12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/01/2020
விலங்கியல் - மூலக்கூறு மரபியல்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
கிரிஃபித்தின் முக்கிய கண்டுபிடிப்பானது
மெல்லிய புறப்பரப்புடைய பாக்டீரியா நோயை உண்டாக்கியது
சொரசொரப்பான புறப்பரப்பு உடைய பாக்டீரியா எலியைக் கொல்லவில்லை
DNA மரபணுப்பொருள் என்பதற்கான சான்று
மரபணுப்பொருள் இறந்த பாக்டீரியாவில் இருந்து உயிருள்ள பாக்டீரியாவில் தோற்ற மாற்றம் (transformation) உண்டாக்கியது
2.
நியூக்ளியோசைடில் நியூக்ளியோடைடிலுள்ள எது காணப்படுவதில்லை
காரம்
சர்க்கரை
பாஸ்பேட் தொகுப்பு
ஹைட்ராக்ஸைல் தொகுப்பு
3.
1869 இல் ஸ்விஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவரான பிரடெரிக் மீஸ்ஷர் செல்லின் உட்கருவிலிருந்து பிரித்தெடுத்த பொருள்
நியூக்ளியோசம்
குரோமோசோம்
குரோமேடிடு
நியூக்ளின்
4.
5.
டி.என்.ஏ மற்றும் RNA வில் ஒற்றுமை காணப்படுவது _____.
தையமின் என்ற நைட்ரஜன் காரத்தினைக் கொண்டிருத்தல்.
ஓரிழை உடைய சுருண்ட வடிவம்.
சர்க்கரை, நைட்ரஜன் காரங்கள் மற்றும் பாஸ்பேட் ஆகியவை உடைய நியூக்ளியோடைடுகள்
பீனைல் அலனைன் எனும் அமினோ அமிலத்தில் உள்ள ஒத்த வரிசையில் அமைந்த நியூக்ளியோடைடுகள்
6.
VNTR என்றால் என்ன?
7.
8.
பின்வரும் படத்தை வரைந்து பாகங்களைக் குறி.
9.
ஹிஸ்டோன் ஆக்டோமர்களின் பணியாது?
10.
வாட்சன் மற்றும் கிரிக் ஆகியோர் டி.என்.ஏ அமைப்பைப் பரிசோதனை செய்ததன் மூலம் டி.என்.ஏ இரட்டிப்பாதல், குறியீடு திறன் மற்றும் திடீர் மாற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் முறை குறித்து என்ன முடிவுகளுக்கு வந்தனர்?
11.
DNA இரட்டிப்படைதலோடு தொடர்புடைய நொதிகள் யாவை?
12.
கீழ்க்காணும் படத்தை பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

i) மரபணு உருவாக்கிய 'X' மூலக்கூறு யாது? எவ்வாறு இம்மூலக்கூறு செயலிழக்கிறது?
ii) பீட்டா கேலக்டோசிடேஸ் எந்த மரபணு குறியீடு உருவாக்குகிறது?
iii) எப்போது மரபணுக்களின் படியெடுத்தல் நிறுத்தப்படலாம்.
13.
நியூக்ளியோசோம் உருவாகும் முறையை விவரி.
14.
ஈக்கோலையில் லாக் - ஓபரான் செயல்படத் தொடங்க வேண்டுமெனில்
லாக்டோஸ் தூண்டியாகக் காணப்பட வேண்டும் மேலும் அது அடக்கியுடன் இணைந்து அதை செயலற்றதாக மாற்றுகிறது.
அடக்கி இயக்கியில் பிணைகிறது
RNA பாலிமரேஸ் இயக்கியுடன் பிணைகிறது
லாக்டோஸ் காணப்படுகிறது அது RNA பாலிமரேஸுடன் பிணைகிறது
15.
மரபணு குறியீடு அகராதியைப் பொருத்தவரையில் எது உண்மையானதல்ல.
1. இது எல்லா உயிரின மண்டலங்களுக்கும் பொதுவானது
2. அது சிதைவுக் குறியீடுகள் எனப்படும்
3. இக்குறியீடுகள் குழப்பமற்றவை
4. தூது RNA வின் ஒரு முக்குறியும் ஒரு தொடர்ச்சியற்ற முறையில் படிக்கப்படுகிறது.
16.
ஆந்த்ரோபாலஜி குறிப்பிடுவது _____
17.
அடினைன் + ரிபோஸ் சர்க்கரை ⟶________
18.
மரபணுக் குறியீட்டைப் பொறுத்தவரை தொடர்பற்றவரான அறிவியலாளர் _________
அ) மார்ஷெல் நிரன்பர்க்
ஆ) செவேரோ ஓகோரியா
இ) ஹர்கோபிந்த் கோரானா
ஈ) வில்கின்ஸ்
19.
மரபுக்குறியீடுடன் தொடர்பற்றது
அ) சிதைவு குறியீடுகள்
ஆ) குழப்பமானவை
இ) எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது
ஈ) தனித்துவம் வாய்ந்தது
20.
அ) செயல்முறைக்கு ஆட்பட்ட hn RNA - கடந்து t RNA
ஆ) அமைப்பு ஜீன்களின் குறியீட்டு தொடர் - குறியீடு
இ) மெத்தில் குவானோசைன் டிரைபாஸ்பேட் 5' முனையில் சேர்க்கப்படுவது - காப்புறையாக்கம்
ஈ) வினையூக்கி RNA - ரிபோசோம்
21.
அ) RNA தயாரிக்கும் இடம் - நியுக்ளியஸ்
ஆ) படியெடுத்தலில் இன்ட்ரான்களை நீக்கி எக்ஸான்கள் இணைவது - இழைத்தல்
இ) ரிபோசோம்கள் வரிசையாக இணைந்து காணப்படுவது - பாலிசோம்கள்
ஈ) RNA பாலிமரேஸ் நிகழ்வு நிறுத்தப்படக் காரணமான காரணி - சிக்மா
22.
உறுதிப்படுத்துதல் A: ஒரு பாலிபெப்டைடு சங்கிலியிலுள்ள ஒரு அமினோ அமில மரபுக்குறியீட்டின் மூன்றாவது காரம் மாறுவதால் அந்த அமினோ அமிலம் மாறுவதில்லை.
காரணம் R: இது ஊசலாட்ட கோட்பாட்டினால் நடைபெறுகிறது.
அ) 'A' மற்றும் 'R' சரியானது - 'R' 'A' ஐ சரியாக விளக்குகிறது.
ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
இ) 'A' சரியானது 'R' தவறானது
ஈ) 'A' மற்றும் 'R' தவறானது
23.
பொருளற்ற குறியீடுகள் எனப்படும் UAA, UAG மற்றும் UGA ஆகியவை நிறைவுக் குறியீடுகளாகவும் செயல்படுகின்றன.
24.
பாக்டீரியாவில் படியாக்கம் மற்றும் மொழியாக்கம் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நடைபெறுகிறது.
25.
பாலி 'A' வால்பகுதி தூது RNA வின் 3' முனைப்பகுதியில் காணப்படுகிறது.
1.
(c)
DNA மரபணுப்பொருள் என்பதற்கான சான்று
2.
(c)
பாஸ்பேட் தொகுப்பு
3.
(d)
நியூக்ளின்
4.
(c)
5.
(c)
சர்க்கரை, நைட்ரஜன் காரங்கள் மற்றும் பாஸ்பேட் ஆகியவை உடைய நியூக்ளியோடைடுகள்
6.
7.
8.
8 ஹிஸ்டோன் எண்மர்களை உடைய நியூக்ளியோசோமின் வரைபடம்.
A-DNA
B- H1 - ஹிஸ்டோன் (இணைப்பு DNA)
C - ஹிஸ்டோன் எண்மர் புரதம்
D - நியூக்ளியோசோம்
9.
DNA இழை உட்கூட்டை நிரப்ப (அ) பொதிவதற்கு ஹிஸ்டோன் புரத ஆக்டோமர்கள் பயன்படுவதால் அவை DNA விற்கு வடிவத்தைத் தருகின்றன.
10.
1. DNA அமைப்பு மாதிரியைக் கொண்டு - DNA பாதி பழைமை பேணும் தன்மை - தெரியவந்தது.
2. இரட்டை இழை பிரிந்து - ஒரு முனையில் ஹைட்ரஜன் பிணைப்பு நீங்கி பிரிதலடைய ஒரு இழை வார்ப்பாக செயல்பட்டது.
3. மேலும் சார்காஃபின் 4 கார இணை விதியை இவர்கள் பயன்படுத்தி மேலும் இரட்டிப்பாதல் மற்றும் 4 காரங்கள் 20 அமினோ அமிலங்களுக்கும் குறியீடாவது குறித்த புரிதல் சாத்தியமானது.
4. DNA இந்த கார இணையில் ஏற்படும் மாற்றம் அமினோ அமிலக் குறியீடு மாறுவதால் திடீர் மாற்றம் (அ) சடுதி மாற்றம் ஏற்படக்காரணமானது போன்றவைகளை தெளிவாக இருவரும் அறிந்து கொள்ள வழி வகுத்தது.
11.
I. புரோகேரியாட்டுகள் - 3 விதமான பாலிமெரேஸ்கள் பங்காற்றுகிறது DNA பாலிமெரேஸ்
DNA வை வார்ப்புருவாகக் கொண்டு டி - ஆக்ஸி நியூக்ளியோடைடுகளை இணைக்கும் முக்கிய நொதி.
DNA பாலிமரேஸ் I & II - DNA பழுது நீக்கத்தில் பங்காற்றுகின்றன.
DNA பாலிமரேஸ் III - DNA இரட்டிப்படைதலின் முக்கிய நொதி
II யூகேரியோட்டுகள் - 5 வகையான பாலிமெரேஸ்கள் பங்காற்றுகின்றன.
இவை 3' - OH பகுதியில் நியூக்ளியோடைடுகளை இணைகின்றன.
நியூக்ளியேஸ்கள் - இரட்டிப்படைத்தலில் ஏற்படும் பிழைகளைச் சீர்படுத்த உதவுகின்றன.
ஹெலிகேஸ்கள் - இது DNA வின் சுருள் நீக்கி - தொடர்ந்து திருகுச்சுழலில் சிறு திறப்பின் வழி இரட்டிப்பாதல் பிளவு தோன்றுகிறது.
டோபோஐசோமரேஸ் - இது சுருள் பிரிந்து ஏற்படும் இரட்டிப்பாதல் பிளவுக்கு மேல் உள்ள அதிகச் சுருளை நீக்குகிறது.
DNA லிகேஸ்- பின் தங்கு இழையில் உருவாகியுள்ள சிறு துண்டங்களை (ஓகசாகி துண்டங்கள்) லிகேஸ் நொதி இணைக்கிறது.
12.
i) அடக்கி (லாக்டோஸ் (தூண்டி) அடக்கி மூலக்கூறில் பிணைகிறது)
ii) Z -மரபணு
iii) எல்லா லாக்டோஸ் மூலக்கூறுகளும் பயன்பட்டு முடிந்த பின்பு -அடக்கி - இயக்கியுடன் பிணைந்து படியெடுத்தல் நிறுத்தப்படும்.
13.
1. குரோமோசோம் - குரோமேட்டினால் ஆனவை
2. குரோமேட்டின் ⟶ தொடர்ச்சியான மீள் தோன்று அலகுகளான நியூக்ளியோசோம்களால் உருவானது. கோர்ன்பெர்க் - நியூக்ளியோசோம் மாதிரி
3. இதில் H2A, H2B, H3 & H4 எனும் நான்கு ஹிஸ்டோன் புரதங்களின் இரண்டு மூலக்கூறுகள் வரிசையாக அமைந்து எட்டு மூலக்கூறுகளை உடைய அலகை உருவாக்குகின்றன. இதற்கு ஹிஸ்டோன் எண்மம் என்று பெயர்.
4. நேர்மின்தன்மை கொண்ட ஹிஸ்டோன் எண்மத்தை சுற்றி, எதிர்மறை தன்மை கொண்ட DNA உறையாக அமைந்து நியூக்ளியோசோமை உருவாக்குகிறது.
5. மாதிரி நியூக்ளியோசோம் ஒன்றில் - 200 கார இணைகள் உள்ளன
6. அடுத்தடுத்துள்ள நியூக்ளியோசோம்களை, நொதிகளின் உதவியுடன் இணைப்பு DNA க்கள் இணைக்கின்றன.
7. ஹிஸ்டோன் எண்மத்தை சுற்றி DNA இரு முழுமையான திருகுகளை உருவாக்கியுள்ளன.
8. இந்த திருகுகளை மூலக்கூறு H1 (இணைப்பு மூலக்கூறு) மூடுகிறது.
9. H1 இல்லாத நிலையில் குரோமேட்டின் மணிகோர்த்த மாலை போல் தெரிகிறது.
10. இவ்வமைப்பின் எந்த இடத்திலும் DNA உட்செல்லவும் நியூக்ளியோசோமை விட்டு வெளியேறவும் முடியும்.
11. நியூக்ளியோசோமின் மடிப்பிலிருந்து தோன்றும் நீளமுள்ள இழை - ஒரு சுற்றுக்கு ஆறு நியூக்ளியோசோமை கொண்ட வரிச்சுருளமைப்பை (Solenoid) உருவாக்குகிறது.
12. இது மேலும் மடிப்புற்று - குரோமேடின் இழைகளையும், குரோமேடின் இழை மேலும் மடிப்புற்று குரோமேடிடுகளையும், குரோமேடிடுகள் ⟶ குரோமோசோம்களாகின்றன.
13. உயர்நிலை குரோமேடின் பொதிவுக்கு ஹிஸ்டோனல்லாத குரோமோசோம் புரதங்கள் தேவைப்படுகின்றன.
| யூகுரோமேட்டின் | ஹெட்ரோகுரோமேட்டின் | |
| 1. | தளர்வாக பொதியப்பட்டுள்ளது | நெருக்கமாக பொதியப்பட்டுள்ளது |
| 2. | சாயமேற்காது | சாயமேற்கும் |
| 3. | படியெடுத்தலில் தீவிரமாக பங்கேற்கும் | படியெடுத்தலில் பங்கேற்காது |
14.
(a)
லாக்டோஸ் தூண்டியாகக் காணப்பட வேண்டும் மேலும் அது அடக்கியுடன் இணைந்து அதை செயலற்றதாக மாற்றுகிறது.
15.
4. தூது RNA வின் ஒரு முக்குறியும் ஒரு தொடர்ச்சியற்ற முறையில் படிக்கப்படுகிறது.
16.
( )
மனித தொகையின் தோற்றம் பற்றிய இயல்
17.
( )
அடினோசைன்
18.
ஈ) வில்கின்ஸ்
19.
ஈ) தனித்துவம் வாய்ந்தது
20.
அ) செயல்முறைக்கு ஆட்பட்ட hn RNA - கடந்து t RNA
21.
இ) ரிபோசோம்கள் வரிசையாக இணைந்து காணப்படுவது - பாலிசோம்கள்
22.
அ) 'A' மற்றும் 'R' சரியானது - 'R' 'A' ஐ சரியாக விளக்குகிறது.
23.
(a)
24.
(a)
25.
(b)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards