12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
தாவரவியல் - குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
மறுகூட்டிணைவு நிகழ்விரைவு 0.09 என இருந்தால், A மற்றும் B என்ற இரு அல்லீல்களை பிரிக்கும் வரைபட அலகு எதுவாக இருக்கும்?
900 cM
90 cM
9 cM
0.9 cM
2.
கூற்று: காமா கதிர்கள் பொதுவாகக் கோதுமை வகைகளில் சடுதிமாற்றத்தைத் தூண்டப் பயன்படுகிறது.
காரணம்: ஏனெனில் அணுவிலிருந்து வரும் எலக்ட்ரான்களை அயனியாக்க இயலாத குறைவான ஆற்றலை எடுத்துச்செல்கிறது.
கூற்று மற்றும் காரணம் சரி.
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி.
கூற்று மற்றும் காரணம் தவறு
3.
மக்காச்சோளத்தில் முழுமையற்ற பிணைப்பின் காரணமாக, பெற்றோர் மற்றும் மறுகூட்டிணைவு வகைகளின் விகிதங்கள் _______.
50:50
7 :1: 1:7
96.4: 3.6
1 :7 :7 :1
4.
முப்புள்ளி சோதனைக் கலப்பின் மூலம் துல்லியமான மரபணு வரைபடம் வரைய முடியும் ஏனெனில் இதன் அதிகரிப்பால்
ஒற்றைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது
இரட்டைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது
பல் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது
மறுகூட்டிணைவு நிகழ்விரைவு சாத்தியமாகிறது
5.
ஒரு அயல் அறுமடியம் கொண்டிருப்பது ____.
ஆறு வேறுபட்ட மரபணுத்தொகையம்
மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையம் ஆறு நகல்கள்
மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையத்தின் இரண்டு நகல்கள்
ஒரு மரபணுத்தொகையத்தின் ஆறு நகல்கள்
6.
தவறுதலாகப் பொருள்படும், பொருளுணர்த்தாத சடுதிமாற்றத்திற்கு இடையேயான வேறுபாடு என்ன?
7.
PV/PV என்ற ஓங்கு மரபணு கொண்ட ஆண் டுரோசோஃபிலாவை இரட்டை ஒடுங்கு மரபணு கொண்ட பெண் டுரோசோஃபிலாவுடன் கலப்பு செய்து F1 ஐ பெறுக. பின்பு F1 ஆண் பழப் பூச்சியை இரட்டை ஒடுங்கு பெண் பழப் பூச்சியுடன் கலப்பு செய்க.
i) எந்த வகையான பிணைப்பை காணமுடியும்
ii) சரியான மரபணு வகையை கலப்பினை வரைக .
iii) F2 சந்ததியின் சாத்தியமான மரபணு வகையம் என்ன?
8.
ஒரே பெற்றோரிடமிருந்து பெறப்படும் வேறுபட்ட மரபணுக்கள் ஒன்றாகவே காணப்படும் பொழுது,
i) நிகழ்வின் பெயர் என்ன?
ii) தகுந்த எடுத்துக்காட்டுடன் கலப்பினை வரைக .
iii) புறத்தோற்ற விகிதத்தை எழுதுக.
i) எந்த வகையான பிணைப்பை காணமுடியும்
ii) சரியான மரபணு வகைய கலப்பினை வரைக .
iii) F2 சந்ததியின் சாத்தியமான மரபணு வகையம் என்ன?
9.
மூலக்கூறு அடிப்படையிலான DNA மறுகூட்டினைவு செயல்முறையில் பங்குபெறும் படி நிலைகளைப் படத்துடன் எழுதுக.
10.
குறுக்கேற்ற செயல்முறையை விளக்குக.
11.
சட்டன் மற்றும் பொவேரி கோட்பாட்டின் சிறப்பு அம்சங்களை எழுதுக.
12.
13.
மரபணு வரைபடம் என்றால் என்ன? இதன் பயன்களை எழுதுக.
1.
(c)
9 cM
2.
(b)
கூற்று சரி. காரணம் தவறு.
3.
(b)
7 :1: 1:7
4.
(d)
மறுகூட்டிணைவு நிகழ்விரைவு சாத்தியமாகிறது
5.
(c)
மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையத்தின் இரண்டு நகல்கள்
6.
| தவறுதலாக பொருள்படும் தகுதிமாற்றம் | பொருளுணர்த்தாத சடுதிமாற்றம் |
| ஒரு அமினோ அமிலத்திற்கான கோடான் அல்லது மரபுக்குறியன் வேறோரு அமினோ அமிலத்திற்கான கோடான் (அ) மரபுபுக்குறியன் மாறுவதால் அமினோ அமிலவரிசையில் மாற்றம் ஏற்படுகிறது. Eg.TTA ⟶ AAT அமினோ அமிலம் லியூசின் |
ஒரு அமினோ அமிலத்திற்கான கோடான (அ) மரபுக்குறியின் முடிவு (அ) நிறுத்துக்குறியனாக மாற்றமடையும் சடுதிமாற்றம் தவறுதலாகப் பொருள்படும் (அ) ஒத்திலாச் சடுதி மாற்றம் என்று பெயர். Eg.TTA ⟶ AAT நிறுத்தக்குறியின் UAA |
7.
i) முழு பிணைப்பு
ii)

8.
இந்த நிகழ்வின் பெயர் பிணைதல் இது பட்டாணி (லாத்திரஸ் ஒடோரேடஸ்) தாவரத்தில் வில்லியம் பேட்சன் மற்றும் ரெஜினால்ட் சி-புன்னெட் ஆகியோர்களால் 1906-இல் கண்டறியப்பட்டது, ஒரே ஒத்திசைவு குரோமோசோம்களில் காணப்படும் இரு ஓங்குதன்மை அல்லீல்கள் (அ) ஒடுங்குதன்மை அல்லீல்கள் ஒரே கேமிட் மூலம் ஒன்றாகவே மரபு வழி அடைந்தால் இணைப்பு (அ) சிஸ்வகை எனப்படும்.
அதே நேரம் இதே தன்மையுடைய அல்லீல்கள் குலல்வேறு குரோமோசோம்களில் அமைந்து வேறுபட்ட கேமிட்கள் மூலம் தனியாகவே மரபுவழி அடைந்தால் அதற்கு விலகல் (அ) டிரான்ஸ்வகை என்று பெயர்.
இவையிரண்டும் பிணைப்பின் இரு கூறுகளாகும்.

9.
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறுக்கேற்றத்தின்போது உருவாகும் DNA மறு கூட்டிணைவு மாதிரி ஹாலிடேவின் கலப்பு மாதிரியாகும்.
1964ல் ராபின் ஹாலிடே என்பவரால் முன்மொழியப்பட்டது
படிநிலைகள்:
1. ஒத்திசைவு DNA மூலக்கூறுகள் அதன் இரட்டிப்படைந்த DNA பிரதிகளுடன் அருகமைந்து இணை சேர்கிறது.
2. DNA வின் ஒரு இழை எண்டோநியூக்ளியேஸ் நொதி மூலம் துண்டிக்கப்படுகிறது.
3. துண்டான இழைகள் குறுக்கமைந்து ஒத்திசைந்த இழையுடன் இணைந்து ஹாலிடே சந்திப்பு உருவாகிறது.
4. இது தோன்றிய இடத்திலிருந்து இடம் பெயர்கிறது. இது கிளை இடப்பெயர்வு - எனப்படுகிறது.
5. வேற்றமைந்த ஈரிழைபகுதி உருவாகிறது
6. DNA இழைகள் துண்டிக்கப்படுத்தல் V வழியாக கிடைமட்ட மாதிரி (H வழியாக) செங்குத்தான துண்டிப்பு நிகழ்ந்தால் மறுகூட்டிணைவுடன் கூடிய வேற்றமைந்த ஈரிழை உருவாகும்.
7. கிடைமட்டத்துண்டிப்பு -நிகழ்ந்தால் மறு கூட்டிணைவு அற்ற வேற்றமைந்த ஈரிழை உருவாகும்.
10.
ஒத்திசைவு குரோமோசோம் இணைகளின் சகோதரி அல்லாத குரோமோடிட்களுக்கிடையே இணையான துண்டுகள் பரிமாற்றப்பட்டு புதிய மரபணு சேர்க்கை தோன்றும் உயிரிய நிகழ்விற்குக் குறுக்கேற்றம் என்று பெயர்.
இதில் பல நிலைகளை உடையது
1) இணை சேர்தல்
2) நான்கமை உருவாதல்
3) குறுக்கேற்றம் மற்றும் முடிவுறுதல்
i) இணை சேர்தல்:
புரோபேஸ் 1 இன் சைக்கோட்டின் நிலையில் இரண்டு ஒத்திசைவு குரோமோசோம்களுக்கிடையே நெருங்கிய இணை உருவாகிறது.
இது இரட்டை இணை (அ) பைவாலண்ட், இது இணைசேர்தல் (அ) சினாப்சிஸ் என்று பெயர் இணைதல் தொடங்குவதைப் பெருத்து 3 வகைப்படும்.
1. மையம் தொடங்கி இணைசேர்தல்
2. நுனி தொடங்கி இணைசேர்தல்
3. இடையிலா இணை சேர்தல்
ii) நான்கமை உருவாதல்:
இரட்டை இலையில் -இரண்டு ஒத்த அமைப்புடைய சகோதரி குரோமாடிட்களை உருவாகத் தொடங்குகிறது - இதில் நான்கு குரோமோடிடுகளைப் பெற்றிருக்கிறது -நான்கமை நிலை என்று
iii) குறுக்கேற்றம்:
பாக்கிடீன் நிலையில் குறுக்கேற்றம் நிகழ்கிறது-
ஒத்திசைவு குரோமோசோம்களின் சகோதரி அல்லாத குரோமோடிடுகளுக்கிடையேே இணைவுப்புள்ளிகள் (கயாஸ்மாக்கள்)- எனும் (X) வடிவ அமைப்பு உருவாகிறது. இவற்றில் குரோமோடிடுகள் உடைந்து துண்டுகள் பரஸ்பரம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
1) அண்மைக்கால ஆய்வு: மேம்படுத்தப்பட்ட இழை அமைப்பு கொண்ட இணை பிணைப்புக் கூட்டமைப்பு -இணைசேர்தல் (அ) கயாஸ்மா தோன்றுதலுக்கு வழி வகுக்கிறது. (விதி விலக்கு - சில ஆண் டுரோசோஃபிலா வில் இணைப்பிணைப்புக் கூட்டமைப்பு உருவாவதில்லை)
iv) முடிவுறுதல்:
குறுக்கேற்றத்தின் பின் கயாஸ்மாவானது குரோமாடிட்களின் நுனிப்பகுதியை நோக்கி நகர்கிறது இது முடிவுறுத்தல் எனப்படுகிறது. ஒத்திசைவு குரோமோசோம்கள் முழுமையாகப் பிரிகிறது.
11.
1. சைகோட் (அ) கருமுட்டை தொடர்ச்சியான செல் பகுப்பின் மூலம் ஒரு உயிரினத்தின் உடலம் உருவாகிறது.
2. உடல்செல்கள் - இதில் இரண்டு ஒத்த குரோமோசோம் தொகுதிகளைக் கொண்டுள்ளது (தந்தை வழி ஒன்று மற்றொன்று தாய்வழி ஒன்று) இதற்கு ஒத்திசைவு குரோமோசோம்கள் என்று பெயர்.
3. ஒவ்வொரு குரோமோசோமும் தனித்துவமான அமைப்பு மற்றும் தனித்தன்மை உடையது.
4. ஒவ்வொரு குரோமோசோமும் மரபணுக்களால் ஆனவை.
5. கேமிட்டுகளின் உருவாக்கத்தின் போது ஒத்திசைவான குரோமோசோம்கள் தனித்தனியாக பிரிவது - மரபணுக்கள் குரோமோசோம்கள் மீது காணப்படுகிறது என்ற உண்மையை உறுதிப்படுத்துகிறது.
12.

13.
1. குரோமோசோம்களில் மரபணுக்கள் ஒரே சீரான நேர்கோட்டில் அமைந்துள்ளன - இது அமைவிடம் எனப்படும்
2. மரபணு அமைவிடம். அருகே உள்ள மரபணுக்களை இடையேயுள்ள தொலைவு-ஆகியவற்றைக் குறிப்பது.
3. மரபணு வரைபடம் (பிணைப்பு வரைபடம்)
4. இந்தக் கருத்தாக்கம் ஆல்பிரட் H.ஸ்டர்டிவண்ட் 1913 இல் உருவாக்கப்பட்டது பயன்கள்
5. மரபணுக்களின் வரிசை அமைவிடம் அடையாளம் காணவும் அவற்றிற்கிடையேயான தூரம் ஆகியவற்றை அறிய முடிகிறது
6. இரு இப்பண்பு மற்றும் மூன்று பண்பு கலப்புகளின் முடிவுகளை கணிக்க பயன்படுகிறது
7. ஒரு உயிரினத்தின் சிக்கலான மரபணு தன்மையினை அறிய முடிகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards