12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 12/08/2019
தாவரவியல் - பாரம்பரிய மரபியல்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
ஒரு குரோமோசோமின் ஒரு மரபணுவின் ஒரு நியூக்ளியோடைடில் ஏற்படும் மாற்றம்
சடுதி மாற்றம்
பாரம்பரியவியல்
பாரம்பரிய
வளர்ச்சி
2.
ஒரு உயிரினத்தைக் கொல்லும் திறனுடைய அல்லீல் ________ எனப்படும்
மரபணு இடைச்செயல்
லீத்தல் அல்லீல்கள் / மரபணுக்கள்
முது மரபு மீட்சி
ஆட்டிசம்
3.
மெண்டலின் பாரம்பரிய விதி சார்ந்திருக்கும் கருதுகோள்
துகள் கோட்பாடு
மாஸ்கள்
கலப்புயிரியாக்கல்
வேறுபாடுகள் கருதுகோள்
4.
இரண்டுக்குரிய மரபணுக்கள் காணப்பட்ட போது ஒரு பண்பானது மற்றொரு பண்பினை மறைத்தல் ______ எனப்படும்
வேறுபாடு
ஒடுங்கியது
இணை ஓங்கு தன்மை
ஓங்கு தன்மை
5.
வேறுபாடு என்பது ஒரு உயிரினத்தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவு வேறுபாடுகளுடன் காணப்படும் பண்புகளாகும்
வேறுபாடுகள்
தொடர்ச்சியற்ற வேறுபாடுகள்
தொடர்ச்சியான வேறுபாடுகள்
ஒடுங்கிய வேறுபாடுகள்
6.
கீழ்க்காணும் பண்புகளுள் எவற்றை மெண்டலின் பட்டாணி ஆய்வுகளில் கருத்தில் கொள்ளவில்லை?
தண்டு – நெட்டை அல்லது குட்டை
சுரக்கும் வளரி அல்லது சுரக்க இயலாத வளரி
விதை – பச்சை அல்லது மஞ்சள்
கனி – உப்பிய அல்லது இறுக்கிய
7.
மெண்டலின் ஆய்வில் பட்டாணித் தாவரத்தின் ஏழு பண்புகளைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் எத்தனை குரோமோசோம்களில் காணப்படுகின்றன?
ஏழு
ஆறு
ஐந்து
நான்கு
8.
மெண்டலின் காலத்தில் எந்தச் சோதனையில் F1 சந்ததியின் இரு பெற்றோரின் பண்புகளையும் வெளிப்படுத்தும்?
முழுமைபெறா ஓங்குத்தன்மை
ஓங்கு வழி
ஒரு மரபணுவின் பாரம்பரியம்
இணை ஓங்குத்தன்மை
9.
சோதனைக் கலப்பு உள்ளடக்கியது
இரு மரபணுவாக்கங்கள் ஒடுங்கிய பண்புடன் கலப்புறுதல்
F1 கலப்பினங்களிடையே நடைபெறும் கலப்பு
F1 கலப்புயிரியுடன் இரு ஒடுங்கு மரபணுவகையம் கொண்டவைகளின் கலப்பு
இரு மரபணுவாக்க வகையங்களுடன் ஓங்கு பண்பு கலப்பு
10.
மரபுசாராப் பாரம்பரியம் வரிசையில் காணப்படும் மரபணுக்களைக் கொண்டது.
மைட்டோகாண்ட்ரியா மற்றும் பசுங்கணிகங்கள்
எண்டோபிளாச வலைப்பின்னல் மற்றும் மைட்டோகாண்ட்ரியா
ரிபோசோம்கள் மற்றும் பசுங்கணிகம்
லைசோசோம்கள் மற்றும் ரிபோசோம்கள்
11.
பல காரணியப் பாரம்பரியத்தில் R - மரபணுவின் செயலை விவரி (கோதுமையின் விதையுரையின் நிறம்)
12.
F2 சந்ததி என்றால் என்ன?
13.
மரபணு வகையகம் என்றால் என்ன?
14.
உண்மை பெருக்கம் அல்லது தூய்கால்வழிப் பெருக்கம் வழி / கூறுகள் என்றால் என்ன?
15.
மெண்டலின் ஏழு வேறுபட்ட பண்புகளைக் கூறுக.
16.
சைட்டோபிளாச மரபுவழிப் பாரம்பரியம் என்றால் என்ன?
17.
முழுமைபெறா ஓங்குத்தன்மை மற்றும் இணை ஓங்குத்தன்மையை வேறுபடுத்துக.
18.
ஒரு பண்புக் கலப்பு அடிப்படையில் ஓங்குதன்மை விதியை விளக்குக.
19.
மெண்டலின் பெருக்கச் சோதனை வெற்றிக்கான காரணங்கள் யாவை?
20.
பல்கூட்டு அல்லீல்கள் என்றால் என்ன?
21.
பசுங்கணிக மரபணு சார்ந்த பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் வெளிக்கொணர்க.
22.
23.
ஓங்கு மறைத்தலை எடுத்துக்காட்டுடன் விவரி.
1.
(a)
சடுதி மாற்றம்
2.
(b)
லீத்தல் அல்லீல்கள் / மரபணுக்கள்
3.
(a)
துகள் கோட்பாடு
4.
(d)
ஓங்கு தன்மை
5.
(c)
தொடர்ச்சியான வேறுபாடுகள்
6.
(b)
சுரக்கும் வளரி அல்லது சுரக்க இயலாத வளரி
7.
(a)
ஏழு
8.
(d)
இணை ஓங்குத்தன்மை
9.
(c)
F1 கலப்புயிரியுடன் இரு ஒடுங்கு மரபணுவகையம் கொண்டவைகளின் கலப்பு
10.
(a)
மைட்டோகாண்ட்ரியா மற்றும் பசுங்கணிகங்கள்
11.
(i) 4 - R மரபணுக்கள் - மிகுந்த அடர் சிவப்பு நிறத்தை உருவாக்கின
(ii) 3 - R மரபணுக்கள் - மிதமான சிவப்பு நிறத்தை உருவாக்கின
(iii) 2 - R மரபணுக்கள் - மிதமான சிவப்பு
(iv) 1 - R மரபணுக்கள் - இளஞ்சிவப்பு
(v) R மரபணு அற்ற நிலை - வெள்ளை
| சிவப்பு | வெள்ளை | |
| 15 | : | 1 |
12.
F1 சந்ததியை தற்கருவுறுதலுக்கு உட்படுத்தி அதன் மூலம் பெறும் 2ம் மகவு சந்ததிக்கு F2 சந்ததி என்று பெயர்
13.
ஒரு பண்புக்குரிய மரபணுக்கள் மரபணு வகையகம் எனப்படும்
14.
(i) தொடர்ந்து தற்கலப்பு செய்யும் போது (அல்லது) தன் மகரந்தச் சேர்க்கைக்கு போது, தொடர்ந்து ஒரே புறத்தோற்ற பண்புள்ள தாவரங்களை உருவாக்குவதற்கு உண்மைப் பெருக்கம் (அல்லது) தூய கால் வழிப் பெருக்கம் என்று பெயர்.
(ii) இவை பெற்றோர் பண்பைக் கொண்டிருப்பதால் (ஹோமோசைகஸ்) எனப்படும்.
(iii) இதனால் ஒத்த புற, ஜீனாக்கம் கொண்ட தாவரங்களை உருவாக்குவதால், இதற்கு தூய கால் வழிப் பெருக்கம் என்று பெயர்.
15.
16.
(i) DNA தவிர்த்த சைட்டோபிளாச உறுப்புகளான பசுங்கணிகங்கள், மைட்டோகாண்டிரியங்கள் பாரம்பரியத்தின் தாங்கிக் கடத்திகளாக செயல்படுவது சைட்டோபிளாசம் மூலம் கடத்தப்படுகின்றன.
(ii) பசுங்கணிக, மைட்டோகாண்டிரியங்களில் உள்ள DNA பல மரபணுக்களைக் கொண்டுள்ளன.
(iii) இவ்வகை மரபணுக்கள் பிளாஸ்மா மரபணுக்கள் எனப்படும்.
(iv) உட்கரு சம்பந்தப்படாததால் இது உட்கரு சாரா பாரம்பரியம் எனவும் கருதப்படுகிறது.
(v) எ.கா 4 மணி தாவரத்தின் இலைகளில் காணப்படும் இரு வகை வேறுபட்ட நிறங்கள் அடர்பச்சை, & வெளிர் பச்சை.
17.
| முழுமைபெறா ஓங்குத்தன்மை | இணை ஒடுங்குத்தன்மை | |
| 1. | ஓங்கு அல்லீல்கள் பிறிதொரு ஓங்கு அல்லீலைத் கட்டுப்படுத்தவில்லை - இருவகை அல்லீல்களும் கூட்டாகச் செயல்பட்டு இடைப்பட்ட நிறம் தோன்றியுள்ளது. | ஒரு உயிரியல் மாற்றுப் பண்புடைய இரு அல்லீல்களும் ஒரே சமயத்தில் பண்பை வெளிப்படுத்தும் நிகழ்விற்கு இணை ஓங்குத்தன்மை என்று பெயர். |
| 2. | அல்லீல்கள் கலப்புற்றதாக வெளிப்பட்டது. | அல்லீல்கள் கலப்புற வில்லை. |
| 3. | ஹைபிரிட் - இரு அல்லீல்களுக்கும் இடைப்பட்ட வெளிப்பாட்டை கொண்டிருக்கிறது. | ஒவ்வொரு அல்லீல்களும் தனித்தனியாக வெளிப்படுத்திக் கொண்டன. |
| 4. | புதிய புறத்தோற்றப் பண்பு உருவானது | புதிய புறத்தோற்றப் பண்பு உருவாகவில்லை |
| 5. | எ.கா ஸ்நேப்டிராகன் மலரின் நிறம் (சிவப்பு x வெள்ளை) | மனித இரத்த வகை(ABO) |
18.
ஓங்குத் தன்மை விதி: பண்புகள் - காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. எதிரிப் பண்புகளுக்கான இணைக் காரணிகளில் ஒன்று ஓங்கு தன்மையுடனும் மற்றொன்று ஒடுங்கு தன்மையுடனும் காணப்படும்.
ஒரு பண்பு கலப்பு:
F1 - ஐப் பொறுத்தவரை வெளிப்படாத ஒடுங்கு பண்பு மறைவாயிலிருந்து F2 - வில் மீண்டும் வெளிப்பட்டது.
19.
(i) கணித மற்றும் புள்ளியியல் மற்றும் நிகழ்வு விரைவு முறை அணுகு முறை
(ii) கையாண்ட முறைகளின் துல்லியமான புள்ளியியல் நிகழ்வுகள்
(iii) பட்டாணித் தாவரத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட எதிரிடைப் பண்புகள் - தனிப்பட்ட குரோமோசோம்களில் உள்ள காரணிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது.
(iv) தூயகால்வழி பெற்றோர்கள் - தேர்ந்தெடுப்பது பல தலைமுறைகளில் தற்கலப்பு மேற்கொண்டது.
(v) அனைத்துக்கும் மேல் தோட்டப்பட்டாணியைத் (Pisum sativum) தெரிவு செய்தது - அதன் சாதகமான பண்புகள்
(vi) ஒரு பருவ தாவரம் பல தலைமுறைகளை ஆய்வு செய்ய இயலும்.
(vii) ஒற்றை மரபணுவால் கட்டுப்படுத்தப்பட எதிரிடைப் பண்புகள் தெளிவானவை.
(viii) இயல்பான தற்கருவுருதல்
(x) பெரிய மலர்களாதலால், ஆண் மடலாக்கம், மகரந்தச் சேர்க்கை மற்றும் கலப்புறுதல் எளிதானது.
20.
(i) அல்லீல்கள் - மரபணுக்களின் மாற்று வடிவம் ஒரு குறிப்பிட்டப் பண்பின் வேறுபட்ட புறத்தோற்ற வெளிப்பாட்டிற்குக் காரணமானவை.
(ii) ஒரு மரபணுவிற்கு ஒரே அமைவிடத்தில் மேற்பட்ட அல்லீல்கள் காணப்படுவது பல்கூட்டு அல்லீல்கள் எனப்படும். எ.கா: மனிதனில் காணப்படும் ABO இரத்த வகை (3 அல்லீல்கள் - கட்டுப்படுத்துகிறது)
21.
(i) இரு வேறுபட்ட நிறமுடைய இலைகள் காணப்படுகின்றன.
(ii) இவற்றில் அடர்பச்சை நிறமுடைய (இலை) தாவரங்களை (ஆண்) வெளிறிய பச்சை நிற இலையுடைய தாவரங்களுடன் (பெண்) கலப்பு செய்த போதும் - (அ) அடர்பச்சை நிற இலையையுடைய தாவரங்கள் (பெண்) வெளிறிய நிற பச்சை நிற இலைகளையுடைய தாவரங்கள் (ஆண்) கலப்பு செய்தபோதும் மெண்டலின் மரபியல் தத்துவத்தின் படி ஒரே விதமான F1 தாவரங்கள் கிடைக்க வேண்டும். ஆனால் இப்பாரம்பரியத்தில் முதல் மகவுச் சந்ததி F1 வேறுபட்ட பண்புகளை வெளிப்படுத்தின.
(iii) இரு வகை கலப்பிலும் பெண் தாவரத்தின் பண்புகள் வெளிப்படக் காரணம், பெண் தாவரத்தின் பசுங்கணிக மரபணு சார்ந்து இப்பாரம்பரியம் நிகழ்வதே இவ்வேறுபாட்டிற்கு காரணம்.
22.
23.
வரையறை:
ஓர் இலக்கிலுள்ள ஒரு மரபணுவின் இரு அல்லீல்களுடன் இடைச்செல்கள் ஏற்பட்டு மரபுப் பண்புகள் வெளிப்படுவது தடுக்கப்படுவதற்கு அல்லது மறைக்கப்படுவதற்கு மறைத்தல் பாரம்பரியம் என்று பெயர். மறைக்கும் மரபணு ஓங்கு தன்மையுடையதாய் இருப்பதால் இது ஓங்கு தன்மை மறைத்தல் பாரம்பரியம் என்று பெயர். ஒடுங்கிய மரபணு ஒடுக்கும் மரபணு எனவும் மற்றது மறைக்கப்பட்ட மரபணு எனவும் வழங்கப்படுகிறது.
எ.கா: பூசணிகளின் நிறம்
W - அல்லீல் - வெள்ளை நிறம் W - அல்லீல் - பச்சை நிறம்
G - அல்லீல் - மஞ்சள் நிறம் g - அல்லீல் - பச்சை நிறம்
F2 - புறத்தோற்ற விகிதம்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards