12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர்
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
பின்வரும் தகவல்களிலிருந்து மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் காணவும்
(அ) சராசரி இலாபம் = ரூ.1,20,000
(ஆ) சாதாரண இலாப விகிதம் = 10%
(இ) பயன்படுத்தப்பட்ட முதல் = ரூ.9,00,000
2.
கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:
(அ) ஈட்டிய இலாபங்கள் : 2016 : ரூ.30,000: 2017: ரூ.35,000 மற்றும் 2018: ரூ.38,000;
(ஆ) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.5,000 சேர்த்துள்ளது
(இ) சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்தால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ரூ.3,000 குறைக்கப்பட்டது
(ஈ) சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான காப்பீட்டுக் கட்டணம் ஆண்டுகளுக்கு ரூ.3,600 என மதிப்பிடப்பட்டது
3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுக்குள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்
3.
ஒரு நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் கீழ்கண்டவாறு நிகர இலாபங்களை ஈட்டியுள்ளது
| ரூ. | |
| முதல் ஆண்டு | 36,000 |
| இரண்டாம் ஆண்டு | 40,000 |
| மூன்றாம் ஆண்டு | 44,000 |
நிறுவனத்தின் பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.1,20,000, நியாயமான முதல் மீதான வருமானம் உயர் இலாபத்தை மூன்று ஆண்டு கொள்முதல் எனக்கொண்டு நற்பெயரைக் கணக்கிடுக
4.
நிறுவனத்தின் நற்பெயர் கடந்த ஐந்து ஆண்டு சராசரி இலாபத்தை மூன்று ஆண்டு கொள்முதல் என்று மதிப்பிடப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளின் இலாபங்கள்:
2000 - ரூ.4,200
2002 - ரூ.4,700
2004 - ரூ.5,000
2001 - ரூ.4,500
2003 - ரூ.4,600
5.
கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:
(அ) ஈட்டிய இலாபங்கள் : 2016: ரூ.30,000; 2017: ரூ.29,000 மற்றும் 2018: ரூ.32,000.
(ஆ) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.3,000 சேர்ந்துள்ளது.
(இ) சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்ததால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ரூ.2,000 குறைக்கப்பட்டது.
(ஈ) சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான காப்பீட்டுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.5,600 என மதிப்பிடப்பட்டது.
3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
6.
ஆண்டுத்தொகை என்றால் என்ன?
7.
பின்வரும் விவரங்களிலிருந்து, கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
| ஆண்டு | முடிவு | தொகை ரூ. |
|---|---|---|
| 2015 | இலாபம் | 5,000 |
| 2016 | இலாபம் | 8,000 |
| 2017 | நட்டம் | 3,000 |
| 2018 | இலாபம் | 6,000 |
8.
கூட்டாண்மை நிறுவனத்தில் நற்பெயரை மதிப்பிடும் ஏதேனும் இரண்டு சூழ்நிலைகளைத் தரவும்.
9.
சாதாரண இலாப விகிதம் என்றால் என்ன?
10.
பின்வரும் தகவல்களிலிருந்து மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் காணவும்.
(அ) சராசரி இலாபம் = ரூ.60,000
(ஆ) சாதாரண இலாப விகிதம் = 10%
(இ) பயன்படுத்தப்பட்ட முதல் = ரூ.4,50,000
11.
கூட்டு சராசரி முறையில் நற்பெயர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
12.
நற்பெயரின் வகைகளை எழுத விளக்குக.
13.
நற்பெயரை மதிப்பீடு செய்வதற்கான தேவைகள் யாவை?
14.
நற்பெயரின் நன்மைகளை எழுதுக
15.
சாதாரண இலாபத்தை விட சராசரி இலாபம் மிகுதிக்கு ______ என்று பெயர்.
மொத்த இலாபம்
நிகர இலாபம்
உயர் இலாபம்
இவற்றில் எதுவுமில்லை
16.
வியாபாரத்தின் உயர் இலாபம் என்பது சாதாரண இலாபத்தை விட கூடுதலாக உள்ள _______ ஆகும்
கூட்டு இலாபம்
சராசரி இலாபம்
சாதாரண இலாபம்
இவற்றில் எதுவுமில்லை
17.
கூட்டு சராசரி இலாபம் கணக்கிட, கூட்டு இலாபத்தின் மொத்தத்தை ஒதுக்கப்பட்ட நிறைகளின் மொத்தத்தால் _______ வேண்டும்
கூட்ட
கழிக்க
பெருக்க
வகுக்க
18.
சராசரி இலாபம் ரூ.50,000 மற்றும் சாதாரண இலாபம் ரூ.30,000 ஆக இருக்கும் போது, உயர் இலாபம்
ரூ.50,000
ரூ.10,000
ரூ.20,000
ரூ.30,000
19.
உயர் இலாப முறைகளில் நற்பெயரின் மதிப்பைக் கண்டறிய அடிப்படையாக இருப்பது எது?
உயர் இலாபம்
கூட்டு இலாபம்
சராசரி இலாபம்
இவற்றில் எதுவுமில்லை
1.
= \(\frac { 1,20,000 }{ 10 } \) x 100
= ரூ.12,00,000
நற்பெயர் = வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு - பயன்படுத்தப்பட்ட முதல்
= ரூ.12,00,000 - ரூ.9,00,000
= ரூ.3,00,000
2.
| விவரம் | 2018 ரூ. |
2017 ரூ. |
2018 ரூ. |
|---|---|---|---|
| இலாபம் | 30,000 | 35,000 | 38,000 |
| கழிக்க: திரும்பத் திரும்ப நிகழா வருமானம் | 5,000 | - | - |
| 35,000 | 35,000 | 38,000 | |
| கூட்டுக: சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்தது (அசாதாரண நட்டம்) | - | 3,000 | 38,000 |
| சரிகட்டப்பட்ட பின் இலாபம் | 35,000 | 38,000 | 38,000 |
= \(\frac { 35,000+38,000+38000 }{ 3 } \)
= \(\frac { 1,11,000 }{ 3 } \) = ரூ.37,000
| விவரம் | ரூ |
|---|---|
| எதிர்காலத்தில் செலுத்தவேண்டிய காப்பீட்டு முனைமத்தினை சரிக்கட்டுவதற்கு முன் சராசரி இலாபம் | 37,000 |
| கழிக்க: எதிர் காலத்தில் செலுத்த வேண்டிய காப்பீட்டு முனைமம் சராசரி இலாபம் | 3,600 |
| சராசரி இலாபம் | 33,400 |
நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
= ரூ.33,400 x 2
= ரூ.66,800
3.
(அ) சராசரி இலாபத்தைக் கணக்கிடுதல்:
= \(\frac { 1,20,000 }{ 3 } \) =ரூ.40,000
(ஆ) சாதாரண இலாபத்தைக் கணக்கிடல்:
சாதாரண இலாபம் = பயன்படுத்தப்பட்ட முதல் x சாதாரண இலாப விகிதம்
= ரூ.1,20,000 x \(\frac { 10 }{ 100 } \)
= ரூ. 12,000
(இ) உயர் இலாபத்தைக் கணக்கிட்டல்:
உயர் இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாப விகிதம்
= ரூ.40,000 - 12,000
(ஈ) நற்பெயரைக் கணக்கிடல்:
நற்பெயர் = உயர் இலாபம் x கொள்முதல் ஆண்டுகள்
= ரூ.28,000 x 3 = ரூ.84,000
4.
(அ) சராசரி இலாபத்தைக் கணக்கிடுதல்:
= \(\frac { 23,000 }{ 5 } \) = ரூ.4,600
(ஆ) நற்பெயரை கணக்கிடல்:
நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகள் எண்ணிக்கை
= ரூ.4,600 x 3 = 13,800
5.
| விவரம் | 2016 ரூ. | 2017 ரூ. | 2018 ரூ. |
|---|---|---|---|
| இலாபம் | 30,000 | 29,000 | 32,000 |
| கழிக்க: திரும்பத் திரும்ப நிகழா வருமானம் | 3,000 | - | - |
| 27,000 | 29,000 | 32,000 | |
| கூட்டுக: சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்தது (அசாதாரண நட்டம்) |
- | 2,000 | - |
| சரிக்கட்டப்பட்ட பின் இலாபம் | 27,000 | 31,000 | 32,000 |

=\(\frac { 27,000+31,000+32,000 }{ 3 } \)
=\(\frac { 90,000 }{ 3 } \)=ரூ.30,000
| விவரம் | ரூ. |
|---|---|
| எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய காப்பீட்டு முனைமத்தினை சரிக்கட்டுவதற்கு முன் சராசரி இலாபம் |
30,000 |
| கழிக்க : எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய காப்பீட்டு முனைமம் | 5,600 |
| சராசரி இலாபம் | 24,400 |
நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
= 24,400 x 2
= ரூ.48,800
6.
ஆண்டுத்தொகை என்பது தொடர்ச்சியான இடைவெளிகளில் தொடர்ந்து சீராக பெறப்படும் ரொக்க ஓட்டத்தைக் குறிக்கும். குறிப்பிட்ட ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒரு குறிப்பிட்ட வட்டி வீதத்தில் ஒரு ரூபாயின் தற்போதைய மதிப்பை ஆண்டுத்தொகை அட்டவணை காண்பிக்கும். கீழ்க்கண்ட சூத்திரத்தைப் பயன்படுத்தி ஆண்டுத் தொகைக் காரணி கணக்கிடப்படுகிறது.
ஆண்டுத்தொகை காரணி = \(\frac { { \left( 1+i \right) }^{ n }-1 }{ i{ \left( 1+i \right) }^{ n } } \)
அதில், i = வட்டி வீதம்
n = எதிர்நோக்கும் ஆண்டுகள்
7.
நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
= \(\frac { 5,000+8,000-3,000+6,000 }{ 4 } \)
= \(\frac { 16,000 }{ 4 } \) = ரூ.4,000
சராசரி இலாபம் = ரூ.4,000
நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
= 4,000 x 3 = 12,000
நற்பெயர் = ரூ.12,000
8.
(i) இலாபப்பகிர்வு விகிதத்தில் மாற்றம் ஏற்படும்போது
(ii) கூட்டாண்மை நிறுவனத்தில் புதிய கூட்டாளி சேர்க்கப்படும் போது
(iii) கூட்டாண்மை நிறுவனத்தில் இருக்கும் கூட்டாளி ஒருவர் நிறுவனத்தை விட்டு விலகும் போது அல்லது கூட்டாளி ஒருவர் இறக்கும் போது
(iv) ஒரு கூட்டாண்மை நிறுவனத்தைக் கலைக்கும் போது
9.
சாதாரண இலாப விகிதம் என்பது ஒரு தொழிலில் ஒரே தன்மையுடைய வியாபார நிறுவனங்கள் சாதாரண சூழ்நிலைகளில் ஈட்டும் இலாப விகிதம் எனப்படும்.
10.

=\(\frac { 60,000 }{ 10 } \) x 100
= ரூ.6,00,000
நற்பெயர் = வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு – பயன்படுத்தப்பட்ட முதல்
= 6,00,000 – 4,50,000
= ரூ.1,50,000
11.
இம்முறையில், நற்பெயரானது கூட்டு சராசரி இலாபத்தினைக் கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கையால் பெருக்குவதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
நற்பெயர் = கூட்டு சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
இம்முறையில், ஒவ்வொரு ஆண்டு இலாபத்தை மீதும் நிறைகள் ஒதுக்கப்படுகின்றன. ஒதுக்கப்பட்ட நிறைகளை அந்தந்த ஆண்டின் இலாபத்தோடு பெருக்கி கூட்டு இலாபம் கண்டறியப்படுகிறது. கூட்டு சராசரி இலாபம் கணக்கிட, கூட்டு இலாபத்தின் மொத்தத்தை ஒதுக்கப்பட்ட நிறைகளின் மொத்தத்தால் வகுக்க வேண்டும்.
இம்முறையானது, இலாபத்தின் போக்கு படிப்படியாக அதிகரித்துக் கொண்டு அல்லது குறைந்து கொண்டு போகும்போது பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, சமீபத்திய ஆண்டுகளின் இலாபத்திற்கு அதிக நிறை ஒதுக்கப்படுகிறது.
12.
நற்பெயரை, வாங்கப்பட்ட நற்பெயர் மற்றும் தன்னுருவாக நற்பெயர் என வகைப்படுத்தலாம்.
(i) வாங்கப்பட்ட அல்லது பெறப்பட்ட நற்பெயர்:
நற்பெயரானது, ரொக்கம் அல்லது பொருளைச் செலுத்தி பெறப்பட்டிருந்தால் அது வாங்கப்பட்ட அல்லது பெறப்பட்ட நற்பெயர் என்றழைக்கப்படுகிறது. ஒரு நிறுவனம் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனத்தை வாங்கும்போது அதற்காகச் செலுத்தப்படும் தொகையானது வாங்கப்பெறும் நிறுவனத்தின் நிகரச் சொத்துகளை (சொத்துகள் பொறுப்புகள்) விட கூடுதலாக இருக்கலாம்
(ii) தன்னுருவாக்க நற்பெயர்:
தொழிலின் சிறப்பம்சங்களான சாதகமான இடவமைவு, நம்பகமான வாடிக்கையாளர்கள் போன்ற சிறப்பியல்புகளை அடிப்படையாகக் கொண்டு, நிறுவனமே தானாக உருவாக்கிக் கொள்ளும் நற்பெயர் தன்னுருவாக்க நற்பெயர் ஆகும். இவ்வகை தன்னுருவாக்க நற்பெயர் கணக்கேடுகளில் பதிவு செய்யப்படக்கூடாது
13.
கூட்டாண்மை நிறுவனங்களில் கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகளில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் நற்பெயர் மதிப்பீடுச் செய்வதற்கான தேவை எழுகிறது. கூட்டாளிகளின் உரிமைகளைக் காக்கும் பொருட்டு பின்வரும் சூழ்நிலைகளில் நற்பெயரை மதிப்பிடுவதற்கான தேவை எழுகிறது:
(i) இலாபப் பகிர்வு விகிதத்தில் மாற்றம் ஏற்படும்போது
(ii) கூட்டாண்மை நிறுவனத்தில் புதிய கூட்டாளி சேர்க்கப்படும்போது
(iii) கூட்டாண்மை நிறுவனத்தில் இருக்கும் கூட்டாளி ஒருவர் நிறுவனத்தை விட்டு விலகும் போது அல்லது கூட்டாளி ஒருவர் இறக்கும் போது
(iv) ஒரு கூட்டாண்மை நிறுவனத்தை கலைக்கும் போது
14.
நற்பெயரின் நன்மைகளைப் பின்வருமாறு விளக்கலாம்:
(i) நற்பெயர் ஒரு புலனாகாச் சொத்து இதற்கென்று தனியாக உருவம் ஏதுமில்லாததால், இது ஒரு புலனாகாச் சொத்து. இதை பார்க்கவோ, தொட்டுணரவோ முடியாது.
(ii) இது தொழில் நிறுவனத்தின் இலாபத் தன்மையைப் பொறுத்து திட்டவட்டமான மதிப்பைக் கொண்டுள்ளது.
(iii) இது தொழில் நிறுவனத்திடமிருந்து பிரிக்க இயலாது.
(iv) இது அதிக இலாபம் ஈட்டுவதற்கு மற்றும் அதிக வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு உதவுகிறது.
(v) தொழில் நிறுவனத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வாங்கும்போது அல்லது விற்கும் போது மட்டுமே நற்பெயரை வாங்கவோ அல்லது விற்கவோ முடியும்
15.
(c)
உயர் இலாபம்
16.
(b)
சராசரி இலாபம்
17.
(c)
பெருக்க
18.
(c)
ரூ.20,000
19.
(a)
உயர் இலாபம்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards