12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/01/2020
விலங்கியல் - உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
90% மேற்பட்ட ______________ சந்ததியை உருவாக்க இயலாத மலட்டுயிரிகளாகின்றன.
மரபு மாற்றம்
விலங்கு நகலாக்கம்
டி.என்.ஏ மறுசேர்க்கை
ஜீன் சிகிச்சை
2.
அடினோசின் டி அமினேஸ் பற்றாக்குறையால் ஏற்படுவது?
ஹீமோஃபீலியா
எய்ட்ஸ்
SCID
ஹெப்பாடைடிஸ்
3.
முற்காலத்தில் ______________ மற்றும் _________________ கணையங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்ட இன்சுலினை சர்க்கரை நோயாளிகளுக்கு செலுத்தி சிகிச்சையளிக்கப்பட்டது.
நாய் மற்றும் பசு
பன்றிகள் மற்றும் பசு
பூனை மற்றும் நாய்
பூனை மற்றும் பசு
4.
இன்சுலின் எவ்வாறு முதன்மை முன்னோடி இன்சுலினிலிருந்து வேறுபடுகிறது?
A, B மற்றும் C துண்டங்களை கொண்டிருப்பதால்
B மற்றும் C துண்டங்களை மட்டும் கொண்டிருப்பதால்
A மற்றும் C துண்டங்களை மட்டும் கொண்டிருப்பதால்
A மற்றும் B துண்டங்களை மட்டும் கொண்டிருப்பதால்
5.
இன்சுலின் எத்தனை அமினோ அமிலங்களைக் கொண்டது.
41
49
51
59
6.
மறுசேர்க்கை காரணி VIII சீனா ஹாம்ஸ்டரின் _________ செல்களில் இருந்து உருவாக்கப்பட்டன
கல்லீரல் செல்கள்
அண்டக செல்கள்
இரத்த செல்கள்
மூளை செல்கள்
7.
பாலிமெரேஸ் சங்கிலி வினை வெப்பநிலை மாறுபாட்டால் 3 தனித்தனி நிலைகளில் தொடர்கின்றது. அதன் வரிசை _______.
இயல்பு திரிபு, இணைப்பு இழைபடுத்துதல், உற்பத்தி
உற்பத்தி, இணைப்பு, இயல்புதிரிபு
இணைப்பு, உற்பத்தி, இயல்புதிரிபு
செயலிழப்பு, இயல்புதிரிபு இணைப்பு
8.
மறுசேர்க்கைத் தடுப்பூசிகளின் பல்வேறு வகைகள் யாவை?
9.
குறுதிறன் வரையறு.(அ) குறுதிறனை எடுத்துக்காட்டுடன் வரையறுக்கவும்.
10.
11.
தண்டு செல் என்றால் என்ன? அவற்றின் இயல்பு என்ன?
12.
மரபியல்பு மாற்றப்பட்ட உயிரினங்களால் நேரிடக்கூடிய ஆபத்துகள் யாவை?
13.
PCR என்றால் என்ன? PCR ன் பல்வேறு படிநிலைகளை பற்றி விவரிக்கவும்.
14.
நகலாக்க செம்மறி ஆடு – டாலி ஒரு மிகப்பெரிய அறிவியல் திருப்பு முனை என்பதை விளக்குக.
15.
அ) ஒற்றைத்திறன்
ஆ) முழுமைத்திறன்
இ) பல்திறன்
ஈ) குறுதிறன்
16.
| பகுதி - I | பகுதி - II | ||
|---|---|---|---|
| 1 | மனித இரத்த உறைவுக் காரணி VIII | அ | ஹீமோஃபீலியா A நோயின் சிகிச்சை |
| 2 | எகோலை | ஆ | இன்டர்ஃபெரான் உற்பத்திக்கு உகந்தது அல்ல |
| 3 | ஹீமோஃபீலியா | இ | ஒற்றை ஜீன் திடீர் மாற்றம் |
| 4 | பாலிமரேஸ் சங்கிலி வினை | ஈ | ஒரு உடல் வெளி டி.என்.ஏ பெருக்கம் |
17.
| பகுதி - I | பகுதி - II | ||
|---|---|---|---|
| 1 | மடிசெல்லின் உட்கரு | அ | விந்துச் செல்லின் உட்கரு நீக்கம் |
| 2 | இயற்கை புரத ஒட்டுப்பசைகள் | ஆ | பற்குழியை நிரப்ப பயன்படுகிறது |
| 3 | எலைசா கண்டுபிடிப்பின் நோபல் பரிசு | இ | கேரி முல்லீஸ் |
| 4 | Taq டி.என்.ஏ பாலிமரேஸ் | ஈ | முன்னோடி இழைகளைச் சேர்த்து இரட்டை இழை DNA வை உருவாக்குகிறது. |
18.
கூற்று: உயிர் தொழில்நுட்பவியல் என்னும் வார்த்தை 20ம் நூற்றாண்டுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தது.
காரணம்: பாரம்பரிய செயல்பாடுகளான இட்லி, தோசை, பால்பொருட்கள், ரொட்டித்துண்டுகள் அல்லது ஒயின் தயாரித்தல் போன்றவை உயிர்தொழில் நுட்பவியலின் தோற்றத்திற்கு காரணமாக அமைந்தது.
அ) கூற்று சரி, காரணம் சரியாக கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றினை விளக்கவில்லை.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறு.
19.
அ) இரத்த உறைவுக் காரணி VIII ஐ உருவாக்கக் கூடிய மரபணுக்கள் "Y" குரோமோசோமில் காணப்படுகின்றன.
ஆ) கதிர் அருவாள் சோகை நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு இரத்தம் உறைவதற்கு நீண்ட நேரம் ஆவதோடு உட்புற உடல் இரத்தக் கசிவும் ஏற்படுகிறது.
இ) உயிருள்ள தடுப்பூசிகள் துணை அலகு தடுப்பூசிகள் என்றும் அழைக்கப்படுகிறது.
ஈ) இன்டர்ஃபெரன்களின் அமைப்பின் அடிப்படையில் α, β மற்றும் γ என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
20.
அ) நகலாக்க செயல்முறை மூலம் 90% மேற்பட்ட நகலாக்க விலங்குகள் வளமுள்ள உயிரிகளாக தோற்றுவிக்கப்படுகிறது.
ஆ) டாலி ஆட்டுக்குட்டியை உருவாக்க 227 உட்கரு நீக்கிய அண்ட செல்கள் பயன்படுத்தப்பட்டது.
இ) PCR முறையின் மூலம் கருவுற்ற முட்டைகளில் ஏதேனும் பால் சார்ந்த குறைபாடுகள் உள்ளனவா என்பதை கண்டறிய முடியும்.
ஈ) PCR ல் பயன்படுத்தப்படும் Taq பாலிமரேஸ் நொதி அதி வெப்ப கொதிநிலை பாக்டீரியங்களிலிருந்து பெறப்படுகிறது.
21.
மறுசேர்க்கை இன்டர்பெரான்களின் உற்பத்திக்கு எ.கோலையை விட __________________ என்னும் ஈஸ்ட் பொருத்தமானதாகும்.
1.
(b)
விலங்கு நகலாக்கம்
2.
(c)
SCID
3.
(b)
பன்றிகள் மற்றும் பசு
4.
(d)
A மற்றும் B துண்டங்களை மட்டும் கொண்டிருப்பதால்
5.
(c)
51
6.
(b)
அண்டக செல்கள்
7.
(a)
இயல்பு திரிபு, இணைப்பு இழைபடுத்துதல், உற்பத்தி
8.
(i) துணை அலகு தடுப்பூசிகள்
(ii) வலு குறைக்கப்பட்ட மறுசேர்க்கைத் தடுப்பூசிகள்
(iii) டி.என்.ஏ தடுப்பூசிகள்
9.
குறுதிறன் எனப்படுவது தண்டு செல்கள் சில வகை செல்களாக மட்டும் வேறுபாடடையும் திறனாகும். எடுத்துக்காட்டாக லிம்ஃபாய்டு அல்லது மாயலாய்டு தண்டு செல்கள் B மற்றும் T செல்களாக மட்டும் வேறுபாடடைதல், ஆனால் RBC யாக வேறுபாடடைவதில்லை.
10.
11.
(i) பெரும்பாலான பல செல் உயிரிகளில் காணப்படும் வேறுபாடு அடையாத செல்கள் 'தண்டு செல்கள்' ஆகும்.
(ii) இவை பல முறை மைட்டாடிக் செல் பிரிவுகளுக்கு உட்பட்டாலும் தங்களது வேறுபாடடையாத் தன்மையைத் தொடர்ந்து பராமரித்து வருகின்றன.
அவற்றின் சிறப்பு தன்மைகள்:
தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இயல்புடைய தண்டு செல்கள் 'செல் திறனை' வெளிப்படுத்துகின்றன.
12.
மரபியல்பு மாற்றப்பட்ட உயிரினங்களால் நேரிடக்கூடிய ஆபத்துகள்
மரபணு மாற்றப்பட்ட உயிரிகளைக் கொண்டு இனக்கலப்பு செய்வதனால் உயிருடன் உள்ள தீங்குயிரிகளின் விளைவுகள் அதிகமாகின்றன. புதிய அல்லது கொடிய தீங்குயிரிகள் மற்றும் நோய் கிருமிகள் உருவாக்கப்படுகின்றன. மண்ணில் வாழும் உயிரிகள், தாவரங்கள், பறவைகள் மற்றும் பிற விலங்குகளுக்கு கெடுதல் விளைவிக்கப்படுகிறது. வேளாண் சூழ்நிலை மண்டலம் உள்ளிட்ட உயிரிய சமுதாயத்திற்கு இடையூறு செய்யப்படுகிறது. சிற்றின பல்வகைத் தன்மை அல்லது சிற்றினங்களுக்கு உள்ளான மரபியல் பல்வகைமை முதலியனவற்றில் சரி செய்ய இயலாத இழப்பு அல்லது மாற்றங்கள் உண்டாக்குகின்றன. மனித நலனுக்கு எதிரான இடர்பாடுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் இவை சுற்றுச் சூழலில் காலம் தாழ்ந்த தாக்கத்தினை உண்டாக்கலாம்.
மரபியல்பு மாற்றப்பட்ட உயிரினங்களால் நோய்த்தொற்று கிருமிகள் உருவாக்கப்படுகின்றன.
13.
PCR (பாலிமரேஸ் சங்கிலி வினை):
நமக்கு விருப்பமான டி.என்.ஏ துண்டுகளை எண்ணற்ற ஒத்த நகல்களாக அதிக அளவில் பெருக்கம் செய்யப்படும். ஒரு உடல் வெளி ஆய்வகத் தொழில் நுட்பமாக பாலிமரேஸ் சங்கிலி வினை செய்யப்படுகிறது.
1983ல் கேரி முல்லிஸ் என்பவரால் இத்தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டது.
அதன் படிநிலைகள்:
(i) இயல்பு திரிபு, இயல்பு மீள்வு அல்லது முதன்மை இணைப்பு இழை பதப்படுத்தல் மற்றும் அதன் உற்பத்தி நீட்சி ஆகிய மூன்று நிலைகள் பாலிமரேஸ் சங்கிலி வினையில் நடைபெறுகின்றன.
(ii) அதிக வெப்பநிலையைப் பயன்படுத்தி, நமக்குத் தேவைப்படும் இரட்டைச் சுருள் டி.என்.ஏ வின் இயல்பைத் திரித்து இரண்டு தனித்தனியான இழைகளாகப் பிரிக்கப்படுகிறது.
(iii) இதற்கு இயல்பு திரிபு என்று பெயர் ஒவ்வொரு இழையும் ஒரு முதன்மை இணைப்பு இழையுடன் கலப்பு செய்யப்படுகிறது. இந்த முதன்மை இணைப்பு அச்சு வார்பு இழையைக் கொண்டு Tag டி.என்.ஏ பாலிமரேஸைப் பயன்படுத்தி புதிய டி.என்.ஏ உருவாக்கப்படுகிறது.
(iv) இயல்பு திரிபு நிகழ்ச்சியில் வேதிவினைக் கலவையானது 95oC வெப்பநிலையில் சிறிது நேரம் வெப்பப்படுத்தப்படுகிறது. இதனால் இலக்கு டி.என்.ஏ தனது இயல்பு திரிந்து தனித்த இழைகளாகப் பிரிகிறது.
(v) இவ்விழைகள் புதிய டி.என்.ஏ க்களை உருவாக்கும் அச்சு வார்ப்பு டி.என்.ஏ க்களாகச் செயல்படுகின்றன. கலவையை விரைந்து குளிர்விப்பதன் மூலம் இரு முதன்மை இணைப்பு இழைகளும், இலக்கு டி.என்.ஏ வின் தனி இழைகளின் பக்கவாட்டில் இணைந்து கொள்கின்றன.
(vi) முதன்மை இணைப்பு இழையின் நீட்சி அல்லது உருவாக்கத்தின்போது கலவையின் வெப்பநிலை 75o C க்கு உயர்த்தப்பட்டு போதுமான கால அளவிற்கு நிலை நிறுத்தப்படுகிறது.
(vii) இதனால் Tag டி.என்.ஏ பாலிமரேஸ் தனித்த அச்சு வார்ப்பு டி.என்.ஏ விலிருந்து நகலெடுக்கப்பட்டு முதன்மை இணைப்பு இழை நீட்சியடையச் செய்யப்படுகிறது.
(viii) இந்த அடைக்காப்புக் காலத்தின் இறுதியில் இரு அச்சு வார்ப்பு இழைகளும் பகுதியளவு இரட்டைச் சுருள் இழைகளாக மாற்றப்படும்.
(ix) இவ்வாறு உருவாகும் இரட்டைச் சுருள்களிலுள்ள ஒவ்வொரு புது இழையும் கீழ் நோக்கிய வேர்ப்பட்டை தொலைவுகளில் நீண்டு காணப்படும்.
(x) இந்த நிகழ்வுகள் திரும்ப திரும்ப நடைபெறுவதன் மூலம் டி.என்.ஏ வின் பல நகல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு டி.என்.ஏ பெருக்கமடைதல் என்று பெயர்.
14.
(i) ஐயன் வில்மட் மற்றும் கேம்ப்பெல் ஆகியோர் 1997ல் முதன் முதலில் டாலி எனும் முதல் பாலூட்டியை நகலாக்கம் செய்தனர்.
(ii) முழுமைத்திறன் நிகழ்வாய்வு மற்றும் உட்கரு மாற்று தொழில் நுட்பத்தின் மூலம் மரபணு மாற்றப்பட்ட டாலி எனும் நகல் செம்மறி ஆடு உருவாக்கப்பட்டது.
(iii) இது ஒரு மிகப்பெரிய அறிவியல் திருப்பு முனையாக விளங்குகிறது.
(iv) டாலி மற்றும் அதன் பிறகு உருவான பிற சந்திகள் உடல் செல்களிலிருந்து புதிய உயிரினம் மறுவளர்ச்சி அடைய முடியும் என்பதை உறுதிச் செய்கிறது.
(v) இந்த அறிவியல் வளர்ச்சி பல உயிரியல் முறைகளிலும் மருத்துவத் துறையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
15.
ஆ) முழுமைத்திறன்
ஏனெனில், இது உயிருள்ள தாவர செல்களில் காணப்படும் பண்பாகும். பிற அனைத்தும் தண்டு செல்களின் பண்பாகும்.
16.
அ) மனித இரத்த உறைவுக் காரணி VIII - ஹீமோஃபீலியா A நோயின் சிகிச்சை
17.
2) இயற்கை புரத ஒட்டுப்பசைகள் - பற்குழியை நிரப்ப பயன்படுகிறது
18.
அ) கூற்று சரி, காரணம் சரியாக கூற்றை விளக்குகிறது.
19.
( )
ஈ) இன்டர்ஃபெரன்களின் அமைப்பின் அடிப்படையில் α, β மற்றும் γ என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
20.
அ) நகலாக்க செயல்முறை மூலம் 90% மேற்பட்ட நகலாக்க விலங்குகள் வளமுள்ள உயிரிகளாக தோற்றுவிக்கப்படுகிறது.
21.
( )
சாக்கரோமைசெஸ் செரிவிசியே
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards