12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/01/2020
கணினி கணக்கியல் முறை
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
________ சான்றாவணம் ரொக்க மற்றும் சரக்கு கடன் சரக்கு கொள்முதல் பதிவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பேடு
பேரேடு
சான்றாவணம்
இருபாய்வு
2.
நிறுவனத்தின் பண்பு கூறுகள் பட்டியலுக்கு செல்வதற்கு செங்குத்து பொத்தான் பட்டியிலிருந்து _______ ஐ கொடுக்கவும்.
F5
F11
F12
F11
3.
_______ மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் நிதியியல் கணக்கியல் மென்பொருள்களில் ஒன்றாகும்.
Tally
Windows excel 6.0
Word document
Microsoft
4.
பல நிறுவனங்களை உருவாக்கியிருப்பின், ஒரு நிறுவனத்தைத் தெரிவு செய்ய எந்த பொத்தான் பட்டியை கொடுக்கவும்?
F1
F4
F5
F2
5.
சரக்கிருப்பு, சரக்கிருப்பு அளவுகள் போன்றவற்றின் மேம்படுத்தப்பட்ட தகவல்களை உடனுக்குடன் எடுக்க உதவுவது எது?
கணினிமயக் கணக்கியல்
கணக்கோடுகள்
ஒற்றைப்பதிவு முறை
இவற்றில் எதுவுமில்லை
6.
Tally-யின் நுழை வாயிலிலிருந்து இருப்பாய்வை பார்வையிட எந்த விருப்பத்தேர்வு பயன்படும்?
Gateway of Tally -> Reports -> Trial Balance
Gateway of Tally -> Trial Balance
Gateway of Tally -> Reports -> Display -> Trial Balance
இவைகளில் ஏதுமில்லை
7.
Tally-யில் எது முன்கூட்டியே வரையறுக்கப்படாத குழு?
அனாமத்து க/கு
கொடுபட வேண்டிய செலவு க/கு
விற்பனை க/கு
முதலீடுகள் க/கு
8.
பயனரின் தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் கணக்கியல் அறிக்கையானது______.
வழக்கமான கணக்கியல் அறிக்கை
குறிப்பிட்ட நோக்க அறிக்கை
இருப்பாய்வு
இருப்புநிலைக் குறிப்பு
9.
டேலியின் நுழைவாயில் என்றால் என்ன?
10.
கணினிமயக் கணக்கியல் முறை என்றால் என்ன?
11.
Tally.ERP 9-ல் குழு என்றால் என்ன?
12.
தானியங்கும் கணக்கியல் முறை என்றால் என்ன?
13.
பின்வரும் நடவடிக்கைகளை Tally-ல் பதிவு செய்யவும்.
(1) ரூ. 4,00,000 முதலுடன் தேவி தொழில் தொடங்கினர்.
(2) இந்தியன் வங்கியில் கணக்கு துவங்கப்பட்டு ரூ. 60,000 செலுத்தியது.
(3) ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது ரூ. 15,000
(4) சுமதியிடம் இருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ. 50,000
(5) ரொக்க விற்பனை மேற்கொண்டது ரூ. 10,000
(6) இராஜாவிடம் சரக்கு கொள்முதல் செய்து காசோலை மூலம் செலுத்தியது ரூ. 5000.
(7) அருணுக்கு கடனாக விற்ற சரக்கு ரூ. 70,000.
(8) அலுவலக செலவிற்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது ரூ. 25,000
(9) சுமதிக்கு காசோலை மூலம் பகுதி தொகை செலுத்தியது ரூ. 30,000
(10) அருண் பகுதி தொகையாக செலுத்திய ரொக்கம் ரூ. 10,000
(11) பணியாளர்களுக்கு மின்னணு பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 36,000
(12) கொள்முதல் மீதான தூக்குக் கூலி ரொக்கமாக செலுத்தியது ரூ. 6,000
(13) முத்து நிறுவனத்திடமிருந்து கடனுக்கு கணினி வாங்கியது ரூ. 44,000
14.
கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடுகளில் ஏதேனும் ஐந்தினை விளக்கவும்.
15.
கணக்கியல் சான்றாவணம் குறித்து சிறு குறிப்பு எழுதவும்.
16.
(அ) பெறுதல் சான்றாவணம்
(ஆ) இருப்பாய்வு
(இ) விற்பனை சான்றாவணம்
(ஈ) கொள்முதல் சான்றாவணம்
17.
| (அ) | விற்பனை சான்றாவணம் | - | ரொக்க மற்றும் கடன் கொள்முதல் |
| (ஆ) | செலுத்தல் சான்றாவணம் | - | ரொக்கம் அல்லது வங்கி கணக்கு வரவு வைக்கப்படும். |
| (இ) | உரிய குறிப்பேடு | - | தேய்மானம், வாராக் கடன் ஒதுக்கு |
| (ஈ) | பெறுதல் சான்றாவணம் | - | ரொக்கம் அல்லது வங்கி கணக்கு வரவு வைக்கப்படுதல் |
18.
கூற்று (A) : கணினிமயக் கணக்கியல் முறை என்பது கணினி மூலம் கணக்குகளைப் பராமரிக்கும் முறையை குறிக்கும்.
காரணம் (R) : இது கணக்கோடுகளை பராமரிப்பதற்கும், கணக்கியல் அறிக்கைகள் தயாரிப்பதற்கும் கணக்கியல் நடவடிக்கைகளை கணினி உதவியுடன் செயல்முறைபடுத்துவதாகும்.
(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
(இ) (A) சரி ஆனால் (R) தவறு
(ஈ) (A) தவறு ஆனால் (R) சரி.
19.
1. Tally-ல் குழு என்பது ஒரே பண்புகளைக் கொண்ட பேரேடுகளின் தொகுப்பு ஆகும்.
2. முதல் கணக்கு, நடப்புப் பொறுப்புகள், நிலைச் சொத்துகள் போன்றவை முதன்மை குழுக்களில் அடங்கும்.
3. காப்பு மற்றும் மிகுதி, பற்பல கடனீந்தோர், பற்பல கடனாளிகள் போன்றவை துணை குழுக்களில் அடங்கும்.
(அ) 1 மட்டும் சரி
(ஆ) 2 மட்டும் சரி
(இ) 1 மற்றும் 3 சரி
(ஈ) 1, 2 மற்றும் 3 சரி
1.
(c)
சான்றாவணம்
2.
(b)
F11
3.
(a)
Tally
4.
(a)
F1
5.
(b)
கணக்கோடுகள்
6.
(c)
Gateway of Tally -> Reports -> Display -> Trial Balance
7.
(b)
கொடுபட வேண்டிய செலவு க/கு
8.
(b)
குறிப்பிட்ட நோக்க அறிக்கை
9.
(i) ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கிய பின்பும் ஒவ்வொரு முறை Tally-ஐ துவக்கும் போதும் Tallyயின் திரை தோன்றும்.
(ii) இந்தத் திரையே டேலியின் நுழைவாயில் (Gateway of Tally) என அழைக்கப்படுகிறது. இது தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் கீழ் தெரிவு செய்யப்பட்ட நிறுவனத்தை இடது பலகத்தில் காண்பிக்கும்.
10.
(i) கணினிமயக் கணக்கியல் முறை என்பது கணினி மூலம் கணக்குகளைப் பராமரிக்கும் முறையை குறிக்கும்.
(ii) இது கணக்கேடுகளை பராமரிப்பதற்கும், கணக்கியல் அறிக்கைகள் தயாரிப்பதற்கும் கணக்கியல் நடவடிக்கைகளை கணினி உதவியுடன் செயல்முறைப்படுத்துவதாகும்.
(iii) கணினிமயக் கணக்கியல் முறை பல்வேறு அறிக்கைகள் உருவாக்கப்படுவதற்காக, எடுத்துக்கொண்டு அவற்றை கணக்கியல் மென்பொருள் மூலம் செயலாக்கம் பெறச்செய்கிறது.
11.
(i) 2009-ம் ஆண்டு Tally solutions, ERP9 எனும் மென்பொருளை அறிமுகம் செய்தது. இந்த மென்பொருள் விரிவான வணிக மேலாண்மைக்கு தீர்வு அளிக்கிறது.
(ii) இது அனைத்து கணக்கேடுகளையும் பராமரிக்கும் பெறுதல், செலுத்தல், விற்பனை, கொள்முதல் போன்ற பல்வேறு வகையான சான்றாவணங்களை பயன்படுத்தி நடவடிக்கைகளை பதிவு செய்யலாம்.
12.
(i) தானியங்கும் கணக்கியல் என்பது கணக்கியல் மென்பொருள் உதவியுடன் கணக்கேடுகளை உடனடியாக பராமரிக்கும் அணுகுமுறையாகும்.
(ii) கையால் எழுதும் கணக்கியல் முறையில் வெவ்வேறு கணக்கேடுகளில் பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.
13.
| S.NO. | Particulars | Debit Rs |
Credit Rs |
Voucher type | Group | ||
|---|---|---|---|---|---|---|---|
| (1) | CashA/c | Dr. | 4,00,000 | Receipt | Cash-in-Hand | ||
| To Devi's Capital A/c | 4,00,000 | Voucher | Capital Account | ||||
| (2) | Indian Bank A/c | Dr. | 60,000 | Contra | Bank Accounts | ||
| To CashA/c | 60,000 | Voucher | Cash-in-Hand | ||||
| (3) | Furniture A/c | Dr. | 15,000 | Payment | Fixed Assets | ||
| To CashA/c | 15,000 | Voucher | Cash-in-Hand | ||||
| (4) | Purchases A/c | Dr. | 50,000 | Purchase | Purchase Accounts | ||
| To Sumathy A/c | 50,000 | Voucher | Sundry Creditors | ||||
| (5) | Cash A/c | Dr. | 10,000 | Sales | Cash-in-Hand | ||
| To SalesA/c | 10,000 | Voucher | Sales Accounts | ||||
| (6) | Purchases A/c | Dr. | 5,000 | Purchase | Purchase Accounts | ||
| To CashA/c | 5,000 | Voucher | Cash-in-Hand | ||||
| (7) | Arun A/c | Dr. | 70,000 | Sales | Sundry Debtors | ||
| To SalesAlc | 70,000 | Voucher | Sales Accounts | ||||
| (8) | Cash A/c | Dr. | 25,000 | Contra | Cash-in-Hand | ||
| To BankAlc | 25,000 | Voucher | Bank Accounts | ||||
| (9) | Sumathy A/c | Dr. | 30,000 | Payment | Sundry Creditors | ||
| To BankA/c | 30,000 | Voucher | Bank Accounts | ||||
| (10) | Cash A/c | Dr. | 10,000 | Receipt | Cash-in-Hand | ||
| To Arun A/c | 10,000 | Voucher | Sundry Debtors | ||||
| (11) | Salaries A/c | Dr. | 36,000 | Payment | Indirect Expenses | ||
| To BankA/c | 36,000 | Voucher | Bank Accounts | ||||
| (12) | Carriage A/c | Dr. | 6,000 | Payment | Indirect Expenses | ||
| To Cash A/c | 6,000 | Voucher | Cash-in-Hand | ||||
| (13) | Computer A/c | Dr. | 44,000 | Journal | Indirect Expenses | ||
| To Muthu Ltd Alc | 44,000 | Voucher | Sundry Creditors |
14.
(i) கணக்கேடுகளைப் பராமரித்தல் :
1. கணினிமயக் கணக்கியல் முறையில் கணக்கேடுகளை எளிதாகவும் திறம்பட நீண்ட காலங்களுக்கு பராமரிக்கலாம்.
2. இதற்கு அதிகப்படியான இடவசதி தேவையில்லை.
3. தரவு மற்றும் தகவல்களை விரைவாகவும் துல்லியமாகவும் எடுக்க இது வழிவகை செய்கிறது.
(ii) சரக்கிருப்பு மேலாண்மை :
1. கணினிமயக் கணக்கியல் முறை திறம்பட சரக்கிருப்பு மேலாண்மைக்கு வழிவகை செய்கிறது.
2. வேகமாக நகரும், மெதுவாக நகரும் மற்றும் வழக்கொழிந்த சரக்கிருப்பை கண்டறியலாம்.
(iii) அறிக்கை உருவாக்குதல் :
கணினிமயக் கணக்கியல் முறை பல்வேறு வழக்கமான மற்றும் குறிப்பிட்ட நோக்க அறிக்கைகள் உருவாக்குவதற்கு உதவி புரிகிறது.
(iv) தரவு அனுப்புதல் /பெறுதல் :
கணக்கியல் தரவு மற்றும் தகவல்களை நிறுவனத்தின் உள்ளேயோ அல்லது நிறுவனத்திற்கு வெளியேயோ உள்ள வேறு ஒரு பயனரிடம் இருந்து அனுப்பலாம் அல்லது பெறலாம்.
(v) 'வரிவிதிப்பு':
கணினிமயக் கணக்கியல் முறை பல்வேறு வரிகளை கணக்கீடு செய்யவும் அதை பிடித்தம் செய்து அரசாங்க கணக்கில் செலுத்துவதற்கும் உதவி புரிகிறது.
15.
(i) நடவடிக்கைகளின் விவரங்களை கொண்டுள்ள ஒரு ஆவணமே சான்றாவணம் ஆகும்.
(ii) நடவடிக்கைகள் சான்றாவணப் பதிவுகள் மூலமே பதியப்பட வேண்டும்.
(iii) முன்பே வரையறுக்கப்பட்ட கொள்முதல், விற்பனை, செலுத்தல், பெறுதல் மற்றும் எதிர்ப்பதிவு போன்ற சான்றாவணங்களை Tally கொண்டுள்ளது.
சான்றாவண வகைகளைப் பார்வையிட :
Gateway of Tally > Masters > Accounts Info > Voucher Types > Display .
பயனரின் தேவைக்கேற்ப கூடுதல் சான்றாவண வகைகளை உருவாக்கலாம்.
16.
இருப்பாய்வு:
காரணம்:
இருப்பாய்வு என்பது ஒரு குறிப்பிட்ட நாளில் அனைத்துப் பேரேட்டுக் கணக்குகளிலும் உள்ள பற்று இருப்புகளையும் வரவு இருப்புகளையும் உள்ளடக்கிய ஓர் அறிக்கை ஆகும். மற்ற மூன்றும் சான்றாவன வகைகளாகும்.
17.
விற்பனை சான்றாவணம் - ரொக்க மற்றும் கடன் கொள்முதல்
18.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
19.
1,2 மற்றும் 3 சரி
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards