12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/09/2019
விலங்கியல் - பரிணாமம்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
திடீர் மாற்றக் கொள்கையின் முக்கிய பண்புகள் யாவை?
2.
மரபணு ஓட்டம் என்றால் என்ன?
3.
நுண் பரிணாமம் என்றால் என்ன?
4.
உயிர் மரபியல் விதி அல்லது தொகுத்துரைக் கோட்பாடு என்றால் என்ன?
5.
அச்சுகள் என்றால் என்ன?
6.
தொல்லுயிரியல் என்றால் என்ன?
7.
டார்வினியக் கோட்பாடுகளுக்கான முக்கிய எதிர் கருத்துக்கள் யாவை?
8.
மூன்று வகை புதைபடிவமாக்கல் வகைகளை விவரி.
9.
10.
திடீர்மாற்றம், இயற்கைத் தேர்வு மற்றும் மரபியல் நகர்வு ஆகிய நிகழ்வுகள் ஹார்டி– வீன்பெர்க் சமநிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விளக்குக.
1.
1. திடீர் மாற்றம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும் தன்மை கொண்டது.
2. இயற்கையாக இனப்பெருக்கம் செய்யும் இனக்கூட்டத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்.
3. இடைப்பட்ட உயிரினங்கள் காணப்படாது.
4. இயற்கைத் தேர்வுக்கு உட்பட்டது.
2.
இனச்செல்கள் வழியாக மரபணுக்கள் இடம்பெயர்தல் அல்லது ஒரு இனக்கூட்டத்தில் தனிப்பட்ட உயிரினங்களின் உட்பரவல் அல்லது வெளிப்பரவல் ஆகியவை மரபணு ஓட்டம் எனப்படும்.
3.
1. சிறு அளவில் நடைபெறும் பரிணாமம்
2. ஒரு இனக்கூட்டத்தில் அல்லீல் நிகழ்வெண்களில் மாற்றங்களைக் குறிக்கிறது.
4.
ஒரு தனி உயிரினத்தின் வாழ்க்கைச் சுழற்சி அவ்வுயிரியின் இன வரலாற்றைத் தொகுத்துரைக்கிறது.
ஆன்டோஜெனி - தனி உயிரி வளர்ச்சி
பைலோஜெனி - இன வரலாறு
5.
1. இறந்த விலங்குகளின் உடல்கள் படிப்படியாக சிதைந்த பின்பும் அவற்றின் உடல் மென்மையான சேறு போன்ற பகுதியில் அழியாத பதிவை உருவாக்குகின்றன.
2. இப்பதிவு பின்பு கடினமாகி கல்லாக மாறுகிறது இதற்கு அச்சுகள் என்று பெயர்.
6.
புதைபடிவங்கள் மூலமாக வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்களை ஆய்வு செய்வது தொல்லுயிரியல் எனப்படும்.
7.
டார்வினியத்திற்கான எதிர் கருத்துக்கள்:
1. மாறுபாடுகள் தோன்றும் முறை குறித்து டார்வின் சரியாக விளக்கவில்லை.
2. தகுதியுடையன பிழைத்தவை மட்டுமே விளக்குகிறது. அத்தகுதியை எவ்வாறு பெறுகின்றன என்பதை விளக்கவில்லை.
3. அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாத சிறு மாறுபாடுகளை மட்டும் டார்வின் கவனத்தில் கொண்டார்.
4. உடல் செல் மற்றும் இனப்பெருக்க செல்களில் ஏற்படும் மாற்றங்களை அவர் வேறுபடுத்தவில்லை.
5. எச்ச உறுப்புகள் அளவுக்கதிகமாக சிறப்பு பெற்றிருத்தலைக் குறித்து டார்வின் விளக்கவில்லை.
8.
1) எஞ்சிய உடல் பகுதிகள்:
1. விலங்குகளின் மிகக் கடினமான உடல் பகுதிகளை எலும்புகள் பற்கள் அல்லது ஓடுகள் பூமியின் அடுக்குகளில் பாதுகாக்கப்படுகின்றன.
2. கடல் வாழ் விலங்குகளின் எலும்புகள் ஓடுகள் படிவுகளால் மூடப்படுகின்றன.
3. கடல் நீரின் உப்புத்தன்மையால் அவை கெடாமல் பாதுகாக்கப்படுகின்றன.
4. 22 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கம்பளி மாமுத் யானைகள் சைபீரியாவில் உறைந்த கடற்கரைப் பகுதியில் பாதுகாக்கப்பட்டிருந்தது.
5. சில மனிதர்களின் மற்றும் விலங்குகளின் உடல்கள் பொம்பெய் என்ற பழங்கால நகரத்தில் வெசுவியஸ் எரிமலைச் சாம்பலில் பாதுகாக்கப்பட்டிருந்தன.
2) கல்லாதல்:
1. விலங்குகள் இறந்த பின்னர் உடல் பகுதியின் மூலக்கூறுகள் தாது உப்புகள் மூலக்கூறுகளால் பதிலீடு செய்யப்படுகின்றன.
2. மூல உடல்பகுதிகள் சிறிது சிறிதாக அழிந்து விடுகின்றன.
3. இரும்பு பைரைட்டுகள், சிலிகா கால்சியம் கார்பனேட், மெக்னீசியம் பைகார்பனேட்டுகள் போன்ற முக்கிய தாது உப்புகள் பெரும் பணியாற்றுகின்றன.
3) இயற்கையான அச்சுகளும் வார்ப்புகளும்.
அச்சுகள்
இறந்த விலங்குகளின் உடல்கள் மென்மையான சேறு போன்ற பகுதியில் கடினமாகி பின்பு கல்லாக மாறுகிறது.
வார்ப்புகள்
அச்சுகளின் உட்புறக் குழிகள் தாது உப்புகளால் நிரப்பப்பட்டு படிவமாக மாறுகின்றன.
கோப்ரோலைட்டு
1. கடினமாக்கப்பட்ட மலப்பொருட்கள் சிறு உருண்டைகளாக காணப்படுதல் கோப்ரோலைட்டுகள் எனப்படும்.
2. இதன் மூலம் விலங்குகளின் உணவு பழக்கத்தினை அறிந்து கொள்ளலாம்.
9.
10.
திடீர் மாற்றம் இயற்கைத் தேர்வு, மரபியல் நகர்வு, மரபணு ஓட்டம் ஆகிய நான்கு காரணிகள் ஹார்டி - வீன்பெர்க் சமநிலையை பாதிக்கின்றன.
அ) திடீர்மாற்றம்:
திடீர் மாற்றம் என்பது மரபியல் மாறுபாடு ஆகும். திடீர் மாற்றம் மரபியல் மாறுபாடுகள் தோன்றுவதற்கான மூலகாரணமாக இருந்தாலும் பெரும்பாலான உயிரினங்களில் திடீர் மாற்ற வீதம் குறைவாகவே இருக்கும். எனவே ஒரு அல்லீல் நிகழ்வெண்ணில் ஏற்படும் புதிய திடீர் மாற்றம் அடுத்தடுத்த தலைமுறைகளில் பெரிய அளவில் இருக்காது.
ஆ) இயற்கைத்தேர்வு:
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு அல்லீல் (அல்லது வேறுபாடுடைய அல்லீல்களின் சேர்க்கை ஒரு உயிரினத்தை வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் தகுதிப்படுத்தும் போது இயற்கைத் தேர்வு நடைபெறுகிறது.
அந்த அல்லீல் தகுதியைப் குறைக்கும்போது அதன் நிகழ்வெண் அடுத்தடுத்த தலைமுறைகளில் குறைகிறது.
ஒரு குறிப்பிட்ட மரபணுவின் பரிணாமப்பாதை என்பது பல்வேறு பரிணாம செயல்முறைகள் ஒரே நேரத்தில் செயல்படுவதன் விளைவாகும். எடுத்துக்காட்டாக ஒரு மரபணுவின் அல்லீல் நிகழ்வெண், மரபணு ஓட்டம் மற்றும் மரபியல் நகர்வு ஆகிய இரண்டு காரணிகளால் மாற்றப்படலாம். அதே நேரத்தில்
மற்றோரு மரபணு திடீர் மாற்றத்தினால் இயற்கைத்தேர்வு ஏற்கத்தக்க புதிய அல்லீலை உருவாக்கலாம்.
இ) மரபியல் நகர்வு:
வாய்ப்புகள் காரணமாக அடுத்தடுத்த தலைமுறைகளில் ஒரு இனக்கூட்டத்தின் அல்லீல் நிகழ்வெண்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் பரிணாம நிகழ்வே மரபியல் நகர்வு ஆகும்.
மரபியல் நகர்வு இனக்கூட்டத்தின் அனைத்து அளவுகளிலும் நடைபெறும் ஆனால் இதன் விளைவுகள் சிறிய இனக்கூட்டத்தில் வலிமை உடையதாக இருக்கும். இதன் விளைவாக சில அல்லீல்கள் நிலை நிறுத்தப்படலாம்.
இயற்கை இடர்பாடு காரணமாக இனக்கூட்டத்தின் அளவு குறைந்திருந்தாலும். (சீசா கழுத்து விளைவு) அல்லது மூல இனக்கூட்டத்திலிருந்து ஒரு சிறுபகுதி பிரிந்து சென்று புதிய கூட்டத்தை உருவாக்கினாலும் (நிறுவனர் விளைவு) மரபியல் நகர்வின் விளைவு அதிகமாக இருக்கும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards