12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/10/2025
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test

1.
ஜெம்மியூலின் உட்பகுதியில் உணவுப்பொருள் தாங்கிய செல்கள் _________ என அழைக்கப்படுகின்றன.
ஆர்க்கியோசைட்டுகள்
நுண் துளை
ஒற்றைக்கதிர் நுண்முட்கள்
'ஆ' மற்றும் 'இ'
2.
எந்த நோய் வெளிப்பட 10 ஆண்டுகள் ஆகும்?
AIDS
ஹெபாடிடிஸ் B
பிறப்புறுப்பு மரு
மேகப்புண்
3.
பாப் பூச்சு சோதனை மூலம் அறிவது
பிறப்புறுப்பு மரு
கருப்பை வாய் புற்று
மேகப்புண்
கேண்டிடியாசிஸ்
4.
ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல் வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது?
அண்ட நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல் மூலம்
FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்
FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தூண்டுவதன் மூலம்
அண்ட செல் விடுபட்டவுடன் அதனை உடனடியாக அழித்துவிடுவதன் மூலம்
5.
தவறான இணையைக் கண்டுபிடி
இரத்தப்போக்கு நிலை - ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் குறைதல்
நுண்பை செல்கள் ஃபாலிகுலார் நிலை – ஈஸ்ட்ரோஜன் அதிகரித்தல்
லூட்டியல் நிலை – FSH அளவு அதிகரிப்பு
அண்டம் விடுபடு நிலை – LH எழுச்சி
6.
7.
கரு பதியும் இடம் ______.
கருப்பை
வயிற்றுக்குழி
கலவிக் கால்வாய்
ஃபெல்லோப்பியன் குழாய்
8.
9.
பாலிலா இனப்பெருக்கம் உடலால் தோன்றும் இனப்பெருக்கம் என ஏன் அழைக்கப்படுகிறது?
10.
இந்திய அரசால் தேசிய அளவில் நடத்தப்பட்டு வரும் இனப்பெருக்க நலனுக்குரிய திட்டங்கள் எவை?
11.
12.
சீம்பால் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது?
13.
கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன? விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.
14.
மீயொலி வரியோட்டத்தின் (Ultra Sound Scanning) நன்மைகள் கூறு.
15.
நம் நாட்டில் மருத்துவ ரீதியான கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கியது உண்மையா, பொய்யா? ஏன்?
16.
பால்வினைத் தொற்று நோய்களைத் தடுக்கும் முறைகளை எழுதுக
17.
கர்ப்ப காலத்தில் தாய்சேய் இணைப்புத்திசுவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் யாவை?
18.
பாலிலா இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் ஏன் ‘பிரதி’ (clone) என்று அழைக்கப்படுகிறது?
19.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு தடுப்புமுறைகள் (Barrier Method) பற்றி விளக்குக.
20.
கரு சூலப் படலங்களை விளக்குக.
21.
இருசமப்பிளவு முறைகளை பற்றி விரிவாக விடையளி.
22.
குழந்தை பிறப்பு மற்றும் பாலூட்டுதலில் ஆக்ஸிடோசின் மற்றும் ரிலாக்சின் ஹார்மோன்களின் பங்கினை விளக்குக.
23.
மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகளை விளக்குக.
1.
(a)
ஆர்க்கியோசைட்டுகள்
2.
(a)
AIDS
3.
(b)
கருப்பை வாய் புற்று
4.
(b)
FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்
5.
(c)
லூட்டியல் நிலை – FSH அளவு அதிகரிப்பு
6.
(c)
7.
(a)
கருப்பை
8.
(c)
9.
(i) பாலிலி இனப்பெருக்கம் உடல் செல்களில் நேரடி செல் பகுப்பு அல்லது மறைமுகச் செல் பகுப்பு முறைகளில் நடைபெறுகிறது.
(ii) இது உடலால் தோன்றும் இனப்பெருக்கம் அல்லது கருக்கோளத்தால் தோன்றும் இனப்பெருக்கம் என அழைக்கப்படுகிறது.
10.
1. மாபெரும் குழந்தைகள் தடுப்பூசித் திட்டம்.
2. பெண்களுக்கு ஊட்டச்சத்துக்கள் உணவு வழங்கல்.
3. ஜனனி சுரக்ஷா யோஜனா
4. ஜனனி சிசு சுரக்ஷா கார்யகரம்.
5. ஒருங்கிணைந்த இனப்பெருக்க, தாய், சேய் வளர்குழந்தை, பதின்பருவத்தினர்க்கான ஆரோக்கிய அணுகுமுறை.
6. சுரக்ஷித் மாத்ரித்வா அபியான்.
11.
12.
(i) குழந்தை பிறந்தலிருந்து சில நாட்களுக்கு, பால் சுரப்பிகள், மஞ்சள் நிற சீம்பாலைச் சுரக்கின்றன.
(ii) இதில் லாக்டோஸ் குறைவாயுள்ளது. புரதம், தாது உப்புகள், விட்டமின் A அதிக அளவில் உள்ளன.
(iii) சீம்பாலில் கொழுப்பு கிடையாது.
(iv) IgA வகை எதிர்பொருட்கள் உள்ளன. இவை குழந்தையின் உணவுப்பாதை பாக்டீரியத் தொற்றை தடுக்கின்றன.
(v) எளிதில் செரிக்கக்கூடிய, அனைத்து ஊட்டச்சத்து கொண்ட சரியான உணவு.
(vi) முதல் 6 மாதம் தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தை நலமுடன் வளரும்.
13.
(i) முட்டையானது கருவுறாமல் ஒரு உயிராக வளர்வது கன்னி இனப்பெருக்கம் எனப்படும்.
(ii) (எ.கா) ரோட்டிபர், தேனீக்கள், மற்றும் வான்கோழி.
14.
1. ஆபத்தில்லா முறை
2. கடத்தி வயிற்றுப்பகுதி, கலவிக்கால்வாய் பகுதியில் கொடுக்கும் அழுத்தம், மிதமான அசௌகரியம் தரும்.
3. கதிர்வீச்சு இல்லை.
4. கர்ப்ப காலத் தொடக்கத்தில் தோன்றும் பிரச்சனைகளை அறியலாம்.
15.
16.
(i) முன்பின் தெரியாதவர், பலருடன் பாலுறவைத் தவிர்த்தல்.
(ii) கருத்தடை உறைகளைப் பயன்படுத்துதல்
(iii) மருத்துவ ஆலோசனை, முழுமையான சிகிச்சை
17.
(i) hCG - மனித கோரியானிக் கொனடோடிராபின்
(ii) hCS - மனித கோரியானிக் சோமட்டோமாம்மோட்ரோபின்
(iii) hPL - மனித பிளாசன்டல் லாக்டோஜன்
(iv) ஈஸ்ட்ரோஜன்
(v) புரோஜெஸ்டிரான்
(vi) ரிலாக்ஸின்
18.
(i) பாலிலா இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் பெற்றோர்களின் பண்புகளையே கொண்டிருக்கும்.
(ii) இதையே பிரதி எனவும் சொல்லலாம்.
(iii) பிரதி என்பது பெற்றோரின் சாயலை கொண்ட சேய்களாகும்.
19.
மனித மக்கள்தொகையை பின்வரும் முறைகளால் கட்டுப்படுத்தலாம்:
ஹார்மோன் முறை:
பல்வேறு ஹார்மோன் தயாரிப்புகள் மாத்திரைகள் அல்லது மாத்திரைகள் வடிவில் வருகின்றன, பொதுவாக கருத்தடை மாத்திரைகள் என்று அழைக்கப்படுகின்றன.
தடுப்பு முறைகள்:
ஆணுறைகள் ஆண்களால் பயன்படுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் உதரவிதானங்கள் மற்றும் விந்தணுக்கள் பெண்களால் பயன்படுத்தப்படுகின்றன.
கருப்பையக சாதனங்கள் (IUDs):
லிப்ஸ் லூப் மற்றும் காப்பர்-டி போன்ற ஐயுடிகள் கருப்பையில் பொருத்தப்பட்டுள்ளன. அவை கருத்தரிப்பதைத் தடுக்கின்றன.
அறுவை சிகிச்சை முறைகள்:
பெண்களில், ஃபலோபியன் குழாய்கள் பிணைக்கப்படுகின்றன. இது டியூபெக்டமி என்று அழைக்கப்படுகிறது.
ஆண்களில், வாஸ் டிஃபெரென்ஷியா பிணைக்கப்பட்டுள்ளது. இது வாஸெக்டமி எனப்படும்.
தூண்டப்பட்ட கருக்கலைப்பு:
இது கர்ப்பத்தின் மருத்துவ முடிவு (MTP) என்றும் அழைக்கப்படுகிறது.
ஒரு பெண் கர்ப்பமாகி, தம்பதியினர் குழந்தையைப் பெற விரும்பவில்லை என்றால், தூண்டப்பட்ட கருக்கலைப்புக்கான விருப்பம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
20.
அ) அம்னியான்:
1. இரட்டை அடுக்கலான ஒளி ஊடுருவும் சவ்வு.
2. ஆம்னியாடிக் திரவத்தால் நிரப்பப்பட்டுள்ளது.
3. வளர் கருவிற்கு மிதவைச் சூழலைத் தருகிறது. காயங்களினின்று பாதுகாக்கிறது.
4. கருவின் வெப்பநிலையைச் சீராகப் பராமரிக்கிறது.
ஆ)கோரியான்
1. இது வெளிப்படலம்
2. தாய்சேய் இணைப்புத் திசுவை உருவாக்கிறது.
3. மற்ற படலங்களையும் கருவையும் பாதுகாக்கும்.
இ) கருவுணவுப்பை
1. வளரும் கருவின் உணவுப் பாதையை உருவாக்கும்.
2. இரத்த செல், இரத்தக்குழல் ஆகியவற்றின் மூல ஆதாரமாக உள்ளது.
ஈ) ஆலண்டாய்ஸ் :
1. கருவை தாய்சேய் இணைப்புத் திசுவுடன் இணைக்கிறது.
2. சிறுநீர்ப்பையின் ஒரு பகுதியாக மாறுகிறது.
கரு சூழ்படலங்களின் பணிகள்
1. கரு உலர்ந்து போகாமல் பாதுகாத்தல்
2. இயக்க அதிர்வு தாங்குதல்
3. ஊட்டச்சத்து
4. வாயுப் பரிமாற்றம்
21.
1. பெற்றோர் உயிரி இரு சமப்பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதியும் ஒரு சேய் உயிரியாக மாற்றமடைகிறது.
2. எளிய ஒழுங்கற்ற இருசமப் பிளவு முறை அமீபா போன்ற ஒழுங்கற்ற வடிவமுடைய உயிரிகளில் நடைபெறுகின்றது.
3. கிடைமட்ட இருசமப் பிளவு முறையில் பிளவுமட்டம் உயிரியின் கிடைமட்ட அச்சில் ஏற்படுகின்றது.
(எ.கா) பாரமீசியம்
4. உயிரியின் நீள் அச்சில் பிரிவடைவது, நீள்மட்ட இருசமப் பிளவு முறை எனப்படும்.
(எ.கா) யூக்ளினா
5. சில உயிரிகளில் பிளவுமட்டம் சாய்வாக இருக்கும் அவை சாய்வுமட்ட இருசமப் பிளவு முறையாகும்.
(எ.கா) செராட்டியம்

22.
குழந்தை பிறப்பு,பாலூட்டுதலில் ஆக்ஸிடோசின்,ரிலாக்ஸின் பங்கு.
ரிலாக்ஸின்:
(i) ரிலாக்ஸின் இடுப்பு எலும்பு மூட்டுகளைத் தளர்வடையச் செய்கிறது.
(ii) கருப்பையின் வாய்ப்பகுதியை, வலிமையான சுருக்கங்களால் விரிவடைய செய்கிறது.
ஆக்ஸிடோசின்:
(i) பால் சுரப்பின் மீச்சிறு கதுப்புகளிலிருந்து விசையுடன் பாலை வெளித்தள்ள ஆக்ஸிடோசின் உதவுகின்றது. இது நிர்பந்த அனிச்சைக் செயல்(Let Down Reflex) எனப்படும்.
(ii) கருப்பையை, கர்ப்ப காலத்தின் முந்தைய நிலைக்கு மாற்றுகின்றது.
23.
மாதவிடாய் சுழற்சி :
பூப்படைதல் முதல் மாதவிடாய் நிறைவு வரை கர்ப்ப காலம் தவிர, சுமார் 28/29 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி(அண்டகச் சுழற்சி) நிகழும்.
1. மாதவிடாய் நிலை (3-5 நாட்கள்) (Menstrual Phase) :
(i) புரோஜெஸ்டிரான்,ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு குறைகிறது.
(ii) கருப்பைச் சுவர் எண்டோமெட்ரியம், அதன் இரத்தக் குழல்கள் சிதைந்து,மாதவிடாய் ஒழுக்கு வெளியாகும்.
(iii) அண்டம் கருவுறாவிட்டால் மாதவிடாய் ஏற்படும்.
(iv) மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது,கருவுற்று இருப்பதன் அறிகுறி.
(v) மன அழுத்தம், ஹார்மோன் கோளாறுகள், இரத்த சோகை போன்றவற்றால் மாதவிடாய் ஏற்படாது.
2. நுண்பை நிலை(பெருகு நிலை): (Follicular Phase,Proliferative Phase)
(i) மாதவிடாயின் 5 ஆம் நாளிலிருந்து, அண்டம் விடுபடும் வரை உள்ள காலகட்டம்.
(ii) FSH,LH ஹார்மோன்களின் சுரப்பு சீராக அதிகரிக்கிறது.
(iii) முதல்நிலை நுண்பை செல்கள், முதிர்ந்த கிராபியன் நுண்பை செல்களாக மாறுகின்றன.
(iv) எண்டோமெட்ரியம் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.
(v) நுண்பை செல்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது. அவற்றினிலிருந்து சுரக்கும் ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கின்றது.
3. அண்ட செல் விடுபடும் நிலை (Ovulatory Phase)
(i) LH,FSH ஹார்மோன்கள் உச்ச நிலையை அடைகின்றன.
(ii) LH எழுச்சியினால் முதிர்ந்த கிராபியன் நுண்பை உடைகிறது.
(iii) இரண்டாம் நிலை அண்ட செல், அண்டகச் சுவர் வழியாக வயிற்றுக்குழியை அடைகிறது. இது அண்டம் விடுபடுதல் எனப்படும்.
4. லூட்டியல் அல்லது சுரப்பு நிலை(Luteal (or) Secretory Phase)
(i) எஞ்சியுள்ள கிராபியன் ஃபாலிக்கிள்,கார்ப்பஸ் லூட்டியம் எனும் இடைக்கால நாளமில்லா சுரப்பியாகும்.
(ii) கார்பஸ் லூட்டியம் புரோஜெஸ்டிரானைச் சுரக்கிறது. இது கருமுட்டை புதிய ஏற்ற சூழலை உருவாக்கும்.
(iii) கருப்பை உட்சுவர் ஊட்டச்சத்து நிறைந்த, திரவத்தை கருவிற்கு உற்பத்தி செய்கிறது. இது சுரப்பு நிலை.
(iv) கருவுறுதல் நிகழாவிடில், கார்பஸ் லூட்டியம் சிதைந்து, கார்பஸ் அல்பிகன்ஸ் எனும் வடுவாகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards