12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
தாவரவியல் - சூழல் மண்டலம்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
பொருந்தாததை கண்டறிந்து காரணம் கூறவும்.
வாழிடத்தை வழங்குதல், ஊட்ட சுழற்சி, முதல்நிலை உற்பத்தி, வழிமுறை வளர்ச்சி.
2.
நீல கார்பன் சூழல்மண்டலத்தின் இயற்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?
3.
சூழல் மண்டலத்தில் ஊட்டங்களின் மறுசுழற்சிக்கு சமநிலைபாட்டிற்கும் தேவைப்படும் முக்கியமான செயல் எது?
4.
ஆற்றல் பிரமிட் என்றால் என்ன?
5.
சூழியல் பிரமிட்கள் என்றால் என்ன?
6.
சூழியல் பிரமிட்கள் ஏன் எல்டோனியின் பிரமிட்கள் என அழைக்கப்படுகின்றன?
7.
சூழல்மண்டலத்திலிருந்து அனைத்து உற்பத்தியாளர்களையும் நீக்கிவிட்டால் என்ன நடைபெறும்?
8.
ஆற்றல் பிரமிட் எப்பொழுது நேரானவை காரணம் கூறு.
9.
நிகர முதல்நிலை உற்பத்தி திறனை விட மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் மிகவும் திறன் வாய்ந்தது. விவாதி
10.
1.
பொருந்தாதது: வழிமுறை வளர்ச்சி
காரணம்: ஒரு குறிப்பிட்ட வகை தாவர குழுமம் மற்றொரு வகை குழுமத்தை அதே இடத்தில் இடம் பெறச் செய்தல் வழிமுறை வளர்ச்சி எனப்படும். மற்றவை சூழல் மண்டல சேவைகளுடன் தொடர்புடையது.
2.
1. கழிமுகம் மற்றும் கடலோர சூழ்நிலை மண்டலங்களில் காணப்படும் கடற்புற்கள் மற்றும் சதுப்பு நிலத்தாவரங்கள் அதிக கார்பன் சேகரிக்கும் திறன் கொண்டவை.
2. எனவே இவை நீல கார்பன் சூழல்மண்டலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
3.
சிதைத்தல் என்னும் செயல் சிதைவுக் கூளங்களை (இறந்த தாவரங்கள், விலங்குகள் மற்றும் அதன் கழிவுகள்) சிதைப்பவைகளால் சிறிய கரிமப் பொருளாக உடைக்கப்படும் செயல்முறைக்கு சிதைத்தல் என்று பெயர்.
4.
ஒரு சூழல்மண்டலத்தில் ஒவ்வொரு அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் ஆற்றல் ஓட்டத்தை குறிக்கும் திட்ட வரைபடம் ஆற்றல் பிரமிட் என்று அழைக்கப்படுகிறது.
5.
ஒரு சூழல்மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை குறிக்கும் திட்ட வரைபடங்கள் சூழியல் பிரமிட்கள் என்று அழைக்கப்படுகின்றன.
6.
1. சூழியல் பிரமிட்கள் சார்லஸ் எல்டன் என்பவரால் 1927ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
2. இதனால் அவை எல்டோனியின் பிரமிட்கள் என அழைக்கப்படுகின்றன.
7.
1. சூழல் மண்டலத்திலிருந்து அனைத்து உற்பத்தியாளர்களையும் நீக்கும் போது மொத்த உணவு வலையும் (Food Web) பாதிக்கப்படுகிறது.
2. முதல் நிலை நுகர்வோர் (அ) தாவர உண்ணிகள் தங்களின் உணவாக உற்பத்தியாளர்கள் இல்லாமையால் இறந்து போக நேரிடும்.
3. அதனால் உணவு வலையில் உள்ள மற்ற விலங்குகளும் தங்களுக்கு உணவு இல்லாமல் இறக்க நேரிடும்.
4. சூழ்நிலை மண்டலத்தின் அழிந்து போன நுகர்வோர் எண்ணிக்கை அழிந்துபோன உற்பத்தியாளர்களுக்கு நேர்விகிதத்தில் இருக்கும்.
5. வளிமண்டலத்தின் CO2 மற்றும் O2 சுழற்சி இருக்க உற்பத்தியாளர்களே காரணம்.
6. இந்த உற்பத்தியாளர்களை நீக்கிவிட்டால் CO2 மற்றும் O2 சுழற்சி சமநிலை அற்றதாக மாறிவிடும்.
7. இதனால் மூச்சுக் காற்றான ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
8.
1. ஆற்றல் பிரமிட் எப்பொழுதும் நேரானது ஏனென்றால் ஆற்றல் பிரமிடின் அடிப்பகுதியில் உற்பத்தியாளர்கள் உள்ளதே இதற்கு காரணம்.
2. ஆற்றல் பிரமிட்டின் அடிப்பகுதியில் உள்ள உற்பத்தியாளர்கள் முதல் இறுதி மட்டம் வரையுள்ள அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் ஆற்றல் கடத்தல் படிப்படியாக குறைகிறது.
[1000 J ➝ ஜுல்கள் ➝ 10 ஜூல்கள் ➝ 1 ஜூல்கள் ➝ 0.1 ஜூல்கள்]
3. எனவே ஆற்றல் பிரமிட் எப்பொழுதும் நேரானது.
9.
1. மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் எனப்படுவது சூழல் மண்டலத்திலுள்ள தற்சார்பு ஊட்ட உயிரிகளால் ஒளிச்சேர்க்கையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவு ஆற்றல் அல்லது கரிமப்பொருட்கள் அல்லது உயிர்த்திரள் மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் எனப்படுகிறது.
2. ஆனால் நிகர முதல்நிலை உற்பத்தித்திறன் எனப்படுவது தாவரத்தின் சுவாசச் செயலால் ஏற்படும் இழப்பிற்குப் பிறகு எஞ்சியுள்ள ஆற்றல் விகிதமே நிகர முதல்நிலை உற்பத்தித்திறன் எனப்படுகிறது. (NPP)
NPP=GPP -சுவாச இழப்பு
3. எனவே நிகர முதல்நிலை உற்பத்தித்திறனை விட மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் மிகவும் திறன் வாய்ந்தது ஆகும்.
10.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards