12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 12/08/2019
கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
இறந்த கூட்டாளிக்கு செலுத்த வேண்டிய தொகையினை அவருடைய நிறைவேற்றாளர் கணக்கிற்கு மாற்றுவதற்குரிய குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
2.
ஆதாய விகிதம் என்றால் என்ன?
3.
4.
ஆர்யா, பெனின் மற்றும் சார்லஸ் என்ற கூட்டாளிகள் முறையே 3:3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் சார்லஸ் என்பவர் விலகினார். அவருடைய பங்கு முழுவதையும் ஆர்யா எடுத்துக் கொண்டார். ஆர்யா மற்றும் பெனின் ஆகியோரின் புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.
5.
மேரி, மீனா மற்றும் மரியம் எனும் கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் இலாபநட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1-1-2019 அன்று மேரி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளில், அந்நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு சொத்துகள் பக்கத்தில் ரூ. 75,000 பகிர்ந்து தரா நட்டம் எனக் காட்டியது. பகிர்ந்து தரா நட்டத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
6.
ஒரு கூட்டடாண்மை நிறுவனத்தில் சரண், அருண் மற்றும் கரண் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 4:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2016, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | கட்டடம் | 60,000 | |||
| சரண் | 60,000 | இயந்திரம் | 40,000 | ||
| அருண் | 50,000 | முதலீடுகள் | 20,000 | ||
| கரண் | 40,000 | 1,50,000 | சரக்கிருப்பு | 12,000 | |
| பொதுக்காப்பு | 15,000 | கடனாளிகள் | 25,000 | ||
| கடனீந்தோர் | 35,000 | கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு | 1000 | 24,000 | |
| வங்கி ரொக்கம் | 44,000 | ||||
| 2,00,000 | 2,00,000 |
1.1.2017 அன்று கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு கரண் விலகினார்.
(i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.21,000 என மதிப்பிடப்பட்டது.
(ii) இயந்திரம் மீது 10% மதிப்பேற்றம் செய்ய வேண்டும்.
(iii) கட்டடம் ரூ.80,000 ஆக மதிப்பிட வேண்டும்.
(iv) வாராக்கடன் ஒதுக்கு ரூ.2,000 ஆக அதிகரிக்க வேண்டும்.
(v) சரக்கிருப்பு மதிப்பில் ரூ.2,000 குறைக்க வேண்டும்.
(vi) கரணுக்கு செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
தேவையான பேரேட்டுக் கணக்குகளை தயார் செய்யவும் மற்றும் விலகலுக்குப் பின் உள்ள கூட்டாண்மை நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்
7.
வெளிச்செல்லும் கூட்டாளிக்குச் செலுத்தவேண்டிய தொகையினை எவ்வாறு தீர்வு செய்யலாம்?
8.
9.
மணி, ரமா மற்றும் தேவன் ஆகியோர் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள். தங்கள் இலாப நட்டங்களை முறையே 5:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 80,000 | ||
| மணி | 50,000 | சரக்கிருப்பு | 20,000 | |
| ரமா | 50,000 | அறைகலன் | 70,000 | |
| தேவன் | 50,000 | 1,50,000 | கடனாளிகள் | 20,000 |
| பற்பல கடனீந்தோர் | 20,000 | கைரொக்கம் | 10,000 | |
| இலாபநட்டக் க/கு | 30,000 | |||
| 2,00,000 | 2,00,000 |
பின்வரும் சரிகட்டுதல்களுக்குட்பட்டு மணி 31.03.2019 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகுகிறார்
(i) சரக்கிருப்பில் ரூ.5,000 மதிப்பு குறைக்கப்பட வேண்டும்
(ii) வாரா ஐயக்கடனுக்கு ரூ.1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
(iii) கட்டடத்தின் மதிப்பு ரூ. 16,000 அதிகரிக்கப்பட வேண்டும்
(iv) மணிக்குச் சேரவேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை
மறுமதிப்பீட்டு கணக்கு மற்றும் கூட்டாளி விலகலுக்குப் பின் உள்ள முதல் கணக்கினைத் தயாரிக்கவும்.
10.
பிரபு, ரகு மற்றும் சிவா என்ற கூட்டாளிகள் 3:2:1 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2017 ஏப்ரல், 1 ஆம் நாளன்று பிரபு கூட்டாண்மையிலிருந்து விலகினார். பின்வரும் சரிக்கட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
(i) கட்டடத்தின் மதிப்பு ரூ.12,000 உயர்த்துவது
(ii) அறைகலன் மதிப்பை ரூ. 8,500 குறைப்பது
(iii) கொடுபடா சம்பளத்திற்காக ரூ. 6,500 ஒதுக்கு உருவாக்குவது
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.
11.
ஆகாஷ், முகேஷ் மற்றும் சஞ்சய் என்ற கூட்டாளிகள் 3:2:1 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2017, மார்ச் 31 அன்று அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | கட்டடம் | 1,10,000 | ||
| ஆகாஷ் | 40,000 | வாகனம் | 30,000 | |
| முகேஷ் | 60,000 | சரக்கிருப்பு | 26,000 | |
| சஞ்சய் | 30,000 | 1,30,000 | கடனாளிகள் | 25,000 |
| இலாபநட்டப் பகிர்வு க/கு | 12,000 | கைரொக்கம் | 15,000 | |
| பொதுக்காப்பு | 24,000 | |||
| தொழிலாளர் ஈட்டு நிதி | 18,000 | |||
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 22,000 | |||
| 2,06,000 | 2,06,000 |
பகிர்ந்து தரா இலாபத்தினைப் பதிவு செய்யும் குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
12.
கூட்டாளி விலகலின்போது செய்யப்பட வேண்டிய சரிக்கட்டுதல்களை பட்டியலிடவும்.
13.
இரத்னா, பாஸ்கர், மற்றும் இப்ராஹிம் ஆகிய கூட்டாளிகள் 2 : 3 : 4 என்ற விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று இரத்னா இறந்துவிட்டார். அவருக்குச் செலுத்த வேண்டிய இறுதித் தொகை ரூ.1,00,000 வரவு இருப்பினைக் காட்டியது. கீழ்கண்ட சூழ்நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
(அ) சேரவேண்டியத் தொகை உடனடியாகக் காசோலை மூலம் செலுத்தப்பட்டது
(ஆ) சேரவேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை
(இ) ரூ.60,000 காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டது
14.
ஜஸ்டினா, நவி மற்றும் ரித்திகா எனும் கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 31.3.2019 அன்று ரித்திகா என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார். முந்தைய ஆண்டுகளின் இலாபம் பின்வருமாறு.
2016: ரூ.5,000; 2017: ரூ.10,000; 2018: ரூ.30,000; 2019 ஆம் ஆண்டிற்கான ரித்திகாவின் இலாபப் பங்கை அவர் விலகும் நாள் வரை பின்வரும் நிலைகளில் கணக்கிடவும்.
(அ) முந்தைய ஆண்டின் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
(ஆ) கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
மேலும், கூட்டாளிகளின் முதல் கணக்கு மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
15.
A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 4:2:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். தற்போது C விலகுகிறார். A மற்றும் B யின் புதிய இலாபப் பகிர்வு விகிதம்_____.
4:3
3:4
2:1
1:2
16.
A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 2:2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். B-ன் விலகலின்போது நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளி B-க்கு ஈடு செய்வதற்கு A மற்றும் C யின் பங்களிப்பைக் கண்டறியவும்.
ரூ.20,000 மற்றும் ரூ.10,000
ரூ. 8,000 மற்றும் ரூ.4,000
ரூ.10,000 மற்றும் ரூ.20,000
ரூ.15,000 மற்றும் ரூ.15,000
17.
ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளியாக இருந்த ‘A’ என்பவர் 2019, மார்ச் 31 அன்று இறந்து விட்டார். அவருக்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை ரூ.25,000 உடனடியாகச் செலுத்தப்படவில்லை. அது மாற்றப்பட வேண்டிய கணக்கு_____.
A-ன் முதல் கணக்கு
A-ன் கடன் கணக்கு
A –ன் நிறைவேற்றாளர் கணக்கு
A –ன் நிறைவேற்றாளர் கடன் கணக்கு
18.
ஒரு கூட்டாளி விலகலின்போது, ஆதாய விகிதத்தின் நிர்ணயம் எதற்கு தேவைப்படுகிறது?
மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நட்டம் மாற்றப்படுவதற்கு
பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்தளிப்பதற்கு
நற்பெயரை சரிக்கட்டுவதற்கு
மேற்கண்ட எதுவுமில்லை
19.
கூட்டாளி ஒருவர் ஜூன் 30 அன்று கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாவது_____.
நடப்பு கணக்காண்டின் இறுதி வரைக்கும்
முந்தைய கணக்காண்டின் இறுதி வரைக்கும்
கூட்டாளி விலகும் நாள் வரைக்கும்
கூட்டாளியின் கணக்கைத் தீர்வு செய்யும் வரைக்கும்
1.
இறந்த கூட்டாளிக்குச் சேர வேண்டிய தொகையை அவரின் நிறைவேற்றாளர் அல்லது சட்டமுறை பிரதிநிதியிடம் மாற்றுவதற்கான பதிவு
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|---|---|---|---|---|
| இறந்த கூட்டாளியின் முதல் க/கு ப | XXX | |||
| இறந்த கூட்டாளியின் நிறைவேற்றாளர் க/கு | XXX |
2.
(i) தொடரும் கூட்டாளிகள் விலகும் கூட்டாளியின் இலாபப் பங்கிலிருந்து ஒரு பகுதியை ஆதாயமாகப் பெறுகின்றனர்
(ii) அந்த ஆதாயம் அனைத்துக் கூட்டாளிகளினாலும் அல்லது ஒரு சில கூட்டாளிகளாலும் பிரித்துக் கொள்ளப்படும். ஆதாய விகிதம் என்பது தொடரும் கூட்டாளிகளும் கிடைக்கப்பெற்ற இலாபத்தின் விகிதாச்சாரம் ஆகும்.
3.
4.
ஆர்யாவின் ஆதாயப் பங்கு =\(\frac{2}{8}\)
ஆதாய விகிதம் =\(\frac{2}{8}\): 0 அதாவது \(\frac{1}{4}\):0 அல்லது 1:0
தொடரும் கூட்டாளியின் புதிய பங்கு = பழைய பங்கு + ஆதாயப் பங்கு
ஆர்யா \(=\frac { 3 }{ 8 } +\frac { 2 }{ 8 } =\frac { 5 }{ 8 } \)
பெனின் \(=\frac { 3 }{ 8 } +0=\frac { 3 }{ 8 } \)
ஆகவே, ஆர்யா மற்றும் பெனின் ஆகியோரின் புதிய இலாப விகிதம் \(\frac{5}{8}:\frac{3}{8}\)அதாவது 5:3
5.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. |
வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 2019 ஜன 1 | மேரி முதல் க/கு ப | 25,000 | ||
| மீனா முதல் க/கு ப | 25,000 | |||
| மரியம் முதல் க/கு ப | 25,000 | |||
| இலாப நட்ட க/கு | 75,000 | |||
| (பகிர்ந்து தரா நட்டம் அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்பட்டது.) |
6.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| வாராக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | இயந்திரம் க/கு | 4,000 | |
| சரக்கிருப்பு க/கு | 2,000 | கட்டடம் க/கு | 20,000 | |
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| சரண் முதல் க/கு \(\left( 21,000\times \frac { 4 }{ 10 } \right) \) | 8,400 | |||
| அருண் முதல் க/கு \(\left( 21,000\times \frac { 3 }{ 10 } \right) \) | 6,300 | |||
| கரண் முதல் க/கு \(\left( 21,000\times \frac { 3 }{ 10 } \right) \) | 6,300 | 21,000 | ||
| 24,000 | 24,000 |
| விவரம் | சரண் ரூ. |
அருண் ரூ. |
கரண் ரூ. |
விவரம் | சரண் ரூ. |
அருண் ரூ. |
கரண் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| கரண் முதல் க/கு | 3,600 | 2,700 | - | இருப்பு கீ/கொ | 60,000 | 50,000 | 40,000 |
| கரண் கடன்க/கு | - | - | 57,100 | பொதுக்கப்பு க/கு | 6,000 | 4,500 | 4,500 |
| இருப்பு கீ/இ | 70,800 | 58,100 | - | மறுமதிப்பீடு க/கு | 8,400 | 6,300 | 6,300 |
| சரண் முதல் க/கு | - | - | 3,600 | ||||
| அருண் முதல் க/கு | - | - | 2,700 | ||||
| 74,400 | 60,800 | 57,100 | 74,400 | 60,800 | 57,100 | ||
| இருப்பு கீ/கொ | 70,800 | 58,100 | - |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துக்கள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 60,000 | |||
| சரண் | 70,800 | கூட்டுக: | 80,000 | ||
| அருண் | 58,100 | 1,28,900 | மதிபெற்றம் 10% | 20,000 | 80,000 |
| சரணின் கடன் க/கு | 57,100 | இயந்திரம் | 40,000 | ||
| கடனீந்தோர் | 35,000 | கூட்டுக: | |||
| மதிபெற்றம் | 4,000 | 44,000 | |||
| முதலீடுகள் | 20,000 | ||||
| சரக்கிருப்பு | 12,000 | ||||
| கழிக்க: | |||||
| மதிப்பு குறைப்பு | 2,000 | 10,000 | |||
| கடனாளிகள் | 25,000 | ||||
| கழிக்க: | |||||
| வரா ஐயக்கடன் ஒதுக்கு | 2,000 | 23,000 | |||
| வாங்கி ரொக்கம் | 44,000 | ||||
| 2,21,000 | 2,21,000 |
குறிப்பு: (i) புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதம் கொடுக்கப்படவில்லை. எனவே தொடரும் கூட்டாளிகளின் பழைய இலாப பகிர்வு விகிதமான 4:4 - ல் ஆதாயம் பெற்றுக் கொள்கிறார்கள் என எடுத்துக் கொள்ள வேண்டும்
(ii) நற்பெயரில் கரணின் பங்கு 21,000 x \(\frac { 3 }{ 10 } \)
கரணின் நற்பெயர் ஏற்பு = ரூ.6,300
சரண் : 6,300 x \(\frac { 4 }{ 7 } \) = ரூ.3,600
அருண் : 6,300 x \(\frac { 4 }{ 7 } \) = ரூ.2,700
7.
கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி ஒருவர் விலகும் போது, நற்பெயர், பகிர்ந்து தரா இலாபம் அல்லது நட்டம், மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நட்டம், கூட்டாளியின் ஊதியம் ஆகியவற்றை சரிக்கட்டிய பிறகு கிடைக்கக் கூடிய முதல் கணக்கின் இருப்பு அக்கூட்டாளிக்கு செலுத்தப்பட வேண்டும். கூட்டாண்மை ஒப்பாவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அவருக்கு சேர வேண்டிய தொகையைத் தீர்வு செய்ய வேண்டும்.
பின்வரும் வழிகளில் விலகும் கூட்டாளிக்கு செலுத்த வேண்டிய தொகை தீர்க்கப்படலாம்
(i) அவருக்கு சேரவேண்டிய முழுத் தொகையையும் ரொக்கமாக உடனடியாக செலுத்தலாம்
(ii) மொத்தத் தொகையையும் கூட்டாளியின் கடன் கணக்கிற்கு மாற்றிவிடலாம்.
(iii) பாதித் தொகையை உடனடியாக ரொக்கமாகவும் மீதித் தொகையை கடன் கணக்கிற்கு மாற்றிவிடலாம்
8.
9.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 5,000 | கட்டடக் க/கு | 16,000 | |
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| மணி முதல் க/கு (4/10) | 4,000 | |||
| ரமா முதல் க/கு (3/10) | 3,000 | |||
| தேவன் முதல் க/கு (3/10) | 3,000 | 10,000 | ||
| 16,000 | 16,000 |
| விவரம் | மணி ரூ. |
ரமா ரூ. |
தேவன் ரூ. |
விவரம் | மணி ரூ. |
ரமா ரூ. |
தேவன் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| மணி கடன் க/கு | 66,000 | இருப்பு கீ/கொ | 50,000 | 50,000 | 50,000 | ||
| இருப்பு கீ/இ | - | 62,000 | 62,000 | மறுமதிப்பீட்டுக் க/கு | 4,000 | 3,000 | 3,000 |
| இலாபநட்ட க/கு | 12,000 | 9,000 | 9,000 | ||||
| 66,000 | 62,000 | 62,000 | 66,000 | 62,000 | 62,000 | ||
| - | 62,000 | 62,000 |
10.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 ஏப்ரல் 1 | கட்டடம் க/கு | ப | 12,000 | ||
| மறுமதிப்பீட்டு க/கு | 12,000 | ||||
| (கட்டடத்தின் மதிப்பு உயர்த்தப்பட்டது) | |||||
| " | மறுமதிப்பீட்டு க/கு | ப | 15,000 | ||
| அறைகலன் க/கு | 8,500 | ||||
| கொடுபடா செலவுகள் க/கு | 6,500 | ||||
| (அறைகலன் மதிப்பை குறைத்தது மற்றும் கொடுபடா சம்பளம் ஒதுக்கு உருவாக்கியது) | |||||
| " | பிரபு முதல் க/கு | ப | 1,500 | ||
| ரகு முதல் க/கு | ப | 1,000 | |||
| சிவா முதல் க/கு | ப | 500 | |||
| மறுமதிப்பீட்டுக் க/கு | 3,000 | ||||
| (மறுமதிப்பீட்டு மீதான நட்டம் முதல் கணக்கிற்கு மாற்றியது) |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| அறைகலன் க/கு | 8,500 | கட்டடம் க/கு | 12,000 | |
| கொடுபடாச் செலவுகள் க/கு | 6,500 | மறுமதிப்பீட்டு நட்டம் | ||
| பிரபு முதல் க/கு (3/6) | 1,500 | |||
| ரகு முதல் க/கு (2/6) | 1,000 | |||
| சிவா முதல் க/கு (1/6) | 500 | 3,000 | ||
| 15,000 | 40,000 |
11.
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2017 | இலாப நட்டப் பகிர்வு க/கு | ப | 12,000 | ||
| மார்ச் 31 | பொதுக்காப்பு க/கு | ப | 24,000 | ||
| தொழிலாளர் ஈட்டுநிதி க/கு | ப | 18,000 | |||
| ஆகாஷ் முதல் க/கு \(\left( 54,000\times \frac { 3 }{ 6} \right) \) | 27,000 | ||||
| முகேஷ் முதல் க/கு \(\left( 54,000\times \frac { 2 }{ 6 } \right) \) | 18,000 | ||||
| சஞ்சய் முதல் க/கு \(\left( 54,000\times \frac { 1 }{ 6 } \right) \) | 9,000 | ||||
| (பகிர்ந்து தரா இலாபம் மற்றும் காப்புகள் அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்பட்டது) |
12.
ஒரு கூட்டாளி நிறுவனத்தில் இருந்து விலகும் போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் அவசியமாகிறது.
(i) பகிர்ந்து தரா இலாபங்கள், காப்புகள் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்தளித்தல் அவசியமாகிறது.
(ii) சொத்துக்களையும் பொறுப்புகளையும் மறுமதிப்பீடு செய்தல்
(iii) புதிய விகிதம் மற்றும் தியாக விகிதம் ஆகியவற்றைத் தீர்மானித்தல்.
(iv) நற்பெயர் சரிக்கட்டுதல்
(v) கூட்டாளி விலகும் நாள் வரை உள்ள நடப்பு ஆண்டு இலாபம் அல்லது நட்டத்தை சரிக்கட்டுதல்
(vi) விலகும் கூட்டாளிக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்துதல்.
13.
| நாள் | விவரம் | பே. ப.எ. | பற்று ரூ |
வரவு ரூ |
|
|---|---|---|---|---|---|
| (அ) இரத்னாவின் நிறைவேற்றாளர் க/கு | ப | 1,00,000 | |||
| வங்கி க/கு | 1,00,000 | ||||
| (சேர வேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது) | |||||
| (ஆ) இரத்னாவின் நிறைவேற்றாளர் க/கு | 1,00,000 | ||||
| இரத்னாவின் நிறைவேற்றாளர் கடன் க/கு | 1,00,000 | ||||
| (சேரவேண்டியத் தொகை கடன் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| (இ) இரத்னாவின் நிறைவேற்றாளர் க/கு | ப | 1,00,000 | |||
| வங்கி க/கு | 60,000 | ||||
| இரத்னாவின் நிறைவேற்றாளர் கடன் க/கு | 40,000 | ||||
| (ரூ. 60,000 செலுத்தப்பட்டு மீதித் தொகை கடன் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
14.
அ) முந்தைய ஆண்டின் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளித்தால்
ரித்திகாவின் மூன்று மாதங்களுக்கான இலாபப் பங்கு =\(30,000\times \frac { 3 }{ 12 } \times \frac { 1 }{ 3 } =\) ரூ.2 ,500
| நாள் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ. |
வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 2019 மார்ச் 31 | இலாப நட்ட அனாமத்து க/கு ப | 2,500 | ||
| ரித்திகா முதல் க/கு | 2,500 | |||
| (ரித்திகாவின் நடப்பாண்டின் இலாபத்தின் பங்கு அவருடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டது) |
ஆ) கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
சராசரி இலாபம் =\(\frac { 5,000+10,000+30,000 }{ 3 } =15,000\)
ரித்திகாவின் மூன்று மாதங்களுக்கான இலாபப் பங்கு \(=15,000\times \frac { 3 }{ 12 } \times \frac { 1 }{ 3 } \) =ரூ.1,250
| நாள் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ. |
வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 2019 மார்ச் 31 | இலாப நட்ட அனாமத்து க/கு ப | 1,250 | ||
| ரித்திகா முதல் க/கு | 1,250 | |||
| (ரித்திகாவின் இலாபத்தில் பங்கு அவருடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டது) |
15.
(c)
2:1
16.
(b)
ரூ. 8,000 மற்றும் ரூ.4,000
17.
(d)
A –ன் நிறைவேற்றாளர் கடன் கணக்கு
18.
(c)
நற்பெயரை சரிக்கட்டுவதற்கு
19.
(c)
கூட்டாளி விலகும் நாள் வரைக்கும்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards