12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/10/2025
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test

1.
(அ) ஈனாலஜி என்றால் என்ன?
(ஆ) சிவப்பு ஒயின் மற்றும் வெள்ளை ஒயின் என்றால் என்ன?
(இ) மதுபானங்களில் ஆல்கஹால் அளவு எவ்வளவு உள்ளது?
2.
3.
இயல்பான செல்கள் மற்றும் புற்றுநோய் செல்கள் வேறுபடுத்துக.
4.
டான்சில் மற்றும் அடினாய்டுகள்
5.
உடல்செல் மரபணு சிகிச்சை, மற்றும் இனச்செல் மரபணு சிகிச்சை வேறுபடுத்துக
6.
ADA குறைபாடு எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை விளக்கவும்.
7.
இம்யூனோகுளோபுலினின் அமைப்பை தகுந்த படத்துடன் விளக்கு.
8.
பேசில்லரி சீதபேதி மற்றும் அமீபிக் சீதபேதி - ஒப்பிட்டு வேறுபடுத்துக.
9.
ஒற்றைத்திறனிலிருந்து குறுதிறனை வேறுபடுத்துக.
10.
பறவைகளின் முதல்நிலை நிணநீரிய உறுப்பு பற்றி கூறு.
11.
இன்டர்ஃபெரான்கள் என்றால் என்ன?
12.
13.
rDNA தொழில்நுட்ப வருகைக்கு முன் இன்சுலின் எவ்வாறு பெறப்பட்டது? எத்தகைய பிரச்சனைகள் எதிர்கொள்ளப்பட்டன?
14.
பாலிமரேஸ் சங்கிலி வினையைப் பயன்படுத்தி விரும்பிய மாதிரியில் எவ்வாறு மரபணு பெருக்கம் செய்யப்படுகின்றது?
15.
பால் எவ்வாறு தயிராக மாற்றப்படுகிறது? தயிர் உருவாகும் முறையினை விளக்குக.
16.
வீக்கத்தின் போது உற்பத்தி செய்யப்படும் வேதிய எச்சரிக்கை சமிக்ஞைகளை பட்டியலிடுக.
17.
மனிதனில் பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கைச் சுழற்சியை விளக்குக.
18.
பெறப்பட்ட நோய்த்தடைக்காப்பின் வகைகளை வேறுபடுத்துக.
19.
பாக்டீரியாவின் ஏற்படும் நோய்களை அட்டவணைப்படுத்துக.
20.
நகலாக்கத்தில் சாதக, பாதகங்களை குறிப்பிடுக.
21.
மறுசேர்க்கை தடுப்பூசிகள் என்பன யாவை? வகைகளை விளக்குக.
22.
கீழ்கண்டவற்றிக்கு குறிப்பெழுதுக.
அ) புரூவரின் ஈஸ்ட்
ஆ) இடியோனெல்லா சாக்கையன்சிஸ்
இ) நுண்ணுயிரிய எரிபொருள் கலன்கள்
23.
எ.கோலை என்பது _____________.
வயிற்றில் இருக்கும் ஒரு பாக்டீரியா
மண்ணில் உள்ள ஒரு பாக்டீரியா
வெப்ப பாக்டீரியாக்கள்
அ மற்றும் ஆ
24.
முளை கட்டிய அரிசி எதை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுகிறது?
ஒயின்
பீர்
லாக்டிக் அமிலம்
பாலாடைக்கட்டி
25.
வாக்ஸ்மேன் மற்றும் வுட்ரூப் (1941) எதைப் பிரித்தெடுத்தனர்?
ஸ்ட்ரெப்டோமைசின்
பெனிசிலின்
ஆக்டினோமைசின்
நியோமைசின்
26.
கீழ்வருவனவற்றுள் எது சரியற்ற இணை?
ஆப்பிரிக்க தூக்க வியாதி - செட்சே ஈ
அமீபியாசிஸ் - வீட்டு ஈ
காலா அசார் - மணல் பூச்சி
மலேரியா - ஏடிஸ் கொசு
27.
வியர்வை, உமிழ்நீர் மற்றும் கண்ணீரில் காணப்படும் லைசோசைம் எனும் நொதியால் கொல்லப்படுவது _______.
வைரஸ் தொற்றுள்ள செல்கள்
புரோட்டோசோவான்கள்
பாக்டீரியாக்கள்
வைரஸ்கள்
1.
அ) ஈனாலஜி
ஒயின் மற்றும் ஒயின் உற்பத்தி செய்யும் முறைகளை பற்றிய அறிவியலுக்கு ஈனாலஜி என்று பெயர்.
ஆ) சிவப்பு ஒயின் மற்றும் வெள்ளை ஒயின்.
(i) சிவப்பு ஒயின்களுக்கு கருந்திராட்சை பயன்படுகிறது. சில சமயம் அதன் தோல் மற்றும் தண்டுகளும் சேர்த்து ஒயின் தயாரிக்கப்படுகிறது.
(ii) வெள்ளை ஒயின்கள், வெள்ளை (அ) கருந்திராட்சையின் பழச்சாற்றிலிருந்து மட்டும் தயாரிக்கப்படுகிறது. தோல் மற்றும் தண்டுகள் இதில் சேர்க்கப்படுவதில்லை.
இ) ஆல்கஹால் அளவு
(i) பீர்- 3-5% ஆல்கஹால். -
(ii) ஒயின் - 4-9% ஆல்கஹால்.
(iii) வோட்கா - 35-40% ஆல்கஹால்.
2.
3.
| இயல்பான செல்கள் | புற்றுநோய் செல்கள் | ||
|---|---|---|---|
| 1 | சிறியதாகவும், அதிக சைட்டோபிளாசம் அளவையும் கொண்டது. | பெரியதாகவும், சிறிதளவு சைட்டோபிளாசமும் கொண்டது. | |
| 2. | செல்கள் தெளிவான திசுக்களாக வரிசையமைக்கப்படுகின்றன. | செல்களின் அளவு மாறுபாடுடையன செல்கள் வரிசையமைப்பு ஒழுங்கற்று காணப்படும். | |
| 3. | பிளவுறும் செல்களின் அளவு குறைவு | பிளவுறும் செல்களின் எண்ணிக்கை அதிகம். | |
4.
| டான்சில் | அடினாய்டுகள் | ||
|---|---|---|---|
| 1. | இது ஒரு இணையான மென் திசுவாகும். | வாயினுடைய கூரைப்பகுதியில் மென் அண்ணதுக்கு பின்னால் அமைந்துள்ளது. | |
| 2. | இது நோயூக்கிகளுக்கு எதிராக போராடும். | இது எதிர்பொருட்களை உற்பத்தி செய்து தொற்றுக்கு எதிரான செயலுக்கு உதவி புரிகின்றன. | |
| 3. | உள்நுழையும் நோயூக்கிகளை தடுத்து நிறுத்துகின்றன. | இது குழந்தை பருவத்தில் நன்கு செயல்படும். | |
5.
| உடற்செல் மரபணு சிகிச்சை | இனச்செல் மரபணு சிகிச்சை | |
|---|---|---|
| 1 | சிகிச்சையளிக்கும் மரபணுக்கள் உடற்செல்களுக்குள் மாற்றப்படுகின்றன. | சிகிச்சையளிக்கும் மரபணுக்கள் இனச்செல்களுக்குள் மாற்றப்படுகின்றன. |
| 2 | எலும்பு மஜ்ஜை செல்கள் இரத்த செல்கள், தோல் செல்கள் போன்ற செல்களுக்குள் மரபணுக்கள் செலுத்தப்படுகிறது. | அண்ட செல்கள் மற்றும் விந்து செல்களுக்குள் மரபணுக்கள் செலுத்தப்படுகின்றன. |
| 3 | பிந்தைய தலைமுறைக்கு பண்புகள் கடத்தப்படுவதில்லை. | பிந்தைய தலைமுறைக்கு பண்புகள் கடத்தப்படுகின்றன. |
6.
ADA குறைபாட்டினை கீழ்கண்ட முறை மூலம் சரி செய்யலாம்.
(i) எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை
(ii) மரபணு சிகிச்சை
எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை:
(i) சில குழந்தைகளில், ADA குறைபாட்டை எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.
(ii) இதில் குறைபாடுடைய நோய்த்தடை செல்களை கொடையாளியிடமிருந்து பெறப்பட்ட நலமான நோய்த்தடை செல்களைக் கொண்டு பதிலீடு செய்யப்படுகிறது.
(iii) சில நோயாளிகளில், நொதி பதிலீட்டு சிகிச்சை முறையாக செயல்நிலை ADA நோயாளியின் உடலில் செலுத்தப்படுகிறது.
மரபணு சிகிச்சை:
(i) மரபணு சிகிச்சையின் போது நோயாளியின் இரத்தத்திலிருந்து லிம்ஃபோசைட்டுகள் பிரித்தெடுக்கப்பட்டு ஒரு ஊட்ட வளர்ப்பு ஊடகத்தில் வளர்க்கப்படுகிறது. ADA நொதி உற்பத்திக்குக் குறியீடு செய்யும் நலமான, செயல்நிலை மனித மரபணுவான ADA, cDNA வை ரெட்ரோ வைரஸ் கடத்தியின் உதவியுடன் லிம்போசைட்டுகளுக்குள் செலுத்தப்படுகிறது.
(ii) இவ்வாறு மரபுப்பொறியியல் செய்யப்பட்ட லிம்ஃபோசைட்டுகள் மீண்டும் நோயாளியின் உடலினுள் செலுத்தப்படுகிறது.
(iii) இவை சில காலமே உயிர் வாழ்வதால் குறிப்பிட்ட கால இடைவெளியில் மரபுப் பொறியியல் செய்யப்பட்ட லிம்போசைட்டுகளை மீண்டும் மீண்டும் செலுத்திக் கொள்ள வேண்டும்.
(iv) எலும்பு மஜ்ஜையிலிருந்து எடுக்கப்பட்ட ADA மரபணுக்களை ஆரம்பகட்ட கருநிலை செல்களுக்குள் செலுத்துவதன் மூலம் இந்நோயை நிரந்தரமாக குணப்படுத்த இயலும்.
7.
1. இம்யூனோகுளோபுலின் நான்கு பாலிபெப்டைடு சங்கிலிகளை கொண்டதாகும்.
2. அவற்றில் ஒத்த அமைப்புடைய நீளம் குறைவான சங்கிலிகளும் மற்றும் நீளம் அதிகமான இரண்டு கனமான சங்கிலிகளும் உண்டு.
3. இலகுவான சங்கிலிகளின் மூலக்கூறு எடை ஏறத்தாழ 25,000 டால்டன் மற்றும் ஏறத்தாழ 214 அமினோ அமிலம் கொண்டது.
4. கனமான சங்கிலிகளின் மூலக்கூறு எடை ஏறத்தாழ 50,000 டால்டன் மற்றும் ஏறத்தாழ 450 அமினோ அமிலம் கொண்டதாகும்.
5. ஒவ்வொரு இலகுவான சங்கிலி ஒரு கனமான சங்கிலியுடனும் அதே நேரத்தில் இரண்டு கனமான சங்கிலியும் ஒன்றுடன் ஒன்று டை-சல்பைடு பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ளன
6. ஏறத்தாழ நடுப்பகுதியில், அசையும் கீல் அமைப்பினை கன சங்கிலிகள் பெற்றுள்ளன
7.ஒவ்வொரு சங்கிலியும் இரு முனைகள் கொண்டுள்ளன அவை C - முனை மற்றும் N - முனை
8. ஒரு இம்யூனோகுளோபுலினில் இரண்டு பகுதிகள் உண்டு N - முனையில் - மாறுபடும் பகுதி (V - region) C - முனையில் - நிலையான பகுதி (C - region ) காணப்படுகிறது.
8.
பேசில்லரி சீதபேதி மற்றும் அமீபிக் சீதபேதி ஒப்பிட்டு வேறுபடுத்துதல்
பேசில்லரி சீதபேதி
ஷிஜெல்லா சிற்றினத்தினை சார்ந்த பாக்டீரியாவினால் பேசில்லரி சீதபேதி ஏற்படுகிறது. பேசில்லரி சீதபேதியின் காரணமாக வயிற்று வலி, நீரிழப்பு, மலக்கழிவில் இரத்தம் மற்றும் கோழை காணப்படுதல் முதலியன ஏற்படும்.
அமீபிக் சீதபேதி
எண்டமீபா ஹிஸ்டோலைடிகா என்ற புரோட்டோசோவினால் அமீபிக் சீதபேதி ஏற்படுகிறது. அமீபிக் சீதபேதியின் காரணமாக குடற்புண், இரத்தக்கசிவு, வயிற்றுவலி மற்றும் அதிக கோழையுடன் கூடிய மலக்கழிவு முதலியன ஏற்படுகிறது
9.
(i) குறுதிறன் எனப்படுவது, தண்டு செல்கள், சில வகை செல்களாக மட்டும் வேறுபாடையும் திறனாகும். எடுத்துக்காட்டாக லிம்ஃபாய்டு அல்லது மயலாய்டு தண்டு செல்கள் B மற்றும் T செல்களாக மட்டும் வேறுபாடடைதல், ஆனால் RBC யாக வேறுபாடடைவதில்லை.
(ii) ஒற்றைத்திறன் எனப்படும் திறனில் தண்டு செல்கள் ஒரேயொருு செல்வகையாக மட்டும் வேறுபாடடையும்.
10.
பறவைகளின் ஃபேப்ரீசியஸ் பை முதல்நிலை நிணநீரிய உறுப்பாகும். இது பொது கழிவுப் புழையின் மேற்புறத்தில் உள்ளது. லிம்போசைட்டுகள் ஃபேப்ரீசியஸ் பையில் முதிர்ச்சியடைந்து திரவ வழி நோய்த்தடைக்காப்பில் ஈடுபடுகின்றன.
11.
பாலூட்டிகளின் செல்கள் வைரஸ்களால் பாதிக்கப்படும் போது அச்செல்களால் உற்பத்தி செய்யப்படும் சிற்றினக்குறிப்பீடு தன்மையுடைய, புரதத்தாலான வைரஸ் எதிர்ப்பு பொருட்களே 'இன்டர்ஃபெரான்கள்' ஆகும்.
12.
13.
(i) முற்காலத்தில் பன்றிகள் மற்றும் பசுக்களின் கணையங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பெறப்பட்டது.
(ii) விலங்கு இன்சுலினுக்கு மனித இன்சுலினுக்கும் சிறிய அளவில் வேறுபாடுகள் இருந்தால், சில நோயாளிகளில் இது ஒவ்வாமையை ஏற்படுத்தியது.
14.
(i) இது இயல்புதிரிபு உற்பத்தி நீட்சி ஆகிய மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.
(ii) அதிக வெப்பநிலையை பயன்படுத்தி நமக்கு தேவைப்படும் இரட்டைச் சுருள் டி.என்.ஏ வின் இயல்பைத் திரித்து இரண்டு தனித்தனியான இழைகளாகப் பிரிக்கப்படுகிறது. இவை 95o C வெப்ப நிலையில் நடைபெறுகிறது.
(iii) முதன்மை இணைப்பு இழையின் நீட்சி அல்லது உருவாக்கத்தின் போது கலவையின் வெப்ப நிலை 75o C-க்கு உயர்த்தப்பட்டு போதுமான கால அளவிற்கு நிலை நிறுத்தப்படுகிறது.
(iv) இதனால் Tag டி.என்.ஏ பாலிமரேஸ் தனித்த அச்சு வார்ப்பு டி.என்.ஏ விலிருந்து நகலெடுக்கப்பட்டு முதன்மை இணைப்பு இழை நீட்சியடையச் செய்கிறது.
(v) அடைகாப்புக் காலத்தின் இறுதியில் இரு அச்சு வார்ப்பு இழைகளும் பகுதியளவு இரட்டைச் சுருள் இழைகளாக மாற்றப்படும்.
(vi) இவ்வாறு உருவாகும் இரட்டைச் சுருள்களிலுள்ள ஒவ்வொரு புது இழையும் கீழ் நோக்கிய வேறுபட்ட தொலைவுகளில் நீண்டு காணப்படும்.
15.
1. பாலில் வளரும் லாக்டிக் அமில பாக்டீரியாக்கள் பாலில் உள்ள பால் புரதத்தை செரித்து கேசின் எனும் தயிராக மாற்றுகிறது.
2. தூய பாலில் உறை (அ) மூல நுண்ணுயிரிகள் சேர்க்கப்பட்டு சிறிதளவு தயிரில் மில்லியன் கணக்கில் லாக்டோபேசில்லஸ் இன பாக்டீரியாக்கள் உள்ளன.
3. அனுகூலமான வெப்பநிலையில் (≤40o C) இவை எண்ணிக்கையில் பெருகி பாலை தயிராக மாற்றுகிறது.
4. பாலை விட தயிரில் அதிக சத்தான கரிம அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
16.
1. செரோடோனின்
2. ஹிஸ்டமைன்
3. புரோஸ்டாகிளான்டின்
இவை சிதைந்த மாஸ்ட் திசுக்களால் சுரக்கப்படுகிறது.
17.
18.
| வ.எண் | செயலாக்க நோய்த்தடைக்காப்பு | மந்தமான நோய்த்தடைக்காப்பு |
| 1. | செயலாக்க நோய்த்தடைக்காப்பில் தடைகாப்பு பொருட்கள் (எதிர்ப்பொருட்கள்) விருந்தோம்பியின் உடலின் உருவாக்கப்படுகின்றன. | மந்தமான நோய்த்தடைக் காப்பில் தடைகாப்பு பொருட்கள் (எதிர்ப்பொருட்கள்) விருந்தோம்பியின் பங்களிப்பு கிடையாது. |
| 2. | நுண்கிருமி அல்லது எதிர்பொருள் தூண்டிதலால் இவை உருவாக்கப்படுகின்றது. | வெளியில் இருந்து பெற்ற எதிர்ப்பொருட்களால் உற்பத்தியாகின்றன. |
| 3. | இது நீடித்த மற்றும் சிறந்த பாதுகாப்பை அளிக்கின்றன. | இது நிலையற்ற மற்றும் குறைந்த பாதுகாப்பை அளிக்கிறது. |
| 4. | நோய்த்தடைக்காப்பியல் நினைவாற்றலைப் பெற்றுள்ளது. | நோய்த்தடைக்காப்பியல் உடனே நோய்த்தடைக்காப்பு உருவாகிறது. |
19.
| நோய்கள் | நோய்க்காரணி | நோய்த் தொற்றும் பகுதி | பரவும் முறை | அறிகுறிகள் | |
| 1. | ஷிஜெல்லோசிஸ் *(Shigellosis) (பேசில்லரி சீதபேதி) |
ஷிஜெல்லா சிற்றினம் (Shigella sp) | குடல் | மலக்கழிவு கலந்த உணவு மற்றும் நீர்/நேரடியாக வாய்மலம் வழி | வயிற்று வலி நீரிழப்பு, மலக்கழிவில் இரத்தம் மற்றும் கோழை காணப்படுதல் |
| 2. | புபோனிக் பிளேக் (Bubonic Plague) (கருப்பு மரணம்) |
எர்சினியா பெஸ்டிஸ் (Yersinia pestis) | நிணநீர் முடிச்சுகள் | நோய்க்கடத்தி தெள்ளுப்பூச்சி (Xenopsylla cheopis) | காய்ச்சல், தலைவலி வீங்கிய நிணநீர் முடிச்சுகள் |
| 3. | டிப்தீரியா (Diphtheria) |
கோரினைபாக்டீரியம் பாக்டீரியம் (Corynebacterium diphtheriae) |
குரல்வளை, தோல், சுவாச மற்றும் இனப்பெருக்கப் பாதை | நீர்த்திவலைகள் வழித் தொற்று | காய்ச்சல், தொண்டை வலி, கரகரப்பான தொண்டை மற்றும் சுவாசத்தில் இடர்பாடு |
| 4. | காலரா (Cholera) |
விப்ரியோ காலரே | குடல் | மலக்கழிவு கலந்த உணவு மற்றும் நீர் மலக்கழிவு வாய் வழியாக | கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பு |
| 5. | டெட்டனஸ் (Tetanus) (அசையாத் தாடை) | கிளாஸ்ட்ரிடியம் டெட்டனி (Clostridium tetani) |
இழுப்பு | காயத்தின் வழியாக தொற்றுதல் | தாடை தசைகள் விறைத்தல் மிகை இதயத்துடிப்பு, முகம் மற்றும் தாடை தசை இழுப்பு |
| 6. | நிமோனியா (Pneumonia) | ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (Streptococcus pneumoniae) |
நுரையீரல் | நீர்த்திவலைகள் வழித்தொற்று | காய்ச்சல், இருமல் வலியுடன் கூடிய சுவாசம் மற்றும் பழுப்பு நிற சளி |
| 7. | டைஃபாய்டு (Typhoid) |
ஸ்ட்ரெப்டோகாக்கஸ் | குடல் | மலக்கழிவு கலந்த உணவு மற்றும் நீர் வழியாக | தலைவலி, அசௌகரியமான வயிறு, காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு |
| 8. | காசநோய் (Tuberculosis) |
மைகோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் (Mycobacterium tuberculosis) |
நுரையீரல் | நீர்த்திவலைகள் வழித் தொற்று | மூக்கின் வழியாக அடர் கோழை வெளியேற்றம் |
20.
நன்மைகள்:
(i) மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு நன்மை பயக்கின்றது. மருத்துவத் துறையில் புரதங்கள் மற்றும் மருந்துகள் உற்பத்திக்கு உதவுகின்றது.
(ii) தண்டு செல் ஆராய்ச்சிக்கு வழிகோலுகிறது.
பாதகங்கள்:
(i) விலங்கு மற்றும் மனித செயல் முனைவோர் நகலாக்கம் என்பது உயிரிய பல்வகைமைக்கான சவாலானது எனக் கருதுகின்றனர். இச்செயல் பரிணாமத்தை மாற்றி இனத்தொகை மற்றும் சூழ்நிலை மண்டலத்தில் தாக்கத்தை உண்டாக்கும் என்று கருதுகின்றனர்.
(ii) நகலாக்க செயல்முறை கடினமானது மற்றும் விலையுயர்ந்தது.
(iii) இச்செயலால் விலங்குகள் பாதிப்படையும்
(iv) வாடகைத்தாய் உயிரிகள், எதிர்மறையாகி கேடுகளுக்கு ஆட்படுவதுடன் நகலாக்க விலங்குகள் நோய் பாதிப்புக்கு உட்பட்டு உயர் இறப்பு வீதம் ஏற்படுகின்றது.
(v) நகலாக்க விலங்குகளின் இறைச்சியை உண்பதால் உடல் நலனில் சமரசம் செய்ய வேண்டியுள்ளது.
(vi) இயல்பான விலங்குகளை விட நகலாக்க விலங்குகள் விரைவாக மூப்படைவதால் பெற்றோர் உயிரியை விட குறைந்த நலமுடையனவாக உள்ளன.
(vii) 90% மேற்பட்ட நகலாக்க விலங்குகள் சந்ததியை உருவாக்க இயலாத மலட்டுயிரிகளாகின்றன.
21.
மறுசேர்க்கை தடுப்பூசிகள்:
வழக்கமான நடைமுறைகளில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது, மறுசேர்க்கைத் தடுப்பூசிகள் சீரான தரத்துடன் குறைவான பக்க விளைவுகளைக் கொண்டுள்ளன. மறுசேர்க்கைத் தடுப்பூசிகளின் பல்வேறு வகைகளாவன.
(i) துணை அலகு தடுப்பூசிகள்
(ii) வலு குறைக்கப்பட்ட மறுசேர்க்கைத் தடுப்பூசிகள்
துணை அலகு தடுப்பூசிகள்:
(i) நோயுண்டாக்கும் உயிரியை, முழு உயிரியாகப் பயன்படுத்தாமல், அவ்வுயிரியின் பகுதிகளை மட்டும் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு 'துணை அலகு தடுப்பூசிகள்' என்று பெயர்.
(ii) புதிய வகை துணை அலகு தடுப்பூசிகள் தயாரிக்க டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில் நுட்பம் ஏற்றதாகும்.
(iii) இம்முறையில் நோயுண்டாக்கும் உயிரியிலுள்ள புரதங்கள், பெப்டைடுகள் மற்றும் அவற்றின் டி.என்.ஏக்கள் ஆகிய கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன.
(iv) தயாரிப்பில் தூய்மை, நிலைப்புத்தன்மை மற்றும் பாதுகாப்பான பயன்பாடு ஆகியவை இவ்வகைத் தடுப்பூசிகளின் நன்மைகளாகும்.
வலு குறைக்கப்பட்ட மறுசேர்க்கை தடுப்பூசிகள்:
(i) மரபியல்பு மாற்றப்பட்ட நோயுண்டாக்கி உயிரிகளில் அவற்றின் நோயுண்டாகும் தன்மை நீக்கப்பட்டு தடுப்பூசிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பாக்டீரியா அல்லது வைரஸ்களை மரபுப் பொறியியல் மாற்றம் மூலம் உயிருள்ள தடுப்பூசிகளாகப் பயன்படுத்தலாம். இத்தகைய தடுப்பூசிகள் 'வலு குறைக்கப்பட்ட மறுசேர்க்கைத் தடுப்பூசிகள்' எனப்படும்.
22.
அ) புரூயர்ஸ் ஈஸ்ட்:
சாக்ரோமைசஸ் செரிவிசியே பொதுவாக புரூயரின் ஈஸ்ட் என அழைக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி மால்ட் அல்லது மாவு நிறைந்த தானியங்கள் மற்றும் பழரசம் போன்றவற்றை நொதிக்கச் செய்து பல்வேறு மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன.
பீர்: சாக்ரோமைசஸ் கார்ல்பெர்ஜென்சிஸ் (அ) சாக்ரோமைசஸ் செரிவிசியே ஆகியவை முளைக்கட்டிய பார்லி மால்ட் தானியங்களை பீராக மாற்றுகிறது.
ரம்: சாக்ரோமைசெஸ் செரிவிசியே மூலம் நொதிக்க வைக்கப்பட்ட சர்க்கரை (அ) கரும்பு சாற்றிலிருந்து நேரடியாக ரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
விஸ்கி: ஒரு வகையான காய்ச்சி வடிகட்டிய மதுபானமாகும். இது சாக்ரோமைசஸ் செரிவிசியே மூலம் நொதிக்க வைக்கப்பட்ட தானிய கூழ் மூலம் உருவாக்கப்படுகிறது.
ஆ) இடியோனெல்லா சாக்கையன்சிஸ்:
1. தற்பொழுது PET நெகிழிகளை மறுசுழற்சி செய்யும் பணியில் இது ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
2. இந்த பாக்டீரியா PETase மற்றும் MHETase நொதிகளின் துணையுடன் நெகிழிகளை டெரிப்த்தாலிக் அமிலம் மற்றும் எத்திலீன் கிளைக்காலாக சிதைக்கின்றது.
இ) நுண்ணுயிரிய எரிபொருள் கலன்கள்:
1. கரிம மூலக்கூறுகளை ஆக்சிஜனேற்றம் மற்றும் ஒடுக்க வினைக்கு ஆட்படுத்த பாக்டீரியாக்களை அனுமதிப்பதன் மூலம் நுண்ணுயிரிய எரிபொருள் கலன் இயங்குகிறது.
2. பாக்டீரியாக்களை பயன்படுத்தி அதனிடையே இயற்கையாக நடைபெறும் இடைவினைகளை, ஒப்புப் போலியாக்கி மின்சாரம் பெறும் உயிரிய மின் வேதியியல் முறையாகும்.
3. பாக்டீரியாக்களின் சுவாசம் ஒரு பெரிய ஆக்சிஜனேற்றம் ஒடுக்க வினையாகும்.
4. நுண்ணுயிரிய எரிபொருள் கலனில் ஒரு நேர்மின் வாய் மற்றும் ஒரு எதிர்மின்வாய் ஆகியன இருக்கும்
5. இவை எலக்ட்ரான்கள் சுழலும் போது புரோட்டான் பரிமாற்ற சவ்வின் மூலம் பிரிக்கப்படுகிறது.
6. நேர்மின்வாய் முனையில் இருக்கும் நுண்ணுயிரிகள் கரிம எரிபொருள்களுடன் ஆக்சிஜனேற்றம் செய்யும் போது புரோட்டான்கள் வெளியேறி எதிர்மின்வாயை அடைகின்றன.
7. அதே நேரம் நேர்மின்வாய் வழியாக எலக்ட்ரான்கள் புற சுற்றை அடைந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
23.
(a)
வயிற்றில் இருக்கும் ஒரு பாக்டீரியா
24.
(b)
பீர்
25.
(b)
பெனிசிலின்
26.
(d)
மலேரியா - ஏடிஸ் கொசு
27.
(c)
பாக்டீரியாக்கள்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards