12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 14/09/2019
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கை தயாரிப்பதற்கான படிநிலைகளை எழுதுக.
2.
முதலீட்டு மாறுபடும் நிதி பற்றி குறிப்பு வரைக
3.
கூட்டாளிகளின் முதல் கணக்குகளைத் தயாரிக்கும் முறைகளை எழுதுக.
4.
2018, ஏப்ரல் 1 அன்று சுபா தன்னுடைய தொழிலை ரூ. 1,20,000 முதலுடன் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. 2019, மார்ச் 31 அன்று அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| வங்கி மேல்வரைப்பற்று | 50,000 | சரக்கிருப்பு | 1,60,000 |
| கடனாளிகள் | 1,80,000 | கடனீந்தோர் | 90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 70,000 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 2,40,000 |
| கணினி | 30,000 | கைரொக்கம் | 60,000 |
| இயந்திரம் | 3,00,000 |
அவ்வாண்டில் அவர் தன்னுடைய சொந்த பயனுக்காக ரூ. 30,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ.40,000. அவருடைய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.
5.
இலாப நோக்கற்ற அமைப்பின் இறுதிக் கணக்குகளில் ஆண்டுச் சந்தா எவ்வாறு கையாளப்படுகிறது?
6.
ஒரு கூட்டாண்மை நிறுவனம் விலகும் கூட்டாளி ஒருவரின் கணக்கைத் தீர்ப்பதற்காக நற்பெயரை மதிப்பிட முடிவு செய்தது. அந்த நிறுவனத்தின் கடந்த நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் பின்வருமாறு:
2015: ரூ.40,000; 2016: ரூ.50,000; 2017: ரூ.48,000 ; 2018: ரூ.46,000
வியாபாரம் கூட்டாளிகளில் ஒருவரால் நடத்தப்பட்டது. அவருக்கு எவ்வித ஊதியமும் வழங்கப்படவில்லை. அக்கூட்டாளியின் நியாயமான ஊதியம் ஆண்டுக்கு ரூ.6,000 என மதிப்பிடப்பட்டது.
கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
7.
ஒறுப்பிழப்பு செய்த பங்குகளின் மறுவெளியீடு என்றால் என்ன?
8.
ஒரு சங்கத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018 ஆம் ஆண்டு சந்தா மூலம் பெற்ற வருமானத்தைக் கணக்கிடவும்.
| விவரம் | 1.1.2018 ரூ |
31.12.2018 ரூ |
|---|---|---|
| பெறவேண்டிய சந்தா | 10,000 | 7,000 |
| முன்கூட்டிப் பெற்ற சந்தா | 3,000 | 5,000 |
2018 ஆம் ஆண்டில் பெற்ற சந்தா ரூ.1,50,000.
9.
சாந்தி என்பவரின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புகள் பின்வருமாறு:
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 6,000 | பற்பல கடனீந்தோர் | 25,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 4,000 | சரக்கிருப்பு | 45,000 |
| இயந்திரம் | 60,000 | கடனாளிகள் | 70,000 |
| அறைகலன் | 10,000 | ரொக்கம் | 4,000 |
2018, டிசம்பர் 31ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரித்து அந்நாளைய முதலை கணக்கிடவும்.
10.
பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31ஆம் நாளைய முதல் கண்டறியவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| 2018, ஜனவரி 1 அன்று முதல் | 27,500 |
| உரிமையாளர் தன் சொந்த பயனுக்கு சரக்கு எடுத்தது | 5,000 |
| அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | 2,500 |
| அவ்வாண்டின் இலாபம் | 10,000 |
11.
ஒரு சங்கத்தின் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு தோன்றும்? 2016-17 ல் சங்கம் பெற்ற சந்தா ரூ. 50,000. இதில் 2015-16 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ. 6,000 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ. 3,500 சேர்ந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா ரூ. 1,500 இன்னும் பெற வேண்டியுள்ளது.
12.
திருமதி ரேவதி ரூ.1,20,000 முதலுடன் 1.4.2003 அன்று தொழில் தொடங்கினார் அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வீதம் தன் சொந்த செலவிற்கு எடுத்துக் கொண்டார். அவர் ரூ.20,000 கூடுதல் முதலாக இட்டார் அவருடைய 31.3.2004 அன்றைய நிலை கீழே தரப்பட்டுள்ளது.
| ரூ. | |
|---|---|
| வங்கி இருப்பு | 8,000 |
| சரக்கிருப்பு | 80,000 |
| பற்பல கடனாளிகள் | 50,000 |
| அறைகலன் | 2,500 |
| கை ரொக்கம் | 2,000 |
| பற்பல கடனீந்தோர் | 25,000 |
| கொடுபட வேண்டிய செலவுகள் | 1,000 |
அவர் தனது கணக்குகளை ஒற்றைப்பதிவு முறையில் பராமரித்து வருகிறார். 2003-04 ஆம் ஆண்டிற்கான அவரது இலாபம் அல்லது நட்டம் கண்டறிக.
13.
அன்பு என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி, கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12% கணக்கிடப்படுகிறது. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:
| நாள் | ரூ. |
|---|---|
| மார்ச் 1 | 8,000 |
| ஜூன் 1 | 6,000 |
| செப்டம்பர் 1 | 4,000 |
| டிசம்பர் 1 | 3,000 |
பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்
14.
மதுரை மாநகர மன்றத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு
| பெறுதல்கள் | ரூ | ரூ | செலுத்தல்கள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | மைதான பராமரிப்பு | 16,500 | |||
| ரொக்கம் | 500 | விளையாட்டுப் போட்டிச் செலவுகள் | 19,000 | ||
| வங்கி | 7,000 | 7,500 | பல்வகைச் செலவுகள் | 11,000 | |
| அறை கலன் | 20,000 | ||||
| சந்தா (2016-17 ஆம் ஆண்டிற்கான ரூ 4,000 உட்பட | 30,000 | இருப்பு கீ/இ | |||
| உயில்கொடை | 9,000 | கைரொக்கம் | 1,500 | ||
| அரங்க வாடகை | 10,000 | வங்கி ரொக்கம் | 11,000 | 12,500 | |
| விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள் | 22,500 | ||||
| 79,000 | 79,000 |
கூடுதல் தகவல்கள்:
2017, ஏப்ரல் 1 அன்று மன்றத்தின் முதலீடு ரூ.40,000 ஆக இருந்தது. மன்றத்தின் விளையாட்டுப் போட்டி நிதிக் கணக்கின் வரவிருப்பில் ரூ30,000 இருந்தது. 2018, மார்ச் 31-ல் பெறவேண்டிய சந்தா ரூ4,000 மற்றும் 2018, மார்ச் 31 அன்று பெறவேண்டிய சந்தா ரூ4,500. இறுதிக் கணக்குகளைத் தயார் செய்யவும்.
15.
பாண்டியன் தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
| விவரம் | 1-1-2018 ரூ. |
31-12-2018 ரூ. |
|---|---|---|
| அறைகலன் | 30,000 | 30,000 |
| கைரொக்கம் | 10,000 | 17,000 |
| கடனாளிகள் | 40,000 | 60,000 |
| சரக்கிருப்பு | 28,000 | 11,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 12,000 | 35,100 |
| வங்கிக் கடன் | 25,000 | 25,000 |
| கடனீந்தோர் | 15,000 | 16,000 |
கூடுதல் தகவல்கள்:
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்க விற்பனை | 11,200 | கடன் விற்பனை | 88,800 |
| ரொக்கக் கொள்முதல் | 4,250 | கடன் கொள்முதல் | 35,750 |
| கொள்முதல் மீதான தூக்குக்கூலி | 3,000 | விற்பனை மீதான தூக்குக்கூலி | 700 |
| கழிவு பெற்றது | 600 | வங்கிக் கடன் மீது வட்டி | 2,500 |
| எடுப்புகள் | 8,000 | கூடுதல் முதல் | 14,000 |
| சம்பளம் | 8,900 | அலுவலக வாடகை | 2,400 |
சரிக்கட்டுதல்கள்:
அறைகலன் மீது 5% தேய்மானம் போக்கெழுதவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.
16.
வைரம் வரையறு நிறுமம் ஒன்று ரூ.10 வீதம் 60,000 பங்குகளை ரூ.2 முனைமத்தில் பின்வரும் செலுத்துதலுக்கேற்ப வெளியிட்டது.
| விண்ணப்பத்தின் போது | ரூ.6 |
| ஒதுக்கீட்டின் போது | ரூ.4 (முனைமம் உள்பட) |
| முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் போது | ரூ.2 |
அனைத்துப் பங்குகளும் ஏற்கப்பட்டன. சரிதாவின் 100 பங்குகளுக்கான ஒதுக்கீடு, முதலாவது அழைப்பு மற்றும் இறுதி அழைப்பிற்கான தொகை தவிர, ஏனைய அனைத்தும் பெறப்பட்டன. அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட அனைத்து பங்குகளும் பரிமளா என்பவருக்கு பங்கு ஒன்று ரூ.7 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.
17.
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கடனாளிகள் கணக்கு, மொத்தக் கடனீந்தோர் கணக்கு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு மற்றும் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரித்து கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் கண்டறியவும்.
| விவரம் | தொடக்க இருப்பு ரூ. | இறுதி இருப்பு ரூ. |
|---|---|---|
| கடனாளிகள் | 60,000 | 55,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 5,000 | 1,000 |
| கடனீந்தோர் | 25,000 | 28,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 2,000 | 3,000 |
| பிற தகவல்கள் | ரூ. | |
| கடனாளிகளிடமிருந்து ரொக்கம் பெற்றது | 1,30,000 | |
| வாடிக்கையாளருக்கு அளித்த தள்ளுபடி | 5,500 | |
| கடனீந்தோருக்குச் செலுத்திய ரொக்கம் | 70,000 | |
| சரக்களித்தோர் வழங்கிய தள்ளுபடி | 3,500 | |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்குரிய ரொக்கம் செலுத்தியது | 7,000 | |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்கான ரொக்கம் பெற்றது | 14,000 | |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 1,200 | |
| வாராக்கடன் | 3,500 | |
18.
________ என்பதில் பாதுகாப்பு, காப்புநிதி, தொழிலாளர் ஈட்டு நிதி மற்றும் முதலீட்டு மாறுபாட்டு நிதி ஆகியவை அடங்கும்
நற்பெயர்
காப்புகள்
சொத்துக்கள்
இவற்றில் எதுவுமில்லை
19.
சட்ட நிபந்தனைகள் காரணமாக _______ ஒற்றைப் பதிவு முறையைப் பயன்படுத்துவதில்லை.
நிறுமங்கள்
வங்கிகள்
நிதி நிறுவனங்கள்
தனியாள் வணிகம்
20.
ஒற்றைப்பதிவு முறையில் கணக்கேடுகள் பராமரிப்பு என்று அழைக்கப்படுவது எது?
முழுமை பெறா பதிவேடுகள்
நிலையறிக்கை
இருப்புநிலைக் குறிப்பு
குறிப்பேடுகள்
21.
X, Y மற்றும் Z என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2019, ஏப்ரல் 1 அன்று X இறந்து விட்டார். 2018 இல் இலாபம் ரூ.36,000 என்ற அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்குரிய இலாபத்தில் X ன் பங்கினைக் கண்டறியவும்.
ரூ. 1,000
ரூ. 3,000
ரூ.12,000
ரூ.36,000
22.
23.
கூட்டாளி விலகலின் பொதுக்காப்பு மாற்றப்படுவது _____.
அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
மறுமதிப்பீட்டுக் கணக்கிற்கு
தொடரும் கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
நினைவுக் குறிப்பு மறுமதிப்பீட்டு கணக்கிற்கு
24.
25.
26.
உரிமையாளரின் சொத்துகள் ரூ. 85,000 மற்றும் பொறுப்புகள் ரூ. 21,000 எனில் அவருடைய முதல்தொகை_____.
ரூ. 85,000
ரூ. 1,06,000
ரூ. 21,000
ரூ. 64,000
27.
முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது______.
நிறுமம்
அரசு
சிறிய அளவிலான தனிஆள் வணிகம்
பன்னாட்டு நிறுவனங்கள்
28.
மறுமதிப்பீட்டுக் கணக்கு ஒரு_____.
சொத்து க/கு
பெயரளவு க/கு
ஆள்சார் க/கு
ஆள்சாரா க/கு
29.
30.
வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது ______.
இலாபம் அல்லது நட்டம்
ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு
உபரி அல்லது பற்றாக்குறை
நிதிநிலை
31.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள்______.
வருவாயினத் தன்மை மட்டும் உடையது
முதலினத் தன்மை மட்டும் உடையது
வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது
மேற்கண்ட எதுவுமில்லை
32.
சரியற்ற இணையினை அடையாளம் காணவும்.
சராசரி இலாபமுறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
உயர் இலாப முறையில் நற்பெயர் = உயர் இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
ஆண்டுத்தொகை முறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x ஆண்டுத்தொகை காரணியின் தற்போதைய மதிப்பு
கூட்டு சராசரி இலாப முறையில் நற்பெயர் = கூட்டு சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
33.
34.
கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல் மீது வட்டி______.
வழங்கப்படுவதில்லை
வங்கி வீதத்தில் வழங்கப்படும்
ஆண்டுக்கு 5 % வழங்கப்படும்
ஆண்டுக்கு 6% வழங்கப்படும்
35.
சுப்ரீம் நிறுமம் பங்கொன்று ரூ.10 மதிப்புடைய 100 பங்குகளை இறுதி அழைப்புத்தொகை ரூ.2 செலுத்தாததால் ஒறுப்பிழப்பு செய்தது. அவை அனைத்தும் பங்கொன்று ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. முதலினக் காப்புக்கு மாற்றப்பட வேண்டிய தொகை_____.
ரூ.700
ரூ.800
ரூ.900
ரூ.1,000
36.
பின்வரும் வாக்கியங்களில் எது தவறானது?
வெளியிடப்பட்ட பங்குமுதல் அங்கீகரிக்கப்பட்ட பங்குமுதலை விட ஒருபோதும் அதிகமாக இருக்கக் கூடாது.
பங்குகள் குறை ஒப்பமாக இருக்கும் நிலையில் வெளியிடப்பட்ட பங்குமுதல், ஒப்பிய பங்குமுதலை விட குறைவாக இருக்கும்
காப்பு முதல் நிறுமத்தை கலைக்கும்போது செலுத்துமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.
செலுத்தப்பட்ட பங்குமுதல், அழைக்கப்பட்ட பங்கு முதலின் ஒரு பகுதி ஆகும்
37.
நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக் கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட முதல்
அழைக்கப்பட்ட முதல்
முதலினக் காப்பு
காப்பு முதல்
38.
இலாபநோக்கமற்ற அமைப்புகள் எந்த கணக்குகளையெல்லாம் தயாரிக்கின்றன?
39.
முதல் மீதான வட்டி என்றால் என்ன?
40.
பின்வரும் விவரங்களிலிருந்து பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரிக்கவும் மற்றும் கடனாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டுத் தொகையினைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| ஆண்டு தொடக்கத்தில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 1,40,000 |
| ஆண்டு முடிவில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 2,00,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது | 3,90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 30,000 |
41.
ரமேஷ் மற்றும் ராஜு என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ரஞ்சன் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். ரஞ்சன் அவரது பங்கை பழைய கூட்டாளிகளிடமிருந்து 3:2 என்ற விகிதத்தில் வாங்கினார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
1.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயாரிக்கப் பின்வரும் படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும்:
1) பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் பற்றுப் பக்கத்தில் தொடக்க ரொக்க இருப்பையும், சாதகமான வங்கி இருப்பையும் பதிவு செய்ய வேண்டும். வங்கி மேல்வரைப்பற்றாக இருந்தால் அதனை வரவுப் பக்கம் தொடக்க இருப்பாக பதிவு செய்ய வேண்டும்.
2) அந்த ஆண்டில் மேற்கொண்ட ரொக்கப் பெறுதல்கள் பற்றுப்பக்கத்திலும் மற்றும் ரொக்கச் செலுத்தல்கள் வரவுப் பக்கத்திலும் பதியப்பட வேண்டும்.
3) ரொக்கப் பெறுதல்கள் மற்றும் ரொக்கச் செலுத்தல்கள் பதியும் போது அவை வருவாயினத்தைச் சார்ந்ததா அல்லது முதலினத்தைச் சார்ந்ததா என்று வேறுபடுத்தத் தேவையில்லை. அதுபோன்று, அவை முந்தைய ஆண்டுக்குரியதா அல்லது நடப்பாண்டிற்குரியதா அல்லது எதிர்வரும் ஆண்டிற்குரியதா எனவும் வேறுபடுத்த வேண்டியதில்லை.
4) பற்றுப் பக்கத்தின் மொத்தம் வரவுப்பக்கத்தின் மொத்தத்தை விட அதிகமாக இருந்தால் இருப்புக் கட்டப்படும் தொகை வரவுப் பக்கத்தில் தோன்றும், இது இறுதி ரொக்கம் அல்லது வங்கி இருப்பினைக் குறிக்கும்.
5) வரவுப் பக்கத்தின் மொத்தம் பற்றுப்பக்கத்தின் மொத்தத்தை விட அதிகமாக இருந்தால் இருப்புக்கட்டும் தொகை பற்றுப் பக்கத்தில் தோன்றும். இது வங்கி மேல்வரைப்பற்று ஆகும்.
2.
முதலீடுகளின் சந்தை மதிப்பில் ஏற்படும் இறக்கத்தை சரிக்கட்டுவதற்காக முதலீட்டு மாறுபடும் நிதி இலாபத்திலிருந்து உருவாக்கப்படுகிறது. முதலீடுகளின் சந்தை மதிப்பு, ஏட்டு மதிப்பிற்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருப்பின் முதலீட்டு மாறுபடும் நிதி முழுவதும் பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்படுகிறது. முதலீடுகளின் சந்தை மதிப்பு, ஏட்டு மதிப்பிற்கு குறைவாக இருப்பின், அதன் வேறுபாடு முதலீட்டு மாறுபடும் நிதியிலிருந்து கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகை பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்படுகிறது.
3.
கூட்டாளிகள், கூட்டாண்மை நிறுவனத்தில் முதலீடு செய்யும் தொகை கூட்டாளிகளின் முதல் எனப்படுகிறது. ஒரு நிறுவனத்திலுள்ள கூட்டாளிகளின் முதல் கணக்குகளைப் பின்வரும் ஏதேனும் இரு முறைகளில் பராமரிக்கலாம்.
(i) நிலைமுதல் முறை மற்றும்
(ii) மாறுபடும் முதல் முறை
(i) நிலைமுதல்:
நிலைமுதல் முறையில், கூட்டாளிகளின் முதல் மாறாமல் இருக்கும் மற்றும் பொதுவாக அதே தொகையாக, நிலையானதாக இருக்கும். ஒவ்வொரு கூட்டாளிக்கும் இரண்டு கணக்குகள் பராமரிக்கப்பட வேண்டும். அதாவது (அ) முதல் கணக்கு மற்றும் (ஆ) நடப்புக் கணக்கு, தொடக்க முதல் கொண்டு வந்தது, கூடுதல் முதல் கொண்டு வந்தது போன்றவை தொடர்பான நடவடிக்கைகள் முதல் கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன. மற்ற அனைத்து நடவடிக்கைகளும் நடப்புக் கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன.
(ii) மாறுபடும் முதல் முறை:
இம்முறையில், ஒவ்வொரு கூட்டாளிக்கும் முதல் கணக்கு மட்டும் பராமரிக்கப்படுகிறது கூட்டாளி மற்றும் நிறுவனத்திற்கு இடையேயுள்ள அனைத்து நடவடிக்கைகளும் முதல் கணக்கில் பதியப்படுகின்றன. கூட்டாளியால் கொண்டு வரப்பட்ட தொடக்க முதல் மற்றும் கூடுதல் முதல், முதல் மீது வட்டி, கூட்டாளியின் ஊதியம், கழிவு மற்றும் கூட்டாளியின் இலாபப் பங்கு போன்றவை இக்கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன. முதல் திரும்ப எடுத்தது, எடுப்புகள் மீது வட்டி மற்றும் கூட்டாளிக்குரிய நட்டப்பங்கு போன்றவை இக்கணக்கில் பற்று வைக்கப்படுகின்றன
4.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| வங்கி மேல்வரைப்பற்று | 50,000 | கடனாளிகள் | 1,80,000 |
| கடனீந்தோர் | 90,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 70,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 2,40,000 | கணினி | 30,000 |
| முதல் (இருப்புக்கட்டும் தொகை) | 4,20,000 | இயந்திரம் | 3,00,000 |
| சரக்கிருப்பு | 1,60,000 | ||
| கைரொக்கம் | 60,000 | ||
| 8,00,000 | 8,00,000 |
| விவரம் | ரூ. |
| 2019, மார்ச் 31 அன்று இறுதிமுதல் | 4,20,000 |
| கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் | 30,000 |
| 4,50,000 | |
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | 40,000 |
| சரிகட்டப்பட்ட இறுதிமுதல் | 4,10,000 |
| கழிக்க:2018, ஏப்ரல் 1 அன்று தொடக்க முதல் | 1,20,000 |
| 31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் இலாபம் | 2,90,000 |
5.
இலாப நோக்கற்ற அமைப்புகளின் இறுதி கணக்குகளில் சந்தாவிற்கான செயல்முறைகள்:
அ) வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் செயல்முறைகள்:
நடப்பு ஆண்டு, முந்தைய ஆண்டு, அடுத்த ஆண்டிற்கான சந்தா பெற்றது தனித்தனியாக கொடுக்கப்பட்டிருந்தால், நடப்பு ஆண்டிற்குரிய சந்தா கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களை செய்த பின்பு வருவாய் மற்றும் செலவினக் கணக்கின் வரவுப் பக்கத்தில் காண்பிக்கப்பெறும்.
1) நடப்பாண்டில் பெற வேண்டிய சந்தா கூட்டப்படவேண்டும்.
2) முந்தைய ஆண்டில் முன்கூட்டிப்பெற்ற நடப்பாண்டிற்குரிய சந்தா கூட்டப்பட வேண்டும்.
நடப்பாண்டில் பெற்ற மொத்த சந்தா கொடுக்கப்பட்டிருந்தால், நடப்பாண்டில் பெற்ற மொத்த சந்தா பின்வரும் சரிக்கட்டுதல்களை செய்த பின்னர் வருவாய் மற்றும் செலவினக் கணக்கின் வரவுப் பக்கத்தில் காட்டப்பெறும்.
1) முந்தைய ஆண்டுக்குரிய பெற வேண்டிய சந்தா நடப்பு ஆண்டில் பெறப்பட்டிருந்தால் கழிக்கப்பட வேண்டும். நடப்பாண்டிற்குரிய பெறவேண்டிய சந்தா கூட்டப்பட வேண்டும்.
2) முந்தைய ஆண்டில் முன்கூட்டிப்பெற்ற சந்தாவில் நடப்பாண்டிற்கு உரியது கூட்டப்பட வேண்டும். நடப்பாண்டில் முன்கூட்டிப் பெற்ற சந்தாவில் எதிர்வரும் ஆண்டிற்குரியது கழிக்கப்பட வேண்டும்.
ஆ) இருப்புநிலைக் குறிப்பில் செயல்முறைகள்:
1) நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா மற்றும் இன்னும் பெறவேண்டிய முந்தைய ஆண்டிற்குரிய சந்தா போன்றவை அவ்வாண்டின் இறுதியில் இருப்புநிலைக் குறிப்பில் சொத்துகள் பக்கத்தில் காண்பிக்கப்படும்.
2) நடப்பு ஆண்டில் முன்கூட்டிப் பெற்ற சந்தா அவ்வாண்டின் இருப்புநிலைக் குறிப்பில் பொறுப்புகள் பக்கத்தில் காண்பிக்கப்படும்.
6.

=\(\frac { 40,000+50,000+48,000+46,000 }{ 4 } \)
=\(\frac { 1,84,000 }{ 4 } \)=ரூ.46,000

நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
=40,000 x 3=ரூ.1,20,000
7.
1) ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகள் நிறுமத்தால் மறுவெளியீடு செய்யப்படலாம். அப்பங்குகள் எந்த விலையிலும் மறுவெளியீடு செய்யலாம்.
2) ஆனால், வெளியீட்டு விலை ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகளின் செலுத்தப் பெறாத தொகையைக் காட்டிலும் குறைவாக இருக்கக் கூடாது.
3) உதாரணமாக, ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட ஒரு பங்கின் மதிப்பு ரூ.10 அதற்கு ரூ.4 விண்ணப்பப் பணமாக செலுத்தப்பட்டிருந்தது.
4) அப்பங்குகள் முழுவதும் செலுத்தப்பட்டவைகளாக மறுவெளியீடு செய்யப்பட்டன. அதன் புதிய விலை குறைந்தபட்சமாக ரூ.6(10-4) என நிர்ணயிக்கப்பட வேண்டும்.
5) ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகள் நட்டத்தில் மறுவெளியீடு செய்யப்படும் போது, அந்த நட்டம் ஒறுப்பிழப்பு கணக்கில் பற்று செய்யப்படுகிறது.
6) ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகள் முனைமத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டால், அந்த முனைமத்தொகை பத்திர முனைமக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
8.
2018 ஆம் ஆண்டுக்குரிய சந்தா மூலம் பெற்ற வருமானம் கணக்கிடுதல்
| விவரம் | ரூ | ரூ |
|---|---|---|
| 2018 ஆம் ஆண்டில் பெற்ற சந்தா | 1,50,000 | |
| கூட்டுக: 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா 2017-ல் பெற்றது | 3,000 | |
| 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா பெற வேண்டியது | 7,000 | 10,000 |
| 1,60,000 | ||
| கழிக்க: 2017-ல் பெற வேண்டிய சந்தா | 10,000 | |
| 2018-ல் முன்கூட்டிப் பெற்ற சந்தா | 5,000 | 15,000 |
| 2018 ஆம் ஆண்டில் சந்தா மூலம் பெற்ற வருமானம் | 1,45,000 |
9.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| பற்பல கடனீந்தோர் | 25,000 | ரொக்கம் | 4,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 4,000 | சரக்கிருப்பு | 45,000 |
| முதல் (இருப்புக் கட்டும் தொகை) | 1,66,000 | கடனாளிகள் | 70,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 6,000 | ||
| இயந்திரம் | 60,000 | ||
| அறைகலன் | 10,000 | ||
| 1,95,000 | 1,95,000 |
10.
| விவரம் | ரூ. |
|---|---|
| 31.12.2018 அன்று இறுதி முதல் (இருப்புக் கட்டும் தொகை) | 35,000 |
| கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் (சொந்த பயனுக்கு சரக்கு எடுத்தது) | 5,000 |
| 40,000 2,500 |
|
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | |
| சரிக்கட்டப்பட்ட இறுதி முதல் | 37,500 27,500 |
| கழிக்க : 1.1.2018 அன்று தொடக்க முதல் | |
| அவ்வாண்டின் இலாபம் | 10,000 |
11.
| செலவுகள் | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| சந்தா | 50,000 | |||
| கழிக்க: 2015-16 ஆம் ஆண்டுக்கான சந்தா | 6,000 | |||
| 44,000 | ||||
| கழிக்க: 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா | 3,500 | |||
| 40,500 | ||||
| கூட்டுக: 2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா பெற வேண்டியது. | 1,500 | 42,000 |
12.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| பற்பல கடனீந்தோர் | 25,000 | கை ரொக்கம் | 2,000 |
| கொடுபட வேண்டிய செலவுகள் | 1,000 | வங்கி இருப்பு | 8,000 |
| இறுதி முதல் | 1,16,500 | சரக்கிருப்பு | 80,000 |
| (இருப்புக் கட்டும் தொகை) | பற்பல கடனாளிகள் | 50,000 | |
| அறைகலன் | 2,500 | ||
| 1,42,500 | 1,42,500 |
| விவரம் | ரூ. |
|---|---|
| இறுதி முதல் | 1,16,500 |
| கூட்டுக: எடுப்பு (ரூ.1,000x12மாதங்கள்) | 12,000 |
| 1,28,500 | |
| கழிக்க: கூடுதல் முதல் | 20,000 |
| சரிகட்டப்பட்ட இறுதி முதல் | 1,08,500 |
| கழிக்க: தொடக்க முதல் | 1,20,000 |
| அவ்வாண்டு நட்டம் | 11,500 |
13.
| எடுப்பு நாள் | எடுப்புத் தொகை ரூ. |
வட்டிக்குரிய காலம் டிசம்பர் 31 வரை (மாதங்களில்) | பெருக்குத் தொகை (ரூ) |
|---|---|---|---|
| மார்ச் 1 | 8,000 | 10 | 80,000 |
| ஜூன் 1 | 6,000 | 7 | 42,000 |
| செப்டம்பர் 1 | 4,000 | 4 | 16,000 |
| டிசம்பர் 1 | 3,000 | 1 | 3,000 |
| மொத்த பெருக்குத் தொகை | 1,14,000 | ||
எடுப்புகள் மீதான வட்டி = மொத்த பெருக்குத் தொகை x ஆண்டு வட்டி வீதம் x \(\frac { 1 }{ 12 } \)
= \(1,14,000\times \frac { 12 }{ 100 } \times \frac { 1 }{ 12 } \)
14.
தொடக்க முதல் நிதியினைக் கண்டறிய தொடக்க இருப்புநிலைக் குறிப்பினைத் தயாரிக்க வேண்டும்.
| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|
| முதல் நிதி | முதலீடு | 40,000 | |
| (இருப்புக் கட்டும் தொகை) | 21,500 | பெறவேண்டிய சந்தா | 4,000 |
| விளையாட்டுப் போட்டி நிதி | 30,000 | வங்கி ரொக்கம் | 7,000 |
| கைரொக்கம் | 500 | ||
| 51,500 | 51,500 |
| செலவுகள் | ரூ | வருமானம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|
| மைதான பராமரிப்பு | 16,500 | சந்தா | 30,000 | |
| பல்வகைச் செலவுகள் | 11,000 | கழிக்க: 2016-2017 ஆம் | ||
| ஆண்டிற்காகப் பெற்றது | 4,000 | |||
| செலவுகளைக் காட்டிலும் | 26,000 | |||
| மிகுதியான வருமானம் (உபரி | 13,000 | கூட்டுக: நடப்பு ஆண்டில் பெற வேண்டியது | 4,500 | 30,500 |
| அரங்க வாடகை | 10,000 | |||
| 40,500 | 40,500 |
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|---|
| முதல்நிதி | 21,500 | அறைகலன் | 20,000 | |
| கூட்டுக: செலவுகளைக் காட்டிலும் | முதலீடு | 40,000 | ||
| மிகுதியான வருமானம் (உபரி) | 13,000 | 34,500 | சந்தா பெற வேண்டியது | 4,500 |
| உயில்கொடை | 9,000 | வங்கி ரொக்கம் | 11,000 | |
| விளையாட்டுப் போட்டி நிதி | 30,000 | கைரொக்கம் | 1,500 | |
| கூட்டுக: விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள் | 22,500 | |||
| 52,500 | ||||
| கழிக்க: விளையாட்டுப் போட்டி நிதிச் செலவுகள் | 19,000 | 33,500 | ||
| 77,000 | 77,000 |
15.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| கடனீந்தோர் | 15,000 | கைரொக்கம் | 10,000 |
| வங்கிக்கடன் | 25,000 | சரக்கிருப்பு | 28,000 |
| தொடக்க முதல் (இருப்புக் கட்டும் தொகை) | 80,000 | கடனாளிகள் | 40,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 12,000 | ||
| அறைகலன் | 30,000 | ||
| 1,20,000 | 1,20,000 |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 28,000 | விற்பனை | |||
| கொள்முதல் | ரொக்கம் | 11,200 | |||
| ரொக்கம் | 4,250 | கடன் | 88,800 | 1,00,000 | |
| கடன் | 35,750 | 40,000 | இறுதிச் சரக்கிருப்பு | 11,000 | |
| கொள்முதல் மீதான தூக்குக்கூலி | 3,000 | ||||
| மொத்த இலாபம் கீ/இ | 40,000 | ||||
| 1,11,000 | 1,11,000 | ||||
| சம்பளம் | 8,900 | மொத்த இலாபம் கீ/கொ | 40,000 | ||
| விற்பனை மீதான தூக்குக்கூலி | 700 | கழிவு பெற்றது | 600 | ||
| அலுவலக வாடகை | 2,400 | ||||
| வங்கிக்கடன் மீது வட்டி | 2,500 | ||||
| அறைகலன் மீதான தேய்மானம் | 1,500 | ||||
| ஐயக்கடன் ஒதுக்கு | 600 | ||||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 24,000 | ||||
| 40,600 | 40,600 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் | 80,000 | கைரொக்கம் | 17,000 | ||
| கூட்டுக: நிகர இலாபம் | 24,000 | சரக்கிருப்பு | 11,000 | ||
| 1,04,000 | கடனாளிகள் | 60,000 | |||
| கூட்டுக: கூடுதல் முதல் | 14,000 | கழிக்க: ஐயக்கடன் ஒதுக்கு | 600 | 59,400 | |
| 1,18,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 35,100 | |||
| கழிக்க: எடுப்புகள் | 8,000 | 1,10,000 | அறைகலன் | 30,000 | |
| வங்கிக்கடன் | 25,000 | கழிக்க: தேய்மானம் | 1,500 | 28,500 | |
| கடனீந்தோர் | 16,000 | ||||
| 1,51,000 | 1,51,000 |
16.
வைரம் வரையறு நிறுமத்தின் ஏடுகளில் குறிப்பேட்டுப்பதிவுகள்
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (60,000x6) | ப | 3,60,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 3,60,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | ப | 3,60,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 3,60,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பங்கு, முதலுக்கு மாற்றப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு (60,000x4) | ப | 2,40,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு (60,000x3) | 1,80,000 | ||||
| பத்திர முனைமக் க/கு (60,000x1) | 60,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (59,000x4) | ப | 2,36,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 2,36,000 | ||||
| (1,000 பங்குகள் தவிர ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு (60,000x2) | ப | 1,20,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 1,20,000 | ||||
| (முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (59,000x2) | ப | 1,18,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு | 1,18,000 | ||||
| (முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் க/கு (1,000x10) | ப | 10,000 | |||
| பத்திர முனைமக் க/கு(1,000x2) | ப | 2,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டுக் க/கு (1,000x4) | 4,000 | ||||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு (1,000x2) | 2,000 | ||||
| நேர்மைப் பங்கு ஒறுப்பிழப்பு க/கு (1,000x6) | 6,000 | ||||
| (1000 பங்குகள் மீதான ஒதுக்கீட்டுக் தொகை, முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை செலுத்தாததால் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) | |||||
| வங்கி க/கு (1000x7) | ப | 7,000 | |||
| நேர்மைப் பங்கு ஒறுப்பிழப்பு க/கு (1000x3) | ப | 3,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு (1000x10) | 10,000 | ||||
| (ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட 1000 பங்குகள் மறுவெளியீடு செய்யப்பட்டன) | |||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு(6000-3000) | ப | 3,000 | |||
| முதலினக் காப்பு க/கு | 3,000 | ||||
| (ஒறுப்பிழப்பு செய்த பங்குகளை மறுவெளியீடு செய்ததில் கிடைத்த இலாபம் முதலினக் காப்பிற்கு மாற்றப்பட்டது) |
17.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 5,000 | ரொக்கக் க/கு | 14,000 |
| கடனாளிகள் க/கு (மாற்றுச்சீட்டு பெற்றது - இருப்புக் கட்டும் தொகை) | 11,200 | கடனாளிகள் க/கு (பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது) | 1,200 |
| இருப்பு கீ/இ | 1,000 | ||
| 16,200 | 16,200 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 60,000 | ரொக்கக் க/கு (பெற்றது) | 1,30,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு (மறுக்கப்பட்டது) | 1,200 | அளித்த தள்ளுபடி க/கு | 5,500 |
| விற்பனை க/கு (கடன்) (இருப்புக் கட்டும் தொகை) | 1,44,000 | வாராக்கடன் க/கு | 3,500 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு (மாற்றுச்சீட்டு பெற்றது) | 11,200 | ||
| இருப்பு கீ/இ | 55,000 | ||
| 2,05,200 | 2,05,200 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்கக் க/கு (மாற்றுச்சீட்டுக்குச் செலுத்தியது) | 7,000 | இருப்பு கீ/கொ | 2,000 |
| இருப்பு கீ/இ | 3,000 | பற்பல கடனீந்தோர் க/கு (மாற்றுச்சீட்டு ஏற்கப்பட்டது) (இருப்புக் கட்டும் தொகை) | 8,000 |
| 10,000 | 10,000 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்கக் க/கு (செலுத்தியது) | 70,000 | இருப்பு கீ/கொ | 25,000 |
| பெற்ற தள்ளுபடி க/கு | 3,500 | கொள்முதல் க/கு (கடன்) (இருப்புக் கட்டும் தொகை) | 84,500 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு க/கு (மாற்றுச்சீட்டு ஏற்கப்பட்டது) | 8,000 | ||
| இருப்பு கீ/இ | 28,000 | ||
| 1,09,500 | 1,09,500 |
18.
(b)
காப்புகள்
19.
(a)
நிறுமங்கள்
20.
(a)
முழுமை பெறா பதிவேடுகள்
21.
(b)
ரூ. 3,000
22.
(c)
23.
(a)
அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
24.
(c)
25.
(d)
26.
(d)
ரூ. 64,000
27.
(c)
சிறிய அளவிலான தனிஆள் வணிகம்
28.
(b)
பெயரளவு க/கு
29.
(a)
30.
(c)
உபரி அல்லது பற்றாக்குறை
31.
(c)
வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது
32.
(c)
ஆண்டுத்தொகை முறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x ஆண்டுத்தொகை காரணியின் தற்போதைய மதிப்பு
33.
(d)
34.
(a)
வழங்கப்படுவதில்லை
35.
(a)
ரூ.700
36.
(b)
பங்குகள் குறை ஒப்பமாக இருக்கும் நிலையில் வெளியிடப்பட்ட பங்குமுதல், ஒப்பிய பங்குமுதலை விட குறைவாக இருக்கும்
37.
(d)
காப்பு முதல்
38.
கணக்காண்டின் இறுதியில், இலாப நோக்கற்ற அமைப்புகள் பின்வரும் இறுதிக் கணக்குகளைத் தயாரிக்கின்றன:
1) பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு
2) வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும்
3) இருப்புநிலைக் குறிப்பு
39.
(i) முதல் மீது வட்டி என்பது கூட்டாளிகளின் முதல் மீது அனுமதிக்கப்படும் வட்டி ஆகும்.
(ii) பொதுவாக, கூட்டாளிகளின் முதல் அவர்களின் இலாபப் பகிர்வு விகிதத்திற்கு சமனற்றவையாக இருந்தால் முதல் மீது வட்டி அனுமதிக்க கூட்டாளிகள் ஒப்புக் கொள்ளலாம்.
(iii) முதல் மீதான வட்டி வீதம் பொதுவாக கூட்டாளிகள் ஒப்புக் கொண்ட விகிதம் ஆகும்
40.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
| இருப்பு கீ/கொ | 1,40,000 | ரொக்கக் க/கு | 3,90,000 |
| கடனாளிகள் க/கு | 4,80,000 | கடனாளிகள் க/கு | 30,000 |
| (அவ்வாண்டில் மாற்றுச்சீட்டு பெற்றது-இருப்புக்கட்டும் தொகை) | (பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது) | ||
| இருப்பு கீ/இ | 2,00,000 | ||
| 6,20,000 | 6,20,000 |
41.
தியாக விகிதம் மற்றும் புதிய இலாபப் பகிர்வு விகிதம் கணக்கிடுதல்
ரஞ்சன் பங்கு =\(\frac { 1 }{ 4 } \)
பழைய விகிதம் =2:1 அதாவது, \(\frac { 2 }{ 3 } :\frac { 1 }{ 3 } \)
தியாகப் பங்கின் விகிதம் = 3:2 அதாவது, \(\frac { 3 }{ 5 } :\frac { 2 }{ 5 } \)
தியாகப் பங்கு = புதிய கூட்டாளியின் பங்கு x தியாகப் பங்கின் விகிதம்
ரமேஷ் =\(\frac { 1 }{ 4 } \times \frac { 3 }{ 5 } =\frac { 3 }{ 20 } \)
ராஜு =\(\frac { 1 }{ 4 } \times \frac { 2 }{ 5 } =\frac { 2 }{ 20 } \)
ரமேஷ் மற்றும் ராஜு வின் தியாகப் பங்கு \(\frac { 3 }{ 20 } \) மற்றும் \(\frac { 2 }{ 20 } \) அதாவது 3:2
பழைய கூட்டாளியின் புதிய பங்கு = பழைய பங்கு – தியாகப் பங்கு
ரமேஷ் =\(\frac { 2 }{ 3 } -\frac { 3 }{ 20 } =\frac { 40-9 }{ 60 } =\frac { 31 }{ 60 } \)
ராஜு =\(\frac { 1 }{ 3 } -\frac { 2 }{ 20 } =\frac { 20-6 }{ 60 } =\frac { 14 }{ 60 } \)
புதிய கூட்டாளியின் பங்கு ரஞ்சன் =\(\frac { 1 }{ 4 } \)
ரஞ்சனின் பங்கிற்குரிய பகுதியை சமன் செய்யும் பொருட்டு, 15 ஆல் பெருக்கி மற்றும் வகுக்க வேண்டும்.
\(= \frac { 1 }{ 4 } \times \frac { 15 }{15 } =\frac { 15 }{ 60 } \)
எனவே , புதிய இலாபப் பகிர்வு விகிதம்
\(= \frac { 31 }{ 60 } : \frac { 14 }{ 60 } : \frac { 15 }{ 60 } \) = 31:14:15
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards