12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/01/2020
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
குப்தா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைகுறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்யவும்.
| விவரம் | 2016, மார்ச் 31 | 2017, மார்ச் 31 | |
|---|---|---|---|
| ரூ. | ரூ. | ||
| I | பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||
| பங்குதாரர் நிதி | 2,00,000 | 5,20,000 | |
| நீண்டகாலப் பொறுப்புகள் | 1,00,000 | 1,20,000 | |
| நடப்புப் பொறுப்புகள் | 50,000 | 60,000 | |
| மொத்தம் | 3,50,000 | 7,00,000 | |
| II | சொத்துகள் | ||
| நிலைச் சொத்துகள் | 2,00,000 | 4,00,000 | |
| நடப்புச் சொத்துகள் | 1,50,000 | 3,00,000 | |
| மொத்தம் | 3,50,000 | 7,00,000 |
2.
நிறுவனத்தின் நற்பெயர் கடந்த ஐந்து ஆண்டு சராசரி இலாபத்தை மூன்று ஆண்டு கொள்முதல் என்று மதிப்பிடப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளின் இலாபங்கள்:
2000 - ரூ.4,200
2002 - ரூ.4,700
2004 - ரூ.5,000
2001 - ரூ.4,500
2003 - ரூ.4,600
3.
பாரத் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 50,000 பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:
| விண்ணப்பத்தின் போது பங்கொன்றிற்கு | ரூ.5 |
| ஒதுக்கீட்டின் போது பங்கொன்றிற்கு | ரூ.3 |
| முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது பங்கொன்றிற்கு | ரூ.2 |
60,000 பங்குகளுக்கு விண்ணப்பத் தொகை பெறப்பட்டது. கூடுதல் விண்ணப்பத் தொகை உடனடியாக திரும்பிச் செலுத்தப்பட்டது. மேற்கண்டவற்றை பதிவு செய்ய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
4.
ராகுல், ரவி மற்றும் ரோஹித் எனும் கூட்டாளிகள் முறையே 5 : 3 : 2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் ரோஹித் விலகினார். அவருடைய பங்கு ராகுல் மற்றும் ரவி ஆகியோரால் 3 : 2 எனும் விகிதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதம் கணக்கிடவும்
5.
ஒரு சங்கத்தின் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு தோன்றும்? 2016-17 ல் சங்கம் பெற்ற சந்தா ரூ. 50,000. இதில் 2015-16 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ. 6,000 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ. 3,500 சேர்ந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா ரூ. 1,500 இன்னும் பெற வேண்டியுள்ளது.
6.
அருண் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து
(i) புற அக பொறுப்புகள் விகிதம்
(ii) உரிமையாளர் விகிதம் மற்றும்
(iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | ரூ | |
| I | பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. | பங்குதாரர் நிதி | |
| (அ) பங்குமுதல் | ||
| நேர்மைப் பங்குமுதல் | 1,50,000 | |
| 8% முன்னுரிமைப் பங்குமுதல் | 2,00,000 | |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 1,50,000 | |
| 2. | நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகால கடன்கள் (9% கடனீட்டுப் பாத்திரங்கள்) | 4,00,000 | |
| 3. | நடப்பு பொறுப்புகள் | |
| (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள் | 25,000 | |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 75,000 | |
| மொத்தம் | 10,00,000 | |
| II | சொத்துகள் | |
| 1. | நீண்ட காலச் சொத்துகள் | |
| நிலைச் சொத்துகள் | 7,50,000 | |
| 2. | நடப்புச் சொத்துகள் | 1,20,000 |
| (அ) சரக்கிருப்பு | 1,20,000 | |
| (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 1,000,000 | |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவர்கள் | 27,500 | |
| (ஈ) இதர நடப்புச் சொத்துகள் | ||
| செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது | 2,500 | |
| மொத்தம் | 10,00,000 | |
7.
பின்வரும் விவரங்களைக் கொண்டு நடப்பு விகிதம் மற்றும் நீர்மை விகிதத்தைக் கணக்கிடுக.
| ரூ. | ரூ. | ||
| ரொக்கம் | 5,000 | கடனாளிகள் | 29,000 |
| பெறுதற்குரிய மாற்று சீட்டுகள் | 5,000 | குறுகிய கால முதலீடுகள் | 15,000 |
| சரக்கிருப்பு | 52,000 | முன்கூட்டிச் செலுத்திய செலவினங்கள் | 2,000 |
| கடனீந்தோர் | 36,000 | முன்கூட்டிச் செலுத்திய செலவினங்கள் | 2,000 |
| செலுத்த வேண்டிய செலவினங்கள் | 8,000 | செலுத்தற்குரிய மாற்று சீட்டுகள் | 10,000 |
8.
திருமதி ரேவதி ரூ.1,20,000 முதலுடன் 1.4.2003 அன்று தொழில் தொடங்கினார் அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வீதம் தன் சொந்த செலவிற்கு எடுத்துக் கொண்டார். அவர் ரூ.20,000 கூடுதல் முதலாக இட்டார் அவருடைய 31.3.2004 அன்றைய நிலை கீழே தரப்பட்டுள்ளது.
| ரூ. | |
|---|---|
| வங்கி இருப்பு | 8,000 |
| சரக்கிருப்பு | 80,000 |
| பற்பல கடனாளிகள் | 50,000 |
| அறைகலன் | 2,500 |
| கை ரொக்கம் | 2,000 |
| பற்பல கடனீந்தோர் | 25,000 |
| கொடுபட வேண்டிய செலவுகள் | 1,000 |
அவர் தனது கணக்குகளை ஒற்றைப்பதிவு முறையில் பராமரித்து வருகிறார். 2003-04 ஆம் ஆண்டிற்கான அவரது இலாபம் அல்லது நட்டம் கண்டறிக.
9.
வன்பொருள் வியாபாரம் செய்துவரும் அருண் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:
| விவரம் | 31.12.2017 ரூ. |
31.12.2018 ரூ. |
|---|---|---|
| நிலம் மற்றும் கட்டடம் | 2,40,000 | 2,40,000 |
| சரக்கிருப்பு | 1,20,000 | 1,70,000 |
| கடனாளிகள் | 40,000 | 51,500 |
| கடனீந்தோர் | 50,000 | 45,000 |
| வங்கி ரொக்கம் | 30,000 | 53,000 |
31.12.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் பிற தகவல்கள் பின்வருமாறு:
| விவரம் | ரூ |
| கூலி | 65,000 |
| வெளித் தூக்குக்கூலி | 7,500 |
| பற்பல செலவுகள் | 28,000 |
| கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் | 6,00,000 |
| எடுப்புகள் | 10,000 |
அவ்வாண்டுக்குரிய மொத்த விற்பனை ரூ. 7,70,000. அவ்வாண்டின் கொள்முதல் திருப்பம் ரூ. 30,000 மற்றும் விற்பனைத் திருப்பம் ரூ. 25,000. நிலம் மற்றும் கட்டடங்கள் மீது 5% தேய்மானம் நீக்கவும். ரூ. 1,500 –க்கு ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
10.
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கடனாளிகள் கணக்கு, மொத்தக் கடனீந்தோர் கணக்கு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு மற்றும் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரித்து கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| 2018, ஏப்ரல் 1 அன்று இருப்புகள் | 2019, மார்ச் 31 அன்று இருப்புகள் | ||
| பற்பல கடனாளிகள் | 2,40,000 | பற்பல கடனாளிகள் | 2,20,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 30,000 | பற்பல கடனீந்தோர் | 1,50,000 |
| பற்பல கடனீந்தோர் | 1,20,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 8,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 10,000 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 20,000 |
| பிற தகவல்கள்: | ரூ. | ரூ. | |
| கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் | 6,00,000 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்குச் செலுத்தியது | 30,000 |
| வாடிக்கையாளருக்கு அளித்த தள்ளுபடி | 25,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது | 60,000 |
| கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் | 3,20,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 4,000 |
| சரக்களித்தோரால் அளிக்கப்பட்ட தள்ளுபடி | 10,000 | வாராக்கடன் | 16,000 |
11.
நெய்வேலி அறிவியல் சங்கத்தின் 2018, டிசம்பர் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு.
| பெறுதல்கள் | ரூ | செலுத்தல்கள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | இருப்பு கீ/கொ | |||
| கைரொக்கம் | 2,400 | வங்கி மேல்வரைப்பற்று | 1,000 | |
| சந்தா | 8,700 | தபால் செலவுகள் | 200 | |
| ஆயுள் உறுப்பினர் கட்டணம் | 5,000 | அறிவியல் உபகரணங்கள் வாங்கியது | 10,000 | |
| கண்காட்சி நிதி வரவுகள் | 7,000 | ஆய்வகச் செலவுகள் | 2,400 | |
| அறிவியல் உபகரணங்கள் விற்றது | 6,000 | செயலாளருக்கான மதிப்பூதியம் | 5,000 | |
| (ஏட்டு மதிப்பு ரூ.5,000) | தணிக்கைக் கட்டணம் | 3,600 | ||
| இதர வரவுகள் | 500 | பொதுச் செலவுகள் | 1,800 | |
| கண்காட்சி செலவுகள் | 5,000 | |||
| இருப்பு கீ/இ | ||||
| கையிருப்பு ரொக்கம் | 200 | |||
| வங்கி ரொக்கம் | 400 | 600 | ||
| 29,600 | 29,600 |
கூடுதல் தகவல்கள்:
(i)தொடக்க முதல் நிதி ரூ.6,400
(ii) சந்தா தொகையில் 2019 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ. 600 உள்ளடங்கியுள்ளது.
(iii) 1.1.2018 அன்று அறிவியல் உபகரணங்கள் இருப்பு ரூ.5,000.
(iv) கண்காட்சியின் உபரித்தொகை புதிய கலையரங்கத்திற்கான ஒதுக்காக உருவாக்கப்பட வேண்டும்.
2018, டிசம்பர், 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
12.
பின்வரும் நிலைகளில் இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.
நிலை 1: விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.8,00,000, இயக்க இலாபம் ரூ.2,00,000.
நிலை 2: விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.20,00,000, இயக்க அடக்கவிலை ரூ.14,00,000.
நிலை 3: விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.10,00,000, மொத்த இலாபம் விற்பனையிலிருந்து பெற்ற வருவாயில் 25%, இயக்கச் செலவுகள் ரூ.1,00,000
13.
துரை மற்றும் வேலன் 2018, ஏப்ரல் 1 அன்று கூட்டாண்மை ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். துரை ரூ.25,000 மற்றும் வேலன் ரூ.30,000 முதலாக கொண்டுவந்தனர். ஒப்பந்தம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது:
(அ) துரை மற்றும் வேலன் இலாப நட்டங்களை 2:3 என்ற விகிதத்தில் பகிர வேண்டும்.
(ஆ) கூட்டாளிகளுக்கு முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% தரப்பட வேண்டும்.
(இ) எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடப்பட வேண்டியது: துரை ரூ.300 மற்றும் வேலன் ரூ.450.
(ஈ) துரைக்கு ஊதியம் ஆண்டுக்கு ரூ.5,000 வழங்கப்பட வேண்டும் மற்றும்
(உ) வேலனுக்கு தரப்பட வேண்டிய கழிவு ரூ.2,000.
அவ்வாண்டில் வட்டி, ஊதியம் மற்றும் கழிவு போன்றவற்றை சரிக்கட்டுவதற்கு முன் நிறுவனம் ஈட்டிய இலாபம் ரூ.20,000. இலாபநட்டப் பகிர்வு கணக்கைத் தயாரிக்கவும்.
14.
வேலூர் பொழுதுபோக்கு மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| தொடக்க இருப்பு (1.4.2016) | 3,000 | கேளிக்கை வரவுகள் | 20,000 |
| தொடக்க வங்கி இருப்பு (1.4.2016) | 12,000 | சேர்க்கைக் கட்டணம் பெற்றது | 1,000 |
| அறைகலன் வாங்கியது | 11,000 | நகராட்சி வரி | 22,000 |
| விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது | 11,000 | அறக்கொடை நாடகக்காட்சி செலவு | 2,000 |
| விளையாட்டு அரங்கத்திற்காக பெற்ற நன்கொடை | 8,000 | பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது | 15,000 |
| பழைய டென்னிஸ் பந்துகள் விற்றது | 1,500 | புதிய டென்னிஸ் மைதானம் கட்டியது | 18,000 |
| செய்தித்தாள்கள் வாங்கியது | 500 | அறக்கொடை நாடகக்காட்சி வரவுகள் | 2,500 |
| பயணச் செலவுகள் | 4,500 | இறுதி கைரொக்க இருப்பு | 8,000 |
15.
முழுமை பெறா பதிவேடுகளைப் பராமரித்துவரும் அப்துல் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.
| விவரம் | 1.4.2017 ரூ. | 31.3.2018 ரூ. |
|---|---|---|
| சரக்கிருப்பு | 1,00,000 | 50,000 |
| பற்பல கடனாளிகள் | 2,50,000 | 3,50,000 |
| ரொக்கம் | 25,000 | 40,000 |
| அறைகலன் | 10,000 | 10,000 |
| பற்பல கடனீந்தோர் | 1,50,000 | 1,75,000 |
பிற விவரங்கள்:
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| எடுப்புகள் | 40,000 | கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் | 5,35,000 |
| பெற்ற தள்ளுபடி | 20,000 | பல்வகைச் செலவுகள் | 30,000 |
| அளித்த தள்ளுபடி | 25,000 | 1.4.2017 அன்று முதல் | 2,35,000 |
| கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் | 4,50,000 |
16.
அகமது முறையான கணக்கேடுகளைப் பராமரிப்பதில்லை. 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.
| விவரம் | 1.4.2017 | 31.3.2018 |
|---|---|---|
| ரூ. | ரூ. | |
| வங்கி இருப்பு | 14,000 (வ) | 18,000 (ப) |
| கைரொக்கம் | 800 | 1,500 |
| சரக்கிருப்பு | 12,000 | 16,000 |
| கடனாளிகள் | 34,000 | 30,000 |
| பொறித்தொகுதி | 80,000 | 80,000 |
| அறைகலன் | 40,000 | 40,000 |
| கடனீந்தோர் | 60,000 | 72,000 |
அகமது தனது சொந்தப் பயனுக்காக ரூ. 40,000 எடுத்துக்கொண்டார். தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக அவர் ரூ. 16,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்க வேண்டும். பொறித்தொகுதி மீது 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.
17.
பின்வரும் தகவல்களிலிருந்து, கவிதா நிறுமத்தின் பொக்கு சாவீதங்களை கணக்கிடவும்.
| விவரம் | ரூ. (ஆயிரத்தில்) | ||
|---|---|---|---|
| 2015-16 | 2016-17 | 2017-18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 100 | 125 | 150 |
| இதர வருமானம் | 20 | 25 | 30 |
| செலவுகள் | 100 | 120 | 80 |
| வருமான வரி | 30% | 30% | 30% |
18.
பின்வரும் தகவல்களிலிருந்து புற அக பொறுப்பு விகிதத்தினைக் கணக்கிடவும்.
| விவரம் | தொகை ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்கு முதல் | |
| நேர்மைப் பங்கு முதல் | 6,00,000 |
| (ஆ) காப்பு மற்றும் மிகுதி | 2,00,000 |
| 2. நீண்டகால பொறுப்புகள் | |
| நீண்டகால கடன்கள் (கடனீட்டுப் பத்திரங்கள்) | 6,00,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 1,60,000 |
| (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள் | |
| கொடுபட வேண்டிய செலவுகள் | 40,000 |
| மொத்தம் | 16,00,000 |
19.
ஒரு கூட்டாண்மை நிறுவனம் கடந்த மூன்று வருடங்களாக ஈட்டிய நிகர இலாபங்கள் பின்வருமாறு:
2016: ரூ.20,000; 2017: ரூ.17,000 மற்றும் 2018: ரூ.23,000.
மேற்குறிப்பிட்ட காலம் முழுவதும் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.80,000. நிறுவனம் கொண்டுள்ள இடரினைக் கருத்தில் கொண்டு, பயன்படுத்தப்பட்ட முதல் மீதான சாதாரண இலாப வீதம் 15% என கருதப்பட்டது. உயர் இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
20.
பின்வரும் தகவல்களிலிருந்து மொத்த இலாப விகிதம் கணக்கிடவும். விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.2,50,000, விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.2,10,000 மற்றும் கொள்முதல் ரூ.1,80,000.
1.
| விவரம் | 2016-17 | 2017-18 | தொகையின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) | சதவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) | |
|---|---|---|---|---|---|
| ரூ. | ரூ. | ||||
| I | பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||||
| பங்குதாரர் நிதி | 2,00,000 | 5,20,000 | +3,20,000 | +160 | |
| நீண்டகாலப் பொறுப்புகள் | 1,00,000 | 1,20,000 | +20,000 | +20 | |
| நடப்புப் பொறுப்புகள் | 50,000 | 60,000 | +10,000 | +20 | |
| மொத்தம் | 3,50,000 | 7,00,000 | 3,50,000 | +100 | |
| II | சொத்துகள் | ||||
| நிலைச் சொத்துகள் | 2,00,000 | 4,00,000 | +2,00,000 | +100 | |
| நடப்புச் சொத்துகள் | 1,50,000 | 3,00,000 | +1,50,000 | +100 | |
| மொத்தம் | 3,50,000 | 7,00,000 | 3,50,000 | +100 |
2.
(அ) சராசரி இலாபத்தைக் கணக்கிடுதல்:
= \(\frac { 23,000 }{ 5 } \) = ரூ.4,600
(ஆ) நற்பெயரை கணக்கிடல்:
நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகள் எண்ணிக்கை
= ரூ.4,600 x 3 = 13,800
3.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கிக் க/கு (60,000x5) | ப | 3,00,000 | |||
| நேர்மை பங்கு விண்ணப்பக் க/கு | 3,00,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெற்றது) | |||||
| நேர்மை பங்கு விண்ணப்பக் க/கு (50,000x5) | ப | 2,50,000 | |||
| நேர்மை பங்கு முதல் க/கு | 2,50,000 | ||||
| (நேர்மை பங்கு விண்ணப்பத் தொகை பங்கு முதலுக்கு கணக்கிற்கு மாற்றியது) | |||||
| நேர்மை பங்கு விண்ணப்பக் க/கு (10,000x5) | 50,000 | ||||
| வங்கி க/கு | 50,000 | ||||
| (மிகுதியான பங்கு விண்ணப்பத் தொகை திரும்பிச் செலுத்தியது) | |||||
| நேர்மை பங்கு ஒதுக்கீட்டுக் க/கு | ப | 1,50,000 | |||
| நேர்மை பங்கு முதல் க/கு | 1,50,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| வங்கிக் க/கு | ப | 1,50,000 | |||
| நேர்மை பங்கு ஒதுக்கீட்டுக் க/கு | 1,50,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| நேர்மை பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | ப | 1,00,000 | |||
| நேர்மை பங்கு முதல் க/கு | 1,00,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 1,00,000 | |||
| நேர்மை பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்புக் க/கு | 1,00,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற்றது) |
4.
ரோஹித் பங்கு = \(\frac { 2 }{ 10 } \)
ஆதாயப் பங்கு = விலகும் கூட்டாளியின் பங்கு x ஆதாயப்பங்கின் விகிதாச்சாரம்
ராகுல் = \(\frac { 2 }{ 10 } \times \frac { 3 }{ 5 } =\frac { 6 }{ 50 } \)
ரவி = \(\frac { 2 }{ 10 } \times \frac { 2 }{ 5 } =\frac { 4 }{ 50 } \)
ஆதாய விகிதம் = \(\frac { 4 }{ 50 } :\frac { 4 }{ 50 } \) அதாவது 3 : 2
தொடரும் கூட்டாளிகளின் புதிய பங்கு = பழைய பங்கு + ஆதாயப் பங்கு
ராகுல் = \(\frac { 5 }{ 10 } +\frac { 6 }{ 50 } =\frac { 25+6 }{ 50 } =\frac { 31 }{ 50 } \)
ரவி = \(\frac { 3 }{ 10 } +\frac { 4 }{ 50 } =\frac { 15+4 }{ 50 } =\frac { 19 }{ 50 } \)
ஆகையால், ராகுல் மற்றும் ரவி ஆகியோரின் புதிய விகிதம் = \(\frac { 31 }{ 50 } :\frac { 19 }{ 50 } \) அதாவது 31 : 19
5.
| செலவுகள் | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| சந்தா | 50,000 | |||
| கழிக்க: 2015-16 ஆம் ஆண்டுக்கான சந்தா | 6,000 | |||
| 44,000 | ||||
| கழிக்க: 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா | 3,500 | |||
| 40,500 | ||||
| கூட்டுக: 2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா பெற வேண்டியது. | 1,500 | 42,000 |
6.

நீண்டகாலக் கடன் = 9% கடனீட்டுப் பத்திரங்கள் = ரூ.4,00,000
பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + முன்னுரிமைப் பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி
= 1,50,000+2,00,000+1,50,000=ரூ.5,00,000
\(\therefore \) புற அக பொறுப்புகள் விகிதம் =
\(\cfrac { 4,00,000 }{ 5,00,000 } =0.8:1\)
(ii)

(iii)

= 8%முன்னுரிமைப் பங்குமுதல் +9% கடனீட்டுப் பத்திரங்கள்
= 2,00,000+4,00,000=ரூ 6,00,000
நேர்மைப் பங்குதாரர் நிதி = 1,50,000+1,50,000=ரூ.3,00,000
\(\therefore \) முதல் உந்து திறன் விகிதம் = \(\cfrac { 6,00,000 }{ 3,00,00 } =2:1\)
7.

நடப்புச் சொத்துகள் = சரக்கிருப்பு + கடனாளிகள் + ரொக்கம் + பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுகள் குறுகிய கால முதலீடுகள் + முன் செலுத்திய செலவுகள்
= ரூ.52,000+29,000+5,000+5,000+15,000+2,000=ரூ1,08,000
நடப்புப் பொறுப்புகள் = கடனீந்தோர் + செலுத்தற்குரிய மாற்று சீட்டுகள் + செலுத்த வேண்டிய செலவினங்கள்
= ரூ.36,000+10,000+8,000=ரூ.54,000
நடப்பு விகிதம் = \(\cfrac { 1,0,,000 }{ 54,000 } =2:1\)
(ii)

நீர்மைச் சொத்துகள் = நடப்புச் சொத்துகள் -(சரக்கிருப்பு +முன்கூட்டிச் செலுத்திய செலவினங்கள்)
= ரூ.1,08,000-54,000=ரூ54,000
நீர்மை விகிதம் = \(\cfrac { 54,000 }{ 54,000 } =1:1\)
8.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| பற்பல கடனீந்தோர் | 25,000 | கை ரொக்கம் | 2,000 |
| கொடுபட வேண்டிய செலவுகள் | 1,000 | வங்கி இருப்பு | 8,000 |
| இறுதி முதல் | 1,16,500 | சரக்கிருப்பு | 80,000 |
| (இருப்புக் கட்டும் தொகை) | பற்பல கடனாளிகள் | 50,000 | |
| அறைகலன் | 2,500 | ||
| 1,42,500 | 1,42,500 |
| விவரம் | ரூ. |
|---|---|
| இறுதி முதல் | 1,16,500 |
| கூட்டுக: எடுப்பு (ரூ.1,000x12மாதங்கள்) | 12,000 |
| 1,28,500 | |
| கழிக்க: கூடுதல் முதல் | 20,000 |
| சரிகட்டப்பட்ட இறுதி முதல் | 1,08,500 |
| கழிக்க: தொடக்க முதல் | 1,20,000 |
| அவ்வாண்டு நட்டம் | 11,500 |
9.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| கடனீந்தோர் | 50,000 | நிலம் மற்றும் கட்டடம் | 2,40,000 |
| தொடக்க முதல் | 3,80,000 | சரக்கிருப்பு | 1,20,000 |
| (இருப்புக்கட்டும் தொகை) | கடனாளிகள் | 40,0000 | |
| வங்கி ரொக்கம் | 30,000 | ||
| 4,30,000 | 4,30,000 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்கக் க/கு (செலுத்தியது) | 6,00,000 | இருப்பு கீ/கொ | 50,000 |
| கொள்முதல் திருப்பம் க/கு | 30,000 | கொள்முதல் க/கு (கடன்) | 6,25,000 |
| இருப்பு கீ/இ | 45,000 | (இருப்புக்கட்டும் தொகை) | |
| 6,75,000 | 6,75,000 |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 1,20,000 | விற்பனை | 7,70,000 | ||
| கொள்முதல் | கழிக்க | 25,000 | 7,45,000 | ||
| கடன் | 6,25,000 | இறுதிச்சரக்கிருப்பு | 1,70,000 | ||
| கழிக்க:திருப்பம் | 30,000 | 5,95,000 | |||
| கூலி | 65,000 | ||||
| மொத்த இலாபம் கீ/இ | 1,35,000 | ||||
| 9,15,000 | 9,15,000 | ||||
| வெளித் தூக்குக்கூலி | 7,500 | மொத்த இலாபம் கீ/கொ | 1,35,000 | ||
| பற்பல செலவுகள் | 28,000 | ||||
| நிலம் மற்றும் கட்டடம் மீதான தேய்மானம் 5% | 12,000 | ||||
| ஐயக்கடன் ஒதுக்கு | 1,500 | ||||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 86,000 | ||||
| 1,35,000 | 1,35,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் | 3,80,000 | நிலம் மற்றும் கட்டடம் | 2,40,000 | ||
| கூட்டுக: நிகர இலாபம் | 86,000 | கழிக்க:தேய்மானம் | 12,000 | 2,28,000 | |
| 4,66,000 | இறுதிச் சரக்கிருப்பு | 1,70,000 | |||
| கழிக்க:எடுப்புகள் | 10,000 | 4,56,000 | கடனாளிகள் | 51,500 | |
| கடனீந்தோர் | 45,000 | கழிக்க: ஐயக்கடன் ஒதுக்கு | 1,500 | 50,000 | |
| வங்கி ரொக்கம் | 53,000 | ||||
| 5,01,000 | 5,01,000 |
10.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 30,000 | ரொக்கக் க/கு | 60,000 |
| கடனாளிகள் க/கு | 42,000 | கடனாளிகள் க/கு | 4,000 |
| (மாற்றுச்சீட்டு பெற்றது - (இருப்புக்கட்டும் தொகை) | (பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது) | ||
| இருப்பு கீ/இ | 8,000 | ||
| 72,000 | 72,000 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 2,40,000 | ரொக்கக் க/கு (பெற்றது) | 6,00,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு | 4,000 | அளித்த தள்ளுபடி க/கு | 25,000 |
| (மறுக்கப்பட்டது) | |||
| விற்பனை க/கு (கடன் | 6,59,000 | வாராக்கடன் க/கு | 16,000 |
| (இருப்புக்கட்டும் தொகை) | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு | 42,000 | |
| (மாற்றுச்சீட்டு பெற்றது) | |||
| இருப்பு கீ/இ | 2,20,000 | ||
| 9,03,000 | 9,03,000 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
| ரொக்கக் க/கு | 30,000 | இருப்பு கீ/கொ | 10,000 |
| (மாற்றுச்சீட்டுக்குச் செலுத்தியது) | பற்பல கடனீந்தோர் க/கு | 40,000 | |
| இருப்பு கீ/இ | 20,000 | (மாற்றுச்சீட்டு ஏற்கப்பட்டது - (இருப்புக்கட்டும் தொகை) | |
| 50,000 | 50,000 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்கக் க/கு (செலுத்தியது) | 3,20,000 | இருப்பு கீ/கொ | 1,20,000 |
| பெற்ற தள்ளுபடி க/கு | 10,000 | கொள்முதல் க/கு (கடன்) | 4,00,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு க/கு | 40,000 | இருப்புக்கட்டும் தொகை) | |
| (மாற்றுச்சீட்டு ஏற்கப்பட்டது) | |||
| இருப்பு கீ/இ | 1,50,000 | ||
| 5,20,000 | 5,20,000 |
11.
| செலவுகள் | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| தபால் செலவுகள் | 200 | சந்தா | 8,700 | |
| ஆய்வகச் செலவுகள் | 2,400 | கழிக்க: முன்கூட்டி செலுத்தியது | 600 | 8,100 |
| செயலாளருக்கான மதிப்பூதியம் | 5,000 | அறிவியல் உபகரணங்கள் விற்றதில் இலாபம் | 1,000 | |
| தணிக்கைக் கட்டணம் | 3,600 | இதர வரவுகள் | 500 | |
| பொதுச் செலவுகள் | 1,800 | |||
| வருமானத்தைக்காட்டிலும் மிகுதியானச் செலவுகள் (பற்றாக்குறை) | 3,400 | |||
| 13,000 | 13,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் நிதி | 6,400 | ரொக்கம் | 200 | ||
| கழிக்க: (பற்றாக்குறை) | 3,400 | 3,000 | வங்கி ரொக்கம் | 400 | |
| ஆயுள் உறுப்பினர் கட்டணம் | 5,000 | அறிவியல் உபகரணங்கள் வாங்கியது | 10,000 | ||
| கழிக்க: கண்காட்சி செலவுகள் | 5,000 | 2,000 | |||
| கண்காட்சி நிதி வரவுகள் | 7,000 | ||||
| முன்கூட்டிச் செலுத்திய சந்தா | 600 | ||||
| 10,600 | 10,600 |
12.
நிலை 1 :

= \(\cfrac { 2,00,000 }{ 8,00,000 } \times 100=25\%\)
நிலை 2:

இயக்க இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் - இயக்க அடக்கவிலை
= 20,00,000-14,00,000=ரூ.6,00,000
\(\therefore \) இயக்க இலாப விகிதம் = \(\cfrac { 6,00,000 }{ 20,00,000 } \times 100=30\%\)
நிலை 3:

மொத்த இலாபம் = 10,00,000 x 25%=ரூ.2,50,000
இயக்க இலாபம் = மொத்த இலாபம் - இயக்கச் செலவுகள்
\(\therefore \) இயக்க இலாப விகிதம் = \(\cfrac { 1,50,000 }{ 10,00,000 } \times 100=15\%\)
13.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் மீதான வட்டி க/கு: | இலாபநட்ட க/கு | 20,000 | ||
| துரை (25,000 x 5%) | 1,250 | எடுப்புகள் மீதான வட்டி க/கு: | ||
| வேலன் (30,000 x 5%) | 1,500 | துரை | 300 | |
| துரை ஊதிய க/கு | 5,000 | வேலன் | 450 | |
| வேலன் கழிவு க/கு | 2,000 | |||
| கூட்டாளிகளின் முதல் க/கு: | ||||
| (இலாபம் மாற்றப்பட்டது) | ||||
| துரை (11,000 x 2/5) | 4,400 | |||
| வேலன் (11,000 x 3/5) | 6,600 | 11,000 | ||
| 20,750 | 20,750 |
14.
| பெறுதல்கள் | ரூ | ரூ | பெறுதல்கள் | ரூ |
|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | அறைகலன் வாங்கியது | 11,000 | ||
| கைரொக்கம் | 3,000 | விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது | 11,000 | |
| வங்கி ரொக்கம் | 12,000 | 15,000 | செய்தித் தாள்கள் வாங்கியது | 500 |
| விளையாட்டு அரங்கத்திற்காக பெற்ற நன்கொடை | 8,000 | பயணச் செலவுகள் | 4,500 | |
| பழைய டென்னிஸ் பந்துகள் விற்றது | 1,500 | நகராட்சி வரி | 22,000 | |
| கேளிக்கை வரவுகள் | 20,000 | செலவுகள் | 2,000 | |
| சேர்க்கைக் கட்டணம் | 1,000 | பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது | 15,000 | |
| அறக்கொடை நாடகக்காட்சி வரவுகள் | 2,500 | புதிய டென்னிஸ் மைதானம் கட்டியது | 18,000 | |
| இருப்பு கீ/இ | இருப்பு கீ/இ | |||
| வங்கி மேல்வரைப்பற்று | 44,000 | கைரொக்கம் | 8,000 | |
| 92,000 | 92,000 |
15.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 2,50,000 | ரொக்கக் க/கு (பெற்றது) | 5,35,000 |
| விற்பனை க/கு (கடன்) (இருப்புக் கட்டும் தொகை) | 6,60,000 | அளித்த தள்ளுபடி க/கு | 25,000 |
| இருப்பு கீ/இ | 3,50,000 | ||
| 9,10,000 | 9,10,000 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்கக் க/கு (செலுத்தியது) | 4,50,000 | இருப்பு கீ/கொ | 25,000 |
| பெற்ற தள்ளுபடி க/கு | 20,000 | கொள்முதல் க/கு (கடன்) (இருப்புக் கட்டும் தொகை) | 4,95,000 |
| இருப்பு கீ/இ | 1,75,000 | ||
| 6,45,000 | 6,45,000 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 1,00,000 | விற்பனை | 6,60,000 |
| கொள்முதல் | 4,95,000 | இறுதிச் சரக்கிருப்பு | 50,000 |
| மொத்த இலாபம் கீ/இ | 1,15,000 | ||
| 7,10,000 | 7,10,000 | ||
| அளித்த தள்ளுபடி | 25,000 | மொத்த இலாபம் கீ/கொ | 1,15,000 |
| பல்வகைச் செலவுகள் | 30,000 | பெற்ற தள்ளுபடி | 20,000 |
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 80,000 | ||
| 1,35,000 | 1,35,000 |
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. | |
|---|---|---|---|---|
| பற்பல கடனீந்தோர் | 1,75,000 | ரொக்கம் | 40,000 | |
| முதல் | 2,35,000 | அறைகலன் | 10,000 | |
| கூட்டுக: நிகர இலாபம் | 80,000 | சரக்கிருப்பு | 50,000 | |
| 3,15,000 40,000 |
கடனாளிகள் | 3,50,000 | ||
| கழிக்க: எடுப்புகள் | 2,75,000 | |||
| 4,50,000 | 4,50,000 |
16.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| வங்கி மேல்வரைப்பற்று | 14,000 | கைரொக்கம் | 800 |
| கடனீந்தோர் | 60,000 | சரக்கிருப்பு | 12,000 |
| முதல் (இருப்புக் கட்டும் தொகை) | 92,800 | கடனாளிகள் | 34,000 |
| பொறித்தொகுதி | 80,000 | ||
| அறைகலன் | 40,000 | ||
| 1,66,800 | 1,66,800 |
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| கடனீந்தோர் | 72,000 | வங்கி இருப்பு | 18,000 | |
| முதல் (இருப்புக் கட்டும் தொகை) | 1,04,000 | கைரொக்கம் | 1,500 | |
| சரக்கிருப்பு | 16,000 | |||
| கடனாளிகள் | 30,000 | |||
| கழிக்க: கடனாளிகள் மீதான ஒதுக்கு 5% | 1,500 | 28,500 | ||
| பொறித்தொகுதி | 80,000 8,000 |
|||
| கழிக்க: தேய்மானம் | 72,000 | |||
| அறைகலன் | 40,000 | |||
| 1,76,000 | 1,76,000 |
| விவரம் | ரூ. |
|---|---|
| 31.3.2018 அன்று இறுதிமுதல் | 1,04,000 |
| கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் | 40,000 |
| 1,44,000 16,000 |
|
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டுவரப்பட்ட கூடுதல் முதல் | |
| சரிக்கட்டப்பட்ட இறுதிமுதல் | 1,28,000 92,800 |
| கழிக்க: 31.3.2017 அன்று தொடக்க முதல் | |
| 31.3.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் இலாபம் | 35,200 |
17.
| விவரம் | ரூ. (ஆயிரத்தில்) | போக்கு சதவீதங்கள் | ||||
|---|---|---|---|---|---|---|
| 2015-16 | 2016-17 | 2017-18 | 2015-16 | 2016-17 | 2017-18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 100 | 125 | 150 | 100 | 125 | 150 |
| கூட்டுக:இதர வருமானம் | 20 | 25 | 30 | 100 | 125 | 150 |
| மொத்தம் வருமானங்கள் | 120 | 150 | 180 | 100 | 125 | 150 |
| கழிக்க: செலவுகள் | 100 | 120 | 80 | 100 | 120 | 80 |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம் | 20 | 30 | 100 | 100 | 150 | 500 |
| கழிக்க: வருமான வரி 30% | 6 | 9 | 30 | 100 | 150 | 500 |
| வரிக்கு பின்னர் உள்ள இலாபம் | 14 | 21 | 70 | 100 | 150 | 500 |
குறிப்பு :
| 2016-17 | 2017-18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாயின் சதவீதம் | \(=\frac{125}{100}\times 100=125\%\) | \(=\frac{150}{100}\times 100=150\%\) |
| இதர வருமானத்தின் சதவீதம் | \(=\frac{25}{20}\times 100=125\%\) | \(=\frac{25}{20}\times 100=125\%\) |
| மொத்த வருமானத்தின் சதவீதம் | \(=\frac{150}{120}\times 100=125\%\) | \(=\frac{180}{120}\times 100=150\%\) |
| செலவுகளின் சதவீதம் | \(=\frac{120}{100}\times 100=120\%\) | \(=\frac{80}{100}\times 100=80\%\) |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம் | \(=\frac{30}{20}\times 100=150\%\) | \(=\frac{100}{20}\times 100=500\%\) |
| வரிக்கு பின்னர் உள்ள இலாபத்தின் சதவீதம் | \(=\frac{21}{14}\times 100=150\%\) | \(=\frac{70}{14}\times 100=500\%\) |
18.

நீண்டகாலக் கடன் = கடனீட்டுப் பத்திரங்கள் = ரூ.6,00,000
பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி
= 6,00,000+2,00,000= ரூ.8,00,000
\(\therefore \) புற அக பொறுப்புகள் விகிதம் = \(\cfrac { 6,00,000 }{ 8,00,000 } =0.75:1\)
19.
= \(\frac { 20,000+17,000+23,000 }{ 3 } = \frac { 60,000 }{ 3 }\)
= ரூ.20,000
சாதாரண இலாபம் = பயன்படுத்தப்பட்ட முதல் x சாதாரண இலாப விகிதம்
= 80,000 x 15%
= ரூ.12,000
உயர் இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம்
= 20,000 - 12,000
= ரூ.8,000
நற்பெயர் = உயர் இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
= ரூ.8,000 x 2 = ரூ.16,000
நற்பெயர் = ரூ.16,000
20.

மொத்த இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் - விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவில்லை
= 2,50,000-2,10,000=ரூ.40,000
\(\therefore \) மொத்த இலாப விகிதம் = \(\cfrac { 40,000 }{ 2,50,000 } =\times 100=16\%\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards