12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/01/2020
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
புவி வெப்பமாதலை குறைக்க இரண்டு கார்பன் சேமிப்பு முறைகளை எழுதுக.
2.
சூழிலியல் வழிமுறை வளர்ச்சியின் பண்புகள் எவ்வாறு வழிமுறை வளர்ச்சிக்கு உதவுகிறது? (அ) சூழிலியல் வழிமுறை வளர்ச்சியின் பண்புகள் யாவை?
3.
சூழல்மண்டலம் வரையறு. சூழல் மண்டலத்தின் கூறுகளை விளக்குக.
4.
RNA குறுக்கீடு என்றால் என்ன?
5.
எலைசா தொழில்நுட்பம் எய்ட்ஸ் நோயை கண்டறிய உதவும் முதல் நிலை தொழில்நுட்பமாகும். விளக்குக.
6.
வாய்மொழி மருத்துவ முறை எது? விளக்குக.
7.
மரபணு அமைவிடங்கள் A/a மற்றும் D/d இவை மிக நெருக்கமாக அமைந்திருப்பதால் அவற்றிடையே மறுசேர்க்கை காணப்பட வாய்ப்பில்லை.
8.
பன்மடிய பயிர்பெருக்கம் பற்றி விவரி
9.
சூலின் வகைகளை விவரி?
10.
தொற்றுத்தாவரங்கள் என்றால் என்ன? அதன் புறஅமைப்பு தகஅமைவுகள் யாவை?
11.
மூன்று பண்பு கலப்பை விவரி
12.
புரோட்டோபிளாச வளர்ப்பின் படிகளை விளக்குக.
13.
நீர் மாசுறுதலின் மூல ஆதாரங்கள் யாவை?
14.
இரண்டு படிநிலை புரதச்சேர்க்கை நிகழ்ச்சியின் அனுகூலங்கள் யாவை?
15.
'சாதாரண சளிக்கு' எதிராக தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய முடியாதது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
16.
பனிக்குடத் துளைப்பு எனும் வளர்கரு பால் கண்டறியும் ஆய்வு நம் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது. இது தேவைதானா?கருத்தைத் தெரிவிக்கவும்.
17.
கீழேயுள்ள படத்தில் பெண்ணின் அண்டகத்தில் ஏற்படும் தொடர் நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன.

அ) அண்டசெல் விடுபடும் படத்தை அடையாளம் கண்டு, அண்டசெல் உருவாக்கத்தில் அது எந்த நிலையைக் குறிக்கிறது என்பதையும் கண்டறிக.
ஆ) மேற்கண்ட நிகழ்வுகளுக்குக் காரணமான அண்டக மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.
இ) அதே நேரத்தில், எதிர் பார்க்கப்படும் கருப்பை மாற்றங்களை விளக்குக.
ஈ) C மற்றும் H நிலைகளுக்கிடையேயுள்ள வேறுபாட்டை எழுதுக.
18.
குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்களை எழுதுக?
19.
இளவுயிரி நிலை எவ்வாறு இனப்பெருக்க நிலையிலிருந்து வேறுபட்டுள்ளது?
1.
1. கார்பன் கவரப்படுத்தல் மற்றும் சேமிப்பு என்பது வளிமண்டலத்தின் கார்பன்-டை-ஆக்ஸைடை உயிரித் தொழில்நுட்பம் மூலமாகக் கைப்பற்றி ஒரு கிலோமீட்டர் அல்லது அதற்கு கீழான ஆழத்தில் உள்ள நிலத்தடிப் பாறைகளுக்கிடையே உட்செலுத்திச் சேமிக்கும் முறையாகும்.
2. புவி வெப்பமாதலை மட்டுப்படுத்தும் ஓர் அணுகுமுறையாகும்.
3. நிலைத்த சேமிப்பிற்காகப் பல பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள் இதற்காகப் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பெருங்கடல்களில், திரவச் சேமிப்பாகவும், உலோக ஆக்ஸைடைப் கார்பன்-டை-ஆக்ஸைடை குறைத்தல் மூலம் திடமான கார்பனேட்டாக மாற்றி உலர் அல்லது திடச் சேமிப்பாகவும் சேமித்து வைக்கப்படுகிறது. இது புவியியல் சேகரிப்பு என்றும் அறியப்படுகிறது.
கார்பன் சேகரிப்பு :
4. கார்பன் சேகரிப்பு என்பது வளிமண்டலக் கரியமிலவாயுவைக் குறைக்கும் நோக்கில் வளிக் கார்பனைப் பிரித்தெடுத்துச் சேமிக்கும் ஒரு செயல்முறையாகும்.
5. தாவரங்களிலும், கடலில் இயற்கையாகவே கார்பன் சேகரிப்பு நிகழ்கிறது. வன மற்றும் மண் பாதுகாப்பு செயல்முறைகள் கார்பன் சேகரிப்பை அதிகரிப்பதன் மூலம் நிலக்கார்பன் சேகரிப்பு மற்றும் சேமிப்பைப் பொதுவாக நிறைவடையச் செய்கின்றன.
6. எடுத்துக்காட்டாக நுண் பாசிகளின் சிற்றினங்களான குளோரெல்லா, செனிடெஸ்மஸ், க்ரூகாக்ஸ் மற்றும் கிளாமிடோமோனஸ் உலகமெங்கும் கரியமில வாயுவின் கார்பனைச் சேகரிப்பதற்கு உதவிப் புரிகின்றன.
7. கடற்பெரும்பாசிகள், கடற்புற்கள் மற்றும் சதுப்புநிலக் காடுகளும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்த அதிகத் திறன் பெற்றுள்ளன.
2.
சூழிலியல் வழிமுறை வளர்ச்சியின் பண்புகள்:
1. தாவர குழுமத்தின் குறிப்பிட்ட அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு முறையான செயல்முறையாக விளங்குகிறது.
2. உயிரற்ற மற்றும் உயிருள்ள காரணிகளின் மாற்றங்கள் விளைவாக உருவாகிறது.
3. நிலையற்ற குழுமத்தை நிலையான குழுமமாக மாற்றி அமைகிறது.
4. சிற்றின பன்மம், மொத்த உயிரிஎடை, செயல்வாழிடத்தன்மை, மண்ணின் கரிம மட்கு போன்றவற்றில் படிப்படியாக முன்னேற்றம் காணப்படுகிறது,
5. எளிய உணவுச்சங்கிலியிலிருந்து சிக்கலான உணவு வலைக்கு முன்னேறுகிறது.
6. கீழ்நிலை மற்றும் எளிய உயிரினங்களை முன்னேறிய உயர் உயிரினங்களாக மாற்றியமைக்கிறது.
7. தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கிடையே இடைச்சார்பை உருவாக்குகிறது.
3.
சூழல் மண்டலம் என்ற சொல் A.G. டான்ஸ்லி (1935), என்பவரால் முன்மொழியப்பட்டது.
1. சுற்றுச்சூழலின் அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளை ஒருங்கிணைப்பதன் விளைவாக அமைந்த அமைப்பாகும்.
2. ஓடம் (1962) இதனை சூழ்நிலையின் அமைப்பு மற்றும் செயல்பாட்டு அலகு என்று கூறுகிறார்.
3. சூழல் மண்டலம் இரண்டு முக்கிய கூறுகளை கொண்டுள்ளது.
உயிரற்ற கூறுகள்:
காலநிலை காரணிகள்: காற்று, நீர், சூரிய ஒளி, மழை வெப்பநிலை மற்றும் ஈரப்பதம்.
மண் காரணிகள்: மண், காற்று, மண்நீர் மற்றும் மண் pH
நில அமைப்புக் காரணிகள்: அட்சரேகை, உயரம்
கரிம பொருட்கள்: கார்போஹைட்ரேட், புரதம் கொழுப்பு மற்றும் மட்குப் பொருட்கள்.
கனிமப் பொருட்கள்: C, H,O, N மற்றும் P உயிரற்ற கூறுகள் சூழல் மண்டலத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
உயிரினக்கூறுகள்:
1. உயிரினங்களான தாவரங்கள், விலங்குகள் பூஞ்சைகள், பாக்டீரியங்கள் ஆகியவை அடங்கும்.
2. உயிரினங்கள் சூழல் மண்டலத்தின் ஊட்ட மட்டங்களை உருவாக்குகின்றன.
3. இவை இரண்டு கூறுகளை கொண்டுள்ளன.
i) தற்சார்பு
ii) சார்பூட்டக் கூறுகள்
i) தற்சார்பு ஊட்டக்கூறுகள்
1. இவை ஒளிச்சேர்க்கை என்ற நிகழ்வின் மூலம் எளிய கனிம மூலக்கூறிலிருந்து கரிம கூறுகளை உற்பத்தி செய்கின்றன.
எ.கா. தாவரங்கள் (அ) உற்பத்தியாளர்கள்
ii) சார்பூட்டக் கூறுகள்
உற்பத்தியாளர்களை உண்ணும் உயிரினங்கள் நுகர்வோர்கள் என அழைக்கப்படுகின்றன. இவை
i) பெரும் நுகர்வோர்
ii) நுண் நுகர்வோர்
நுண் நுகர்வோர்: சிதைப்பவைகள் -(எ.கா. பாக்டீரியா பூஞ்சை ஆக்டினோமைசிட்டுகள் உணவுச் சங்கிலி, உணவு வலை, சூழல் பிரமிட்கள் ஆகியவை உருவாக்கத்திற்கு உயிரினக்கூறுகள் தேவை.
4.
RNA இடைப்பட்ட மரபணு செயலிழத்தல் விவரி.
வரையறை:
இதில் RNA மூலக்கூறுகள் மரபணு வெளிப்பாட்டை (அ) தகவல் பெயர்வை தடை செய்கின்றன.
இது இலக்கு mRNA மூலக்கூறுகளைச் செயலிழக்கச் செய்வதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
1. SI RNA -RISC கோர்த்தலின் போது அதன் சுருளமைப்பை இழக்கிறது.
2. ஒற்றை இழை RNA, mRNA இலக்குடன் கலப்புறுகிறது.
3. இந்த mRNA துண்டாவதால் புரத மொழிபெயர்த்தல் நிகழ்வு நடைபெறுவதில்லை.
எ.கா: இத்தகைய பண்பு தாவரத்தை உண்ணும் உருளைப் புழுக்களில் ஏற்படுகிறது.
5.
(i) சீரம் அல்லது சிறுநீர் மாதிரியின் குறிப்பிட்ட வகை எதிர்ப்பொருள் அல்லது எதிர்ப்பொருள் தூண்டிகள் உள்ளதா என்பதைக் கண்டறிய எவா எங்வால் மற்றும் பீட்டர் பெர்ல்மான் ஆகியோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உயிர்வேதி செய்முறையே எலைசா ஆகும்.
(ii) ஒரு நபர் HIV தொற்று கொண்டவரா இல்லையா என்பதைக் கண்டறிய உதவும் மிக முக்கியமான கருவியாக எலைசா சோதனை விளங்குகின்றது.
(iii) ஒரு நபரின் உடலில் உள்ள சீரத்தில் எதிர்ப்பொருள் அளவைத் தீர்மானிக்கவும் குறிப்பிட்ட எதிர்ப்பொருள் தூண்டிகள், மனித கோரியானிக் கொனடோட்ரோபின் போன்ற ஹார்மோன்கள் ஆகியவற்றைக் கண்டறியவும் எலைசா ஒரு சோதனைக் கருவியாக உள்ளது .
(iv) ஆண்டிஜெனைக் கொண்டுள்ளது எனச் சந்தேகிக்கப்படும் மாதிரியில், ஆண்டிஜென் இருப்பின் எலைசா தகட்டின் மேற்பரப்பில் அது நகர இயலாமல் செய்யப்படுகிறது.
(v) இந்த நகர்ச்சியற்ற எதிர்ப்பொருள் தூண்டியுடன் அதற்கே உரிய எதிர்ப்பொருள் சேர்க்கப்பட்டு வினைபுரியச் செய்யப்படுகிறது. இவ்வாறு சேர்க்கப்படும் எதிர்ப்பொருள் பெராக்சிடேஸ் போன்ற உகந்த நொதியுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
(vi) வினைப்புரியாத எதிர்ப்பொருள்கள் கழுவி, நீக்கப்பட்டு நொதியின் தளப்பொருள் (ஹைட்ரஜன் பெராக்சிடேஸ்) 4 குளோரா நாப்தால் என்னும் வேதிப்பொருளுடன் சேர்க்கப்படுகிறது.
(vii) நொதியின் செயல்பாட்டால் நிறமுள்ள விளைப்பொருள் உருவாவது எதிர்ப்பொருள் தூண்டி இருப்பதைக் குறிக்கும்.
(viii) உருவாகும் நிறத்தின் செறிவும் எதிர்ப்பொருள் தூண்டியின் எண்ணிகையும் நேர்விகிதத்தில் உள்ளன. எலைசா என்பது நேனோகிராம் அளவிலுள்ள எதிர்ப்பொருள் தூண்டிகளைக்கூட கண்டறிய உதவும் அதி உணர்திறன் கொண்ட முறையாகும்.
6.
1. இந்திய, கிராமப்புற பழங்குடி இன மக்களின் பாரம்பரிய முறை.
2. அகில இந்திய ஒருங்கிணைந்த, பழங்குடி உயிரியல் ஆய்வுத் திட்டம் (All India Co ஆர்டினேட்டட் Research Project on Ethnobiology) பழங்குடிகள் பயன்படுத்திய மூலிகைகளை ஆவணப்படுத்தியுள்ளது.
3. 8000 தாவரச் சிற்றினங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
4. ஆவணப்படுத்தும் வேலை தொடர்கிறது.
5. தமிழ்நாட்டில் இருளர், மலையாளி, குரும்பர், பனியன் காணிகள் மருத்துவ அறிவால் அறியப்பட்டனர்.
7.
AAdd -ஒரு daDD பண்புக்கலப்பில் F2 வில் என்ன புறத்தோற்றம் என்ன விகிதத்தில் காணப்படும்
1. பெற்றோர் இன ஆக்கம் Ad/AdxaD/aD
2. மரபணுக்கள் மிக நெருக்கமாக இருப்பதால் அவை உருவாக்கிய கேமிட்டுகள்
3. Ad&aD (பெற்றோர் பண்புடையவை -புதிய மறுசேர்க்கை காணப்படவில்லை)
4. F1 அனைத்தும் Ad/aD அக இருந்தது
5. F1 உருவாக்கிய கேமிட்கள் Ad(50% aD =50%)
6. F2 விகிதம் -Ad/Ad(1/4)Ad/aD(1/2)aD/aD(1/4)
| Ad/Ad | Ad/aD | aD/aD |
| 1 | 2 | 1 |
8.
(i) இரண்டிற்கும் மேற்பட்ட குரோமோசோம் தொகுப்புகளைக் கொண்ட தாவரங்கள் பன்மடியம் ஆகும்.
(ii) தாவரங்கள் மற்றும் வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்படும் தாவரங்கள் பன்மடியம் ஆகும்
(iii) பன்மடியம் கலப்பின உயிரி உருவாக்க உதவுகிறது
(iv) உயிர் மற்றும் உயிரற்ற காரணிகளின் இறுக்கத்தைத் தாங்கும் திறன்
(v) இது குன்றல் பகுப்புக் குறைபாட்டால் குறைந்த வளத்தன்மையுடைய விதையற்ற இரகங்கள் உருவாகும்
(vi) ஒரு தாவரத்திலுள்ள குரோமோசோம்கள் தானாகவே இரட்டிப்பானால் - தன்பன்மடியாதல் எனப்படும்
(v) இரண்டு சிற்றினங்களிலிருந்து பெறப்பட்ட குரோமோசோம் தொகுதிகளைப் பெருக்கமடையச் செய்யும் முறை அயல்பன்மடியம் எனப்படும்.
(vi) கால்சிசினை பயன்படுத்திக் குரோமோசோம்களை இரட்டிப்பாக்கலாம்
9.
திசையமைவு, வடிவம், சூல்காம்பு, சலாசாவுக்கு தொடர்பாக 6 வகைகள் உள்ளன.
i) நேர்சூல் (Orthotropous)
சூல் காம்பு, சூல் துளை. சலாசா நேர்கோட்டில் இருக்கும் (எ.டு) பைப்பரேசி, பாலிகோனேசி.
ii) தலைகீழ் சூல் (Anatropous)
சூல் முழுமையாகத் தலைகீழாக இருக்கும். சூல்தளை, சூல்காம்பு அருகிலிருக்கும் (எ.டு) ஒரு விதையிலை இரு விதையிலைத் தாவரம்.
iii) கிடைமட்ட சூல் (Hemianatropous)
சூலின் உடல் குறுக்குவாட்டில், சூல் காம்புக்கு செங்குத்தாக இருக்கும். (எ.டு) பிரைமுலேசி.
iv) கம்பைலோட்ராபஸ் (Campylotropous)
சூல் துளைப்பகுதியில், சூலின் உடல் வளைந்து அவரை விதை வடிவிலிருக்கும். விதைத் தழும்பு, சூல் தளை, சலாசா அருகாமையிலிருக்கும். சூல் துளை, சூல் ஒட்டுத்திசுவை நோக்கி இருக்கும்.
(எ.டு) லெகுமினாசே
v) ஆம்பிட்ராபஸ் (Amphitropous)
சூல் திசுவும், கருப்பையும் குதிரை லாடம் போல வளைந்திருக்கும். (எ.டு) அலிஸ்டமேசி குடும்பம்.
vi) சிர்சினோட்ராபஸ் (Circinotropous)
சூல் காம்பும் சூலை முழுவதும் சூழ்ந்துள்ளது. (எ.டு) காக்டேசி.
10.
தொற்றுத் தாவரங்கள் (Epiphytes):
மற்ற தாவரங்களின் மேல் (ஆதாரத் தாவரங்கள்) தொற்றி வாழ்பவை தொற்றுத் தாவரங்கள் எனப்படுகின்றன. இதில் ஆதாரத் தாவரத்தை உறைவிடத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் நீர் அல்லது உணவினைப் பெற்றுக் கொள்வதில்லை. தொற்றுத் தாவரங்கள் பொதுவாக வெப்ப மண்டல மழைக்காடுகளில் அதிகம் காணப்படுகின்றன.
(எ.கா) ஆர்கிட்கள், வன்கொடிகள், தொங்கும் மாஸ்கள், மணி தாவரங்கள்
புற அமைப்பில் தக அமைவுகள்:
(i) வேர்த்தொகுப்புகள் விரிவாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் இருவகை வேர்கள் காணப்படுகின்றன. இவை
அ) பற்றுவேர்கள் மற்றும்
ஆ) உறிஞ்சும் வேர்கள்
(ii) தொற்றுத் தாவரங்களின் பற்றுவேர்கள் (Clinging roots) ஆதாரத் தாவரங்களின் மேற்புற உறுதியாக நிலை நிறுத்த உதவுகின்றன.
(iii) நிலப்புற வேர்கள் (Aerial roots) பசுமையானது. இவை கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருப்பவை. மேலும் வளி மண்டலத்திலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்காக வெலாமன் (Velamen) என்ற பஞ்சு போன்ற திசுவுடையது.
(iv) சில தொற்றுத் தாவரங்களின் தண்டு சதைப் பற்றுள்ளதாகவும் மற்றும் போலி குமிழ்களையோ அல்லது கிழங்குகளையோ உருவாக்குகின்றன.
(v) இலைகள் பொதுவாகக் குறைந்த எண்ணிக்கையிலும் தடிப்பான தோல் போன்றும் காணப்படுகின்றன.
(vi) கொன்று உண்ணிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளத் தொற்று தாவரக்கூட்டங்களில் மிர்மிகோஃபில்லி பொதுவாகக் காணப்படுகிறது.
11.
மூன்று எதிரிடைப் பண்புகளுக்கான மரபணு இணைகளைக் கொண்ட இது தூய கால் வழி தாவரங்களுக்கிடையே செய்யப்படும் கலப்பு
♂️ F2 முப்பண்புக் கலப்பு (மூன்று மரபணுக்களுக்கான மாதிரி செக்கர் போர்டு)
| ♂️ | ABD | ABd | AbD | Abd | aBD | aBd | abD | abd | |
| ABd | AABBDd | AABBDD | AABBdd | AABbdd | AaBBDd | AaBbdd | AaBbDd | AaBbdd | |
| Abd | AAbbDD | AABbDd | AAbbDD | AAbbDd | AaBbDD | AaBbDd | AabbDD | AabbDd | |
| Abd | AAbbdd | AABbdd | AAbbDd | AaBbdd | AaBbDd | AaBbdd | AabbDd | Aabbdd | |
| aBD | AaBBDD | AaBBDd | AaBbDD | AaBbDd | aaBBDD | aaBBDd | aaBbDD | aaBbDd | |
| aBd | aaBBDd | AaBBdd | AaBbDd | AaBbdd | aaBBDd | aaBBdd | aaBbDd | aaBbdd | |
| abD | AaBbDD | AabbDd | AabbDD | AabbDd | aaBbDD | aaBbDd | aabbDD | aabbDd | |
| abd | AaBbDd | AaBbdd | AabbDd | Aabbdd | aaBbDd | aaBbdd | aabbDd | aabbdd | |
| 27 | 9 | 9 | 9 | 3 | 3 | 3 | 1 |
F2 புறத்தோற்ற விகிதம் 27 : 9 : 9 : 9 : 3 : 3 : 3 : 1
12.
செல் சுவரற்றை செல்லின் பிற பகுதிகள் புரோட்டோபிளாஸ்ட் எனப்படும் (செல் சவ்வு - சைட்டோபிளாசம் + உட்கரு நுண்ணுறுப்புகள்)
1. படிகள்
II. புரோட்டோபிளாஸ்ட்கள் இணைதல்
தகுந்த இணைவுக் காரணியாக (PEG) பாலிஎத்திலீன் கிளைக்கால் மூலம் நிகழ்கிறது.
III. புரோட்டோபிளாஸ்ட் வளர்ப்பு
அ) புரோட்டோபிளாஸ்ட் உயிர்ப்புத்திறன் சோதனை
ஃப்ளூரசின் டைஅசிட்டேட்டைக் கொண்டு உயிர்ப்புத்திறன் சோதிக்கப்படுகிறது.
ஆ) M.S வளர்ப்பு ஊடகத்தில் வளர்ப்பு
நுண் துளி தட்டு (அ) நுண் துளி வரிசை (array) முறையில் வளர்க்கப்படுதல்.
இ) அடைகாத்தல் (Incubation)
25o C வெப்பநிலையில் முதல் 1000 - 2000 லக்ஸ் ஒளிச் செறிவில் வைக்கப்படுகிறது. (24 - 48) மணிநேரம்
ஈ) செல்சுவர் தோன்றல் (24 - 48 மணிநேரத்திற்குப் பின்)
உ) செல்பிரிதல் நடத்தல் (2- 7 நாட்கள்)
IV. உடல் கலப்பினச் செல்களைத் தேர்ந்தெடுத்தல்
1. வேறுபட்ட செல்களின் உட்கரு அற்ற புரோட்டோபிளாஸ்ட் ⟶ இணைத்துப் பெறுவது சைபிரிட்
2. இதற்கு பின்பு உட்கரு இணைதல்
இந்த நிகழ்வு உடலக் கலப்பினமாக்கல் என அழைக்கப்படும்.
13.
மனித செயல்பாடுகளால் நீர் மாசுபடுகிறது.
மூலாதாரங்கள்
1. மைய மூலாதாரங்கள்
நீர் நிலைகளில் குறிப்பிட்ட இடத்தில் குழாய்கள் அல்லது கழிவுநீர்க் குழாய் மூலம் மாசுபடுத்திகளை வெளியிடுதல் மைய மூலாதாரங்கள் ஆகும்.
2. மையமற்ற மூலாதாரங்கள் :
ஒரு இடத்தில் வெளியேற்றப்படும் மாசின் மூலாதாரங்கள் கண்டறிய இயலாது.
எ.கா. அமிலமழை, நீர்நிலைகளில் கொட்டப்படும் நெகிழிப்பொருட்கள்.
3. கசிவுகள் மற்றும் சிந்துதல் கப்பல் விபத்து எண்ணெய் கசிவுகள்.
4. நகராட்சி கழிவுகள்:- வீடுகள் மற்றும் வணிக நிறுவன கழிவுநீர்.
5. தொழிற்சாலைக் கழிவுகள் - காட்மியம் குரோமியம் அடங்கிய கழிவுநீர்.
6. வேளாண் கழிவுகள்
7. நீர் மாசுபடுத்திகள் ஊடுருவல் மூலம் நிலத்தடி நீரினை அடைகின்றன.
14.
I - படியெடுத்தல்:
டி.என்.ஏவில் காணப்படும் செய்திகள் நகலெடுக்கப்படும் செயல்முறை:
DNA வின் ஒரு இழையில் காணப்படும் புரதத்திற்கான தகவல்களை குறியீடாக செல்லுக்கு கொண்டுசெல்வது தூது RNA (அ) mRNA
II - மொழிபெயர்த்தல்:
1. தூதுவிலுள்ள தகவல் குறியீடுகள் செல்லின் உட்கருவிலிருந்து சைட்டோபிளாசத்தை அடைகிறது.
2. இங்கு ரிபோசோம் RNA, கடத்தி RNA மற்றும் தூது RNA இவற்றுடன் பல்வேறு நொதிகளும் ஒரு அமைப்பாக சேர்ந்து மொழி பெயர்த்தல் படி நிலை நடைபெறும்.
3. இவ்வாறு ஒரு படிநிலைகளும் செல்லில் உட்கரு மற்றும் சைட்டோபிளாசம் நடைபெறுகிறது.
4. எனவே புரதச் சேர்க்கை இரண்டு படிநிலைகளில் நடைபெறுவதன் அனுகூலமாகும்.
15.
1. சாதாரண சளிக்கு எதிராக தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய முடியாது.
2. ஏனென்றால் ஏறத்தாழ 200 வகையான வைரஸ்கள் சாதாரண சளிக்கு காரணமாக இருக்கின்றன.
3. அதனால் எல்லா வகையான வைரஸ்க்கும் நோய் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது சிரமம்.
16.
(i) இது கருவின் குறைபாடுகளை, கர்ப்பகாலத் தொடக்கத்திலேயே கண்டறியும் தொழில்நுட்பம்.
(ii) கருவின் குரோமோசோம் பிறழ்ச்சிகளைக் கண்டறியலாம்.
(iii) வளர்கருவின் பால் தன்மை அறியலாம்.
(iv) பால் தெரிந்தால் பெண்கருக்கொலை செய்ய வாய்ப்புள்ளது.
(v) எனவே இது சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
17.
அ) அண்ட செல் விடுபடுநிலை - புரோஜெஸ்டிரான்,ஈஸ்ட்ரோஜன்
ஆ) அண்டக ஹார்மோன்கள் - FSH நுண்பை செல்களை தூண்டும் ஹார்மோன்கள்
பிட்யூட்டரி ஹார்மோன்கள் - LH -லூட்டினைசிங் ஹார்மோன்
இ) i) எண்டோ மெட்ரியம் புதுப்பிக்கப்படுதல்
ii) கருமுட்டை பதிவதற்கு ஏற்ற சூழலை கருவுறுதல் உண்டாக்கும்.
iii) கருப்பையின் உட்சுவர் ஊட்டச்சத்து நிறைந்த திரவத்தை உற்பத்தி செய்கிறது.இது 'சுரப்பு நிலையில்' நடக்கிறது.
ஈ) C -இரண்டாம் நிலை நுண்பை செல்கள்
H - கார்பஸ் லூட்டியம்
| இரண்டாம் நிலை நுண்பை செல்கள் | கார்பஸ் லூட்டியம் | |
|---|---|---|
| 1. | நுண்பை நிலையில் காணப்படும். | இவை லூட்டியல் நிலையில் உருவாகும். |
| 2. | இவற்றைச் சுற்றி கிரானுலேசா செல்களும் தீகா அடுக்கும் காணப்படும். | இந்த இடைக்கால நாளமில்லாச் சுரப்பி, புரோஜெஸ்டிரானைச் சுரக்கின்றது. |
| 3. | இவை மூன்றாம் நிலை நுண்பை செல்களாகி பின்னர் முதிர்ந்த கிராபியன் ஃபாலிகிளாகின்றன. | கருவுறுதல் நிகழாவிடில், இது கார்பஸ் அல்பிகன்ஸ் என்ற வடுத்திசுவடு உருவாக்கும். |
18.
(i) பாலினங்களை அடையாளம் காண உதவுகின்றது.
(ii) நீக்கம் இரட்டித்தல் இடம் பெயர்தல் குரோமோசோம்கள் பிரியாநிலை போன்ற குரோமோசோம் பிறழ்ச்சிகளை கண்டறிய பயன்படுகிறது.
(iii) ஒழுங்கற்ற பன்மயம் கண்டறிய பயன்படுகிறது.
(iv) சிற்றினங்களுக்கிடையேயான பரிணாம உறவுகளை கணிக்க உதவுகின்றது.
(v) மனிதனில் காணப்படும் மரபியல் நோய்களை கண்டறியலாம்.
19.
இளவுயிரி நிலை :
(i) இது நிலை உயிரியின் பிறப்பிற்கும் இனப்பெருக்க முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட வளர்ச்சிக் காலம்.
(ii) சில விலங்குகளின் இளம் உயிரிகள்
பசு - கன்று,
பூச்சி - லார்வா,
மனிதகுரங்கு - குழந்தை,
பூனை - பூனைக்குட்டி,
இனப்பெருக்க நிலை :
(i) ஒரு உயிரியானது இனப்பெருக்கம் செய்து வழித்தோன்றல்களை உருவாக்கும் செயல்களைச் செய்யும் காலம் இனப்பெருக்க நிலை ஆகும்.
(ii) ஒரு ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் தொடர்ச்சியான இனச்சேர்க்கையாளர்கள் எனப்படும்.
(iii) பால் முதிர்ச்சிக் காலம் முழுவதும் இளம் உயிரிகள் ஈடுபடும் உயிரிகள் தொடர்ச்சியான இனச்சேர்க்கையாளர்கள் எனப்படும். எ.கா) முயல், கோழிகள்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards