12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 23/10/2019
கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
புதிய இலாப விகிதம் என்றால் என்ன?
2.
கயல், மாலா மற்றும் நீலா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 2:2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். கயல் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். மாலா மற்றும் நீலாவுக்கும் இடையே உள்ள புதிய இலாபப் பகிர்வு விகிதம் 3:2. ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.
3.
ஆதாய விகிதம் கணக்கிடுவதன் நோக்கம் என்ன?
4.
ஆதாய விகிதம் என்றால் என்ன?
5.
6.
மேரி, மீனா மற்றும் மரியம் எனும் கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் இலாபநட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1-1-2019 அன்று மேரி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளில், அந்நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு சொத்துகள் பக்கத்தில் ரூ. 75,000 பகிர்ந்து தரா நட்டம் எனக் காட்டியது. பகிர்ந்து தரா நட்டத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
7.
8.
சுந்தர், விவேக், மற்றும் பாண்டியன் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | நிலம் | 80,000 | ||
| சுந்தர் | 50,000 | சரக்கிருப்பு | 20,000 | |
| விவேக் | 40,000 | கடனாளிகள் | 30,000 | |
| பாண்டியன் | 10,000 | 1,00,000 | வங்கிரொக்கம் | 14,000 |
| பொதுக்காப்பு | 36,000 | இலாப நட்டக் க/கு (நட்டம்) | 6,000 | |
| பற்பல கடனீந்தோர் | 14,000 | |||
| 1,50,000 | 1,50,000 |
1.1.2019 அன்று பாண்டியன் இறந்து விட்டார் மற்றும் அவரின் இறப்பின்போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டன.
(i) சரக்கிருப்பின் மதிப்பு 10% தேய்மானம் குறைக்கப்ட வேண்டும்.
(ii) நிலத்தின் மதிப்பு ரூ.11,000 அதிகரிக்கப்பட வேண்டும்.
(iii) கடனாளிகள் மதிப்பு ரூ.3,000 குறைக்க வேண்டும்.
(iv) பாண்டியனுக்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை செலுத்தப்படவில்லை.
கூட்டாளியின் இறப்பிற்கு பின் நிறுமத்தின் மறுமதிப்பீட்டுக் கணக்கு, கூட்டாளிகள் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்
9.
ஜான், ஜேம்ஸ் மற்றும் இராஜா என்ற கூட்டாளிகள் முறையே சமமாக இலாப நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | அலுவலக சாதனங்கள் | 70,000 | |||
| ஜான் | 80,000 | இயந்திரம் | 1,40,000 | ||
| ஜேம்ஸ் | 60,000 | பற்பல கடனாளிகள் | 52,000 | ||
| இராஜா | 1,00,000 | 2,40,000 | கழிக்க: வாரா ஐயக்கடன் ஒதுக்கு | 2,000 | 50,000 |
| பற்பல கடனீந்தோர் | 1,20,000 | சரக்கிருப்பு | 60,000 | ||
| வங்கி ரொக்கம் | 40,000 | ||||
| 3,60,000 | 3,60,000 |
2019, மார்ச் 31 ஆம் நாளன்று பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
i) இயந்திரம் ரூ.1,30,000 ஆக மதிப்பிடுவது
ii) அலுவலக சாதனங்கள் மதிப்பை ரூ. 2,000 குறைப்பது
iii) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.3,000 ஆக உயர்த்துவது
iv) ஏடுகளில் பதிவு பெறாமல் உள்ள முதலீடுகள் ரூ.25,000 பதிவு செய்ய வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.
10.
ரம்யா, சாரா மற்றும் தாரா என்ற கூட்டாளிகள் முறையே 5:3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று தாரா கூட்டாண்மையிலிருந்து விலகினார். பின்வரும் சரிக்கட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
i) வளாகத்தின் மதிப்பை ரூ. 40,000 உயர்த்த வேண்டும்
ii) சரக்கிருப்பு ரூ.3,000, இயந்திரம் ரூ. 6,500 மதிப்பு குறைக்க வேண்டும்.
iii) கொடுபடாச் செலவுகள் ரூ. 500 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.
11.
தொழிலாளர் ஈட்டு நிதியில் எதிர்நோக்கக் கூடிய இழப்பீடுகளை சரி செய்த பின்னர் மீதமுள்ள தொகை கூட்டாளிகளின் _______ கணக்குக்கு மாற்றப்பட வேண்டும்.
முதல்
கடன்
நடப்பு
மறுமதிப்பீடு
12.
ஒரு கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி ஒருவர் வெளியே சென்றதால், அது ________ எனப்படும்.
கூட்டாளி சேர்ப்பு
கூட்டாளி விலகல்
கூட்டாளி மரணம்
நிறுவனம் கலைப்பு
13.
கூட்டாளி இறப்பின் போது அவருக்குச் சேர வேண்டியத் தொகை யாரிடம் வழங்கப்படும்?
உரிமையாளரிடம்
பணியாளர்களிடம்
நிறைவேற்றாளரிடம்
இவற்றில் எதுவுமில்லை
14.
சொத்துக்களையம் பொறுப்புகளையும் மறுமதிப்பீடு செய்வது எத்தனை முறைகளில் கையாளப்படுகின்றன?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
15.
கூட்டாளி விலகினால், முடிவுக்கு வருவது எது?
பழைய ஒப்பந்தம்
புதிய ஒப்பந்தம்
தியாக விகிதம்
ஆதாய விகிதம்
16.
X, Y மற்றும் Z என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2019, ஏப்ரல் 1 அன்று X இறந்து விட்டார். 2018 இல் இலாபம் ரூ.36,000 என்ற அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்குரிய இலாபத்தில் X ன் பங்கினைக் கண்டறியவும்.
ரூ. 1,000
ரூ. 3,000
ரூ.12,000
ரூ.36,000
17.
A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 2:2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். B-ன் விலகலின்போது நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளி B-க்கு ஈடு செய்வதற்கு A மற்றும் C யின் பங்களிப்பைக் கண்டறியவும்.
ரூ.20,000 மற்றும் ரூ.10,000
ரூ. 8,000 மற்றும் ரூ.4,000
ரூ.10,000 மற்றும் ரூ.20,000
ரூ.15,000 மற்றும் ரூ.15,000
18.
மறுமதிப்பீட்டின்போது, பொறுப்புகளின் அதிகரிப்பு தருவது_____.
ஆதாயம்
நட்டம்
இலாபம்
மேற்கண்ட எதுவுமில்லை
19.
கூட்டாளி ஒருவர் ஜூன் 30 அன்று கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாவது_____.
நடப்பு கணக்காண்டின் இறுதி வரைக்கும்
முந்தைய கணக்காண்டின் இறுதி வரைக்கும்
கூட்டாளி விலகும் நாள் வரைக்கும்
கூட்டாளியின் கணக்கைத் தீர்வு செய்யும் வரைக்கும்
20.
ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் ராஜன், சுமன் மற்றும் ஜெகன் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 4:3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். சுமன் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகினார். அவர் விலகும் நாளன்று நற்பெயர் ரூ.45,000 என மதிப்பிடப்பட்டது. மாறுபடும் முதல் முறை எனக்கொண்டு, நற்பெயருக்கு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
21.
ஆகாஷ், முகேஷ் மற்றும் சஞ்சய் என்ற கூட்டாளிகள் 3:2:1 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2017, மார்ச் 31 அன்று அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | கட்டடம் | 1,10,000 | ||
| ஆகாஷ் | 40,000 | வாகனம் | 30,000 | |
| முகேஷ் | 60,000 | சரக்கிருப்பு | 26,000 | |
| சஞ்சய் | 30,000 | 1,30,000 | கடனாளிகள் | 25,000 |
| இலாபநட்டப் பகிர்வு க/கு | 12,000 | கைரொக்கம் | 15,000 | |
| பொதுக்காப்பு | 24,000 | |||
| தொழிலாளர் ஈட்டு நிதி | 18,000 | |||
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 22,000 | |||
| 2,06,000 | 2,06,000 |
பகிர்ந்து தரா இலாபத்தினைப் பதிவு செய்யும் குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
22.
கூட்டாளி விலகலின்போது செய்யப்பட வேண்டிய சரிக்கட்டுதல்களை பட்டியலிடவும்.
23.
புதிய இலாபப் பகிர்வு விகிதம்
24.
மறுமதிப்பீட்டுக் கணக்கு
25.
இலாபங்கள் அல்லது நட்டங்கள்
26.
காப்புகள்
1.
புதிய இலாப விகிதம் என்பது, தொடரும் கூட்டாளிகள் எதிர்காலத்தில் இலாபத்தைப் பிரித்துக் கொள்ள ஒப்புக் கொண்ட ஒரு விகிதம் ஆகும்
2.
ஆதாயப் பங்கு = புதிய பங்கு - பழைய பங்கு
மாலா = \(\frac { 3 }{ 3 } -\frac { 2 }{ 5 } =\frac { 1 }{ 5 } \)
நீலா = \(\frac { 2 }{ 5 } -\frac { 1 }{ 5 } =\frac { 1 }{ 5 } \)
ஆகையால், மாலா மற்றும் நீலா ஆகியோரின் ஆதாய விகிதம் = 1 : 1
3.
(i) ஆதாய விகிதம் கணக்கிடுவதன் நோக்கம் விலகும் கூட்டாளிக்கு கொடுக்கப்படும் நற்பெயரை ஏற்றுக் கொள்வதாகும். ஆதாயப் பங்கு பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.
(ii) ஆதாயப்பங்கு = புதிய பங்கு - பழைய பங்கு
(iii) ஆதாய விகிதம் = தொடரும் கூட்டாளிகளுக்கு கிடைக்க பெற்ற ஆதாயத்தின் விகிதமாகும்.
4.
(i) தொடரும் கூட்டாளிகள் விலகும் கூட்டாளியின் இலாபப் பங்கிலிருந்து ஒரு பகுதியை ஆதாயமாகப் பெறுகின்றனர்
(ii) அந்த ஆதாயம் அனைத்துக் கூட்டாளிகளினாலும் அல்லது ஒரு சில கூட்டாளிகளாலும் பிரித்துக் கொள்ளப்படும். ஆதாய விகிதம் என்பது தொடரும் கூட்டாளிகளும் கிடைக்கப்பெற்ற இலாபத்தின் விகிதாச்சாரம் ஆகும்.
5.
6.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. |
வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 2019 ஜன 1 | மேரி முதல் க/கு ப | 25,000 | ||
| மீனா முதல் க/கு ப | 25,000 | |||
| மரியம் முதல் க/கு ப | 25,000 | |||
| இலாப நட்ட க/கு | 75,000 | |||
| (பகிர்ந்து தரா நட்டம் அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்பட்டது.) |
7.
8.
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 2,000 | நிலம் க/கு | 11,000 | |
| கடனாளிகள் க/கு | 3,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம் | ||||
| சுந்தர் முதல் க/கு (3/6) | 3,000 | |||
| விவேக் முதல் க/கு (2/6) | 2,000 | |||
| பாண்டியன் முதல் க/கு (1/6) | 1,000 | 6,000 | ||
| 11,000 | 11,000 |
| விவரம் | சுந்தர் ரூ |
விவேக் ரூ |
பாண்டியன் ரூ |
விவரம் | சுந்தர் ரூ |
விவேக் ரூ |
பாண்டியன் ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| இலாபநட்டக் க/கு | 3,000 | 2,000 | 1,000 | இருப்பு கீ/கொ | 50,000 | 40,000 | 10,000 |
| பொதுக்காப்பு க/கு | 18,000 | 12,000 | 6,000 | ||||
| பாண்டியனின் நிறைவேற்றாளர் க/கு | 16,000 | மறுமதிப்பீட்டுக் க/கு (இலாபம்) | 3,000 | 2,000 | 1,000 | ||
| இருப்பு கீ/இ | 68,000 | 52,000 | |||||
| 71,000 | 54,000 | 17,000 | 71,000 | 54,000 | 17,000 | ||
| இருப்பு கீ/கொ | 68,000 | 52,000 |
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | நிலம் | 80,000 | |||
| சுந்தர் | 68,000 | கூட்டுக: மதிப்பேற்றம் | 11,000 | 91,000 | |
| விவேக் | 52,000 | 1,20,000 | சரக்கிருப்பு | 20,000 | |
| பாண்டியனின் நிறைவேற்றாளர் க/கு |
16,000 | கழிக்க: மதிப்பு குறைப்பு | 2,000 | 18,000 | |
| பற்பல கடனீந்தோர் | 14,000 | கடனாளிகள் | 30,000 | ||
| கழிக்க: மதிப்பு குறைப்பு | 3,000 | 27,000 | |||
| வங்கி ரொக்கம் | 14,000 | ||||
| 1,50,000 | 1,50,000 |
9.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2019 மார்ச் 1 | மறுமதிப்பீட்டு க/கு | ப | 13,000 | ||
| இயந்திரம் க/கு | 10,000 | ||||
| அலுவலக சாதனங்கள் க/கு | 2,000 | ||||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | ||||
| (இயந்திரம், அலுவலக சாதனம் மீது தேய்மானம் நீக்கியது மற்றும் வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கியது) | |||||
| " | முதலீடுகள் க/கு | ப | 25,000 | ||
| மறுமதிப்பீட்டு க/கு | 25,000 | ||||
| (பதிவு பெறா முதலீடுகள் பதிவு செய்யப்பட்டது) | |||||
| " | மறுமதிப்பீட்டு க/கு | ப | 12,000 | ||
| ஜான் முதல் க/கு | 4,000 | ||||
| ஜேம்ஸ் முதல் க/கு | 4,000 | ||||
| இராஜா முதல் க/கு | 4,000 | ||||
| (மறுமதிப்பீடு மீதான இலாபம் முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| இயந்திரம் க/கு | 10,000 | முதலீடுகள் க/கு | 25,000 | ||
| அலுவலக சாதனம் க/கு | 2,000 | ||||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | ||||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | |||||
| ஜான் முதல் க/கு (1/3) | 4,000 | ||||
| ஜேம்ஸ் முதல் க/கு (1/3) | 4,000 | ||||
| இராஜா முதல் க/கு (1/3) | 4,000 | 12,000 | |||
| 25,000 | 25,000 |
10.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 ஏப்ரல் 1 | வளாகம் க/கு | ப | 40,000 | ||
| மறுமதிப்பீட்டு க/கு | 40,000 | ||||
| (வளாகம் மதிப்பு உயர்த்தப்பட்டது) | |||||
| " | மறுமதிப்பீட்டு க/கு | ப | 10,000 | ||
| சரக்கிருப்பு க/கு | 3,000 | ||||
| இயந்திரம் க/கு | 6,500 | ||||
| கொடுபடாச் செலவுகள் க/கு | 500 | ||||
| (சொத்துகளின் மதிப்பு குறைப்பு மற்றும் கொடுபடா பொறுப்பு பதிவு செய்யப்பட்டது) | |||||
| " | மறுமதிப்பீட்டு இலாபம்: | ப | 30,000 | ||
| ரம்யா முதல் க/கு | 15,000 | ||||
| சாரா முதல் க/கு | 9,000 | ||||
| தாரா முதல் க/கு | 6,000 | ||||
| (மறுமதிப்பீட்டு இலாபம் பகிர்ந்தளிக்கப்பட்டது) |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 3,000 | வளாகம் க/கு | 40,000 | |
| இயந்திரம் க/கு | 6,500 | |||
| கொடுபடாச் செலவுகள் க/கு | 500 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| ரம்யா முதல் க/கு (5/10) | 15,000 | |||
| சாரா முதல் க/கு (3/10) | 9,000 | |||
| தாரா முதல் க/கு (2/10) | 6,000 | 30,000 | ||
| 40,000 | 40,000 |
11.
(b)
கடன்
12.
(b)
கூட்டாளி விலகல்
13.
(c)
நிறைவேற்றாளரிடம்
14.
(a)
இரண்டு
15.
(a)
பழைய ஒப்பந்தம்
16.
(b)
ரூ. 3,000
17.
(b)
ரூ. 8,000 மற்றும் ரூ.4,000
18.
(b)
நட்டம்
19.
(c)
கூட்டாளி விலகும் நாள் வரைக்கும்
20.
புதிய இலாப விகிதமும், தொடரும் கூட்டாளிகளின் ஆதாய விகிதமும் தரப்படாததால், அவர்கள் 4 : 2 என்ற பழைய இலாப விகிதத்திலேயே ஆதாயம் பொறுக்கிறார்கள் எனக் கொள்ள வேண்டும். ஆகவே, ஆதாய விகிதம் = 4 : 2 ஆகும்
நற்பெயரில் கமனின் பங்கு = 45,000 x \(\frac { 3 }{ 9 } \) = ரூ.15,000
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| ராஜன் முதல் க/கு \(\left( 15,000\times \frac { 4 }{ 6 } \right) \) | ப | 10,000 | |||
| ஜெகன் முதல் க/கு \(\left( 15,000\times \frac { 2 }{ 4 } \right) \) | ப | 5,000 | |||
| சுமனின் முதல் க/கு | 15,000 | ||||
| (நற்பெயரில் சுரேஷின் பங்கு சரிக்கட்டப்பட்டது) |
21.
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2017 | இலாப நட்டப் பகிர்வு க/கு | ப | 12,000 | ||
| மார்ச் 31 | பொதுக்காப்பு க/கு | ப | 24,000 | ||
| தொழிலாளர் ஈட்டுநிதி க/கு | ப | 18,000 | |||
| ஆகாஷ் முதல் க/கு \(\left( 54,000\times \frac { 3 }{ 6} \right) \) | 27,000 | ||||
| முகேஷ் முதல் க/கு \(\left( 54,000\times \frac { 2 }{ 6 } \right) \) | 18,000 | ||||
| சஞ்சய் முதல் க/கு \(\left( 54,000\times \frac { 1 }{ 6 } \right) \) | 9,000 | ||||
| (பகிர்ந்து தரா இலாபம் மற்றும் காப்புகள் அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்பட்டது) |
22.
ஒரு கூட்டாளி நிறுவனத்தில் இருந்து விலகும் போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் அவசியமாகிறது.
(i) பகிர்ந்து தரா இலாபங்கள், காப்புகள் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்தளித்தல் அவசியமாகிறது.
(ii) சொத்துக்களையும் பொறுப்புகளையும் மறுமதிப்பீடு செய்தல்
(iii) புதிய விகிதம் மற்றும் தியாக விகிதம் ஆகியவற்றைத் தீர்மானித்தல்.
(iv) நற்பெயர் சரிக்கட்டுதல்
(v) கூட்டாளி விலகும் நாள் வரை உள்ள நடப்பு ஆண்டு இலாபம் அல்லது நட்டத்தை சரிக்கட்டுதல்
(vi) விலகும் கூட்டாளிக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்துதல்.
23.
ஒப்புக் கொண்ட விகிதம்
24.
பெயரளவு கணக்கு
25.
பகிர்ந்து தரா இலாபங்கள்
26.
தொழிலாளர் ஈட்டு நிதி
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards