12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
பால்வினைத் தொற்று நோய்களைத் தடுக்கும் முறைகளை எழுதுக
2.
Rh காரணியின் மரபுக் கட்டுப்பாட்டை பற்றி விளக்கு
3.
இனச்செல் உருவாக்கம் – வரையறு?
4.
பல்கூட்டு அல்லீல்கள் என்றால் என்ன?
5.
கேன்தரோஃபில்லி என்றால் என்ன?
6.
உயிரினங்கள் தகுதிநிலையை டார்வின் எவ்வாறு விளக்குகிறார்?
7.
வேறுபடுத்துக – வார்ப்புரு இழை மற்றும் குறியீட்டு இழை
8.
சீம்பால் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது?
9.
ஒற்றைமய – இரட்டைமய நிலை என்றால் என்ன?
10.
கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன? விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.
11.
மரபியல் - வரையறு.
12.
டார்வினின் குருவிகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்?
இணைப்பு உயிரிகள்
பருவகால வலசைபோதல்
தகவமைப்பு பரவல்
ஒட்டுண்ணி வாழ்க்கை முறை
13.
சீம்பாலில் அதிகம் காணப்படுவது _____.
IgE
IgA
IgD
IgM
14.
கரு பதியும் இடம் ______.
கருப்பை
வயிற்றுக்குழி
கலவிக் கால்வாய்
ஃபெல்லோப்பியன் குழாய்
15.
இணை ஓங்குத்தன்மை இரத்தவகை எது
A
AB
B
O
16.
இளம் உயிரிகளை ஈனும் விலங்குகள் _______.
முட்டையிடுபவை
தாயுள் முட்டை பொரித்து குட்டி ஈனுபவை
குட்டி ஈனுபவை
'அ' மற்றும் 'ஆ' இரண்டும்
17.
இரத்தக்கசிவு நோய் ஆண்களில் பொதுவாக காணப்படும் காரணம் என்ன?
Y - குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்
Y - குரோமோசோமில் ஓங்கு பண்பு கொண்டுள்ளதால்
X - குரோமோசோமில் ஓங்கு பண்பு கொண்டுள்ளதால்
X - குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்
18.
கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டறிந்து ‘அ’, ‘ஆ’ ‘இ’ மற்றும் ‘ஈ’ எனக் குறியிடப்பட்டுள்ள பாகங்களின் பெயர்களைக் குறிக்க.

19.
Bt பருத்தியின் நன்மை, தீமைகளை எழுதுக.
20.
எச்.ஐ.வி வைரஸ் _______ பேரினத்தை சார்ந்தது.
21.
13 வது குரோமோசோமின் டிரைசோமிக் நிலை ________
22.
பாலினப் பெருக்கம் ______ கொண்டு வரும்.
23.
பாலிலி இனப்பெருக்கம் மூலம் தோன்றும் சேய் உயிரிகள் ______ பண்புகளைக் கொண்டிருக்கும்.
24.
ஜீனோம்களையும் ஜின்களையும் வரிசைப்படுத்துவதும், வரைபடம் வரைவதையும் பற்றிப் படிக்கின்ற இயலுக்கு _______ என்று பெயர்.
25.
ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ளன. சிறிய துணை அலகு ஒரு ______ இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு _____ இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும் கொண்டுள்ளன
26.
டிரான்ஸ்போசான் தனிமங்கள்
27.
மூன்று மானோசோமி
28.
மெண்டல்
29.
லிகேஸ்
30.
பொருளற்ற குறியீடுகள் எனப்படும் UAA, UAG மற்றும் UGA ஆகியவை நிறைவுக் குறியீடுகளாகவும் செயல்படுகின்றன.
31.
ஸ்பிளிட் ஜீன் பண்பு யூகேரியாட்டில் காணப்படுகிறது.
32.
பாக்டீரியாவில் படியாக்கம் மற்றும் மொழியாக்கம் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நடைபெறுகிறது.
33.
RNA பொதுவாக ஓரிழையாலானது.
34.
RNA வினையூக்கியாக இருப்பதால் அது எதிர்வினையாற்றியாகவும், எளிதில் சிதைவதாகவும் உள்ளது.
1.
(i) முன்பின் தெரியாதவர், பலருடன் பாலுறவைத் தவிர்த்தல்.
(ii) கருத்தடை உறைகளைப் பயன்படுத்துதல்
(iii) மருத்துவ ஆலோசனை, முழுமையான சிகிச்சை
2.
ஃபீஷர் மற்றும் ரேஸ் கருதுகோள்:
(i) Rh காரணியின் மூன்று வெவ்வேறு அல்லீல் இணைகள் குரோமோசோம் இணைகளின் நெருக்கமான மூன்று வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளன.(Cc,Dd Ee)
(ii) இது பொதுவாக cde என்ற பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது.
(iii) ஒவ்வொரு குரோமோசோம் C அல்லது c ஒரு D அல்லது d, ஒரு E அல்லது e வாய்ப்புகளை மரபு வகையைப் பெற்றிருக்கும்.
(iv) எ.கா /cde
CdE/eDe
Cde/cde
CDe
CDe/CdE

(v) அனைத்து மரபு வகைகளிலும் உள்ள ஓங்கிய D அல்லீல்கள் Rh+ புறத்தோற்ற வகையை உருவாக்குகின்றன.
(vi) இரண்டு ஓங்கிய பண்பு கொண்ட மரபு வகையில் dd அல்லீல்கள் Rh- புறத்தோற்ற வகையை உற்பத்தி செய்கின்றன.
வெய்னரின் கருதுகோள் :
(i) ஒரு Rh னுடைய இருப்பிடத்தில் எட்டு அல்லீல்கள் (R1R2R0RZr 1r11r1) இருக்கின்றன.
(ii) ஓங்கிய அல்லீல்களைக் கொண்ட அனைத்து மரபு வகைகளும்(R1R2R0RZ) Rh (+) புறத்தோற்ற வகையை உற்பத்தி செய்கின்றன.
(iii) ஒடுங்கிய பண்பு கொண்ட அனைத்து மரபு வகைகளும் (rr rr1rr11ry) Rh-புறத்தோற்றத்தையும் உற்பத்தி செய்கின்றன.
3.
பாலினப்பெருக்க உயிரிகளில் முதல்நிலை பாலுறுப்புகளிலிருந்து விந்துக்களும் அண்ட செல்களும் உருவாகும் நிகழ்ச்சி இனச்செல் உருவாக்கம் எனப்படும். இச்செயல்பாட்டில் குன்றல் பகுப்பு முக்கியப்பங்கு வகிக்கிறது.
4.
(i) அல்லீல்கள் - மரபணுக்களின் மாற்று வடிவம் ஒரு குறிப்பிட்டப் பண்பின் வேறுபட்ட புறத்தோற்ற வெளிப்பாட்டிற்குக் காரணமானவை.
(ii) ஒரு மரபணுவிற்கு ஒரே அமைவிடத்தில் மேற்பட்ட அல்லீல்கள் காணப்படுவது பல்கூட்டு அல்லீல்கள் எனப்படும். எ.கா: மனிதனில் காணப்படும் ABO இரத்த வகை (3 அல்லீல்கள் - கட்டுப்படுத்துகிறது)
5.
வண்டுகளினால் நடைபெறும் அயல் மகரந்தச் சேர்க்கை. பூக்களின் மகரந்தம், ஈரச்சத்து மிக்கத் திசுக்களை உண்கிறது.
(எ.கா) நிம்பேயா சிற்றினத் தாவரம் - ரினோரஸ் வண்டு
ராட்சத நீர் அல்லி - காரப் (scarab) வண்டு
6.
1. டார்வினின் கோட்பாடுபடி சூழ்நிலைக்கேற்ப வாழ ஏற்படும் மாறுபாடுகள் வாழத்தகுதி வாய்ந்தவை.
2. இத்தகைய உயிரிகள் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்த்து வாழ தகுதி வாய்ந்தவை.
3. அத்தகைய மாறுபாடுகள் அடுத்த சந்ததிகளுக்கு மரபு கடத்தப்படுகின்றன.
4. அவ்வாறு தகுதி பெற்ற உயிரினங்கள் தகுதி பெறாத உயிரினங்களை விட நன்கு வாழும் என்றும் அவை அதிக வாரிசு உயிரிகளை உருவாக்கும் இதற்கு இயற்கை தேர்ந்தெடுத்தல் ஒரு காரணம் ஆகும்.
5. வாழ்க்கை வாழ்வதற்கான போராட்டம் வாழத் தகுதியுடைய உயிரினங்களை உருவாக்கும். அத்தகைய உயிரிகள் தகவமைப்புகளோடு சூழ்நிலையில் வாழத் தகுதி அடைகின்றன.
7.
| வார்ப்புரு இழை | குறியீட்டு இழை | |
| 1 | இவ்விழை mRNA உருவாக்கத்திற்கு வார்ப்பாக செயல்படுகிறது. | இது வார்ப்புரு பணியைச் செய்வதில்லை |
| 2 | இதன் நைட்ரஜன் காரங்கள் mRNA இழைக்கு ஈடான இழைகளை உருவாக்குகிறது. | இதன் நைட்ரஜன் காரங்கள் அப்படியே mRNA இழையில் காணப்படுவதேயாகும். |
| 3 | இது 3' ⟶ 5' திசையில் கொண்டது | இது 5' ⟶ 3' திசையில் கொண்டது |
8.
(i) குழந்தை பிறந்தலிருந்து சில நாட்களுக்கு, பால் சுரப்பிகள், மஞ்சள் நிற சீம்பாலைச் சுரக்கின்றன.
(ii) இதில் லாக்டோஸ் குறைவாயுள்ளது. புரதம், தாது உப்புகள், விட்டமின் A அதிக அளவில் உள்ளன.
(iii) சீம்பாலில் கொழுப்பு கிடையாது.
(iv) IgA வகை எதிர்பொருட்கள் உள்ளன. இவை குழந்தையின் உணவுப்பாதை பாக்டீரியத் தொற்றை தடுக்கின்றன.
(v) எளிதில் செரிக்கக்கூடிய, அனைத்து ஊட்டச்சத்து கொண்ட சரியான உணவு.
(vi) முதல் 6 மாதம் தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தை நலமுடன் வளரும்.
9.
ஒற்றை மய -இரட்டைமய நிலை (எ.கா) தேனீ, எறும்பு மற்றும் குளவி
(i) சேய் உயிரிகளின் பாலினம் அவை பெறுகிற குரோமோசோம் தொகுதியின் எண்ணிக்கையை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.
(ii) கருவுற்ற முட்டைகள் பெண் உயிரிகளால் உருவாகின்றது ராணி,வேலைகாரத்தேனீ.
(iii ) கருவுறாத முட்டைகள் ஆண் தேனீக்களாக கன்னி இனப்பெருக்க முறையில் மூலம் வளர்ச்சியடைகின்றன.
(iv) எனவே ஆண் தேனீக்கள் ஒற்றைமய குரோமோசோம்களைக் கொண்டுள்ளன.
(v) பெண் தேனீக்கள் இரட்டைமய குரோமோசோம்களைக் கொண்டுள்ளன. இம்முறை ஒற்றைமய -இரட்டைமய பால்நிர்ணயம் என அழைக்கப்படுகிறது.
10.
(i) முட்டையானது கருவுறாமல் ஒரு உயிராக வளர்வது கன்னி இனப்பெருக்கம் எனப்படும்.
(ii) (எ.கா) ரோட்டிபர், தேனீக்கள், மற்றும் வான்கோழி.
11.
பண்புகள் எவ்வாறு பெற்றோர்களிடம் சந்ததிகளுக்குக் கடத்தப்படுகின்றன என்பதை விளக்கும் ஒரு பிரிவு- மரபியல் எனப்படும். இதற்கு பாரம்பரியத்தின் அறிவியல் என்று பெயர்.
12.
(c)
தகவமைப்பு பரவல்
13.
(b)
IgA
14.
(a)
கருப்பை
15.
(b)
AB
16.
(c)
குட்டி ஈனுபவை
17.
(d)
X - குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்
18.
அ) விட்டலின் சவ்வு
ஆ) உட்கரு
இ) சோனா பெலூசிடா
ஈ) கொரோனா ரேடியேட்டா
19.
நன்மைகள்
1. விளைச்சல் அதிகரிக்கிறது. ஏனெனில் காய்ப்புழுக்களின் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
2. பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு குறைகிறது.
3. பயிர் வளர்ப்பில் உண்டாகும் செலவு குறைகிறது.
தீமைகள்
1. இதன் விதையின் விலை அதிகம்.
2. முதல் 120 நாட்கள் மட்டுமே வீரியமுள்ளதாக இருக்கிறது. பின்னர் இதன் வீரியம் வர வர குறைகிறது.
3. சாறு உறிஞ்சும் தத்துப்பூச்சிகள், அசுவினிப்பூச்சிகள், வெள்ளை ஈக்கள் போன்றவற்றிற்கு எதிராகச் செயல்படுவதில்லை.
4. மகரந்தச்சேர்க்கையில் துணைபுரியும் பூச்சிகளை பாதிக்கிறது. அதனால் விளைச்சல் குறைகிறது.
20.
( )
லெண்டிவைரஸ்
21.
( )
பட்டாவ் சிண்ட்ரோம்
22.
( )
மரபியல் மாற்றத்தை
23.
( )
ஒற்றை பெற்றோர் மரபு
24.
( )
ஜீனோமிக்ஸ்
25.
( )
mRNA, tRNA
26.
நடமாடும் மரபணு
27.
(2n-1-1-1)
28.
கோதுமை விதையின் நிறம்
29.
DNA துண்டுகளை ஒட்டுகிறது
30.
(a)
31.
(a)
32.
(a)
33.
(a)
34.
(a)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards