12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/01/2020
விலங்கியல் - மனித நலன் மற்றும் நோய்கள்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
| பகுதி I | பகுதி II | ||
| 1. | சுவாச நோய்கள் | அ | மைய நரம்பு மண்டலம் |
| 2. | தோல் நோய்கள் | ஆ | இரத்தம் மற்றும் உள்ளுறுப்புகள் |
| 3. | உள்ளுறுப்பு நோய்கள் | இ | சுவாசப் பாதை |
| 4. | நரம்பு நோய்கள் | ஈ | தோல் மற்றும் தோலின் கீழ் அடுக்கு |
1-இ,2-ஈ,3-ஆ,4-அ
1-ஈ,2-இ,3-அ,4-ஆ
1-அ,2-ஆ,3-இ,4-ஈ
1-ஆ,2-அ,3-ஈ,4-இ
2.
மனிதனில் சேற்றுப்புண்ணை ஏற்படுத்துவது ______.
பாக்டீரியா
பூஞ்சை
வைரஸ்
புரோட்டோசோவா
3.
குழந்தைப்பருவ பக்கவாதத்தை ஏற்படுத்தும் இளம்பிள்ளைவாதம் _____ வழியாக நுழைகிறது.
தோல்
வாய் மற்றும் மூக்கு
காதுகள்
கண்கள்
4.
போதை மருந்துகளை அதன் விளைவுகளை வைத்து வகைப்படுத்துக.
5.
பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கை சுழற்சியைப் பற்றி விரிவாக எழுதுக.
6.
போதை மருந்துகள் மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விலகும் போது ஏற்படும் விலகல் அறிகுறிகளை வரிசைப்படுத்துக.
7.
அ) கிளாஸ்ட்ரீடியம் டெட்டனி
ஆ) எண்டமீபா இஸ்டோலைட்டிகா
இ) இளம் பிள்ளை வாதம்
ஈ) நிமோனியா
8.
| பகுதி -I | பகுதி-II | ||
| 1. | MMR தடுப்பு மருந்து | அ | கொல்லப்பட்ட தடுப்பு மருந்து |
| 2. | வேரிசெல்லா | ஆ | வீரியமிழந்த உயிருள்ள தடுப்பு மருந்து |
| 3. | சால்க் போலியோ தடுப்பு மருந்து | இ | செயலிழக்கச் செய்யப்பட்ட தடுப்பு மருந்து |
| 4. | DPT தடுப்பு மருந்து | ஈ | நச்சுப்பொருள்கள் தடுப்பு மருந்து |
9.
அ) தொற்றிலா நோய்களில் கேன்சர் ஒரு உயிர்கொல்லி நோயாகும்.
ஆ) ரைனோ வைரஸ்தான் வெறிநாய்க்கடி நோய்க்கான காரணி
இ) எண்டமீபா ஹிஸ்டோலைட்டிகா தான் ஆப்பிரிக்கா தூக்க வியாதியை உண்டாக்குகிறது.
ஈ) காலா - அசார் நோய்க்கான காரணி லீஷ்மேனியா டிராபிகா
10.
| பகுதி -I | பகுதி-II | ||
| 1. | லிம்போசைட்டுகள் | அ | 50-70% |
| 2. | மோனோசைட்டுகள் | ஆ | 2-7% |
| 3. | நியூட்ரோஃபில்கள் | இ | 20-30% |
| 4. | ஈஸினோஃபில்கள் | ஈ | <1% |
11.
________ ஒவ்வாமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
12.
________ வைரஸ் மூலம் பன்றிக்காய்ச்சல் ஏற்படுகிறது.
13.
______ தான் மிதமான டெர்ஷியன் மலேரியாவை ஏற்படுத்தும்.
14.
கோழைப்படலம் சார்ந்த நிணநீரியத் திசுக்கள் ஒரு இரண்டாம் நிலை நிணநீரிய உறுப்பு - காரணம் கூறுக.
15.
உடல்நலத்தை பராமரிப்பது எப்படி?
16.
எபிடோப் மற்றும் பராடோப் வேறுபடுத்துக.
17.
பேயர் திட்டுகள் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
18.
டெர்மட்டோ மைக்கோசிஸ் பற்றிய சிறு குறிப்பு தருக.
1.
(a)
1-இ,2-ஈ,3-ஆ,4-அ
2.
(b)
பூஞ்சை
3.
(d)
கண்கள்
4.
| வ.எ | தொகுதி குழு (Group) | போதை மருந்துகள் (Drugs) | விளைவுகள் (Effects) |
| 1. | கிளர்வூட்டிகள் (Stimulants) | ஆம்பிடமைன்கள், கோகைன், நிக்கோட்டின் மற்றும் புகையிலை (Tobacco ) |
மூளையின் செயல்பாட்டைத் துரிதப்படுத்துகின்றன. |
| 2. | மன அழுத்தவூக்கிகள் (Depressants) |
மது பார்பிட்டுரேட்டுகள், அமைதியூக்கிகள் (Tranquilizers) | மூளையின் செயல்பாட்டைக் குறைகின்றன. |
| 3. | போதை மருந்து / வலி நிவாரணிகள் (Narcotic/analegesics) |
அபின் (Opium) மார்ஃபின் | மத்திய நரம்பு மண்டலத்தின் மீது மன அழுத்தவூக்கியாக செயல்புரிகிறது. |
| 4. | கஞ்சா (Cannabis) | மரிஜுவானா, கஞ்சா, சாரஸ் | இரத்த ஓட்ட மண்டலத்தை பாதிக்கின்றன/ |
| 5. | மன மருட்சி மருந்துகள் (Hallucinogens) |
லைசர்ஜிக் அமில டைஎத்தில் அமைடு (LSD) ஃபென்சைக்ளிடைன் (Phencyclidine) | ஒருவரின் பார்த்தல், கேட்டல் மற்றும் உணர்தல் வழியை சிதைக்கிறது. |
5.
1. இதன் வாழ்க்கை சுழற்சியில் மூன்று நிலையில் காணப்படுகின்றன. அவை ஸ்கிசோகோனி கேமிடோகோனி மற்றும் ஸ்போரோகோனி.
மனிதனில் காணப்படும் வாழ்க்கை சுழற்சி;
1. ஸ்போரோசோயிட்டுகள் கொசுவின் உமிழ்நீரின் மூலம் மனிதனுள் செலுத்தப்படுகிறது.
2. அவை கல்லீரலுள் செல்கிறது.
3. அங்கு அவை பாலிலா பல பிளவு முறையில் மீரோசோயிட்டுகளை உண்டு பண்ணுகிறது.
4. இவை சிவப்பணுக்களுக்குள் நுழைந்து டிரோபோசோயிட்டுகளாக மாறுகின்றன.
5. இது நுண்குமிழ் உருவாகி முத்திரை மோதிர நிலைமை அடைகிறது.
6. பாலிலா இனப்பெருக்கம் மூலம் பிளவுற்று ஸ்கிசாண்டுகள் உருவாகின்றது.
7. இவை பின்பு பிளவுற்று மீரோசோயிட்டுகளையும், ஹீமோசோயின் என்ற நச்சையும் இரத்தத்தில் வெளியிடுகின்றன.
8. சில மீரோசோயீட்டுகள், மேக்ரோகேமிட் டோசைட்டுகளாகவும் மைக்ரோகேமிட் டோசைட்டுகளாகவும் மாற்றமடைகின்றன.
கொசுவில் காணப்படும் வாழ்க்கைச் சுழற்சி :
1. அந்த கேமிட்டோசைட்டுகள் குடலில் ஆண் மற்றும் பெண் இனச்செல்களாக மாறுகின்றன.
2. பின் அவை இணைந்து ஊகனைட்டாக மாறுகிறது.
3. கொசுவின் குடலை துளைத்து சென்று ஊசிஸ்ட்டுகளாக மாறுகின்றன.
4. இவை ஸ்போரோகோனிடாக மாறுகிறது.
5. பின் அவை ஸ்போரோசோயிட்டாக மாறி உமிழ்நீர் சுரப்பியை அடைகிறது.
6. பின் அவை அடுத்த சுழற்சிக்காக தயாராகிறது.

6.
போதை மருந்துகள் மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விலகும் போது ஏற்படும் விலகல் அறிகுறிகள்
1. லேசான நடுக்கம் முதல் வலிப்பு வரை.
2. கடுமையான கிளர்ச்சி
3. மன அழுத்த உணர்வு
4. கவலை, பதட்டம், படபடப்பு.
5. எரிச்சல், தூக்கமின்மை.
6. தொண்டை வறட்சி.
7.
எண்டமீபா இஸ்டோலைட்டிகா
8.
MMR தடுப்பு மருந்து - கொல்லப்பட்ட தடுப்பு மருந்து
9.
தொற்றிலா நோய்களில் கேன்சர் ஒரு உயிர்கொல்லி நோயாகும்
10.
மோனோசைட்டுகள் - 2-7%
11.
( )
ஆஸ்துமா
12.
( )
H1N1
13.
( )
பிளாஸ்மோடியம்
14.
1. இது உணவு மண்டலம், சுவாச மண்டலம் மற்றும் சிறுநீரக இனப்பெருக்க பாதையில் சிறிய அளவில் பரவியுள்ளன.
2. T-செல் B-செல் பிளாஸ்மா செல்கள் மற்றும் மேக்ரோஃபேஜ்கள் உள்ளன. இவை கோழை எபிதீலிய படலத்தின் வழியாக வரும் எதிர்பொருள் தூண்டிகளை அழிக்கின்றன.
15.
நல்ல உடல்நலத்தை பராமரிக்க, தன் சுத்தம், முறையான உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு ஆகியவை, முக்கியமானதாகும்.
16.
| எபிடோப் | பராடோப் | |
|---|---|---|
| 1. | எதிர்பொருள் தூண்டியின் செயல்மிகு பகுதியாகும். | எதிர்ப்பொருள் தூண்டி பிணையும் பகுதியாகும். |
| 2. | இது எதிர்பொருள் தூண்டி நிர்ணயக்கூறுகளாகும். | எதிர்பொருளின் பகுதியான இது எதிர்ப்பொருள் தூண்டிகளைக் கண்டறிந்து அவற்றுடன் பிணைக்கின்றன. |
17.
1. நீள்வட்ட வடிவத்தில் தடித்து காணப்படும்.
2. இவை முதுகெலும்பு உயிரிகளின் சிறுகுடலின் உள்ள கோழையை சுரக்கும் படலத்தில் புதைந்துள்ளன.
3. மேக்ரோஃபேஜ்கள், டென்ரைட்டிக் செல்கள், T -செல்கள் மற்றும் B -செல்கள் போன்ற நோய்த்தடைக்காப்பு செல்களைக் கொண்டுள்ளன.
18.
1. இது ஒரு தோல் தொற்றாகும்.
2. இது டிரைகோபைட்டான் மைக்ரோஸ்போரம் மற்றும் எபிடெர்மோஃபைட்டான் ஆகிய பூஞ்சை பேரினங்களால் ஏற்படும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards