12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/01/2020
தாவரவியல் - சூழல் மண்டலம்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சூழல்மண்டலம்
குளம் மற்றும் ஏரி
நெல்வயல்
மக்காச்சோள வயல்
அக்குவாரியம்
2.
எந்தவொரு உயிரின சமுதாயமும் இல்லாத வெற்றுப் பரப்பில் முதலில் குடியேறும் தாவரங்கள் __________ என்று அழைக்கப்படுகின்றன.
முன்னோடி சிற்றினங்கள்
படிநிலை
சுய வழிமுறை வளர்ச்சி
வேற்று வழிமுறை வளர்ச்சி
3.
உணவு வலையின் முக்கியத்துவம்?
இது இயற்கையின் சமநிலையை தக்க வைப்பதில்லை
இது ஆற்றல் பரிமாற்றங்களை வெளிப்படுத்துகிறது
சிற்றினங்களிடையே நிகழும் இடைவிளைவை விளக்குகிறது
ஆ மற்றும் இ
4.
குளச் சூழல்மண்டலத்தின் ஆழ்மிகு மண்டலம் முக்கியமாக சார்பு ஊட்ட உயிரிகளை கொண்டுள்ளது. ஏனென்றால் _______.
மிகை ஒளி ஊடுருவல் தன்மை
பயனுள்ள ஒளி ஊடுருவல் இல்லை
ஒளி ஊடுருவல் இல்லை
அ மற்றும் ஆ
5.
சூழல் மண்டலத்தில் ஊட்டங்களின் மறுசுழற்சிக்கு சமநிலைபாட்டிற்கும் தேவைப்படும் முக்கியமான செயல் எது?
6.
ஆற்றல் ஒட்டம் எனப்படுவது யாது?
7.
உயிரித்திரள் ஏன் சூழல் மண்டலத்தின் உற்பத்தித்திறனை எனப்படுகிறது?
8.
ஆற்றல் பிரமிட் எப்பொழுது நேரானவை காரணம் கூறு.
9.
பசுமைக்குச் செல்லும் விதமாக நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளும் பண்புகள் யாவை?
10.
" ஒவ்வொரு ஆற்றல் மாற்றத்தின் போதும் அமைப்பில் உள்ள கட்டிலா ஆற்றல் அளவு குறைக்கப்படுகிறது". இக்கூற்று எதைக் குறிப்பிடுகிறது?
11.
12.
கார்பன் சுழற்சி என்றால் என்ன? கார்பன் சுழற்சியின் படம் வரைக.
13.
ஒளிச்சேர்க்கையில் எந்த வகையான சூரிய கதிர்வீச்சுகள் பயன்படுகின்றன என்பதை விளக்குக? (அ) "ஒளிச்சேர்க்கை சார் செயலூக்கக் கதிர்வீச்சு எல்லா நேரங்களிலும் நிலையாக இருப்பதில்லை ஏனென்றால் மேகங்கள், மரநிழல்கள், காற்று, தூசு துகள்கள், பருவகாலங்கள், அட்சரேகை, பகலில் -சூரிய ஒளியின் அளவு" இவற்றால் மாறுபடுகிறது. எனவே ஒளிச்சேர்க்கை சார் செயலூக்கக் கதிர்வீச்சு என்றால் என்ன? இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
14.
கீழ்கண்ட விவரங்களைக் கொண்டு ஒரு பிரமிட் வரைந்து சுருக்கமாக விளக்குக.
உயிரினங்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது-பருந்து - 50, தாவரங்கள் -1000, முயல் மற்றும் எலி - 250 + 250, பாம்பு மற்றும் ஓணான் 100 + 50.
15.
உறுதிப்படுத்துதல் : சூழியியல் பிரமிட்கள் என்பவை சூழல் மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை குறிக்கும் திட்ட வரைபடங்கள்.
காரணம் : பல்வேறு உணவுச்சங்கிலியின் ஊட்டமட்டங்கள் சூழியல் பிரமிடுகளில் கணக்கிடப்படுகிறது.
அ) உறுதிப்படுத்துதல் மற்றும் காரணம் சரியல்ல
ஆ) உறுதிப்படுத்தலுக்கு ஏற்ற காரணம் அல்ல
இ) உறுதிப்படுத்துதல் மற்றும் காரணம் இரண்டுமே சரியல்ல
ஈ) காரணம் உறுதிப்படுத்துதலோடு தொடர்புடைய விளக்கம்
16.
தாவரங்கள் திறம்பட ஒளிச்சேர்க்கை செய்ய அதிக அளவில் எந்த ஒளிக்கதிர்களை ஈர்க்கின்றன.
17.
சாலிக்ஸ், கார்னஸ் மற்றும் மரங்கள் பாப்புலஸ், அல்னஸ் போன்றவை காணப்படும் வழிமுறை நிலை _________
1.
(a)
குளம் மற்றும் ஏரி
2.
(a)
முன்னோடி சிற்றினங்கள்
3.
(d)
ஆ மற்றும் இ
4.
(b)
பயனுள்ள ஒளி ஊடுருவல் இல்லை
5.
சிதைத்தல் என்னும் செயல் சிதைவுக் கூளங்களை (இறந்த தாவரங்கள், விலங்குகள் மற்றும் அதன் கழிவுகள்) சிதைப்பவைகளால் சிறிய கரிமப் பொருளாக உடைக்கப்படும் செயல்முறைக்கு சிதைத்தல் என்று பெயர்.
6.
1. சூழல் மண்டலத்தில் ஆற்றல் ஊட்ட மட்டங்களுக்கிடையே பரிமாற்றம் அடைவது ஆற்றல் ஓட்டம்.
2. இதுவே சூழல் மண்டலத்தின் முக்கிய செயல்பாடு ஆகும்.
7.
1. ஓர் அலகு இடத்தில் தாவரங்களின் எண்ணிக்கை அல்லது உயிரித்திரள் அடிப்படையில் குறிப்பிடப்படுகிறது.
2. இது கிராம் / சதுர மீட்டர் / வருடம் (அ) கிலோகலோரி / சதுரமீட்டர் / வருடம் ஆகிய அலகுகளால் குறிப்பிடப்படுகிறது.
8.
1. ஆற்றல் பிரமிட் எப்பொழுதும் நேரானது ஏனென்றால் ஆற்றல் பிரமிடின் அடிப்பகுதியில் உற்பத்தியாளர்கள் உள்ளதே இதற்கு காரணம்.
2. ஆற்றல் பிரமிட்டின் அடிப்பகுதியில் உள்ள உற்பத்தியாளர்கள் முதல் இறுதி மட்டம் வரையுள்ள அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் ஆற்றல் கடத்தல் படிப்படியாக குறைகிறது.
[1000 J ➝ ஜுல்கள் ➝ 10 ஜூல்கள் ➝ 1 ஜூல்கள் ➝ 0.1 ஜூல்கள்]
3. எனவே ஆற்றல் பிரமிட் எப்பொழுதும் நேரானது.
9.
1. பயன்படுத்தாத போது தண்ணீர் குழாயை மூடுதல்.
2. பயன்படுத்தாத போது மின்சாதனப் பொருட்களை அணைத்து வைத்தல்.
3. நெகிழியை ஒருபோதும் பயன்படுத்தாமல் அவற்றிற்கு மாற்றாக உயிரியல் சிதைவடையும் பொருட்களை பயன்படுத்துதல்.
4. சூழல் நட்புடைய தொழில்நுட்பத்தையும் பொருட்களையும் எப்போதும் பயன்படுத்துதல்.
10.
1. இது வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியை கூறுகிறது.
2. ஆற்றல் மாற்றம் 100% முழுமையாக இருக்க முடியாது.
3. ஆற்றல் ஒரு உயிரினத்திலிருந்து மற்றொன்றிற்கு உணவு வடிவில் கடத்தப்படும் பொழுது அதிகப்படியான ஆற்றல் வெப்பமாக சிதறடிக்கப்படுகிறது. (எ.கா) பத்து விழுக்காடு விதி
11.
12.
உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே நடைபெறும் கார்பன் ஓட்டத்திற்கு கார்பன் சுழற்சி என்று பெயர்.
13.
1. தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குக் கிடைக்கக்கூடிய ஒளியின் அளவு ஒளிச்சேர்க்கைசார் செயலூக்க கதிர்வீச்சு எனப்படுகிறது.
2. இது 400-700 nm க்கு இடைப்பட்ட கதிர்வீச்சாகும். இது ஒளிச்சேர்க்கைக்கும் தாவர வளர்ச்சிக்கும் இன்றியமையாததாகும்.
3. பொதுவாக தாவரங்கள் திறம்பட ஒளிச்சேர்க்கை செய்ய அதிக அளவில் நீலம் மற்றும் சிவப்பு நிற ஒளிக்கதிர்களை ஈர்க்கின்றன.
4. மொத்த சூரிய ஒளியில் வளிமண்டலத்தை அடையும் 34% மீண்டும் வளிமண்டலத்திற்கே திருப்பப்படுகிறது.
5. 10% ஓசோன், நீராவி வளிமண்டல வாயுக்களால் ஈர்க்கப்படுகிறது.
6. மீதமுள்ள 56% மட்டுமே பூமியின் மேற்பரப்பை வந்தடைகிறது. இதில் 2-10% தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்காக பயன்படுகிறது மீதி வெப்பமாக சிதறடிக்கப்படுகிறது.
7. ஒளிச்சேர்க்கை சார் செயலூக்க கதிர்வீச்சின் அளவு சிலிகான் ஒளிமின் காண்கலம் ஒன்றின் உதவியால் நுண்ணறியப்பட்டு மில்லி மோல்கள் / சதுரமீட்டர் / வினாடி என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது.
8. இதில் 400-700 nm அலைநீளம் கொண்ட ஒளியை மட்டுமே நுண்ணறிய முடியும்.
9. ஒளிச்சேர்க்கை சார் செயலூக்கத்திற்கான கதிர்வீச்சின் அளவு 0-3000 மில்லி மோல்கள்/ சதுரமீட்டர் / வினாடி ஆகவும் உள்ளது.
10. இரவு நேரங்களில் PAR பூஜ்யமாகவும் கோடை காலங்களில் மதிய வேளையில் PAR 2000-3000 மில்லி மோல்கள் சதுரமீட்டர் / வினாடி ஆகவும் உள்ளது.
14.

1. ஒரு சூழல் மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் காணப்படும் கரிமப்பொருட்களின் (உயிரித்திரள்) அளவை குறிக்கும் திட்ட வரைபடம் உயிரித்திரள் பிரமிட் என்று அழைக்கப்படுகிறது.
2. புல்வெளி மற்றும் வனச்சூழல் மண்டலத்தில் உயிரித்திரளின் அளவு அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் உற்பத்தியாளர்களில் தொடங்கி இறுதி உண்ணிகள் (மூன்றாம் நிலை நுகர்வோர்) வரை படிப்படியாகக் குறைகிறது.
3. எனவே இந்த இரண்டு சூழல்மண்டலங்களிலும் உயிரித்திரள் பிரமிட் நேரான பிரமிட்டாக உள்ளது.
15.
காரணம் உறுதிப்படுத்துதலோடு தொடர்புடைய விளக்கம்
16.
( )
நீலம் மற்றும் சிவப்பு
17.
( )
புதர்ச்செடி நிலை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards