12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/01/2020
தாவரவியல் - தாவரத் திசு வளர்ப்பு
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
சோதனைக் குழாயில் (அ) குடுவையில் காற்றோட்டம் உண்டாக்க பயன்படும் கருவி
லாமினார் காற்றோட்ட அறை
காற்று வடிகட்டி
தானியங்கி குலுக்கி
தன்னழுத்தக்கலன்
2.
ஜெர்ம் பிளாசம் பாதுகாப்பில் இடம் பெறாதது
DNA வங்கி
விதை வங்கி
சுவிஸ் - வங்கி
மகரந்த வங்கி
3.
தன்னழுத்தக்கலனைப் பயன்படுத்தி நுண்ணுயிர் நீக்கம் செய்வதற்கு ________ நிமிடங்கள் மற்றும் ________ வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகிறது.
10 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 125oC
15 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 121oC
15 முதல் நிமிடங்கள் மற்றும் 125oC
10 முதல் 20 நிமிடங்கள் மற்றும் 121oC
4.
ELSI - ஆய்விற்கான எங்கிருந்து பண உதவி பெறப்படுகிறது?
5.
MS வளர்வூடகத்தின் பல்வேறு கூறுகள் யாவை?
6.
முராகிஷி மற்றும் ஸ்கூக் ஆகியோரின் திசு வளர்ப்பில் இவர்களது பங்களிப்பைத் தருக.
7.
செல் வளர்ப்பு நிலையில் உள்ள பல்வேறு படிநிலைகளை எழுதுக.
8.
GEAC இன் பணிகள் யாது?
9.
வைரஸ் அற்ற தாவரங்களை உருவாக்குவது ஏன் அவசியம்?
10.
வளர்ப்பு தொழில்நுட்பத்தை, பயன்படுத்தப்படும் பொருள்களின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்துவாய்? அதனை விளக்குக.
11.
புரோட்டோபிளாச வளர்ப்பின் படிகளை விளக்குக.
12.
செயற்கை விதை தயாரிப்பிற்கான நெறிமுறையை எழுதுக.
13.
அ) காப்புரிமை என்பது அதன் கண்டுபிடிப்பாளருக்குப் பிறர் அதை, தயாரித்தல் பயன்படுத்துவது மற்றும் விற்பதிலிருந்து பாதுகாப்பு தருகிறது.
ஆ) IPR இல் விளம்பர உரிமைகள் உள்ளடங்குவதில்லை.
இ) USA முன்பு இந்திய ரக பாசுமதிக்கான காப்புரிமத்தைக் கொண்டிருந்தது.
ஈ) வளர்ந்து வரும் நாடுகளின் மக்களின் பாரம்பரியம் சார்ந்த அறிவியல் அறிவானது, வளர்ந்து விட்ட நாடுகள் (அ) MNC - களால் சுரண்டப்படுவது உயிரிப்பொருள் கொள்கை எனப்படும்.
14.
அ) டாக்கேபெ - புகையிலைத் தாவரங்களை தனிமைப்படுத்தப்பட்ட மீசோஃபில் செல் புரோட்டோபிளாஸ்ட்களைக் கொண்டு மீண்டும் உருவாக்கினார்கள்.
ஆ) மோரல் மற்றும் மார்டின் உயிரி பாதுகாப்பு மற்றும் உயிரி அறநெறியை உருவாக்கினார்.
இ) திசு வளர்ப்பிற்குத் தேவையான ஒளிக்காலம் 12-18மணிநேரம்
ஈ) திசு வளர்ப்பின் pH - 5-க்குக் குறைவாக இருக்க வேண்டும்.
15.
உறுதிப்படுத்துதல் (A): உயிரிக்காப்புரிமை, உயிர்க் கொள்கையை ஆதரிக்கிறது.
காரணம் (R): உயிர்பாதுகாப்பு நெறிமுறை, உயிரிக்கொள்ளை பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறது.
அ) 'A' மற்றும் 'R' சரியானது - ''R', 'A'-ஐ சரியாக விளக்குகிறது.
ஆ) 'A' மற்றும் 'R' சரியானது. ''R', 'A'-ஐ சரியாக விளக்கவில்லை.
இ) 'A' சரியானது 'R' தவறானது
ஈ) 'A' மற்றும் 'R' தவறானது
1.
(c)
தானியங்கி குலுக்கி
2.
(a)
DNA வங்கி
3.
(b)
15 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 121oC
4.
(i) நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மற்றும் US - ன் டிபார்ட்மென்ட் ஆஃப் எனர்ஜியானது.
(ii) மனித மரபணு தொகையை செயல்திட்டத்தின் பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு
(iii) ELSI ஆய்விற்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
5.
1. பெரும் ஊட்டப்பொருட்கள்
2. நுண் ஊட்டப்பொருட்கள்
3. சிறிய ஊட்டப்பொருட்கள்
4. இரும்புப் பொருட்கள்
5. வைட்டமின்கள்
6. வளர்ச்சி ஹார்மோன்கள்
இவற்றுடன் திடப்படுத்தும் காரணி அகார். இவை அனைத்தும் குறிப்பிட்ட விகிதத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
6.
(i) திசு வளர்ப்பு ஊடகத்தை முறைப்படுத்தினார்கள். இது திசு வளர்ப்பின் மைல்கல்லாகும்.
(ii) அனைத்து வகையான திசு வளர்ப்புக்கும் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய ஊடகமாகும்.
7.
வரையறை:
சில தனிச் செல்களையோ (அ) செல் தொகுப்பையோ நீர்ம ஊடகத்தில் ஆய்வுக் கூட சோதனை முறையில் வளர்க்கும் முறை - செல் மிதவை வளர்ப்பு எனப்படுவது.
8.
GEAC - மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழு
1. சூழலியல், வனங்கள், காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் அமையும் ஒரு மதிப்பீட்டு முதன்மை குழு
2. ஒழுங்குபடுத்தல்
மரபணு மாற்றமடைந்த (GMOs) போன்றவற்றின் உற்பத்தி பயன்பாடு, இறக்குமதி, ஏற்றுமதி, சேமிப்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்துகிறது.
3. மேலும் தீங்கு செய்யும் உயிரிகளையும் பெரிய அளவில் பயன்படுத்துவதில் ஈடுபட்டுள்ள செயல்பாடுகளுக்கு அனுமதியளிக்க (அ) கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட முக்கிய அமைப்பு
4. மேலும் சோதனை அடிப்படையில் கள முயற்சிகளையும் உள்ளடக்கிய சூழலில் மரபணு மாற்றமடைந்த உயிரிகளையும், உயிரிப்பொருட்களையும் வெளியிடுவது தொடர்பான செயல்திட்டங்களும் கள முயற்சிகள் BRI - I, BRI - II & BRI - III என மூன்று கட்டங்களுக்குப் பின்னரே அனுமதியளிக்கிறது.
9.
(i) வேதிப்பொருட்களைக் கொண்டு பூஞ்சை, மைக்கோபிளாஸ்மா போன்ற நோய்க்கிருமிகளை அழிப்பது எளிது. ஆனால் நோய் தொற்றை உண்டாக்கும் வைரஸ்களை அழிப்பது அரிது தாவரங்களுக்கு வைரஸால் உண்டாக்கப்படும் பொருளாதாரச் சேதம் அதிகம்.
(ii) தண்டு நுனி ஆக்குத்திசு வளர்ப்பு மூலம் வைரஸ் அற்ற தாவரங்களை உருவாக்க இயலும் - ஏனெனில் தண்டு நுனியில் வைரஸ் தொற்று காணப்படுவதில்லை.
10.
பிரிகூறு அடிப்படையில் தாவரத்தில் வளர்ப்பின் வகைகளாவன
1. உறுப்பு வளர்ப்பு
2. ஆக்குத்திசு வளர்ப்பு
3. புரோட்டோ பிளாஸ்ட் வளர்ப்பு
4. செல் மிதவை வளர்ப்பு
1. உறுப்பு வளர்ப்பு
2. ஆக்குத்திசு வளர்ப்பு
வளர்ஊடகத்தில் ஆக்குத்திசுவை வளர்த்தல்
3. புரோட்டோ பிளாஸ்ட் வளர்ப்பு
(செல்சுவரற்ற, ஆனால் செல்சவ்வு (அ) பிளாஸ்மா சவ்வினால் சூழப்பட்ட செல் அமைப்பாகும்) புரோட்டாபிளாஸ்ட்டை பயன்படுத்தி ஒற்றைச் செல்லிலிருந்து முழுத் தாவரத்தை மீளுருவாக்கம் செய்து இரு புரோட்டோபிளாஸ்டுகளை இணைத்து (உடலக் கலப்பினம்) உடல கலப்பின செல்களை உருவாக்க இயலும்.
4. செல் மிதவை வளர்ப்பு
கேலஸிலிருந்து செல்கள் தனிமைப்படுத்தப்பட்டு திரவ ஊடகத்தில் செல்மிதவை வளர்ப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இரண்டாம் நிலை வளர்சிதை பொருட்கள் உற்பத்தி
செல் மிதவை வளர்ப்பின் மூலமாக இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் சில உத்திகள் (உயிரிசார் நிலை மாற்றம், வளர்சிதை மாற்றப் பொருள் தூண்டல் மற்றும் முடக்க வளர்ப்பு முறை) பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்படுகின்றன.
11.
செல் சுவரற்றை செல்லின் பிற பகுதிகள் புரோட்டோபிளாஸ்ட் எனப்படும் (செல் சவ்வு - சைட்டோபிளாசம் + உட்கரு நுண்ணுறுப்புகள்)
1. படிகள்
II. புரோட்டோபிளாஸ்ட்கள் இணைதல்
தகுந்த இணைவுக் காரணியாக (PEG) பாலிஎத்திலீன் கிளைக்கால் மூலம் நிகழ்கிறது.
III. புரோட்டோபிளாஸ்ட் வளர்ப்பு
அ) புரோட்டோபிளாஸ்ட் உயிர்ப்புத்திறன் சோதனை
ஃப்ளூரசின் டைஅசிட்டேட்டைக் கொண்டு உயிர்ப்புத்திறன் சோதிக்கப்படுகிறது.
ஆ) M.S வளர்ப்பு ஊடகத்தில் வளர்ப்பு
நுண் துளி தட்டு (அ) நுண் துளி வரிசை (array) முறையில் வளர்க்கப்படுதல்.
இ) அடைகாத்தல் (Incubation)
25o C வெப்பநிலையில் முதல் 1000 - 2000 லக்ஸ் ஒளிச் செறிவில் வைக்கப்படுகிறது. (24 - 48) மணிநேரம்
ஈ) செல்சுவர் தோன்றல் (24 - 48 மணிநேரத்திற்குப் பின்)
உ) செல்பிரிதல் நடத்தல் (2- 7 நாட்கள்)
IV. உடல் கலப்பினச் செல்களைத் தேர்ந்தெடுத்தல்
1. வேறுபட்ட செல்களின் உட்கரு அற்ற புரோட்டோபிளாஸ்ட் ⟶ இணைத்துப் பெறுவது சைபிரிட்
2. இதற்கு பின்பு உட்கரு இணைதல்
இந்த நிகழ்வு உடலக் கலப்பினமாக்கல் என அழைக்கப்படும்.
12.
செயற்கை விதைகள்: தாவரத்தின் எந்த ஒரு செல் பகுதியிலிருந்து பெறப்பட்ட தனிச் செல்களை ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பு கருவுருக்களைக் கொண்டு சில உயிர்தொழில்நுட்ப முறையில் செய்யப்பட்ட இயற்கை விதைகளைப் போன்ற செயற்கை விதைகள்.
13.
ஆ) IPR இல் விளம்பர உரிமைகள் உள்ளடங்குவதில்லை.
14.
( )
அ) டாக்கேபெ - புகையிலைத் தாவரங்களை தனிமைப்படுத்தப்பட்ட மீசோஃபில் செல் புரோட்டோபிளாஸ்ட்களைக் கொண்டு மீண்டும் உருவாக்கினார்கள்.
15.
இ) 'A' சரியானது 'R' தவறானது
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards