2004 | காப்பு நிதிக் க/கு | ப | 48,000 | ||
| ஏப்ரல் 01 | அமலா முதல் க/கு | 30,000 | |||
| விமலா முதல் க/கு | 18,000 | ||||
| (காப்பு நிதி கூட்டாளிகளின் முதல் கணக்குகளுக்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றுவது) |
6.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 20,000 | வாகனம் க/கு | 40,000 | |
| கடனாளிகள் க/கு | 10,000 | பதிவுறா முதலீடு க/கு | 5,000 | |
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| அன்பு முதல் க/கு (3/5) | 9,000 | |||
| சங்கர் முதல் க/கு (2/5) | 6,000 | 15,000 | 45,000 |
| விவரம் | அன்பு ரூ. |
சங்கர் ரூ. |
ராஜேஷ் ரூ. |
விவரம் | அன்பு ரூ. |
சங்கர் ரூ. |
ராஜேஷ் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/கு | 5,20,000 | 3,80,000 | 1,50,000 | இருப்பு கீ/கொ | 4,00,000 | 3,00,000 | - |
| வங்கி க/கு | - | - | 1,50,000 | ||||
| இலாபநட்ட க/கு | 72,000 | 48,000 | 1,50,000 | ||||
| தொழிலாளர் ஈட்டு | - | ||||||
| நிதி க/கு (60,000-10,000) |
30,000 | 20,000 | - | ||||
| வங்கி க/கு (நற்பெயர் பங்கு) |
9,000 | 6,0000 | - | ||||
| 5,20,000 | 3,80,000 | 1,50,000 | 5,20,000 | 3,80,000 | 1,50,000 | ||
| 5,20,000 | 3,80,000 | 1,50,000 |
நிறுவனத்தின் நற்பெயர் = 75,5000
நற்பெயரில் இராஜேஷின் பங்கு = 75,000 x \(\frac { 1 }{ 5 } \)
இத்தொகை அன்பு மற்றும் சங்கர் அவர்கள் அவர்களின் தியாக விகிதம் 3 : 2 இல் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும்
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 40,000 | இருப்பு கீ/இ | 2,05,000 |
| இராஜேஷ் முதல் க/கு | 1,50,000 | ||
| அன்பு முதல் க/கு | 9,000 | ||
| சங்கர் முதல் | 6,000 | ||
| 2,05,000 | 2,05,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துக்கள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கணிப்பொறி | 40,000 | |||
| அன்பு | 5,20,000 | வாகனம் | 1,60,000 | ||
| சங்கர் | 3,80,000 | கூட்டுக: மதிப்பேற்றம் | 40,000 | 2,00,000 | |
| ராஜேஷ் | 1,50,000 | 10,50,000 | சரக்கிருப்பு | 4,00,000 | |
| கடனீந்தார் | 1,20,000 | கழிக்க: தேய்மானம் | 20,000 | 3,80,000 | |
| தொழிலாளர் ஈட்டுநிதி | 10,000 | கடனாளிகள் | 3,60,000 | ||
| (60,000 - 50,000) | கழிக்க: மதிப்பு குறைவு | 10,000 | 3,50,000 | ||
| வங்கி | 2,05,000 | ||||
| பதிவுறா முதலீடு | 5,000 | ||||
| 11,80,000 | 11,80,000 |
7.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2017 | வங்கி க/கு | ப | 10,000 | ||
| ஏப்ரல் 1 | பிரகாஷ் முதல் க/கு | 10,000 | |||
| (பிரகாஷ் முதல் கொண்டு வந்தது) | |||||
| " | மறுமதிப்பீட்டு க/கு | ப | 11,000 | ||
| இயந்திரம் க/கு | 6,000 | ||||
| அறைகலன் க/கு | 3,000 | ||||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 2,000 | ||||
| (இயந்திரம் மற்றும் அறைகலன் மீதான தேய்மானம் மற்றும் வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கியது | |||||
| " | கணக்குகளின் மூலம் பெறவேண்டியவைகள் க/கு | 1,000 | |||
| மறுமதிப்பீட்டு க/கு | 1,000 | ||||
| (பதிவு பெறாத கணக்குகளின் மூலம் பெற வேண்டியவைகள் பதிவு செய்யப்பட்டது ) | |||||
| " | ரகு முதல் க/கு | 6,000 | |||
| சாம் முதல் க/கு | ப | 4,000 | |||
| மறுமதிப்பீட்டு க/கு | 10,000 | ||||
| (மறுமதிப்பீட்டு நட்டம் முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| இயந்திரம் க/கு | 6,000 | கணக்குகள் மூலம் பெற | 1,000 | |
| அறைகலன் க/கு | 3,000 | வேண்டியவைகள் க/கு | ||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 2,000 | மறுமதிப்பீட்டு நட்டம்: | ||
| ரகு முதல் க/கு (3/5) | 6,000 | |||
| சாம் முதல் க/கு (2/5) | 4,000 | 10,000 | ||
| 11,000 | 11,000 |
| நாள் | விவரம் | ரகு ரூ. | சாம் ரூ. | பிரகாஷ் ரூ. | நாள் | விவரம் | ரகு ரூ. | சாம் ரூ. | பிரகாஷ் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| மறுமதிப்பீட்டு க/கு | 6,000 | 4,000 | - | இருப்பு கீ/கொ | 40,000 | 30,000 | - | ||
| இருப்பு கீ/இ | 34,000 | 26,000 | 10,000 | வங்கி க/கு | - | - | 10,000 | ||
| 40,000 | 30,000 | 10,000 | 40,000 | 30,000 | 10,000 | ||||
| இருப்பு கீ/கொ | 34,000 | 26,000 | 10,000 |
8.
(a)
கடந்த
9.
(c)
உண்மை மதிப்பில் (நடப்பு மதிப்பில்)
10.
(a)
புதிய இலாபப் பகிர்வு விகிதம்
11.
(a)
மறுமதிப்பீடு
12.
(a)
ஆதாயம்
13.
(அ) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகை முழுவதையும் போக்கெழுதுவது:
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 | |||||
| ஏப்ரல் 1 | சாம் முதல் க/கு (3/5) | ப | 18,000 | ||
| ஜோஸின் முதல் க/கு (2/5) | ப | 12,000 | |||
| நற்பெயர் க/கு (ஏட்டில் உள்ள நற்பெயரை போக்கெழுதியது) |
30,000 |
(ஆ) ஏட்டில் உள்ள நற்பெயரில் ரூ.20,000-ஐ போக்கெழுதுவது:
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 | |||||
| ஏப்ரல் 1 | சாம் முதல் க/கு (20,000 x 3/5) | ப | 12,000 | ||
| ரோஸின் முதல் க/கு (20,000 x (2/5) | ப | 8,000 | |||
| நற்பெயர் க/கு (ஏட்டில் உள்ள நற்பெயரை போக்கெழுதியது) |
20,000 |
14.
(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards