12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/01/2020
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
மான்ட்ரியல் ஒப்பந்தத்தின் குறிக்கோள்கள் யாவை?
2.
நிலைத்த உயிரித்தொகுப்பு என்றால் என்ன?
3.
அக்ரோபாக்டீரியம் டியூமிபேசியன்ஸ் ஒரு இயற்கை மரபணுப் பொறியாளராக செயல்படுகிறது. இக்கூற்றிற்கு சாதகமான காரணங்கள் தருக.
4.
நடத்தையியல் என்றால் என்ன?
5.
நறுமணப் பொருட்கள் என்றால் என்ன?
6.
தமிழகத்தில் வெண்டைக்காய் விளையுமிடங்கள் கூறு.
7.
குரோமோசோம் கோட்பாட்டை வரையறை செய்க
8.
சாதாரண மனிதனுக்கும் இன்னும் எட்டாக் கனியாகவே இன்டர்ஃபெரான்கள் விளங்குகின்றன. ஏன்? எந்தெந்த நோய்களுக்கான சிகிச்சையில் இவை பெரிதும் உதவுகின்றன?
9.
இயற்கை வேளாண்மை என்றால் என்ன?
10.
திறந்த மலர் மகரந்தச் சேர்க்கை (Chasmogamy) என்றால் என்ன?
11.
பின்வரும் பாதி ஒட்டுண்ணி (அ) பகுதி ஒட்டுண்ணி வகைக்கு எ.கா தருக.
a) தண்டு வாழ் பகுதி ஒட்டுண்ணி : ___________, ____________
b) வேர் வாழ் பகுதி ஒட்டுண்ணி : ___________
12.
ஊடுகடத்தல் மரபியல் வரையறு
13.
புறத்தோற்ற வகையம் என்றால் என்ன?
14.
ஒலி மாசுபாட்டின் மூலங்கள் யாவை?
15.
MS ஊடகத்தில் காணப்படும் சிறு மூலக்கூறுகள் யாவை?
16.
செந்தரவுப் புத்தகம் என்றால் என்ன? அதனுடைய நோக்கத்தைக் குறிப்பிடவும்.
17.
rDNA தொழில்நுட்ப வருகைக்கு முன் இன்சுலின் எவ்வாறு பெறப்பட்டது? எத்தகைய பிரச்சனைகள் எதிர்கொள்ளப்பட்டன?
18.
தாவரத்திசு வளர்ப்பின் பயன்பாடுகளை எழுதுக
19.
வேறுபடுத்துக – வார்ப்புரு இழை மற்றும் குறியீட்டு இழை
20.
குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?
21.
22.
பாலிலா இனப்பெருக்கம் அல்லது பாலினப்பெருக்கம் இவற்றுள் எது மேம்பட்டது? ஏன்?
23.
கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன? விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.
24.
பெண் இனச்செல் நேரடியாக வளர்ச்சியடைந்து சேயாக மாறும் நிகழ்வின் பெயரையும் அது நிகழும் ஒரு பறவையின் பெயரையும் குறிப்பிடுக.
25.
பேசில்லரி சீதபேதி மற்றும் அமீபிக் சீதபேதி - ஒப்பிட்டு வேறுபடுத்துக.
1.
வளிமண்டலத்தில் ஓசோன் படலத்தைச் சேதப்படுத்தும் பொருட்களை களைவது மற்றும் படிப்படியாக அத்தகைய பொருட்களை உற்பத்தியை நிறுத்தி பயன்பாட்டைக் குறைக்கவும் குறிக்கோளாக கொண்டு விவாதிக்கப்பட்டது.
2.
ஒரு உயிரினக் கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் காணப்படும் உயிரிகளின் அளவிற்கு நிலைத்த உயிரித்தொகுப்பு.
3.
1. இந்த பாக்டீரியம் Ti பிளாஸ்மிட் (கழலை உண்டாக்கும்) மற்றும் பெரிய பரிமாற்ற DNA வின் (T-DNA) ஒரு பகுதியையும் கொண்டுள்ளது.
2. இதன் T-DNA தொற்றுகளுக்குள்ளாகும் தாவர செல்களின் மரபணு தொகையத்திற்குள் இயல்பாகவே இடமாற்றம் ஆகக்கூடிய திறன் இருப்பதால் இதனை தாவரங்களின் இயற்கை மரபணு பொறியாளர் என கருதப்படுகிறது.
4.
நடத்தையியல் என்பது, இயற்கையான சூழலில் விலங்கினங்களின் நடத்தை குறித்துப் படிக்கும் அறிவியல் பிரிவு ஆகும்.
5.
துணை உணவுகளாக, உணவு தயாரித்தலில் உணவுக்குச் சுவையூட்டும் நறுமணத் தாவரப் பொருளாக, இனிப்பு கசப்புச் சுவையுடன் உள்ளது. சமையலில் குறைந்த அளவில் சேர்க்கப்படும். (எ.கா) ஏலக்காய்
6.
கோயம்புத்தூர், தர்மபுரி, வேலூர்
7.
ஒவ்வொரு குரோமோசோமும் குறிப்பிட்ட மரபியத் தீர்மானிகள் அல்லது மெண்டலிய காரணியை குறிப்பிட்ட அமைவிடத்தில் கொண்டுள்ளன. இவை பண்புகளை ஒருதலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றன.
8.
புற்றுநோய், எய்ட்ஸ், தண்டுவட மரப்பு நோய், கல்லீரல் அழற்சி, அக்கிப்புடை போன்ற பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் இன்டர்ஃபெரான்கள் பெரிதும் பயன்படுகின்றன.
9.
(i) பழைய பாரம்பரிய விவசாய முறையே இயற்கை வேளாண்மையாகும்
(ii) 20ம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் மிக வேகமாக மாறிவரும் விவசாய முறைகளுக்கு எதிராக மீட்டுக் கொண்டு வரப்பட்டது
(iii) இது மீள்நிலைத்த மண்வளம், சுழல்வளம், மற்றும் மக்கள் வளத்திற்கான வேளாண் முறையாகும்
10.
பல மூடுவிதைத் தாவரங்களில், மலர் மலர்ந்து முதிர்ந்த மகரந்தப்பைகளையும், சூலக முடியையும் மகரந்தச் சேர்க்கைக்காக வெளிக்காட்டுகின்றன. இத்தகைய மலர்கள் திறந்த மலர்கள் (Chasmogamous) இந்நிகழ்ச்சி திறந்த மலர் மகரந்தச் சேர்க்கை (Chasmogamy) எனப்படும்.
11.
a) விஸ்கம், மற்றும் லோரான்தஸ்
b) சேண்டலம் (சந்தனக்கட்டை)
12.
மரபணுக்கள் எவ்வாறு பெற்றோர்களிடமிருந்து சந்ததிக்குக் கடத்தப்படுகின்றன என்பதை விளக்கும் ஒரு பிரிவாகும்
13.
ஒரு உயிரியல் வெளிப்படக்கூடிய பண்புகள் புறத்தோற்ற வகையம் எனப்படும்
14.
1. வாகன எஞ்சின்கள்
2. அபாயச் சங்குகள்
3. தொடர் வண்டிகள்
4. காற்று ஒலிப்பான்கள்
5. அழுத்த இயந்திரங்கள்
6. துளைப்பான்கள்
7. வெடி பொருட்கள்
15.
1. சோடியம் மாலிப்டேட்
2. குப்பிரிக் சல்பேட்
3. கோபால்ட் குளோரைடு
16.
(i) சொந்தரவுப் புத்தகம் என்பது அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் ஆகும்.
(ii) உலக பாதுகாப்பு கூட்டமைப்பு சொந்தரவுப் புத்தகத்தை பராமரிக்கிறது.
நோக்கங்கள்:
(i) உயிரின பல்வகைத் தன்மைக்கு எதிரான அச்சுறுத்தல்களின் அளவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
(ii) மரப்பற்றுப் போகும் நிலையில் உள்ள உயிரினங்களை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தல்.
(iii) குறைந்து வரும் உயிரின பல்வகைத் தன்மைக்கு உலகளாவிய குறியீட்டெண்ணை வழங்குதல்.
(iv) பாதுகாப்பு தேவைப்படும் உயிரினங்களின் பட்டியலை முன்னுரிமை அடிப்படையில் தயார் செய்தல் மற்றும் பாதுகாப்பு செயல்பாடுகளில் உதவுதல்.
(v) பல்வகைத் தன்மை பாதுகாப்பு தொடர்புடைய பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகள் பற்றிய தகவல்கள் அளித்தல்.
(vi) சிவப்பு பட்டியலில் உள்ள சிற்றினங்கள் 8 வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1. மரபற்றுப் போனவை
2. மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவை
3. எளிதில் பாதிக்கப்படக் கூடியவை
4. முழுமையான தகவல் இல்லாதவை
5. வனத்தில் மரபற்றுப் போனவை.
6. அழியும் நிலையில் உள்ளவை
7. குறித்த ஆபத்துடையவை
8. மதிப்பீடு செய்யப்படாதவை.
17.
(i) முற்காலத்தில் பன்றிகள் மற்றும் பசுக்களின் கணையங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பெறப்பட்டது.
(ii) விலங்கு இன்சுலினுக்கு மனித இன்சுலினுக்கும் சிறிய அளவில் வேறுபாடுகள் இருந்தால், சில நோயாளிகளில் இது ஒவ்வாமையை ஏற்படுத்தியது.
18.
தாவரத் திசு வளர்ப்பு பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
i. உடல் கலப்பினமாதல் மூலம் மேம்பட்ட கலப்புயிரிகள் உற்பத்தி செய்யப்படுதலுக்கு உடல் கலப்புயிரியாக்கம் என்று பெயர்.
ii. உறை சூழப்பட்ட கருக்கள் அல்லது செயற்கை விதைகள் தாவரங்களின் உயிரிப்பன்மத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
iii. ஆக்குத் திசு மற்றும் தண்டு நுனி வளர்ப்பின் மூலம் நோய் எதிர்ப்பு தாவரங்களை உற்பத்தி செய்தல்.
iv. களைக்கொல்லி சகிப்புத்தன்மை, வெப்பச் சகிப்புத்தன்மை கொண்ட தாவரங்கள் போன்ற அழுத்தத்தை (இறுக்கத்தை) எதிர்க்கக் கூடிய தாவரங்களின் உற்பத்தி.
19.
| வார்ப்புரு இழை | குறியீட்டு இழை | |
| 1 | இவ்விழை mRNA உருவாக்கத்திற்கு வார்ப்பாக செயல்படுகிறது. | இது வார்ப்புரு பணியைச் செய்வதில்லை |
| 2 | இதன் நைட்ரஜன் காரங்கள் mRNA இழைக்கு ஈடான இழைகளை உருவாக்குகிறது. | இதன் நைட்ரஜன் காரங்கள் அப்படியே mRNA இழையில் காணப்படுவதேயாகும். |
| 3 | இது 3' ⟶ 5' திசையில் கொண்டது | இது 5' ⟶ 3' திசையில் கொண்டது |
20.
(i) கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்தும் முறை (IUI) பயன்படுத்தப்படும்.
(ii) கணவர், உடல்நலம் மிக்க விந்து கொடையாளிடம் இருந்து விந்துத்திரவம் சேகரிக்கப்படுகிறது.
(iii) அண்டகத்தைத் தூண்டி, அதிக அண்ட செல்கள் உற்பத்தி செய்யப்படும்.
(iv) சேகரிக்கப்பட்ட விந்து செல்கள், நுண்குழல் மூலம் கல்விக் கலவிக்கால்வாய் வழியாகக் கருப்பையினுள் செலுத்தப்படும்.
(v) விந்து செல்கள் அண்டநாளம் நோக்கி நீந்திச் சென்று, இயல்பான கர்ப்பம் ஏற்படும்.
21.
22.
(i) பாலிலா இனப்பெருக்கத்தை விட பாலினப் பெருக்கமே மேம்பட்டது.
(ii) பாலிலா இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் இருக்காது.
(iii) பாலினப் பெருக்கத்தில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
23.
(i) முட்டையானது கருவுறாமல் ஒரு உயிராக வளர்வது கன்னி இனப்பெருக்கம் எனப்படும்.
(ii) (எ.கா) ரோட்டிபர், தேனீக்கள், மற்றும் வான்கோழி.
24.
(i) கன்னி இனப்பெருக்கம் என்பது அந்நிகழ்வின் பெயர்
(ii) வான்கோழியில் கன்னி இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
25.
பேசில்லரி சீதபேதி மற்றும் அமீபிக் சீதபேதி ஒப்பிட்டு வேறுபடுத்துதல்
பேசில்லரி சீதபேதி
ஷிஜெல்லா சிற்றினத்தினை சார்ந்த பாக்டீரியாவினால் பேசில்லரி சீதபேதி ஏற்படுகிறது. பேசில்லரி சீதபேதியின் காரணமாக வயிற்று வலி, நீரிழப்பு, மலக்கழிவில் இரத்தம் மற்றும் கோழை காணப்படுதல் முதலியன ஏற்படும்.
அமீபிக் சீதபேதி
எண்டமீபா ஹிஸ்டோலைடிகா என்ற புரோட்டோசோவினால் அமீபிக் சீதபேதி ஏற்படுகிறது. அமீபிக் சீதபேதியின் காரணமாக குடற்புண், இரத்தக்கசிவு, வயிற்றுவலி மற்றும் அதிக கோழையுடன் கூடிய மலக்கழிவு முதலியன ஏற்படுகிறது
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards