12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/01/2020
தாவரவியல் - தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
நேர்வழியாக தழைவழி இனப்பெருக்கம் செய்யாதவை
முரையா
டால்பெர்ஜியா
மில்லிங்டோனியா
ஸ்டினிபெக்ஸ்
2.
மாலஸில் _______ போத்துகள் உள்ளன.
வேர்
தண்டு
இலை
மலர்
3.
அபாயத்திற்கு உட்படுத்தப்பட்ட தாவரங்கள் _______ முறையில் பெருக்கமடையும்
பொத்துகள்
ஒட்டுதல்
நுண்பெருக்கம்
பதியம் போடுதல்
4.
இருசூலகத்தண்டு தன்மை கொண்டது _________
பிரைமுலா
லைத்ரம்
அபுட்டிலான்
ஹைபிஸ்கஸ்
5.
குதிரை லாடம் போல வளைந்திருக்கும் சூழ்துளை _________ வகை சூலில் உள்ளது.
சிர்சினோட்ரோபஸ்
ஆம்பிடரோபஸ்
தலைகீழ்
கிடைமட்ட சூல்
6.
மகரந்தத்துகளின் எக்சைனில் இல்லை
செல்லுலோஸ்
ஸ்போரோபொலினின்
போலன்கிட்
காலோஸ்
7.
எந்த தாவரத்தில் நுண் வித்துக்கள் ஒன்றாக இணைந்து பொலினியம் என்ற அமைப்பை உருவாக்கும்?
ஹைபிஸ்கஸ்
எருக்கு
இக்சோரா
ஊமத்தை
8.
பொருந்தாத இணை காண்.
ஓடுதண்டு - சென்டெல்லா
தரைக்கீழ் உந்து தண்டு - கிரைசான்திமம்
வேர் விடும் ஓடு தண்டு - பிரகேரியா
நீர் ஓடு தண்டு - சென்டெல்லா
9.
பெரும்பாலான தாவரங்களில் மகரந்தத்துகள் வெளியேறும் நிலை ____.
1 செல்நிலை
2 செல்நிலை
3 செல்நிலை
4 செல்நிலை
10.
விதையில் சூல்காம்பினால் ஏற்படும் தழும்பு எது?
விதை உள்ளுறை
முளைவேர்
விதையிலை மேல்தண்டு
விதைத்தழும்பு
11.
மூடுவிதைத் தாவரங்களில் ஆண் கேமீட்டகத் தாவரத்தின் முதல் செல் _____.
நுண்வித்து
பெருவித்து
உட்கரு
முதல்நிலை கருவூண் திசு
12.
கேப் பிளாக் (Cap block) என்றால் என்ன?
13.
விலங்கு மகரந்தச் சேர்க்கை விளக்குக?
14.
எக்சைன், இன்டைன் வேறுபடுத்துக?
15.
தாவர கருவியலின் மைல்கற்களை வெளிக்கொணர்க.
16.
பதியமிடல் என்றால் என்ன?
17.
கருவூண் திசுவின் பணிகள் கூறு?
18.
விதை ஒட்டுத்தாள் என்பது யாது? (Aril)
19.
‘எண்டோதீசியம் மகரந்தப்பை வெடித்தலுடன் தொடர்புடையது’. இக்கூற்றை நியாயப்படுத்துக.
20.
21.
தகுந்த படத்துடன் சூலின் அமைப்பை விவரி.
1.
(d)
ஸ்டினிபெக்ஸ்
2.
(a)
வேர்
3.
(c)
நுண்பெருக்கம்
4.
(a)
பிரைமுலா
5.
(b)
ஆம்பிடரோபஸ்
6.
(d)
காலோஸ்
7.
(b)
எருக்கு
8.
(d)
நீர் ஓடு தண்டு - சென்டெல்லா
9.
(b)
2 செல்நிலை
10.
(d)
விதைத்தழும்பு
11.
(a)
நுண்வித்து
12.
மகரந்தக் குழாயை நுண்ணோக்கியால் பார்க்கும் போது, நுனிப்பகுதி, அரைவட்ட வடிவில், ஒளி ஊடுருவும் பகுதியாக உள்ளது. இப்பகுதி கேப் பிளாக் (Cap block) எனப்படும். இது மறைந்தால் மகரந்தக் குழாயின் வளர்ச்சி நின்று விடும்.
13.
விலங்கினங்களின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை விலங்கு மகரந்தச் சேர்க்கை எனப்படும் (Zoophily)
(எ.கா) லெமூர், ஜெக்கோ பல்லிகள் மகரந்தச் சேர்க்கை முகவர்கள்.
14.
| எக்சைன் | இன்டைன் | |
| 1 | இது மகரந்ததுகளின் வெளிப்புற அடுக்கு | இது மகரந்ததுகளின் உட்புற அடுக்கு |
| 2 | தடித்தது | மெல்லியது |
| 3 | சீரற்ற தடிப்பு | சீரான தடிப்பு |
| 4 | செல்லுலோஸ், ஸ்போரோபொலினின் | பெக்டின், ஹெமிசெல்லுலோஸ், காலோஸ், புரதங்கள் கொண்டது. |
15.
1682 நெகமியா குரூ - மலரின் ஆண் உறுப்பை மகரந்தத்தாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
1694 R.J. கேமராரியல் - மலர், மகரந்தப்பை, மகரந்தத்துகள் மற்றும் சூல் அமைப்பு பற்றி விவரித்துள்ளார்.
1761 J.G கோல்ரூட்டர் - மகரந்தச் சேர்க்கையில் பூச்சிகளின் முக்கியத்துவம் பற்றி விரிவாக தொகுப்பு தந்துள்ளார்.
1824 G.B அமிசி - மகரந்தக் குழாயைக் கண்டறிந்தார்.
1848 ஹாப்மீஸ்டர் - நான்மய மகரந்தத்துகள் (pollen tetrad) அமைப்பு பற்றி விளக்கியுள்ளார்.
1870 ஹான்ஸ்டீன் - கேப்செல்லா மற்றும் அலிஸ்மா தாவரங்களில் கரு வளர்ச்சி பற்றி விவரித்துள்ளார்.
1878 E. ஸ்ட்ராஸ்பர்கர் - பல்கரு நிலையை பதிவு செய்துள்ளார்.
1884 E. ஸ்ட்ராஸ்பர்கர் - கேமீட்களின் இணைவைக் கண்டறிந்தார்.
1898 & 1899 S.G. நவாஷின் மற்றும் L. கினார்டு இருவரும் தனித்தனியாக இரட்டைக் கருவுறுதலைக் கண்டுபிடித்தனர்.
1904 E. ஹேன்னிங் - செயற்கை முறையில் கரு வளர்ச்சியை தொடங்கினார்.
16.
1. பெற்றோர் தாவரத்தண்டு தாவரத்தோடு ஒட்டியிருக்கும் போது அதிலிருந்து வேர்கள் தோன்ற தூண்டப்படும்.
2. வேர் தோன்றிய பகுதி வெட்டி நீக்கப்பட்டு புதிய தாவரமாகும்.
(எ.கா): ஜாஸ்மினம், இக்ஸோரா
17.
1. வளர்கருவுக்கு உணவாகிறது.
2. மூடுவிதைத் தாவரங்களில், கருவூண் திசு உருவான பின். கரு மூட்டை பகுப்படையும்.
3. கருவூண் திசு, கருவின் துல்லிய வளர்ச்சியை ஒழுங்குபடுத்தும்.
18.
சூலகக் காம்பு (Funiculus), சதைப்பற்றுடன் வண்ணமயமான விதை ஒட்டுத்தாளாகிறது. (எ.கா) மிரிஸ்டிகா பித்தசிலோபியம்.
19.
1. இது மகரந்தப்பைச் சுவரின் ஒரு அடுக்கு.
2. இவற்றில் செல்லுலோஸ், லிக்னினால் ஆன பட்டைகள் உள்ளன.
3. இச்செல்கள் நீர் உறிஞ்சும் தன்மை கொண்டவை.
4. எண்டோதீசியத்தின் நீர் உறிஞ்சும் தன்மை வெடிப்பிற்கு உதவும்
20.
21.
1. இரண்டு சூலுறைகளால் சூழப்பட்டுள்ளது.
2. முதிர்ந்த சூலில், ஒரு காம்பும், உடலும் உள்ளது.
3. சூலகக்காம்பு, சூல்களை சூலொட்டுத்திசுவுடன் இணைக்கிறது.
4. சூலகக்காம்பு, சூலின் உடலோடு இணையும் பகுதி சூல் தழும்பு (Hilum) எனப்படும்.
5. சூலகக்காம்பு ஒட்டிய இடத்தில் உருவாகும் விளிம்பு பகுதி சூல்காம்புவடு (raphe) எனப்படும்.
6. சூலின் மையத்தில் உள்ள, பாரன்கைமா திசு சூல் திசு ஆகும்.
7. சூல்திசுவைச் சூழ்ந்து, சூலுறை என்ற பாதுகாப்பு உறை உள்ளது.
8. சூலுறையால் சூழப்படாத, சூல்திசுப்பகுதி சூல்துளை (micropyle) எனப்படும்.
9. சூல்திசு, சூலுறை, சூல் காம்பு இணையும் பகுதி சலாசா எனப்படும்.
10. சூல்திசுவில் உள்ள முட்டை வடிவப் பை போன்ற அமைப்பு கருப்பை.
11. சூலுறையின் உள்ளடுக்கு எண்டோதீலியம், டபீட்டம் எனப்படும்.
12. சலாசாவுக்கும், கருப்பைக்கும் இடையேயுள்ள செல் தொகுப்பு ஹைப்போஸ்டேஸ்.
13. சூல்துளைக்கும், கருப்பைக்கு இடையே எபிஸ்டேஸ் என்ற செல்தொகுப்பு உள்ளது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards