12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/10/2025
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test

1.
rDNA தொழில்நுட்ப வருகைக்கு முன் இன்சுலின் எவ்வாறு பெறப்பட்டது? எத்தகைய பிரச்சனைகள் எதிர்கொள்ளப்பட்டன?
2.
ரோஸி எவ்வாறு இயல்பான பசுவினின்று வேறுபடுகின்றது என்பதை விளக்குக.
3.
மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட இன்சுலின் என்பது யாது?
4.
பாலிமரேஸ் சங்கிலி வினையைப் பயன்படுத்தி விரும்பிய மாதிரியில் எவ்வாறு மரபணு பெருக்கம் செய்யப்படுகின்றது?
5.
PCR-ன் ஒவ்வொரு சுற்றிலும் எத்தனை முன்னோடிகள் தேவைப்படுகின்றன? PCRல் மற்றும் டி.என்.ஏ பாலிமரேஸ் பங்கு யாது? PCR சுற்றில் பயன்படுத்தப்படும் டி.என்.ஏ பாலிமரேஸ் எந்த உயிரின மூலத்திலிருந்து பெறப்படுகின்றது?
6.
7.
வேறுபடுத்துக – வார்ப்புரு இழை மற்றும் குறியீட்டு இழை
8.
முதன்மை இழை மற்றும் பின்தங்கும் இழை – வேறுபடுத்துக.
9.
மூலச் செல்கள் என்பன யாவை? மருத்துவத்துறையில் அதன் பங்கை விளக்குக.
10.
உடல்செல் மரபணு சிகிச்சை, மற்றும் இனச்செல் மரபணு சிகிச்சை வேறுபடுத்துக
11.
டி.என்.ஏ தடுப்பூசிகள் என்பன யாவை?
12.
ஒருவர் பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாக தனக்கு HIV தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணி இரத்தப் பரிசோதனைக்குச் செல்கின்றார். எலைசா பரிசோதனை உதவி புரியுமா? ஆம் எனில் எப்படி? இல்லை எனில் ஏன்?
13.
மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் என்பன யாவை? எடுத்துக்காட்டுகள் தருக
14.
கீழ்க்கண்ட குறியீடுகளை இனங்கண்டறியும் எதிர்குறியீடுகளை எழுதுக.
AAU, CGA, UAU மற்றும் GCA
15.
ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ ஆகியவற்றுக்கிடையே உள்ள அமைப்பு சார்ந்த வேறுபாடுகள் மூன்றினைக் குறிப்பிடுக.
16.
மனித மரபணுத் திட்டம் ஏன் மகாதிட்டம் என அழைக்கப்படுகிறது.
17.
தாழ்நிலை ‘லாக் ஓபரான்’ வெளிப்பாடு எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது. இக் கூற்றை நியாயப்படுத்துக.
18.
மனித ஜுனோம் திட்டம் பல்வேறு மரபு நோய்களின் சிகிச்சைக்கு வழிவகுக்கிறது. இக்கூற்றை நியாயப்படுத்துக.
19.
மறுசேர்க்கை இன்சுலின் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது என்பதை விளக்குக.
20.
நகலாக்கத்தில் சாதக, பாதகங்களை குறிப்பிடுக.
21.
மறுசேர்க்கை தடுப்பூசிகள் என்பன யாவை? வகைகளை விளக்குக.
22.
பாலிமரேஸ் சங்கிலி வினை, தொற்று நோயை ஆரம்பகாலத்தில் கண்டறியப் பயன்படும் ஒரு சிறந்த கருவியாகும் எனும் கருத்தை விரிவாக்கம் செய்க.
23.
முதன் முதலாக உருவான மரபுப்பொருள் ஆர்.என்.ஏ தான் என நிரூபிக்கப்பட்டுள்ளது - காரணங்களுடன் நிரூபிக்க.
24.
நியூக்ளியோசோம் உருவாகும் முறையை விவரி.
1.
(i) முற்காலத்தில் பன்றிகள் மற்றும் பசுக்களின் கணையங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பெறப்பட்டது.
(ii) விலங்கு இன்சுலினுக்கு மனித இன்சுலினுக்கும் சிறிய அளவில் வேறுபாடுகள் இருந்தால், சில நோயாளிகளில் இது ஒவ்வாமையை ஏற்படுத்தியது.
2.
(i) 1997ல் முதன் முதலில் ரோஸி எனும் மரபியல்பு மாற்றப்பட்ட பசு உருவாக்கப்பட்டது.
(ii) இப்பசுவின் பால், மனித லேக்டால்புமின் கொண்ட புரதச் செறிவு மிக பாலாகக் காணப்பட்டது.
(iii) சாதாரண பசுவின் பாலை விட, புரதம் செறிந்த இப்பசும்பாலானது பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்ற உணவூட்டம் மிக்க ஒரு சரிவிகித உணவாகும்.
3.
(i) டி.என்.ஏ மறுசேர்க்கை தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டு மனிதனுள் செலுத்தப்பட்ட முதல் மருந்துப்பொருள் இன்சுலின் ஆகும்.
(ii) 1982 ம் ஆண்டு சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதற்காக இந்த இன்சுலினைப் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது.
(iii) 1986 ல் ஹியுமுலின் என்னும் வணிகப் பெயரோடு சந்தையில் மனித இன்சுலின் விற்பனை செய்யப்பட்டது.
4.
(i) இது இயல்புதிரிபு உற்பத்தி நீட்சி ஆகிய மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.
(ii) அதிக வெப்பநிலையை பயன்படுத்தி நமக்கு தேவைப்படும் இரட்டைச் சுருள் டி.என்.ஏ வின் இயல்பைத் திரித்து இரண்டு தனித்தனியான இழைகளாகப் பிரிக்கப்படுகிறது. இவை 95o C வெப்ப நிலையில் நடைபெறுகிறது.
(iii) முதன்மை இணைப்பு இழையின் நீட்சி அல்லது உருவாக்கத்தின் போது கலவையின் வெப்ப நிலை 75o C-க்கு உயர்த்தப்பட்டு போதுமான கால அளவிற்கு நிலை நிறுத்தப்படுகிறது.
(iv) இதனால் Tag டி.என்.ஏ பாலிமரேஸ் தனித்த அச்சு வார்ப்பு டி.என்.ஏ விலிருந்து நகலெடுக்கப்பட்டு முதன்மை இணைப்பு இழை நீட்சியடையச் செய்கிறது.
(v) அடைகாப்புக் காலத்தின் இறுதியில் இரு அச்சு வார்ப்பு இழைகளும் பகுதியளவு இரட்டைச் சுருள் இழைகளாக மாற்றப்படும்.
(vi) இவ்வாறு உருவாகும் இரட்டைச் சுருள்களிலுள்ள ஒவ்வொரு புது இழையும் கீழ் நோக்கிய வேறுபட்ட தொலைவுகளில் நீண்டு காணப்படும்.
5.
PCR ன் ஒவ்வொரு சுற்றிலும் இரண்டு முன்னோடிகள் தேவைப்படுகின்றன. அவையாவன முன்னோக்கு மற்றும் பின்னோக்கு முன்னோடிகள்.
PCR ல் டி.என்.ஏ பாலிமரேஸின் பங்கு:
PCR ல் முதன்மை இணைப்பு அச்சு வார்ப்பு இழையைக் கொண்டு Taq டி.என்.ஏ பாலிமரேஸைப் பயன்படுத்தி டி.என்.ஏ உருவாக்கப்படுகிறது.
டி.என்.ஏ பாலிமரேஸ் நொதியின் மூலம்:
கொதிநிலையில் வாழும் பாக்டீரியா தெர்மசு அக்குவாட்டிக்கசில் இருந்து பெறப்படுகிறது.
6.
7.
| வார்ப்புரு இழை | குறியீட்டு இழை | |
| 1 | இவ்விழை mRNA உருவாக்கத்திற்கு வார்ப்பாக செயல்படுகிறது. | இது வார்ப்புரு பணியைச் செய்வதில்லை |
| 2 | இதன் நைட்ரஜன் காரங்கள் mRNA இழைக்கு ஈடான இழைகளை உருவாக்குகிறது. | இதன் நைட்ரஜன் காரங்கள் அப்படியே mRNA இழையில் காணப்படுவதேயாகும். |
| 3 | இது 3' ⟶ 5' திசையில் கொண்டது | இது 5' ⟶ 3' திசையில் கொண்டது |
8.
| முதன்மை இழை | பின்தங்கும் இழை | |
| 1 | இது தொடர் இழை (அ) வழிகாட்டு இழை எனப்படும். இது 3' ⟶ 5' திசை கொண்ட வார்ப்புரு இழையில் இரட்டிப்பதால் - தொடர்ச்சியாக நடைபெறும். | மற்றொரு 5' ⟶ 3' திசை கொண்ட இழையின் இரட்டிப்பதால் தொடர்ச்சியற்றதாகும். இது பின்தங்கும் இழை எனப்படும். |
| 2 | DNA லிகேஸ் நொதி தேவைப்படுவதில்லை | தொடர்ச்சியற்ற புதிய துண்டங்களை DNA - லிகேஸ் நொதி ஒன்றிணைக்கின்றது. |
| 3 | உருவாக்கம் 5' ⟶ 3' திசையில் நடைபெறுகிறது. வார்ப்புரு இழையின் திசை 3' ⟶ 5' ஆகும் | இதன் திசை 5' ⟶ 3' ஆயினும் ஒட்டு மொத்த வார்ப்புரு இழையின் திசை 3' ⟶ 5' ஆகும். |
9.
தண்டு செல்கள்:
(i) பெரும்பாலான பல செல் உயிரிகளில் காணப்படும் வேறுபாடு அடையாத செல்கள் ‘மூலச் செல்கள்/குருத்தணுக்கள்/ஆதார செல்கள்/'தண்டு செல்கள்' ஆகும். இவை பல மறைமுகப் பிரிவுகளுக்கு உட்பட்டாலும் தங்களது வேறுபாடு அடையாத் தன்மையைத் தொடர்ந்து பராமரித்து வருகின்றன.
மருத்துவத் துறையில் அதன் பங்கு:
(i) சேதமுற்ற மற்றும் நோயுள்ள உறுப்புகளை மீண்டும் உருவாக்கி எதிர்கால மருத்துவத்துறையில் புரட்சி படைக்க தேவையான திறனுடன் மூலச் செல் ஆராய்ச்சிகள் விளங்குகின்றன.
(ii) தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இயல்புடைய மூலச் செல்கள் 'செல் திறனை' வெளிப்படுத்துகின்றன.
(iii) மூன்று வகை வளர்ச்சி அடுக்குகளான புற அடுக்கு, அக அடுக்கு மற்றும் நடு அடுக்கு ஆகிய அடுக்குகளிலிருந்து உருவாகும் அனைத்து வகை செல்களாகவும் மாறும் திறன் படைத்தவை மூலச் செல்களாகும்.
(iv) பாலூட்டிகளில் இரு முக்கிய மூலச் செல் வகைகள் காணப்படுகின்றன. அவை 'கருநிலை மூலச் செல்கள்' மற்றும் 'முதிர் மூலச் செல்கள்'. கருநிலை மூலச் செல்கள் பகுதித் திறன் கொண்டவை. அவற்றிற்கு புற அடுக்கு, நடு அடுக்கு மற்றும் அக அடுக்கு என்னும் மூன்று அடிப்படை வளர்ச்சி அடுக்குகளையும் உருவாக்கும் திறன் உள்ளது.
(v) கருநிலை செல்கள் பல்திறன் கொண்டவையாகவும் விளங்குகின்றன. அவை, பல்வகையான செல்களாக மாற்றமுறும் திறன் படைத்தவை. கருக்கோளத்தினுள் காணப்படும் செல்திரளின் மேற்பகுதி திசுக்களில் இருந்து கருநிலை மூலச் செல்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
(vi) கருநிலை மூலச் செல்கள் தூண்டப்படும்போது 200க்கும் மேற்பட்ட முதிர்ந்த உடலின் செல் வகைகளாக மாற்றமடையக்கூடும்.
(vii) கருநிலை மூலச் செல்கள் அழிவற்றவை. அதாவது கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊடகத்தில் அவை நன்கு வளர்ந்து தங்களது வேறுபடா நிலையைத் தொடர்ந்து பராமரிக்கவும் செய்கின்றன.
(viii) குழந்தைகள் மற்றும் முதிர்ந்த மனிதர்களின் பல்வேறு திசுக்களில் முதிர் மூலச் செல்கள் காணப்படுகின்றன. முதிர் மூலச் செல் அல்லது உடல் மூலச் செல் பிரிதலடைந்து தன்னைப் போன்றே மற்றொரு செல்லை உருவாக்க இயலும். பெரும்பாலான முதிர் மூலச் செல்கள் பல்திறன் கொண்டவை. இவை உடலின் சேதமுற்ற பாகங்களைச் சரி செய்யும் அமைப்பாகவும் முதிர் உயிரி திசுக்களைப் புதுப்பிக்கும் அமைப்பாகவும் திகழ்கின்றன. முதிர் மூலச் செல்களின் அதிகப்படியான உற்பத்திக்கு மூலாதாரமாக சிவப்பு மஜ்ஜை விளங்குகிறது.
(ix) மனித மூலச் செல்களின் மிக முக்கியமான திறன் வாய்ந்த பயன்பாடு என்னவெனில் செல் அடிப்படையிலான சிகிச்சைகளுக்குப் பயன்படும் செல்களையும் திசுக்களையும் உற்பத்தி செய்தல் ஆகும். மனித தண்டு செல்கள் புதிய மருந்துகளைச் சோதனை செய்து பார்க்க உதவுகின்றன.
10.
| உடற்செல் மரபணு சிகிச்சை | இனச்செல் மரபணு சிகிச்சை | |
|---|---|---|
| 1 | சிகிச்சையளிக்கும் மரபணுக்கள் உடற்செல்களுக்குள் மாற்றப்படுகின்றன. | சிகிச்சையளிக்கும் மரபணுக்கள் இனச்செல்களுக்குள் மாற்றப்படுகின்றன. |
| 2 | எலும்பு மஜ்ஜை செல்கள் இரத்த செல்கள், தோல் செல்கள் போன்ற செல்களுக்குள் மரபணுக்கள் செலுத்தப்படுகிறது. | அண்ட செல்கள் மற்றும் விந்து செல்களுக்குள் மரபணுக்கள் செலுத்தப்படுகின்றன. |
| 3 | பிந்தைய தலைமுறைக்கு பண்புகள் கடத்தப்படுவதில்லை. | பிந்தைய தலைமுறைக்கு பண்புகள் கடத்தப்படுகின்றன. |
11.
டி.என்.ஏ தடுப்பூசிகளை மரபியல் நோய்த்தடுப்பு முறையாகப் பயன்படுத்தும் ஒரு புதிய அணுகு முறை 1990 ல் நடைமுறைக்கு வந்தது.
டி.என்.ஏ மூலக்கூறுகள் மூலம் உடலில் தடைகாப்பு வினைகள் தூண்டப்படுகின்றன.
எதிர்ப்பொருள் தூண்டி புரதத்திற்கு குறியீடு செய்யும் ஒரு மரபணுவை டி.என்.ஏ தடுப்பூசி கொண்டுள்ளது.
இந்த மரபணுவை ஒரு பிளாஸ்மிட்டுக்குள் செலுத்தி பின்னர் ஒரு இலக்கு விலங்கின் உடல் செல்களுக்குள் ஒன்றிணையச் செய்யப்படுகிறது.
உள்ளே சென்ற அந்த டி.என்.ஏ எதிர்ப்பொருள் தூண்டி மூலக்கூறுகளை உருவாக்க செல்களுக்கு உத்தரவிடுகிறது. அவ்விதம் உருவாக்கப்பட்ட மூலக்கூறுகள் செல்களுக்கு வெளியே காணப்படுகின்றன.
செல்களால் உருவாக்கப்பட்டு சுதந்திரமான மிதந்து கொண்டிருக்கும் இம்மூலக்கூறைக் காணும் நமது தடைக்காப்பு, தனது வலுவான எதிர்ப்பை, எதிர்ப்பொருள் உருவாக்கத்தின் மூலம் தெரிவிக்கிறது.
டி.என்.ஏ தடுப்பூசியால் நோயை உருவாக்க இயலாது. ஏனெனில், இது நோயுண்டாக்கும் மரபணுவின் ஒரு பகுதி நகல்களைக் கொண்டுள்ளது.
வடிவமைக்கவும், மலிவாக உற்பத்தி செய்யவும் டி.என்.ஏ தடுப்பூசிகள் எளிதானவை.
இவ்வாறு புதிய தொழில்நுட்ப முறைகளின் மூலம் உருவாக்கப்படும் தடுப்பூசிகள் உறுதியான பல நன்மைகளைக் கொண்டுள்ளன. அவையாவன: இலக்கு புரத உற்பத்தி, நீண்டு நிலைக்கும் நோய்த் தடைகாப்பு மற்றும் குறிப்பிட்ட நோயுண்டாக்கிகளுக்கு எதிரான தடைகாப்பு வினைகளை குறைந்த நச்சு விளைவுகளுடன் விரைவாகத் தூண்டுதல் ஆகியன.
12.
(i) ஆம், ஏனெனில் ELISA என்பது HIV நோய் வைரஸினைக் கண்டறிய உதவும் முதல் படிநிலை முறையாகும்.
(ii) நோயூக்கிக்கான HIV தொற்று கொண்ட நபரின் உடலில் உற்பத்தியாகும் எதிர்ப்பொருளின் அளவை வைத்து கண்டறியப்படுகிறது.
13.
(i) உயிரிகளின் மரபணுத் தொகுதிகள் புதிய மிகைப்படியான டி.என்.ஏ க்களை நுழைத்து நிலையான மரபியல் மாற்றங்களை விரும்பிய வண்ணம் தோற்றுவிக்கும் முறைக்கு மரபணு மாற்றம் என்றும், இதனால் தோற்றுவிக்கப்படும் விலங்குகளை மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
(ii) எ.கா. சுண்டெலி, எலி, முயல், பன்றி, பசு, வெள்ளாடு, செம்மறியாடு, மற்றும் மீன்.
14.
15.
| பண்பு | RNA | DNA | |
| 1 | இழைகள் | ஓரிழையானது | இரண்டு இழைகளால் ஆனது விதிவிலக்கு - சில DNA வைரஸ்கள் |
| 2 | சர்க்கரை | ரிபோஸ் சர்க்கரை | டி - ஆக்சிரைபோஸ் சர்க்கரை |
| 3 | நைட்ரஜன் காரங்கள் | அடினைன், குவானைன் யூராசில் மற்றும் சைட்டோசின் | அடினைன், குவானைன் தயமின் மற்றும் யூராசில் |
16.
காலம்:
மனித மரபணு திட்டம் 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது நிறைவுற 13 ஆண்டுகளானது.
அளவு:
1. இது வரை வரிசைப்படுத்தப்பட்ட உயிரினங்களை விட மனித ஜீனோம் 25 மடங்கு பெரியது.
2. முதன் முதலில் நிறைவு செய்யப்பட்ட முதுகெலும்பி மரபணு மனிதனுடையதாகும்
3. இதில் 3 X 109 கார இணைவுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தரவு சேமிப்பு மற்றும் பயன்பாடு:
1. மனித ஒரு செல்லின் மரபணு தரவுகள் சேமிக்க ஏறத்தாழ 3300 புத்தகங்கள் தேவை (1000 எழுத்துகள் 1000 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம்)
2. இவைகளை சேமிக்க, பெற, ஆய்வு செய்ய, அதிநவீன கணினி அமைப்புகள் தேவை.
பயோ - இன்ஃபர்மேடிக்ஸ்:
உயிரியலில் இந்த புதிய பிரிவு, கணினி அறிவையும், தொழில்நுட்பத்தையும், மனித மரபணு சார்ந்த தரவுகளை நிர்வகிக்க, ஆய்வுகளை செய்ய பயன்படுத்துகிறது.
இது போன்ற பல்வேறு தன்மைகளாலே மனித மரபணு திட்டம் (Human Genome Project) ஒரு மகா திட்டமாக கருதப்படுகிறது.
17.
1. வெளி ஊடகத்திலிருக்கும் லாக்டோஸ் பாக்டீரியா செல்லினுள் நுழைய பெர்மியோஸ் நொதி தேவைப்படுகிறது
2. லாக்டோஸ் செல்லினுள் நுழைய இயலவில்லை எனில் அது தூண்டியாக செயல்பட இயலாது.
3. அது லாக் - ஓபரானை தடுக்கும் அடக்கிப் புரதத்துடன் இணைந்து அதனை செயலற்றதாக்குகிறது லாக் ஓபரான் - செயல்பட தொடங்குகிறது.
4. எனவே லாக் ஒபரானின் தாழ் நிலை வெளிப்பாடு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது.. அதனால் பல்வேறு மரபினோய் சிகிச்சைக்கும் பயன்படுகிறது.
18.
மனித மரபணு 3 பில்லியன் நியூக்ளியோடைடு கார மூலங்களைக் கொண்டுள்ளது.
மரபணு சராசரியாக 3000 கார மூலங்களைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய மனித மரபணு, டிஸ்ட்ரோஃபின் 2.4 மில்லியன் கார மூலங்களைக் கொண்டுள்ளது.
மரபணுக்கள் 24 குரோமோசோம்களில் பரவியுள்ளது. 19 வது குரோமோசோம் அதிக மரபணு அடர்வினைக் கொண்டுள்ளது. 13 மற்றும் Y குரோமோசோம் ஆகியவை மிகக் குறைந்த மரபணு அடர்வினைக் கொண்டுள்ளன.
மனித குரோமோசோம் அமைப்பில் மரபணுக்கள் பல்வகைத் தன்மையைக் காட்டுகின்றன.
மரபணு தொகுதியில் 4000-35000 மரபணுக்கள் இருந்தாலும், ஏறக்குறை 99.9 நியூக்ளியோடைடு கார மூலங்கள் அனைத்து மக்களிடமும் ஒரே மாதிரியாக உள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட மரபணுக்களில் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மரபணுக்களின் பணிகள் தெரியவில்லை.
2 விழுக்காட்டிற்கும் குறைவான மரபணுக்கள் மட்டுமே புரதங்களை குறியீடு செய்கின்றன.
திரும்ப திரும்ப காணப்படும் வரிசைகள் மனித மரபணுவில் மிகப் பெரிய பகுதியை உருவாக்குகிறது. இந்த வரிசைகள் நேரடியாக குறியீட்டு செயல்களில் பங்கேற்பதில்லை. ஆனால், குரோமோசோமின் அமைப்பு, செயல் மற்றும் பரிமாணத்தைத் தீர்மானிக்கிறது.
1 வது குரோமோசோம் 2968 மரபணுக்களை கொண்டுள்ளது. அதேபோல் Y குரோமோசோம் 231 மரபணுக்களை கொண்டுள்ளது.
மனிதனில் பல்வேறுபட்ட ஒற்றை கார மூல டி.என்.ஏக்கள் 1.4 மில்லியன் இடங்களை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
(SNPs - Single Nucleotide Polymorphisms - ஒற்றை நியூக்ளியோடைடு பல்லுருவமைப்பு - இது SNIPS என உச்சரிக்கப்படுகிறது.
SNIPS ஐ கண்டறிதல், நோய்களுடன் தொடர்புடைய வரிசைக்கான குரோமோசோம் இடங்களைக் கண்டுபிடித்தல் மற்றும் மனித வரலாற்றை தேடவும் உதவி புரிகிறது.
19.
டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில்நுட்பத்தால் இன்சுலினை உற்பத்தி செய்யும் முறை 1970 களின் பிற்பகுதியில் துவங்கப்பட்டது.
இத்தொழில் நுட்பத்தில், மனித இன்சுலினுக்கான மரபணு, எ.கோலையின் பிளாஸ்மிட்டினுள் நுழைக்கப்படுகிறது. ஒரு தலைமை வரிசையை முன்புறம் கொண்டு அதைத் தொடர்ந்த A மற்றும் B துண்டங்கள் மற்றும் அவற்றை இணைக்கும் 'C' என்னும் மூன்றாவது சங்கிலி ஆகியவற்றால் ஆன முன்னோடி பாலிபெப்டைடு சங்கிலியாக முதன்மை முன்னோடி இன்சுலின் உருவாகிறது.
மொழி பெயர்ப்புக்குப் பின் C சங்கிலியும் வெட்டப்பட்டு நீக்கப்படுவதால், A மற்றும் B சங்கிலிகள் மட்டும் எஞ்சுகின்றன.
டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு மனிதனுள் செலுத்தப்பட்ட முதல் மருந்துப்பொருள் இன்சுலின் ஆகும்.
20.
நன்மைகள்:
(i) மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு நன்மை பயக்கின்றது. மருத்துவத் துறையில் புரதங்கள் மற்றும் மருந்துகள் உற்பத்திக்கு உதவுகின்றது.
(ii) தண்டு செல் ஆராய்ச்சிக்கு வழிகோலுகிறது.
பாதகங்கள்:
(i) விலங்கு மற்றும் மனித செயல் முனைவோர் நகலாக்கம் என்பது உயிரிய பல்வகைமைக்கான சவாலானது எனக் கருதுகின்றனர். இச்செயல் பரிணாமத்தை மாற்றி இனத்தொகை மற்றும் சூழ்நிலை மண்டலத்தில் தாக்கத்தை உண்டாக்கும் என்று கருதுகின்றனர்.
(ii) நகலாக்க செயல்முறை கடினமானது மற்றும் விலையுயர்ந்தது.
(iii) இச்செயலால் விலங்குகள் பாதிப்படையும்
(iv) வாடகைத்தாய் உயிரிகள், எதிர்மறையாகி கேடுகளுக்கு ஆட்படுவதுடன் நகலாக்க விலங்குகள் நோய் பாதிப்புக்கு உட்பட்டு உயர் இறப்பு வீதம் ஏற்படுகின்றது.
(v) நகலாக்க விலங்குகளின் இறைச்சியை உண்பதால் உடல் நலனில் சமரசம் செய்ய வேண்டியுள்ளது.
(vi) இயல்பான விலங்குகளை விட நகலாக்க விலங்குகள் விரைவாக மூப்படைவதால் பெற்றோர் உயிரியை விட குறைந்த நலமுடையனவாக உள்ளன.
(vii) 90% மேற்பட்ட நகலாக்க விலங்குகள் சந்ததியை உருவாக்க இயலாத மலட்டுயிரிகளாகின்றன.
21.
மறுசேர்க்கை தடுப்பூசிகள்:
வழக்கமான நடைமுறைகளில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது, மறுசேர்க்கைத் தடுப்பூசிகள் சீரான தரத்துடன் குறைவான பக்க விளைவுகளைக் கொண்டுள்ளன. மறுசேர்க்கைத் தடுப்பூசிகளின் பல்வேறு வகைகளாவன.
(i) துணை அலகு தடுப்பூசிகள்
(ii) வலு குறைக்கப்பட்ட மறுசேர்க்கைத் தடுப்பூசிகள்
துணை அலகு தடுப்பூசிகள்:
(i) நோயுண்டாக்கும் உயிரியை, முழு உயிரியாகப் பயன்படுத்தாமல், அவ்வுயிரியின் பகுதிகளை மட்டும் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு 'துணை அலகு தடுப்பூசிகள்' என்று பெயர்.
(ii) புதிய வகை துணை அலகு தடுப்பூசிகள் தயாரிக்க டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில் நுட்பம் ஏற்றதாகும்.
(iii) இம்முறையில் நோயுண்டாக்கும் உயிரியிலுள்ள புரதங்கள், பெப்டைடுகள் மற்றும் அவற்றின் டி.என்.ஏக்கள் ஆகிய கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன.
(iv) தயாரிப்பில் தூய்மை, நிலைப்புத்தன்மை மற்றும் பாதுகாப்பான பயன்பாடு ஆகியவை இவ்வகைத் தடுப்பூசிகளின் நன்மைகளாகும்.
வலு குறைக்கப்பட்ட மறுசேர்க்கை தடுப்பூசிகள்:
(i) மரபியல்பு மாற்றப்பட்ட நோயுண்டாக்கி உயிரிகளில் அவற்றின் நோயுண்டாகும் தன்மை நீக்கப்பட்டு தடுப்பூசிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பாக்டீரியா அல்லது வைரஸ்களை மரபுப் பொறியியல் மாற்றம் மூலம் உயிருள்ள தடுப்பூசிகளாகப் பயன்படுத்தலாம். இத்தகைய தடுப்பூசிகள் 'வலு குறைக்கப்பட்ட மறுசேர்க்கைத் தடுப்பூசிகள்' எனப்படும்.
22.
(i) மரபியக் குறைபாடுகள், வைரஸ் நோய்கள், பாக்டீரிய நோய்கள் போன்றவற்றைக் கண்டறிய PCR ன் இலக்குத் தன்மை மற்றும் உணர்திறன் மிகவும் பயன்படுகிறது.
(ii) தொற்று நோய்களை கண்டறிய PCR அடிப்படையிலான ஆய்வு எளிதானதாகும். ஒரு ஆய்வக மாதிரியில் ஒரு நோயூக்கி காணப்பட்டால் நிச்சயமாக அதன் டி.என்.ஏ வும் காணப்படும்.
(iii) PCR முறை மூலம் அவற்றின் தனித்துவமான DNA வரிசைகள் கண்டறியப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இரத்தம், மலம், தண்டுவட திரவம், சளி போன்ற மருத்துவ மாதிரிகளில் PCR முறைப்படி பரிசோதிப்பதன் மூலம் நோய் வகைகளைக் கண்டறியலாம்.
(iv) PCR மூலம் கண்டறியப்படும் cDNA வானது ரெட்ரோவைரஸ் தொற்றுகளைக் கண்டறியவும் கண்காணிக்கவும் உதவும் ஒரு மதிப்பு மிகுந்த கருவியாகும்.
(v) PCR முறை மூலம் பாப்பிலோமோ வைரஸால் தோற்றுவிக்கப்படும் கருப்பை வாய்ப்புற்று நோய் போன்ற வைரஸ்களால் தூண்டப்படும் புற்று நோய்களைக் கண்டறிய இயலும்.
23.
அளவு: ஒரு மாதிரி செல் ஒன்றுக்குள் DNA வை விட பத்து மடங்கு அதிக அளவில் RNA உள்ளது.
பணிகள்: பரந்துப்பட்ட பல பணிகளை மேற்கொள்கிறது. (வளர்சிதை மாற்றம் மொழியாக்கம், பிளவுறுதல் போன்ற இன்னபிற)
சான்றுகள்:
1. ஃபிரன்கெல் - கான்ராட் & சிங்கர் (1957) ஆகியோர் (TMV) புகையிலை மொசைக் வைரஸில் RNA மரபணுவாக உள்ளது என்று முதன்முதலாக கூறினார்.
2. TMV - விலிருந்து RNA வைப் பிரித்தெடுத்தார்.
3. லெஸ்லி ஆர்ஜெல், பிரான்சிஸ் பிரிக் மற்றும் கார்ல் வோயஸ் (மூன்று மூலக்கூறு அறிவியலாளர்கள்) பரிணாமத்தின் முதல் நிலையாக RNA உலகம் என அறிமுகப்படுத்தினார்கள்.
4. வால்டர் கில்பெர்ட் (1986) RNA உலகம் என்ற சொல்லை பயன்படுத்தினார்.
5.
என இரண்டாகவும் செயலாற்றக்கூடிய திறன் கொண்டதாக உள்ளது. வினையூக்கி RNA - ரிபோசைம் எனப்படும். வினையூக்கி என்பதால் RNA வின் நிலைப்புத் தன்மை குறைவு. எனவே முதல் மரபணுப்பொருள் என்பதும் DNA - RNA விலிருந்து பல மாற்றங்களுடன் பின் பரிணாம அடைந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
24.
1. குரோமோசோம் - குரோமேட்டினால் ஆனவை
2. குரோமேட்டின் ⟶ தொடர்ச்சியான மீள் தோன்று அலகுகளான நியூக்ளியோசோம்களால் உருவானது. கோர்ன்பெர்க் - நியூக்ளியோசோம் மாதிரி
3. இதில் H2A, H2B, H3 & H4 எனும் நான்கு ஹிஸ்டோன் புரதங்களின் இரண்டு மூலக்கூறுகள் வரிசையாக அமைந்து எட்டு மூலக்கூறுகளை உடைய அலகை உருவாக்குகின்றன. இதற்கு ஹிஸ்டோன் எண்மம் என்று பெயர்.
4. நேர்மின்தன்மை கொண்ட ஹிஸ்டோன் எண்மத்தை சுற்றி, எதிர்மறை தன்மை கொண்ட DNA உறையாக அமைந்து நியூக்ளியோசோமை உருவாக்குகிறது.
5. மாதிரி நியூக்ளியோசோம் ஒன்றில் - 200 கார இணைகள் உள்ளன
6. அடுத்தடுத்துள்ள நியூக்ளியோசோம்களை, நொதிகளின் உதவியுடன் இணைப்பு DNA க்கள் இணைக்கின்றன.
7. ஹிஸ்டோன் எண்மத்தை சுற்றி DNA இரு முழுமையான திருகுகளை உருவாக்கியுள்ளன.
8. இந்த திருகுகளை மூலக்கூறு H1 (இணைப்பு மூலக்கூறு) மூடுகிறது.
9. H1 இல்லாத நிலையில் குரோமேட்டின் மணிகோர்த்த மாலை போல் தெரிகிறது.
10. இவ்வமைப்பின் எந்த இடத்திலும் DNA உட்செல்லவும் நியூக்ளியோசோமை விட்டு வெளியேறவும் முடியும்.
11. நியூக்ளியோசோமின் மடிப்பிலிருந்து தோன்றும் நீளமுள்ள இழை - ஒரு சுற்றுக்கு ஆறு நியூக்ளியோசோமை கொண்ட வரிச்சுருளமைப்பை (Solenoid) உருவாக்குகிறது.
12. இது மேலும் மடிப்புற்று - குரோமேடின் இழைகளையும், குரோமேடின் இழை மேலும் மடிப்புற்று குரோமேடிடுகளையும், குரோமேடிடுகள் ⟶ குரோமோசோம்களாகின்றன.
13. உயர்நிலை குரோமேடின் பொதிவுக்கு ஹிஸ்டோனல்லாத குரோமோசோம் புரதங்கள் தேவைப்படுகின்றன.
| யூகுரோமேட்டின் | ஹெட்ரோகுரோமேட்டின் | |
| 1. | தளர்வாக பொதியப்பட்டுள்ளது | நெருக்கமாக பொதியப்பட்டுள்ளது |
| 2. | சாயமேற்காது | சாயமேற்கும் |
| 3. | படியெடுத்தலில் தீவிரமாக பங்கேற்கும் | படியெடுத்தலில் பங்கேற்காது |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards