12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/10/2025
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test

1.
இன்சுலின் எத்தனை அமினோ அமிலங்களைக் கொண்டது.
41
49
51
59
2.
கைபேசிகளின் மூலம் உருவாகும் மின்னணுக் கழிவுகளில் எந்த உலோகம் அதிகமாகக் காணப்படுகிறது?
தாமிரம்
வெள்ளி
பலேடியம்
தங்கம்
3.
4.
'சுத்தமான குடிநீர்ப் பெறுதல்' என்பது நமது அடிப்படை உரிமை இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது?
பிரிவு 12
பிரிவு 21
பிரிவு 31
பிரிவு 41
5.
GEAC என்பது
ஜீனோம் பொறியியல் செயல் குழுமம்
நில சுற்றுச்சூழல் செயல் குழுமம்
மரபுப் பொறியியல் ஒப்புதல் குழுமம்
மரபிய மற்றும் சுற்றுச்சூழல் ஒப்புதல் குழுமம்
6.
டாலி எனும் செம்மறி ஆடு உருவாக்கப்பட்ட தொழில் நுட்பம் _____.
ஜீன் மாற்றியமைப்பு நகலாக்கம்
இனச்செல்கள் உதவியின்றி நகலாக்கம்
உடல் செல்கள் திசு வளர்ப்பு நகலாக்கம்
உட்கரு மாற்றியமைப்பு நகலாக்கம்
7.
காற்றற்ற கசடு செரிப்பானில் உற்பத்தி செய்யப்படும் வாயுக்கள் ____.
மீத்தேன், ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு
ஹைட்ரஜன் சல்பைடு, மீத்தேன் மற்றும் சல்பர் டை ஆக்சைடு
ஹைட்ரஜன் சல்பைடு, நைட்ரஜன் மற்றும் மீத்தேன்
மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு
8.
9.
முழுமைத்திறன் வரையறு.
10.
'உயிரியத் தீர்வு' - வரையறு.
11.
குறிப்பு வரைக.
அ) மிகை உணவூட்டம்
ஆ) பாசிப் பெருக்கம்
12.
விரிவாக்கம் செய்க.
அ) CFC
ஆ) AQI
இ) PAN
13.
14.
பால் எவ்வாறு தயிராக மாற்றப்படுகிறது? தயிர் உருவாகும் முறையினை விளக்குக.
15.
PCR ன் பயன்பாட்டினை பற்றி விரிவாக எழுதவும்.
16.
காற்று மாசுபாட்டின் விளைவுகள் யாவை?
17.
மரபுவழி நோயுடன் பிறந்த ஒருவருக்கு சிகிச்சையளிக்கும் மரபணு சிகிச்சை உயிரி தொழில்நுட்பவியலின் ஒரு பயன்பாடே ஆகும்.
அ) மரபணு சிகிச்சை என்பதன் பொருள் யாது?
ஆ) முதல் மருத்துவ மரபணு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மரபு வழி நோய் எது?
இ) மரபு வழி நோய் சிகிச்சைக்கான மரபணு சிகிச்சையின் படிநிலைகள் யாவை?
18.
கீழ்கண்டவற்றிக்கு குறிப்பெழுதுக.
அ) புரூவரின் ஈஸ்ட்
ஆ) இடியோனெல்லா சாக்கையன்சிஸ்
இ) நுண்ணுயிரிய எரிபொருள் கலன்கள்
19.
பின்வரும் சொற்றொடர்களை வரையறுக்கவும்.
அ) உயிர் எதிர்ப்பொருள்
ஆ) சூப்பர் பக்
இ) சைமாலஜி
20.
ஒற்றை செல் புரதம் பற்றி எழுதுக.
21.
'சைமாலஜி', 'ஈனாலஜி' - வரையறு.
22.
டி.என்.ஏ தடுப்பூசிகள் என்பன யாவை?
23.
ஒருவர் பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாக தனக்கு HIV தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணி இரத்தப் பரிசோதனைக்குச் செல்கின்றார். எலைசா பரிசோதனை உதவி புரியுமா? ஆம் எனில் எப்படி? இல்லை எனில் ஏன்?
1.
(c)
51
2.
(a)
தாமிரம்
3.
(b)
4.
(b)
பிரிவு 21
5.
(c)
மரபுப் பொறியியல் ஒப்புதல் குழுமம்
6.
(d)
உட்கரு மாற்றியமைப்பு நகலாக்கம்
7.
(d)
மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு
8.
(c)
9.
முழுமைத்திறன் எனப்படுவது ஒற்றைச் செல் பிரிதலடைந்து ஒரு உயிரியின் அனைத்து வகையான வேறுபாடடைந்த செல்களையும் உருவாக்கும் திறனாகும்.
10.
இயற்கையாக உள்ள (அ) மரபியல் மாற்றம் செய்யப்பட்ட நுண்ணுயிரிகளைக் கொண்டு மாசுபடுத்திகளை குறைப்பதும், அழிப்பதும் உயிரியத் தீர்வு எனப்படும்.
11.
அ) மிகை உணவூட்டம் :
ஊட்டச்சத்துக்களை கொண்ட நீர், நிலப்பகுதியிலிருந்து வழிந்தோடி ஏரி போன்ற நீர் நிலைகளை சென்றடையும் பொழுது, அடர்ந்த தாவர வளர்ச்சியினை உண்டாக்குகிறது. இந்நிகழ்வு மிகை உணவூட்டம் எனப்படுகிறது.
ஆ) பாசிப்பெருக்கம் :
நீர் நிலைகளில் நீரின் ஊட்டச்சத்து செறிவு அதிகரிக்கும்போது, பாசிகள் மற்றும் ஆகாயத் தாமரை போன்றவற்றின் வளர்ச்சியை ஊட்டச்சத்துக்கள் தூண்டுகின்றன.
இதனால் கால்வாய்கள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் அடைப்புகளை ஏற்படுத்துவதுடன் உள்ளூர் தாவரங்களையும் பதிலீடு செய்கிறது.
இது பார்க்க விரும்பாத நுரை மற்றும் விரும்பத்தகாத துர்நாற்றம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
இது நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனை குறைக்கிறது.
12.
CFC - குளோரோபுளுரோ கார்பன்
AQI - காற்று தரக்குறியீட்டு எண்
PAN - பெராக்சி அசிட்டைல் நைட்ரேட்
13.
14.
1. பாலில் வளரும் லாக்டிக் அமில பாக்டீரியாக்கள் பாலில் உள்ள பால் புரதத்தை செரித்து கேசின் எனும் தயிராக மாற்றுகிறது.
2. தூய பாலில் உறை (அ) மூல நுண்ணுயிரிகள் சேர்க்கப்பட்டு சிறிதளவு தயிரில் மில்லியன் கணக்கில் லாக்டோபேசில்லஸ் இன பாக்டீரியாக்கள் உள்ளன.
3. அனுகூலமான வெப்பநிலையில் (≤40o C) இவை எண்ணிக்கையில் பெருகி பாலை தயிராக மாற்றுகிறது.
4. பாலை விட தயிரில் அதிக சத்தான கரிம அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
15.
1. இரு வேறு உயிரிகளின் மரபணுத் தொகுதியில் காணப்படும் வேறுபாடுகளை PCR மூலம் ஆய்வு செய்யலாம். பரிணாமத்தில் குறிப்பாக, மரபுவழி இனவரலாறுகளை ஆய்வு செய்ய PCR மிக முக்கியமானதாகும்.
2. இதில் முடி, பதப்படுத்தப்பட்ட திசுக்கள், எலும்புகள், அல்லது ஏதேனும் படிவமாக்கப்பட்ட பொருள்கள் போன்ற மூலங்களிலிருந்து கிடைக்கப்பெறும் நுண்ணிய அளவு டி.என்.ஏ-க்களைக் கூட, அளவில் பெருக்கி ஆய்வுகள் மேற்கொள்ள இயலும்.
3. தடயவியல் மருத்துவத்திலும் PCR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.
4. இரத்தக்கறை, மயிர், விந்து, திரவம் போன்ற தடயங்களிலிருந்து கிடைக்கப்பெறும் ஒரேயொரு டி.என்.ஏ மூலக்கூறைக் கூட PCR தொழில்நுட்பம் மூலம் பெருக்கி ஆய்வு செய்ய முடியும்.
5. இவ்வாறு பெருக்கப்பட்ட டி.என்.ஏ வைப் பயன்படுத்தி DNA ரேகை அச்சிடப்பட்டு குற்றவாளிகளை அடையாளம் காண உதவும் ஒரு கருவியாக தடயவியல் அறிவியலில் பயன்படுத்தலாம்.
6. மரபணு சிகிச்சையில் குறிப்பிட்ட டி.என்.ஏ துண்டங்களை உற்பத்தி செய்து பெருக்குவதற்கும் PCR பயன்படுகிறது.
16.
1. சுவாசத்திற்கான வளிமண்டலத்தை சார்ந்திருக்கும் அனைத்து உயிரிகளையும் பாதிக்கின்றன.
2. தொண்டை மூக்கு நுரையீரல் மற்றும் கண்களில் எரிச்சலை ஏற்படுத்துகின்றன.
3. மாசடைந்த காற்றானது உடலின் எதிர்ப்பு சக்தியினைக் குறைக்கிறது.
4. கார்டியாக் அரித்மியா அல்லது மாரடைப்பு ஆகியவற்றைத் தூண்டுகிறது.
5. வளிமண்டலத்தில் உள்ள CO ஆக்சிஜன் கடத்தப்படுதலில் CO குறுக்கிடுகிறது.
6. CO தலைவலி மற்றும் மங்கலான பார்வையை ஏற்படுத்துகிறது.
17.
அ) மரபணு சிகிச்சை:
(i) ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட திடீர் மாற்றத்தையடைந்த அல்லீங்களைக் கொண்ட ஒருவருடைய செல்களுக்குள் இயல்பான மரபணுவை செலுத்தி அவற்றைச் சரி செய்யும் முறைக்கு மரபணு சிகிச்சை எனப்படும்.
ஆ) முதல் மருத்துவ மரபணு சிகிச்சை:
(i) அடினோசின் டி அமினேஸ் (ADA) குறைபாடு கொண்ட நான்கு வயது பெண் குழந்தைக்கு ஃப்ரெஞ்ச் ஆண்டர்சன் என்பவரால் 1990 ல் முதன் முதலில் மரபணு சிகிச்சை மருத்துவம் அளிக்கப்பட்டது.
இ) மரபணு சிகிச்சையின் படிநிலைகள்:
(i) நகலாக்கம் செய்யப்பட்ட இயல்பான, மனித ADA மரபணுக்களைக் கொண்ட பிளாஸ்மிட்டைச் சுமந்து கொண்டிருக்கும் பாக்டீரியாவினை தேர்வு செய்ய வேண்டும்.
(ii) அவற்றை மரபியல்பு ரீதியாக செயலிழக்கப்பட்ட ரெட்ரோவைரஸ்களை தேர்வு செய்து நகலாக்கம் செய்யப்பட்ட ADA மரபணு வைரஸினுள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
(iii) SCID நோயாளிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட செயலிழக்கப்பட்ட ADA மரபணுவைக் கொண்ட T செல்களை தேர்வு செய்ய வேண்டும்.
(iv) பிரித்தெடுக்கப்பட்ட T செல்களுக்குள் ரெட்ரோ வைரஸ் தொற்றி அவற்றினுள் ADA மரபணுக்களை மாற்றம் செய்கின்றது.
(v) ADA மரபணுக்கள் செயல் நிலையில் உள்ளன என்பதை செல்களை ஊடகத்தில் வளர்த்து உறுதி செய்ய வேண்டும்.
(vi) மரபியல்பு மாற்றப்பட்ட செல்கள் ADA உற்பத்திக்காக நோயாளியின் உடலில் மீண்டும் செலுத்தி நோய் குணமாக்கப்படுகிறது.
18.
அ) புரூயர்ஸ் ஈஸ்ட்:
சாக்ரோமைசஸ் செரிவிசியே பொதுவாக புரூயரின் ஈஸ்ட் என அழைக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி மால்ட் அல்லது மாவு நிறைந்த தானியங்கள் மற்றும் பழரசம் போன்றவற்றை நொதிக்கச் செய்து பல்வேறு மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன.
பீர்: சாக்ரோமைசஸ் கார்ல்பெர்ஜென்சிஸ் (அ) சாக்ரோமைசஸ் செரிவிசியே ஆகியவை முளைக்கட்டிய பார்லி மால்ட் தானியங்களை பீராக மாற்றுகிறது.
ரம்: சாக்ரோமைசெஸ் செரிவிசியே மூலம் நொதிக்க வைக்கப்பட்ட சர்க்கரை (அ) கரும்பு சாற்றிலிருந்து நேரடியாக ரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
விஸ்கி: ஒரு வகையான காய்ச்சி வடிகட்டிய மதுபானமாகும். இது சாக்ரோமைசஸ் செரிவிசியே மூலம் நொதிக்க வைக்கப்பட்ட தானிய கூழ் மூலம் உருவாக்கப்படுகிறது.
ஆ) இடியோனெல்லா சாக்கையன்சிஸ்:
1. தற்பொழுது PET நெகிழிகளை மறுசுழற்சி செய்யும் பணியில் இது ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
2. இந்த பாக்டீரியா PETase மற்றும் MHETase நொதிகளின் துணையுடன் நெகிழிகளை டெரிப்த்தாலிக் அமிலம் மற்றும் எத்திலீன் கிளைக்காலாக சிதைக்கின்றது.
இ) நுண்ணுயிரிய எரிபொருள் கலன்கள்:
1. கரிம மூலக்கூறுகளை ஆக்சிஜனேற்றம் மற்றும் ஒடுக்க வினைக்கு ஆட்படுத்த பாக்டீரியாக்களை அனுமதிப்பதன் மூலம் நுண்ணுயிரிய எரிபொருள் கலன் இயங்குகிறது.
2. பாக்டீரியாக்களை பயன்படுத்தி அதனிடையே இயற்கையாக நடைபெறும் இடைவினைகளை, ஒப்புப் போலியாக்கி மின்சாரம் பெறும் உயிரிய மின் வேதியியல் முறையாகும்.
3. பாக்டீரியாக்களின் சுவாசம் ஒரு பெரிய ஆக்சிஜனேற்றம் ஒடுக்க வினையாகும்.
4. நுண்ணுயிரிய எரிபொருள் கலனில் ஒரு நேர்மின் வாய் மற்றும் ஒரு எதிர்மின்வாய் ஆகியன இருக்கும்
5. இவை எலக்ட்ரான்கள் சுழலும் போது புரோட்டான் பரிமாற்ற சவ்வின் மூலம் பிரிக்கப்படுகிறது.
6. நேர்மின்வாய் முனையில் இருக்கும் நுண்ணுயிரிகள் கரிம எரிபொருள்களுடன் ஆக்சிஜனேற்றம் செய்யும் போது புரோட்டான்கள் வெளியேறி எதிர்மின்வாயை அடைகின்றன.
7. அதே நேரம் நேர்மின்வாய் வழியாக எலக்ட்ரான்கள் புற சுற்றை அடைந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
19.
அ) உயிர் எதிர்ப்பொருள்
உயிரி எதிர்ப்பொருள் என்பவை நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் வேதிப் பொருட்கள் ஆகும். இது குறைந்த செலவில் நோயை உண்டாக்கும் பிற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கவோ அல்லது கொல்லவோ செய்யும்.
உயிரி எதிர்ப்பொருள் என்பது "உயரிக்கு எதிரானவை" என பொருள்படும்.
ஆ) சூப்பர் பக்
இன்றைய நிலையில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பல்வேறு உயிர் எதிர்ப்பொருட்களுக்கு எதிர்ப்புத் திறன் பெற்ற பாக்டீரியத் திரிபு "சூப்பர் பக்" எனப்படும்.
இ) சைமாலஜி
நொதித்தலின் உயர் வேதியியல் செயல்முறைகள் மற்றும் அதன் நடைமுறை பயன்களை பற்றி படிக்கும் பன்முறை அறிவியல் சைமாலஜி எனப்படும்.
20.
(i) ஒற்றை செல் புரதம் என்பவை உண்ணத் தகுந்த ஒரு செல் நுண்ணுயிரியான ஸ்பைருலினா போன்றவற்றைக் குறிக்கிறது.
(ii) பாசிகள், ஈஸ்ட், பூஞ்சை (அ) பாக்டீரியா போன்றவற்றை தனியாகவோ (அ) கலந்தோ (அ) சேர்த்தோ வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் புரதத்தை உணவின் உட்பொருளாகவோ (அ) புரதத்திற்கு மாற்று உணவாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
(iii) இவை மனிதர்கள் உண்பதற்கு ஏற்றவை. கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்தலாம்.
21.
சைமாலஜி: நொதித்தலின் உயிர் வேதியியல் செயல்முறைகள் மற்றும் அதன் நடைமுறை பயன்களை பற்றி படிக்கும் பன்முறை அறிவியல் சைமாலஜி எனப்படும்.
ஈனாலஜி: ஒயின் மற்றும் ஒயின் உற்பத்தி செய்யும் முறைகளைப் பற்றிய அறிவியலுக்கு ஈனாலஜி என்று பெயர்.
22.
டி.என்.ஏ தடுப்பூசிகளை மரபியல் நோய்த்தடுப்பு முறையாகப் பயன்படுத்தும் ஒரு புதிய அணுகு முறை 1990 ல் நடைமுறைக்கு வந்தது.
டி.என்.ஏ மூலக்கூறுகள் மூலம் உடலில் தடைகாப்பு வினைகள் தூண்டப்படுகின்றன.
எதிர்ப்பொருள் தூண்டி புரதத்திற்கு குறியீடு செய்யும் ஒரு மரபணுவை டி.என்.ஏ தடுப்பூசி கொண்டுள்ளது.
இந்த மரபணுவை ஒரு பிளாஸ்மிட்டுக்குள் செலுத்தி பின்னர் ஒரு இலக்கு விலங்கின் உடல் செல்களுக்குள் ஒன்றிணையச் செய்யப்படுகிறது.
உள்ளே சென்ற அந்த டி.என்.ஏ எதிர்ப்பொருள் தூண்டி மூலக்கூறுகளை உருவாக்க செல்களுக்கு உத்தரவிடுகிறது. அவ்விதம் உருவாக்கப்பட்ட மூலக்கூறுகள் செல்களுக்கு வெளியே காணப்படுகின்றன.
செல்களால் உருவாக்கப்பட்டு சுதந்திரமான மிதந்து கொண்டிருக்கும் இம்மூலக்கூறைக் காணும் நமது தடைக்காப்பு, தனது வலுவான எதிர்ப்பை, எதிர்ப்பொருள் உருவாக்கத்தின் மூலம் தெரிவிக்கிறது.
டி.என்.ஏ தடுப்பூசியால் நோயை உருவாக்க இயலாது. ஏனெனில், இது நோயுண்டாக்கும் மரபணுவின் ஒரு பகுதி நகல்களைக் கொண்டுள்ளது.
வடிவமைக்கவும், மலிவாக உற்பத்தி செய்யவும் டி.என்.ஏ தடுப்பூசிகள் எளிதானவை.
இவ்வாறு புதிய தொழில்நுட்ப முறைகளின் மூலம் உருவாக்கப்படும் தடுப்பூசிகள் உறுதியான பல நன்மைகளைக் கொண்டுள்ளன. அவையாவன: இலக்கு புரத உற்பத்தி, நீண்டு நிலைக்கும் நோய்த் தடைகாப்பு மற்றும் குறிப்பிட்ட நோயுண்டாக்கிகளுக்கு எதிரான தடைகாப்பு வினைகளை குறைந்த நச்சு விளைவுகளுடன் விரைவாகத் தூண்டுதல் ஆகியன.
23.
(i) ஆம், ஏனெனில் ELISA என்பது HIV நோய் வைரஸினைக் கண்டறிய உதவும் முதல் படிநிலை முறையாகும்.
(ii) நோயூக்கிக்கான HIV தொற்று கொண்ட நபரின் உடலில் உற்பத்தியாகும் எதிர்ப்பொருளின் அளவை வைத்து கண்டறியப்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards