12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/08/2019
தாவரவியல் - குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
மறுகூட்டிணைவு நிகழ்விரைவு 0.09 என இருந்தால், A மற்றும் B என்ற இரு அல்லீல்களை பிரிக்கும் வரைபட அலகு எதுவாக இருக்கும்?
900 cM
90 cM
9 cM
0.9 cM
2.
மரபுக்குறியீடு AGC யானது AGA வாக மாற்றமடையும் நிகழ்வு ______.
தவறுதலாகப் பொருள்படும் சடுதிமாற்றம்
பொருளுணர்த்தாத சடுதிமாற்றம்
கட்ட நகர்வு சடுதிமாற்றம்
நீக்குதல் சடுதிமாற்றம்
3.
புள்ளி சடுதிமாற்றத்தால் DNA வின் வரிசையில் ஏற்படும் ஒத்த பதிலீடு, ஒத்த பதிலீடு வேறுபட்ட பதிலீடு, வேறுபட்ட பதிலீடு முறையே _______.
A ⟶ T, T ⟶ A, C ⟶ G மற்றும் G ⟶ C
A ⟶ G, C ⟶ T, C ⟶ G மற்றும் T ⟶ A → W
C ⟶ G, A ⟶ G, T ⟶ A மற்றும் G ⟶ A
G ⟶ C, A ⟶ T, T ⟶ A மற்றும் C ⟶ G
4.
மக்காச்சோளத்தில் முழுமையற்ற பிணைப்பின் காரணமாக, பெற்றோர் மற்றும் மறுகூட்டிணைவு வகைகளின் விகிதங்கள் _______.
50:50
7 :1: 1:7
96.4: 3.6
1 :7 :7 :1
5.
ஒரு அயல் அறுமடியம் கொண்டிருப்பது ____.
ஆறு வேறுபட்ட மரபணுத்தொகையம்
மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையம் ஆறு நகல்கள்
மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையத்தின் இரண்டு நகல்கள்
ஒரு மரபணுத்தொகையத்தின் ஆறு நகல்கள்
6.
பிணைதலின் பலம் & பலமற்ற தன்மை யாது?
7.
மோனோபிளாய்டி & ஹாப்ளாய்டி வேறுபடுத்தி
8.
இணை சடுதி மாற்றிகள் (Co-mutagens) என்றால் என்ன?
9.
தொல்லுயிர் எச்ச மரபணுக்கள் என்றால் என்ன?
10.
ஒரே பெற்றோரிடமிருந்து பெறப்படும் வேறுபட்ட மரபணுக்கள் ஒன்றாகவே காணப்படும் பொழுது,
i) நிகழ்வின் பெயர் என்ன?
ii) தகுந்த எடுத்துக்காட்டுடன் கலப்பினை வரைக .
iii) புறத்தோற்ற விகிதத்தை எழுதுக.
i) எந்த வகையான பிணைப்பை காணமுடியும்
ii) சரியான மரபணு வகைய கலப்பினை வரைக .
iii) F2 சந்ததியின் சாத்தியமான மரபணு வகையம் என்ன?
11.
மறு சேர்க்கை என்பதை வரையறு
12.
பைவேலண்ட் டெட்ரடு வேறுபடுத்து
13.
குறுக்கேற்றம் மற்றும் பரிமாற்ற இடம் மாறுதல் வேறுபடுத்துக.
14.
மூலக்கூறு அடிப்படையிலான DNA மறுகூட்டினைவு செயல்முறையில் பங்குபெறும் படி நிலைகளைப் படத்துடன் எழுதுக.
15.
குறுக்கேற்ற செயல்முறையை விளக்குக.
16.
இரு ஒடுங்கு தன்மையுள்ள ஆட்டோசோம் மரபணுக்கள் a மற்றும் b உடைய வேறுபட்ட காரணி நிலை -ஒரு இரு இணை ஒடுங்கு பெற்றோரோடு கலப்பு செய்யப்படுகிறது அவற்றிற்கான புறத்தோற்ற விகிதத்தை பின் வரும் சூழலில் கண்டறி.
17.
இடம்பெயர்தல் - விளக்கு
18.
மனிதனால் உருவாக்கப்பட்ட தானியத்தின் பெயரை எழுதுக. இது எவ்வாறு உருவாக்கப்படுகிறது.
19.
2ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வேதி ஆயுதம்
20.
டிரோசோபிலாவில் சடுதிமாற்றத்தை முதன்முதலில் கண்டறிந்தவர்
21.
செல்லில் காணப்படும் குரோமோசோம்களே பாரம்பரியப் பண்புகளை கடத்துவதற்குக் காரணம் என்றவர்
22.
செல் பிரித்தலின் போது செல்லில் காணப்பட்ட புழுக்கள் போன்ற அமைப்புகள் __________ எனப்படும்.
23.
மென்டலின் ஆய்வுகளை மறுபடி கண்டறிந்தவர்கள் _______
1.
(c)
9 cM
2.
(a)
தவறுதலாகப் பொருள்படும் சடுதிமாற்றம்
3.
(b)
A ⟶ G, C ⟶ T, C ⟶ G மற்றும் T ⟶ A → W
4.
(b)
7 :1: 1:7
5.
(c)
மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையத்தின் இரண்டு நகல்கள்
6.
1. பிணைதலில் மரபணுக்களுக்கிடையேயான தூரம் குறைய குறைய பிணைதலின் பண்பு அதிகரிக்கும்
2 பிணைதலின் தன்மை - மரபணுக்களுக்கிடையேயான தூரம் அதிகரிக்க அதிகரிக்க பிணைதலின் பலம் அதிகரிக்கும்
7.
| மோனோபிளாய்டி | ஹாப்ளாய்டி |
| இதில் குரோமோசோம் எண்ணிக்கை X -எனக் குறிப்பிடப்படுகிறது எ.கா. ஹெக்ஸாபிளாய்ட் கோதுமை 2n =6x=72 ஹாப்ளாய்ட் =(n)=36 மோனோபிளாய்டி =X=12 |
உடல் குரோமோசோம்களின் பாதி எண்ணிக்கை - கேமிட் குரோமோசோம் எண்ணிக்கை -இதுவே ஹாப்ளாய்டி அல்லது n எனப்படும். மனித ஹாப்ளாய்ட் எண்ணிக்கை =23(n) கோதுமை ஹாப்ளாய்ட் =36(n) |
8.
சில வேதியியல் சேர்மங்கள் அதற்குரிய சடுதிமாற்றம் பண்புகளைப் பெற்றிருக்காமல் மற்ற சடுதி மாற்றிகளோடு சேர்ந்து அதன் திறனை அதிகரித்தால் அவை இணை சடுதி மாற்றிகள் என்று அழைக்கப்படுகிறது.
எ.கா. அஸ்கார்பிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைடு மூலம் ஏற்படும் பாதிப்பை அதிகப்படுத்துகிறது. காஃபின், மெத்தோட்ரெக்ஸேட்டின் நச்சுத்தன்மையை அதிகமாக்குகிறது.
9.
1. விரைவாகக் கூடிய சில DNA-க்கள் பொய்யான மரபணுக்களால் உருவகிக்கப்படுகின்றன.
2. இத்தகைய மரபணுக்கள், கடந்த காலங்களில் உயிரோட்டத்துடன் செயல்பட்டவைகள் -ஆனால் தற்போது புரதம் உருவாக்கும் தன்மையை இழந்துவிட்டவை
3. இவை பரிணாமத்திற்கான வரலாற்றைக் கூறுகிறது.
10.
இந்த நிகழ்வின் பெயர் பிணைதல் இது பட்டாணி (லாத்திரஸ் ஒடோரேடஸ்) தாவரத்தில் வில்லியம் பேட்சன் மற்றும் ரெஜினால்ட் சி-புன்னெட் ஆகியோர்களால் 1906-இல் கண்டறியப்பட்டது, ஒரே ஒத்திசைவு குரோமோசோம்களில் காணப்படும் இரு ஓங்குதன்மை அல்லீல்கள் (அ) ஒடுங்குதன்மை அல்லீல்கள் ஒரே கேமிட் மூலம் ஒன்றாகவே மரபு வழி அடைந்தால் இணைப்பு (அ) சிஸ்வகை எனப்படும்.
அதே நேரம் இதே தன்மையுடைய அல்லீல்கள் குலல்வேறு குரோமோசோம்களில் அமைந்து வேறுபட்ட கேமிட்கள் மூலம் தனியாகவே மரபுவழி அடைந்தால் அதற்கு விலகல் (அ) டிரான்ஸ்வகை என்று பெயர்.
இவையிரண்டும் பிணைப்பின் இரு கூறுகளாகும்.

11.
குறுக்கேற்றத்தின் போது உருவாகும் கயாஸ்மா புள்ளிகளில் குரோமோடிடுகள் துண்டாகி மீண்டும் மறு இணையும் நடைபெறுகிறது - இந்த பரஸ்பர துண்டுகள் பரிமாற்றத்தினால் புதிய மறு சேர்க்கை உருவாகிறது.
12.
| வ.எண் | பைவேலண்ட் (அ) இரட்டை இணை | டெட்ரடு (அ) நான்கமை நிலை |
| 1 | ஒத்திசைவு குரோமோசோம்கள் ஒன்றுக்கொன்று நெருங்கி அமைவதால் தோன்றும் ஒரு இணை -இரட்டை இணை |
இரட்டை இழையில் உள்ள ஒவ்வொரு ஒத்திசைவு குரோமோசோமும் இரண்டு ஒத்த அமைப்புடைய சகோதரி குரோமாடிட்டுகளை உருவாக்கத் தொடங்குகிறது. |
| 2 | ஒத்திசைவான குரோமோசோம்களின் சகோதரி அல்லாத குரோமோசோம்களுக்கிடையே நடைபெறுகிறது | இது ஒரு சென்டிரோமியர் உடைய நிலையில் நான்கு குரோமாடிட்டுகளாகத் தெரிவதால் இது நான்கமை நிலை எனப்படுகிறது. |
13.
| வ.எண் | குறுக்கேற்றம் | பரிமாற்ற இடம் பெயர்தல் |
| 1 | இது இயல்பானது | இது முறையற்ற குறுக்கேற்றம் (குரோமோசோம் அமைப்புப் பிறழ்ச்சி) |
| 2 | ஒத்திசைவான குரோமோசோம்களின் சகோதரி அல்லாத குரோமோசோம்களுக்கிடையே நடைபெறுகிறது. | ஒத்திசைவு அல்லாத குரோமோசோம்களின் சகோதரி அல்லாத குரோமாடிடுகளுக்கிடையே நடைபெறுகிறது. |
14.
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறுக்கேற்றத்தின்போது உருவாகும் DNA மறு கூட்டிணைவு மாதிரி ஹாலிடேவின் கலப்பு மாதிரியாகும்.
1964ல் ராபின் ஹாலிடே என்பவரால் முன்மொழியப்பட்டது
படிநிலைகள்:
1. ஒத்திசைவு DNA மூலக்கூறுகள் அதன் இரட்டிப்படைந்த DNA பிரதிகளுடன் அருகமைந்து இணை சேர்கிறது.
2. DNA வின் ஒரு இழை எண்டோநியூக்ளியேஸ் நொதி மூலம் துண்டிக்கப்படுகிறது.
3. துண்டான இழைகள் குறுக்கமைந்து ஒத்திசைந்த இழையுடன் இணைந்து ஹாலிடே சந்திப்பு உருவாகிறது.
4. இது தோன்றிய இடத்திலிருந்து இடம் பெயர்கிறது. இது கிளை இடப்பெயர்வு - எனப்படுகிறது.
5. வேற்றமைந்த ஈரிழைபகுதி உருவாகிறது
6. DNA இழைகள் துண்டிக்கப்படுத்தல் V வழியாக கிடைமட்ட மாதிரி (H வழியாக) செங்குத்தான துண்டிப்பு நிகழ்ந்தால் மறுகூட்டிணைவுடன் கூடிய வேற்றமைந்த ஈரிழை உருவாகும்.
7. கிடைமட்டத்துண்டிப்பு -நிகழ்ந்தால் மறு கூட்டிணைவு அற்ற வேற்றமைந்த ஈரிழை உருவாகும்.
15.
ஒத்திசைவு குரோமோசோம் இணைகளின் சகோதரி அல்லாத குரோமோடிட்களுக்கிடையே இணையான துண்டுகள் பரிமாற்றப்பட்டு புதிய மரபணு சேர்க்கை தோன்றும் உயிரிய நிகழ்விற்குக் குறுக்கேற்றம் என்று பெயர்.
இதில் பல நிலைகளை உடையது
1) இணை சேர்தல்
2) நான்கமை உருவாதல்
3) குறுக்கேற்றம் மற்றும் முடிவுறுதல்
i) இணை சேர்தல்:
புரோபேஸ் 1 இன் சைக்கோட்டின் நிலையில் இரண்டு ஒத்திசைவு குரோமோசோம்களுக்கிடையே நெருங்கிய இணை உருவாகிறது.
இது இரட்டை இணை (அ) பைவாலண்ட், இது இணைசேர்தல் (அ) சினாப்சிஸ் என்று பெயர் இணைதல் தொடங்குவதைப் பெருத்து 3 வகைப்படும்.
1. மையம் தொடங்கி இணைசேர்தல்
2. நுனி தொடங்கி இணைசேர்தல்
3. இடையிலா இணை சேர்தல்
ii) நான்கமை உருவாதல்:
இரட்டை இலையில் -இரண்டு ஒத்த அமைப்புடைய சகோதரி குரோமாடிட்களை உருவாகத் தொடங்குகிறது - இதில் நான்கு குரோமோடிடுகளைப் பெற்றிருக்கிறது -நான்கமை நிலை என்று
iii) குறுக்கேற்றம்:
பாக்கிடீன் நிலையில் குறுக்கேற்றம் நிகழ்கிறது-
ஒத்திசைவு குரோமோசோம்களின் சகோதரி அல்லாத குரோமோடிடுகளுக்கிடையேே இணைவுப்புள்ளிகள் (கயாஸ்மாக்கள்)- எனும் (X) வடிவ அமைப்பு உருவாகிறது. இவற்றில் குரோமோடிடுகள் உடைந்து துண்டுகள் பரஸ்பரம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
1) அண்மைக்கால ஆய்வு: மேம்படுத்தப்பட்ட இழை அமைப்பு கொண்ட இணை பிணைப்புக் கூட்டமைப்பு -இணைசேர்தல் (அ) கயாஸ்மா தோன்றுதலுக்கு வழி வகுக்கிறது. (விதி விலக்கு - சில ஆண் டுரோசோஃபிலா வில் இணைப்பிணைப்புக் கூட்டமைப்பு உருவாவதில்லை)
iv) முடிவுறுதல்:
குறுக்கேற்றத்தின் பின் கயாஸ்மாவானது குரோமாடிட்களின் நுனிப்பகுதியை நோக்கி நகர்கிறது இது முடிவுறுத்தல் எனப்படுகிறது. ஒத்திசைவு குரோமோசோம்கள் முழுமையாகப் பிரிகிறது.
16.
அ) a மற்றும் b வெவ்வேறு ஆட்டோசோம்களில் காணப்படுகிறது.
ஆ) a மற்றும் b ஒரே ஆட்டோசோமில் பிணைந்து காணப்பட்டாலும் அவை குறுக்கேற்றம் நிகழ ஏதுவாக உள்ளது.
இ) a மற்றும் b ஒரே ஆட்டோசோமில் நெருங்கி பிணைந்து காணப்படுவதால் - அவற்றிற்கிடையே குறுக்கேற்றம் நடைபெறும் வாய்ப்பு இல்லை.
இதைப் புரிந்து கொள்ள பிணைப்பு, குறுக்கேற்றம் மற்றும் சார்பின்றி ஒதுங்குதல் காணப்படுகிறது.
a) F2 ஜீனாக்கம் மற்றும் புறத்தோற்ற விகிதம்
AaBb : Aabb : aaBb : aabb
1 : 1 : 1 : 1
b) குறுக்கேற்றம் நடத்தாலும் அதே முடிவுகளே கிடைக்கின்றன.
F2 ஜீனாக்கம் மற்றும் புறத்தோற்ற விகிதம்
AaBb : Aabb : aaBb : aabb
1 : 1 : 1 : 1
c) a மற்றும் b பிணைப்பு -குறுக்கேற்றம் இன்றி நடைபெறும் போது - வேறுபட்ட காரணி நிலை பெற்றோர் AB/ab -(அ) Ab/aB (டிரான்ஸ்)
மறுசேர்க்கை கேமிட்கள் உருவாகவில்லை - குறுக்கேற்றம் நடைபெறவில்லை
அது Ab &aB (50% ஒவ்வொன்றும்)
சோதனைக் கலப்பு
17.
ஒத்திசைவு அல்லாத குரோமோசோம்களுக்கிடையே நடைபெறும் துண்டுகள் பரிமாற்றம் இடம்பெயர்தல் எனப்படும்.
இது குறுக்கேற்றம் எனும் இயல்பான நிகழ்வுக்கு எதிரான குரோமோசோம் அமைப்பு பிறழ்ச்சி
வகைகள்
எளிய இடம் பெயர்தல்
நகர்வு இடம் பெயர்தல்
பரிமாற்ற இடம் பெயர்தல்
1. எளிய இடம் பெயர்தல்
ஒரு குரோமோசோமில் பிளவு ஏற்படுகிறது பிளவுபட்ட துண்டு ஒத்திசைவு அல்லாத குரோமோசோமின் ஒரு முனையில் இணைகிறது.
2. நகர்வு இடம் பெயர்தல்
இது முந்தியத்தைப் போன்றது ஆனால் இடைச்செருகல் நடைபெறுகிறது.
3. பரிமாற்ற இடம் பெயர்தல்
பரஸ்பர துண்டுகள் பரிமாற்ற ஒத்திசைவு அல்லாத குரோமோசோம்களுக்கிடையே என்பதால் இதனை முறையற்ற குறுக்கேற்றம் எனலாம்.
ஒத்த பண்பிணைவு இடம் பெயர்தல்
இடம் பெயர்தலில் இரண்டு இணைகளின் இரண்டு குரோமோசோம்களும் பங்கு கொள்கின்றன. ஒத்திசைவு குரோமோசோம்களின் இடம்பெயர்தல் பகுதி ஒரே மாதிரி இருக்கும்
மாற்றுப் பண்பிணைவு இடம் பெயர்தல்
ஒவ்வொரு இணை ஒத்திசைவு குரோமோசோம்களின் ஒரே ஒரு குரோமோசோம் மட்டும் இதில் பங்கு கொள்கிறது. மற்ற ஒரு குரோமோசோம் இயல்பான நிலையில் உள்ளது. சிற்றின உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
18.
மனிதனால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தானியம் ட்ரிட்டிகேல். அறிமுக ட்ரிட்டிகேல் மக்ரோனி கோதுமை மற்றும் ரை -தாவரப் பண்புகளைக் கொண்டிருக்கும் (கோதுமையின் புரதத்தன்மையும் + ரை தாவரத்தின் அதிக அமினோ அமில லைசினையும் பெற்றுள்ளது.

19.
( )
மஸ்டர்டு வாயு (Dichloroethyl Sulphide)
20.
( )
முல்லர் (1927)
21.
( )
வில்ஹெல்ம் ரூக்ஸ்
22.
( )
குரோமோசோம்கள்
23.
( )
டி.விரிஸ், கோரன்ஸ் மற்றும் செர்மார்க்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards