12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 17/01/2020
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
கேழ்வரகின் பயன்கள் கூறு.
2.
GIFT, ZIFT வேறுபடுத்துக.
3.
பிளாஸ்மோடியம் எந்த நிலைகளில் பலபிளவு முறை நடைபெறுகிறது?
4.
சூழ்நிலையியல் - வரையறு
5.
ராவோல்ஃபியா வோமிட்டேரியா எனும் மருத்துவ தாவரத்தில் உள்ள செயல்படு வேதிப்பொருளின் பெயர் என்ன? இது எந்த வகை பல்வகைத்தன்மையை சார்ந்துள்ளது?
6.
பாலிமரேஸ் சங்கிலி வினையைப் பயன்படுத்தி விரும்பிய மாதிரியில் எவ்வாறு மரபணு பெருக்கம் செய்யப்படுகின்றது?
7.
வீக்கத்தின் போது உற்பத்தி செய்யப்படும் வேதிய எச்சரிக்கை சமிக்ஞைகளை பட்டியலிடுக.
8.
9.
பதியமிடல் என்றால் என்ன?
10.
வாழிடங்கள் துண்டாடப்படுவதினால் உயிரினங்கள் பாதிக்கப்படுவதை விவரி. உயிரினங்கள் வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரித்தல் வாழிடம் துண்டாடப்படுதல் ஆகும்.
11.
இரட்டிப்பாதல் (அ) மீளுறுவாதல்
12.
நீர் மாசுறுதலின் மூல ஆதாரங்கள் யாவை?
13.
பலபிளவு முறை பற்றி விரிவாக விடையளி.
14.
நீயறிந்த ஏதாவது இரு தாவரங்களின் செயலாக்க மூலமருந்து மற்றும் மருத்துவ முக்கியத்துவத்தை தருக.
15.
கலப்பின வீரியம் - குறிப்பு வரைக
16.
கீழே கொடுக்கப்பட்டுள்ள சில மனித உறுப்புகளில் ஒரு முதல்நிலை மற்றும் ஒரு இரண்டாம் நிலை நிணநீர் உறுப்பை அடையாளம் கண்டு அதன் பங்கினை விளக்குக.
அ) கல்லீரல்
ஆ) தைமஸ்
இ) தைராய்டு
ஈ) டான்சில்
உ) வயிறு
கல்லீரல்
தைமஸ்
தைராய்டு
டான்சில்
17.
வழிமுறை வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முறைப்படி வரிசைப்படுத்தி, வழிமுறை வளர்ச்சியின் வகையைக் கண்டறிந்து விளக்குக.
நாணற் சதுப்பு நிலை, தாவரமிதவை உயிரிநிலை, புதர்செடி நிலை, நீருள் மூழ்கிய தாவரநிலை, காடுநிலை, நீருள் மூழ்கி மிதக்கும் நிலை, சதுப்பு புல்வெளி நிலை.
18.
Bt பருத்தியின் நன்மை, தீமைகளை எழுதுக.
19.
பல்கூட்டு பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
20.
நுண்வித்துருவாக்கத்திலுள்ள படிநிலைகளை விவாதி.
21.
சூழல்மண்டலத்தின் ஆற்றல் ஓட்டம் எப்பொழுதும்
ஒரே திசையில் பாய்கிறது
மேலிருந்து கீழாக
சங்கிலி அமைப்பில்
எல்லா திசைகளிலும்
22.
எதற்குட்பட்ட தாவரங்களில் சோமோ -குளோனல் வேறுபாடுகள் காணப்படும்?
rDNA தொழில்நுட்பவியல்
காமா கதிரியக்கத்திற்கு உட்பட்ட தாவரங்கள்
திசு வளர்ப்பு
மிகவும் மாசுபட்ட சூழல்
23.
குர்கமின் எதிலிருந்து பெறப்படும்?
மஞ்சள்
மிளகாய்
ஏலக்காய்
புளி
24.
90% மேற்பட்ட ______________ சந்ததியை உருவாக்க இயலாத மலட்டுயிரிகளாகின்றன.
மரபு மாற்றம்
விலங்கு நகலாக்கம்
டி.என்.ஏ மறுசேர்க்கை
ஜீன் சிகிச்சை
25.
| A | ராமபித்திகஸ் | 1. | நவீன மனிதன் |
| B | ஆஸ்ட்ரலோபித்திகஸ் | 2. | இரண்டு கால்களில் நடத்தல் |
| C | ஹோமோ ஹேபிலஸ் | 3. | ஆஸ்திரேலிய மனித குரங்கு |
| D | ஹோமோ செபியன்ஸ் | 4. | கொரில்லா போன்ற நடை |
A-4,B-3,C-2,D-1
A-1,B-2,C-3,D-4
A-4,B-3,C-1,D-2
A-2,B-1,C-4,D-3
26.
பின்வருவனவற்றில் பெடோஜெனிசிஸ் என்பதைக் குறிக்கும் சொல்
படிமங்கள்
தண்ணீர்
மக்கள்தொகை
மண் உருவாக்கம்
27.
சரியா?, தவறா?
1) விந்தணுக்கள் சில வேதிப்பொருட்களால் செயலிழக்கச் செய்யும்
2) கருத்தடை உறை ஆட்டுத்தோல் பொருட்களால் செய்யப்படும்.
3) கருப்பை வாய்த்திரவம் ஹார்மோன்களால் கெட்டியாக்கப்படும்
4) பாலூட்டும் கால மாதவிடாயின்மை நம்பத்தக்கது
1,2,சரி;3,4 தவறு
1,2 தவறு;3,4 சரி
1,2,3, சரி 4 தவறு
1 தவறு; 2,3,4 தவறு
28.
ஹைட்ரோ குளோரோ புளோரோ கார்பன் சேர்மங்களில் அதிகமாகக் காணப்படும் மூலக்கூறு எது?
ஹைட்ரஜன்
கார்பன்
குளோரின்
புளோரின்
29.
பின்வரும் மண்டலங்களில் அதிகபட்ச பல்வகைத் தன்மை கொண்ட பகுதி எது?
குளிர் பாலைவனம்
வெப்ப மண்டலக்காடுகள்
மிதவெப்ப மழைக்காடுகள்
சதுப்பு நிலங்கள்
30.
பயிர் பெருக்கத்தில் வேகமான முறை _____.
அறிமுகப்படுத்துதல்
தேர்ந்தெடுத்தல்
கலப்பினமாதல்
சடுதிமாற்றப்பயிர்பெருக்கம்
31.
தூது RNA மூலக்கூறு எம்முறையில் உருவாக்கப்படுகிறது?
இரட்டிப்பாதல்
படியெடுத்தல்
நகலாக்கம்
மொழிபெயர்த்தல்
32.
தோல் புற்றுநோயை அதிகரிக்கும் நிகழ்வு எந்த வளிமண்டல வாயு குறைவு காரணமாக ஏற்படுகிறது?
அம்மோனியா
மீத்தேன்
நைட்ரஸ் ஆக்ஸைட்
ஓசோன்
33.
புள்ளி சடுதிமாற்றத்தால் DNA வின் வரிசையில் ஏற்படும் ஒத்த பதிலீடு, ஒத்த பதிலீடு வேறுபட்ட பதிலீடு, வேறுபட்ட பதிலீடு முறையே _______.
A ⟶ T, T ⟶ A, C ⟶ G மற்றும் G ⟶ C
A ⟶ G, C ⟶ T, C ⟶ G மற்றும் T ⟶ A → W
C ⟶ G, A ⟶ G, T ⟶ A மற்றும் G ⟶ A
G ⟶ C, A ⟶ T, T ⟶ A மற்றும் C ⟶ G
34.
எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?
அர்ரீனோடோக்கி
தெலிடோக்கி
ஆம்ஃபிடோக்கி
'அ' மற்றும் 'இ' இரண்டும்
35.
உயிர்ப்பன்மத் தாக்க மதிப்பீடு பயன்கள் யாவை?
36.
வாண்ட்ஹாஃப் விதியை பற்றி விவரிக்க.
37.
தாவரங்களால் சீரமைக்கப்படுதல் என்றால் என்ன?
38.
காலஸ் தூண்டப்படுதலை விவரி.
39.
நடு அடுக்கிலிருந்து உருவாகும் உடல் உறுப்புக்கள் எவை?
40.
டார்வினின் குருவிகள் மற்றும் ஆஸ்திரேலிய பைப்பாலூட்டிகள் ஆகியவை தகவமைப்புப் பரவலுக்கான சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும் சொற்றொடரை நியாயப்படுத்துக.
41.
உயிர் உரங்களாக நுண்ணுயிரிகளின் பங்கினை நியாயப்படுத்துக.
42.
கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக.
| நோய்கள் | நோய்க்காரணி | அறிகுறிகள் |
| அஸ்காரியாசிஸ் | அஸ்காரிஸ் | |
| டிரைகோஃபைட்டான் | உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட, செதில் புண்கள் காணப்படுதல். |
|
| டைபாய்டு | அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல். | |
| நிமோனியா |
43.
அனைத்து சூழல்மண்டலங்களிலும் பொதுவாக காணப்படும் உணவுச்சங்கிலியின் பெயரை கண்டறிந்து விளக்குக. அதன் முக்கியத்துவத்தை எழுதுக.
1.
1. கால்சியம் நிறைந்தது.
2. இந்திய தெற்கு மலைப்பகுதிகளில் முக்கிய உணவு.
3. கஞ்சியாகவோ, கூழாகவோ உண்ணப்படும்.
4. ராகி மால்ட் ஊட்டச்சத்து பானம் .
5.நொதி பான தயாரிப்பில் பயன்படும்.
2.
| GIFT | ZIFT | ||
|---|---|---|---|
| 1. | அண்ட நாளத்தினுள் இனச் செல் இடமாற்றம் | 1. | கருமுட்டையை அண்டநாளத்தினுள் செலுத்தல். |
| 2. | B பிளாஸ்டோமியர் கொண்ட கருமுட்டை, லேப்ராஸ்கோப் முறையில், அண்டநாளத்தில் வைக்கப்படும். | 2. | அண்டக்கலத்திலிருந்து முட்டைகள் விந்து செல்களுடன் சேர்க்கப்பட்டு அண்ட நாளத்தினுள் செலுத்தப்படும். |
| 3. | கருமுட்டை கருப்பையை நோக்கிச் சென்று பதிகிறது. | 3. | கருக்கோளம் கருப்பை நோக்கி நகர்ந்து பதிகின்றது. |
3.
1. சைஷாண்ட் நிலையில் பல பிளவு மூலம் மீரோசோயிட்டுகள் உருவாகிறது.
2. ஊசைட் நிலையில் பல பிளவு மூலம் ஸ்போரோசோயிட்டுகள் உருவாகிறது.
4.
(i) இயற்கை வாழிடங்கள் அல்லது உறைவிடங்களிலுள்ள உயிரினங்களான, தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பற்றிய படிப்பு - ரெய்ட்டர் (1885)
(ii) உயிரினங்களுக்கும் அவற்றின் சூழலுக்கும் இடையேயான பரஸ்பர உறவு பற்றிய படிப்பே சூழ்நிலையியல் எனப்படுகிறது - எர்னஸ்ட் ஹெக்கெல் (1889)
5.
இமயமலையின் பல்வேறு பகுதிகளில் வளரும் ராவோல்ஃபியா வோமிட்டேரியா எனும் மூலிகைத் தாவரத்திலுள்ள ரிசர்பைன் எனும் செயல்படு வேதிப்பொருள் உள்ளது.
இது மரபியல் பல்வகைத்தன்மையை சார்ந்தது.
6.
(i) இது இயல்புதிரிபு உற்பத்தி நீட்சி ஆகிய மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.
(ii) அதிக வெப்பநிலையை பயன்படுத்தி நமக்கு தேவைப்படும் இரட்டைச் சுருள் டி.என்.ஏ வின் இயல்பைத் திரித்து இரண்டு தனித்தனியான இழைகளாகப் பிரிக்கப்படுகிறது. இவை 95o C வெப்ப நிலையில் நடைபெறுகிறது.
(iii) முதன்மை இணைப்பு இழையின் நீட்சி அல்லது உருவாக்கத்தின் போது கலவையின் வெப்ப நிலை 75o C-க்கு உயர்த்தப்பட்டு போதுமான கால அளவிற்கு நிலை நிறுத்தப்படுகிறது.
(iv) இதனால் Tag டி.என்.ஏ பாலிமரேஸ் தனித்த அச்சு வார்ப்பு டி.என்.ஏ விலிருந்து நகலெடுக்கப்பட்டு முதன்மை இணைப்பு இழை நீட்சியடையச் செய்கிறது.
(v) அடைகாப்புக் காலத்தின் இறுதியில் இரு அச்சு வார்ப்பு இழைகளும் பகுதியளவு இரட்டைச் சுருள் இழைகளாக மாற்றப்படும்.
(vi) இவ்வாறு உருவாகும் இரட்டைச் சுருள்களிலுள்ள ஒவ்வொரு புது இழையும் கீழ் நோக்கிய வேறுபட்ட தொலைவுகளில் நீண்டு காணப்படும்.
7.
1. செரோடோனின்
2. ஹிஸ்டமைன்
3. புரோஸ்டாகிளான்டின்
இவை சிதைந்த மாஸ்ட் திசுக்களால் சுரக்கப்படுகிறது.
8.
9.
1. பெற்றோர் தாவரத்தண்டு தாவரத்தோடு ஒட்டியிருக்கும் போது அதிலிருந்து வேர்கள் தோன்ற தூண்டப்படும்.
2. வேர் தோன்றிய பகுதி வெட்டி நீக்கப்பட்டு புதிய தாவரமாகும்.
(எ.கா): ஜாஸ்மினம், இக்ஸோரா
10.
1. உயிரினங்கள் வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரித்தல் வாழிடம் துண்டாடப்படுதல் எனப்படும்.
2. காட்டு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல் பழத்தோட்டங்கள், மலைத் தோட்டங்கள், நகர்ப்புற குடியிருப்புகள் அமைத்தல், தொழிற்பேட்டைகள், விளைபொருட்களை எடுத்துச்செல்ல வழித்தடங்கள் அமைத்தல் ஆகிய நிகழ்வுகளால் வாழிடம் துண்டாடப்படுகிறது.
3. இதன் விளைவாக உணவுச்சங்கிலி, உணவு வலை அழிக்கப்படுதல், அழிக்கப்பட்ட பகுதியில் உள்ள உயிரினங்கள் அழிதல், துண்டாடப்பட்ட வாழிடத்தில் உள்ள பல்வகைத் தன்மை குறைதல் ஆகியவை ஏற்படுகின்றன.
4. அதிக நிலப்பரப்பை தேவையாகக் கொண்ட பாலூட்டிகள், பறவை போன்ற பாதிக்கப்படுகின்றன.
5. யானை வழித்தடங்கள், வலசை போகும் பறவைகள் பாதிக்கப்படுகின்றன.
6. சிட்டுக் குருவிகள் குறைய இதுவும் ஒரு காரணமாகும்.
11.
ஒரே வரிசையிலான மரபணுக்கள் ஒரு குரோமோசோமில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் இடம் பெறுவதற்கு இரட்டிப்பாதல் என்று பெயர்.
பிரிட்ஜஸ் - டிரோசோஃபிலாவில் முதலில் கண்டறிந்தார்.
எ.கா.: மக்காச்சோளம் மற்றும் பட்டாணி
வகைகள்:
1. தொடரிணைந்த இரட்டிப்பதால்: (Tandem duplication)
இரட்டிப்பான பகுதி குரோமோசோம்களின் இயல்பான பகுதிக்குப் பின் அதே வரிசையில் அமைவதாகும்.
2. தலைகீழ் தொடரிணைந்த இரட்டிப்பாதல்: (Reverse tandem duplication)
இரட்டிப்பான பகுதி அதன் இயல்பான பகுதிக்குப், பின் மரபணு தொடர்வரிசை தலைகீழாக அமைவதாகும்.
3. இடம் மாறிய இரட்டிப்பாதல்: (Displaced duplication)
இரட்டிப்படைந்த பகுதி அதன் இயல்பான பகுதிக்கு சற்று தொலைவில் அதே வரிசையில் அமைவதாகும்.
12.
மனித செயல்பாடுகளால் நீர் மாசுபடுகிறது.
மூலாதாரங்கள்
1. மைய மூலாதாரங்கள்
நீர் நிலைகளில் குறிப்பிட்ட இடத்தில் குழாய்கள் அல்லது கழிவுநீர்க் குழாய் மூலம் மாசுபடுத்திகளை வெளியிடுதல் மைய மூலாதாரங்கள் ஆகும்.
2. மையமற்ற மூலாதாரங்கள் :
ஒரு இடத்தில் வெளியேற்றப்படும் மாசின் மூலாதாரங்கள் கண்டறிய இயலாது.
எ.கா. அமிலமழை, நீர்நிலைகளில் கொட்டப்படும் நெகிழிப்பொருட்கள்.
3. கசிவுகள் மற்றும் சிந்துதல் கப்பல் விபத்து எண்ணெய் கசிவுகள்.
4. நகராட்சி கழிவுகள்:- வீடுகள் மற்றும் வணிக நிறுவன கழிவுநீர்.
5. தொழிற்சாலைக் கழிவுகள் - காட்மியம் குரோமியம் அடங்கிய கழிவுநீர்.
6. வேளாண் கழிவுகள்
7. நீர் மாசுபடுத்திகள் ஊடுருவல் மூலம் நிலத்தடி நீரினை அடைகின்றன.
13.
1. சாதகமற்ற சூழலில் இனப்பெருக்கம் செய்வதற்காகத் சில உயிரிகளில் பல பிளவுமுறை நடைபெறுகிறது.
2. உட்கரு தொடர்ந்து பிரிவடைந்து பல உட்கருக்களாக உருவாகின்றன.
3. பல பிளவு முறையில் சமமான செல் பிரிதலினால் ஒரு உயிரியிலிருந்து நான்கு அல்லது பல சேய் உயிரிகள் தோன்றுகின்றன.
4. மேலும் பிளவுறுதல் நிகழ்வு முழுமையடையும் வரை சேய் உயிரிகள் பிரிவதில்லை.
5. இதற்கு பன்மடிப் பகுப்பு என்று பெயர்.
6. பிளாஸ்மோடியத்தில் சைஷாண்ட் மற்றும் உசைட் நிலையில் பலபிளவு முறை நடைபெறுகிறது.
7. சைஷான்ட் நிலையில் மீரோசைட்டுகள் உருவாகின்றன.
8. உசைட் நிலையில் ஸ்போரோசோயிட்டுகள் உருவாகின்றன.
9. அமீபாக்கள் சாதகமற்ற சூழலில் உறையாக்கம் மூலமும் இனப்பெருக்கம் செய்கிறது.

14.
I) கீழாநெல்லி (பில்லாந்தஸ் அமாரஸ்)
(செயலாக்க மூல மருந்து)
ஃபிலாந்தின் மருத்துவ முக்கியத்துவம்
(i) மஞ்சள் காமாலை, கல்லீரல் பாதுகாப்பு மருந்து
(ii) டாக்டர் நியாகராஜன், ஃபிலாந்தஸ் அமாரஸ் ஹெபடைட்டிஸ் வைரஸ் தாக்குதலை எதிர்க்கிறது என நிரூபித்தார்.
II) நில வேம்பு (ஆண்ட்ரோகிராபிஸ் பானிகுலேட்டா)
(செயலாக்க மூல மருந்து)
ஆண்ட்ரோகிராபைடுகள் மருத்துவ முக்கியத்துவம்
(i) கல்லீரல் நோய்களுக்கு மருந்து
(ii) எட்டு மூலிகைகளுடன் சேர்ந்து தயாரிக்கப்படும். நிலவேம்புக் குடிநீர், மலேரியா, டெங்கு சிகிச்சைக்குப் பயன்படும்.
15.
(i) பெற்றோரை விடக் கலப்புயிரி முதல் மகவுசந்ததியில் செயல்திறன் மேம்பட்டிருப்பதால் ஈர்ப்பு கலப்புயிரி வீரியம் என்றழைக்கப்படுகிறது.
(ii) G.H ஷல் என்பவர் தான் முதன்முதலில் ஹெட்டிரோசிஸ் என்ற சொல்லை பயன்படுத்தினார்.
(iii) கலப்பின வீரியத்தின் வகைகள் மெய்கலப்பின வீரியம், சடுதிமாற்ற வீரியம், சமநிலை மெய்கலப்பின வீரியம் மற்றும் பொய்கலப்பின வீரியம்.
1) மெய்கலப்பினவீரியம் (Euheterosis): மெய்கலப்பினவீரியம் என்பது மரபு வழியாகப் பெறப்படும் கலப்பு வீரியமாகும். மேலும் இது கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.
அ. சடுதிமாற்ற மெய்கலப்பின வீரியம் (Mutational Euheterosis) - இது மெய்கலப்பினவீரிய வகைகளில் மிக எளிமையானது. அயல்-மகரந்தச்சேர்க்கை நடைபெறக்கூடிய பயிர்களில் மேம்பட்ட ஓங்கிய அல்லீல்கள் மூலம் தேவையற்ற, கேடுவிளைவிக்கக்கூடிய, கொல்லும் ஒடுங்குப்பண்புடைய அல்லது சடுதிமாற்றம் பெற்ற மரபணுக்களை நீக்குவதன் மூலம் ஏற்படுகிறது.
ஆ. சமநிலை மெய்கலப்பினவீரியம் (Balanced Euheterosis) : இவை வேளாண்மைக்கு உதவும் வகையில் பல சூழ்நிலைக் காரணிகளுக்கேற்பத் தகவமைத்துக் கொள்ளும் சமநிலை பெற்ற மரபணு இணைப்பு, சமநிலை மெய்கலப்பினவீரியமாகும்.
ii) பொய்கலப்பினவீரியம் (Pseudoheterosis): சந்ததி தாவரமானது உடல் வளர்ச்சியில் பெற்றோர் தாவரங்களை விட மேம்பட்டும் ஆனால் விளைச்சலிலும், தகவமைப்பிலும், மலட்டுத்தன்மையுடனோ அல்லது குறைந்தளவு வளமானதாகவோ காணப்படுகிறது. இது உடலவளவீரியம் என்றும் அழைக்கப்படும்.
16.
முதல்நிலை நிணநீரிய உறுப்பு தைமஸ் ஆகும்.
இரண்டாம் நிலை நிணநீரிய உறுப்பு டான்சில் ஆகும்.
முதல்நிலை நிணநீரிய உறுப்பின் பங்கு: தைமஸ்
தைமஸ் பிறந்த குழந்தைகளிலும் விடலைப் பருவத்தினரிடத்திலும் தைமஸ் அதிக செயல்திறனுடன் செயல் புரிகின்றது.
தைமஸ் தட்டையான இரு கதுப்புகளைக் கொண்டது. மார்பெலும்பிற்குப் பின்புறம் இதயத்திற்கு மேலாகவும் அமைந்துள்ளன.
தைமசின் ஒவ்வொரு கதுப்பும் பல எண்ணற்ற நுண் கதுப்புகளால் ஆக்கப்பட்டுள்ளது. நுண் கதுப்புகளை இணைப்புத் திசுவால் ஆன தடுப்புச் சுவர் பிரிக்கிறது.
ஒவ்வொரு நுண் அடுக்கும் கார்டெக்ஸ் எனும் புற அடுக்கினையும் மெடுல்லா எனும் அக அடுக்கினையும் கொண்டுள்ளன. கார்டெக்ஸ் பகுதியில் தைமோசைட்டுகள் எனும் முதிர்ச்சியடைந்த T - செல்கள் அடர்ந்து காணப்படுகின்றன.
தைமஸிலிருந்து தைமோசின் எனும் மிகமுக்கிய ஹார்மோன் உருவாகிறது.
அது T - செல்களைத் தூண்டி அவற்றை முதிர்ச்சியடையச் செய்கிறது, மற்றும் தடைகாப்புதிறன் பெற்ற செல்களாக மாற்றுகிறது. பதின்பருவத்தின் தொடக்கத்தில் (12 - 13 வயது) தைமஸ் நலிவுறுகின்றது. அவ்விடத்தில் அடிபோஸ் திசு பதிலீடாக வளருகின்றது.
இரண்டாம்நிலை நிணநீரிய உறுப்பின் பங்கு: டான்சில்கள்
டான்சில்கள் (அண்ண டான்சில்கள்) ஒரு இணையான மென்திசுவாகும். இவை தொண்டையின் பின்புறம் அமைந்துள்ளன.
டான்சில்கள் நிணநீர் மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இவை தொற்றுகளுக்கு எதிராக போராடுவதில் உதவுகின்றன. இவை உள்நுழையும் பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நுண்கிருமிகளை தடுத்து நிறுத்துகின்றன.
17.
1. தாவர மிதவை உயிரிநிலை (Phytoplankton state) -நீலப்பசும்பாலிகள், பாக்டீரியங்கள், சயனோ பாக்டீரியங்கள், பசும்பாசிகள், டயட்டம் போன்ற முன்னோடி குழுமங்களைக் கொண்ட வழிமுறை வளர்ச்சியின் முதல்நிலை இதுவாகும்.
2. இந்த உயிரினங்களின் குடிபெயர்பு, வாழ்க்கை செயல்முறைகள், இறப்பின் மூலமாக குளத்தின் கரிம பொருளின் அளவு மற்றும் ஊட்டச்சத்து செறிவடைகிறது. இது வளர்ச்சியின் அடுத்த படிநிலை வளர்ச்சிக்கு உதவுகிறது.
3. நீருள் மூழ்கிய தாவர நிலை (Submerged plant stage)- மிதவை உயிரிகளின் இறப்பு மற்றும் மட்குதலின் விளைவாலும், மழைநீர் மூலம் நிலத்திலிருந்து மண் துகள்கள் அடித்து வரப்படுவதாலும், குளத்தின் அடிப்பகுதியில் ஒரு தளர்வான மண் உருவாக்க வழி வகுக்கிறது. எனவே வேரூன்றி நீருள் மூழ்கி வாழும் நிர்வாழ்த்தாவரங்கள் புதிய வாழ்தளத்தில் தோன்ற ஆரம்பிக்கிறது. எ.காட்டுகள்: கேரா, யூட்ரிகுலேரியா,
4. தாவரங்களின் இறப்பு மற்றும் சிதைவு குளத்தின் அடித்தளத்தை உயர்த்துவதால் குளம் ஆழற்றதாக மாறுகிறது. எனவே இந்த வாழிடம் நீருள் மூழ்கி மிதக்கும் நிலையிலுள்ள வேறுவகையான தாவரங்கள் குடியேறுவதற்கு ஏதுவாக அமைகிறது.
5. நீருள் மூழ்கி மிதக்கும் நிலை (Submerged free floating stage)- இந்த நிலையில் குளத்தின் ஆழம் கிட்டத்தட்ட 2-5 அடியாக இருக்கும். எனவே, வேரூன்றிய நிர்வாழ்த் தாவரங்கள் மாற்றும் பெரிய இலைகளுடன் கூடிய மிதக்கும் தாவரங்கள் குளத்தில் குடியேற ஆரம்பிக்கின்றன.
எடுத்துக்காட்டாக, வேரூன்றிய மிதக்கும் தாவரங்களான தாமரை, அல்லி மற்றும் ட்ராபா.
6. இந்த தாவரங்களின் இறப்பு மற்றும் சிதைத்தல் மூலம் குளத்தின் ஆழம் மேலும் குறைகிறது. இதன் காரணமாக மிதக்கும் தாவரங்கள் படிப்படியாக பிற இனங்களால் மாற்றி அமைக்கப்படுவதால் புதிய நிலை ஒன்று உருவாகிறது.
7. நாணற் சதுப்பு நிலை (Reed -swamp stage) - இது நீர்-நில வாழ்நிலை எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த நிலையில் வேரூன்றிய மிதக்கும் தாவரங்கள் பிற தாவரங்களால் மாற்றியமைக்கப்படுகிறது. இது நீர் சூழ்நிலையிலும், நில சூழ்நிலையிலும், நில சூழ்நிலையிலும் வெற்றிகரமாக வாழக்கூடியது. எடுத்துக்காட்டு: பைஃபா.
8. சதுப்பு புல்வெளி நிலை (Marsh meadow stage)-நீரின் அளவு குறைவதால், குளத்தின் ஆழம் குறையும்பொழுது சைப்பரேசி மற்றும் போயேசி இவற்றின் அதிகம் கிளைத்த வேர்களின் உதவியால் பாய் விரித்தது போன்ற தாவரத்தொகுப்பு ஒன்று உருவாகிறது.
9. இது அதிக அளவு நீர் உறிஞ்சுவதற்கும், நீர் இழப்பிற்கு வழிவகுக்கிறது. இந்த நிலையின் முடிவில் மண் வறண்டு சதுப்புநிலத் தாவரங்கள் படிப்படியாக மறைந்து புதர்ச்செடிகள் குடிபுக வழிவகுக்கிறது.
10. புதர்ச்செடி நிலை (shrub stage)-சதுப்பு நிலத் தாவரங்கள் தொடர்ந்து மறைவதாக, மண் வறண்டு போகிறது. எனவே இந்த பகுதிகளில் நிலவாழ்த் தாவரங்களான புதர்ச்செடிகள் (சாலிக்ஸ் மற்றும் கர்னஸ்) ஆகியவை படையெடுக்கின்றன. இந்த தாவரங்கள் அதிக அளவிலான நீரை உறிஞ்சி வறண்ட வாழிடத்தை உருவாக்குகின்றன. அத்துடன் செழுமையான நுண்ணுயிரிகளுடன் கூடிய கரிம மட்கு சேகரமடைவதால் மண்ணில் கனிமவளம் அதிகரிக்கிறது. இறுதியில் அப்பகுதி புதிய மர இனங்களின் வருகைக்கு சாதகமாகிறது.
11. காடுநிலை (Forest stage)-நீர் வழிமுறை வளர்ச்சியின் உச்சநிலை குழுமம் இதுவாகும். இந்த நிலையின்போது பல்வேறு வகையான மரங்கள் படையெடுப்பதோடு ஏதாவது ஒருவகையான தாவரத்தொகுப்பு உருவாகிறது.
18.
நன்மைகள்
1. விளைச்சல் அதிகரிக்கிறது. ஏனெனில் காய்ப்புழுக்களின் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
2. பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு குறைகிறது.
3. பயிர் வளர்ப்பில் உண்டாகும் செலவு குறைகிறது.
தீமைகள்
1. இதன் விதையின் விலை அதிகம்.
2. முதல் 120 நாட்கள் மட்டுமே வீரியமுள்ளதாக இருக்கிறது. பின்னர் இதன் வீரியம் வர வர குறைகிறது.
3. சாறு உறிஞ்சும் தத்துப்பூச்சிகள், அசுவினிப்பூச்சிகள், வெள்ளை ஈக்கள் போன்றவற்றிற்கு எதிராகச் செயல்படுவதில்லை.
4. மகரந்தச்சேர்க்கையில் துணைபுரியும் பூச்சிகளை பாதிக்கிறது. அதனால் விளைச்சல் குறைகிறது.
19.
வரையறை:
(i) ஒரு உயிரினத்தின் பல மரபணுக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பண்பைத் தீர்மானிக்கும் முறைக்கு பல் மரபணு பாரம்பரியம் ஏற்படுகிறது.
(ii) ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணுக்கள் ஒரு பாரம்பரியத்தை தீர்மானிக்கும் போது பல் மரபணு பாரம்பரியம் ஏற்படுகிறது.
(iii) H - நில்சன் ஹீல் (1909) கோதுமையின் விதையுறைகளில் இவ்வாய்வை நிகழ்த்தி இப்பாரம்பரியத்தை விளக்கினார்.
(iv) சிவப்பு விதையுறை நிறம் (ஓங்கு பண்பு) தாவரத்தை வெள்ளை விதையுறை (ஒடுங்கு பண்பு) தாவரத்துடன் கலப்பு செய்தார்.
(v) அடர் சிவப்பு R1R2R2R2 x வெள்ளை நிறம் r1r1r2r2 இக்கலப்பில்
(vi) 4 - R மரபணுக்கள் மிகுந்த அடர்சிவப்பு நிறம் - 1
(vii) 3 - R மரபணுக்கள் மிதமான அடர் சிவப்பு நிறம் - 1
(viii) 2 - R மரபணுக்கள் சிவப்பு நிறம் - 6
(ix) 1 - R மரபணுக்கள் வெளிர் சிவப்பு நிறம் - 4
(x) R ஓங்கு மரபணு இல்லாமை வெள்ளை நிறம் - 1
(xi) இந்த சிவப்பு நிற செறிவை வரைபடமாக்கினால் ஒரு மணி வடிவ வரைபடம் - கிடைத்தது
(xii) பிற எடுத்துக்காட்டுகள் - மனிதனில் உயரம் & தோல் நிறம்
முடிவுகள்:
நில்சன் ஹீல் ஆய்வு முடிவுகள்:
(i) பிணைதல் இல்லை.
(ii) விதையுறை நிறத்தை மூன்றாவது மரபணுவும் தீர்மானிக்கிறது என்பர் பின்னர் கண்டறியப்படுகிறது.
(iii) மூன்று தனித்த இணை அல்லீல்கள் - இந்த விதையுறை நிறத்தில் பங்கு கொள்கின்றன.
(iv) நிலசன் - ஷீல் F2 சந்ததி விகிதம் 63 : 1
புறத்தோல் விகிதம்
| சிவப்பு | வெள்ளை |
| 63 | 1 |
மரபணு வகையும்
| 1 : 6 : 15 : 20 : 15 : 6 : 1 |
(i) இதன்படி கோதுமை விதையுரையில் கலப்புப் பாரம்பரியம் தென்படவில்லை.
(ii) F2 சந்ததியில் அதிக அளவில் நிற வேறுபாடுகள் காணப்பட்டது.(மரபணுக்களில் தனிதொங்குதல்)
(iii) இதில் பெற்றோர் புறத் தோற்றங்களான அடர் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் இல்லாமல் போனது.
(iv) மரபணுக்களில் கலப்பு இல்லை.
(v) பல மரபணு இலைகளின் ஒட்டு மொத்த விளைவால் - பல்வேறு நிறச் சாயல்கள் தோன்றியது.
(vi) நிலசன் - ஷீல் கருதுகோளின் படி இரு அமைவிடங்களும் கூட்டாக இணைந்து கோதுமை விதையுறை நிறத்தைத் தோற்றுவித்தன.
20.
1. முதல் நிலை வித்து செல்கள் பகுப்புக்கு உட்பட்டு வித்துருவாக்கத் திசுவைத் தோற்றுவிக்கின்றன.
2. வித்துருவாக்க திசுவின் கடைசி செல்கள் நுண் வித்து தாய் செல்களாகச் செயல்படும்.
3. நுண் வித்து தாய் செல்கள், குன்றல் பகுப்பால் நான்கு இருமடிய நுண்வித்துக்களைத் தோற்றுவிக்கும்.
4. நுண் வித்துக்கள் விரைவில், ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிந்து, தனித்தனியாக மகரந்தப்பை அறையில் காணப்படும்.
5. சில தாவரங்களில் நுண் வித்துக்கள் இணைந்து பாலினியம் (Pollinium) என்ற அமைப்பாகும்.
21.
(a)
ஒரே திசையில் பாய்கிறது
22.
(c)
திசு வளர்ப்பு
23.
(a)
மஞ்சள்
24.
(b)
விலங்கு நகலாக்கம்
25.
(a)
A-4,B-3,C-2,D-1
26.
(d)
மண் உருவாக்கம்
27.
(c)
1,2,3, சரி 4 தவறு
28.
(c)
குளோரின்
29.
(b)
வெப்ப மண்டலக்காடுகள்
30.
(d)
சடுதிமாற்றப்பயிர்பெருக்கம்
31.
(b)
படியெடுத்தல்
32.
(d)
ஓசோன்
33.
(b)
A ⟶ G, C ⟶ T, C ⟶ G மற்றும் T ⟶ A → W
34.
(a)
அர்ரீனோடோக்கி
35.
1. நிலமாற்றம் மற்றும் பயன்பாடு காப்பதிலும்.
2. நிலத் துண்டாக்குதல் மற்றும் தனிமைப்படுத்தலும்
3. வளங்கள் பிரித்தெடுத்தல் |
4. புகை வெளியேற்றம், கழிவுகள், வேதிப் பொருட்கள், புற உள்ளீடு செய்யவும்.
5. மரபு மாற்றப்பட்ட சிற்றினங்கள் அந்நிய மற்றும் ஆக்கிரமிப்பு சிற்றினங்களை அறிமுகப்படுத்துதல்.
36.
1. உயிரினங்களில் ஒவ்வொரு 10o C வெப்பநிலை உயர்வுக்கும் வளர்சிதை மாற்ற வீதம் இரட்டிப்படைகிறது. அல்லது ஒவ்வொரு 10oC வெப்பநிலை குறையும் போதும் வளர்சிதை மாற்ற வீதம் பாதியாகிறது என வாண்ட்ஹாஃப் தெரிவித்தார். இவ்விதி வாண்ட்ஹாஃப் விதி என அழைக்கப்படுகிறது.
2. வெப்பநிலை,வினைகளின் வேகத்தின் மீது ஏற்படுத்தும் விளைவு வெப்பநிலைக் கெழு அல்லது Q10 மதிப்பு எனப்படும். இம்மதிப்பானது XoC வெப்பநிலையில் ஒரு வினையின் வேகத்திற்கும் X-10oC வெப்பநிலையில் அவ்வினையின் வேகத்திற்கும் இடையே உள்ள விகிதத்தால் கணக்கிடப்படுகிறது.
3. உயிரினங்களில் Q10 மதிப்பு சுமார் 2.0 ஆகும். Q10 மதிப்பு 2.0 ஆக இருந்தால் ஒவ்வொரு 10oC வெப்பநிலை உயர்வுக்கும் வளர்சிதை மாற்ற வீதம் இரட்டிப்படையும் என்பது பொருள்.
37.
(i) சில தாவரங்கள் மாசடைந்த மண்ணிலிருந்து காட்மியத்தை அகற்ற பயன்படுகின்றன. இதற்கு தாவரங்களால் சீரமைக்கப்படுதல் என்று பெயர்.
(ii) (எ.கா) நெல், ஆகாயத்தாமரை போன்ற தாவரங்கள் காட்மியத்தை தங்களது புரதத்தோடு இணையச் செய்து சகிப்புத்தன்மையை ஏற்படுத்திக் கொள்கின்றன.
(iii) சோயா, தக்காளி, தாவரங்கள் காட்மியத்தை மண்ணிலிருந்து பிரித்தெடுத்து சிறப்பு கூட்டுச் செல்களில் சேமித்து நிர்வகிக்கும் தன்மையை பெற்றுள்ளன.
38.
I) Inoculation (உட்செலுத்துதல்)
நோய்க்கிருமி நீக்கப்பட்ட துண்டுகளின் பிரிகூறுகள் ஆக்சின் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட MS ஊட்டக கரைசலில் வைக்கப்படுகிறது.
II) Incubation: (அடைகாத்தல்)
இவை 25o C± 2o C வெப்ப நிலையில் 12 மணிநேரம் ஒளி மற்றும் இருள் என மாறி மாறி வைக்கப்படும்.
III) Induction of Callus (காலஸ் உருவாக்கம்)
பிரிகூறின் மேற்பரப்பில் செல்பிரிதல் தூண்டப்பட்டு - காலஸ் உருவாகிறது.
காலஸ் என்பது ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பு
ஊடகத்தில் தாவர செல்கள் (அ) திசுக்களின் முறையற்ற வளர்ச்சி ஆகும்.
39.
1. இணைப்புத்திசு
2. எலும்பு, குருத்தெலும்பு
3. தசைகள்
4. சிறுநீரகம், சிறுநீர் நாளம், இனப்பெருக்க உறுப்புக்கள்
40.
தகவமைப்பு பரவல்:
1. இது ஒரு பரிணாம முறை.
2. ஒரு மூதாதை இனத்திலிருந்து புதிய சிற்றினங்கள் புதிய வாழிடங்கள் வாழ்வதற்கேற்ற தகவமைப்புகளுடன் தோன்றும் பரிணாம நிகழ்வு தகவமைப்பு பரவல் எனப்படும்.
டார்வின் குருவிகள்:
1. இப்பறவைகளின் மூதாதையர் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு காலபாகஸ் பகுதிக்கு வந்து சேர்ந்தவை
2. டார்வின் குருவிகள் 14 சிற்றினங்களாக பரிணமித்திருந்தன.
3. உடல் அளவு அலகின் வடிவம் மற்றும் உணவுப்பழக்கம் ஆகிய பண்புகள் வேறுபட்டிருந்தன.
4. உடல் அளவு மற்றும் அலகின் வடிவம் ஆகியவற்றால் ஏற்பட்ட மாறுபாடுகளால் அவை வெவ்வேறு வகை உணவுகளான பூச்சிகள் விதைகள் கள்ளித் தாவரத்தின் மகரந்தத் தேன் மற்றும் உடும்பின் இரத்தம் ஆகியவற்றை உண்ண முடிகிறது.
5. ALX, மரபணுக்களால் ஏற்பட்ட மரபணு மாற்றங்களே வெவ்வேறு வகை அலகு வடிவங்களுக்கு காரணமாகும்.
ஆஸ்திரேலியாவின் பைப்பாலூட்டிகள்:
1. இவைகள் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பொது மூதாதையரிடம் இருந்து தனியாக தோன்றின.
2. ஆஸ்திரேலிய பைப்பாலூட்டிகள் தகவமைப்பு பரவல் மூலம் ஆஸ்திரேலியாவின் வெவ்வேறு வாழிடங்களில் பரவலாக வாழ்கின்றன.
41.
1. உயிரிய உரங்கள் என்பது மண்ணின் ஊட்டச்சத்து தரத்தை வளப்படுத்தக் கூடிய உயிருள்ள நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டதாகும்.
2. இவை பல ஊட்டச்சத்துகள் மற்றும் போதுமான அளவு கரிமப் பொருட்களை வழங்கி மண்ணின் அமைப்பு முறை, கட்டமைப்பு, நீர் சேமிப்புத் திறன், நேர்மின் அயனி பரிமாற்றத் திறன் மற்றும் கார அமிலத் தன்மை (pH) போன்ற இயற்பிய வேதிய பண்புகளை அதிகரிக்கச் செய்கிறது.
3. உயிர் உரங்களின் முக்கிய மூலாதாரங்கள் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் சயனோபாக்டீரியா ஆகும்.
பாக்டீரியா:
1. ரைசோபியம் இணைந்து வாழக்கூடிய நைட்ரஜனை நிலை நிறுத்தும் பாக்டீரியா ஆகும்.
2. இந்த பாக்டீரியா பயறு வகை தாவரங்களின் வேர், முடிச்சுகளில் தொற்றி வளிமண்டல நைட்ரஜனை கரிம வடிவில் நிலைப்படுத்துகின்றன.
3. அசோஸ்பைரில்லம் மற்றும் அசோட்டோபாக்டர் போன்றவை தனித்து வாழும் பாக்டீரியாக்கள்.
4. இவை வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தி மண்ணின் நைட்ரஜன் அளவை அதிகப்படுத்துகின்றன.
மைக்கோரைசா:
பூஞ்சைகளும் தாவரங்களின் வேர்களும் இணைந்து வாழும் அமைப்பு ஆகும்.
1. இணை வாழ் உயிரியான பூஞ்சை மண்ணிலிருந்து பாஸ்பரஸை உறிஞ்சி தாவரங்களுக்கு அளிக்கின்றது
2. மேலும் இந்த தாவரங்கள் வேரிலுள்ள நோயூக்கிகளுக்கு எதிரான எதிர்ப்பு திறன், உப்புத் தன்மை மற்றும் வறட்சி தாங்கு திறன், தாவர வளர்ச்சியை மேம்படுத்துதல் போன்ற பிற நன்மைகளையும் பெறுகின்றன.
3. எடுத்துக்காட்டாக, குளோமஸ் என்ற பேரினத்தின் பல உறுப்பு இனங்கள் இத்தகைய மைக்கோரைசாவை ஏற்படுத்துகின்றன.
சயனோ பாக்டீரியா (அ) நீலப் பசும்பாசிகள்:
1. இவை தனித்து வாழ்ந்து நைட்ரஜனை நிலைப்படுத்தும் புரோகேரியாட்டிக் உயிரிகள் ஆகும். எ.கா. ஆசிலாக்டோரியா, நாஸ்டாக், அனபீனா, டோலிபோத்ரிக்ஸ்.
2. இங்கு அவை பெருக்கமடைந்து மூலக்கூறு நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றன.
3. இவை இன்டோல் - 3 - அசிட்டிக் அமிலம், இண்டோல் - 3 - பியூட்டைரிக் அமிலம், நாப்தலீன் அசிட்டிக் அமிலம், அமினோ அமிலங்கள், புரதங்கள், வைட்டமின்கள் போன்ற தாவர வளர்ச்சி மற்றும் உற்பத்தியை தூண்டும் பொருட்களை சுரக்கின்றன.
இவ்வாறு உயிரிய உரங்கள் பொதுவாக இயற்கை வேளாண்மை முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையான வழிகளில் தாவரங்களை பயிர் செய்தல் மற்றும் விலங்குகளை வளர்த்தல் இயற்கை வேளாண்மை ஆகும்.
42.
| நோய்கள் | நோய்க்காரணி | அறிகுறிகள் |
| அஸ்காரியாசிஸ் | அஸ்காரிஸ் | |
| டிரைகோஃபைட்டான் | உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட, செதில் புண்கள் காணப்படுதல். |
|
| டைபாய்டு | சால்மோனெல்லா | அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல். |
| நிமோனியா | ஸ்ட்ரெப்டோகாக்கஸ் | காய்ச்சல், இருமல் வலியுடன் கூடிய சுவாசம் மற்றும் பழுப்பு நிற சளி. |
43.
மட்குப்பொருள் (சிதைவுக்கூளம்) உணவுச்சங்கிலி அனைத்து சூழல் மண்டலத்திற்கும் பொதுவானது.
மட்குப்பொருள் உணவுச்சங்கிலி:
1. இந்த உணவுச்சங்கிலி இறந்த கரிமபொருட்களிலிருந்து தொடங்குகிறது. இது முக்கிய ஆற்றல் மூலமாக உள்ளது.
2. அதிகப்படியான கரிமப்பொருள்கள் இறந்த தாவரங்கள் விலங்குகள் மற்றும் அவற்றின் கழிவு பொருட்களிலிருந்து பெறப்படுகிறது.
3. இறந்த உயிரிகளின் கரிமப்பொருட்கள் மறுசுழற்சி மற்றும் அதன் சமநிலையை தக்கவைக்கவும் சூழ்நிலை மண்டலத்தில் இது முக்கியமான உணவு சங்கிலியாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards