12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 14/09/2019
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
உயிரிகளில் காணப்படும் பல்வேறு வகையான ஒருங்கிணைவு முறைகள் யாவை?
2.
3.
இம்யூனோகுளோபுலினின் அமைப்பை தகுந்த படத்துடன் விளக்கு.
4.
கர்ப்ப காலத்தில் தாய்சேய் இணைப்புத்திசுவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் யாவை?
5.
உயிரிதொழில்நுட்பவியலின் பயன்பாட்டைக் குறிப்பிடுக.
6.
தன் மகரந்தச் சேர்க்கையைத் தடுக்க இருபால் மலர்கள் மேற்கொள்ளும் ஏதேனும் இரண்டு உத்திகளைப் பட்டியலிடுக.
7.
கருப்பையின் பெரும்பாலான பகுதி
கருப்பை வாய்
உடல்
குவிமுகடு
கலவிக் கால்வாய்
8.
குழந்தையின் உணவுப்பாதையில் ஏற்படும் பாக்டீரியத் தொற்றைத் தடுப்பவை _______ எதிர்ப்பொருட்கள்
IgA
IgM
IgG
IgE
9.
______ அதிகரிப்பு (எழுச்சி) அண்ட செல்லை விடுவிக்கிறது.
LH
FSH
ஆக்ஸிடோசின்
GnRH
10.
கூற்று : சில சமயம், வயிறு வலி மகப்பேறு, அறுவை வலி மகப்பேறு நடைபெறும்.
காரணம் : கருப்பையில் குழந்தையின் நிலை, தாய்சேய் இணைப்புத் திசுவின் தன்மை போன்றவற்றால் இயல்பான குழந்தை பிறப்பு நடைபெறாது.
கூற்றும், காரணமும் சரி.
இரண்டும் தவறு
கூற்று சரி, காரணம் தவறு.
கூற்று தவறு, காரணம் சரி
11.
இரவில் வியர்த்தல் எந்த நோயின் அறிகுறி?
எய்ட்ஸ்
மேகப்புண்
கேண்டிடியாசிஸ்
கிளாமிடியாசிஸ்
12.
சரியான கூற்று எது?
உடல் வெளிக்கருவுறுத்தலுக்கு 10,000 நகரும் திறனுள்ள விந்தணுக்கள் தேவைப்படும்.
விந்துசெல்கள் அறுவைசிகிச்சை மூலம் உடல்வெளிக் கருவுறுதலுக்காக எடுக்கப்படும்.
அண்ட செல்கள் சிறப்பு ஊடகத்தில் தயார் செய்யப்படும்.
HCG ஊசி உடல் வெளிக்கருவுறுதலில் தேவையில்லை
13.
பெடாஜெனிஸிஸ் (pedogenesis) என்பது எதனுடன் தொடர்புடையது?
தொல்லுயிரி படிவம்
நீர்
உயிரித்தொகை
மண்
14.
ஒபிரிஸ் என்ற ஆர்கிட் தாவரத்தின் மலரானது பெண் பூச்சியினை ஒத்துக் காணப்பட்டு, ஆண் பூச்சிகளைக் கவர்ந்து மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுகின்ற செயல்முறை இதுவாகும்.
மிர்மிகோஃபில்லி
சூழ்நிலையியல் சமானங்கள்
பாவனை செயல்கள்
எதுவுமில்லை
15.
நிரல் I-ல் மண்ணின் அளவும், நிரல் II-ல் மண்ணின் ஒப்பீட்டளவும் கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்டவற்றில் நிரல் I மற்றும் நிரல் II-ல் சரியாகப் பொருந்தியுள்ளவற்றைக் கண்டுபிடிக்கவும்.
| நிரல் I | நிரல் II |
| I) 0.2 முதல் 2.00 மி.மீ. வரை | i) வண்டல் மண் |
| II) 0.002 மி.மீ க்கு குறைவாக | ii) களிமண் |
| III) 0.002 முதல் 0.02 மி.மீ வரை | iii) மணல் |
| IV) 0.002 முதல் 0.2 மி.மீ. வரை | iv) பசலை மண் |
| I | II | III | IV |
| ii | iii | iv | i |
| I | II | III | IV |
| iv | i | iii | ii |
| I | II | III | IV |
| iii | ii | i | iv |
எதுவுமில்லை
16.
கீழ்கண்ட கூற்றினைப் படித்துச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
i) பசலை மண் தாவர வளர்ச்சிக்கு ஏற்ற மண் வகையாகும். இது வண்டல் மண், மணல் மற்றும் களிமண் ஆகியவை கலந்த கலவையாகும்.
ii) அதிகளவு லிக்னின் மற்றும் செல்லுலோஸ் கொண்ட கரிம மட்குகளில் மட்டும் செயல்முறைகள் மெதுவாக நடைபெறுகிறது.
iii) நுண்துளைகளுக்குள் காணப்படும் நுண்புழை நீர் தாவரங்களுக்குக் கிடைக்கும் ஒரே நீராகும்.
iv) நிழல் விரும்பும் தாவரங்களின் செயல் மையத்தில் அதிகளவு பசுங்கணிகங்களிலும், குறைவான அளவு பச்சையம் a மற்றும் b ஆகியவற்றிலும் மற்றும் இலைகள் மெல்லியதாகவும் காணப்படுகின்றன.
i, ii மற்றும் iii மட்டும்
ii, iii மற்றும் iv மட்டும்
i, ii மற்றும் iv மட்டும்
ii மற்றும் iii மட்டும்
17.
ஒரு தனிச் சிற்றினத்தின் சூழ்நிலையியல் பற்றி படிப்பது?
i. குழும சூழ்நிலையியல்
ii. சுயச் சூழ்நிலையியல்
iii. சிற்றினச் சூழ்நிலையியல்
iv. கூட்டு சூழ்நிலையியல்
i மட்டும்
ii மட்டும்
i மற்றும் iv மட்டும்
ii மற்றும் iii மட்டும்
18.
பின்வரும் கூற்றிலிருந்து தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
இதய அடைப்பிற்கு பயன்படுத்தப்படும் ஊட்டப்பானம் டிஜிடாலிஸ் பர்பியூரியாவிலிருந்து கிடைக்கிறது.
மூட்டுவலியை குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்து காப்சிகம் அணுவத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
மலேரியா எதிர்ப்பு மருந்து சின்கோனா ஆபிசினாலிஸ் தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
புற்றுநோய் எதிர்ப்பு பண்பானது கேதராந்தஸ் ரோசியஸ் தாவரத்தில் காணப்படவில்லை
19.
மறுகூட்டிணைவு நிகழ்விரைவு 0.09 என இருந்தால், A மற்றும் B என்ற இரு அல்லீல்களை பிரிக்கும் வரைபட அலகு எதுவாக இருக்கும்?
900 cM
90 cM
9 cM
0.9 cM
20.
இளம் உயிரிகளை ஈனும் விலங்குகள் _______.
முட்டையிடுபவை
தாயுள் முட்டை பொரித்து குட்டி ஈனுபவை
குட்டி ஈனுபவை
'அ' மற்றும் 'ஆ' இரண்டும்
21.
பின்வருவனவற்றுள் எது உயிரி உணர்வியில் பயன்படுத்தப்படுகிறது?
மின்னாற்பிரிப்பு
உயிரி உலைக்கலன்
தாங்கிக்கடத்தி
மின்துளையாக்கம்
22.
எவ்வாறு நாம் பாக்டீரியாவின் எதிர்ப்புத்திறனை குறைக்க முடியும்?
23.
மரபணுக்கள் என்றால் என்ன?
24.
ஒகசாகி துண்டங்கள் என்றால் என்ன? இவை எந்த திசையில் உருவாக்கப்படுகின்றன?
25.
சீம்பால் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது?
26.
27.
பாக்டீரியாவின் ஏற்படும் நோய்களை அட்டவணைப்படுத்துக.
28.
வெடித்தல் வழிமுறை என்றால் என்ன? இவ்வகை கனிகளில் காணப்படும் தகவமைவுகள் யாவை?
29.
அக்ரோசம் வினையை விவரி.
30.
புரதம் தயாரித்தலில் செல் தொழிற்சாலையைப் பற்றி விவரி.
31.
திடீர்மாற்றம், இயற்கைத் தேர்வு மற்றும் மரபியல் நகர்வு ஆகிய நிகழ்வுகள் ஹார்டி– வீன்பெர்க் சமநிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விளக்குக.
32.
குழந்தை பிறப்பு மற்றும் பாலூட்டுதலில் ஆக்ஸிடோசின் மற்றும் ரிலாக்சின் ஹார்மோன்களின் பங்கினை விளக்குக.
1.
தன் கருவுறுதல், அயல் கருவுறுதல், முழுச்சேர்க்கை, இளம் செல்சேர்க்கை, மாறுபட்ட செல் சேர்க்கை, ஒத்த செல் சேர்க்கை, வேறுபட்ட செல் சேர்க்கை போன்றவை ஒருங்கிணைவு வகைகள் ஆகும்.
2.
3.
1. இம்யூனோகுளோபுலின் நான்கு பாலிபெப்டைடு சங்கிலிகளை கொண்டதாகும்.
2. அவற்றில் ஒத்த அமைப்புடைய நீளம் குறைவான சங்கிலிகளும் மற்றும் நீளம் அதிகமான இரண்டு கனமான சங்கிலிகளும் உண்டு.
3. இலகுவான சங்கிலிகளின் மூலக்கூறு எடை ஏறத்தாழ 25,000 டால்டன் மற்றும் ஏறத்தாழ 214 அமினோ அமிலம் கொண்டது.
4. கனமான சங்கிலிகளின் மூலக்கூறு எடை ஏறத்தாழ 50,000 டால்டன் மற்றும் ஏறத்தாழ 450 அமினோ அமிலம் கொண்டதாகும்.
5. ஒவ்வொரு இலகுவான சங்கிலி ஒரு கனமான சங்கிலியுடனும் அதே நேரத்தில் இரண்டு கனமான சங்கிலியும் ஒன்றுடன் ஒன்று டை-சல்பைடு பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ளன
6. ஏறத்தாழ நடுப்பகுதியில், அசையும் கீல் அமைப்பினை கன சங்கிலிகள் பெற்றுள்ளன
7.ஒவ்வொரு சங்கிலியும் இரு முனைகள் கொண்டுள்ளன அவை C - முனை மற்றும் N - முனை
8. ஒரு இம்யூனோகுளோபுலினில் இரண்டு பகுதிகள் உண்டு N - முனையில் - மாறுபடும் பகுதி (V - region) C - முனையில் - நிலையான பகுதி (C - region ) காணப்படுகிறது.
4.
(i) hCG - மனித கோரியானிக் கொனடோடிராபின்
(ii) hCS - மனித கோரியானிக் சோமட்டோமாம்மோட்ரோபின்
(iii) hPL - மனித பிளாசன்டல் லாக்டோஜன்
(iv) ஈஸ்ட்ரோஜன்
(v) புரோஜெஸ்டிரான்
(vi) ரிலாக்ஸின்
5.
1. 21 ஆம் நூற்றாண்டின் மிகவும் முக்கியமான பயன்பாட்டு அறிவியல்களில் முக்கியமானது.
2. வாழ்வை பயனுள்ள முறையில் செலவிட நமக்குள்ள ஒரு நம்பத்தகுந்த துறையாகும்.
3. பரந்துபட்ட பயன்பாடு வேளாண்மை, மருத்துவம், சூழல், வணிக தொழில்கள் போன்றவை
4. மரபணு மற்றும் தாவரவகைகள் போன்ற அதிக மதிப்புள்ள விளைவுகள்
Bt. பருத்தி, அரிசி, தக்காளி, புகையிலை, காலிஃபிளவர், உருளை, வாழை போன்றவை
5. மரபணு மாற்ற வேளாண் தாவர வகைகள் நோயெதிர்ப்பு திறன், களைக்கொல்லி எதிர்ப்புத்தன்மை, இறுக்க எதிர்ப்பு தன்மை
6. உயிர்தொழில் நுட்ப தொழிற்சாலையின் மிகப்பெரிய சாதனை (மருத்துவம்) இன்சுலின், இரத்தப்புரத உற்பத்தி, தடுப்பூசி மருந்து, நொதிகள், உயிரி எதிர்ப்புப் பொருட்கள், பால் சார்ந்த தயாரிப்புகள், பானங்கள் போன்றவை.
7. உயிரி சில்லுகள் அடிப்படையாகக் கொண்ட உயிரிய கணினி உருவாக்குதல்.
8. மரபணுப் பொறியியல் மரபணு கையாளுதல், திட்ட வளர்ப்பு (முழு ஆக்குத்திறன்)
9. SCP - ஸ்பைருலினா - (உணவு தொழிற்சாலை)
10 இரண்டாம் நிலை வளர்ச்சிதைப் பொருட்கள் உயிரி உரங்கள், உயிரி பூச்சிக் கொல்லிகள் மற்றும் நொதிகள் போன்றன.
11. சூழல் சார் உயிரி தொழில் நுட்பம் உயிரித்திரள் ஆற்றல், உயிரி எரிபொருள், உயிரி சீரமைப்பாக்கம், தாவர சீரமைப்பதால்
6.
i) இருகால முதிர்வு (Dichogamy)
மகரந்தப்பையும், சூலக முடியும் வெவ்வேறு காலங்களில் முதிர்ச்சி அடையும்.
அ) ஆண் முன் முதிர்வு (Proandry)
மகரந்த தாள்கள், சூலக முடிக்கு முன்னரே முதிர்ச்சி அடையும் (எ.கா) ஹீலியாந்தஸ்.
ஆ) பெண்முன் முதிர்வு (Protogyny) (புரோடோகைனி)
சூலக முடி மகரந்ததாளுக்கு முன்னரே முதிர்ச்சியடையும் (எ.கா) அரிஸ்டலோகியா.
ii) பாலுறுப்பு தனிப்படுத்தல் (Herkogamy)
மகரந்தத்தாளும், சூலக முடியும் அமைந்திருக்கும் விதம், மகரந்தச் சேர்க்கையைத் தடுக்கும்.
(எ.கா) குளோரியோசா சூபர்பா
7.
(b)
உடல்
8.
(a)
IgA
9.
(a)
LH
10.
(a)
கூற்றும், காரணமும் சரி.
11.
(a)
எய்ட்ஸ்
12.
(a)
உடல் வெளிக்கருவுறுத்தலுக்கு 10,000 நகரும் திறனுள்ள விந்தணுக்கள் தேவைப்படும்.
13.
(d)
மண்
14.
(c)
பாவனை செயல்கள்
15.
(c)
| I | II | III | IV |
| iii | ii | i | iv |
16.
(a)
i, ii மற்றும் iii மட்டும்
17.
(d)
ii மற்றும் iii மட்டும்
18.
(d)
புற்றுநோய் எதிர்ப்பு பண்பானது கேதராந்தஸ் ரோசியஸ் தாவரத்தில் காணப்படவில்லை
19.
(c)
9 cM
20.
(c)
குட்டி ஈனுபவை
21.
(a)
மின்னாற்பிரிப்பு
22.
1. சிறிய தொற்றினை குணப்படுத்த உயிர் எதிர்பொருளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
2. மருந்து எடுத்துக் கொள்ள அவ்வப்போது தவறுதல் அல்லது மருந்தினை முழுமையான எடுத்துக்கொள்ளாமிருந்தல் உயிர் எதிர்பொருள் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.
23.
பாரம்பரியத்தின் செயல்படும் அலகுகளான இவை - குரோமோசோம்களின் குறிப்பிட்ட அமைவிடங்களில் காணப்படுகின்றன. பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு உயிர்வேதியியல், உள்ளமைப்பியல் மற்றும் நடத்தைப் பண்புகளைக் கடத்தும் பாரம்பரியக் கூறுகளாகும்
24.
1. பின்தங்கு இழையில் புதிதாக உருவாக்கப்பட்ட துண்டுகள் - ஒகசாகி - துண்டங்கள் எனப்படும்.
2. இவை சிறிய தொடர்ச்சியற்ற துண்டங்கள் ஆகும்.
3. இவை 5' - 3' - திசையில் RNA பிரைமரில் இருந்து துவங்குகிறது.
25.
(i) குழந்தை பிறந்தலிருந்து சில நாட்களுக்கு, பால் சுரப்பிகள், மஞ்சள் நிற சீம்பாலைச் சுரக்கின்றன.
(ii) இதில் லாக்டோஸ் குறைவாயுள்ளது. புரதம், தாது உப்புகள், விட்டமின் A அதிக அளவில் உள்ளன.
(iii) சீம்பாலில் கொழுப்பு கிடையாது.
(iv) IgA வகை எதிர்பொருட்கள் உள்ளன. இவை குழந்தையின் உணவுப்பாதை பாக்டீரியத் தொற்றை தடுக்கின்றன.
(v) எளிதில் செரிக்கக்கூடிய, அனைத்து ஊட்டச்சத்து கொண்ட சரியான உணவு.
(vi) முதல் 6 மாதம் தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தை நலமுடன் வளரும்.
26.

27.
| நோய்கள் | நோய்க்காரணி | நோய்த் தொற்றும் பகுதி | பரவும் முறை | அறிகுறிகள் | |
| 1. | ஷிஜெல்லோசிஸ் *(Shigellosis) (பேசில்லரி சீதபேதி) |
ஷிஜெல்லா சிற்றினம் (Shigella sp) | குடல் | மலக்கழிவு கலந்த உணவு மற்றும் நீர்/நேரடியாக வாய்மலம் வழி | வயிற்று வலி நீரிழப்பு, மலக்கழிவில் இரத்தம் மற்றும் கோழை காணப்படுதல் |
| 2. | புபோனிக் பிளேக் (Bubonic Plague) (கருப்பு மரணம்) |
எர்சினியா பெஸ்டிஸ் (Yersinia pestis) | நிணநீர் முடிச்சுகள் | நோய்க்கடத்தி தெள்ளுப்பூச்சி (Xenopsylla cheopis) | காய்ச்சல், தலைவலி வீங்கிய நிணநீர் முடிச்சுகள் |
| 3. | டிப்தீரியா (Diphtheria) |
கோரினைபாக்டீரியம் பாக்டீரியம் (Corynebacterium diphtheriae) |
குரல்வளை, தோல், சுவாச மற்றும் இனப்பெருக்கப் பாதை | நீர்த்திவலைகள் வழித் தொற்று | காய்ச்சல், தொண்டை வலி, கரகரப்பான தொண்டை மற்றும் சுவாசத்தில் இடர்பாடு |
| 4. | காலரா (Cholera) |
விப்ரியோ காலரே | குடல் | மலக்கழிவு கலந்த உணவு மற்றும் நீர் மலக்கழிவு வாய் வழியாக | கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பு |
| 5. | டெட்டனஸ் (Tetanus) (அசையாத் தாடை) | கிளாஸ்ட்ரிடியம் டெட்டனி (Clostridium tetani) |
இழுப்பு | காயத்தின் வழியாக தொற்றுதல் | தாடை தசைகள் விறைத்தல் மிகை இதயத்துடிப்பு, முகம் மற்றும் தாடை தசை இழுப்பு |
| 6. | நிமோனியா (Pneumonia) | ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (Streptococcus pneumoniae) |
நுரையீரல் | நீர்த்திவலைகள் வழித்தொற்று | காய்ச்சல், இருமல் வலியுடன் கூடிய சுவாசம் மற்றும் பழுப்பு நிற சளி |
| 7. | டைஃபாய்டு (Typhoid) |
ஸ்ட்ரெப்டோகாக்கஸ் | குடல் | மலக்கழிவு கலந்த உணவு மற்றும் நீர் வழியாக | தலைவலி, அசௌகரியமான வயிறு, காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு |
| 8. | காசநோய் (Tuberculosis) |
மைகோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் (Mycobacterium tuberculosis) |
நுரையீரல் | நீர்த்திவலைகள் வழித் தொற்று | மூக்கின் வழியாக அடர் கோழை வெளியேற்றம் |
28.
(i) சில கனிகள் திடீரென்று ஒரு விசையுடன் வெடித்து அதனுடைய விதைகள் அந்தத் தாவரத்தின் அருகிலேயே பரவுதல்.
(ii) சில கனிகளைத் தொடுவதன் மூலம் அவை திடீரென வெடித்து விதைகள் மிகுந்த விசையுடன் தூக்கி எறியப்படுகின்றன. (எ.கா) காசித்தும்பை
(iii) சில கனிகளில் மழைத் தூறலுக்குப் பின், திடீரெனச் சத்தத்துடன் வெடித்து விதைகளானது பரவப்படுகின்றன. (எ.கா) ருயில்லியா மற்றும் கிரசான்ட்ரா
(iv) சில கனிகள் பட்டாசு போன்ற சத்தத்துடன் வெடித்து அனைத்து திசைகளிலும் விதைகளைச் சிதறடிக்கச் செய்கின்றன. (எ.கா) ஒட்டகப்பாதக்கொடி (Camel's foot climber)
(v) கனிகள் முதிர்ச்சியடைந்தவுடன் விதைகளைச் சுற்றியுள்ள திசுக்கள் பிசின் போன்ற அடர்த்தியான திரவமாக மாற்றமடைவதால் கனிகளின் உள்ளே அதிக விறைப்பழுத்தம் (High turgor pressure) ஒன்று உண்டாக்கப்பட்டுக் கனியானது வெடித்து விதைகள் பரவ உதவுகிறது. (எ.கா) எக்பெல்லியம் - எலேட்டிரியா என்ற பீய்ச்சும் வெள்ளரி (Squirting cucumber) கைரோகார்ப்ஸ் மற்றும் டிப்டீரோ கார்ப்பஸ்.
29.
1. விந்து செல், அண்டத்தினுள் நுழைய, கரோனா, ரேடியேட்டாவின், பல அடுக்கு கிரானுலேசா செல்களைத் துளைக்க வேண்டும்.
2. விந்து செல்லின் அக்ரோசம் சவ்வு சிதைவுறுகிறது.
3. இதனால் ஹையாலுரோனிடேஸ் என்ற புரதச் செரிப்பு நொதி வெளிப்படுகின்றது.
4. கரோனோ ரேடியேட்டா, சோனா பெலூசிடா போன்றவை சிதைக்கின்றன. எனவே விந்து செல் அண்டகத்தினுள் நுழைகின்றது.இது 'அக்ரோசம் வினை எனப்படும்.
30.
ரிபோசோம் - இதுவே புரதம் தயாரிக்கும் தொழிற்சாலை.
1. இதில் - அமைப்பு RNA க்கள் மற்றும் 80 பலதரப்பட்ட புரதங்கள் உள்ளன.
2. செயலற்ற நிலையில் (புரதம் தயாரிக்காத நிலையில்) இரு துணை அலகுகளாகக் காணப்படுகிறது.
| யூகேரியாட்டு | புரோகேரியாட்டு | |
|---|---|---|
| 1 | பெரிய அலகு 60S ரிபோசோம் |
பெரிய அலகு 50S ரிபோசோம் |
| 2 | துணை அலகுகள் |
துணை அலகுகள் ![]() |
| 3 | ![]() இதில் 31 ரிபோசோம் புரதங்கள் காணப்படுகிறது |
![]() இதிலும் 31 ரிபோசோம் புரதங்கள் காணப்படுகிறது |
| 4 | 30S ➝16S | 40S+18S + 33 புரதங்கள் |
31.
திடீர் மாற்றம் இயற்கைத் தேர்வு, மரபியல் நகர்வு, மரபணு ஓட்டம் ஆகிய நான்கு காரணிகள் ஹார்டி - வீன்பெர்க் சமநிலையை பாதிக்கின்றன.
அ) திடீர்மாற்றம்:
திடீர் மாற்றம் என்பது மரபியல் மாறுபாடு ஆகும். திடீர் மாற்றம் மரபியல் மாறுபாடுகள் தோன்றுவதற்கான மூலகாரணமாக இருந்தாலும் பெரும்பாலான உயிரினங்களில் திடீர் மாற்ற வீதம் குறைவாகவே இருக்கும். எனவே ஒரு அல்லீல் நிகழ்வெண்ணில் ஏற்படும் புதிய திடீர் மாற்றம் அடுத்தடுத்த தலைமுறைகளில் பெரிய அளவில் இருக்காது.
ஆ) இயற்கைத்தேர்வு:
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு அல்லீல் (அல்லது வேறுபாடுடைய அல்லீல்களின் சேர்க்கை ஒரு உயிரினத்தை வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் தகுதிப்படுத்தும் போது இயற்கைத் தேர்வு நடைபெறுகிறது.
அந்த அல்லீல் தகுதியைப் குறைக்கும்போது அதன் நிகழ்வெண் அடுத்தடுத்த தலைமுறைகளில் குறைகிறது.
ஒரு குறிப்பிட்ட மரபணுவின் பரிணாமப்பாதை என்பது பல்வேறு பரிணாம செயல்முறைகள் ஒரே நேரத்தில் செயல்படுவதன் விளைவாகும். எடுத்துக்காட்டாக ஒரு மரபணுவின் அல்லீல் நிகழ்வெண், மரபணு ஓட்டம் மற்றும் மரபியல் நகர்வு ஆகிய இரண்டு காரணிகளால் மாற்றப்படலாம். அதே நேரத்தில்
மற்றோரு மரபணு திடீர் மாற்றத்தினால் இயற்கைத்தேர்வு ஏற்கத்தக்க புதிய அல்லீலை உருவாக்கலாம்.
இ) மரபியல் நகர்வு:
வாய்ப்புகள் காரணமாக அடுத்தடுத்த தலைமுறைகளில் ஒரு இனக்கூட்டத்தின் அல்லீல் நிகழ்வெண்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் பரிணாம நிகழ்வே மரபியல் நகர்வு ஆகும்.
மரபியல் நகர்வு இனக்கூட்டத்தின் அனைத்து அளவுகளிலும் நடைபெறும் ஆனால் இதன் விளைவுகள் சிறிய இனக்கூட்டத்தில் வலிமை உடையதாக இருக்கும். இதன் விளைவாக சில அல்லீல்கள் நிலை நிறுத்தப்படலாம்.
இயற்கை இடர்பாடு காரணமாக இனக்கூட்டத்தின் அளவு குறைந்திருந்தாலும். (சீசா கழுத்து விளைவு) அல்லது மூல இனக்கூட்டத்திலிருந்து ஒரு சிறுபகுதி பிரிந்து சென்று புதிய கூட்டத்தை உருவாக்கினாலும் (நிறுவனர் விளைவு) மரபியல் நகர்வின் விளைவு அதிகமாக இருக்கும்.
32.
குழந்தை பிறப்பு,பாலூட்டுதலில் ஆக்ஸிடோசின்,ரிலாக்ஸின் பங்கு.
ரிலாக்ஸின்:
(i) ரிலாக்ஸின் இடுப்பு எலும்பு மூட்டுகளைத் தளர்வடையச் செய்கிறது.
(ii) கருப்பையின் வாய்ப்பகுதியை, வலிமையான சுருக்கங்களால் விரிவடைய செய்கிறது.
ஆக்ஸிடோசின்:
(i) பால் சுரப்பின் மீச்சிறு கதுப்புகளிலிருந்து விசையுடன் பாலை வெளித்தள்ள ஆக்ஸிடோசின் உதவுகின்றது. இது நிர்பந்த அனிச்சைக் செயல்(Let Down Reflex) எனப்படும்.
(ii) கருப்பையை, கர்ப்ப காலத்தின் முந்தைய நிலைக்கு மாற்றுகின்றது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards