12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/01/2020
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் நோக்கங்களை எழுதுக.
2.
ரொக்க ஓட்ட பகுப்பாய்வு குறித்து சிறு குறிப்பு வரைக.
3.
பின்வரும் விவரங்களிலிருந்து அப்துல் வரையறு நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.
| விவரம் | 2015-16 ரூ. |
2016-17 ரூ. |
|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 3,00,000 | 3,60,000 |
| இதர வருமானம் | 1,00,000 | 60,000 |
| செலவுகள் | 2,00,000 | 1,80,000 |
| வருமான வரி | 30% | 30% |
4.
ஒரு கணக்காண்டிற்குரிய தொகை மட்டுமே பகுப்பாய்விற்கு எடுத்துக் கொள்ளப்படுமானால் அது _______ என்றழைக்கப்படும்.
கிடைமட்ட பகுப்பாய்வு
செங்குத்துப் பகுப்பாய்வு
இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
5.
_____ நடப்புப் பொறுப்புகளை விட அதிகமாக உள்ள நடப்புச் சொத்துகளைக் குறிப்பதாகும்.
மாறுபடும் முதல்
நிலை முதல்
நடைமுறை முதல்
இவற்றில் எதுவுமில்லை
6.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு செய்வதற்கு பல்வேறு ______ பயன்படுத்தப்படுகின்றன.
கருவிகள்
தன்மைகள்
இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
7.
________ ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் தயாரிக்கப்படுகின்றன.
வியாபாரக் கணக்கு
இலாப நட்டக் கணக்கு
இருப்புநிலைக் குறிப்பு
நிதிநிலை அறிக்கைகள்
8.
________ அறிக்கைகள் என்பது நிதிநிலை தகவல்களுக்கான ஆதாரமாகும்.
வருமான
நிதி நிலை
செலவின
இலாப நட்ட
9.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு செய்வதற்கு எது தேவையானதாகும்?
திறமை
மேலாண்மை
நிபுணத்துவ அறிவு
இவற்றில் எதுவுமில்லை
10.
ஒரு வணிகத்தின் முதலாம் ஆண்டுச் செலவுகள் ரூ.80,000. இரண்டாம் ஆண்டில் செலவுகள் ரூ.88,000 ஆக அதிகரித்திருந்தது. இரண்டாம் ஆண்டின் போக்கு விகிதம் என்ன?
10%
110%
90%
11%
11.
பின்வரும் வாக்கியங்களில் எது சரியானதல்ல?
நிதிநிலை அறிக்கையின் குறைபாடுகள் அனைத்தும் நிதிநிலை அறிக்கைகள் பகுப்பாய்விற்கும் பொருந்தும்.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு ஒரு வழிமுறை, இது ஒரு முடிவல்ல.
நிதி நிலை அறிக்கை பகுப்பாய்விற்கு நிபுணத்துவம் தேவையில்லை
ஆய்வு செய்யப்பட்ட தகவல்களை உய்த்துணர்வது தனிப்பட்ட கருத்துகளை உள்ளடக்கியதாகும்.
12.
பின்வரும் வாக்கியங்களில் எது சரியானதல்ல?
குறிப்புகள் மற்றும் பட்டியல்களும் நிதிநிலை அறிக்கைகளின் பகுதி ஆகின்றன.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் கருவிகளில் பொது அளவு அறிக்கை உள்ளடங்கும்.
போக்குப் பகுப்பாய்வு என்பது ஓராண்டில் தொகைகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்தலைக் குறிப்பதாகும்.
பொது அளவு அறிக்கை சில பொது அடிப்படைகளைக் கொண்டு பல்வேறு இனங்களின் தொடர்பினைக் காட்டுவதாகும். இவ்வினங்கள், பொது அளவு அடிப்படையின் சதவிகிதமாக காட்டப்படுகின்றன.
13.
பின்வரும் விவரங்களிலிருந்து சிவசாமி & கோ நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கை தயார் செய்யவும்.
| விவரம் | 2016-17 | 2017-18 |
| ரூ. | ரூ. | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,00,000 | 5,00,000 |
| இதர வருமானங்கள் | 1,00,000 | 80,000 |
| செலவுகள் | 3,00,000 | 2,40,000 |
14.
பின்வரும் தகவல்களிலிருந்து, அனு நிறுமத்தின் போக்கு சதவிகிதங்களை கணக்கிடவும்.
| விவரம் | ரூ. (ஆயிரத்தில்) | ||
|---|---|---|---|
| முதலாம் ஆண்டு | இரண்டாம் ஆண்டு | மூன்றாம் ஆண்டு | |
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |||
| பங்குதாரர் நிதி | 500 | 550 | 600 |
| நீண்டகாலப் பொறுப்புகள் | 200 | 250 | 240 |
| நடப்புப் பொறுப்புகள் | 100 | 80 | 120 |
| மொத்தம் | 800 | 880 | 960 |
| II. சொத்துகள் | |||
| நீண்டகாலச் சொத்துகள் | 600 | 720 | 780 |
| நடப்புச் சொத்துகள் | 200 | 160 | 180 |
| மொத்தம் | 800 | 880 | 960 |
15.
கிடைமட்ட பகுப்பாய்வு என்றால் என்ன?
16.
அ) இருப்புநிலைக் குறிப்பு
ஆ) ஒப்பீட்டு அறிக்கை
இ) போக்குப் பகுப்பாய்வு
ஈ) ரொக்க ஓட்டப் பகுப்பாய்வு
17.
கூற்று (A): பொது அளவு அறிக்கைகளில் பொது அளவு வருமான அறிக்கை மற்றும் பொது அளவு இருப்புநிலைக் குறிப்பு போன்றவைகள் அடங்கும்.
காரணம் (R): போக்குப் பகுப்பாய்வு என்பது ஒரு காலக்கட்டத்திற்கு மேல் உள்ள தொகைகளின் இயக்கத்தை ஆய்வு செய்வதாகும்.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
இ) (A) சரி ஆனால் (R) தவறு
ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
18.
1. பல ஆண்டுகளுக்கான தொகைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு எடுத்துக் கொண்டால், அப்பகுப்பாய்வு கிடைமட்ட பகுப்பாய்வு என்றழைக்கப்படும்.
2. ஒரு கணக்காண்டிற்குரிய தொகை மட்டுமே பகுப்பாய்விற்கு எடுத்துக் கொள்ளப்படுமானால் அது செங்குத்துப் பகுப்பாய்வு கொண்டது.
3. ஒப்புநோக்க அறிக்கை மூன்று பத்திகளைக் கொண்டது.
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) 1 மற்றும் 2 சரி
ஈ) 1,2 மற்றும் 3 சரி
1.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் நோக்கங்கள்:
1) வருவாயீட்டும் தன்மை மற்றும் இலாபமீட்டும் திறனை ஆய்வு செய்வதற்காக.
2) நீண்டகால மற்றும் குறுகிய கால கடனைத் தீர்க்கும் திறன் பற்றி அறிய
3) சொத்துகளை பயன்படுத்துவதிலும், செயல்பாடுகளிலும் ஆற்றலைத் தீர்மானிப்பதற்கு
4) நிர்வாகம் மற்றும் பணியாளர்களின் திறமையைத் தீர்மானிப்பதற்கு
5) உற்பத்தி, மற்றும் விற்பனையின் போக்கினைத் தீர்மானிப்பதற்கு
6) எதிர்கால முன்கணிப்பு மற்றும் திட்டப் பட்டியல் தயாரிப்பதற்கு
7) நிறுவனத்திற்குள்ளேயும், பிற நிறுவனங்களோடும் ஒப்பீடு செய்வதற்கு.
2.
1) ரொக்க ஓட்ட பகுப்பாய்வு என்பது ரொக்க ஓட்ட அறிக்கை தயாரிப்பதைக் குறிக்கும். இது ஒரு குறிப்பிட்ட காலத்தில் உள்வரும் மற்றும் வெளிச் செல்லும் ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகளை வெளிப்படுத்தும்.
2) ரொக்கம் என்பது கை ரொக்கம் மற்றும் வங்கியில் உள்ள கேட்பு வைப்புகளை உள்ளடக்கியது.
3) ரொக்கத்திற்கு சமமானவைகள் என்பது குறுகிய காலத்தில் அதிக நட்டமில்லாமல் ரொக்கமாக மாற்றக்கூடிய குறுகிய கால முதலீடுகளைக் குறிக்கும்.
4) ரொக்க ஓட்டப் பகுப்பாய்வு வணிக நிறுவனத்தின் நீர்மைத்தன்மை மற்றும் கடன் தீர்க்கும் திறன் விகிதங்கள் கணக்கிடுவதற்கு உதவிகரமானதாக இருக்கிறது.
3.
| விவரம் | 2015-16 | 2016-17 | தொகையின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
சதவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
|---|---|---|---|---|
| ரூ. | ரூ. | ரூ. | ||
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 3,00,000 | 3,60,000 | +60,000 | +20 |
| கூட்டுக: இதர வருமானங்கள் | 1,00,000 | 60,000 | –40,000 | –40 |
| மொத்த வருமானங்கள் | 4,00,000 | 4,20,000 | +20,000 | +5 |
| கழிக்க: செலவுகள் | 2,00,000 | 1,80,000 | –20,000 | –10 |
| வரிக்கு முன் இலாபம் | 2,00,000 | 2,40,000 | +40,000 | +20 |
| கழிக்க: வருமானவரி 30% | 60,000 | 72,000 | +12,000 | +20 |
| வரிக்கு பின்னர் உள்ள இலாபம் | 1,40,000 | 1,68,000 | +28,000 | +20 |
4.
(b)
செங்குத்துப் பகுப்பாய்வு
5.
(a)
மாறுபடும் முதல்
6.
(a)
கருவிகள்
7.
(d)
நிதிநிலை அறிக்கைகள்
8.
(b)
நிதி நிலை
9.
(c)
நிபுணத்துவ அறிவு
10.
(b)
110%
11.
(c)
நிதி நிலை அறிக்கை பகுப்பாய்விற்கு நிபுணத்துவம் தேவையில்லை
12.
(c)
போக்குப் பகுப்பாய்வு என்பது ஓராண்டில் தொகைகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்தலைக் குறிப்பதாகும்.
13.
| விவரம் | 2016-17 | 2017-18 | தொகையின் கூடுதல் (+)அல்லது குறைவு (-) | சதவீதத்தின் கூடுதல் (+)அல்லது குறைவு (-) |
| ரூ. | ரூ. | |||
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,00,000 | 5,00,000 | +1,00,000 | +25 |
| கூட்டுக: இதர வருமானங்கள் | 1,00,000 | 80,000 | -20,000 | -20 |
| மொத்த வருமானங்கள் | 5,00,000 | 5,80,000 | 80,000 | +16 |
| கழிக்க: செலவுகள் | 3,00,000 | 2,40,000 | -60,000 | -20 |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம் | 2,00,000 | 3,40,000 | 1,40,000 | 70% |
14.
| விவரம் | 7 ஆயிரத்தில் | போக்கு சதவீதங்கள் | ||||
|---|---|---|---|---|---|---|
| வருடம் 1 | வருடம் 2 | வருடம் 3 | வருடம் 1 | வருடம் 2 | வருடம் 3 | |
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||||||
| பங்குதாரர் நிதி | 500 | 550 | 600 | 100 | 110 | 120 |
| நீண்டகாலப் பொறுப்புகள் | 200 | 250 | 240 | 100 | 125 | 120 |
| நடப்புப் பொறுப்புகள் | 100 | 80 | 120 | 100 | 80 | 120 |
| மொத்தம் | 800 | 880 | 960 | 100 | 110 | 120 |
| II. சொத்துகள் | ||||||
| நீண்டகாலச் சொத்துகள் | 600 | 720 | 780 | 100 | 120 | 130 |
| நடப்புச் சொத்துகள் | 200 | 160 | 180 | 100 | 80 | 90 |
| மொத்தம் | 800 | 880 | 960 | 100 | 110 | 120 |
15.
1) பல ஆண்டுகளுக்கான தொகைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு எடுத்துக் கொண்டால், அப்பகுப்பாய்வு கிடைமட்ட பகுப்பாய்வு என்றழைக்கப்படும்.
2) பொதுவாக, ஒரு ஆண்டானது அடிப்படை ஆண்டாக எடுத்துக் கொள்ளப்பட்டு பிற ஆண்டுகளுடனான தொகை அடிப்படை ஆண்டுடன் ஒப்பீடு செய்யப்படுகிறது.
3) ஒப்பீடு அறிக்கைகள், மற்றும் போக்கு சதவீதங்கள் போன்றவை கிடைமட்ட பகுப்பாய்விற்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
16.
அ) இருப்புநிலைக் குறிப்பு
காரணம்: இருப்புநிலைக் குறிப்பு என்பது, ஒரு குறிப்பிட்ட நாளில் வணிகத்தில் உள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் நிலை பற்றிய அறிக்கையாகும். மற்ற மூன்றும் நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் குறைபாடுகளாகும்.
17.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
18.
இ) 1 மற்றும் 2 சரி
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards