12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/10/2025
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test

1.
சுற்றுச்சூழல் மேலாண்மையின் ஒரு உபாயம் _______
உயிரிப்பன்மத் தாக்க மதிப்பீடு
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு
உயிரி கண்காணிப்பு
GIS
2.
_______ கோவில் காடுகள் தமிழ்நாடு முழுவதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
446
447
448
449
3.
இரண்டாம் நிலை உற்பத்தித்திறனை இவ்வாறு வரையறுக்கலாம்.
சார்பூட்ட உயிரிகள் அல்லது நுகர்வோர்களின் திசுக்களில் சேமித்து வைக்கப்படும் ஆற்றல்.
சேமிக்கப்படும் உயிர்த்திரள் ஆற்றல்
ஆற்றல் உற்பத்தி திறன்
ஆற்றல் பயன்படுத்தப்படும் திறன்
4.
சூழல் மண்டலம் என்ற சொல் _________ என்பவரால் முன்மொழியப்பட்டது.
A.G. ஹக்ஸ்லி
A.G. டான்ஸ்லி
ஓடம்
லின்டமேன்
5.
இந்தியாவில் 50,000த்திற்கும் அதிகமான _________ மரபணு வகைகள் உள்ளன.
நெல்
கோதுமை
மா
ஆப்பிள்
6.
உயிரிய பல்வகைத் தன்மை என்ற சொல்லை பிரபலப்படுத்தியவர் ______
வால்டர் ரோசன்
எட்வர்ட் வில்சன்
அலெக்சாண்டர்
நார்மன் மையர்ஸ்
7.
ஒரு குறிப்பிட்ட பரப்பில், குறிப்பிட்ட மணி நேரத்தில் கண்டறியக் கூடிய பறவைகளின் எண்ணிக்கை எதற்கு எடுத்துக்காட்டாகும்.
சுற்றுச்சூழல் அடர்த்தி
இனக் கூட்ட அடர்த்தி
கச்சா அடர்த்தி
ஒப்பீட்டுப் பெருக்கம்
8.
குளிர் பிரதேசங்களில் வாழும் விலங்குகளின் முதுகெலும்புத் தொடர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.இது கீழ்க்காணும் எந்த விதியுடன் தொடர்புடையது.
பெர்க்மானின் விதி
ஆலென் விதி
வாண்ட்ஹாஃப் விதி
ஜோர்டனின் விதி
9.
EPSPS என்பது
நீராற்பகுக்கும் பொருள்
'ரவுண்ட் அப்' நொதி
உயிரி பூச்சிக்கொல்லி
உரம்
10.
ரெஸ்டிரிக்ஷன் நொதி அடையாளம் காண்பது
பாலிண்ட்ரோம் பகுதி
எக்ஸான்
இண்ட்ரான்
இவை எதுவுமில்லை
11.
_______ ஓர் உயிரிப் பூச்சி விரட்டி (Bio pest repellent)
புளி
மிளகாய்
எள்
வேம்பு
12.
எள் ________ ஐ பூர்விகமாகக் கொண்டது.
ஆசியா
ஆப்பிரிக்கா
சீனா
ஐரோப்பா
13.
பல செல் உயிரிகளில் காணப்படும் வேறுபாடு அடையாத செல்கள் _______________ எனப்படும்.
தண்டு செல்கள்
உடல் செல்கள்
ஒற்றைமைய செல்கள்
பல்மய செல்கள்
14.
இரத்த உறைவுக் காரணி எந்த குரோமோசோமில் காணப்படுகிறது?
X குரோமோசோம்
Y குரோமோசோம்
6 வது குரோமோசோம்
21 வது குரோமோசோம்
15.
நீர் நிலைகளைப் பாதுகாக்க அரசாங்கம் எந்த ஆண்டு எந்த திட்டத்தை அமல்படுத்தியது?
2009 -ல் உயிரிய எரிபொருள் குறித்த தேசிய கொள்கை
1956 -ல் கங்கை நதி செயல் திட்டம்
தேசிய நதிநீர் பாதுகாப்புத் திட்டம் - 1995
யமுனை நதி செயல் திட்டம் - 1993
16.
________ பயிர் வகைகளை உருவாக்க சடுதிமாற்றப் பயிர்பெருக்கமே சிறந்தது
பல விதைகளையுடைய
ஓர் விதைப்
விதைகளற்ற
சத்துள்ள
17.
_______ மீள் நிலைத்த மண்வளம், சூழல் வளம் மற்றும் மக்கள் வளத்திற்கான வேளாண் முறையாகும்
பாரம்பரிய வேளாண்மை
இயற்கை வேளாண்மை
நவீன வேளாண்மை
மேம்பட்ட வேளாண்மை
18.
கீழ்க்கண்டவற்றுள் எது உயிர் எதிர்ப்பொருள் அல்ல?
டெட்ராசைக்ளின்
சூப்பர் பக்
குளோர்டெட்ராசைக்ளின்
ஸ்ட்ரெப்டோமைசின்
19.
டயோனியா, யுட்ரிகுலேரியா (பை தாவரம்) சாரசீனியா போன்றவை எந்த வகையான இடைச்செயலுக்கு எடுத்துக்காட்டு ____________
தொற்றுத் தாவரம்
உடன் உண்ணும் நிலை
கொன்று உண்ணும் வாழ்க்கை
ஒட்டுண்ணி வாழ்க்கை
20.
பின்வரும் படத்தை வரைந்து சரியான விடையை கொண்டு குறிப்பிடு.
இலைக்காம்பு, பில்லோடு
தண்டு, இலை
முட்கள், இலைகள்
தண்டு, செதில் இலைகள்
21.
மகரந்தத்துகளை புறஊதாக் கதிர்களினின்று பாதுகாப்பது எது?
ஸ்போரோபொலினின்
போலன்கிட்
எக்சைன்
காலோஸ்
22.
| பத்தி அ - | பத்தி ஆ | ||
| A | கேமராரியஸ் | 1 | மலர் அமைப்பு |
| B | ஹாப்மீய்ஸ்டர் | 2 | நான்மய மகரந்தத்தூள் அமைப்பு |
| C | ஹேன்னிங் | 3 | மகரந்தக்குழாயைக் கண்டறிந்தார் |
| D | அமிசி | 4 | செயற்கை முறை கருவளர்ச்சி |
A-1, B-2, C-2, D-3
A-4, B-3, C-2, D-1
A-2, B-1, C-4, D-3
A-2, B-1, C-4, D-3
23.
மொனிரா புரோட்டிஸ்டாவில் உணவுப்பொருள் முறை
கொன்று தின்றல்
விலங்கு முறை
ஒளிச்சேர்க்கை
அனைத்தும்
24.
தோட்டப்பட்டாணியின் தாவரவியல் பெயர்
சொலனம் டியூபரோசம்
கோகோஸ் நியூசிஃபெரா
பைசம் சாட்டிவம்
பட்டாணி
25.
பண்புகள் - பெற்றோரிடமிருந்து சந்ததிக்குக் கடத்தப்படுவது _________ எனப்படும்
பாரம்பரியம்
வேறுபாடு
ஒடுங்கு தன்மை
இணை ஓங்குத் தன்மை
26.
சரியான கூற்றைக் கண்டறி
பூனையின் கால்களும் திமிங்கலத்தின் துடுப்புகளும் அமைப்பொத்த உறுப்புகள் ஆகும்.
பறவைகளின் இறக்கைகளும் பூச்சிகளின் இறக்கைகளும் தகவமைப்புப் பரவலுக்கு உதாரணமாகும்.
குழந்தைகளில் வால் ஒரு எச்ச உறுப்பாகும்.
நிக்டேட்டிங் சவ்வு ஒரு முது மரபு உறுப்புகள் மீட்சிக்கு உதாரணம் ஆகும்.
27.
ஓடுகின்ற குழாய் நீரைக் கொண்டு எதனை நுண்ணுயிர் நீக்கம் செய்யலாம்?
வளர்ப்பு அறை
வளர் ஊடகம்
பிரிகூறு
கருவிகள்
28.
வைரஸ் காணப்படாத வளர்ப்பு
செல் வளர்ப்பு
புரோட்டோபிளாச வளர்ப்பு
நுனி ஆக்குத்திசு வளர்ப்பு
கேம்பிய வளர்ப்பு
29.
இந்நிலை அமைப்பு குறைந்த உயிரிகளையே கொண்டிருக்கும்.
குறை உணவூட்ட நிலை
இடை உணவூட்ட நிலை
மிகை உணவூட்ட நிலை
வெளி உணவூட்ட நிலை
30.
அதிக அளவு புளூரைடு குடிநீரில் கலப்பது _______
நெக்ரோஸிஸ்
நியூரோஸிஸ்
பைப்ரோஸிஸ்
ப்ளூரோஸிஸ்
31.
| இரத்த வகை | ஜீனோடைப் | ||
|---|---|---|---|
| I | தலசீமியா | i | தன்னியல்பான உடல் |
| II | பினைல் கீட்டோனூரியா | ii | டைரோசினேஸ் இல்லாமை |
| III | அல்பீனிசம் | iii | குரோமோசோம் 12 |
| IV | ஹன்டிங்டன் கோரியா | iv | இயல்புக்கு மாறான ஹீமோகுளோபின் |
I-iv,II-iii,III-ii,IV-i
I-i,II-ii,III-iii,IV-iv
I-iii,II-i,III-iv,IV-ii
I-ii,II-iii,III-iv,IV-i
32.
எந்த வரிசை சரியானது?
கதுப்பு\(\longrightarrow \) நுண்கதுப்பு \(\longrightarrow \)மீச்சிறு கதுப்பு\(\longrightarrow \) பால் நுண் குழல்கள்\(\longrightarrow \) பால் விரிமுனை\(\longrightarrow \) பால் விரிமுனை பால் \(\longrightarrow \)உந்து நாளம்
கதுப்பு\(\longrightarrow \) நுண் கதுப்பு \(\longrightarrow \)பால் நுண் குழல் \(\longrightarrow \)மீச்சிறு கதுப்பு \(\longrightarrow \)பால் விரிமுனை\(\longrightarrow \) பால் உற்பத்தி நாளம்
கதுப்பு \(\longrightarrow \) நுண் கதுப்பு \(\longrightarrow \) பால் நுண் குழல் \(\longrightarrow \)மீச்சிறு கதுப்பு\(\longrightarrow \) பால் உந்து நாளம்
கதுப்பு\(\longrightarrow \) நுண் கதுப்பு \(\longrightarrow \)பால் நுண் குழல் \(\longrightarrow \)மீச்சிறு கதுப்பு \(\longrightarrow \)பால் விரிமுனை\(\longrightarrow \) பால் உற்பத்தி நாளம்
33.
தவறான கூற்றைக் கண்டறி
சீம்பாலில் ________
அதிக அளவு லாக்டோஸ்
கொழுப்பு இல்லை
அதிக புரதங்கள்
விட்டமின் A
34.
'Rh' எதிர்பொருள் இந்த வகையைச் சார்ந்தது.
IgA
IgG
IgE
IgM
35.
இரவில் வியர்த்தல் எந்த நோயின் அறிகுறி?
எய்ட்ஸ்
மேகப்புண்
கேண்டிடியாசிஸ்
கிளாமிடியாசிஸ்
36.
லிப்பஸ் வளையம் _______ IUD.
தாமிரம் வெளிவரும்
ஹார்மோன் வெளிவிடும்
மருந்தில்லா
மேற்கண்ட எவையுமில்லை
37.
| பகுதி -I | பகுதி-II | ||
| அ | முழுசேர்க்கை | i | அமைப்பில் மாறுபட்ட இரு சிறிய இனச்செல்கள் ஒன்றிணையும் |
| ஆ | இளம்செல்சேர்க்கை | ii | முதிர்ந்த உயிரிகளே ஒன்றிணைவது |
| இ. | மாறுபட்ட செல் சேர்க்கை | iii | ஒத்த இனச் செல்கள் சேர்வது |
| ஈ. | ஒத்த செல் சேர்க்கை | iii. | இரு இளம் சேய் செல்கள் இனச்செல்களாகி இணைவது |
அ-iv,ஆ-ii,இ-i,ஈ-iii
அ-i,ஆ-iii,இ-ii,ஈ-iv
அ-ii,ஆ-iv,இ-i,ஈ-iii
அ-iii,ஆ-i,இ-i,ஈ-ii
38.
| பகுதி I | பகுதி II | ||
|---|---|---|---|
| அ. | பிளாஸ்மோடியம் | ii. | ஸ்ட்ரோபிலா ஆக்கம் |
| ஆ. | அமீபா | ii. | ஸ்போரோசோயிட்டுகள் |
| இ. | பிளாஸ்மோடியம் | iii. | போலிக்காலிஸ்போர்கள் |
| ஈ. | எளிய கட்டமைப்பு கொண்ட பல செல் உயிரிகள் | iv. | மீரோசோயிட்டுகள் |
அ-iii,ஆ-iv,இ-i,ஈ-ii
அ-iv,ஆ-iii,இ-ii,ஈ-i
அ-i,ஆ-iv,இ-iii,ஈ-ii
அ-iv,ஆ-i,இ-ii,ஈ-iii
39.
மனித குரோமோசோம்களில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச எண்ணிக்கை உடைய ஜீன்கள் காணப்படுபவை முறையே
குரோமோசோம் 1 & X
குரோமோசோம் 1 & Y
குரோமோசோம் 21 & Y
குரோமோசோம் X & Y
40.
அடுத்தடுத்த நியுக்ளியோடைடுகளுக்கிடையேயான சர்க்கரை மூலக்கூறுகளை இணைக்கும் வேதிப் பிணைப்பு
ஹைட்ரஜன் பிணைப்பு
ஹைட்ராக்சைல் பிணைப்பு
பாஸ்போ - டை - எஸ்டர் பிணைப்பு
எஸ்டர் பிணைப்பு
41.
சூரியனிலிருந்து பூமிக்கு வரும் தீங்கு வாய்ந்த புற ஊதாக் கதிர்களை தடுக்கும் ஸ்ட்ரேட்டோஸ்பியர் அடுக்கில் உள்ள ஓசோன் படலத்தின் சிதைவைத் தடுக்க ___________ உடன்படிக்கை 1989ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ஆம் தேதி ஓசோன் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
மான்ட்ரியல் உடன்படிக்கை
ஜெனிவா உடன்படிக்கை
கியோட்டோ உடன்படிக்கை
நகோயா உடன்படிக்கை
42.
'சுத்தமான குடிநீர்ப் பெறுதல்' என்பது நமது அடிப்படை உரிமை இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது?
பிரிவு 12
பிரிவு 21
பிரிவு 31
பிரிவு 41
43.
எந்தத் தாவரத்தின் கனிகள் விலங்குகளின் பாதங்களில் ஒட்டிக் கொள்ளக் கடினமான, கூர்மையான முட்களைக் கொண்டிருக்கின்றன
ஆர்ஜிமோன்
எக்பெல்லியம்
எரிட்ஜீரான்
கிராசான்டிரா
44.
ஒரு தனிச் சிற்றினத்தின் சூழ்நிலையியல் பற்றி படிப்பது?
i. குழும சூழ்நிலையியல்
ii. சுயச் சூழ்நிலையியல்
iii. சிற்றினச் சூழ்நிலையியல்
iv. கூட்டு சூழ்நிலையியல்
i மட்டும்
ii மட்டும்
i மற்றும் iv மட்டும்
ii மற்றும் iii மட்டும்
45.
தாவர திசு வளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாகப் பயன்படுத்தப்படுவது ______.
நிக்கோட்டினிக் அமிலம்
கோபால்ட்டஸ் குளோரைடு
EDTA
அகார்
46.
பின்வரும் கூற்றிலிருந்து தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
இதய அடைப்பிற்கு பயன்படுத்தப்படும் ஊட்டப்பானம் டிஜிடாலிஸ் பர்பியூரியாவிலிருந்து கிடைக்கிறது.
மூட்டுவலியை குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்து காப்சிகம் அணுவத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
மலேரியா எதிர்ப்பு மருந்து சின்கோனா ஆபிசினாலிஸ் தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
புற்றுநோய் எதிர்ப்பு பண்பானது கேதராந்தஸ் ரோசியஸ் தாவரத்தில் காணப்படவில்லை
47.
பின்வருவனவற்றில் இந்தியாவில் எது மிகை உள்ளூர் உயிரினப் பகுதி எது?
மேற்கு தொடர்ச்சி மலை
இந்திய - கங்கை சமவெளி
கிழக்கு இமயமலை தொடர்
அ மற்றும் இ
48.
பின்வருவனவற்றில் எது சூழலுள் பாதுகாப்பு வகையை சார்ந்தது அல்ல.
புகலிடங்கள்
தேசிய பூங்காக்கள்
விலங்கியல் பூங்காக்கள்
உயிர்கோள காப்பிடம்
49.
சில இயற்பியல் செயல்பாடுகள் மூலம் தன்நிலை பேணும் விலங்குகள் ______.
ஒத்தமைவான்கள்
ஒழுங்கமைவான்கள்
வலசைபோகின்றன
செயலற்ற நிலையில் உள்ளன
50.
கீழ்கண்ட வயது கூம்பில் எவ்வகை மனித மக்கள் தொகை குறிக்கப்படுகிறது?
அழிந்துவரும் மக்கள் தொகை
நிலைத்த மக்கள் தொகை
குறையும் மக்கள் தொகை
அதிகரிக்கும் மக்கள் தொகை
51.
52.
கூற்று I: காஃபி காஃபின் கொண்டது.
கூற்று II: காஃபி பருகுவதால் புற்றுநோய் வளர்க்கும்
கூற்று I சரி, கூற்று II தவறு
கூற்று I, II – இரண்டும் சரி
கூற்று I தவறு, கூற்று II சரி
கூற்று I, II – இரண்டும் தவறு
53.
கீழ்வருவனவற்றுள் எது PCR ல் பயன்படும் டி.என்.ஏ பாலிமரேஸ் பயன்பாடு பற்றிய உண்மையான கூற்றாகும்.
உள் நுழைத்த டி.என்.ஏ வை பெற்றுக்கொள்ளும் செல்லில் ஒட்டுவதற்கு உதவுகின்றது.
இது தேர்வு செய்யும் குறியாளராகச் செயல்படுகின்றது.
இது வைரஸில் இருந்து பிரிக்கப்படுகின்றது
உயர் வெப்ப நிலையிலும் செயல்படுகின்றது.
54.
அடினோசின் டி அமினேஸ் குறைபாடு எனும் மரபியல் கோளாறுக்கான நிரந்தரத் தீர்வு ____.
நொதி இடமாற்ற சிகிச்சை
ADA ,DNA கொண்ட மரபுப் பொறியியல் மாற்றிய லிம்போசைட்டுகளை கால இடைவெளியில் உட்செலுத்துதல்
அடினோசின் அமினேஸ் தூண்டிகளை அளித்தல்
ஆரம்ப கால கரு வளர்ச்சியின் போதே ADA உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை செல்களை கருவினுள் நுழைத்தல்
55.
கீழ்கண்ட எந்தப் பயிர் இரகம் அதன் நோய் எதிர்க்கும் திறனுடன் பொருந்தியுள்ளது
| இரகங்கள் | நோய் எதிர்க்கும் திறன் |
| பூசா கோமல் | பாக்டீரிய அழுகல் |
| இரகங்கள் | நோய் எதிர்க்கும் திறன் |
| பூசா சட்பஹார் | வெண் துரு |
| இரகங்கள் | நோய் எதிர்க்கும் திறன் |
| பூசா சுப்ரா | மிளகாய் தேமல் வைரஸ் |
| இரகங்கள் | நோய் எதிர்க்கும் திறன் |
| பிராசிகா | பூசா சுவர்ணியம் |
56.
57.
புதைபடிவங்களின் வயதைத் தீர்மானிக்க உதவுவது?
மின்னணு நுண்ணோக்கி
புதைபடிவங்களின் எடை
கார்பன் முறை வயது கண்டறிதல்
படிவங்களின் எலும்புகளை ஆராய்தல்
58.
'இயற்கைத் தேர்வு வழி சிற்றினத் தோற்றம்' என்ற நூலை வெளியிட்டவர் ______.
சார்லஸ் டார்வின்
லாமார்க்
வீஸ்மான்
ஹியூகோ டி விரிஸ்
59.
கீழ்கண்டவற்றுள் எது நைட்ரஜன் நிலைப்படுத்துதலில் பங்கேற்பதில்லை?
சூடோமோனாஸ்
அசோட்டோபாக்டர்
அனபீனா
நாஸ்டாக்
60.
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் பாக்டீரியாவிலிருந்து பெறப்படும் கிரைடாக்சின் என்ற நச்சு எதற்கு எதிராக செயல்படுகிறது?
கொசுக்கள்
ஈக்கள்
நெமட்டோடுகள் (நூற்புழுக்கள்)
காய்ப் புழுக்கள்
61.
திரிபடையச் செய்தல் மற்றும் வீழ்ப்படிவாதல் வினைகளில், எதிர்பொருள் தூண்டி ஒரு ____________மற்றும்____________ ஆகும்.
முழுசெல் / கரையும் மூலக்கூறு
கரையும் மூலக்கூறு / முழுசெல்
பாக்டீரியா / வைரஸ்
புரதம் / எதிர்பொருள்
62.
கீழ்க்கண்டவற்றுள் ஒன்றைத் தவிர அனைத்தும் புற நிணநீரிய உறுப்புகள் ஆகும்
நிணநீர் முடிச்சுகள்
மண்ணீரல்
கோழைச்சவ்வு சார்ந்த நிணநீர் திசுக்கள்
தைமஸ்
63.
டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த கீழ்க்கண்ட எந்தக் கருத்து தவறானது?
ஹைட்ரஜன் பிணைப்பு உடைவதால் டி.என்.ஏ மூலக்கூறு பிரிவடைகிறது
ஒவ்வொரு நைட்ரஜன் காரமும் அதேபோல் உள்ள மற்றொரு காரத்துடன் இணைவதால் இரட்டிப்பாதல் நடைபெறுகிறது.
பாதி பழையன காத்தல் முறை இரட்டிப்பாதலால் புதிய டி.என்.ஏ இழையில் ஒரு பழைய இழை பாதுகாக்கப்படுகிறது.
நிரப்புக் கூறு கார இணைகள் ஹைட்ரஜன் பிணைப்பினால் இணைக்கப்பட்டுள்ளன.
64.
கீழ் வருவனவற்றுள் ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளின் செயல்கள் பற்றிய தவறான கூற்று ஏது?
விந்து செல்லாக்கத்தை தடைசெய்தல்
அண்ட வெளிப்பாட்டை தடைசெய்தல்
கருப்பைவாய் கோழையின் தன்மை மாற்றத்தால் விந்துசெல் நுழையும் பாதை மற்றும் விந்துசெல் நகர்வதை பலவீனப்படுத்துகின்றது.
கருப்பை உட்கோழைப் படலத்தில் ஏற்படும் மாற்றம் கருப்பதிவிற்கு எதிரான சூழலை ஏற்படுத்துகின்றது
65.
வரிசை I மற்றும் வரிசை II ஐ பொருத்தி சரியான விடைத் தொகுப்பை தெரிவு செய்யவும்.
| வரிசை I | வரிசைII | ||
| A | தாமிரம் வெளிவிடு IUD | i. | LNG - 20 |
| B | ஹார்மோன் வெளிவிடு IUD | ii. | லிப்பஸ் வளைய IUD |
| C. | மருந்தில்லா IUD | iii | சாஹெலி |
| D | மாத்திரைகள் | iv | Multiload - 375 |
A (iv), B (ii), C (i), D (iii)
A (iv), B (i), C (iii), D (ii)
A (i), B (iv), C (ii), D (iii)
A (iv), B (i), C (ii), D (iii)
66.
ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர் பாக்டீரியோஃபேஜில் செய்த ஆய்வு எதனைக் காட்டுகிறது?
புரதம் பாக்டீரிய செல்லுக்குள் நுழைகிறது.
டி.என்.ஏ ஒரு மரபுப்பொருள்
டிஎன்.ஏவில் கதிரியக்கத் தன்மையுடைய கந்தகம் உள்ளது.
வைரஸ்கள் உருமாற்றம் அடையும்
67.
காடுகள் அழித்தல் எதை முன்னிறுத்திச் செல்வதில்லை ?
வேகமான ஊட்டசத்து சுழற்சி
மண் அரிப்பு
மாற்றியமைக்கப்பட்ட உள்ளூர் வானிலை
இயற்கை வாழிட வானிலை நிலை அழிதல்
68.
தவறான இணையின கண்டறிக
இடவறை – சிற்றினங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் காணப்படும் மற்றும் வேறெங்கும் காணப்படுவதில்லை
மிகு வளங்கள் – மேற்கு தொடர்ச்சிமலை
வெளி வாழிடப் பேணுகை – விலங்கினப் பூங்காக்கள்
கோயில் தோட்டங்கள் – இராஜஸ்தானின் செய்ன்த்ரி குன்று
இந்தியாவின் அன்னிய ஆக்கிரமிப்பு சிற்றினங்கள் – ஆகாயத் தாமரை
69.
மரிஜுவானா ______ லிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
சணல் செடியின் சருகுகள் மற்றும் பூக்கள்
ஏர்காட் பூஞ்சை
சணல் தாவர வேர்கள்
கோகா தாவரம்
70.
30 வயதுடைய பெண்ணிற்கு 14 மணி நேரமாக இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு தொடர்ந்து வெளியேறுகிறது. கீழ்க்கண்ட எந்த உயிரி இந்த கேட்டை ஏற்படுத்தும்?
ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜென்ஸ்
கிளாஸ்டிரிடியம் டிஃபிசைல்
ஷிஜெல்லா டிஸ்சென்ட்ரியே
சால்மோனெல்லா என்டரைடிடிஸ்
71.
கீழ்கண்டவற்றுள் எது படிம சுழற்சியல்ல.
நைட்ரஜன் சுழற்சி
பாஸ்பரஸ் சுழற்சி
சல்பர் சுழற்சி
கால்சியம் சுழற்சி
72.
73.
விந்து திரவத்தின் பெரும்பான்மைப் பகுதியைச் சுரக்கும் துணைச் சுரப்பி _____.
விந்துப்பை
பல்போயுரித்ரல் சுரப்பி
புரோஸ்டேட் சுரப்பி
கோழைச் சுரப்பி
74.
மரபுக்குறியீடு AGC யானது AGA வாக மாற்றமடையும் நிகழ்வு ______.
தவறுதலாகப் பொருள்படும் சடுதிமாற்றம்
பொருளுணர்த்தாத சடுதிமாற்றம்
கட்ட நகர்வு சடுதிமாற்றம்
நீக்குதல் சடுதிமாற்றம்
75.
| பட்டியல் I | பட்டியல் II |
| அ) இரு மடியத்துடன் ஒரு இணை குரோமோசோம்கள் அதிகமாகக் காணப்படுவது |
i) மோனோசோமி |
| ஆ) இருமடியத்துடன் ஒரு குரோமோசோம் அதிகமாகக் காணப்படுவது |
ii) டெட்ராசோமி |
| இ) இருமடியத்தில் ஒரு குரோமோசோம் குறைவாகக் காணப்படுதல் |
iii) ட்ரைசோமி |
| ஈ) இருமடியத்திலிருந்து இரண்டு தனித்தனி குரோமோசோம் குறைவாகக் காணப்படுதல் |
iv) இரட்டை மோனோசோமி |
அ-i, ஆ-iii, இ-ii, ஈ-iv
அ-ii, ஆ-iii, இ-iv, ஈ-i
அ-ii, ஆ-iii, இ-i, ஈ-iv
அ-iii, ஆ-ii, இ-i, ஈ-iv
76.
குளம் ஒரு வகையான _____.
வனச் சூழல்மண்டலம்
புல்வெளி சூழல்மண்டலம்
கடல் சூழல்மண்டலம்
நன்னீர் சூழல்மண்டலம்
77.
டர்னர் சிண்ட்ரோம் கொண்ட பெண்களிடம் காணப்படுவது ______.
சிறிய கருப்பை
வளர்ச்சியடையாத அண்டகங்கள்
வளர்ச்சியடையாத மார்பகம்
மேற்கண்ட அனைத்தும்
78.
கிளைன் ஃபெல்டர் சிண்ட்ரோம் குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
XYY
XO
XXX
XXY
79.
கூற்று மற்றும் காரண வினாக்கள் :
கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று கூற்று (கூ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக:
கூற்று: தேனீக்களின் சமூகத்தில் ஆண் தேனீக்களைத் தவிர மற்ற அனைத்தும் இருமயம் கொண்டவை
காரணம் : ஆண் தேனீக்கள் கன்னி இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் ஆகும்.
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் இல்லை.
'கூ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறானவை.
80.
இளம் உயிரிகளை ஈனும் விலங்குகள் _______.
முட்டையிடுபவை
தாயுள் முட்டை பொரித்து குட்டி ஈனுபவை
குட்டி ஈனுபவை
'அ' மற்றும் 'ஆ' இரண்டும்
81.
மெண்டலின் கலப்பின ஆய்வுகள் மேற்கொண்ட காலத்தைத் தேர்ந்தெடு?
1856 - 1863
1850 - 1870
1857 - 1869
1870 - 1877
82.
வெள்ளரியின் கனி நிறம் இதற்கு உதாரணமாகும்?
ஒடுங்கிய மறைத்தல்
ஓங்கிய மறைத்தல்
நிரப்பு மரபணுக்கள்
தடை ஏற்படுத்தும் மரபணுக்கள்
83.
மறுகூட்டிணைவு தொழில்நுட்பம் பின்வரும் படிநிலைகளைக் கொண்டுள்ளது.
I. மரபணுக்களின் பெருக்கம்
II. ஓம்புயிர் செல்லில் மறுகூட்டிணைவு DNA வை செலுத்துதல்
III. தடைகட்டு (ரெஸ்ட்ரிக்சன்) நொதியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இடத்தில் DNA வைத் துண்டித்தல்.
IV. மரபணுப் பொருட்களைப் பிரித்தெடுத்தல் (DNA) மறுகூட்டிணைவு தொழில்நுட்பத்தின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.
II, III, IV, I
IV, II, III, I
I, II, III, IV
IV, III, I, II
84.
பின்வரும் கூற்றை கருதுக:
I. மறுகூட்டிணைவு DNA தொழில்நுட்பம் என்பது பிரபலமாக அறியப்பட்ட மரபணு பொறியியல் ஆகும். இது மனிதனால் ஆய்வுக்கூட சோதனை முறையில் மரபணுப் பொருட்களை கையாளுதலை விவரிக்கிறது.
II. pBR322 என்பது 1977ல் ஈகோலை பிளாஸ்மிட்டிலிருந்து பொய்லிவர் மற்றும் ரோட்ரிக்கஸ் ஆகியோரால் முதன் முதல் உருவாக்கப்பட்ட செயற்கையான நகலாக்க தாங்கிக்கடத்தியாகும்
III. தடைக்கட்டு (ரெஸ்ட்ரிக்ஷன்) நொதிகள் என்பது நியூக்ளியேஸ் எனப்படும் நொதிகள் வகுப்பைச் சார்ந்தது.
மேற்கூறிய கூற்றின் அடிப்படையில் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
I மற்றும் II
I மற்றும் III
II மற்றும் III
I, II மற்றும் III
85.
புகழ்பெற்ற இந்திய கருவியல் வல்லுனர் ____.
S.R. காஷ்யப்
P. மகேஸ்வரி
M.S. சுவாமிநாதன்
K.C. மேத்தா
86.
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான கூற்றினை தேர்வு செய்யவும்.
பாலிலா இனப்பெருக்கத்தில் கேமீட்கள் ஈடுபடுகின்றன.
பாக்டீரியங்கள் மொட்டுவிடுதல் வழி பாலிலா இனப்பெருக்கம் செய்கின்றன
கொனிடியங்களைத் தோற்றுவித்தல் ஒரு பாலின இனப்பெருக்க முறையாகும்
ஈஸ்ட் மொட்டுவிடுதல் வழி இனப்பெருக்கம் செய்கிறது
1.
(b)
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு
2.
(c)
448
3.
(a)
சார்பூட்ட உயிரிகள் அல்லது நுகர்வோர்களின் திசுக்களில் சேமித்து வைக்கப்படும் ஆற்றல்.
4.
(b)
A.G. டான்ஸ்லி
5.
(a)
நெல்
6.
(b)
எட்வர்ட் வில்சன்
7.
(d)
ஒப்பீட்டுப் பெருக்கம்
8.
(d)
ஜோர்டனின் விதி
9.
(b)
'ரவுண்ட் அப்' நொதி
10.
(a)
பாலிண்ட்ரோம் பகுதி
11.
(d)
வேம்பு
12.
(b)
ஆப்பிரிக்கா
13.
(a)
தண்டு செல்கள்
14.
(a)
X குரோமோசோம்
15.
(c)
தேசிய நதிநீர் பாதுகாப்புத் திட்டம் - 1995
16.
(c)
விதைகளற்ற
17.
(d)
மேம்பட்ட வேளாண்மை
18.
(b)
சூப்பர் பக்
19.
(c)
கொன்று உண்ணும் வாழ்க்கை
20.
(d)
தண்டு, செதில் இலைகள்
21.
(b)
போலன்கிட்
22.
(a)
A-1, B-2, C-2, D-3
23.
(d)
அனைத்தும்
24.
(c)
பைசம் சாட்டிவம்
25.
(b)
வேறுபாடு
26.
(a)
பூனையின் கால்களும் திமிங்கலத்தின் துடுப்புகளும் அமைப்பொத்த உறுப்புகள் ஆகும்.
27.
(c)
பிரிகூறு
28.
(c)
நுனி ஆக்குத்திசு வளர்ப்பு
29.
(a)
குறை உணவூட்ட நிலை
30.
(d)
ப்ளூரோஸிஸ்
31.
(a)
I-iv,II-iii,III-ii,IV-i
32.
(a)
கதுப்பு\(\longrightarrow \) நுண்கதுப்பு \(\longrightarrow \)மீச்சிறு கதுப்பு\(\longrightarrow \) பால் நுண் குழல்கள்\(\longrightarrow \) பால் விரிமுனை\(\longrightarrow \) பால் விரிமுனை பால் \(\longrightarrow \)உந்து நாளம்
33.
(a)
அதிக அளவு லாக்டோஸ்
34.
(b)
IgG
35.
(a)
எய்ட்ஸ்
36.
(c)
மருந்தில்லா
37.
(c)
அ-ii,ஆ-iv,இ-i,ஈ-iii
38.
(b)
அ-iv,ஆ-iii,இ-ii,ஈ-i
39.
(b)
குரோமோசோம் 1 & Y
40.
(c)
பாஸ்போ - டை - எஸ்டர் பிணைப்பு
41.
(a)
மான்ட்ரியல் உடன்படிக்கை
42.
(b)
பிரிவு 21
43.
(a)
ஆர்ஜிமோன்
44.
(d)
ii மற்றும் iii மட்டும்
45.
(d)
அகார்
46.
(d)
புற்றுநோய் எதிர்ப்பு பண்பானது கேதராந்தஸ் ரோசியஸ் தாவரத்தில் காணப்படவில்லை
47.
(d)
அ மற்றும் இ
48.
(c)
விலங்கியல் பூங்காக்கள்
49.
(b)
ஒழுங்கமைவான்கள்
50.
(b)
நிலைத்த மக்கள் தொகை
51.
(a)
52.
(a)
கூற்று I சரி, கூற்று II தவறு
53.
(d)
உயர் வெப்ப நிலையிலும் செயல்படுகின்றது.
54.
(d)
ஆரம்ப கால கரு வளர்ச்சியின் போதே ADA உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை செல்களை கருவினுள் நுழைத்தல்
55.
(a)
| இரகங்கள் | நோய் எதிர்க்கும் திறன் |
| பூசா கோமல் | பாக்டீரிய அழுகல் |
56.
(d)
57.
(c)
கார்பன் முறை வயது கண்டறிதல்
58.
(a)
சார்லஸ் டார்வின்
59.
(a)
சூடோமோனாஸ்
60.
(d)
காய்ப் புழுக்கள்
61.
(a)
முழுசெல் / கரையும் மூலக்கூறு
62.
(d)
தைமஸ்
63.
(b)
ஒவ்வொரு நைட்ரஜன் காரமும் அதேபோல் உள்ள மற்றொரு காரத்துடன் இணைவதால் இரட்டிப்பாதல் நடைபெறுகிறது.
64.
(a)
விந்து செல்லாக்கத்தை தடைசெய்தல்
65.
(d)
A (iv), B (i), C (ii), D (iii)
66.
(b)
டி.என்.ஏ ஒரு மரபுப்பொருள்
67.
(a)
வேகமான ஊட்டசத்து சுழற்சி
68.
(d)
கோயில் தோட்டங்கள் – இராஜஸ்தானின் செய்ன்த்ரி குன்று
69.
(a)
சணல் செடியின் சருகுகள் மற்றும் பூக்கள்
70.
(c)
ஷிஜெல்லா டிஸ்சென்ட்ரியே
71.
(a)
நைட்ரஜன் சுழற்சி
72.
(c)
73.
(a)
விந்துப்பை
74.
(a)
தவறுதலாகப் பொருள்படும் சடுதிமாற்றம்
75.
(c)
அ-ii, ஆ-iii, இ-i, ஈ-iv
76.
(d)
நன்னீர் சூழல்மண்டலம்
77.
(d)
மேற்கண்ட அனைத்தும்
78.
(d)
XXY
79.
(a)
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் ஆகும்.
80.
(c)
குட்டி ஈனுபவை
81.
(a)
1856 - 1863
82.
(b)
ஓங்கிய மறைத்தல்
83.
(b)
IV, II, III, I
84.
(d)
I, II மற்றும் III
85.
(b)
P. மகேஸ்வரி
86.
(d)
ஈஸ்ட் மொட்டுவிடுதல் வழி இனப்பெருக்கம் செய்கிறது
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards