12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
புதிய இலாப விகிதம் என்றால் என்ன?
2.
ஆதாய விகிதம் என்றால் என்ன?
3.
4.
கிரண், வினோத் மற்றும் விமல் எனும் கூட்டாளிகள் 5:3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். கிரண் விலகினார். வினோத் மற்றும் விமல் ஆகியோரின் புதிய இலாப விகிதம் 2:1 ஆகும். ஆதாய விகிதத்தை கணக்கிடவும்
5.
மேரி, மீனா மற்றும் மரியம் எனும் கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் இலாபநட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1-1-2019 அன்று மேரி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளில், அந்நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு சொத்துகள் பக்கத்தில் ரூ. 75,000 பகிர்ந்து தரா நட்டம் எனக் காட்டியது. பகிர்ந்து தரா நட்டத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
6.
சுந்தர், விவேக், மற்றும் பாண்டியன் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் 2016, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | நிலம் | 80,000 | ||
| சுந்தர் | 50,000 | சரக்கிருப்பு | 20,000 | |
| விவேக் | 40,000 | கடனாளிகள் | 30,000 | |
| பாண்டியன் | 10,000 | 1,00,000 | வங்கி ரொக்கம் | 14,000 |
| பொதுக்காப்பு | 36,000 | இலாப நட்டக் க/கு (நட்டம்) | 6,000 | |
| பற்பல கடனீந்தோர் | 14,000 | |||
| 1,50,000 | 1,50,000 |
1.1.2019 அன்று பாண்டியன் இறந்துவிட்டார் மற்றும் அவரின் இறப்பின் போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டன
(i) சரக்கிருப்பின் மதிப்பு 10% தேய்மானம் குறைக்கப்பட வேண்டும்
(ii) நிலத்தின் மதிப்பு ரூ.11,000 அதிகரிக்கப்பட வேண்டும்
(iii) கடனாளிகள் மதிப்பு ரூ.3,000 குறைக்க வேண்டும்
(iv) பாண்டியனுக்கு செலுத்த வேண்டிய இறுதித் தொகை செலுத்தப்படவில்லை
கூட்டாளியின் இறப்பிற்கு பின் நிறுமத்தின் மறுமதிப்பீட்டுக் கணக்கு, கூட்டாளிகள் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
7.
சார்லஸ், முத்து மற்றும் சேகர் என்ற கூட்டாளிகள் முறையே 3 : 4 : 2 என்ற விகிதத்தில் இலாபங்களைப் பகிர்ந்து கொண்டனர். 2018 டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | அறைகலன் | 20,000 | ||
| சார்லஸ் | 30,000 | சரக்கிருப்பு | 40,000 | |
| முத்து | 40,000 | கடனாளிகள் | 30,000 | |
| தொழிலாளர் ஈட்டு நிதி | 20,000 | 90,000 | வங்கி ரொக்கம் | 42,000 |
| பற்பல கடனீந்தோர் | 27,000 | இலாபநட்ட க/கு (நட்டம்) | 18,000 | |
| 33,000 | ||||
| 1,50,000 | 1,50,000 |
1.1.2019 அன்று பின்வரும் ஏற்பாடுகளின் படி சார்லஸ் கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
(i) சரக்கிருப்பின் மதிப்பு 10% அதிகரிக்கப்பட வேண்டும்
(ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
(iii) வாராக்கடன் மீது ரூ.1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
(iv) கொடுபடா பழுதுபார்ப்புச் செலவு ரூ.10,000 இன்னமும் பதிவாகவில்லை.
(v) சார்லஸிற்கு உரியத்தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது
மறுமதிப்பீட்டுக் கணக்கு, விலகலுக்குப் பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்.
8.
ராகுல், ரவி மற்றும் ரோஹித் எனும் கூட்டாளிகள் முறையே 5 : 3 : 2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் ரோஹித் விலகினார். அவருடைய பங்கு ராகுல் மற்றும் ரவி ஆகியோரால் 3 : 2 எனும் விகிதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதம் கணக்கிடவும்
9.
மோகன்ராஜ், நாகராஜ், பாக்கியராஜ் என்ற கூட்டாளிகள் 5 : 3 : 2 எனும் விகிதத்தில் இலாப நட்டங்கள் பகிர்ந்து வந்தனர். 31.12.2014 அன்று நிறுவன ஏடுகளில் காப்பு நிதி ரூ.30,000 மற்றும் பகிர்ந்து தரா நட்டம் ரூ.20,000 உள்ளன. பாக்கியராஜ் 1.1.2015 அன்று விலகினார். காப்பு நிதி, பகிர்ந்து தரா நட்டம் ஆகியவற்றை பழைய கூட்டாளிகளின் கணக்குகளுக்கு மாற்றுவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.
10.
ரம்யா, சாரா மற்றும் தாரா என்ற கூட்டாளிகள் முறையே 5:3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று தாரா கூட்டாண்மையிலிருந்து விலகினார். பின்வரும் சரிக்கட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
i) வளாகத்தின் மதிப்பை ரூ. 40,000 உயர்த்த வேண்டும்
ii) சரக்கிருப்பு ரூ.3,000, இயந்திரம் ரூ. 6,500 மதிப்பு குறைக்க வேண்டும்.
iii) கொடுபடாச் செலவுகள் ரூ. 500 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.
11.
கூட்டாளியின் இறப்பின் போது செய்ய வேண்டிய சரிக்கட்டுதல்கள் யாவை?
12.
விலகும் கூட்டாளிக்குரிய தொகையை எவ்வகையில் தீர்க்கப்படலாம்?
13.
நற்பெயர் சரிக்கட்டுதல் பற்றி சிறு குறிப்பு வரைக
14.
ஜஸ்டினா, நவி மற்றும் ரித்திகா எனும் கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 31.3.2019 அன்று ரித்திகா என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார். முந்தைய ஆண்டுகளின் இலாபம் பின்வருமாறு.
2016: ரூ.5,000; 2017: ரூ.10,000; 2018: ரூ.30,000; 2019 ஆம் ஆண்டிற்கான ரித்திகாவின் இலாபப் பங்கை அவர் விலகும் நாள் வரை பின்வரும் நிலைகளில் கணக்கிடவும்.
(அ) முந்தைய ஆண்டின் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
(ஆ) கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
மேலும், கூட்டாளிகளின் முதல் கணக்கு மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
15.
A, B, C, ஆகிய கூட்டாளிகளின் இலாபப் பங்கு முறையே 1/2, 1/3, 1/6 ஆகும். B கூட்டாண்மையிலிருந்து விலகினால், புதிய இலாபப் பகிர்வு விகிதம் _______.
1 : 3
3 : 2
3 : 1
1 : 1
16.
________ கணக்கு ஒரு தற்காலிக கணக்கு ஆகும்
இலாப நட்ட அனாமத்து
மறுமதிப்பீட்டு
நற்பெயர்
முதல்
17.
தொழிலாளர் ஈட்டு நிதியில் எதிர்நோக்கக் கூடிய இழப்பீடுகளை சரி செய்த பின்னர் மீதமுள்ள தொகை கூட்டாளிகளின் _______ கணக்குக்கு மாற்றப்பட வேண்டும்.
முதல்
கடன்
நடப்பு
மறுமதிப்பீடு
18.
நிறுவனத்தின் சொத்துக்களில் அவருக்குரிய பங்கில் அவருக்கு சேர வேண்டிய தொகைக்கு ஆண்டுக்கு எத்தனை சதவீதம் வட்டி பெறலாம்?
5%
6%
8%
10%
19.
மறுமதிப்பீடுக் கணக்கின் இறுதிவிளைவு கூட்டாளிகளின் எந்த கணக்குகளில் சரிகட்டப்படும்?
முதல் கணக்குகளில்
எடுப்பு கணக்குகளில்
நடப்பு கணக்குகளில்
இருப்பு நிலைக் குறிப்பில்
1.
புதிய இலாப விகிதம் என்பது, தொடரும் கூட்டாளிகள் எதிர்காலத்தில் இலாபத்தைப் பிரித்துக் கொள்ள ஒப்புக் கொண்ட ஒரு விகிதம் ஆகும்
2.
(i) தொடரும் கூட்டாளிகள் விலகும் கூட்டாளியின் இலாபப் பங்கிலிருந்து ஒரு பகுதியை ஆதாயமாகப் பெறுகின்றனர்
(ii) அந்த ஆதாயம் அனைத்துக் கூட்டாளிகளினாலும் அல்லது ஒரு சில கூட்டாளிகளாலும் பிரித்துக் கொள்ளப்படும். ஆதாய விகிதம் என்பது தொடரும் கூட்டாளிகளும் கிடைக்கப்பெற்ற இலாபத்தின் விகிதாச்சாரம் ஆகும்.
3.
4.
ஆதாய பங்கு =புதிய பங்கு – பழைய பங்கு
வினோத் \(=\frac { 2 }{ 3 } =\frac { 3 }{ 10 } =\frac { 20-9 }{ 30 } =\frac { 11 }{ 30 } \)
விமல் \(\\ =\frac { 1 }{ 3 } -\frac { 2 }{ 10 } =\frac { 10-6 }{ 30 } =\frac { 4 }{ 30 } \)
ஆகையால், வினோத் மற்றும் விமல் ஆகியோரின் ஆதாய விகிதம் = 11 : 4
5.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. |
வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 2019 ஜன 1 | மேரி முதல் க/கு ப | 25,000 | ||
| மீனா முதல் க/கு ப | 25,000 | |||
| மரியம் முதல் க/கு ப | 25,000 | |||
| இலாப நட்ட க/கு | 75,000 | |||
| (பகிர்ந்து தரா நட்டம் அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்பட்டது.) |
6.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 2,000 | நிலம் க/கு | 11,000 | |
| கடனாளிகள் க/கு | 3,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| சுந்தர் முதல் க/கு (3/6) | 3,000 | |||
| விவேக் முதல் க/கு (2/6) | 2,000 | |||
| பாண்டியன் முதல் க/கு (1/6) | 1,000 | 6,000 | ||
| 11,000 | 11,000 |
| விவரம் | சுந்தர் ரூ. |
விவேக் ரூ. |
பாண்டியன் ரூ. |
விவரம் | சுந்தர் ரூ. |
விவேக் ரூ. |
பாண்டியன் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இலாபநட்டக் க/கு | 3,000 | 2,000 | 1,000 | இருப்பு கீ/கொ | 50,000 | 40,000 | 10,000 |
| பாண்டியனின் | பொதுக்காப்பு க/கு | 18,000 | 12,000 | 6,000 | |||
| நிறைவேற்றாளர் க/கு | 16,000 | ||||||
| இருப்பு கீ/இ | 68,000 | 52,000 | மறுமதிப்பீட்டு க/கு | 3,000 | 2,000 | 1,000 | |
| (இலாபம்) | |||||||
| 71,000 | 54,000 | 17,000 | 71,000 | 54,000 | 17,000 | ||
| இருப்பு கீ/கொ | 68,000 | 52,000 | - |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | நிலம் | 80,000 | |||
| சுந்தர் | 68,000 | கூட்டுக: | |||
| விவேக் | 52,000 | 1,20,000 | மதிப்பேற்றம் | 11,000 | 91,000 |
| பாண்டியனின் | |||||
| நிறைவேற்றாளர் க/கு | 16,000 | சரக்கிருப்பு | 20,000 | ||
| பற்பல கடனீந்தோர் | 14,000 | கழிக்க: | |||
| மதிப்பு குறைவு | 2,000 | 18,000 | |||
| கடனாளிகள் | 30,000 | ||||
| கழிக்க: மதிப்பு குறைப்பு | 3,000 | 27,000 | |||
| வங்கி ரொக்கம் | 14,000 | ||||
| 1,50,000 | 1,50,000 |
7.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| அறைகலன் | 1,000 | சரக்கிருப்பு க/கு | 4,000 | |
| வாராக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | மறுமதிப்பீட்டு நட்டம்: | ||
| கொடுபட வேண்டிய பழுதுபார்ப்புச் செலவு | 11,000 | சார்லஸ் முதல் க/கு (3/9) | 3,000 | |
| முத்து முதல் க/கு (4/9) | 4,000 | |||
| சேகர் முதல் க/கு (2/9) | 2,000 | 9,000 | ||
| 13,000 | 13,000 |
| விவரம் | சார்லஸ் ரூ. |
முத்து ரூ. |
சேகர் ரூ. |
விவரம் | சார்லஸ் ரூ. |
முத்து ரூ. |
சேகர் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இலாபநட்ட க/கு | 6,000 | 8,000 | 4,000 | இருப்பு கீ/கொ | 30,000 | 40,000 | 20,000 |
| மறுமதிப்பீட்டு க/கு | 3,000 | 4,000 | 2,000 | தொழிலாளர் ஈட்டு நிதி | 9,000 | 12,000 | 6,000 |
| (நட்டம்) | |||||||
| வங்கி க/கு | 30,000 | - | - | ||||
| இருப்பு கீ/இ | 40,000 | 20,000 | |||||
| 39,000 | 52,000 | 26,000 | 39,000 | 52,000 | 26,000 | ||
| இருப்பு கீ/கொ | - | 40,000 | 20,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | அறைகலன் | 20,000 | |||
| முத்து | 40,000 | 60,000 | கழிக்க: தேய்மானம் | 1,000 | 19,000 |
| சேகர் | 20,000 | 60,000 | சரக்கிருப்பு | 40,000 | |
| பற்பல கடனீந்தோர் | 33,000 | கூட்டுக: மதிப்பேற்றம் | 4,000 | 44,000 | |
| கொடுபட வேண்டிய | கடனாளிகள் | 30,000 | |||
| பழுதுபார்ப்புச் செலவு | 11,000 | ||||
| கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு | 1,000 | 29,000 | |||
| வங்கி ரொக்கம் | 42,000 | ||||
| கழிக்க: சார்லஸிற்கு செலுத்தியது | 30,000 | 12,000 | |||
| 1,04,000 | 1,04,000 |
8.
ரோஹித் பங்கு = \(\frac { 2 }{ 10 } \)
ஆதாயப் பங்கு = விலகும் கூட்டாளியின் பங்கு x ஆதாயப்பங்கின் விகிதாச்சாரம்
ராகுல் = \(\frac { 2 }{ 10 } \times \frac { 3 }{ 5 } =\frac { 6 }{ 50 } \)
ரவி = \(\frac { 2 }{ 10 } \times \frac { 2 }{ 5 } =\frac { 4 }{ 50 } \)
ஆதாய விகிதம் = \(\frac { 4 }{ 50 } :\frac { 4 }{ 50 } \) அதாவது 3 : 2
தொடரும் கூட்டாளிகளின் புதிய பங்கு = பழைய பங்கு + ஆதாயப் பங்கு
ராகுல் = \(\frac { 5 }{ 10 } +\frac { 6 }{ 50 } =\frac { 25+6 }{ 50 } =\frac { 31 }{ 50 } \)
ரவி = \(\frac { 3 }{ 10 } +\frac { 4 }{ 50 } =\frac { 15+4 }{ 50 } =\frac { 19 }{ 50 } \)
ஆகையால், ராகுல் மற்றும் ரவி ஆகியோரின் புதிய விகிதம் = \(\frac { 31 }{ 50 } :\frac { 19 }{ 50 } \) அதாவது 31 : 19
9.
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 1.1.2015 | காப்பு நிதி க/கு | ப | 30,000 | ||
| மோகன்ராஜ் முதல் க/கு | 15,000 | ||||
| நாகராஜ் முதல் க/கு | 9,000 | ||||
| பாக்கியராஜ் முதல் க/கு | 6,000 | ||||
| (காப்பு நிதி பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குகளுக்கு பழைய விகிதத்தில் மாற்றப்பட்டது) | |||||
| 1.1.2015 | மோகன்ராஜ் முதல் க/கு | ப | 10,000 | ||
| நாகராஜ் முதல் க/கு | ப | 6,000 | |||
| பாக்கியராஜ் முதல் க/கு | ப | 4,000 | |||
| இலாப நட்டக் க/கு | 20,000 | ||||
| (பகிர்ந்து தரா நட்டம் பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குக்கு மாற்றப்பட்டது) |
10.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 ஏப்ரல் 1 | வளாகம் க/கு | ப | 40,000 | ||
| மறுமதிப்பீட்டு க/கு | 40,000 | ||||
| (வளாகம் மதிப்பு உயர்த்தப்பட்டது) | |||||
| " | மறுமதிப்பீட்டு க/கு | ப | 10,000 | ||
| சரக்கிருப்பு க/கு | 3,000 | ||||
| இயந்திரம் க/கு | 6,500 | ||||
| கொடுபடாச் செலவுகள் க/கு | 500 | ||||
| (சொத்துகளின் மதிப்பு குறைப்பு மற்றும் கொடுபடா பொறுப்பு பதிவு செய்யப்பட்டது) | |||||
| " | மறுமதிப்பீட்டு இலாபம்: | ப | 30,000 | ||
| ரம்யா முதல் க/கு | 15,000 | ||||
| சாரா முதல் க/கு | 9,000 | ||||
| தாரா முதல் க/கு | 6,000 | ||||
| (மறுமதிப்பீட்டு இலாபம் பகிர்ந்தளிக்கப்பட்டது) |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 3,000 | வளாகம் க/கு | 40,000 | |
| இயந்திரம் க/கு | 6,500 | |||
| கொடுபடாச் செலவுகள் க/கு | 500 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| ரம்யா முதல் க/கு (5/10) | 15,000 | |||
| சாரா முதல் க/கு (3/10) | 9,000 | |||
| தாரா முதல் க/கு (2/10) | 6,000 | 30,000 | ||
| 40,000 | 40,000 |
11.
கூட்டாளியின் இறப்பின்போது கீழ்கண்ட சரிக்கட்டுதல்கள் செய்யப்பட வேண்டும்
(i) பகிர்ந்து தரா இலாபங்கள், காப்புகள் மற்றும் நட்டங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
(ii) சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
(iii) புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதம் நிர்ணயிக்க வேண்டும்
(iv) நற்பெயர் சரிக்கட்டுதல்
(v) இறந்த கூட்டாளிக்கு உரிய தொகையை தீர்வு செய்தல் கூட்டாளி இறப்பின் போது செய்ய வேண்டிய சரிக்கட்டுதல்கள், இறந்த கூட்டாளிக்குரிய தொகையை செலுத்துவதைத் தவிர பெரும்பாலும் விலகும் கூட்டாளிக்கு செய்ய வேண்டியவை போன்றதேயாகும்.
12.
(i) கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி ஒருவர் விலகும் போது, நற்பெயர், பகிர்ந்து தரா இலாபம் அல்லது நட்டம், மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நட்டம், கூட்டாளியின் ஊதியம் ஆகியவற்றை சரிகட்டிய பிறகு கிடைக்கக்கூடிய முதல் கணக்கின் இருப்பு அக்கூட்டாளிக்கு செலுத்தப்பட வேண்டும்
(ii) கூட்டாண்மை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அவருக்கு சேர வேண்டிய தொகையைத் தீர்வு செய்ய வேண்டும். பின்வரும் வழிகளில் விலகும் கூட்டாளிக்கு செலுத்த வேண்டிய தொகை தீர்க்கப்படலாம்
1. அவருக்கு சேரவேண்டிய முழுத் தொகையையும் ரொக்கமாக உடனடியாக செலுத்தலாம்
2. மொத்தத் தொகையும் கூட்டாளியின் கடன் கணக்கிற்கு மாற்றி விடலாம்
3. பாதித் தொகையை உடனடியாக ரொக்கமாகவும் மீதித் தொகையை கடன் கணக்கிற்கு மாற்றி விடலாம்
13.
(i) நிறுவனம் பெற்றுள்ள நல்ல பெயர், நிறுவனத்தின் தற்போதைய அல்லது எதிர்காலத்தில் ஈட்டப் போகும் இலாபத்தில் பாதிப்பை உண்டாக்கும்.
(ii) கூட்டாளி விலகும்போது, விலகும் கூட்டாளியின் இலாபத்திலிருந்து ஒரு பகுதியை தொடரும் கூட்டாளிகள் ஆதாயமாகப் பெறுகின்றனர்.
(iii) எனவே, விலகும் கூட்டாளியின் நற்பெயர் மதிப்பிடப்பட்டு அவருடைய பங்கு ஆதாயம் பெறும் கூட்டாளிகளின் முதல் கணக்கில் சரி செய்யப்பட வேண்டும். அதற்கான குறிப்பேட்டுப் பதிவு பின்வருமாறு.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|---|---|---|---|---|
| தொடரும் கூட்டாளிகளின் முதல் / நடப்பு க/கு | XXX | |||
| (ஆதாய விகிதத்தில்) | ||||
| விலகும் கூட்டாளி முதல் / நடப்பு க/கு | XXX |
14.
அ) முந்தைய ஆண்டின் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளித்தால்
ரித்திகாவின் மூன்று மாதங்களுக்கான இலாபப் பங்கு =\(30,000\times \frac { 3 }{ 12 } \times \frac { 1 }{ 3 } =\) ரூ.2 ,500
| நாள் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ. |
வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 2019 மார்ச் 31 | இலாப நட்ட அனாமத்து க/கு ப | 2,500 | ||
| ரித்திகா முதல் க/கு | 2,500 | |||
| (ரித்திகாவின் நடப்பாண்டின் இலாபத்தின் பங்கு அவருடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டது) |
ஆ) கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
சராசரி இலாபம் =\(\frac { 5,000+10,000+30,000 }{ 3 } =15,000\)
ரித்திகாவின் மூன்று மாதங்களுக்கான இலாபப் பங்கு \(=15,000\times \frac { 3 }{ 12 } \times \frac { 1 }{ 3 } \) =ரூ.1,250
| நாள் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ. |
வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 2019 மார்ச் 31 | இலாப நட்ட அனாமத்து க/கு ப | 1,250 | ||
| ரித்திகா முதல் க/கு | 1,250 | |||
| (ரித்திகாவின் இலாபத்தில் பங்கு அவருடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டது) |
15.
(c)
3 : 1
16.
(a)
இலாப நட்ட அனாமத்து
17.
(b)
கடன்
18.
(b)
6%
19.
(a)
முதல் கணக்குகளில்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards