12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/01/2020
விலங்கியல் - உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
_________ தேசிய பூங்கா ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்கு என பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
காசிரங்கா
கிண்டி
முதுமலை
முக்குர்த்தி
2.
இந்தியாவில் 50,000த்திற்கும் அதிகமான _________ மரபணு வகைகள் உள்ளன.
நெல்
கோதுமை
மா
ஆப்பிள்
3.
மிக தரமான கம்பளி பொருட்களுக்கு இந்த இடம் மிகவும் புகழ் பெற்ற பகுதியாகும்.
மேற்கு தொடர்ச்சி மலை
டெக்கான் தீபகற்பம்
வடகிழக்கு இந்தியா
இமயமலைக்கு அப்பால் உள்ள மண்டலம்
4.
5.
பின்வருவனவற்றில் எது சூழலுள் பாதுகாப்பு வகையை சார்ந்தது அல்ல.
புகலிடங்கள்
தேசிய பூங்காக்கள்
விலங்கியல் பூங்காக்கள்
உயிர்கோள காப்பிடம்
6.
ஸ்டாக்ஹோம் பிரகடனம் என்பது என்ன?
7.
அந்நிய இனங்கள் உள்ளூர் இனங்களின் அழிவிற்கு காரணம் - நியாயப்படுத்து.
8.
செந்தரவுப் புத்தகம் என்றால் என்ன? அதனுடைய நோக்கத்தைக் குறிப்பிடவும்.
9.
மாசுபடுத்திகள் உயிரியப் பல்வகைத் தன்மையின் இழப்பிற்கான முக்கிய காரணங்கள் என்பதை நிரூபி.
10.
ஒரு சமூகத்தின் நிலைப்புத்தன்மை அதன் சிற்றினங்களின் பல்வகைத்தன்மையைச் சார்ந்துள்ளது-நியாயப்படுத்துக.
11.
அ. பாதுகாக்கப்பட்ட பகுதிகள் - 771
ஆ. தேசிய பூங்காக்கள் - 104
இ. உயிர்க்கோள காப்பிடங்கள் - 18
ஈ. வனவிலங்கு புகலிடங்கள் - 300
12.
அ. இணை மரபற்றுப் போதல் - டோடோ பறவை கல்வாரியா மரம்
ஆ. அயல்நாட்டு இனம் - திலோப்பியா
இ. அபாய நிலை மிகை உள்ளூர் உயிரினப் பகுதி - உயிர் புவியமைப்பு வாயில்
ஈ. டெக்கான் தீபகற்பம் - மேற்கு தொடர்ச்சி மலைகள்
13.
கூற்று: இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு, உயிர் கோளத் திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காரணம்: சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு சிவப்பு தகவல் புத்தகத்தை பராமரிக்கிறது.
அ. காரணம் சரி. கூற்று தவறு.
ஆ. காரணம் தவறு கூற்று சரி.
இ. காரணம் மற்றும் கூற்று இரண்டும் தவறு.
ஈ. காரணம் மற்றும் கூற்று இரண்டும் சரி.
14.
அ. வெப்ப மண்டலப் பகுதியிலிருந்து துருவங்களை நோக்கிச் செல்ல செல்ல ஒரு அலகு பரப்பிலுள்ள சிற்றினங்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.
ஆ. உயிரிய பல்வகைத் தன்மை என்ற சொல்லை எட்வர்ட் வில்சன் அறிமுகப்படுத்தினார்.
இ. மரபியல் பல்வகைதன்மை என்பது ஒரு வாழிடத்தில் உள்ள சிற்றின வகைகளின் எண்ணிக்கை மற்றும் செழுமை என்பதை குறிக்கும்.
ஈ. அமெரிக்காவில் மித வெப்ப காடுகளில் 20-35 சிற்றினங்களைச் சேர்ந்த மரங்கள் உள்ளன.
15.
அ. ஜார்ஜ் என்ற மர நத்தை ஜனவரி 1, 2019 அன்று இறந்தது. இது தான் அந்த இனத்தின் கடைசி நத்தை.
ஆ. சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு உலக பாதுகாப்பு கூட்டமைப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு செந்தரவுப் புத்தகத்தை பராமரிக்கிறது.
இ. சிவப்பு பட்டியலில் உள்ள சிற்றினங்கள் ஐந்து வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஈ. சிவப்பு பட்டியல் என்ற கருத்து 1963 ஆம் ஆண்டு உருவானது.
16.
நிலப்பரப்பின் அடிப்படையில் இந்தியா உலகின் _________ பெரிய நாடாகும்.
17.
டோடோ பறவை மாற்றும் கல்வாரியா மரத்திற்கும் உள்ள தொடர்பை எடுத்துக் கூறுக.
18.
வெளிப்புற சேகரிப்பு என்றால் என்ன?
19.
நம் தேசிய விலங்கான புலியை பாதுகாக்கும் பொருட்டு 1993ல் இந்திய அரசு புலித்திட்டத்தை தொடங்கியது.
1.
(a)
காசிரங்கா
2.
(a)
நெல்
3.
(d)
இமயமலைக்கு அப்பால் உள்ள மண்டலம்
4.
(a)
5.
(c)
விலங்கியல் பூங்காக்கள்
6.
ஸ்டாக்ஹோம் பிரகடனம் (1972) படி இன்றைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக இயற்கை வளங்களான காற்று, நீர், நிலம், தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றை கவனத்துடன் திட்டமிட்டு மேலாண்மை செய்து இயற்கை சூழ்நிலை மண்டலங்களை பாதுகாக்க வேண்டும் என்பதாகும்.
7.
1. அயல் இனங்கள் பெரும்பாலும் ஆக்கிரமிப்புத் தன்மையுடன் இருப்பதால் உள்ளூர் இனங்களை வெளியேற்றி விடுகின்றன.
2. மேலும் அயல் இனங்கள் நீர் மற்றும் சூழ்நிலை மண்டலங்களுக்கு தீங்கு விளைவிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. எ.கா. வெளியூர் மண்புழு இனங்கள் உணவுக்காக உள்ளூர் இனங்களுடன் போட்டியிட்டு அவற்றின் எண்ணிக்கையை குறைக்கின்றன.
8.
(i) சொந்தரவுப் புத்தகம் என்பது அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் ஆகும்.
(ii) உலக பாதுகாப்பு கூட்டமைப்பு சொந்தரவுப் புத்தகத்தை பராமரிக்கிறது.
நோக்கங்கள்:
(i) உயிரின பல்வகைத் தன்மைக்கு எதிரான அச்சுறுத்தல்களின் அளவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
(ii) மரப்பற்றுப் போகும் நிலையில் உள்ள உயிரினங்களை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தல்.
(iii) குறைந்து வரும் உயிரின பல்வகைத் தன்மைக்கு உலகளாவிய குறியீட்டெண்ணை வழங்குதல்.
(iv) பாதுகாப்பு தேவைப்படும் உயிரினங்களின் பட்டியலை முன்னுரிமை அடிப்படையில் தயார் செய்தல் மற்றும் பாதுகாப்பு செயல்பாடுகளில் உதவுதல்.
(v) பல்வகைத் தன்மை பாதுகாப்பு தொடர்புடைய பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகள் பற்றிய தகவல்கள் அளித்தல்.
(vi) சிவப்பு பட்டியலில் உள்ள சிற்றினங்கள் 8 வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1. மரபற்றுப் போனவை
2. மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவை
3. எளிதில் பாதிக்கப்படக் கூடியவை
4. முழுமையான தகவல் இல்லாதவை
5. வனத்தில் மரபற்றுப் போனவை.
6. அழியும் நிலையில் உள்ளவை
7. குறித்த ஆபத்துடையவை
8. மதிப்பீடு செய்யப்படாதவை.
9.
1. வேதிய உரங்கள், தீங்குயிர் கொல்லி மருந்துகள், கன உலோகங்கள் ஆகியவற்றின் மிகை பயன்பாட்டின் காரணமாக நிலம், நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீர் நிலைகள் மாசடைகின்றன.
2. தீங்குயிர் கொல்லி மருந்துகள் இயல்பாக உயிரியப் பெருக்கம் அடையும் தன்மை கொண்டது.
3. இதன் விளைவாக உயர்மட்ட உணவிட்ட நிலையில் இதன் அளவு உயர்கிறது. இதனால் மீன் உண்ணும் பறவைகள், வல்லூறுகள் அதிக எண்ணிக்கையில் குறைகின்றன.
4. விவசாய நிலங்களின் செயற்கை வேதிய உரம் கலந்த நீர், நீர் நிலைகளில் கலப்பதால் ஊட்டச்சத்து செறிவு அதிகரித்து மிகை உணவூட்ட நிலைக்கு வழிவகுக்கிறது.
5. பாதரசம், ஆர்செனிக், காட்மியம், குரோமியம் போன்ற நச்சுக்கள் பாதிக்கப்பட்ட சூழ்நிலை மண்டலங்களில் வளங்களை குறைக்கின்றன.
6. பிணந்தின்னிக் கழுகுகளின் இறப்பிற்கு கால்நடைகளுக்கு மருந்தாக பயன்படும் / டைகுளோபினாக் / மருந்து காரணமாகிறது.
7. இம்மருந்து முட்டையின் ஓடுகளை மெலிதாக்குகிறது.
10.
(i) உயிரிய பல்வகைத் தன்மை என்பது இந்த பூமியில் வாழும் பலவகையான உயிரினங்களைக் குறிக்கிறது.
(ii) மழைக் காடுகள், பவளப்பாறைகள், புல்வெளிகள், பாலைவனங்கள், பனிச்சமவெளிகள் மற்றும் துருவ பகுதியின் பனிப்பாறைகள் போன்ற வெவ்வேறு சூழ்நிலை மண்டலங்களில் உயிர்கள் வாழ்கின்றன.
(iii) நம் கோளத்தின் நல்வாழ்விற்கும், உயிரிகள் நிலைத்து இருப்பதற்கும் இவ்வாறான உயிரியப் பல்வகைத் தன்மை அவசியமானதாகும்.
(iv) மேலும் உயிரிய பல்வகைத் தன்மை சுற்றுச்சூழல் செயல்முறைகளை பராமரிக்கவும், மண் உற்பத்தி ஊட்டச்சத்துகளின் மறுசுழற்சி, தட்பவெப்பநிலை பாதிப்பு, கழிவுகளை சிதைத்தல் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
(v) சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தின் தன்மையை குறிக்கும் குறியீடாகவும் விளங்குகிறது.
(vi) மனித இனம் உயிர் வாழ்தல் என்பது தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட பூமிக் கோளத்தின் அனைத்து உயிரிகளின் நலமான உயிர் வாழ்தலைச் சார்ந்துள்ளது.
11.
ஈ. வனவிலங்கு புகலிடங்கள் - 300
12.
அ மற்றும் ஆ
13.
அ. காரணம் சரி. கூற்று தவறு.
14.
( )
ஈ. அமெரிக்காவில் மித வெப்ப காடுகளில் 20-35 சிற்றினங்களைச் சேர்ந்த மரங்கள் உள்ளன.
15.
இ. சிவப்பு பட்டியலில் உள்ள சிற்றினங்கள் ஐந்து வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
16.
( )
ஏழாவது
17.
1. கல்வாரியா மரத்தின் விதைகள் மிக கடுமையான கொம்பு போன்ற நீட்சிகளுடைய எண்டோகார்பை கொண்டது.
2. டோடோ இதை உண்டு. அதன் அரைவைப் பையில் உள்ள பெரிய கற்கள் மற்றும் குடல் சாறுகளின் செயல்பாடுகளால் திறம்பட செரித்து விதைகளின் முளைக்கும் திறனை எளிதாக்குகிறது.
18.
தாவரவியல் பூங்கா, விலங்கியல் பூங்கா, வனவிலங்கு சுற்றுலா பூங்கா, ஆர்போரிட்டா (மரங்கள் மற்றும் புதர்களைக் கொண்ட காடுகள்) ஆகியவற்றில் வன உயிரினங்கள் மற்றும் வளர்க்கப்படும் உயிரினங்களைச் சேகரித்தல் வெளிப்புற சேகரிப்பு எனப்படும்.
19.
1973ல் தொடங்கியது
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards