12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/01/2020
தாவரவியல் - குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
கூற்று: காமா கதிர்கள் பொதுவாகக் கோதுமை வகைகளில் சடுதிமாற்றத்தைத் தூண்டப் பயன்படுகிறது.
காரணம்: ஏனெனில் அணுவிலிருந்து வரும் எலக்ட்ரான்களை அயனியாக்க இயலாத குறைவான ஆற்றலை எடுத்துச்செல்கிறது.
கூற்று மற்றும் காரணம் சரி.
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி.
கூற்று மற்றும் காரணம் தவறு
2.
A மற்றும் B என்ற மரபணுக்கள் குரோமோசோமின் மீது 10 cM தொலைவில் அமைந்துள்ளது. ஒரு மாற்றுப்பண்பு கருமுட்டை AB/ab என்பதோடு ab/ ab யை சோதனைக் கலப்பு செய்தால் மொத்த 100 வழித்தோன்றல்களில் ஒவ்வொரு வழித்தோன்றலிலும் எத்தனை இனங்களை எதிர்பார்க்கலாம்
25 AB, 25 ab, 25 Ab, 25 aB
10 AB, 10 ab
45 AB, 45 ab
45 AB, 45 ab, 5 Ab, 5 aB
3.
தொல்லுயிர் எச்ச மரபணுக்கள் என்றால் என்ன?
4.
தவறுதலாகப் பொருள்படும், பொருளுணர்த்தாத சடுதிமாற்றத்திற்கு இடையேயான வேறுபாடு என்ன?
5.
பிணைப்பு மற்றும் குறுக்கேற்றம் வேறுபாடு தருக.
6.
மறு சேர்க்கை என்பதை வரையறு
7.
குறுக்கேற்ற செயல்முறையை விளக்குக.
8.
இடம்பெயர்தல் - விளக்கு
9.
குறுக்கேற்றத்தின் பல்வேறு வகைகள் யாவை?
10.
மரபணு வரைபடம் என்றால் என்ன? இதன் பயன்களை எழுதுக.
11.
பிரையோபைட்டாவின் கேமிட்டோபைட் தாவரம் ________ தன்மை கொண்டது.
12.
மரபுச் செய்தி பெயர்வு கட்டமைப்புகளை மாற்றும் சடுதிமாற்றம் ___________ எனப்படும்.
13.
அ) ஒரு சென்டிரோமியர் காணப்படும் குரோமோசோம் - மோனோசென்டிரிக்
ஆ) தலைகீழ் திருப்பம் நீண்ட, சிறு கரங்களுடன் சென்டிரோமியர் இன்றி காணப்படுவது - பாராசென்ட்ரிக்
இ) குரோமோசோமில் நுனிப்பகுதி இல்லையென்றால் அதைக்குறிப்பிடுவது - டெலோசென்டிரிக்
ஈ) சென்டிரோமியர் உள்ளடக்கிய தலைகீழ் திருப்பம் - பெரிசென்டிரிக்
14.
அ) எல்லா பூக்கும் தாவரங்களும் 94% ஒரேவிதமான மலர்களைக் கொண்ட தாவரங்களாக அதாவது மோனோமார்ஃபிக் ஆக உள்ளன.
ஆ) ஒரு அமினோ அமிலத்திற்கான மரபுக்குறியின் வேறு ஒரு அமினோ அமிலத்திற்கான மரபுக்குறியனாக மாறுபடுவது கட்ட நகர்வு சடுதி மாற்றம் -என்று பெயர்.
இ) டிரோசோஃபில்லாவில் முதன்முதலாக X-கதிர்கள் மூலம் திடீர் மாற்றம் ஏற்படுத்தியவர் முல்லர் (1928)
15.
அயல்பன்மடியம் -இதோடு தொடர்பற்ற வாக்கியத்தைக் கண்டறி:
அ) இது இரு வெவ்வேறு சிற்றினங்களிலிருந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படைத் தொகுதி குரோமோசோம்களைப் பெற்ற உயிரினங்களாகும்.
ஆ) இவை அதனோடு மரபணுத் தொகையின் நான்கு அல்லது இரண்டு நகல்களைக் கொண்டது இது இருமடியம் இரட்டிப்படைதல் தூண்டப்படுதலால் ஏற்படுகிறது.
இ) இவை சிற்றினங்களிடையே கலப்புகளால் இவற்றை உருவாக்க முடியும் மேலும் கோல்ச்சிசினைப் பயன்படுத்தி குரோமோசோம் இரட்டிப்படைய செய்வதால் வளத்தன்மை தக்கவைக்கப்படுகிறது,
ஈ) இவை நெருங்கிய சிற்றினங்களிடையே மட்டுமே அயல் பன்மடியத் தாவரங்கள் உருவாக்கப்படுகிறது.
16.
உறுதிப்படுத்துதல் (A)
பிணைதல் மற்றும் குறுக்கேற்றம் இரு நிகழ்வுகள் ஆனால் எதிர்மறை விளைவுகளை உடையவை
காரணம் (R)
பிணைதல் குறிப்பிட்ட மரபணுக்களை சேர்ந்தே இருக்கவும். குறுக்கேற்றம் மரபணுக்கள் கலப்பதற்கும் காரணமாகிறது
அ) A மற்றும் R சரியானது -R ஐ சரியாக விளக்குகிறது.
ஆ) A மற்றும் R சரியானது ஆனால் R ஐ சரியாக விளக்கவில்லை
இ) A சரியானது R தவறானது
ஈ) A மற்றும் R தவறானது
1.
(b)
கூற்று சரி. காரணம் தவறு.
2.
(d)
45 AB, 45 ab, 5 Ab, 5 aB
3.
1. விரைவாகக் கூடிய சில DNA-க்கள் பொய்யான மரபணுக்களால் உருவகிக்கப்படுகின்றன.
2. இத்தகைய மரபணுக்கள், கடந்த காலங்களில் உயிரோட்டத்துடன் செயல்பட்டவைகள் -ஆனால் தற்போது புரதம் உருவாக்கும் தன்மையை இழந்துவிட்டவை
3. இவை பரிணாமத்திற்கான வரலாற்றைக் கூறுகிறது.
4.
| தவறுதலாக பொருள்படும் தகுதிமாற்றம் | பொருளுணர்த்தாத சடுதிமாற்றம் |
| ஒரு அமினோ அமிலத்திற்கான கோடான் அல்லது மரபுக்குறியன் வேறோரு அமினோ அமிலத்திற்கான கோடான் (அ) மரபுபுக்குறியன் மாறுவதால் அமினோ அமிலவரிசையில் மாற்றம் ஏற்படுகிறது. Eg.TTA ⟶ AAT அமினோ அமிலம் லியூசின் |
ஒரு அமினோ அமிலத்திற்கான கோடான (அ) மரபுக்குறியின் முடிவு (அ) நிறுத்துக்குறியனாக மாற்றமடையும் சடுதிமாற்றம் தவறுதலாகப் பொருள்படும் (அ) ஒத்திலாச் சடுதி மாற்றம் என்று பெயர். Eg.TTA ⟶ AAT நிறுத்தக்குறியின் UAA |
5.
| வ.எண் | பிணைப்பு | குறுக்கேற்றம் |
| 1 | குரோமோசோம்களில் உள்ள மரபணுக்கள் அருகமைத்து காணப்படும் | இவை பிணைப்புற்ற மரபணுக்களைப் பிரிக்கிறது |
| 2 | இதில் ஒத்திசைவு குரோமோசோம்களில் உள்ள ஒரு குரோமோசோம் மட்டுமே பங்கு பெறும். | இதில் ஒத்திசைவு குரோமோசோம்களின் சகோதரி அல்லாத குரோமோட்டிகளுக்கு இடையே உள்ள துண்டுகளின் பரிமாற்றம் நிகழும் |
| 3 | புதிய மரபணுச் சேர்க்கைகளை இது குறைக்கிறது | புதிய மரபணுச் சேர்க்கைகள் தோன்றுவதன் மூலம் வேறுபாடுகளை அதிகரிக்கிறது. புதிய உயிரினம் தோன்ற வழிவகுக்கிறது. |
6.
குறுக்கேற்றத்தின் போது உருவாகும் கயாஸ்மா புள்ளிகளில் குரோமோடிடுகள் துண்டாகி மீண்டும் மறு இணையும் நடைபெறுகிறது - இந்த பரஸ்பர துண்டுகள் பரிமாற்றத்தினால் புதிய மறு சேர்க்கை உருவாகிறது.
7.
ஒத்திசைவு குரோமோசோம் இணைகளின் சகோதரி அல்லாத குரோமோடிட்களுக்கிடையே இணையான துண்டுகள் பரிமாற்றப்பட்டு புதிய மரபணு சேர்க்கை தோன்றும் உயிரிய நிகழ்விற்குக் குறுக்கேற்றம் என்று பெயர்.
இதில் பல நிலைகளை உடையது
1) இணை சேர்தல்
2) நான்கமை உருவாதல்
3) குறுக்கேற்றம் மற்றும் முடிவுறுதல்
i) இணை சேர்தல்:
புரோபேஸ் 1 இன் சைக்கோட்டின் நிலையில் இரண்டு ஒத்திசைவு குரோமோசோம்களுக்கிடையே நெருங்கிய இணை உருவாகிறது.
இது இரட்டை இணை (அ) பைவாலண்ட், இது இணைசேர்தல் (அ) சினாப்சிஸ் என்று பெயர் இணைதல் தொடங்குவதைப் பெருத்து 3 வகைப்படும்.
1. மையம் தொடங்கி இணைசேர்தல்
2. நுனி தொடங்கி இணைசேர்தல்
3. இடையிலா இணை சேர்தல்
ii) நான்கமை உருவாதல்:
இரட்டை இலையில் -இரண்டு ஒத்த அமைப்புடைய சகோதரி குரோமாடிட்களை உருவாகத் தொடங்குகிறது - இதில் நான்கு குரோமோடிடுகளைப் பெற்றிருக்கிறது -நான்கமை நிலை என்று
iii) குறுக்கேற்றம்:
பாக்கிடீன் நிலையில் குறுக்கேற்றம் நிகழ்கிறது-
ஒத்திசைவு குரோமோசோம்களின் சகோதரி அல்லாத குரோமோடிடுகளுக்கிடையேே இணைவுப்புள்ளிகள் (கயாஸ்மாக்கள்)- எனும் (X) வடிவ அமைப்பு உருவாகிறது. இவற்றில் குரோமோடிடுகள் உடைந்து துண்டுகள் பரஸ்பரம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
1) அண்மைக்கால ஆய்வு: மேம்படுத்தப்பட்ட இழை அமைப்பு கொண்ட இணை பிணைப்புக் கூட்டமைப்பு -இணைசேர்தல் (அ) கயாஸ்மா தோன்றுதலுக்கு வழி வகுக்கிறது. (விதி விலக்கு - சில ஆண் டுரோசோஃபிலா வில் இணைப்பிணைப்புக் கூட்டமைப்பு உருவாவதில்லை)
iv) முடிவுறுதல்:
குறுக்கேற்றத்தின் பின் கயாஸ்மாவானது குரோமாடிட்களின் நுனிப்பகுதியை நோக்கி நகர்கிறது இது முடிவுறுத்தல் எனப்படுகிறது. ஒத்திசைவு குரோமோசோம்கள் முழுமையாகப் பிரிகிறது.
8.
ஒத்திசைவு அல்லாத குரோமோசோம்களுக்கிடையே நடைபெறும் துண்டுகள் பரிமாற்றம் இடம்பெயர்தல் எனப்படும்.
இது குறுக்கேற்றம் எனும் இயல்பான நிகழ்வுக்கு எதிரான குரோமோசோம் அமைப்பு பிறழ்ச்சி
வகைகள்
எளிய இடம் பெயர்தல்
நகர்வு இடம் பெயர்தல்
பரிமாற்ற இடம் பெயர்தல்
1. எளிய இடம் பெயர்தல்
ஒரு குரோமோசோமில் பிளவு ஏற்படுகிறது பிளவுபட்ட துண்டு ஒத்திசைவு அல்லாத குரோமோசோமின் ஒரு முனையில் இணைகிறது.
2. நகர்வு இடம் பெயர்தல்
இது முந்தியத்தைப் போன்றது ஆனால் இடைச்செருகல் நடைபெறுகிறது.
3. பரிமாற்ற இடம் பெயர்தல்
பரஸ்பர துண்டுகள் பரிமாற்ற ஒத்திசைவு அல்லாத குரோமோசோம்களுக்கிடையே என்பதால் இதனை முறையற்ற குறுக்கேற்றம் எனலாம்.
ஒத்த பண்பிணைவு இடம் பெயர்தல்
இடம் பெயர்தலில் இரண்டு இணைகளின் இரண்டு குரோமோசோம்களும் பங்கு கொள்கின்றன. ஒத்திசைவு குரோமோசோம்களின் இடம்பெயர்தல் பகுதி ஒரே மாதிரி இருக்கும்
மாற்றுப் பண்பிணைவு இடம் பெயர்தல்
ஒவ்வொரு இணை ஒத்திசைவு குரோமோசோம்களின் ஒரே ஒரு குரோமோசோம் மட்டும் இதில் பங்கு கொள்கிறது. மற்ற ஒரு குரோமோசோம் இயல்பான நிலையில் உள்ளது. சிற்றின உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
9.
| வ.எண் | வகை | கயாஸ்மாக்கள் | குறுக்கேற்றத்தில் தொடர்புடைய குரோமோடிடுகள் எண்ணிக்கை | குறுக்கேற்ற நிகழ் விரையம் | படம் |
| 1 | ஒற்றைக் குறுக்கேற்றம் |
ஒன்று | இரு குரோமோடிகள் | அதிகம் | |
| 2 | ஈரிழை குறுக்கேற்றம் |
இரண்டு | இரு குரோமோடிகள் | அதிகம் | |
| 3 | மூவிழை குறுக்கேற்றம் |
இரண்டு | மூன்று குரோமோடிகள் | குறைவு | |
| 4 | நாலிழை குறுக்கேற்றம் |
இரண்டு | நான்கு குரோமோடிகள் | குறைவு | |
| 5 | குறுக்கேற்றம் இல்லை |
- | - | - |
10.
1. குரோமோசோம்களில் மரபணுக்கள் ஒரே சீரான நேர்கோட்டில் அமைந்துள்ளன - இது அமைவிடம் எனப்படும்
2. மரபணு அமைவிடம். அருகே உள்ள மரபணுக்களை இடையேயுள்ள தொலைவு-ஆகியவற்றைக் குறிப்பது.
3. மரபணு வரைபடம் (பிணைப்பு வரைபடம்)
4. இந்தக் கருத்தாக்கம் ஆல்பிரட் H.ஸ்டர்டிவண்ட் 1913 இல் உருவாக்கப்பட்டது பயன்கள்
5. மரபணுக்களின் வரிசை அமைவிடம் அடையாளம் காணவும் அவற்றிற்கிடையேயான தூரம் ஆகியவற்றை அறிய முடிகிறது
6. இரு இப்பண்பு மற்றும் மூன்று பண்பு கலப்புகளின் முடிவுகளை கணிக்க பயன்படுகிறது
7. ஒரு உயிரினத்தின் சிக்கலான மரபணு தன்மையினை அறிய முடிகிறது.
11.
( )
ஒருமடிய தன்மை கொண்டது.
12.
( )
புற்றுநோய் செல்கள்
13.
குரோமோசோமில் நுனிப்பகுதி இல்லையென்றால் அதைக்குறிப்பிடுவது - டெலோசென்டிரிக்
14.
டிரோசோஃபில்லாவில் முதன்முதலாக X-கதிர்கள் மூலம் திடீர் மாற்றம் ஏற்படுத்தியவர் முல்லர் (1928)
15.
இவை அதனோடு மரபணுத் தொகையின் நான்கு அல்லது இரண்டு நகல்களைக் கொண்டது இது இருமடியம் இரட்டிப்படைதல் தூண்டப்படுதலால் ஏற்படுகிறது.
16.
A மற்றும் R சரியானது -R ஐ சரியாக விளக்குகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards