12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/01/2020
விலங்கியல் - பரிணாமம்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
சென்னையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருங்காட்சியகம்______ -ல் அமைந்துள்ளது.
எழும்பூர்
சென்ட்ரல்
தி.நகர்
வேளச்சேரி
2.
யூரே-மில்லர் சோதனையின் போது உருவாகாதது?
அர்ஜினைன்
கிளைசீன்
அலனைன்
ஆஸ்பார்டிக் அமிலம்
3.
டார்வினின் கருத்துகளில் இயற்கைத் தேர்வு கருத்துக்கள் கண்டறியப்படவில்லை
பிஷர்
மேயர்
ஹக்ஸ்லே
வாலஸ்
4.
இது ஒரு எச்ச உறுப்பு அல்ல?
வால் முள்ளெலும்பு
அறிவுப் பற்கள்
ஆண்களின் மார்பகம்
மனிதக் கருவிலுள்ள வால்
5.
ஒரு இனக்கூட்டம் ஹார்டி வீன்பெர்க் சமநிலையில் எப்போது இருக்காது?
உயிரினங்கள் தேர்வு செய்து கலவியில் ஈடுபடும்போது
திடீர்மாற்றம் இல்லாத நிலையில்
வலசை போதல் இல்லாத நிலையில்
இனக்கூட்டத்தின் அளவு பெரியதாக இருந்தால்.
6.
ஊர்வன இனத்தின் பொற்காலம்
மீசோசோயிக் பெருங்காலம்
சீனோசோயிக் பெருங்காலம்
பேலியோசோயிக் பெருங்காலம்
புரோட்டிரோசோயிக் பெருங்காலம்
7.
டார்வினின் குருவிகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்?
இணைப்பு உயிரிகள்
பருவகால வலசைபோதல்
தகவமைப்பு பரவல்
ஒட்டுண்ணி வாழ்க்கை முறை
8.
புதிய டார்வினியக் கொள்கையாளர்களை பெயர் தருக.
9.
புதைப்படிவமாக்கல் என்றால் என்ன?
10.
குவி பரிணாமம் மற்றும் விரிபரிணாம நிகழ்ச்சிகளை ஒவ்வொரு எடுத்துக்காட்டுடன் வேறுபடுத்துக
11.
'முன்னோடி உயிரினங்கள்' என்பவை யாவை?
12.
போராட்டங்களின் மூன்று வகைகள் யாவை?
13.
ஆஸ்ட்ரலோபித்திகஸ் மற்றும் ராமாபித்திகஸ் ஆகியவற்றின் உணவுப் பழக்கம் மற்றும் மூளை அளவுகளை வேறுபடுத்துக
14.
புதிய சிற்றினத் தோற்றத்தை விளக்கும் டி.விரீஸின் திடீர் மாற்றக் கோட்பாடு, எவ்வாறு லாமார்க் மற்றும் டார்வினியக் கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகிறது?
15.
நியான்டர்தால் மனிதனுக்கும் நவீன மனிதனுக்கும் இடையிலான ஏதேனும் மூன்று ஒற்றுமைகளை கூறுக.
16.
கரிமமூலக்கூறுகளின் உருவாக்கம் எவ்வாறு உயிரினங்களை உருவாக்கியது என்பதை நிரூபி.
17.
எ.இ.எமர்சன் சிற்றினமாக்கலை எவ்வாறு வரையறை செய்துள்ளார்? இதன் வகைகளைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
1.
(a)
எழும்பூர்
2.
(a)
அர்ஜினைன்
3.
(d)
வாலஸ்
4.
(d)
மனிதக் கருவிலுள்ள வால்
5.
(a)
உயிரினங்கள் தேர்வு செய்து கலவியில் ஈடுபடும்போது
6.
(a)
மீசோசோயிக் பெருங்காலம்
7.
(c)
தகவமைப்பு பரவல்
8.
1. வாலஸ்
2. ஹேக்கல்
3. மெண்டல்
4. ஹென்ரிச்
5. வீஸ்மேன்
9.
பூமியின் படிவப் பாறைகளில் தாவரங்கள் அல்லது விலங்குகளின் எச்சங்கள் பாதுகாக்கப்படுதல் புதைப்படிவமாக்கம் எனப்படும்.
10.
| விரி பரிணாமம் | குவி பரிணாமம் | ||
| 1 | அமைப்பொத்த உறுப்புகள் விரி பரிணாமத்தை ஏற்படுத்தும் | செயலொத்த உறுப்புகள் குவி பரிணாமத்தை உருவாக்கும் | |
| 2 | உருவாக்கத்தை ஒரே மாதிரியாக அமைந்து வெவ்வேறு செயல்களை செய்யக் கூடிய உறுப்புகள் அமைப்பொத்த உறுப்புகள் ஆகும். | அமைப்பு அடிப்படையில் வேறுபட்டு ஒரே விதமான செயலைச் செய்யக் கூடிய உறுப்புகள் செயலொத்த உறுப்புகள் ஆகும். | |
| விலங்குகளில் எடுத்துக் காட்டுகள் | விலங்குகளில் எடுத்துக் காட்டுகள் | ||
| வெவ்வேறு முதுகெலும்புகளின் முன்னங்கால்கள் அமைப்பில் ஒற்றுமை காணப்படுகின்றன. | பாலூட்டி மற்றும் ஆக்டோபஸ் ஆகியவற்றின் கண்கள். பெங்குவின் மற்றும் டால்பின்களின் அகலத் துடுப்புகள். |
||
| தாவரங்களில் எடுத்துக் காட்டுகள் | தாவரங்களில் எடுத்துக் காட்டுகள் | ||
| காகிதப்பூக்கள் உள்ள முட்கள் மற்றும் பட்டாணியில் காணப்படும் பற்றுக் கம்பிகள் முள்பாதுகாப்பு பற்றுக்கம்பிகள் | சீனக் கிழங்குகளில் வேர் மாற்றுரு. உருளைக் கிழங்கின் தண்டின் மாற்றுரு. இரண்டு தாவரங்களிலும் இவை உணவு சேமிப்பு என்ற பொதுவான செயலை செய்கின்றன. |
||
11.
1. உயிரற்ற பொருட்களிலிருந்து உருவான மூலக்கூறுகள்.
2. இவைகள் தன்னிச்சையான ஒன்று சேர்ந்து நீர்மத் திரவத்தை உள்ளடக்கிய சிறு துளிகளாகத் தாமே வடிவமைத்துக் கொள்கின்றன. 3. இதன் உள் வேதிச் சூழல் புறச் சூழலிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.
இத்தகைய கோள அமைப்புகள் 'முன்னோடி உயிரினங்கள்' ஆகும்.
12.
உயிரினங்கள் உணவு, இருப்பிடம், இனப்பெருக்கத் துணைக்காகப் போராடுகின்றன.
1. சிற்றினங்களுக்குள்ளான போராட்டம்:
ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த உயிரினங்களுக்கிடையே உணவு, இருப்பிடம், மற்றும் இனப்பெருக்கத் துணைக்காக ஏற்படும் போராட்டம்.
2. சிற்றினங்களுக்கிடையேயான போராட்டம்:
வெவ்வேறு சிற்றினங்களுக்கிடையே உணவு மற்றும் இருப்பிடத்திற்கான போராட்டம்.
3. சுற்றுச்சூழலுடன் போராட்டம்:
காலநிலை வேறுபாடு, வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி, மற்றும் பல சூழல் காரணிகளுடன் இணக்கமாவதற்கான போராட்டம்.
13.
| ஆஸ்ட்ரலோபித்திகஸ் | ராமாபித்திகஸ் | ||
| 1. | உணவுப் பழக்கம் | அனைத்துண்ணிப் பண்பு | நவீன மனிதனைப் போன்று கடினமான விதைகள் கொட்டைகளை உருவாக்கக் கொண்டன |
| 2. | மூளை அளவு | 350 - 450 கன செ.மீ | 1300 - 1500 கன செ.மீ |
14.
டி.விரீஸின் திடீர் மாற்றக் கோட்பாடு:
1. திடீர் மாற்றம் என்பது உயிரினங்களில் ஏற்படும் உடனடியான சீரற்ற மற்றும் மரபுக்கடத்தலில் பங்கேற்காத மாற்றங்கள் ஆகும்.
எ.கா: அந்திமந்தாரை (ஈனோதீரா லாமார்க்கியானா) தாவரத்தில் ஆய்வு மேற்கொண்டு அதில் திடீர் மாற்றம் காரணமாக ஏற்பட்ட மாறுபாடுகளை கண்டறிந்தார்.
2. பெரிய மற்றும் உடனடியாக ஏற்படும் மாறுபாடுகள் மட்டுமே புதிய சிற்றினம் தோன்றுவதற்குக் காரணம்.
3. ஆனால் லாமார்க் மற்றும் டார்வின் ஆகியோர் உயிரினங்களில் ஏற்படும் படிப்படியான மாறுபாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து புதிய சிற்றினம் உருவாகக் காரணமாகிறது என்று விளக்கினார்.
திடீர் மாற்றக் கோட்பாட்டின் காரணமாக சிறப்புப் பண்புகள்:
1. திடீர் மாற்றம் அல்லது தொடர்ச்சியற்ற வேறுபாடுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும்.
2. இயற்கையாக இனப்பெருக்கம் செய்யும் இனக்கூட்டத்தில் அவ்வப்போது திடீர் மாற்றங்கள் ஏற்படும்.
3. திடீர் மாற்றம் முழுமையான நிகழ்வு இடைப்பட்ட உயிரினங்கள் காணப்படாது.
4. திடீர் மாற்றம் இயற்கை தேர்வுக்கு உட்பட்டது ஆகும்.
15.
1. அவர்கள் நெருப்பின் பயனை அறிந்தனர்.
2. இறந்தவர்களை புதைத்தனர்.
3. மூளையின் அளவு ஏறக்குறைய ஒரே அளவானது.
அ) நியான்டர்தால் மனிதனின் மூளையின் அளவு - 1400 கன.செ.மீ
ஆ) ஹோமோசெபியன்களின் மூளையின் அளவு - 1300 -1600 கன செ.மீ
16.
யூரே - மில்லர் சோதனை
1. சிறிய குடுவையில் உள்ள நீர் தொடர்ச்சியாக கொதிக்க வைக்கப்படுவதால் வெளியேறும் நீராவி அம்மோனியா மீத்தேன் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களுடன் கலக்கிறது.
2. இக்கலவையானது டங்ஸ்டனாலான மின் முனைகளிலிருந்து வெளியேறும் மின்னோட்டத்தின் வழியாகச் சுற்றி வருமாறு அமைக்கப்பட்டிருந்தது.
3. நீராவி குளிர்விக்கப்பட்டு நீராக மாறி 'U' வடிவக் குழாய் வழியே செல்கிறது.
4. தொடர்ந்து ஒரு வார காலம் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் உள்ள திரவம் ஆய்வு செய்யப்பட்டது.
5. இத்திரவத்தில் கிளைசின் அலனைன் மற்றும் அஸ்பார்டிக் அமிலம் போன்ற பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
6. உயிரின்றி உயிர் தோன்றல் முறையில் அதிக அளவிலான பலவகை கரிமமூலக்கூறுகள் இயற்கையில் இவ்வாறு உருவாகியிருக்கக்கூடும்.
7. மீத்தேன் வாயு மட்டுமே கார்பனுக்கான மூலமாக இருந்தது.
8. பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நைட்ரஜன் காரங்கள் உருவாவது கண்டறியப்பட்டது.

17.
சிற்றினமாக்கம்
மரபு ரீதியாக தனித்துவம் வாய்ந்த, இனப்பெருக்கத் தன்மை உடைய இயற்கையான இனக்கூட்டத்திற்கு சிற்றினம் என்று பெயர். சிற்றினமாக்கம் என்பது ஒரு சிற்றினம் பரிணாம மாற்றம் பெற்று ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வேறுபட்ட சிற்றினங்களாக மாறுவது ஆகும்.
வகைகள்
ஓரிடச் சிற்றினமாக்கம் அல்லது இனப்பெருக்கம் சார்ந்த சிற்றினமாக்கம்
ஒரிடச் சிற்றினமாக்கம் முறையில் ஒற்றை மூதாதை இடமிருந்து இரண்டு புதிய சிற்றினங்கள் பரிணாமம் பெற்றுத் தோன்றுகின்றன. ஒரே புவிப் பகுதியில் அவை இரண்டும் வாழ்கின்றன.
வேற்றிடச் சிற்றினமாக்கம் அல்லது புவி சார்ந்த சிற்றினமாக்கம்
வேற்றிடச் சிற்றினமாக்கல் முறையில் மரபணு ஓட்டம் ஆனது, ஒரு உயிரியல் இனக் கூட்டத்தினைச் சேர்ந்த ஒத்த சிற்றினங்கள் தனிமைப்படுத்தப்படும் போது தடுக்கப்படுகிறது. ஒரே சிற்றினத்தினை சேர்ந்த இனக்கூட்டம் ஆனது புவியியல் தடையின் காணமாக பிரிந்து இரண்டு சிற்றினங்களாக மாறுகின்றன.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards