12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/01/2020
விலங்கியல் - மனித நலனில் நுண்ணுயிரிகள்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
நீர் நிலைகளைப் பாதுகாக்க அரசாங்கம் எந்த ஆண்டு எந்த திட்டத்தை அமல்படுத்தியது?
2009 -ல் உயிரிய எரிபொருள் குறித்த தேசிய கொள்கை
1956 -ல் கங்கை நதி செயல் திட்டம்
தேசிய நதிநீர் பாதுகாப்புத் திட்டம் - 1995
யமுனை நதி செயல் திட்டம் - 1993
2.
கீழ்க்கண்டவற்றுள் எது உயிர் எதிர்ப்பொருள் அல்ல?
டெட்ராசைக்ளின்
சூப்பர் பக்
குளோர்டெட்ராசைக்ளின்
ஸ்ட்ரெப்டோமைசின்
3.
கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடாத நிகழ்வினை தேர்ந்தெடு.
ஆல்கஹாலிக் நொதித்தல்
லாக்டேட் நொதித்தல்
விலங்குகளில் நடைபெறும் காற்றுச் சுவாசம்
தாவரங்களில் நடைபெறும் காற்றுச் சுவாசம்
4.
பென்சீன் எவ்வாறு இயற்கையில் நுண்ணுயிரிகளால் சிதைக்கப்படுகிறது.
5.
எத்தனால் உற்பத்தியின் போது நடைபெறும் வேதி நிகழ்வு சமன்பாட்டை எழுதுக.
6.
பாக்டீரியாக்களால் உருவாக்கப்படும் நோய்களுக்கு எதிராக எவ்வகை நுண்ணுயிரிகள் செயல்படுகின்றன என்பதை தகுந்த எடுத்துக்காட்டுடன் கூறு.
7.
8.
பெனிசிலின் எல்லாரும் பயன்படுத்தலாமா? மனிதர்கள் மிகு உணர்மை அடைந்தால் அதன் அறிகுறிகள் யாவை?
9.
இயற்கை வேளாண்மையின் முக்கியப் பண்புகளை எழுதுக.
10.
'உயிர் உரங்கள்' வரையறு. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் உயிர் உரங்களின் முக்கிய மூலாதாரங்களாக எவ்வாறு பயன்படுகிறது என்பதை விவரி.
11.
வேதிப் பொருட்கள், நொதிகள் உற்பத்தியில் நுண்ணுயிரிகள் பங்கு என்ன? அந்தப் பொருட்களின் பயன்களைக் கூறு.
12.
கிராமப்புற பகுதிகளில் உயிரிய வாயு உற்பத்தி நிலையங்களின் பயன்களை வரிசைப்படுத்துக
13.
அ. லைபேஸ் - சலவைப் பொருட்களின் பயன்பாடு
ஆ. பெக்டினேஸ் - சாறுகளை தெளிவடைய செய்தல்
இ. ஸ்ட்ரெப்டோகாக்கை - கட்டிச் சிதைப்பான்
ஈ. ரென்னட் - லாக்டிக் அமிலம்
14.
அ. சிவப்பு ஒயின் - கருந்திராட்சை பழச்சாறு
ஆ. வெள்ளை ஒயின் - முளைகட்டிய பார்லி
இ. ரம் - நொதிக்க வைக்கப்பட்ட கரும்பு
ஈ. பீர் - தென்னை மரத்தின் வெடிக்காத பாளை
15.
கூற்று (A): ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ம் நாள் உலக உயிரிய எரிபொருள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
காரணம் (R): இன்று பயன்பாட்டில் உள்ள உயிரிய எரிபொருட்கள் எத்தனால் மற்றும் கள் ஆகியனவாகும்.
அ. கூற்றும் (A) அதற்கான காரணமும் (R) சரி. காரணம் (R) கூற்றிற்கான (A) சரியான விளக்கமாகும்.
ஆ. கூற்றும் (A) காரணமும் (R) சரி. ஆனால் காரணம் கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று (A) சரி. காரணம் (R) தவறு.
ஈ. கூற்று (A) காரணம் (R) இரண்டும் தவறு.
16.
புரோபயாடிக் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடு:
அ. பாதுகாப்பான உயிர் எதிர்ப்பொருள்
ஆ. எதிர்ப்பொருள் நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படுதல்
இ. புதுவகையான உணவு ஒவ்வாமை பொருள்
ஈ. குடல் வாழ் நுண்ணுயிரிகள் புதுப்பித்தல்
17.
மைக்கோரைசா ஒரு உயிர் உரம் என்பதில் தவறான கூற்றை தேர்ந்தெடு:
அ. பாஸ்பரஸ் மண்ணிலிருந்து உறிஞ்ச உதவுகிறது
ஆ. வேரிலுள்ள நோயூக்கிகளுக்கு எதிரான எதிர்ப்புத் திறன்
இ. தீங்கு தரும் பூச்சிகளுக்கு எதிர்ப்பு திறன்.
ஈ. உப்புத் தன்மை மற்றும் வறட்சி தாங்கு திறன்.
1.
(c)
தேசிய நதிநீர் பாதுகாப்புத் திட்டம் - 1995
2.
(b)
சூப்பர் பக்
3.
(b)
லாக்டேட் நொதித்தல்
4.
1. நைட்ரோசோமோனாஸ் யூரோப்பியா - பென்சீன் மற்றும் பலதரப்பட்ட உப்பீனி ஏறிய கரிம கூட்டுப்பொருட்களான ட்ரைகுளோரோ எத்திலீன் மற்றும் பினைல் குளோரைடு போன்றவற்றை சிதைக்கவல்லது.
2. டீகுளோரோமோனாஸ் அரோமேட்டிக்கா - காற்றற்ற சூழலில் பென்சீனை சிதைக்கவும், டொலுவீன் மற்றும் சைலீனை ஆக்ஸிகரணமடையச் செய்யும் திறனும் பெற்றுள்ளது.
5.
6.
ஸ்ட்ரெப்டோமைசின்:
1. இது பரந்த செயலாற்றலுள்ள உயிர் எதிர்ப்பொருள்.
2. ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிரைசியஸ் என்ற ஆக்டினோமைசெஸ் வகையைச் சேர்ந்த பாக்டீரியாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
3. இந்த மருந்து பொதுவாக கிராம் பாசிடிவ் மற்றும் கிராம் நெகடிவ் பாக்டீரியாக்களை அழிக்கவல்லது.
4. குறிப்பாக மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸை அழிக்கின்றது. இது காசநோய்க்கு காரணமானது.
7.
8.
1. பெனிசிலின் மருந்தை பயன்படுத்துவதில் உள்ள பெரிய இடர் "மிகு உணர்மை" (Hypersensitivity) ஆகும்.
2. எல்லாராலும் பெனிசிலின் மருந்தை எடுத்துக்கொள்ள முடியாது.
3. நோயாளிக்கு ஒவ்வாமை பரிசோதனை செய்ய மருத்துவர் நோயாளியின் முன் கையில் சிறிய ஊசியால் வீரியம் குறைந்த மருந்தை செலுத்துவார்.
4. நோயாளிக்கு மருந்து ஒத்துக்கொள்ளவில்லை எனில் மருந்து செலுத்திய இடத்தில் சிவந்து அரிப்பு ஏற்படும்.
ஒவ்வாமை அறிகுறிகள்:
1. குமட்டல்
2. வாந்தி
3. அரிப்புகள்
4. மூச்சுத் திணறல்
5. இறுதியில் இரத்த நாள அழிவுகள்
9.
இயற்கை வேளாண்மையின் முக்கியப் பண்புகள்:
1. கரிமப் பொருட்களை பயன்படுத்தி மண்ணின் தரம் பாதுகாத்தல் மற்றும் உயிரிய செயல்பாடுகளை ஊக்குவித்தல்.
2. மண்வாழ் உயிரிகளை பயன்படுத்தி பயிர்களுக்கு ஊட்டச் சத்துகளை மறைமுகமாக அளித்தல்
3. பயறு வகை தாவரங்களை பயன்படுத்தி மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்துதல்
4. பயிர் சுழற்சி, உயிரியப் பல்வகைத்த தன்மை, இயற்கையான கொன்றுண்ணிகள், இயற்கை உரங்கள் மற்றும் பொருத்தமான வேதிய, வெப்ப மற்றும் உயிரிய தலையீடுகள் போன்ற முறைகளால் களை மற்றும் தீங்குயிர்கள் கட்டுப்படுத்துதல்.
10.
1. 'உயிரிய உரங்கள்' மண்ணின் ஊட்டச்சத்து தரத்தை வளப்படுத்தக் கூடிய உயிருள்ள நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டதாகும்.
2. இவை பல ஊட்டச் சத்துகள் மற்றும் போதுமான அளவு கரிம பொருட்களை வழங்குகிறது.
3. இதனால் மண்ணின் அமைப்பு முறை, கட்டமைப்பு, நீர் சேமிப்புத் திறன், நேர்மின் அயனி பரிமாற்ற திறன் மற்றும் கார அமிலத் தன்மை (pH) போன்ற இயற்பிய வேதிய பண்புகளை அதிகரிக்கச் செய்கிறது.
பாக்டீரியா:
4. ரைசோபியம் - இணைந்து வாழக்கூடிய (Symbiotic) நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியா ஆகும்.
5. இவை பயறு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் தொற்றி வளிமண்டல நைட்ரஜனை கரிம வடிவில் நிலைப்படுத்துகின்றன.
6. அசோஸ்பைரில்லம் மற்றும் அசிட்டோபாக்டர் போன்ற தனித்து வாழும் பாக்டீரியாக்கள் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தி மண்ணின் நைட்ரஜன் அளவை அதிகப்படுத்துகின்றன.
பூஞ்சைகள்:
7. பூஞ்சைகளும் தாவரங்களின் வேர்களும் இணைந்து வாழும் அமைப்பு மைக்கோரைசா எனப்படும்.
8. இதில் இணை வாழ் உயிரியான பூஞ்சை மண்ணிலிருந்து பாஸ்பரசை உறிஞ்சி தாவரங்களுக்கு அளிக்கிறது.
9. இத்தகைய இணை வாழ்வை கொண்டுள்ள தாவரங்கள் வேறு பல நன்மைகளையும் பெறுகின்றன.
10. வேரிலுள்ள நோயூக்கிகளுக்கு எதிரான எதிர்ப்புத் திறன், உப்புத்தன்மை மற்றும் வறட்சி தாங்கு திறன், தாவர வளர்ச்சியை மேம்படுத்துதல் போன்ற பிற நன்மைகள் ஆகும்.
எ.கா: குளோமஸ் என்ற பேரினத்தின் பல உறுப்பு இனங்கள் மைக்கோரைசாவை ஏற்படுத்துகின்றன.
11.
நுண்ணுயிரிகள் வணிக மற்றும் தொழிற்துறை ரீதியான ஆல்கஹால் உற்பத்திக்கு மட்டுமின்றி கரிம அமிலங்கள் மற்றும் நொதிகளின் உற்பத்திக்கும் பயன்படுகின்றன.
கரிம அமிலங்கள் மற்றும் பயன்படும் நுண்ணுயிரிகள்:
1. சிட்ரிக் அமிலம் - ஆஸ்பர்ஜில்லஸ் நைஜர்
2. அசிடிக் அமிலம் - அசிட்டோபாக்டர் அசிட்டை
3. ஃபியூமரிக் அமிலம் - ரைசோபஸ் ஒரிசா
4. பியூட்டிரிக் அமிலம் - கிளாஸ்டிரிடியம் பியூட்டைரிக்கம்
5. லாக்டிக் அமிலம் - லாக்டோபேசில்லஸ்
நொதிகளின் உற்பத்தி:
வணிக ரீதியிலான நொதிகளின் உற்பத்திக்கு ஈஸ்ட் அதாவது சக்காரோமைசஸ் செரிவிசியே மற்றும் பாக்டீரியாக்கள் பயன்படுகின்றன.
i) லைபேஸ்: நொதி துணிகளில் படிந்த எண்ணெய் கறைகளை நீக்க சலவைப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
ii) பெக்டினேஸ், புரோட்டியேஸ், செல்லுலேஸ்: இந்த நொதிகள் புட்டியில் அடைக்கப்பட்ட சாறுகளை தெளிவடைய செய்ய பயன்படுகின்றன.
iii) ரென்னட்: இந்த நொதி பாலை கெட்டியான தயிராக மாற்றுவதற்குப் பயன்படுகிறது.
iv) ஸ்ட்ரெப்டோகைனேஸ்: இந்நொதியும் மரபியல் மாற்றம் செய்யப்பட்ட ஸ்ட்ரெப்டோகாக்கை பாக்டீரியங்களும் இதயத்தசை நலிவுறல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தக் கட்டிகளைக் கரைக்கும் 'கட்டி சிதைப்பானாக' செயல்படுகின்றன.
12.
1. ஆக்சிஜேனற்ற சூழலில் கரிமப் பொருட்களை சிதைவடையச் செய்து பெறப்படும் பலவகை வாயுக்களின் கலவையே உயிர் வாயு (அ) சாண எரிவாயு ஆகும்.
2. விவசாய கழிவுகள், நகராட்சி கழிவுகள், உரங்கள், தாவர பொருட்கள், கழிவு நீர், உணவு கழிவுகள் போன்ற மூலப்பொருட்களிலிருந்து உயிரி வாயு உற்பத்தி செய்யப்படுகிறது.
3. கிராமப்புற பகுதிகள் கால்நடைகள் அதிகமாக வளர்க்கப்படுவதால் சாணம் என்ற கால்நடைக் கழிவு அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது.
4. மீத்தேனை உற்பத்தி செய்யும் பாக்டீரியங்கள் கால்நடைகளின் இரைப்பையிலும் ஆக்சிஜேனற்ற கசடுகளிலும் காணப்படுகின்றன.
5. கால்நடை சாணத்தை காற்றற்ற சூழலில் மக்கச் செய்வதன் மூலம் சாண எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது.
6. இதில் சிறிதளவு ஹைட்ரஜனுடன் கூடிய மீத்தேன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன் மற்றும் சிறிய அளவில் வேறு சில வாயுக்களும் உள்ளன.
7. ஒளியூட்டலுக்கும், சமைப்பதற்கும் உயிர் வாயு பயன்படுகிறது.
8. இதிலுள்ள எஞ்சிய நோயூக்கிகள் அற்ற சாண கரைசல் உரமாக பயன்படுகிறது.
9. இதனால் கிராமப்புற மக்கள் சமைப்பதற்கு மரக்கட்டைகளை சேகரிக்கவேண்டிய அவசியமில்லை.
10. மேலும் சுற்றுசூழலை மாசுபடுத்தாத மணமற்ற புகையற்ற நீலச்சுடரை தரவல்ல எரிபொருளாக உயிர் வாயு பயன்படுகிறது.
11. பொதுவாக உயிர் வாயு ஒரு மனிதன் ஒரு ஆண்டிற்கு பயன்படுத்தும் 4.5 டன் மரக்கட்டைகள் பயன்படுத்துவது தவிர்க்கப்படுகிறது. இதனால் 4 டன் பச்சைவீடு வாயுக்கள் வெளியேறுவதும் தவிர்க்கப்படுவதாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) கூறியுள்ளது.
12. கழிவுகளை உயிர் வாயு தயாரிக்க பயன்படுத்துவதால் இயற்கையில் இந்த கழிவுகள் சிதைந்து பச்சைவீடு வாயுவான மீத்தேன் வாயு வெளியேறுவதும் தவிர்க்கப்படுகிறது.
13. இவ்வாறு இயற்கைக் கழிவுகள் உயிர் வாயு தயாரிக்க பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் தூய்மையாக பாதுகாக்கப்படுகிறது.
14. இவ்வாறு உயிர் வாயு வீடுகளில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்துவதால் சுற்றுசூழல் மாசுபாடு தவிர்க்கப்படுகிறது. மக்கள் சுகாதாரமாக வாழ வழிவகுக்கிறது.
13.
ஈ. ரென்னட் - லாக்டிக் அமிலம்
14.
இ. ரம் - நொதிக்க வைக்கப்பட்ட கரும்பு
15.
ஈ. கூற்று (A) காரணம் (R) இரண்டும் தவறு.
16.
( )
ஈ. குடல் வாழ் நுண்ணுயிரிகள் புதுப்பித்தல்
17.
இ. தீங்கு தரும் பூச்சிகளுக்கு எதிர்ப்பு திறன்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards