12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
தாவரவியல் - தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
மூடிய மலர் மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன?
2.
ஹைப்போஸ்டேஸ், எப்பிஸ்டேஸ் வேறுபடுத்துக?
3.
கேரட் கிராஸ் பற்றி விளக்குக?
4.
எக்சைன், இன்டைன் வேறுபடுத்துக?
5.
யுபிஷ் உடலங்கள் என்றால் என்ன?
6.
பாலினப் பெருக்கத்தில் கேமிட்களின் 3 வகை இணைவு முறைகள் எவை?
7.
திசு வளர்ப்பு என்றால் என்ன?
8.
மண்முட்டு பதியம் மற்றும் காற்று பதியம் வேறுபடுத்துக.
9.
தாவர கருவியலின் மைல்கற்களை வெளிக்கொணர்க.
10.
தகுந்த எடுத்துக்காட்டுடன் இரண்டு தரைஒட்டிய தண்டின் மாற்றுருக்களைப் பட்டியலிடுக.
1.
சில தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை மலர் திறக்காமலும், அவற்றின் இன உறுப்புகள் வெளிப்படையாமலும் இருக்கின்றன. இம்மலர்கள் மூடிய மலர்கள். இந்நிகழ்ச்சி மூடிய மலர் மகரந்தச் சேர்க்கை (Cleistogamy) எனப்படும்.
2.
| ஹைப்போஸ்டேஸ் | எப்பிஸ்டேஸ் |
| இது சூலின் அடிப்பகுதியில், சலாசாவுக்கும், கருப்பைக்கும் இடையே உள்ள செல்தொகுப்பு | இது சூல்துளைக்கும், கருப்பைக்கும் இடையே உள்ள தடித்த சுவருடைய செல்கள் |
3.
1. பார்த்தீனியம் ஹிஸ்டிரோபோரஸ், கேரட் கிராஸ் எனப்படும்.
2. வெப்ப மண்டல அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்டது.
3. கோதுமை தானியத்துடன், கலப்படமான இந்தியாவுக்கு வந்தது.
4. இதன் மகரந்தத்துகள் ஒவ்வாமை ஏற்படுத்தும்.
4.
| எக்சைன் | இன்டைன் | |
| 1 | இது மகரந்ததுகளின் வெளிப்புற அடுக்கு | இது மகரந்ததுகளின் உட்புற அடுக்கு |
| 2 | தடித்தது | மெல்லியது |
| 3 | சீரற்ற தடிப்பு | சீரான தடிப்பு |
| 4 | செல்லுலோஸ், ஸ்போரோபொலினின் | பெக்டின், ஹெமிசெல்லுலோஸ், காலோஸ், புரதங்கள் கொண்டது. |
5.
யுபிஷ் உடலங்கள் மூலம், ஸ்போரோபொலினின் உற்பத்திக்கு டபீட்டம் உதவுகிறது. இவ்வாறாக மகரந்தச் சுவர் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
6.
ஒத்த கேமிட்டுகளின் இணைவு, சமமற்ற கேமிட்டுகளின் இணைவு, முட்டைக் கருவுறுதல்.
7.
தகுந்த கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், தாவரத் திசுக்களை தனிப்பட்ட வளர்ப்பு ஊடகத்தில் வளர்க்கும் முறை திசு வளர்ப்பு (Tissue culture) எனப்படும்.
8.
| மண்முட்டு பதியம்(Mound Layering) | காற்றுப் பதியம் (Air Layering) | |
| 1 | அடிக்கிளை வளைத்து தரையில் புதைக்கப்படும் | தண்டின் கணுப்பகுதி செதுக்கப்படும். |
| 2 | வேர் தோன்றிய பின் பெற்றோர் தாவரத்தினின்று வெட்டப்பட்டு தனித்தாவரமாக வளர்கிறது. | சேர்க்கப்படும் வளர்ச்சி ஹார்மோன் வேரை உருவாக்கும். |
| ஈரமான மண், பாலிதீன் பையால் மூடப்படும். | ||
| 2-4 மாதத்திற்கு பின் வேர் தோன்றிய கிளைகள் தனியாக வளர்க்கப்படும். | ||
9.
1682 நெகமியா குரூ - மலரின் ஆண் உறுப்பை மகரந்தத்தாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
1694 R.J. கேமராரியல் - மலர், மகரந்தப்பை, மகரந்தத்துகள் மற்றும் சூல் அமைப்பு பற்றி விவரித்துள்ளார்.
1761 J.G கோல்ரூட்டர் - மகரந்தச் சேர்க்கையில் பூச்சிகளின் முக்கியத்துவம் பற்றி விரிவாக தொகுப்பு தந்துள்ளார்.
1824 G.B அமிசி - மகரந்தக் குழாயைக் கண்டறிந்தார்.
1848 ஹாப்மீஸ்டர் - நான்மய மகரந்தத்துகள் (pollen tetrad) அமைப்பு பற்றி விளக்கியுள்ளார்.
1870 ஹான்ஸ்டீன் - கேப்செல்லா மற்றும் அலிஸ்மா தாவரங்களில் கரு வளர்ச்சி பற்றி விவரித்துள்ளார்.
1878 E. ஸ்ட்ராஸ்பர்கர் - பல்கரு நிலையை பதிவு செய்துள்ளார்.
1884 E. ஸ்ட்ராஸ்பர்கர் - கேமீட்களின் இணைவைக் கண்டறிந்தார்.
1898 & 1899 S.G. நவாஷின் மற்றும் L. கினார்டு இருவரும் தனித்தனியாக இரட்டைக் கருவுறுதலைக் கண்டுபிடித்தனர்.
1904 E. ஹேன்னிங் - செயற்கை முறையில் கரு வளர்ச்சியை தொடங்கினார்.
10.
1. மட்டநிலத்தண்டு (மியூசா பாரடிசியாக்கா)
2. தரையடிக்கிழங்கு (கொலகேஸியா)
3. கிழங்கு (சொலானம் டியூபராசம் )
4. குமிழ்த்தண்டு (அல்லியம் சீப்பா)
5. ஓடு தண்டு (சென்டெல்லா ஏசியாட்டிகா)
6. வேர் விடும் ஓடுதண்டு (மென்தா)
7. நீர் ஓடு தண்டு (ஐக்கார்னியா)
8. தரை கீழ் தண்டு (கிரைசான்திமம்)
9. சிறு குமிழ் மொட்டு (அகேவ்)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards