12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/01/2020
விலங்கியல் - உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
கிரேக்க மொழியில் oikos என்றால் ______ என்று பொருள் ஆகும்.
ஓர் இடம்
வீட்டில் உள்ள
உயிர்த் தொகை
படித்தல்
2.
குளிர் பிரதேசங்களில் வாழும் விலங்குகளின் முதுகெலும்புத் தொடர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.இது கீழ்க்காணும் எந்த விதியுடன் தொடர்புடையது.
பெர்க்மானின் விதி
ஆலென் விதி
வாண்ட்ஹாஃப் விதி
ஜோர்டனின் விதி
3.
| பகுதி 1 | பகுதி 2 | ||
|---|---|---|---|
| i | வாண்ட்ஹாஃப் விதி | a | குளிர் பகுதியில் வாழும் உயிரினங்கள் அதிக உடல் எடையை கொண்டுள்ளன. |
| ii | ஆலென் விதி | b | குறைவான வெப்பநிலையில் வாழும் உயிரினங்கள் அதிக முதுகெலும்புகளைக் கொண்டுள்ளன. |
| iii | பெர்க்மானின் விதி | c | ஒவ்வொரு 10o C வெப்பநிலை உயர்வுக்கும் வளர்சிதை மாற்ற வீதம் இரட்டிப்பாகிறது. |
| iv | ஜோர்டானின் விதி | d | குளிரான பகுதிகளில் வாழும் மாறா உடல் வெப்பம் கொண்ட விலங்குகளின் கால்கள் மற்றும் காதுகள் சிறியதாக காணப்படுகின்றன. |
i-d,ii-b,iii-a,iv-c
i-a,ii-c,iii-b,iv-d
i-c,ii-d,iii-a,iv-b
i-b,ii-a,iii-c,iv-d
4.
கீழ்க்கண்டவற்றுள் r-வகை தேர்வுசெய்யப்பட்ட சிற்றினம் குறித்த சரியான கருத்துக்கள்.
அதிக எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் சிறிய உருவம்
அதிக எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் பெரிய உருவம்
குறைவான எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் சிறிய உருவம்
குறைவான எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் பெரிய உருவம்
5.
கீழ்கண்டவற்றைப் பொருத்தி சரியானவிடையைத் தேர்வு செய்க.
| பத்தி I | பத்தி II |
| அ) பகிர்ந்து வாழும் வாழ்க்கை | 1.சிங்கம் மற்றும் மான் |
| ஆ) உதவி பெறும் வாழ்க்கை | 2.உருளைப்புழு மற்றும் மனிதன் |
| இ) ஒட்டுண்ணி வாழ்க்கை | 3.பறவைகளும் அணில்களும் உணவிற்குப் போட்டியிடுதல் |
| ஈ) போட்டி வாழ்க்கை | 4.கடல் அனிமோன் மற்றும் துறவி நண்டு |
| உ) கொன்றுண்ணி வாழ்க்கை | 5.பறவைகளும் பாலூட்டிகளும் விதை பரவுதலுக்கு உதவுதல் . |
அ-4 ஆ-5 இ-2 ஈ-3 உ-1
அ-3 ஆ-1 இ-4 ஈ-2 உ-5
அ-2 ஆ-3 இ-1 ஈ-5 உ-4
அ-5 ஆ-4 இ-2 ஈ-3 உ-1
6.
ஜோர்டானின் விதியை வரையறு.
7.
8.
ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உயிரற்ற காரணியாக ஒளி மற்றும் காற்றின் பங்கினைப் பற்றி விவரி.
9.
பல்வேறு பருவகாலங்களில் பெய்யும் மழையின் பரவலின் அடிப்படையில் மிதவெப்ப மண்டலக் காடுகளை வகைப்படுத்துக.
10.
உயிரற்ற காரணிகளுக்கேற்ப உயிரினங்கள் எந்தெந்த வழிகளில் எதிர்வினை புரிகின்றன என்பதை விளக்கு.
11.
அ) மையோடோம்கள்
ஆ) பக்கக்கோட்டு உணர்வுறுப்பு
இ) நன்கு வளர்ச்சி பெற்ற மூச்சுக்குழல் மண்டலம்
ஈ)   காற்று நிரம்பிய காற்றுப் பைகள்
12.
| பகுதி I | பகுதி II | ||
| அ | வெளியேற்றம் | a | இட நெருக்கடி |
| ஆ | அனாட்ராமஸ் வலசை | b | சால்மன் மீன்கள் |
| இ | கடாட்ரோமஸ் வலசை போதல் | c | உறிஞ்சு மீன் மற்றும் சுறா மீன் |
| ஈ | உதவி பெறும் வாழ்க்கை | d | உறிஞ்சு மீன் மற்றும் சுறா மீன் |
13.
| பகுதி I | பகுதி II | ||
| அ | அனிமோமீட்டர் | a | காற்றின் வேகம் |
| ஆ | ஈரப்பதம் | b | ஹைக்ரோமீட்டர் |
| இ | மலைப் பிரதேசங்கள் | c | சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு |
| ஈ | நீர் உயிர்த்தொகை | d | உயிர்க்கோளத்தில் 21% |
14.
________ என்பது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும், மீண்டும் பழைய இடத்திற்குமான பெருமளவிலான உயிரினங்களின் தனித்துவமான இயக்கத்தைக் குறிக்கும்.
15.
ஈரப்பதம் என்றால் என்ன? அதன் வகைகளை பற்றி எழுதுக.
16.
கூற்று : வேட்டையாடவும், இறைச்சியைக் கிழிக்கவும் வசதியாக சிங்கங்களுக்கு கோரைப் பற்களும் பச்சை மாமிசத்தை செரிப்பதற்கான செரிமான மண்டலமும் அமைந்துள்ளன.
காரணம்: உடற்செயலியல் சார்ந்த தகவமைப்புகள் விலங்கினங்கள் சிறுவாழிடத்தை உள்ளடக்கிய சூழலில் சிறப்பாக வாழ்வதற்கு உதவுகின்றன.
அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றினை விளக்கவில்லை.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
17.
அ) குளிர்கால உறக்கம் மற்றும் கோடைக்கால உறக்கம் விலங்கினங்களின் பொதுவாகக் காணப்படக்கூடிய உடல் அமைப்பு சார்ந்த தகவமைப்புகளாகும்.
ஆ) பறவைகள் வறண்ட காலத்தில் அதிகமாக இனப்பெருக்கம் செய்கின்றன.
இ) பிறப்பு வீதமானது பொதுவாக இனக் கூட்டத்தின் அடர்த்தியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
ஈ) நிறம் மாறும் விலங்குகள் சுற்றுச்சூழலின் நிறத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதால் அவற்றை எளிதாகக் கண்டறிய முடியாது.
18.
அ) வடக்கு தூந்திரக் குழிமுயல் லிபுஸ் அல்லெனி தெற்குப் பகுதியில் வாழும், பாலைவன ஜாக் முயல் லாஸ் ஆர்டிக்ஸ் வரை, முயல்களின் உடலில் எல்லைப்பகுதி உறுப்புகள் நீளமாக மாறும், உடல் மெலிவடையும்.
ஆ) சூழ்நிலை மண்டலத்தின் உயரம் அதிகரிக்கும்பொழுது வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அடர்த்தி குறைகிறது.
இ) மகரந்தத் துகள்கள் மற்றும் விதைப் பரவுதலைத் தடுக்கும் ஒரு காரணியாக காற்று செயல்படுகிறது.
ஈ) 4o C ல் திரவ நீரின் அடர்த்தி மிக அதிகமாக உள்ளது.
1.
(b)
வீட்டில் உள்ள
2.
(d)
ஜோர்டனின் விதி
3.
(c)
i-c,ii-d,iii-a,iv-b
4.
(a)
அதிக எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் சிறிய உருவம்
5.
(a)
அ-4 ஆ-5 இ-2 ஈ-3 உ-1
6.
7.
8.
அ) ஒளி:
1. விலங்கினங்களின் வளர்ச்சி, நிறமியாக்கம், இடப்பெயர்ச்சி மற்றும் இனப்பெருக்க நிகழ்வுகளில் ஒளி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
2. ஒளியின் செறிவு மற்றும் அலைவெண் ஆகியவை வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, மரபணுக்களில் திடீர் மாற்றத்தைத் தூண்டுகின்றன.
3. கண்பார்வைக்கு ஒளி மிகவும் அவசியம்.
4. குகையில் வாழும் உயிரினங்களில் சரியாக வளர்ச்சியடையாத அல்லது முழுமையாகக் கண்கள் இல்லாத நிலை ஆகியவற்றால் இது நிரூபிக்கப்பட்டது.
5. விலங்குகளின் ஊடுவளர்ச்சித் தடை நிகழ்வில் ஒளி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
6. கோடைகாலங்களில் அதிக ஒளிச் செறிவின் போது பறவைகளின் இன உறுப்புகளின் செயல்பாடு அதிகரிக்கிறது,
7. எளிய விலங்குகளில் இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கத்தில் ஒளி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஆ) காற்று :
1. குறிப்பிட்ட திசையிலிருந்து குறிப்பிட்ட வேகத்தில், இயற்கையான நகரும் வளி, காற்று என அழைக்கப்படுகிறது.
2. நிலநடுக்கோடு மற்றும் துருவப்பகுதிகளுக்கிடையே காணப்படும் வெப்பநிலை வேறுபாடு மற்றும் பூமியின் சுழற்சி ஆகிய இரு காரணங்களால் காற்று உருவாகிறது.
3. மகரந்தத் துகள்கள் மற்றும் விதைகள் கடத்தப்படவும், பறவைகள் பறக்கவும் காற்று உதவுகிறது.
4. காற்றின் மூலம் உற்பத்தியாகும் ஆற்றலுக்கு மூலகாரணமாக விளங்குவதுடன் காற்று உதவுகிறது.
5. அனிமோமீட்டர் என்ற கருவியின் உதவியால் காற்றின் வேகம் அளவிடப்படுகிறது.
9.
1. ஈரமான ஊசியிலை மற்றும் பசுமைமாறா, அகன்ற இலைக் காடுகள்:
ஈரமான பனிக்காலம் மற்றும் உலர்ந்த கோடைகாலம்.
2. உலர் ஊசியிலைக்காடுகள் :
உயரமான பகுதிகளில் அதிகம் உள்ளன. குறைவான மழைப்பொழிவைப் பெறுகின்றன.
3. மத்திய, தரைக்கடல் காடுகள் :
குளிர்காலங்களில் அதிக மழைப்பொழிவு (ஆண்டுக்கு 1000 மி.மீ க்கு குறைவு)
4. மிதவெப்ப மண்டல ஊசியிலைக் காடுகள் :
மிதமான குளிர்காலம், அதிகமான மழைப்பொழிவு.
5. மித வெப்ப மண்டலம் அகன்ற இலை மழைக்காடுகள் :
மிதமான, உறைபனியற்ற குளிர்காலம், ஆண்டு முழுவதும் சீராகப் பெய்யும் அதிக அளவு மழைப்பொழிவு.
10.
ஒவ்வொரு உயிரினமும் அதன் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப வினைபுரிகின்றன. உயிரினங்கள் பல்வேறு வகைகளில் உயிரற்ற காரணிகளுக்கேற்ப துலங்கல்களை வெளிப்படுத்துகின்றன. சில உயிரினங்கள் மாறாத உடல் செயலியில் மற்றும் புறத்தோற்ற நிலைகளைப் பராமரிக்கின்றன. சில உயிரினங்கள் சுற்றுச்சூழல் மாற்றங்களைத் தாங்கிக் கொள்வதற்கான செயல்களைச் செய்கின்றன. இதுவும் ஒரு துலங்கல் வினையாகக் கருதப்படும்.
விலங்குகளில் உள்ள துலங்கல்களின் வகைகள்:
i) ஒழுங்கமைவு:
சில விலங்கினங்கள் உடற்செயலியல் செயல்கள் மூலம் சீரான தன்நிலை காத்தலைப் பராமரிக்கின்றன அச்செயல்பாடுகள் வழியாக உடலின் வெப்பநிலை, அயனிகள், ஊடுகலப்பு சமன் ஆகியவை உறுதி செய்யப்படுகின்றன.
எ.கா: பறவைகள், பாலூட்டிகள் மற்றும் சில எளிய முதுகுநாணிகள், மற்றும் முதுகு நாணற்ற சிற்றினங்கள்.
ii) ஒத்தமைவு:
பெரும்பாலான விலங்குகளால் உள்சூழ்நிலைகளை நிலையாகப் பராமரிக்க முடிவதில்லை. அவற்றின் உடல் வெப்பநிலை சுற்றுசூழல் வெப்பநிலைக்கேற்ப மாறுகிறது. மீன்கள் போன்ற நீர்வாழ் உயிரிகளில், உடல் திரவத்தின் ஊடுகலப்புச் செறிவு சுற்றுச்சூழலில் உள்ள நீரின் ஊடுகலப்புச் செறிவிற்கேற்ப மாற்றமடைகிறது.
இத்தகைய விலங்குகள் ஒத்தமைவான்கள் எனப்படும். அதீத சூழல்களில் விலங்கினங்கள் வலசை போவதன் மூலம் தங்களின் வாழிடங்களை இடம் மாற்றிக் கொள்கின்றன.
iii) வலசை போதல்:
ஒரு வாழிடத்தில் வாழும் விலங்குகள் அங்கு வாழும் அதிக சூழல் அழுத்தத்திலிருந்து தப்பிக்க, இடம்பெயர்ந்து அதன் வாழிடத்தில் சூழல் அழுத்தம் நீங்கும்போது அவை மீண்டும் தனது பழைய இடத்திற்கு வருகின்றன.
சைபீரியாவில் வாழும் பறவைகள் கடுங்குளிர் பருவத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வலசை போதல் முறையில் இடம்பெயர்ந்து தமிழ்நாட்டின் வேடந்தாங்கல் பகுதிக்கு வருகின்றன.
iv) செயலற்ற நிலை:
சில சமயம், விலங்கினங்கள் இடம்பெயர்ந்து செல்ல இயலாத சூழலில் சூழல் அழுத்தத்திலிருந்து விடுபட செயலற்ற நிலைத்தன்மையை மேற்கொள்கின்றன. சில கரடிகள் குளிர்காலங்களில் குளிர் உறக்கத்தையும், சில நத்தைகள் மற்றும் மீன்கள் போன்றவை வெப்பம் மற்றும் வறட்சி போன்ற வெப்பம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து விடுபட கோடைகால உறக்கத்தையும். மேற்கொள்கின்றன. சில எளிய வகை உயிரினங்கள் அதன் வாழ்க்கை சுழற்சியின் சில நிலைகளை இடைநிறுத்தம் செய்து கொள்கின்றன. இது "வளர்ச்சித் தடை நிலை" எனப்படும்.
11.
நன்கு வளர்ச்சி பெற்ற மூச்சுக்குழல் மண்டலம், ஏனெனில் இது நிலவாழ் விலங்குகளின் தகவமைப்பாகும். மற்ற அனைத்தும் நீர்வாழ் விலங்குகளின் தகவமைப்புகளாகும்.
12.
கடாட்ரோமஸ் வலசை போதல் - உறிஞ்சு மீன் மற்றும் சுறா மீன்
13.
நீர் உயிர்த்தொகை - உயிர்க்கோளத்தில் 21%
14.
( )
வலசை போதல்
15.
வளிமண்டலத்தில் உள்ள கண்ணுக்குப் புலப்படாத நீராவியினால் ஏற்படும் ஈரம், ஈரப்பதம் எனப்படும்.
வகைகள்:
(i) முழுமையான ஈரப்பதம் மற்றும்
(ii) ஒப்புமை ஈரப்பதம்
முழுமையான ஈரப்பதம் மற்றும்:
குறிப்பிட்ட கொள்ளளவு பொருண்மை, அளவுள்ள காற்றில் உள்ள ஒட்டு மொத்த நீராவியின் பொருண்மை முழுமையான ஈரப்பதம் எனப்படும். இதில் வெப்பநிலை கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
ஒப்புமை ஈரப்பதம் :
காற்றின் உள்ள நீராவியின் அளவு ஒப்புமை ஈரப்பதம் எனப்படும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் காற்றில் உள்ள ஈரப்பதம் தெவிட்டு நிலையை அடைய தேவைப்படும் நீராவியின் அளவை விழுக்காட்டில் குறிப்பதே ஒப்புமை ஈரப்பதம் அதன் விழுக்காட்டில் குறிக்கப்படுகிறது.
16.
கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
17.
நிறம் மாறும் விலங்குகள் சுற்றுச்சூழலின் நிறத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதால் அவற்றை எளிதாகக் கண்டறிய முடியாது.
18.
அ) வடக்கு தூந்திரக் குழிமுயல் லிபுஸ் அல்லெனி தெற்குப் பகுதியில் வாழும், பாலைவன ஜாக் முயல் லாஸ் ஆர்டிக்ஸ் வரை, முயல்களின் உடலில் எல்லைப்பகுதி உறுப்புகள் நீளமாக மாறும், உடல் மெலிவடையும்.
இ) மகரந்தத் துகள்கள் மற்றும் விதைப் பரவுதலைத் தடுக்கும் ஒரு காரணியாக காற்று செயல்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards