12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 14/11/2019
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
சில தாவரங்களின் இருப்பு அல்லது இல்லாமை எங்கு நிலவும் சூழலைச் சுட்டிக்காட்டும் விதத்தில் காணப்படும்? இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2.
இரண்டாம் நிலை உற்பத்தித்திறன் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? குழும உற்பத்தித்திறன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
3.
இனக்கூட்டச் சார்பின் பல்வேறு தேவைகள் யாவை? அவற்றின் வகைகளை விளக்குக.
4.
வேம்பு மற்றும் மஞ்சள் இவற்றில் நடைபெற்ற உயிரிப்பொருள் கொள்ளை முயற்சிகளை விவரி.
5.
எச்.ஐ.வியின் அமைப்பை பற்றி விவரி.
6.
மரபணுவளக்கூறு பாதுகாப்பு பற்றி நீர் அறிவது என்ன? அவற்றை விவரி.
7.
வடகிழக்கு இந்தியாவில் இடம் மாறும் வேளாண்மை பல்வகைத்தன்மையின் முக்கியமான அச்சுறுத்தலாகும்-நிரூபி.
8.
உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத்திறன் எப்பொழுது உருவாகிறது?
9.
10.
முக்கிய பால்வினை நோய்களையும் அவற்றின் அறிகுறிகளையும் விளக்குக.
11.
கருவூண்திசு என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
12.
தரசத்தில் சேகரிக்கப்படும் ஆற்றல் புற ஆதாரங்களிலிருந்து பெறப்படுகிறது. அதனால் மொத்த ஆற்றலில் லாபமும் இல்லை, இழப்பும் இல்லை? இந்தக் கூற்று உணர்த்தும் நிலை யாது?
13.
உயிரிய பல்வகைத் தன்மை இழப்பிற்கான நான்கு காரணங்களைக் கூறு.
14.
தன் மகரந்தச் சேர்க்கை, அயல் மகரந்தச் சேர்க்கை வேறுபடுத்துக?
15.
செயற்கை விதைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன?
16.
17.
முதல்நிலை அறிமுகப்படுத்துதலையும் இரண்டாம்நிலை அறிமுகப்படுத்துதலையும் வேறுபடுத்துக.
18.
கீழ்க்காணும் அட்டவணையை நிறைவு செய்.
| நோய்கள் | நோய்க்காரணி | நோய்த்தொற்று இடம் |
| புட்டாளம்மை | ||
| சின்னம்மை | ||
| டெங்கு காய்ச்சல் |
19.
| வ.எண் | கேமீட்டுகளின் வகைகள் |
வழித்தோன்றல்களின் எண்ணிக்கை |
| 1. | ABC | 349 |
| 2. | Abc | 114 |
| 3. | abC | 124 |
| 4. | AbC | 5 |
| 5. | aBc | 4 |
| 6. | aBC | 116 |
| 7. | ABc | 128 |
| 8. | abc | 360 |
i) இந்தச் சோதனைக் கலப்பின் பெயர் என்ன?
ii) மேலே கொடுக்கப்பட்டுள்ள தரவுகளைக் கொண்டு மரபணு வரைபடத்தை எவ்வாறு
உருவாக்குவாய் ?
iii) மரபணுக்களின் சரியான வரிசையைக் கண்டுபிடி.
20.
மரபியல் - வரையறு.
21.
சிறு வாழிடம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்?
சார்லஸ் டார்வின்
ஜான் ரே
சார்லஸ் எல்டன்
கரோலஸ் லின்னேயஸ்
22.
_______ ஓர் உயிரிப் பூச்சி விரட்டி (Bio pest repellent)
புளி
மிளகாய்
எள்
வேம்பு
23.
பொங்கேமியா பின்னேட்டா என்ற தாவரம் _________ உரத்திற்கு பயன்படுகிறது
இயற்கை
பொட்டாசியம் நிறைந்த
தழையிலை
கால்சியம் நிறைந்த
24.
மயோசோடிஸ் தாவரத்தின் மகரந்தத்துகளின் அளவு _________ மைக்ரோமீட்டர்
10
100
200
300
25.
இந்த விதைகள் தான் உலகில் மிகவும் நீடித்த வாழ்நாளைக் கொண்டுள்ளது.
தாமரை
ஹைட்ரில்லா
நிம்பேயா
மார்சீலியா
26.
காலாபாகஸ் தீவுகளில் காணப்பட்ட டார்வினின் குருவிகளின் அலகின் அளவும் விதைகளின் அளவும் ________ தேர்விற்கு உதாரணம் ஆகும்.
நிலைப்படுத்துதல்
இலக்கு நோக்கிய
உடைப்பு முறை
தொகுப்பு முறை
27.
ஹர்ஷே மற்றும் சேஸ் ஆய்வுகளின் கண்டுபிடிப்பானது
சில வைரஸ்களில் RNA மரபுப்பொருள் என்பது
DNA சில வைரஸ்களில் மரபுப்பொருள் என்பது
32P - குறியிடப்பட்ட DNA பாக்டீரிய செல்லினுள் வைரஸினால் செலுத்தப்பட்டது.
DNA தோற்ற மாற்றம் செய்வது பாலிசர்க்கரை உறை அல்ல என்பது
28.
நுண்பெருக்கம் இதை உள்ளடக்கியது
நுண்ணுயிர்களைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழிப்பெருக்கமடையச் செய்தல்
சிறிய பிரிகூறுகளைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழிப்பெருக்கமடையச் செய்தல்
நுண்வித்துக்களைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழிப்பெருக்கமடையச் செய்தல்
நுண் மற்றும் பெரு வித்துக்களைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழி அற்ற முறையில் பெருக்கமடையச் செய்தல்
29.
மறுசேர்க்கை காரணி VIII சீனா ஹாம்ஸ்டரின் _________ செல்களில் இருந்து உருவாக்கப்பட்டன
கல்லீரல் செல்கள்
அண்டக செல்கள்
இரத்த செல்கள்
மூளை செல்கள்
30.
காற்றற்ற கசடு செரிப்பானில் உற்பத்தி செய்யப்படும் வாயுக்கள் ____.
மீத்தேன், ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு
ஹைட்ரஜன் சல்பைடு, மீத்தேன் மற்றும் சல்பர் டை ஆக்சைடு
ஹைட்ரஜன் சல்பைடு, நைட்ரஜன் மற்றும் மீத்தேன்
மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு
31.
சீம்பால் வழங்குவது
இயற்கையாக பெறப்பட்ட செயலாக்க நோய்த்தடைக்காப்பு
இயற்கையாக பெறப்பட்ட மந்தமான நோய்த்தடைக் காப்பு
செயற்கையாக பெறப்பட்ட செயலாக்க நோய்த்தடைக்காப்பு
செயற்கையாக பெறப்பட்ட மந்தமான நோய்த்தடைக் காப்பு
32.
ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல் வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது?
அண்ட நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல் மூலம்
FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்
FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தூண்டுவதன் மூலம்
அண்ட செல் விடுபட்டவுடன் அதனை உடனடியாக அழித்துவிடுவதன் மூலம்
33.
பிளாஸ்மோடியத்தால் ஏற்படும் மலேரியா ______ மூலம் பரவுகின்றது.
காற்று
தொடர்பு
உணவின் மீதுள்ள துள்ளுப்பூச்சிகள்
கொசு கடித்தல்
34.
கூற்று மற்றும் காரண வினாக்கள் :
கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று கூற்று (கூ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக:
கூற்று: தேனீக்களின் சமூகத்தில் ஆண் தேனீக்களைத் தவிர மற்ற அனைத்தும் இருமயம் கொண்டவை
காரணம் : ஆண் தேனீக்கள் கன்னி இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் ஆகும்.
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் இல்லை.
'கூ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறானவை.
35.
வெள்ளரியின் கனி நிறம் இதற்கு உதாரணமாகும்?
ஒடுங்கிய மறைத்தல்
ஓங்கிய மறைத்தல்
நிரப்பு மரபணுக்கள்
தடை ஏற்படுத்தும் மரபணுக்கள்
36.
உயிரினங்கள் தோன்றியது பற்றிய அனைத்து மத நம்பிக்கைகளும் என்ன கூறுகிறது?
37.
சுற்றுச்சூழல் மாசுபாட்டினை குறைப்பதில் தனி நபரின் பங்கினை விவாதி?
38.
பின்வருவனவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
சுயதடைகாப்பு நோய் மற்றும் தடைகாப்புக் குறைவு நோய்.
39.
40.
அழியும் நிலை சிற்றினங்கள் என்றால் என்ன?
41.
ஒருவர் தினமும் ஒரு கோப்பை காஃபி அருந்துவது அவருடைய ஆரோக்கியத்திற்கு உதவும். இது சரியா? சரியென்றால் நன்மைகளை வரிசைப்படுத்து.
42.
உடல்செல் மரபணு சிகிச்சை, மற்றும் இனச்செல் மரபணு சிகிச்சை வேறுபடுத்துக
43.
உயிர் உரங்களாக நுண்ணுயிரிகளின் பங்கினை நியாயப்படுத்துக.
1.
தாவர சுட்டிக்காட்டிகள்:
சில தாவரங்களின் இருப்பு அல்லது இல்லாமை அங்கு நிலவும் சூழலைச் சுட்டிக்காட்டும் விதத்தில் காணப்படும், தனித்தாவர சிற்றினமோ அல்லது தாவரச் தொகுப்போ சூழல் நிலைகளைக் கண்டு அளவிட உதவுகின்றன. அவை உயிரிச்சுட்டிகாட்டிகள் அல்லது தாவர சுட்டிகாட்டிகள் எனப்படும். உதாரணமாக
| தாவரங்கள் | குறிகாட்டுவது | ||
|---|---|---|---|
| 1 | லைக்கண்கள்,ஃபைகஸ்,பீனூஸ்,ரோஜா | சல்ஃபர்-டை -ஆக்ஸைடு சுட்டிகாட்டிகள் | |
| 2. | பெட்டூனியா,க்ரைசாந்திமம் | நைட்ரேட் குறிகாட்டி சுட்டிகாட்டி | |
| 3. | க்ளேடியோலஸ் | ஃப்ளூரைட் மாசுபாடு சுட்டிகாட்டி | |
| 4. | ரொயீனா சூடாஅகேசியா | கன உலோகத் தூய்மைக்கேட்டை சுட்டிக்காட்டும். | |
2.
இரண்டாம் நிலை உற்பத்தித்திறன் (Secondary productivity):
சார்பூட்ட உயிரிகள் அல்லது நுகர்வோர்களின் திசுக்களில் சேமித்து வைக்கப்படும் ஆற்றலின் அளவே இரண்டாம் நிலை உற்பத்தித்திறன் ஆகும்.
அ. மொத்த இரண்டாம் நிலை உற்பத்தித்திறன் (Gross secondary productivity):
தாவர உண்ணிகளால் உட்கொள்ளப்படும் மொத்த தாவரப் பொருட்களில், அவற்றினால் கழிவாக வெளியேற்றப்படும் பொருட்களைக் கழித்து வரும் மதிப்பே இதுவாகும்.
ஆ. நிகர இரண்டாம் நிலை உற்பத்தித்திறன் (Net secondary productivity):
ஓர் அலகு இடத்தில் ஓர் அலகு காலத்தில் சுவாச இழப்பிற்குப் பிறகு நுகர்வோர்களால் சேமிக்கப்படும் ஆற்றல் அல்லது உயிர்த்திரளே நிகர இரண்டாம் நிலை உற்பத்தித்திறன் எனப்படுகிறது.
குழும உற்பத்தித்திறன் (Community productivity):
ஓர் அலகு இடத்தில் ஓர் அலகு காலத்தில் ஒரு தாவரக் குழுமத்தினால் உற்பத்தி செய்யப்படும் நிகர கரிம பொருட்களின் உயிரித்திரள் விகிதமே குழும உற்பத்தித்திறன் எனப்படுகிறது.
3.
வெவ்வேறு இனக்கூட்டத்தைச் சேர்ந்த உயிரினங்கள் உணவு, வாழிடம் மற்றும் பிற தேவைகளுக்காக ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. இத்தகைய சார்பு வாழ்க்கை சிற்றினங்களுக்குள்ளேயோ அல்லது வெவ்வேறு சிற்றினங்களுக்கிடையேயோ ஏற்படுகின்றன.
சிற்றினங்களுக்குள்ளே உள்ள சார்பு உயிர்வாழ்வதற்குத் தேவையான உணவு, எல்லை உணர்வு. இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக ஏற்படுகின்றன. வெவ்வேறு சிற்றினங்களுக்கிடையே உள்ள சார்பு கீழ்கண்ட வகைகளில் இருக்கலாம்.
நடுநிலை சார்பு "
வெவ்வேறு சிற்றினங்கள் ஒன்றாக வாழ்ந்தாலும் அவை ஒன்றையொன்று பாதிப்பதில்லை,
நேர்மறை சார்பு :
தொடர்புடைய ஒரு உயிரினம் அல்லது இரு உயிரினங்களும் பாதிப்படையும். எடுத்துக்காட்டு போட்டி, கொன்றுதிண்ணுதல் மற்றும் ஒட்டுண்ணி வாழ்க்கை.
4.
| வேம்பு | மஞ்சள் | ||
| 1 | அறிவு, இயல்பு மற்றும் மருத்துவ குணம் | பாரம்பரியமான இந்திய முறை பயன்பாடு பூஞ்சை பாக்டீரிய தோல் நோய் தொற்றல்களைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது. | பாரம்பரியமானது. வீட்டு மருந்து கிருமி நாசினியாக, புண்களை வேகமாக குணப்படுத்தும் புண் தடிப்புகளை குணப்படுத்தவும் பயன்பட்டு வந்தது. |
| 2 | இந்திய பயன்பாடு குறித்த ஆதாரங்கள் மற்றும் நிரூபணங்கள் | பல ஆயிரம் ஆண்டுகளாக பாரம்பரிய அறிவு குடும்பங்களின் பயன்படுத்தியதோடு, உலகம் முழுவதுமுள்ள மக்களுடன் பகிர்ந்து கொண்டு வந்துள்ளனர். | பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்பட்ட வீட்டு மருந்து 1953 இல் இந்திய மருத்துவக் கழகத்தின் சஞ்சிகை கட்டுரையில் இதன் மருத்துவக் குறிப்பு உள்ளது. |
| 3 | உயிரிப்பொருள் கொள்ளை முயற்சிகள் | USDA (united States Department of Agriculture) EPO எனும் ஐரோப்பிய காப்புரிமை நிர்வாகத்தில் காப்புரிமை கோரியது. (வேப்ப எண்ணெயின் உதவியால் தாவர நோய்களைக் கட்டுப்படுத்தும் ஒரு செயல் முறை) | US காப்புரிமம் மற்றும் வணிக குறியீடு அலுவலகத்திற்கான எதிர்ப்பு மேற்குறிப்பிட எடுத்துக்காட்டால் ஒப்புக்கொள்ளப்பட்டது. |
| 4 | தற்போதைய நிலை | இந்திய அரசு போராடி இரு காப்புரிமத்தையும் ரத்து செய்வதோடு, இந்திய பாரம்பரிய அறிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு US காப்பு உரிமம் பெறுவது தடுக்கப்பட்டது. | |
5.
1. இது லென்டிவைரஸ் வகையைச் சார்ந்தது.
2. இது உருளை வடிவம் கொண்டுள்ளது.
3. 100-120 nm விட்டம் கொண்டது.
4. இது உறை கொண்ட வைரஸ்
5. மேல் உறையில் gp41 மற்றும் gp120 என்ற கிளைக்கோபுரத நுண்முட்கள் காணப்படுகின்றன.
6. 2 பெரிய ஒற்றை ஆர்.என்.ஏ ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் நொதிகள் இணைந்துள்ளன.
7. மேலும் இதனுடன் புரோட்டியேஸ் மற்றும் ரிபோ நியூக்ளியேஸ் நொதிகளும் காணப்படுகின்றன.
8. இதன் மைய கேப்சிட் புரத உறையால் சூழப்பட்டுள்ளது.

6.
வரையறை:
பயிர் பெருக்க நோக்கத்திற்காக, உயிருள்ள நிலையில் உள்ள உயர்ந்த மேம்பட்ட தாவரங்களிலிருந்து பெறப்பட்ட தாவரப் பொருட்களான மகரந்தம், விதைகள் (அ) திசுக்கள் போன்றவற்றை மகரந்த விதை வங்கிகளில் அவற்றின் உயிர்ப்புத் தன்மை கெடாமல் பாதுகாத்தல் மரபணுக்கூறு பாதுகாப்பு ஆகும்.
எ.கா: விதை வங்கி, DNA வங்கி
பயன்கள்:
(i) உயிர்ப்புத் தன்மை மற்றும் வளத்தன்மை பாதுகாக்கப்பட்டு பிறகு கலப்பினமாக்கம் மற்றும் பயிர் பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
(ii) DNA வங்கி, விதை வங்கி மூலம் சிறந்த ரக தாவரங்களின் உயர்ந்த மேம்பட்ட பண்புகள் பாதுகாக்கப்படுகின்றன.
(iii) உயிர் பன்ம பேணலுக்கும், உணவுப் பாதுகாப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
7.
இடம் மாறும் வேளாண்மை:
(i) இயற்கையான மரங்களை கொண்ட வனங்களை எரித்து சுத்தம் செய்து 2 - 3 பருவத்திற்கு பயிர் சாகுபடி செய்தபின் மண் வளம் குறைகிறது.
(ii) இனி பயிர் உற்பத்தியில் அதிக லாபம் ஈட்ட முடியாத நிலை வரவும், வேறு இடத்தை தேர்வு செய்து மரங்களை வெட்டி எரித்து நிலத்தை தயார்படுத்துவர். இதுவே இடம் மாறும் வேளாண்மை எனப்படும்.
(iii) இது வடகிழக்கு இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.
(iv) இவ்வாறு பெரிய வனப்பரப்பு எரிக்கப்படுவதால் வனத்தின் பரப்பளவு குறைந்து மாசு ஏற்படுவதுடன் வெளியேற்றப்படும் கார்பன் - டை - ஆக்ஸைடு அளவும் அதிகரித்தது.
(v) வாழிட அழிப்பு மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றம் ஆகியவற்றிற்கு வழி வகுக்கின்றது.
(vi) இது விலங்கினங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
8.
1. பாக்டீரியாவை கொல்வதற்கோ (அ) அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கோ உருவாக்கப்பட்ட உயிர் எதிர்பொருளை வலிமை இழக்கச் செய்யும் திறனை பாக்டீரியா பெரும் போது "உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத் திறம்" உருவாகிறது.
2. இது பொது சுகாதாரத்திற்கு தீவிர அச்சுறுத்தல்களில் ஒன்றாகும்.
3. உயிர் எதிர்பொருட்களின் பயன்பாடு மற்றும் அளவுக்கு அதிகமான பயன்பாடு ஆகியவை உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத் திறனை முடக்கிவிடுகிறது.
4. மேலும் இது மோசமான தொற்று தடுப்பு கட்டுப்பாடு மூலமும் நிகழ்கிறது.
5. அங்கீகரிக்கப்பட்ட உடல் நல வல்லுனரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே உயிர் எதிர்பொருளை பயன்படுத்த வேண்டும்.
6. பரந்த செயலாற்றலுள்ள உயிர் எதிர்பொருட்களை விட குறுகிய செயலாற்றலுள்ள உயிர் எதிர்பொருட்களுக்காக அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
7. இவை திறம்பட மற்றும் துல்லியமாக குறிப்பிட்ட நுண்ணுயிரிகளை குறிவைத்து தாக்குவதோடு அந்த நுண்ணுயிரிகளில் எதிர்ப்பு திறன் உருவாகும் வாய்ப்பையும் குறைக்கிறது.
8. எதிர்பொருட்களுக்கு எதிர்ப்பு திறன் பெற்ற பாக்டீரியத் திரிபுகள் "சூப்பர் பக்" என்று கூறப்படுகிறது.
9.
10.
| நோயின் பெயர் | நோய்க்காரணி | அறிகுறிகள் | நோய் வெளிப்படும் காலம் |
| பாக்டீரிய பால்வினைத் தொற்று (Bacterial STI) | |||
| கொனோரியா அல்லது வெட்டை நோய் (Gonorrhoea) |
நைசீரியா கொனோரியா (Neisseria gonorrhoeae) |
(i) சிறுநீர் வடிகுழாய், மலக்குடல், தொண்டை, பெண்களின் கருப்பைவாய் ஆகிய பகுதிகளில் பாதிப்பு (ii) பிறப்புப் பாதையில் வலி, சீழ் வடிதல் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு |
2-5 நாட்கள் |
| கிரந்தி அல்லது மேகப்புண் (Syphilis) | டிரிபோனிமா பாலிடம் (Treponema pallidum) |
(i) முதல்-நிலை - பாலுறுப்புகளின் புறப்பகுதியில் வலியற்ற புண்கள். (ii) இரண்டாம் நிலை - தோல் புண்கள், சொறி, தோல் தடிப்பு, மூட்டுகளில் வீக்கம் காய்ச்சல் மற்றும் முடி உதிர்வு |
10-90 நாட்கள் |
| (iii)மூன்றாம் நிலை - பாலுறுப்புகளின் மூக்கு, கீழ்க்கால் பகுதி மற்றும் அண்ணப்பகுதியில் நாள்பட்ட புண்கள், இயக்கமின்மை மனநல பாதிப்பு, பார்வைகோளாறு இதயப்பிரச்சனை, மென்மையான பரவும் தன்மையற்ற கட்டிகள் போன்றன. | |||
| கிளாமிடியாசிஸ் (Chalmy diasis) |
கிளாமிடியா ட்ரோகோமேடிஸ் (Chlamydia trachomatis) |
கண் இமை அரிப்பு, சிறுநீரக இனப்பெருக்கப் பாதை, சுவாசப்பாதை மற்றும் கண்ணின் கன்ஜங்க்டிவா ஆகியவற்றில் தூண் எப்பிதீலிய செல்கள் பாதிப்பு | 2-3 வாரங்கள் அல்லது 6 வாரங்கள் வரை |
| லிம்போகிரானுலோமா வெனரியம் (Lymphogranuloma venereum) | கிளாமிடியா ட்ராகோமேடிஸ் | பிறப்புறுப்பின் தோல் அல்லது கோழைப்படல பாதிப்பு, சிறுநீர் வடிகுழாய் அழற்சி, உள்கருப்பை வாய் அழற்சி, வாய் அழற்சி, ஆங்காங்கே கேடு தரும் புண்கள், இனப்பெருக்க உறுப்பு யானைக்கால் நோய். | |
| வைரஸ் பால்வினைத் தொற்று(Viral STI) | |||
| பிறப்புறுப்பு அக்கி (Genital herpes) |
ஹெர்பஸ் சிம்ப்லெக்ஸ்(Herpes simplex virus) | (i) பெண்களின் பெண் கிரிவெளியிதழ், கலவிக்கால்வாய், சிறுநீர் வடிகுழாய் ஆகியனவற்றைச் சுற்றி புண்கள் ஆண்களில் ஆண்குறியைச் சுற்றி புண்கள். (ii) சிறுநீர் கழிக்கும் போது வலி (iii)மாதவிடாய் சுழற்சிகளுக்கிடையே இரத்தப்போக்கு (iv) தொடை இடக்குகளின் நிணநீர் முடிச்சுகளில் வீக்கம். |
2-21 நாட்கள் (சராசரி 6 நாட்கள்) |
| பிறப்புறுப்பு மருக்கள் (Genital warts) |
மனித பாபிலோமோ வைரஸ் (HPV)(Human papilloma virus) | (i) இன உறுப்புகளின் வெளிப்பகுதி, கருப்பைவாய், மலவாயைச் சுற்றிய பகுதிகளில் கடினமான புடைப்புகள் (கட்டிகள்) | 1-8 மாதங்கள் |
| கல்லீரல் அழற்சி (Genital warts) | ஹிபாடிடிஸ் வைரஸ்(HBV) (Hepatitis-B virus) | (i) சோர்வு, மஞ்சள் காமாலை, காய்ச்சல் தோல் தடிப்பு,வயிற்றுவலி. (ii) கல்லீரல் இறுக்கம், இறுதி நிலையில் கல்லீரல் செயலிழப்பு |
30-80 மாதங்கள் |
| எய்ட்ஸ்(AIDS) | மனித நோய் எதிர்ப்பு குறைபாடு வைரஸ்(HIV) | (i) நிணநீர், முடிச்சுகள் பெரிதாதல்,நீண்டநாள், காய்ச்சல்,நீண்டநாள் வயிற்றுப்போக்கு, உடல் எடை குறைதல், இரவில் வியர்த்தல். | 2-6 வாரங்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேலும் |
| பூஞ்சை பால்வினைத் தொற்று(Fungal STI) | |||
| கேன்டிடியாசிஸ் (Candidiasis) |
கேன்டிடா அல்பிகன்ஸ்(Candida albicans) | (i) வாய், தொண்டை, குடற்பாதை மற்றும் கலவிக்கால்வாய் ஆகிய பகுதிகளில் தாக்கம் (ii) கலவிக்கால்வாயில் அரிப்பு (அ) புண்கள் (iii) கலவிக்கால்வாய் திரவம் மிகைப்போக்கு (iv) வலியுடன் சிறுநீர் கழித்தல் |
|
| புரோட்டோசோவா பால்வினைத் தொற்று (Protozoan STI): | |||
| டிரைக்கோமணியாசிஸ் (Trichomoniasis) |
டிரைகோமோனாஸ் வாஜினாலிஸ் (Trichomonas vaginalis) | (i) கலவிக்கால்வாய் அழற்சி, பச்சை மஞ்சள் கலந்த கலவிக் கால்வாய் திரவ வெளிப்பாடு, அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு, சிறுநீர் வடிகுழல் அழற்சி, விந்தக மேல் சுருள் நள அழற்சி, புரோஸ்டேட் சுரப்பி அழற்சி | 4-28 நாட்கள் |
11.
கருவுறுதலுக்கு பின், கரு பகுப்படைவதற்கு முன் முதல் நிலை கருவூண் உட்கரு பகுப்படைந்து உருவாக்கும் திசு கருவூண் திசு.
1. உட்கருசார் கருவூண் திசு
முதல் நிலை கருவூண் உட்கரு (PEN) குன்றலில்லா பகுப்படையும். சுவர் உருவாகாமல் தனித்த உட்கருக்களைக் கொண்டுள்ளன. (எ.க) அராக்கிஸ்
2. செல்சார் கருவூண் திசு
முதல்நிலை கருவூண் உட்கரு பகுப்படையும். இரண்டு உட்கருக்கள் உருவாகும். சுவர் உருவாக்கம் நடைபெறும். (எ.டு) ஹீலியான்தஸ்
3. ஹெலோபிய கருவூண் உட்கரு பகுப்படையும், இரண்டு உட்கருக்கள் உருவாகும். உட்கருக்களுக்கிடையே சுவர் உருவாகும். பெரிய சூல்துளை அறை, சிறிய சலாசா அறை உருவாகும். (எ.டு) ஹைட்ரில்லா.
12.
1. ஆற்றல் வெவ்வேறு வடிவங்களில் ஒரு அமைப்பில் இருந்து மற்றொன்றுக்கு கடத்தப்படுகிறது.
2. ஆற்றலை ஆக்கவோ முடியாது.
3. ஆனால் மற்றொன்றாக மாற்ற முடியும்.
4. இது வெப்ப இயக்கவியலின் முதல் விதி
13.
1. வாழிட இழப்பு
2. வாழிடம் துண்டாடப்படுதல்
3. மிகை பயன்பாடு
4. அயல்நாட்டு இனங்களின் உள்ளேற்றம்.
14.
| தன் மகரந்தச் சேர்க்கை (சுயக் கலப்பு) | அயல் மகரந்தச் சேர்க்கை (வெளிக் கலப்பு) |
| ஒரு மலரில் உள்ள மகரந்தத்துகள்கள் அதே மலரில் உள்ள சூலக முடியைச் சென்றடையும் நிகழ்வு. | ஒரு மலரில் உள்ள மகரந்தத்துகள்கள் வேறொரு மலரின் சூலக முடிக்கு மாற்றப்படும் நிகழ்வு |
15.
தாவரத்தின் எந்த ஒரு பகுதியிலிருந்து பெறப்பட்ட தனிச் செல்களை ஆய்வுக் கூட சோதனை வளர்ப்பு கருவுருக்களைக் கொண்டு சில உயிர்த்தொழில்நுட்ப முறையில் உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை விதைகளைப் போன்றவை செயற்கை விதைகளாகும். இவற்றின் மேல் சுக்ரோஸ் மற்றும் சோடியம் ஆல்ஜினேட் போன்ற மந்தமான பொருட்கள் கருவுருக்களின் மீது பூசப்படுகின்றன.
16.
17.
| முதல் நிலை அறிமுகப்படுத்துதல் | இரண்டாம் நிலை அறிமுகப்படுத்துதல் | |
| அ | புதிய சூழ்நிலைக்கு தன்னை தகவமைத்து கொள்ளும் | இந்த இரகமானது தேர்ந்தெடுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறது. |
| ஆ | மரபணு வகை விகிதத்தில் எந்த மாறுபாடும் ஏற்படாது. | மேம்பட்ட இரகத்தை தனித்து பிரித்தல், இந்த இரகத்தை உள்ளூர் இரகத்துடன் கலப்பது. |
18.
| நோய்கள் | நோய்க்காரணி | நோய்த்தொற்று இடம் |
| புட்டாளம்மை | மம்பஸ் வைரஸ் (ஆர்.என்.ஏ வைரஸ்) பாராமிக்ஸோ வைரஸ் (Paramyxo virus) | உமிழ்நீர்ச் சுரப்பி |
| சின்னம்மை | வேரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ் (vericella - zoster virus) (டி.என்.ஏ வைரஸ்) | சுவாசப் பாதை தோல் மற்றும் நரம்பு மண்டலம் |
| டெங்கு காய்ச்சல் | டெங்கு வைரஸ் (அ) ஃபிளேவி வைரஸ் DENV அல்லது 1-4 வைரஸ் | தோல் மற்றும் இரத்தம் |
19.
இது 3 புள்ளி சோதனைக் கலப்பு - இதில் மூன்று புள்ளி கலப்பு 8 வேறுபட்ட 27-8 கேமிட்டுகளின் வகைகளை உருவாக்குகிறது. 3 அல்லீல்களின் அமைவிடம் அவற்றிற்கிடையேயான தூரம் -வரிசை ஆகியவற்றை மறு கூட்டிணைவு நிகழ்விரைவு மூலம் கணக்கிடலாம்.

For A&B -அடைவிடம்
RF =\(\frac {114+5+116+4\times100}{1200}\)
=19.9
For A & B -அடைவிடம்
RF =\(\frac {114+128+116+4\times100}{1200}\)
= 40.16
For B & C -அடைவிடம்
RF =\(\frac {5+128+124+4\times100}{1200}\)
= 21.75
அனைத்து அமைவிடங்களும் பிணைப்புற்றவை அனைத்து மறுகூட்டிணைவு மதிப்புகளும் 50%க்கும் குறைவானவை.
AC=அமைவிடம் அதிக RF மதிப்பு
இவையிரண்டும் இரட்டை குறுக்கேற்றத்திலிருந்து பெறப்பட்ட இரட்டை மறு கூட்டிணைவு வகைகளாகும் எனவே ஒவ்வொன்றையும் ஒருமுறை அல்ல இருமுறை கணக்கிட வேண்டும் ஏனெனில் இவை இரட்டை மறு கூட்டிணைவு வழித்தோற்றல்களைக் குறிக்கிறது இதனைச் சரிசெய்ய
114+125+116+128+5+14+4=500
மொத்த எண்ணிக்கை 1200 இல் இது 500=41.65% (துல்லியமாக) இது இருகூறு மதிப்புகளின் கூடுதலுக்கு ஒத்திருக்கிறது, இதை மாற்றி எழுதும்போது கொண்டிருப்பதால் அதிக தொலைவில் அமைந்து உள்ளதாக கருத இயலும்.
ஆனால் B இரண்டுக்கும் இடையில் காணப்பட -மரபணுக்களின் வரிசை abc

19.9+21.75 கூட்டுத்தொகை =41.95மு இது 40.16ஐ விட அதிகம். இரண்டு குறைந்த எண்ணிக்கை கொண்ட வழித்தோன்றல்கள் (மொத்த 8ல்) கண்டறிய வேண்டும்.

20.
பண்புகள் எவ்வாறு பெற்றோர்களிடம் சந்ததிகளுக்குக் கடத்தப்படுகின்றன என்பதை விளக்கும் ஒரு பிரிவு- மரபியல் எனப்படும். இதற்கு பாரம்பரியத்தின் அறிவியல் என்று பெயர்.
21.
(c)
சார்லஸ் எல்டன்
22.
(d)
வேம்பு
23.
(c)
தழையிலை
24.
(a)
10
25.
(a)
தாமரை
26.
(c)
உடைப்பு முறை
27.
(d)
DNA தோற்ற மாற்றம் செய்வது பாலிசர்க்கரை உறை அல்ல என்பது
28.
(b)
சிறிய பிரிகூறுகளைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழிப்பெருக்கமடையச் செய்தல்
29.
(b)
அண்டக செல்கள்
30.
(d)
மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு
31.
(b)
இயற்கையாக பெறப்பட்ட மந்தமான நோய்த்தடைக் காப்பு
32.
(b)
FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்
33.
(d)
கொசு கடித்தல்
34.
(a)
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் ஆகும்.
35.
(b)
ஓங்கிய மறைத்தல்
36.
1. உயிரினங்கள் யாவும் இயற்கைக்கு அப்பாற்பட்ட (கடவுள்) சக்தியினால் படைக்கப்பட்டவை.
2. இந்து மதக் கொள்கையின் படி பிரம்மா உலகத்தை உருவாக்கினார்.
3. கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் அனைத்து மத நம்பிக்கைகளும் இறைவன் பூமியையும் விலங்குகளையும் தாவரங்களையும் படைத்ததாகக் கூறுகிறது.
37.
1. தனிமனிதர்கள் வளங்களை வீணாக்குதலை குறைக்க முக்கியமாக மின்சாரச் சிக்கனத்தை மேற்கொள்ள வேண்டும்.
2. மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தலை தவிர்த்து நடந்தோ அல்லது மிதிவண்டியை பயன்படுத்தலாம்.
3. மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும்.
4. சணல் பைகளை பயன்படுத்தி பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கலாம்.
5. நீர் வளங்களை சரியாக பயன்படுத்துதல்.
6. ஓசோன் இழப்புக்கு முக்கிய காரணமான CFC குளிர்சாதனப் பெட்டிகளில் அதிகமாக பயன்படுத்துவதால் அதன் பயன்பாட்டை குறைக்கலாம்.
7. சுற்றுச்சூழல் மாசடைதலின் கேடுகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
38.
39.
40.
(i) அழியும் நிலை சிற்றினங்கள் என்பது மரபற்றுப் போக அதிக வாய்ப்புகள் உள்ளது என வகைப்படுத்தப்பட்டுள்ள சிற்றினங்கள் ஆகும்.
(ii) சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் சிறப்புப் பட்டியலில் தீவிரமாக அழியும் நிலையிலுள்ள உயிரினங்களுக்கு அடுத்தபடியாக அழியும் நிலையிலுள்ள வன விலங்குகளுக்கு இரண்டாம் நிலை அதிகபட்ச பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
(iii) 1998 ஆம் ஆண்டில் 1102 விலங்கினங்களும் மற்றும் 1197 தாவர இனங்களும் IUCN சிவப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
(iv) 2012 ஆம் ஆண்டில் 3079 விலங்கினங்களும், 2655 தாவர இனங்களும் உலகெங்கும் அழிந்து வரும் இனங்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.
(v) எ.கா மலை கொரில்லா, பாண்டா, மோனார்க் வண்ணத்துப்பூச்சி
41.
(i) காஃபெயின் அசிட்டைல்கோலைன் என்ற நரம்பிடைக் கடத்தி செயல்திறனை அதிகரிக்கிறது.
(ii) கொழுப்படைந்த கல்லீரல் நோய் சிர்ரோஸிஸ் (கல்லீரல் இழைநார் நோய்) புற்றுநோய்களை குறைக்கிறது
(iii) இரண்டாம் வகைச் சர்க்கரை நோய்க்கான ஆபத்தைக் குறைக்கிறது.
42.
| உடற்செல் மரபணு சிகிச்சை | இனச்செல் மரபணு சிகிச்சை | |
|---|---|---|
| 1 | சிகிச்சையளிக்கும் மரபணுக்கள் உடற்செல்களுக்குள் மாற்றப்படுகின்றன. | சிகிச்சையளிக்கும் மரபணுக்கள் இனச்செல்களுக்குள் மாற்றப்படுகின்றன. |
| 2 | எலும்பு மஜ்ஜை செல்கள் இரத்த செல்கள், தோல் செல்கள் போன்ற செல்களுக்குள் மரபணுக்கள் செலுத்தப்படுகிறது. | அண்ட செல்கள் மற்றும் விந்து செல்களுக்குள் மரபணுக்கள் செலுத்தப்படுகின்றன. |
| 3 | பிந்தைய தலைமுறைக்கு பண்புகள் கடத்தப்படுவதில்லை. | பிந்தைய தலைமுறைக்கு பண்புகள் கடத்தப்படுகின்றன. |
43.
1. உயிரிய உரங்கள் என்பது மண்ணின் ஊட்டச்சத்து தரத்தை வளப்படுத்தக் கூடிய உயிருள்ள நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டதாகும்.
2. இவை பல ஊட்டச்சத்துகள் மற்றும் போதுமான அளவு கரிமப் பொருட்களை வழங்கி மண்ணின் அமைப்பு முறை, கட்டமைப்பு, நீர் சேமிப்புத் திறன், நேர்மின் அயனி பரிமாற்றத் திறன் மற்றும் கார அமிலத் தன்மை (pH) போன்ற இயற்பிய வேதிய பண்புகளை அதிகரிக்கச் செய்கிறது.
3. உயிர் உரங்களின் முக்கிய மூலாதாரங்கள் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் சயனோபாக்டீரியா ஆகும்.
பாக்டீரியா:
1. ரைசோபியம் இணைந்து வாழக்கூடிய நைட்ரஜனை நிலை நிறுத்தும் பாக்டீரியா ஆகும்.
2. இந்த பாக்டீரியா பயறு வகை தாவரங்களின் வேர், முடிச்சுகளில் தொற்றி வளிமண்டல நைட்ரஜனை கரிம வடிவில் நிலைப்படுத்துகின்றன.
3. அசோஸ்பைரில்லம் மற்றும் அசோட்டோபாக்டர் போன்றவை தனித்து வாழும் பாக்டீரியாக்கள்.
4. இவை வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தி மண்ணின் நைட்ரஜன் அளவை அதிகப்படுத்துகின்றன.
மைக்கோரைசா:
பூஞ்சைகளும் தாவரங்களின் வேர்களும் இணைந்து வாழும் அமைப்பு ஆகும்.
1. இணை வாழ் உயிரியான பூஞ்சை மண்ணிலிருந்து பாஸ்பரஸை உறிஞ்சி தாவரங்களுக்கு அளிக்கின்றது
2. மேலும் இந்த தாவரங்கள் வேரிலுள்ள நோயூக்கிகளுக்கு எதிரான எதிர்ப்பு திறன், உப்புத் தன்மை மற்றும் வறட்சி தாங்கு திறன், தாவர வளர்ச்சியை மேம்படுத்துதல் போன்ற பிற நன்மைகளையும் பெறுகின்றன.
3. எடுத்துக்காட்டாக, குளோமஸ் என்ற பேரினத்தின் பல உறுப்பு இனங்கள் இத்தகைய மைக்கோரைசாவை ஏற்படுத்துகின்றன.
சயனோ பாக்டீரியா (அ) நீலப் பசும்பாசிகள்:
1. இவை தனித்து வாழ்ந்து நைட்ரஜனை நிலைப்படுத்தும் புரோகேரியாட்டிக் உயிரிகள் ஆகும். எ.கா. ஆசிலாக்டோரியா, நாஸ்டாக், அனபீனா, டோலிபோத்ரிக்ஸ்.
2. இங்கு அவை பெருக்கமடைந்து மூலக்கூறு நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றன.
3. இவை இன்டோல் - 3 - அசிட்டிக் அமிலம், இண்டோல் - 3 - பியூட்டைரிக் அமிலம், நாப்தலீன் அசிட்டிக் அமிலம், அமினோ அமிலங்கள், புரதங்கள், வைட்டமின்கள் போன்ற தாவர வளர்ச்சி மற்றும் உற்பத்தியை தூண்டும் பொருட்களை சுரக்கின்றன.
இவ்வாறு உயிரிய உரங்கள் பொதுவாக இயற்கை வேளாண்மை முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையான வழிகளில் தாவரங்களை பயிர் செய்தல் மற்றும் விலங்குகளை வளர்த்தல் இயற்கை வேளாண்மை ஆகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards